Posted in இலங்கை செய்திகள்

10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு-அறிவித்த கோட்டா

10,000 பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு-அறிவித்த கோட்டா

வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அறிமுகம் செய்த

நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் மேலும் பத்தாயிரம் பட்டதாரிகளுக்கு தொழில் வழங்குவதற்கு இன்று (19) அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

பொதுத் தேர்தலினால் இடைநிறுத்தப்பட்டிருந்த பட்டதாரிகளுக்கு தொழில் வழங்கும் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்தல்

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. அதன் கீழ் பட்டதாரிகள் 50,000 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டது. இன்றைய

தீர்மானத்தின்படி மேலும் பத்தாயிரம் பேர் அதனுடன் இணைக்கப்படவுள்ளனர்.

வேலையற்ற பட்டதாரிகள் சிலர் இன்று ஜனாதிபதி அலுவலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

அமைச்சரவை கூட்டம் நிறைவுபெற்று சென்றுகொண்டிருந்த ஜனாதிபதி அவர்கள், அவர்களின் அருகில் தனது வாகனத்தை

நிறுத்தி, அனைத்து பட்டதாரிகளுக்கும் தொழில் வழங்குவதாக குறிப்பிட்டார்.

“இப்போது வீடுகளுக்குச் செல்லுங்கள் மேலும் பத்தாயிரம் பேருக்கு தொழில்

வழங்குவதற்கு இன்று அனுமதி அளிக்கப்பட்டது” என்று ஜனாதிபதி அவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கூறினார்.

Posted in இலங்கை செய்திகள்

பால் உற்பத்தியை அதிகரிப்போம் முழங்கிய – பசில்

பால் உற்பத்தியை அதிகரிப்போம் முழங்கிய – பசில்

பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் அறிவிப்பு – இல 05

• தனியார் துறையின் பங்களிப்புடன் கண்டி, நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களில் 10 பாரியளவிலான பால் பண்ணைகள்…..

• சிறிய அளவிலான பால் பண்ணைகளின் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கு நடவடிக்கை….

• தோட்ட நிறுவனங்களின் பயனற்ற நிலங்களை பால் பண்ணை துறைக்கு பயன்படுத்த உதவுதல்…..

• விலங்கு தீவனத்திற்காக மக்காச்சோள செய்கைக்கென அரச நிலங்களை வருடாந்த குத்தகை அடிப்படையில் பால் பண்ணை உரிமையாளர்களுக்கு வழங்குதல்….

  • பசில் ராஜபக்ஷ – தலைவர், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்குள் இந்நாட்டின் பால் உற்பத்தியை நாட்டின் பால் தேவையை பூர்த்தி செய்யும் அளவிற்கு

மேம்படுத்துவதாகவும், அதை நுகர்வுக்கு அப்பால் ஏற்றுமதி மட்டத்திற்கு கொண்டு வருவதற்கு அரசாங்கத்தின் கூடுதல் கவனம்

செலுத்தப்பட்டுள்ளதாக பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பால் உற்பத்தித்துறையுடன் தொடர்புடைய அமைச்சர்கள் உள்ளிட்ட அத்துறை சார்ந்த அரச நிறுவன தலைவர்களுடன் அலரி

மாளிகையில் நேற்று முன்தினம் (2020.08.17) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு குறித்து ஜனாதிபதி செயலணி கூடுதல் கவனம் செலுத்தியுள்ளதுடன், அதன்படி உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக

பாரியளவிலான பால் பண்ணைகள் மற்றும் சிறிய அளவிலான பால் பண்ணைகளை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

உள்ளூர் பால் தேவை 1200 மில்லியன் லீட்டராகும். தற்போது உற்பத்தி செய்யப்படும் பாலின் அளவு 420 மில்லியன் லீட்டராகும். எஞ்சிய தேவையான பாலின் அளவு 780 மில்லியன் லீட்டர் என்ற

போதிலும், திரவப் பால் பயன்பாட்டிற்கு மக்களை பழக்கப்படுத்தினால், மேலும் 400 மில்லியன் லீட்டர் பாலை கொண்டு உள்ளூர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். 1

கிலோகிராம் பால் மாவை உற்பத்தி செய்வதற்கு சுமார் 8 லீட்டர் திரவ பால் தேவைப்படுகிறது. அதன்படி, 1 கிலோகிராம் பால்

மாவிலிருந்து தயாரிக்கக்கூடிய பால் கோப்பைகளின் அளவை விட 8 லீட்டர் திரவ பாலில் இருந்து தயாரிக்கக்கூடிய பால் கோப்பைகளின் அளவு மிக அதிகம்.

