Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கிழக்கு தமிழர்களின் குரல் நானே – வியாழேந்திரன் கொக்கரிப்பு
கிழக்கு தமிழர்களின் குரல் நானே – வியாழேந்திரன் கொக்கரிப்பு
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் சரி வெளியேயும் சரி கிழக்கு தமிழர்களுக்கான ஒரே ஒரு பலமான குரல் நாம் மாத்திரமே என்பது
எமது மக்களுக்கு நன்றாக தெரியும் என தபால் சேவைகள் மற்றும் வெகுசன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.
துறைநீலாவணையில் நேற்று முன்தினம் (29) சனிக்கிழமை நடைபெற்ற கௌரவிப்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போது இவ்வாறு தெரிவித்திருந்தார்.
துறைநீலாவனை பொது மக்களும் துறையூர் முற்போக்கு தமிழர் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சருக்கு மலர் மாலைகள் அணிவித்து,
பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவம் அழிக்கப்பட்டது. இதன்போது மேலும் அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழ் தேசிய
கூட்டமைப்பில் இருக்கும் போதே நாங்கள் முற்போக்கு தமிழர் அமைப்பு என்று சகல போராட்டங்களையும் முன்னெடுத்திருந்தோம். அது அனைவருக்கும் தெரியும், அதனால்
தான் எமது மக்கள் இம்முறை கட்சியை பார்க்காமல் எமக்கு வாக்களித்து, எம்மை வெற்றி பெறச் செய்து மீண்டும் பாராளுமன்றம் அனுப்பி வைத்துள்ளார்கள்.
கடந்த காலங்களில் சிலர் கூறியிருந்தார்கள் நான் வீட்டில் கேட்டதனால்தான் வெற்றிபெற்றிருந்தேன் என்று, அப்படியானால் இம்முறை நாம் எப்படி வெற்றிபெற்றோம், இவை அனைத்தும்
வீட்டிற்கு கிடைத்த வாக்குக்களா, எம்மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கின்றார்கள். எம்மை பொறுத்தவரை உரிமையோடு கூடிய அபிவிருத்தி சார்ந்த அரசியலை நாங்கள் இந்த
மாகாணத்தில் கட்டியெழுப்பவேண்டும். இந்த மாவட்டத்தில் 58.9 வீதமாகவிருந்த நாங்கள் தற்போது 38.6 வீதமாக இருக்கின்றோம். எமது இன, வள, பொருளாதாரம் போன்ற பல்வேறுபட்ட துறை
சார்ந்த வளர்ச்சி என்பது ஒரு அசமந்த போக்கில்தான் தமிழர்களை பொறுத்தவரையில் சென்றுகொண்டிருக்கின்றது. இந்த நிலைமை
மாற்றியமைக்கப்படவேண்டும். இதனடிப்படியில் ஆரோக்கியமான ஒரு அரசியலை நாம் இந்த மாகாணத்தில் கட்டியெழுப்ப வேண்டும்.
இந்த மாகாணத்திலே பல பிரச்சனைகளோடு, வேதனைகளோடு, சவால்களோடு இருக்கின்ற ஒரே ஒரு சமூகமென்றால் அது தமிழ் சமூகமாகத்தான் இருக்கும். இதை யாரும் மறுக்கவும் முடியாது
மறைக்கவும் முடியாது. இவற்றை எல்லாம் கருத்திற்கொண்டு எமது மக்கள் எமக்குத் தந்த அங்கீகாரத்தைக் கொண்டு பிரதமர் அவர்களுடைய வழிகாட்டலில் பொதுஜன பெரமுன கட்சியின்
தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அவர்களது நெறிப்படுத்தலில் இந்த தபால் சேவைகள் மற்றும் வெகுஜன ஊடக தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு எமக்கு கிடைத்துள்ளது. இந்த
அமைச்சின் ஊடாக நாங்கள் எமது மக்களை பாதுகாப்பதுடன், எமது பணிகளை நாடு பூராகவும் முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தார்..