பால் விலை, பால் பசுக்களை இறக்குமதி செய்தல், புல்வெளிகளைப் பாதுகாத்தல், மக்காச்சோளம் சாகுபடி செய்தல் மற்றும் அதற்கான நிலம் ஒதுக்கீடு செய்தல், மக்காச்சோளம் சாகுபடியின் வெற்றிக்கு

பயனுள்ள விதைகளை இறக்குமதி செய்து உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. மக்காச்சோளத்தின்

உற்பத்தித்திறனை ஒரு ஹெக்டேயருக்கு 3.8 மெட்ரிக் டொன்னிலிருந்து 7 மெட்ரிக் டொன் வரை உயர்த்த வேண்டும்.

அதன்படி, எதிர்வரும் பருவத்தில் பால் பண்ணையாளர்களுக்கு அவசியமான மக்காச்சோளம் பயிரிடத் தேவையான நிலங்களை

விடுவிப்பது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ சம்பந்தப்பட்ட துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

கொழும்பு, கம்பஹா போன்ற நகர்ப்புறங்களில் தூய்மையான பால் நுகர்வை அதிகரிக்கவும், அதற்கேற்ப பால் சார்ந்த உற்பத்தி துறைகளை அதிகரிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குறித்த நிகழ்வில் கமத்தொழில் துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர்களான ஜானக

வக்கும்புர மற்றும் கனக ஹேரத் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

Posted in இலங்கை செய்திகள்

யாழில் ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் முற்றுகை

யாழில் ஆயுதங்கள் மீட்பு – இராணுவம் முற்றுகை

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் வீடொன்றை துப்பரவு செய்து

கொண்டிருந்த பொழுது அங்கு பெருமளவான துப்பாக்கி ரவைகள் கண்டு பிடிக்க பட்டன

மேற்படி விடயம் பொலிஸாருக்கு தெரிவிக்க பட்டதை டுத்து விசேட அதிரடிப் படையினர் அங்கு குவிக்க பட்டு ஆயுதங்கள் மீட்க பட்டன

குறித்த பகுதியில் சிங்கள அரச இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகள் அமைக்க பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது

      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் மயங்கி வீழ்ந்து ஒருவர் பலி

      யாழில். கூலி வேலையில் ஈடுபட்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

      புத்தூர் கலைமதி கிராமத்தை சேர்ந்த உ. சதிஸ் (வயது 43) எனும்

      மூன்று பிள்ளைகளின் தந்தையே அவ்வாறு உயிரிழந்துள்ளார்.

      சுன்னாகம் பகுதியில் கூலி வேலையில் நேற்றைய தினம்

      ஈடுபட்டிருந்த வேளை திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

      அதனை அடுத்து அங்கிருந்தவர்கள் மயக்கத்தை தெளிய வைக்கும்

      நடவடிக்கையினை மேற்கொண்ட போதிலும் அவர்

      மயக்கத்திலிருந்து மீளாததால் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

      இதன்போது, வைத்திய சாலையில் வைத்தியர்கள் அவர் உயிரிழந்து விட்டார்

      என உறுதிப்படுத்தியுள்ளனர். மரண விசாரணையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

          Posted in இலங்கை செய்திகள்

          போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது

          போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி கைது

          இலங்கையில் அகல பரவியுள்ள போதைவஸ்து பாவனை மற்றும் அதன் வியாபாரம் எங்கும் கொடி கட்டி பறக்கிறது

          அரசியல் ஆளும் வர்க்கத்தின் அனுசரணையுடன் இந்த பாவனை இடம் பெறுகிறது

          இவ்விதமான வியாபாரத்தில் ஈடுபட போலீஸ் உயர் அதிகாரி ஒருவ

          தற்போது கைது செய்ய பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

              Posted in இலங்கை செய்திகள்

              அரசியல் பழி வாங்கல் – ரணில் சம்பந்தன் மீது விசாரணை

              அரசியல் பழி வாங்கல் – ரணில் சம்பந்தன் மீது விசாரணை

              அரசியல் பழி வாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் வரும் செப்டம்பர் மாதம்

              7 ஆம் திகதி முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

              அந்த வகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா,

              அனுரகுமார திசாநாயக்க, இரா சம்பந்தன், ரவூப் ஹக்கீம் மற்றும் மேலும் சிலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

              அதன்படி செப்டம்பர் 7 ஆம் திகதி அன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

              இதேவேளை முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை

              செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (18) முன்னிலையானார்.

              அவர் நேற்று காலை 9.30 மணி அளவில் ஆணைக்குழுவில் முன்னிலையாகியதாக தெரிவிக்கப்படுகிறது.

              இதேவேளை ஆகஸ்ட் மாதம் 26ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்

              தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை

                  கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை

                  கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டிருப்பதாக மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

                  கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்கமாக காணப்படுகின்ற இரணைமடு குளம் உள்ளிட்ட பாரிய நடுத்தர மற்றும்

                  சிறுகுளங்களில் மேற்கொள்ளப்பட்ட 2019, 2020 இற்கான காலபோக அறுவடையை தொடர்ந்து இவ்வாண்டுக்கான சிறுபோக

                  நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.

                  அதாவது இரணைமடு குளம் கல்மடு குளம் அக்கராயன் குளம் புதுமுறிப்பு குளம் வன்னேரிக்குளம் கரியாலை நாகபடுவான் குளம்

                  குடமுருட்டிக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசனக்குளங்கள் மற்றும் சிறு நீர்ப்பாசனக்குளங்கள் என்பனவற்றின் கீழ் சுமார் 8688

                  ஹெக்டெயர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.

                  இதன்மூலம் ஏறத்தாழ 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

                  இவ்வாண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய மற்றும் நடுத்தரக்குளங்களின் கீழ் 8592 ஹெக்டெயரிலும் சிறிய

                  நீர்ப்பாசனக்குளங்களின் கீழ் 96 ஹெக்டெயரிலுமாக மொத்தமாக 8688 ஹெக்டெயர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.

                  இவ்வாறு அறுவடைகள் மூலம் சுமார் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மறுவயற் பயிர் செய்கைகளானவை பல்வேறு செயற்திட்டங்களினூடாக

                  ஊக்குவிக்கப்பட்டு சுமார் 1300 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதேவேளை கடந்த காலபோகத்தின் போது 23ஆயிரத்து 466 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காலபோக

                  நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 3 பேர் கைது

                  போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த 3 பேர் கைது

                  போலி நாணயத்தாள்கள் வைத்திருந்த கொழும்பு முல்லேரியா, கல்வான பிரதேசத்தை சேர்ந்த மூவர் பொலிஸ் விசேட

                  அதிரடிப்படையினரால் நேற்று முன்தினம்(17) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

                  நாணயத்தாள் போன்று ஒருபக்கத்தில் மாத்திரம் அச்சிடப்பட்ட போலி 5,000 ரூபாய் நோட்டுக்கள் இருபக்கமும் வைக்கப்பட்ட 128

                  கட்டுக்கள் பொதி செய்யப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.

                  ஜாஎல, அங்கொட மற்றும் முல்லேரியா பகுதிகளில் வசிக்கும் 34, 36 மற்றும் 42 வயதுகள் உடைய குறித்த சந்தேக நபர்கள் மேலதிக

                  விசாரணைகளுக்காக முல்லேரியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதுடன், போலி நாணயத்தாள்களை

                  எடுத்துச் செலவதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனமும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளன.

                  குறித்த சந்தேக நபர்கள் நேற்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். போலி

                  நாணயத்தாள்கள் அச்சிட்டமை தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  பற்றி எரிந்த ஆறுமுகன் தொண்டமானின் வீடு – நடந்தது என்ன ..?

                  பற்றி எரிந்த ஆறுமுகன் தொண்டமானின் வீடு – நடந்தது என்ன ..?

                  கொத்மலை – வேவன்டனில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் பூர்வீக இல்லத்தில் இன்று

                  (செவ்வாய்க்கிழமை) அதிகாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

                  அதிகாலை 2.30 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தினால் வீட்டின் கூரை முழுமையாக சேதமடைந்துள்ளதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர். நுவரெலியா தீயணைப்பு படைப்பிரிவுக்கு

                  சொந்தமான தீயணைப்பு வாகனத்தின் மூலம் தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                  இதனையடுத்து, இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள்

                  மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இந்த தீ அனர்த்தம் காரணமாக, வேவன்டன் இல்லத்திற்கு பாரிய

                  சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பல உடமைகளும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

                  தீப்பரவலுக்கான காரணம் குறித்து இதுவரையில் கண்டறியப்படவில்லை என்றும், தீ பரவலுக்கான காரணம்

                  தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கொத்மலை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

                  பற்றி எரிந்த ஆறுமுகன்
                  பற்றி எரிந்த ஆறுமுகன்
                      Posted in இலங்கை செய்திகள்

                      நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவ திருவிழா photo

                      நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவ திருவிழா photo

                      வரலாற்றுப் சிறப்புமிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த

                      தீர்த்தோற்சவம் இன்று(18) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது.

                      விநாயகர், வள்ளி தேவசேனா சமேத வேற்பெருமான், சண்டிகேஸ்வரர் சண்முக புஷ்கரணிக்கு எழுந்தருளி தீர்த்தவாரி

                      கண்டருளினர். தீர்த்தக்கேணியின் எட்டு திசையிலும் அஷ்ட திக்பாலகர் திருவுருவங்கள் எழுந்தருளச் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்பட்டன.