போலீசார் திடீர் தேடுதல் வேட்டை – 400 பேர் கைது
போலீசார் திடீர் தேடுதல் வேட்டை – 400 பேர் கைது
மேல் மாகாணத்தில் நேற்று காலை 6 மணி தொடக்கம் இன்று காலை 5 மணி வரையிலான காலப்பகுதியில் பொலிஸார்
மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள் சட்டவிரோத
செயற்பாடுகள் தொடர்பில் 400 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய 171 தேடுதல் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் 171 பேர் சந்தேகத்தின் பேரில்
கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா போதைப்பொருள் தொடர்பில் 94 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 85 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
மக்களுக்கு தனி வீடுகளை வழங்குவோம் -ஜீவன் தொண்டமான முழக்கம்
மாடிவீடு என்ற போலி கதைகளை நம்பவேண்டாம். தனி வீடுகளையே நாம் அமைப்போம்.’ – என்று இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கலைஞர்களை நாம் ஊக்குவிக்கவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான களத்தை அமைத்துக்கொடுத்து உரிய அங்கீகாரம் வழங்கவேண்டும். கலைஞர்கள் வாழ்ந்தால் மட்டுமே கலைகள்
வாழும். அவ்வாறு இல்லாவிட்டால் கலைகள் அழிந்துவிடும். எனவே, கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்காமல் கலைகளை பாதுகாக்கமுடியாது. அதனை நாம் நிச்சயம் செய்வோம் என்றும்
அவர் கூறினார்.thumbnailசௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் கீழ் இயங்கும் தொண்டமான் கலாச்சார
நிலையத்தில் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு (30.08.2020) நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இந்நிகழ்வின் போது ரம்பொடை சௌமியமூர்த்தி தொண்டமான் கலாச்சார நிலையத்தின் அழகியற் கல்லூரி மாணவர்களின் கலை, கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றன.thumbnail JEEvan
thondaமலையகத்துக்கான வீட்டுத்திட்டம் தொடர்பில் பிரதமருடன் அண்மையில் கலந்துரையாடல் நடத்தினோம். எனினும், மாடி வீடு, மாடி வீடு என அது தொடர்பில் தவறான கருத்து
பரப்பட்டுவருகின்றது. கூரைக்கு பதிலாக ‘கொங்ரீட்’ போட்ட தனி வீடுகளையே நாம் அமைக்கவுள்ளோம். எனவே,
போலித்தகவல்களை நம்பவேண்டாம். விரைவில் உண்மை என்னவென்பதை உங்களால் நேரில் காணமுடியும்.
சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மண்டபத்தின்கீழ் நான்கு நிறுவனங்கள் வருகின்றன. அவை தொடர்பிலும்
கலந்துரையாடினோம். மேற்படி நிறுவனங்களில் வளப்பற்றாக்குறை இருந்தது. அவை குறித்து சுட்டிக்காட்டினோம்
பொலிஸ் வேட்டை – 28 ஆண் பெண்கள் கைது
பொலிஸ் வேட்டை – 28 ஆண் பெண்கள் கைது
பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபாசாரம் ஒன்றில் போதைப்பொருள்களுடன் இருந்த 28 இளைஞர், யுவதிகளை அக்மீமன பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களுள் 26 இளைஞர்களும் 2 யுவதிகளும் உள்ளடங்குவதாகவும் இவர்கள் மாத்தளை,
அநுராதபுரம், மொரட்டுவ, அம்பாறை மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கராப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரால் இந்த விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகவும் இவ்வாறு
கைதுசெய்யப்பட்ட அனைவரும் விஷ போதைப்பொருள்களை பயன்படுத்தியமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களை
மீறியமை ஆகியவற்றின் கீழ், இன்று காலி நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்
பதுளையில் போதையில் குழந்தையை சுட்ட தந்தை
பதுளையில் போதையில் குழந்தையை சுட்ட தந்தை
அதிக மதுபோதையில் இருந்த தந்தையொருவர், இரண்டு வயதான தனது மகன் மீதும் தன் மதும் கட்டுத்ததுப்பாக்கியால் சுட்டதால்,
இருவரும் பலத்த காயங்களுடன் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், பசறை- பிபிலேகம பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தந்தையே, இவ்வாறு துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்.