                      மத்தியில் முருகவேளின் அஸ்திர ராஜருக்கு அபிஷேக ஆராதனை நிகழ்ந்து தீர்த்தவாரி கண்டருளச் செய்யப்பெற்றது. தற்போது

                      நாட்டில் உள்ள கொரோனா தொற்று அச்சத்தின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ள அடியவர்களோடு சுகாதார நடைமுறை

                      மற்றும் சமூக இடைவெளி பேணி இன்றைய தீர்த்த உற்சவம் மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

                      நல்லூர் தேவஸ்தானத்தால் இந்நிகழ்வுகள் பக்தர்களின் நலன் கருதி நேரலையாக ஒளிபரப்பப்பட்டமை சிறப்பம்சமாகும்.

                      நல்லூர் கந்தன் ஆலய

                      நல்லூர் கந்தன் ஆலய
                          Posted in இலங்கை செய்திகள்

                          பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கிய நபர் கைது – பதவி பறிப்பு

                          பொலிஸ் அதிகாரிக்கு லஞ்சம் வழங்கிய நபர் கைது – பதவி பறிப்பு

                          இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் லஞ்சம் ஒழிக்க படும்

                          என்ற கொட்டு முரசு முன் வைக்க பட்டது

                          லஞ்சம் வாங்கும் அனைவரையும் 2500 சிறப்பு இரகசிய புலனாய்வாளர்கள் கண்காணிப்பார்கள் என அறிவிக்க பட்டது

                          அதன் அடிப்படையில் தொம்பே பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு

                          இரண்டு லட்சம் லஞ்சம் வழங்கியவர் கைது செய்ய பட்டுள்ளதுடன்

                          .காவல்துறை அதிகாரியும் கைது செய்யப்பட்டுளளார்

                          இவரது பதவி பறிக்க பட்டு வீட்டுக்கு துரத்த படுவார் என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் புதிதாக கொண்டுவரப் படும் சட்டம்

                          இலங்கையில் புதிதாக கொண்டுவரப் படும் சட்டம்

                          எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலை ஐக்கிய மக்கள் சக்தி மிகுந்த பலத்துடன்

                          எதிர்கொள்ளும் என கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

                          தெரண 360 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                          20 ஆவது திருத்தத்தின் ஊடாக மைத்திரிபால சிறிசேனவிற்கு பதவியும்

                          பசில் ராஜபக்ஷவிற்கு பாராளுமன்றத்திற்கு நுழையும் வாய்ப்பும் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

                          நாட்டு மக்களின் நலனை கருத்திற் கொண்டு திருத்தைத்தை கொண்டுவருவதாயின்

                          தாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை எனவும் அவ்வாறு இல்லாவிடின்

                          தாங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          போரில் காயமடைந்து -காணமல் போனவர்கள் வீடுகளுக்கு சென்று மருந்து வழங்கும் இராணுவம்

                          நோயாளிகளின் வீடுகளுக்கு சென்று இலங்கை கடற்படை மருந்து விநியோகம்

                          யுத்தத்தின் போது உயிரிழந்த, காயமடைந்த மற்றும் காணாமல் போன கடற்படை வீரர்களின் குடும்பங்கள் அத்துடன் ஓய்வு பெற்ற

                          மற்றும் சேவையிலிருக்கும் கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் மாதாந்தம் மருந்துகள்

                          விநியோகிக்கும் புதிய முறை ஒன்றினை இலங்கை கடற்படை இன்று முதல் அறிமுகப்படுத்தியுள்ளது.

                          இத்திட்டத்தின் கீழ், கொழும்பு கடற்படை வைத்தியசாலைக்கு வருகை தந்து சிகிச்சை பெற்றுவருவோர் அவர்களின்

                          மருந்துப்பொதிகளை தமது வீடுகளில் இருந்தே பெற்றுக்கொள்ளும் வகையில் அவர்களது வீடுகளுக்கு சென்று

                          விநியோகிக்கப்படுகிறது. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உளுகேதென்னவின் ஆலோசனைகளுக்கு அமைய குறித்த திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                          இதேவேளை, கடற்படை வைத்தியசாலை நாட்பட்ட நோய்களான நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இருதய நோய், ஆஸ்துமா, சிறுநீரக

                          நோய், கர்ப்ப நோய் மற்றும் கண், தோல், நரம்பியல் நோய் மற்றும் மன நோயாளிகள் ஆகியோருக்கு மருத்துவ ஆலோசனைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

                          கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்த கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி

                          இவ்வாறான திட்டமொன்றை இலங்கை கடற்படையினரால் முன்னேடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

                          இதன் மூலம் பெரும் எண்ணிக்கையிலான கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பலர் பயனடந்தனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேலைத்திட்டம் ஆரம்பம்- கூவும் அரசு

                          மக்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேலைத்திட்டம் ஆரம்பம்- கூவும் அரசு

                          பொருளாதாரத்தின் உரிமையை மக்கள் அடைந்துகொள்ளும் மக்கள் மைய பொருளாதார பொறிமுறை ஒன்றுக்காக இம்முறை இராஜாங்க அமைச்சுக்கள் உருவாக்கப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பட்டார்.