இவ்வாறு துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், அதிக மதுபோதையில் இருந்ததாகத் தெரிவித்துள்ள பொலிஸார், சம்பவம் தொடர்பில்
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
கண்டியில் உணரப்பட்ட அதிர்வு – நில நடுக்கம் அல்ல
கண்டியில் உணரப்பட்ட அதிர்வு – நில நடுக்கம் அல்ல
கண்டியில் நேற்றிரவு உணரப்பட்ட அதிர்வு நில நடுக்கம் அல்ல என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கண்டியில் ஹாரகம , அனுரகம மயிலப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில்
மக்கள் நேற்றிரவு 8.38 அளவில் ஒரு வகையான சத்தத்துடன் அதிர்வொன்று ஏற்பட்டதாக தெரிவித்தார்.
இது குறித்து தலாத்துஓயா பொலிசாருக்கு மக்கள் அறிவித்தனர்
இதுதொடர்பாக புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் தெரிவிக்கையில் ,குறிப்பிட்ட இந்த
பிரதேசங்களில் நில நடுக்கம் எதுவும் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று இன்று பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாகவும்
புவிச்சரிதவியல் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு ஆராய்ச்சிப் பணியகம் மேலும் தெரிவித்தது.
காரைநகர் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு
காரைநகர் கடல்வழியாக நடத்த பட்ட பெரும் தங்க கடத்தல் முறியடிப்பு
இந்தியாவில் இருந்து காரைநகர் கடல்வழியாக இலங்குக்குள் ஐந்து கிலோவுக்கு
மேற்பட்ட தங்கத்தை கடத்திவர முற்ப்பட்ட பொழுது அவை கடற்படையினரின்
தீவிர ரோந்து கண் காணிப்பினால் முறியடிக்க பட்டுள்ளதாக வடக்கு கடல் படை தலைமையகம் அறிவித்துள்ளது
இந்த கடத்தலை மேற்கொண்ட நபர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக சிங்கள கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
கட்டுநாயக்கா விமான நிலையம் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறக்க படுகிறது
கட்டுநாயக்கா விமான நிலையம் மக்கள் பாவனைக்கு முழுமையாக திறக்க படுகிறது
இலங்கை தலைநகர் அருகில் அமைந்துள்ள கட்டு நாயாக்க சர்வதேச
விமான நிலையம் மீள் மக்கள் பாவனைக்கு திறக்கப்படவுள்ளதாக முக்கிய அமைச்சர் தெரிவித்துள்ளார்
கொரனோ நோயின் தாக்குதல் அச்சறுத்தல் உள்ளபோதும் வெளிநாடுகளில்
இருந்து இலங்கைக்குள் நுழைபவர்க்ள அடையாளம் காணப்பட்டால் அவர்கள்
தனிமை படுத்தலுக்கு உள்ளாக்க பட்ட பின்னர் விடுதலை செய்யும் சுழற்றி முறையினை அரசு கையாள உள்ளதாக தெரிவிக்க படுகிறது
வீழ்ந்து கிடக்கும் பொருளாதரத்தை இத்துடன் நிமிர்த்தி விட இலங்கை ஆளும் அரசு முயற்சிப்பது குறிப்பிட தக்கது
கூட்டுறவு சங்கங்கள் – நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தியானதாக இல்லை- வடக்கு ஆளுநர்
கூட்டுறவு சங்கங்கள் – நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தியானதாக இல்லை- வடக்கு ஆளுநர்
வட மாகாண கூட்டுறவு சங்கங்கள் மற்;றும் நிறுவனங்களின் செயற்பாடுகள் திருப்தி கரமானதாக இல்லை என்று வட மாகாண தெரிவித்துள்ளார்.
இலங்கை மட்டுமல்ல உலக நாடுகளின் பொருளாதார வளர்;;ச்சியென்பது கூட்டுறவுத் துறையின் செயற்பாடுகள் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்தே அமைந்துள்ளது. சீனாவிலுள்ள
பெரும்பாலான வங்கிகள் விவசாய வங்கிகளே. இத்தாலி நாட்டிலுள்ள பெரும்பாலான பல்பொருள் அங்காடிகள் கூட்டுறவுத்துறையினரதே. அங்கிருக்கும் இறைச்சி, பற்பசை உட்பட அனைத்தும் கூட்டுறவுத்துறையின் தாயாரிப்புக்களாவே
காணப்படுகின்றது. எனவே, கூட்டுறவுத்துறையென்பது ஒரு நாட்டின் முதுகெலும்பாக அமைகின்றது. ஆனால், நமது
மாகாணத்தில் அத்துறையொரு தோல்வியின் துறையாக மாறிக்கொண்டிருக்கின்றது என்றும் அவர் கூறினார்.
வட மாகாணக் கூட்டுறவு திணைக்கள அதிகாரிகள், கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் மற்றும் முகாமையாளர்கள் கலந்துகொண்ட கலந்துரையாடலொன்று வட மாகாண ஆளுநர்
திருமதி.பீ.எஸ்.எம்.சாளஸ் தலைமையில் (27-8-2020); ஆளுநர் செயலகக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வட மாகாணப் பிரதம் செயலாளர், ஆளுநரின் செயலாளர், கூட்டுறவுத் திணைக்கள ஆணையாளர் கலந்துகொண்டனர்.
கூட்டுறவு சங்கங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் சவால்களையும் கேட்டறிந்த ஆளுநர் மேலும் தெரிவிக்கையில் , கூட்டுறவே நாட்டுயர்வு என்று கூறுவார்கள். அவ்வடிப்படையில்
பார்த்தால் நமது மாகாணத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் வளர்ச்சியடையாமலும் சில
சங்கங்கள் இயங்காமலும் உள்ளதாக எனக்களிக்கப்பட்ட அறிக்கையினூடாக அறிந்துகொண்டேன். அப்படிப் பார்க்கும்போது மாகாண அரசு எவ்வளவு முயன்றும் முன்னேற்றத்தைக் காணமுடியவில்லை. அதற்குக் காரணம் என்னவென்பது எனக்குத் தெரியவில்லை. கூட்டு உறவாக இல்லாமல் தனிமனித சிந்தனையுள்ளவர்களாக நாமிருப்துதான் காரணமாக இருக்குமோவென நான் நினைக்கின்றேன்.
மக்களோடு இணைந்திருக்கும் ஒரு திணைக்களம் தான் இந்தக் கூட்டுறவுத் திணைக்களம். அதற்குப் பரந்த செயற்பாடுகளும் அதிகாரங்களும் இருக்கின்றன. அதனூடாகப் பல கடமைகள்
இருக்கின்றன. நமது பொருளாதாரத்தையும் தமத வர்த்தக செயற்பாடுகளையும் வளர்த்தெடுப்பதற்கான கடப்பாடு
கூட்டுறவுத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், அப்படிப்பட்ட ஒரு துறையின் செயற்பாடுகள் சீரான முன்னேற்றப் பாதையில் இல்லையென்பதே கவலையளிக்கின்ற விடயமாகவுள்ளது.
சீரழிந்துபோயிருக்கின்ற நமது மாகாணத்தின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவேண்டுமென்றால் மக்களோடு மக்களாகவிருக்கும் கூட்டுறவுத்துறையின் செயற்பாட்டில்தான் உள்ளது. தனிமனித
செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் தவிர்த்துப் பொது நலனில் அக்கறை கொண்டவர்களாக கூட்டுறவுத்துறையைச் சார்ந்தவர்கள் செயற்படவேண்டும். அப்போதுதான் மாகாணசபையின்
ஒத்துழைப்பை தொடர்ந்தும் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்க இயலும். கூட்டுறவுத்துறையின் வளர்ச்சியின்மை தொடர்பான தெளிவானதும் துள்ளியமானதுமான அறிக்கையை
கூட்டுறவுத்திணைக்கள ஆணையாளர்கள் மற்றும் பணிப்பாளர்கள் எனக்குப் சமர்ப்பிக்கவேண்டும்.