                          இராஜாங்க அமைச்சுக்களின் விடயதானங்கள் குறித்து மீளாய்வை ஆரம்பிக்கும் வகையில் நேற்று (17) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

                          பத்திக், கைத்தரி, ஆடைகள் மற்றும் உள்நாட்டு ஆடைக் கைத்தொழிலுக்காக இராஜாங்க அமைச்சொன்றை உருவாக்குவதற்கான காரணங்களை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

                          கொவிட் 19 காரணமாக பாரிய சிக்களுக்கு ஆளாகியுள்ள ஏனைய நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை உள்நாட்டு பொருளாதாரத்தை மேம்படுத்தாது முன்னோக்கி செல்ல முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

                          ஆடைக் கைத்தொழில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 43 வீதத்தை பிரதிநிதித்துவம் செய்கின்றது. இதன் மூலம் ஏற்றுமதி வருமானத்துக்கு வருடாந்தம் 05 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கப்பெறுகின்றது. தொழில் வழங்கும்போதும் மற்றும் பிரதேச அபிவிருத்தியின் போதும் ஆடைக் கைத்தொழில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றது. அதனை வலுப்படுத்தும் முகமாக பத்திக் மற்றும் கைத்தறி உட்பட உள்நாட்டு ஆடை உற்பத்தியை மேம்படுத்துவது அரசின் பிரதான நோக்கம் என்று ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டார்.

                          பத்திக் மற்றும் கைத்தறி கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் செயற்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

                          அதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் எதிர்வரும் ஐந்து வருடங்களுக்குள் ஆடை உற்பத்தியாளர்களுக்கு ஒரு ஸ்திரமான நிலையை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

                          ‘சலுசல’ போன்ற நிறுவனங்கள் மூலம் பத்திக் மற்றும் கைத்தறி ஆடை உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க முடியும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

                          கைத்தொழில் அமைச்சர் விமல் வீரவங்ச, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் பி. பீ.ஜயசுந்தர, திறைசேரி செயலாளர் எஸ்.ஆர். ஆடிகல ஆகியோர் உள்ளிட்ட பத்திக், கைத்தறி ஆடை, உள்நாட்டு ஆடைக் கைத்தொழில் சார்ந்த நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          இறுதி போர் இடம்பெற்ற – நந்திக்கடல் புனரமைப்பு ஆரம்பம்

                          இறுதி போர் இடம்பெற்ற – நந்திக்கடல் புனரமைப்பு ஆரம்பம்

                          நந்திக்கடல் புனரமைப்பின் முதற் கட்டப் பணிகளை அடுத்த வாரம் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதுடன் அதற்கான பூர்வாங்க வேலைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

                          கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் விசேட கரிசனையின் அடிப்படையில் கடந்த பல மாதங்களாக

                          முன்னெடுக்கப்பட்டு வந்த நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பான முன்னேற்பாடுகள் நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிக் கட்ட கள ஆய்வுப் பணிகள் நேற்று முன்தினம் (16.08.2020) இடம்பெற்றன.

                          கடற்றொழில் திணைக்களம், மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனம், நாரா எனப்படும் தேசிய நீர்வாழ் உயிரினங்கள் ஆராய்ச்சி நிறுவனம், வன வளத் திணைக்களம் ஆகியவற்றின்

                          அதிகாரிகளும் கடற்றொழிலாளர் சமூகப் பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இறுதிக் கட்ட கள ஆய்வுகளின் அடிப்படையில்

                          வட்டுவாகல் பாலத்தை அண்மித்துள்ள நந்திக் கடல் முகத்துவாரப் பகுதியில் குவிந்து கிடக்கின்ற கழிவுகளை உடனடியாக அகற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                          அந்தவகையில், குறித்த முதற்கட்டப் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது. யுத்தம் மற்றும் தமிழ் தலைமைகளின்

                          அக்கறையீனம் காரணமாக கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாக தூர்வாரி புனரமைக்கப்படாத நிலையில் சுனாமி போன்ற இயற்கை

                          அனர்த்தங்களினாலும் யுத்தத்தினாலும் நந்திக்கடலில் குவிந்து கிடக்கும் கழிவுப் பொருட்களும் சேற்று படுக்கைகளும்

                          நந்திக்கடலின் இயற்கை சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

                          இதனால் மீன், இறால் போன்ற கடலுணவுகளின் உற்பத்தி குறைவடைந்தமையினால், குறித்த நீர்நிலையை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வருகின்ற ஆயிரக்கணக்கான குடும்பங்கள்

                          பாதிப்பினை எதிர்கொண்டன. குறித்த விடயம், கடந்த வருட இறுதியில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர்

                          டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களினால் கொண்டு வரப்பட்டது.

                          இந்நிலையில், குறித்த விடயத்தில் தொடர்ச்சியாக கவனம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்

                          சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கிய அறிவுறுத்தல்களின் பலனாக நந்திக்கடல் புனரமைப்பு பணிகள் அடுத்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          மின்சார தடை – நடந்தது என்ன..? – விசாரணையில் விசேட குழு

                          நேற்று இடம்பெற்ற மின்விநியோக சீர்குலைவு பற்றி ஆராய்வதற்காக

                          நியமிக்கப்பட்ட குழு இன்று காலை கூடவுள்ளதாக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

                          நேற்று நண்பகல் 12.30 அளவில் நாடு முழுவதிலும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டிருந்தது.

                          கெரவலப்பிட்டி உப மின் நிலையத்தின் விநியோக வலைப்பின்னலில்

                          ஏற்பட்ட கோளாறு இதற்குக் காரணம் எனக் கருதப்படுகின்ற நிலையில்

                          குழுவொன்றை நியமித்து உண்மையைக் கண்டறியுமாறு மின்வலு அமைச்சின் செயலாளருக்கு அமைச்சர் நேற்று ஆலோசனை வழங்கியுள்ளார்.

                          இந்தச் சீர்குலைவு காரணமாக வீதிப் போக்குவரத்துச் சமிக்ஞைகள் இயங்காமல்

                          போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எனினும் ரெயில் சேவைக்குப் பாதிப்பு

                          ஏற்படவில்லை எனவும் ரெயில்வே கட்டுப்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.

                          2016ஆம் ஆண்டுக்குப் பின்னர் நாடு முழுவதிலும் மின்விநியோக வலைப்பின்னல் சீர்குலைந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு- உங்கள் பெயர் உள்ளதா பாருங்க

                          தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு- உங்கள் பெயர் உள்ளதா பாருங்க

                          தொழில் பெறும் பட்டதாரிகளின் பெயர் பட்டியல் அரச சேவைகள், மாகாண

                          சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

                          தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான கடிதங்கள் எதிர்வரும் நாட்களில்

                          குறித்த அமைச்சினால் உரியவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என

                          ஜனாதிபதி ஊடகப்பிரிவு ஏற்கனவே அறித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

                          இதன் கீழ் நியமனம் பெறுபவர்கள் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி

                          அருகிலுள்ள பிரதேச செயலகத்திற்கு சமூகமளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


                          தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் கொண்ட ஒரு இலட்சம் பேரை தொழில்களில் அமர்த்தும் பணிகள், அதற்காக

                          ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியின் மூலம் எதிர்வரும் செப்டெம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

                          Jaffna District
                          Selected List

                          Delft : https://drive.google.com/file/d/1Vq8QiJbJGCA3QCl7EVDNBTEUE-yOpDLM/view?usp=sharing

                          Island_North_Velanai : https://drive.google.com/file/d/1BedGYaHXZrTHuVsUqafaK4CYb1h6nXNq/view?usp=sharing

                          Island_South_kytes : https://drive.google.com/file/d/1uVgv3avcnEQrUTvfhh8nNDIuycORJ0_7/view?usp=sharing

                          Jaffna : https://drive.google.com/file/d/1FnQWPLZs1Nnn2JZqTN5WZGwPnBhb5UyY/view?usp=sharing

                          Karainagar : https://drive.google.com/file/d/1iEXbMVdr2TK6VoMOZR5VhlxBpNE7iqyN/view?usp=sharing

                          Nallur : https://drive.google.com/file/d/1BauwJFNPX9s-z15PxyWKaeegZizX0Njm/view?usp=sharing

                          Thenmarachchi_Chavakachcheri : https://drive.google.com/file/d/1q9NetpkS5v8rNHLqcFWz4ISM0L2h3Xlh/view?usp=sharing

                          Wadamarachchi_East : https://drive.google.com/file/d/1J9JJIHr80H_FDQr8IrGPY_gA17MWoPLG/view?usp=sharing

                          Wadamarachchi_North : https://drive.google.com/file/d/12DDERx_CUKDx69g68oRy5BLOuyjZXxSU/view?usp=sharing

                          Wadamarachchi_South : https://drive.google.com/file/d/1sHN1gvom1QEEfxl49TI9FURC7QsoEOlj/view?usp=sharing

                          Walikamam East : https://drive.google.com/file/d/1B71pt0SkAI-NnMSA8PTyAE1u1m_T9jtW/view?usp=sharing

                          Walikamam North : https://drive.google.com/file/d/1WCn_K54P9eTP4373bM5ovgUWpivKKyjD/view?usp=sharing

                          Walikamam West : https://drive.google.com/file/d/1o8slAceFrNRdFeumPFO0I3lJ0pUHjN0o/view?usp=sharing

                          Walikamam South : https://drive.google.com/file/d/1f5J5WhU7EY8r56hnfg0YBI1RRDROUDZd/view?usp=sharing

                          Walikamam West : https://drive.google.com/file/d/1wAwVvJCfz3qChk10x1xRA345iYC6ILu_/view?usp=sharing

                          Pending List : https://drive.google.com/file/d/1WDSSg1ljxgzgewbK2jtjUmfctJrlVWV0/view?usp=sharing

                          Rejected List : https://drive.google.com/file/d/1_CJ-cAAoFVB1JGfZHecQmTXL1pAvQA2M/view?usp=sharing

                          Kilinochchi District
                          Selected List

                          Kandavalai : https://drive.google.com/file/d/1bsslYpRbGKj4SfAnWbFcszQko76uz-FQ/view?usp=sharing

                          Karachchi : https://drive.google.com/file/d/1vblcf1sT3V3gcFMoud9oHCbv-x-WFfJe/view?usp=sharing

                          Pachchileippali : https://drive.google.com/file/d/1hMao8iZbuMoxvFxMQUzP7rSEsnrIn6Ju/view?usp=sharing

                          Punakari : https://drive.google.com/file/d/18M2hA9b4omuDccNixiv5PwVq0idvXKK7/view?usp=sharing

                          Pending List : https://drive.google.com/file/d/1fnmh3f9dNdk9hIKAlofvhbXzGwYGK0BA/view?usp=sharing

                          Rejected List : https://drive.google.com/file/d/17bzRvoPUuatwscSdjOM_pBxEIex_d61m/view?usp=sharing

                          Mulathivu District
                          Selected List

                          Manthei East : https://drive.google.com/file/d/189-33RNtmatdSyJ4turI7i_j8WaedLan/view?usp=sharing

                          Maritime Pattu : https://drive.google.com/file/d/1k0FgzTMzCwZpYb-sP6408YAm1c6jl6uA/view?usp=sharing

                          Oddusudan : https://drive.google.com/file/d/1g3dN8oemzSrt70AK9fnUSytZFkPu7Fff/view?usp=sharing

                          Puthukkudiyiruppu : https://drive.google.com/file/d/1TptYynG1juTistrWC0KeKLDleCmswPXf/view?usp=sharing

                          Thunukkai : https://drive.google.com/file/d/1-9TeCVQ23Nv7b4tbZSuwIW0Wpt417_Gh/view?usp=sharing

                          Welioya : https://drive.google.com/file/d/1FogUMcVkKJdBAp8XDRdGhwjigZAxC2vP/view?usp=sharing

                          Pending List : https://drive.google.com/file/d/18O74vkwC9lUdf7lThbOPvzAWgdRDCb9D/view?usp=sharing
                          Rejected List : https://drive.google.com/file/d/1uP52py2YLBJq3uPecj8s_EUgTbfNMaI8/view?usp=sharing

                          Gampaha District
                          Selected List

                          Attanagalla : https://drive.google.com/file/d/1_qr0NtO19fAFhU7T7kTwV9okyl7QbJds/view?usp=sharing

                          Biyagama : https://drive.google.com/file/d/1xJ_h6P5r8qnJfbtlFYlH9UWVHteZgSva/view?usp=sharing

                          Divulapitiya : https://drive.google.com/file/d/1A-yVv3wd1I9AI91ZFdjUpI53D3LvGEeb/view?usp=sharing

                          Dompe : https://drive.google.com/file/d/11AV4XEsFU-L8l7YTBKOh-mkuAbrEJ3E5/view?usp=sharing

                          Gampaha : https://drive.google.com/file/d/17fa3dOlYJ10IhVP1LthDuB5O9QAsTBev/view?usp=sharing

                          Ja-Ela : https://drive.google.com/file/d/1BWg-54_8eaAxtTwc5E25mYD2qkCJwVOd/view?usp=sharing

                          Katana : https://drive.google.com/file/d/16CZlku_Y7rUKn76kCxbftrSz-Lblreij/view?usp=sharing

                          Kelaniya : https://drive.google.com/file/d/1Tymi664jEq2Vh9lQCD_muTfE_G_kecnN/view?usp=sharing

                          Mahara-Kadawatha : https://drive.google.com/file/d/18HclSWEfeXgA82TvN22gos9SswNGXo42/view?usp=sharing

                          Meerigiama : https://drive.google.com/file/d/1_Z4ktyf4973-CnmJrxTEblxUmkRJWlzy/view?usp=sharing

                          Negambo : https://drive.google.com/file/d/1rOq4s5cf0ggLZ349Fgg8DSQZpBPPOIm1/view?usp=sharing

                          Wattala : https://drive.google.com/file/d/1gDDPmlbHG3yH13e_aUOHubDJA-dqvCzi/view?usp=sharing

                          Minuwangoda : https://drive.google.com/file/d/1n0sXopIuhu_pj0kpH-Zh0B1Q5F4KzthA/view?usp=sharing

                          Pending List : HTTPS://drive.google.com/file/d/1nALvC0rfJiyQkqpbwLwPB8ew3jPKt77j/view?usp=sharing
                          Rejected List : https://drive.google.com/file/d/1_nlWKbp8R25oxckonCYOmc5vIIaDYBkk/view?usp=sharing

                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழில் காவல்துறை மீது அகோர தாக்குதல்- 2 போலீசார் காயம்

                            யாழில் காவல்துறை மீது அகோர தாக்குதல்- 2 போலீசார் காயம்

                            யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குற்றவியல் சட்டத்தின் கீழ்

                            கைது செய்ய சென்ற போலீசார் மீது போலீசார் திடீர் தாக்குதலை நடாத்தியுள்ளனர்

                            இதனால் காயமடைந்த இரு காவல்துறை ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்

                            மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது

                                Posted in இலங்கை செய்திகள்

                                நல்லூர் தேரின் பொழுது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு = வேண்டுதல்

                                நல்லூர் தேரின் பொழுது மக்கள் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு = வேண்டுதல்

                                தற்போதைய Covid 19 தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு நல்லூர் தேர் உற்சவத்தில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில்

                                ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் பக்கத்தர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

                                நாளை நல்லூர் ஆலய தேர் உற்சவம் மிகவும் விமரிசையாக இடம்பெறவுள்ள நிலையில் தற்போது உள்ள கொரோனா

                                நிலைமையினை கருத்தில் கொண்டு மக்கள் செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது யாழ் மாவட்ட

                                அரசாங்க அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலய திருவிழா மிக விமரிசையாக

                                நடைபெற்று வருகின்றது. தேரோட்டம் நாளை திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. தீர்த்தோற்சவம் மறுநாள் 18ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.

                                இந்த நிலையில் தற்பொழுது பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் நல்லூர் கந்தனை தரிசிப்பதற்கு வருகை தருவதனை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. ஏற்கனவே சுகாதாரப் பகுதியினர், பொலிசார்

                                மற்றும் பாதுகாப்பு பிரிவினரும் ஆலய நிர்வாகத்தினரும் சுகாதார ஆலோசனைகளை பக்தர்களுக்கு தெரிவித்துவருகின்றனர்.

                                அதனடிப்படையிலே சுகாதார நடைமுறைகளை பேணி சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சகல உற்சவங்களில் கலந்து கொள்வதற்கு ஏற்றவாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

                                எனவே இந்த கொரோனா தொற்றுநோய் சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த சூழ்நிலையை அனுசரித்து செயற்பட

                                வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது. பக்தர்கள் ஆலயத் தேர் உற்சவத்தினை உலகளாவிய ரீதியில் தொலைக்காட்சி வழியாக வீடுகளில் இருந்தவாறே பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.

                                எனவே சமூகத்தில் ஒவ்வொருவருடைய தொற்று நிலைமையை கருத்தில் கொண்டு பக்தர்கள் இந்த தடவை நல்லூர் ஆலய தேர்

                                உற்சவத்திற்கு ஒன்றுகூடி ஆலய உற்சவத்தில் கலந்து கொள்ளாது, சுகாதார ஏற்பாடுகளுக்கு ஏற்ப அனுசரித்து தங்களுடைய

                                பிரசன்னத்தை குறைத்து, ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் முகமாக செயற்பட வேண்டியது

                                ஒவ்வொருவருடையதும் கடமையாகும் என்றும் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன். மேலும் தெரிவித்துள்ளார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் தாயகம் வருகை

                                    துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் தாயகம் வருகை

                                    துபாயிலிருந்து 420 இலங்கையர்கள் நேற்றையதினம் தாயகம் திரும்பியுள்ளனர். இவர்கள் எமிரேட்ஸ் விமான சேவைக்கு

                                    சொந்தமான EK 2528 விமானத்தின் மூலம் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

                                    விமான நிலையத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் முதற்கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளபட்ட பின்னர்

                                    தனிமைப்படுத்தலுக்காக முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.