கூட்டுறவு சங்கங்களின் வளர்ச்சியிலும் செயற்பாடுகளிலும் ஒத்துழைக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நமது உற்பத்தி மற்றும் தேவைகள் பற்றிய ஒரு திட்ட அறிக்கை தயாரிக்க வேண்டும். நமக்குத் தேவையான அனைத்தையும்
கூடுமானவரை நாமே உற்பத்தி செய்துகொள்ளவேண்டும். வெளியிலிருந்து கொள்வனவு செய்வதைக் குறைக்கவேண்டும். நமது உற்பத்திப் பொருட்களின் சந்தைப்படுத்தலையும் நாமே
செய்யவேண்டும். வெளிநபர்கள் அதைச் செய்வதைத் தவிர்க்கவேண்டும். தொழிற்துறைகள் வளரவில்லையென்றால் ஆணையாளர்களும் பணிப்பாளர்களும் அதற்குப் பொறுப்பேற்க
வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை கூட்டுறவுத் திணைக்களம் முன்னெடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்க – யாழில் மக்கள் போராட்டம்
சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்க – யாழில் மக்கள் போராட்டம்
யாழ்ப்பாணம் பேரூந்து நிலையம் முன்பாக சிறைகளில் நீண்ட காலமாக
தடுத்து வைக்க பட்டுள்ள மக்களை விடுதலை செய்ய கோரிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பெரும் போராடட்ம ஒன்றை நடத்தினர்
இந்த கூடடகிற்கு பாரளுமன்ற உறுப்பினர்களாக உள்ள இரு காயந்திரன்களும் கலந்து கொண்டனர்
எதுவித விசாரணைகளும் இன்றி தடுத்து வைக்க பட்டவர்களை விடுதலை
செய்திட கோரிய பொழுதும் அதனை ஆளும் அரசுகள் கருத்தில் எடுக்காது புதிய சிறை சாலைகளை அமைத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

இலங்கையில் இனப் பிரச்சினையை தீர்பதற்கு இதுவே தீர்வு
இலங்கையில் இனப் பிரச்சினையை தீர்பதற்கு இதுவே தீர்வு
அமைச்சர் உதய கம்மன்பில வரலாற்றைப் படித்துவிட்டு தன்னோடு விவாதத்துக்கு வர வேண்டுமென தெரிவித்த தமிழ் மக்கள் தேசிய
கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன், நாட்டின் இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான மருந்து எனவும் தெரிவித்தார்.
இடைக்கால கணக்கு அறிக்கை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“எனது நண்பர் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு கூறுவது என்னவென்றால் அவரின் வரலாற்று குறிப்புகள் காலங்கடந்தவை. அவர் வரலாற்றை படித்துவிட்டு அவர் வர வேண்டும்.
நான் பிரிவினைவாதத்தை கேட்கவில்லை பல்வகைத்தன்மையில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்றே கூறுகிறேன். எனது உரை
தொடர்பில் நேர்மையாகவும், தொழில்முறையாகவும் நடந்துக்கொண்ட நாடாளுமன்ற செயலாளர் நாயகத்துக்கு நன்றியை கூறிக்கொள்கிறேன்.
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள இடைக்கால கணக்கு அறிக்கை தொடர்பில் நான் எதனையும் கூறப்போவதில்லை. எந்தவொரு
அரசாங்கமும் தமிழ் மக்களை துயரத்திலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. பொருளாதார உதவிகள் வழங்கப்படவில்லை.
முதலமைச்சருக்கான நிதி கூட மறுக்கப்பட்டது. அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எங்களது மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தப்பட வேண்டும்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கிறது. நிலையான சமாதானத்தை
ஏற்படுத்துவதற்கு இதுவே பொன்னான தருனம். யுத்தத்தை வெல்வது இலகு. ஆனால் சமாதானத்தை வெல்வது கடினமானது. சமாதானமே உண்மையான வெற்றி.
“ஒருமித்த” நாட்டுக்குப் பதிலாக “ஐக்கிய” நாட்டை கட்டியெழுப்புவதன் மூலம், 10 ட்ரில்லியன் சர்வதேச கடன்
இருக்கின்றபோதிலுங் கூட, இந்த நாட்டை இந்த உலகின் சொர்க்க பூமியாக உங்களால் மாற்ற முடியும்.
இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்கு சரியான மருந்து சமஷ்டி முறைமையே ஆகும். தயவுசெய்து இந்த சந்தர்ப்பத்தை நழுவ
விட்டுவிடாதீர்கள். ஆபத்தை உணரும்போது, தீக்கோழி தனது தலையை மணலில் புதைத்துக் கொள்வதுபோல பிரச்சினைகள்
இருக்கும்போது அவை இல்லை என்று கூறி அவற்றில் இருந்து விலகி ஓடுவது முட்டாள்த்தனமானது.” எனவும் தெரிவித்தார்.
வவுனியாவில் அவசரமாக கூடும் தமிழர் கட்சி – மாவை பதவி பறி போகுமா ..?
வவுனியாவில் அவசரமாக கூடும் தமிழர் கட்சி – மாவை பதவி பறி போகுமா ..?
இன்று வவுனியாவில் தமிழரசு கட்சி அவசரமாக கூடி தேத்தல் தோல்வி தொடர்பில் ஆராய்கிறது
,இந்த தோல்விக்கு மாவையே காரணம் என கூட்டப்பட்டு வரும் நிலையில்
மாவை தலைவர் பதவி பிடுங்க பட்டு சிறிதரன் அதற்கு நியமிக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது
இதனால் இந்த கூட்டமும் இக முக்கியன ஒன்றாக பார்க்க படுகிறது
இன்று இதன் முடிவுகள் தெரியவரலாம் ,
பொலிஸாரால் ஒருவர் சுட்டு கொலை -சிங்கள காவல்துறை அராயகம்
பொலிஸாரால் ஒருவர் சுட்டு கொலை -சிங்கள காவல்துறை அராயகம்
நேற்று இரவு குற்றவாளி என அடையாள படுத்த பட்ட ஒருவரை
கைது செய்ய போலீசார் சென்ற வேளை அவர் அங்கருந்து தப்பிக்க முயன்றுள்ளார்
இதன் பொழுது நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில் பலத்த காயமடைந்த
அவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
இவரது மரணம் தொடர்பில் கருத்துரைத்த போலீசார் ,பலவேறு பட்ட குற்ற
செயல்களுடன் தொடர்பு பட்ட நபரே
இவ்விதம் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ளனர்
செருப்பால் ஆண் பிச்சைக்காரரை அடித்து கொன்ற பெண்
செருப்பால் ஆண் பிச்சைக்காரரை அடித்து கொன்ற பெண்
இலங்கை அனுராதபுரம் பகுதியில் பிச்சை எடுத்து தனது
வாழ்வாதாரத்தை போக்கி வந்த 62 வயது பிச்சை காரர் ஒருவருக்கு
பெண் பிச்சை காரர் ஒருவருக்கும் இடையில் கருத்து முரண் பாடு ஏற்பட்டது
இதனால் ஆத்திரமுற்ற பெண் பிச்சை காரர் தனது செருப்பால் சரமாரியாக தாக்கினார்
இதில் வயதானவர் பரிதாபகரமாக பலியானார்
கொலை குற்ற சாட்டில் பெண் பிச்சை காரி கைது செய்ய பட்டுள்ளார்
மருந்து வகைகளின் விலைகளை விரைவில் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்
மருந்து வகைகளின் விலைகளை விரைவில் குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானம்
சில மருந்து வகைகளின் விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும்
ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலை குறைக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில்
ஆரம்பிக்கவுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்துள்ளார்.
முடிவுக்கு வரும் ரணில் அரசியல் வாழ்ககை – இலங்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றம்
முடிவுக்கு வரும் ரணில் அரசியல் வாழ்ககை – இலங்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றம்
நடந்து முடிந்த ஒன்பதவது பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆசனங்கள் எதனையும் பெறாது தோற்று போனது
இந்த தோல்வியை அடுத்து தற்பொழுது அதன் கட்சி தலைவர்
ரணில் விக்கிரமசிங்கா தலைமை பதவியில் இருந்து விலக
வேண்டும் எனவும் .தலைவர் கரு ஜெயசூரிய நியமிக்க பட வேண்டும் என கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது
ஆனால் ரணில் தானே தான் தலைவர் என தொடர்ந்தும் அடம் பிடித்து வருகின்றார்
ரணில் பதவி விலகினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுங்கும் நிலைக்கே அவர் செல்ல கூடும் என நம்ப படுகிறது
இலங்கையில் -7,122 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்
இலங்கையில் -7,122 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக
சுமார் 69 தனிமை படுத்தல் நிலையங்களில் ஏழாயிரத்து நூற்றி இருபத்தி இரண்டு பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவர்களில் அதிகமானவர்கள் வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது
இலங்கை திரும்ப காத்திருக்கும் 54 ஆயிரம் இலங்கையர்கள்
இலங்கை திரும்ப காத்திருக்கும் 54 ஆயிரம் இலங்கையர்கள்
உலகம் முழுவதும் வேகமாக பரவிய கொரனோ வைரஸ் காரணமாக மீளவும் தாயகம் திரும்பிடும் நோக்குடன் ஐம்பத்தி
நான்காயிரம் பேர் உலகம் எங்கும் காத்துள்ளதுதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவர்களை மீள நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ள படுவதாதாக பொறுப்புநிலை அமைச்சகம் அறிவித்துள்ளது
இலங்கையில் மீன்பிடி வளத்தை பெருக்க நோர்வே நாட்டுடன் ஒப்பந்தம்
இலங்கையில் மீன்பிடி வளத்தை பெருக்க நோர்வே நாட்டுடன் ஒப்பந்தம்
இலங்கையில் ஆளும் புதிய ஆட்சியின் கீழ் இலங்கையில் மீன்பிடி வளத்தை
மேம்படுத்தும் நோக்குடன் நோர்வே நாடு புதிய ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளது
இதன் ஊடாக மீன்வளத்தை அதிகரித்தல் மற்றும் அதன் பயன் பாடுகள் வேகமாக பெறுதல் என்பன உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது
பல மில்லியன் ரூபா திட்டத்தில் இந்த விடயங்கள் நடைமுறை படுத்த படவுள்ளன

கிளிநொச்சியில் நான்கு உயரதர மாணவர்கள் கைது
கிளிநொச்சியில் நான்கு உயரதர மாணவர்கள் கைது
இலங்கை தமிழர் தாயக பகுதியான கிளிநொச்சியில் நான்கு
உயர்தர மாணவர்கள் தற்பொழுது காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள் Heroin போதைவஸ்து வைத்திருந்த நிலையில் இந்த கைது வேட்டை
இடம்பெற்றுள்ளது ,சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் தமிழர் தாயக
பகுதிகளை ஆக்கிரமித்ததன் பின்னர் இவ்விதமான நிகழ்வுகள் அதிகம் அரங்கேறி வருகிறது
ஒழுக்கமாக விளங்கிய தமிழர் கல்வி சமூகம் இன்று போதைவஸ்து பாவனைக்கு
அடிமையாகி குற்றவியல் சமூகமாக மாற்றம் பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது








