Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
போதைக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி
போதைக்காக பாலியல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறுமி
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஹெரோயினுக்கு அடிமையான 17 வயதுச் சிறுமியொருவர் நேற்று மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டார்.
அவர் 8 மாதங்கள் கர்ப்பமாகவுள்ளார் என்றும் மருத்துவப் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் ஹெரோயினைப் பெறுவதற்காக பாலியல் துர்நடத்தையில் ஈடுபட்டதாலேயே கர்ப்பம் தரித்தார் என்று மறுவாழ்வு நிலையத்தின் பொறுப்பதிகாரி தெரிக்கின்றார்
சிறுமியின் தாயார் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே அந்தச் சிறுமி அடையாளம் காணப்பட்டு,
மறு வாழ்வு நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முறையான ஏற்பாடு
உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முறையான ஏற்பாடு
வறுமைக் காரணமாக மாணவத் தலைவி ஒருவர் மதிய உணவுக்கு தேங்காய்த் துண்டுகளை பாடசாலைக்கு எடுத்துவந்ததாக தேசிய பத்திரிகைகள் மற்றும்
சமூக ஊடகங்களில் வெளியான செய்தி தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது.
இதனையடுத்து குறித்த செய்தி தொடர்பில் தகவல்களைப் பெற ஜனாதிபதி அலுவலகம் நடவடிக்கை எடுத்தது.
• பாடசாலை மாணவர் ஒருவர் மதிய உணவிற்கு தேங்காய்த் துண்டுகளை எடுத்து வந்த செய்தியில் உண்மையில்லை.
இதன்படி, மினுவாங்கொடை பிராந்திய பணிப்பாளர் வஜிர ரணராஜா, கம்பஹா மாவட்ட செயலாளர் டபிள்யூ. சத்தியானந்த, திவுலப்பிட்டிய பிரதேச செயலாளர், மினுவாங்கொடை கல்வி வலய திவுலப்பிட்டி கல்விப் பிரிவின்
பணிப்பாளர், கொங்கொடமுல்ல புனித அந்தோனியார் கனிஷ்ட கல்லூரியின் அதிபர் ஆகியோரிடமிருந்து தகவல்கள் பெற்றப்பட்டன.
அத்துடன், மாணவி வாழும் பிரதேச கிராம உத்தியோகத்தர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரிடம் இருந்தும் தகவல்கள்
பெறப்பட்டன. எனினும், இந்தத் தகவல்களின்படி அவ்வாறானதொரு சம்பவம் எதுவும் அப்பகுதியில் பதிவாகவில்லை என்று உறுதியாகியுள்ளது.
உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முறையான ஏற்பாடு
எவ்வாறாயினும், தற்போதைய பொருளாதார நிலைமைக் காரணமாக உணவு நெருக்கடி ஏற்பட்டால் இதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எந்தவொரு குழந்தையோ, நபரோ அல்லது குடும்பமோ உணவு நெருக்கடிக்கு உள்ளானால் இதற்குத் தீர்வு காண விசேட வேலைத்திட்டமொன்று பிரதேச
செயலகங்கள் மற்றும் மாவட்ட செயலகங்கள் மட்டத்தில் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் பேரில் ஜனாதிபதி அலுவலகத்தில் உணவுப் பாதுகாப்புத் திட்டப் பிரிவொன்று
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 0114354647 மற்றும் 0114354354 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைத்து 5705/5707 ஆகிய நீட்டிப்பு இலக்கங்களின் ஊடாக ஜனாதிபதி அலுவலகத்திற்கு இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.
உலக உணவுத் திட்டத்தின் கீழ் உதவி பெறத் தகுதியான அளவுகோல்களைக் கொண்ட தரப்பினராக 05க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட சமுர்த்தி பயனாளிகளது குடும்பங்கள், ஊனமுற்றோர் மற்றும் நாட்பட்ட
நோயாளர்களைக் கொண்ட குடும்பங்கள், 05 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட ஏழ்மையான குடும்பங்கள், கணவன் அல்லது மனைவி இல்லாத குடும்பங்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களைக்
உணவு பாதுகாப்பை உறுதி செய்ய முறையான ஏற்பாடு
கொண்ட குடும்பங்கள், ஆரம்பக் கல்வி கூட பெறாத ஏழைக் குடும்பங்கள், கடுமையான உணவுப் பற்றாக்குறையுள்ள குடும்பங்கள் மற்றும் கடுமையான
உணவுப் பஞ்சத்தில் இருக்கும் குடும்பங்கள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறான குடும்பங்களுக்கு உலக உணவுத் திட்டத்தின் கீழ் மாதாந்தம் 15,000 ரூபாவை கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக
வழங்க முடியும். அதற்கமைய முதல் 03 மாதங்களுக்கு பணம் வழங்கப்படுவதுடன் மேலும் 06 மாதங்களுக்கு உணவு வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
இதுதவிர மாதந்தோறும் 10,000 ரூபா வீதம் 6 மாதங்கள் வரை கொடுப்பனவு வழங்க அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் உள்ளடங்காத மற்றும் தற்சமயம் உணவு கிடைக்காமல் தவிக்கும்
குடும்பங்கள் இருப்பின் அவர்களுக்கு குறுகிய காலத்தில் உணவு வழங்க வாய்ப்பு உள்ளது. கிராம அலுவலர்கள், பிரதேச செயலாளர்கள் ஊடாக
ஜனாதிபதி செயலகத்தின் உணவு பாதுகாப்பு திட்டப் பிரிவுக்கு கோரிக்கை முன்வைக்க வேண்டும்.
மேலும், ஊட்டச்சத்து குறைபாடுள்ள மாணவர்களைக் கொண்ட குடும்பங்கள் இருந்தால், அது தொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட்டு, அத்தகைய
குடும்பங்களுக்கு அரசாங்கம் செயல்படுத்தி வரும் பெற்றோர் பாதுகாவலர் திட்டங்கள் மூலம் உணவு உதவித் திட்டங்கள் வழங்கப்படும்.
மேலும், உணவின்றி தவிக்கும் குடும்பங்கள் பற்றிய தகவல்களை பாடசாலை ஆசிரியர்களும் சேகரித்து, ஜனாதிபதி அலுவலகத்திற்கு அனுப்ப முடியும்.
அத்தகைய குடும்பங்களுக்கு உதவ விரும்புபவர்களும் இதில் இணைந்து உதவி வழங்க முடியும்.
அதுமட்டுமின்றி கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஜனாதிபதி அலுவலகத்துடன்
தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்ய முடியும்.
இலங்கைக்கு உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி
இலங்கைக்கு உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெற்றுக்கொள்ள இலங்கைக்கு முழுமையான ஒத்துழைப்பை
வழங்குவதாக வெளிநாட்டு தூதவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளனர்.
கடன் மறுசீரமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியைப் பெறுவது தொடர்பில் ஜனாதிபதி வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு விளக்கமளித்தார்.
இலங்கைக்கு உதவுவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதி
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (22) பிற்பகல் நடைபெற்ற இச்சந்திப்பின் போது, சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளைப் பெறுவதற்கும், கடன்
மறுசீரமைப்பிற்கும் தமது ஒத்துழைப்பை வழங்குவதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.
• நெருக்கடியில் இருந்து இலங்கைக்கு மீள முடியும் என்று வெளிநாட்டுத் தூதுவர்கள் நம்பிக்கை!
பரிஸ் க்ளப் (Paris Club) மற்றும் பரிஸ் க்ளப்பில் அங்கத்துவம் அல்லாத 23 நாடுகளின் தூதுவர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் இலங்கை நிச்சயம்
இப்பிரச்சினையிலிருந்து மீண்டெழும் என்றும் வெளிநாட்டுத் தூதுவர்கள் இதன்போது நம்பிக்கை வெளியிட்டனர்.
கடன் மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்களை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் அதற்கு தேவையான
அனைத்து அர்ப்பணிப்புக்களை செய்து வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது வெளிநாட்டு தூதுவர்களிடம் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான முன்னேற்றம் குறித்து நிதியமைச்சின் செயலாளர் மகிந்த
சிறிவர்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோர் இதன்போது விளக்கமளித்தனர்.
இதனையடுத்து, வெளிவிவகார தூதுவர்களுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி, எதிர்கால சந்ததியினருக்காக தற்போதைய நெருக்கடியை , வெற்றிகொள்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என
கேட்டுக்கொண்டார். இதற்காக அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடனும், சமத்துவத்துடனும் பணியாற்றும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இராஜாங்க அமைச்சர்களான ரஞ்சித் சியம்பலாபிட்டிய, தாரக்க பாலசூரிய,
ஷெஹான் சேமசிங்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட
ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் தலைவருமான சாகல ரத்நாயக்க,
வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜயவர்தன உள்ளிட்ட பல அரசாங்க அதிகாரிகளும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் இம்ரான் எம் பி
இன ஒற்றுமையை பாதிக்கின்ற, காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்.- இம்ரான் எம் பி அரசாங்கத்திடம் வேண்டுகோள்.
பைஷல் இஸ்மாயில் –
தற்போது நாட்டில் சிலர் வீரப்பேச்சுக்களை பேசித்திரிந்தாலும் பொருட்களில் விலைகளை கட்டுப்படுத்தமுடியாமல் இருப்பதாகவும், பொருட்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுவதாகவும், சில பொருட்கள் மாபியா அடிப்படையில்
விற்கப்படுவதாகவும், தற்போது வைத்தியசாலைகளில் மருந்து பொருட்கள், ஏனைய வசதிகள் பற்றாக்குறையாக காணப்படுவதால் மக்கள் தனியார்
வைத்தியசாலையை நோக்கி செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக மக்கள் பாரிய அளவில் கஸ்டப்படுவதாகவும்
செவ்வாக்கிழமை (20) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போது பா உ இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
காணி அபகரிப்பு செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும் இம்ரான் எம் பி
மேலும் அவர் தெரிவிக்கையில், தற்போது மக்கள் பல துன்பங்கள், துயரங்கள் அடைந்துள்ள சந்தர்ப்பத்தில் திருகோணமலை மாவட்டத்தில் தோப்பூர் பிரதேசத்திற்குட்பட்ட இக்பால் நகர், உல்லைக்குளம் காணிகளில் வாழும்
தமிழ், முஸ்லிம் மக்களுடைய இன ஒற்றுமையை பாதிக்கின்ற வகையில் காணிப்பிரச்சினைகளை உருவாக்கி இன பிரச்சினைகளை உருவாக்க சில
நாசக்கார சக்திகள் முயற்சிப்பதாகவும் அது உடன் நிறுத்தப்படவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
மேலும், குச்சவெளி பிரதேசத்திற்குரிய சில காணிப்பரப்புகளை
கோமரன்கடவள பிரதேசத்திற்கு உள்வாங்குவதாக சொல்லி சில
அதிகாரிகள் அளவிட அந்த இடங்களில் வருகின்ற போது மக்களுக்கிடையில்
பிரச்சினை உருவாகுவதாகவும் இந்த நாடு சென்று கொண்டிருக்கின்ற இந்த சூழ்
நிலையில் இன ஒற்றுமையை பாதிக்கின்ற செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும்
எனவும் அதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
நினைவூட்டல்REMINDER: மெல்பேர்ன் சிட்னிபிறிஸ்பேன் பேர்த் அடிலெயிட் தியாகி தீலீபனின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்
நினைவூட்டல்REMINDER: மெல்பேர்ன் சிட்னிபிறிஸ்பேன் பேர்த் அடிலெயிட் தியாகி தீலீபனின் 35ம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்
வணக்கம்!
அன்பான உறவுகளே,
தன்னுடலை வருத்தி நீர்கூட அருந்தாது, தன்னுயிரை ஈகம் செய்த தியாகி திலீபனின் 35ம் ஆண்டு நினைவு நிகழ்வான தியாக தீப கலை மாலை நிகழ்வு, எதிர்வரும்
செப்ரம்பர் மாதம் 25ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மெல்பேர்னில் இடம்பெறவுள்ளது. ஆயுதந்தரித்து களமாடிய விடுதலைப் போராளியான திலீபன், காந்தி தேசத்திடம் தமிழீழ மக்களுக்காக நீதிகோரி சாத்வீக வழியில் போராடினான்.
உடனயாக தீர்வு காணப்படவேண்டிய ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து திலீபன் மேற்கொண்ட பயணம், எமது விடுதலைப் போராட்டத்தில் உன்னதமான
அர்ப்பணிப்பாகியது. பன்னிருநாட்கள் தன்னை உருக்கி உருக்கி எரிந்தணைந்த அந்தத் தியாக தீபத்தின் நினைவுநாள் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
Details of the THIYAAGI THILEEPAN’s Melbourne Memorial Event are:
இடம்: Victorian Tamil Community Centre Palmyra Hall, 40-44 Lonsdale Street, Dandenong, Vic 3175.
காலம்: 25/09/2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 – 8 மணி.
தொடர்புகளுக்கு: 0433 002 619
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்டோரியா
விசர் நாய் ஊசிகளுடன் இலங்கை வந்தடைந்த சீனா விமானம்
விசர் நாய் ஊசிகளுடன் இலங்கை வந்தடைந்த சீனா விமானம்
சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானம் ஒன்று இன்று (23) இலங்கையை வந்தடைய உள்ளது.
06 மாதங்களுக்கு போதுமான விசர் நாய் தடுப்பூசிகளும் இந்த மருந்துகளுடன் உள்ளடங்குவதாக சுகாதார அமைச்சின் இணைப்பதிகாரி வைத்தியர்; அன்வர் ஹம்த்ரானி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு தேவையான அத்தியாவசிய மருந்துகளும்; அதே விமானத்தில் கொண்டு வரப்படுகிறது.
சுகாதார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்ட வேண்டுகோளுக்கு இணங்க இந்த மருந்துப் பொருட்களை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் பெறுமதி சுமார் 500 மில்லியன் ரூபாவாகும்.
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு நியமனம்
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு நியமனம்
இந்தியாவிலிருந்து நாடு திரும்பியுள்ள மற்றும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான விசேட
வேலைத்திட்டமொன்றை இழப்பீடுகளுக்கான அலுவலகத்துடன் இணைந்து நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
அமைச்ச ஆரம்பித்துள்ளது. அதற்காக நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா தலைமையில் விசேட குழுவொன்று
நியமிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த குழுவானது நாடு திரும்பியவர்களுக்கு உரிய ஆவணங்களை தாமதமின்றி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகதிகள் பிரச்சினைக்கு தீர்வுகாண விசேட குழு நியமனம்
பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், வடமாகாணத்தின் அனைத்து மாவட்ட செயலாளர்கள்
மற்றும் ஜனாதிபதி செயலகம், பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு, பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் இந்தக் குழுவில் உள்ளடங்குகின்றனர்.
ஆவண ஆதாரங்களை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட பங்குதாரர்களின் பங்களிப்புடன் ஒக்டோபர் மாதம் வடக்கு மாகாணத்தில் நடமாடும் முகாம் ஒன்றை ஏற்பாடு செய்தல்.
தற்போது கொழும்பில் உள்ள தலைமை அலுவலகத்தால் கையாளப்படும் குடியுரிமை பெறுவது தொடர்பான ஆவணங்களை மாவட்ட செயலக மட்டத்தில் ஏற்றுக்கொள்வது.
அகதிகள் இந்த ஆவணங்களில் சிலவற்றைச் சமர்ப்பிப்பது கடினமாக இருப்பதால், குடியுரிமையைப் பெறுவதற்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்களின் சரிபார்ப்புப் பட்டியலைத் திருத்துதல்.
சான்றிதழைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டால் அபராதத் தொகையை ரத்து
செய்தல் மற்றும் குறைத்தல் ஆகிய பணிகளை முன்னெடுக்க இந்த குழுவுக்கு பணிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதட்டம்
இலங்கையில் இராணுவம் குவிப்பு மக்கள் மத்தியில் பதட்டம்
இலங்கையில் இராணுவம் எங்கும் திடீரென குவிக்க பட்டுள்ளதால் ,மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் வர்த்தமானி அறிவித்தல் மூலம் ,விடுக்க பட்ட அறிவித்தலை அடுத்து இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட இவ்வாறு இராணுவம்வீதி எங்கும் குவிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் போராட்டங்களை நசுக்கிட ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இராணுவம் குவிக்க பட்டுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது.
யாழில் வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க துரத்திய 10 பேர் கைது
யாழில் வெளிநாட்டு பெண்ணை கற்பழிக்க துரத்திய 10 பேர் கைது
யாழ்ப்பாணம் கரை நகர் பகுதிக்கு வருகை தந்த ஸ்பெயின் நாட்டு பெண் ஒருவர் மீது அங்கு கூடிய பத்து பேர் கற்பழிக்க தொந்தரவு தருவித்துள்ளனர் .
பாதிக்க பட்ட பெண் காவல்துறையினருக்கு வழங்கிய ,தகவலின் அடிப்படையில் ,தற்போது நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது .
வெளிநாட்டு பெண்ணின் முறைப்பாட்டின் அடிப்படையில் பத்து பேரும் கைது செய்யப்பட்டு ,காவல்துறை விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர்
காரைநகர் கோவலன் கடற்கரை பகுதியில் நடந்துள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து .
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம்
இலங்கையில் மீளவும் உணவு பஞ்சம் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது எச்சரிக்கை விடுக்க படுகிறது .
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ,அதன் காரணமாக எழுந்துள்ள எரிபொருள்தட்டு பாடு காரணமாக வேலைவாய்ப்பு இழக்க பட்டுள்ளது .
இந்த தொழில் நிறுவனங்கள் பலநூறு அடித்து பூட்ட பட்டுள்ளதல் ,மக்கள் தமது வாழ்வாதரத்தை இழந்து தவிக்கும் துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது .
இதன் தொடர்ச்சி மேலும் நீடித்து சென்றால் விவசாய துறை பாதிக்க படுகிறது .
நாட்டில் இறக்குமதி நெருக்கடி நிலை ஏற்படும் பொழுதும், இவ்விதமான பாரிய உணவு பற்றாக்குறை ஏற்படும் என்கிறது ஆய்வு ஒன்று .
இவ்வாறான பாரிய நெருக்கடி ஏற்படுவதற்கு முன்பாக ,இலங்கை சுதாகரித்து எழுச்சி கொள்ளுமா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது .
அவ்வாறான நிலை நீடிக்கும் அபாயம் இலங்கையில் ஏற்படும் எனப்படுகிறது .
கடற்கரை மிதந்த ஆணின் சடலம் நடந்தது என்ன
கடற்கரை மிதந்த ஆணின் சடலம் நடந்தது என்ன
இலங்கை மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பகுதியில் ,ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .
சடலமாக மீட்க பட்டவர் 45 வயதுடையவ தமிழர் என கண்டறிய பட்டுள்ளது .
சடலமாக மீட்க பட்டவர் கொலை செய்யப் பட்டாரா .அல்லது இயற்கையாக
இறந்தாரா என்பது தொடர்பில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
வவுனியா யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் விபச்சாரம் கொட்டல்கள் உடந்தை
வவுனியா யாழ்ப்பாணத்தில் அதிகரிக்கும் விபச்சாரம் கொட்டல்கள் உடந்தை
இலங்கை வவுனியா யாழ்ப்பாண பகுதிகளில் சில மாதங்களாக விபச்சாரம்
அதிகரித்து செல்கிறது
வவுனியா யாழ்ப்பாணத்தில் உள்ள சில கொட்டல்கள் இந்த விபச்சாரத்தின் பின் புலத்தில் உள்ளதாகவும் ,அவர்களே இதன் முகவர்களாக செயல் பட்டு வருகின்றனர் என்கிறது சில தரப்பு .
தற்கால இலங்கையின் பொருளாதாரத்தை மைய படுத்தி ,இந்த விபச்சாரம் மேலும் அதிகரித்து காணப்படுகிறதாம் .
வேலைவாய்ப்பை இழந்த மக்கள் ,தமது வாழ்வாதாரத்தையும் ,பட்ட கடன்களை வேறு வழியின்றி ,இதன் ஊடாக நிவர்த்தி செய்து வருவதாக .தெரிவிக்க படுகிறது .
ஒழுக்கத்துடன் வாழ்ந்த தமிழர் இனம் , இன்று ,உடல் விற்று பிழைக்கும் நிலைக்கு வித்திட்டுள்ள கால கொடுமைக்கு காரணமானவர்கள் யார் ..?
மக்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்; குச்சவெளி தவிசாளர் முபாறக் வேண்டுகோள்!
மக்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதிகாரிகள் முன்வரவேண்டும்; குச்சவெளி தவிசாளர் முபாறக் வேண்டுகோள்!
சிறுவர்கள், கர்ப்பிணித் தாய்மார், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களை உள்ளடக்கிய போசணை கொள்கைத் திட்டத்தை எமது பிரதேசத்தில் அமுல்படுத்துகின்ற அதேவேளை அரிசி ஆலைகளையும்
எமது பிரதேசத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம்.முபாறக் தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கிராமப்புற பொருளாதார மறுமலர்ச்சி மூலம் வறுமையை ஒழித்தல் எனும் தொனிப்பொருளின் கீழ் தேசிய உணவு
பாதுகாப்புத்திட்ட பிரதேச மட்ட கலந்துரையாடல் (22) குச்சவெளி பிரதேச செயலாளர் கே.குணநாதன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்ட குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் எம்.முபாறக் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதியின் இத்திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதார மறுமலர்ச்சியை உருவாக்குவதுடன் அவர்களின் வறுமையையும் ஒழிக்க முடியும். அத்துடன் சிறுவர்கள்,
கர்ப்பிணித் தாய்மார், பாடசாலை மாணவர்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர்களுக்கு சத்துணவு வழங்குவதன் மூலம் அவர்களின் ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து விடுவித்து, உணவுப் பாதுகாப்பையும்,
வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த முடியும். இதன் மூலம் பாதுகாப்பான அரோக்கிய கிராமத்தை உருவாக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
குச்சவெளி பிரதேசத்தில் கால்நடைகளின் தொல்லை வெகுவாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இதனால் விபத்துச் சம்பவங்களும் அதிகரித்து வருன்றன.
கால்நடைகளை ஒரு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவராவிட்டால் இன்னும் பல ஆபத்துக்களை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். எமது மக்களையும்,
அவர்களின் சொத்துக்களையும், உயிர்களையும் பாதுகாக்க அதுதொடர்பான அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
அவர்களுக்கான சகல ஒத்துழைப்புக்களை குச்சவெளி பிரதேச சபையும், சபை உறுப்பினர்களும் வழங்க என்றும் தயாராக இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில், குச்சவெளி பிரதேச சபை உறுப்பினர்கள், கிராம சேவகர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சிறப்பித்தனர்.
பைஷல் இஸ்மாயில் –
பசியால் தேங்காய் துண்டு உண்ட பரிதாபம்
பசியால் தேங்காய் துண்டு உண்ட பரிதாபம்
வறுமை காரணமாக மாணவர் ஒருவர், மதிய உணவுக்கு தேங்காய் துண்டுகளை உட்கொண்ட சம்பவம் ஆதாரமற்றது என்று கண்டறியப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அத்தகைய சூழ்நிலையை எதிர்கொள்ளும் எந்தவொரு குழந்தைக்கோ அல்லது குடும்பத்துக்கோ உதவ ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய வேலைத்திட்டம்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் 0114354647 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு அழைக்கமுடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
.
ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு
ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு
வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் குமுழமுனை கிழக்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவரும் காணி
அபகரிப்புக்கு எதிரான போராட்ட குழுவின் தலைவருமான இரத்தினராசா மயூரன் ஆகியோர் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றினால் இன்று (22) பிணையில் செல்ல அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
குருந்தூர் மலையை அண்டிய தமிழர் நிலங்கள் தொல்லியல் திணைக்கத்தால் அபகரிப்புக்குள்ளாக்கப்பட்டமையை கண்டித்தும், நீதிமன்ற உத்தரவை மீறி
தொடர்ந்தும் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் நேற்று (21) முல்லைத்தீவு குருந்தூர் மலை பகுதியில் போராட்டம்
ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு
மேற்கொண்டமைக்காக தொல்லியல் திணைக்களத்தின் முறைப்பாட்டுக்கு அமைவாக இவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தனர்.
கைது செய்யப்பட் இரண்டு பேரும் இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி .சரவணராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையில்
முல்லைத்தீவு பொலிஸார் இவர்கள் இருவருக்கு எதிராகவும் தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 140, பிரிவு 146 பிரிவு 147 மற்றும் பிரிவு 344 கீழ் பி (B)அறிக்கை ஒன்றினை மன்றில் தாக்கல் செய்த நிலையில் வழக்கு
விசாரணைக்கு வந்த நிலையில் சிரேஸ்ட சட்டதரணிகளான அன்ரன் புனிதநாயகம் , கெங்காதரன் , பரஞ்சோதி உள்ளிட்ட முல்லைத்தீவு மாவட்ட
சட்டத்தரணிகள் சங்கத்தை சேர்ந்த அனைத்து சட்டதரணிகளும் மன்றில் ரவிகரன் ,மயூரன் சார்ப்பில் முன்னிலையாகி தமது வாதங்களை முன்வைத்தனர்.
அதாவது ஏற்கனவே நீதிமன்றம் ஆக்கிய கட்டளையை மீறி குறித்த பகுதியில் தொடர்ந்தும் கட்டுமானம் நடைபெற்று வந்ததன் காரணத்தாலேயே இவர்கள்
அங்கு சென்று ஜனநாயக ரீதியில் அமைதியாக போராட்டம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது என மன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.
ரவிகரன் மயூரன் ஆட்பிணையில் விடுவிப்பு
பொலிஸார் இந்த வழக்கில் இன்னும் பலரை கைது செய்யவேண்டி உள்ளதாகவும், தொல்லியல் திணைக்கள அதிகாரிகளின் கடமைக்கு
இடையூறு ஏற்படுத்தியதன் காரணத்தினாலேயே இவர்களை கைது செய்ததாக மன்றில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் சட்டதரணிகளின் வாதங்களை அடுத்து இரண்டுபேரையும் தலா இரண்டு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் செல்ல அனுமதித்ததோடு
அடுத்த வழக்கானது 2023 பெப்ரவரி மாதம் இரண்டாம் திகதிக்கு தவணையிடப்படுள்ளது.
இன்றைய வழக்கு விசாரணை தொடர்பில் மூத்த சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் கடந்த 12.06.2022 அன்று இருந்த நிலமையினை பேணுமாறு வழங்கிய நீதிமன்ற கட்டளையினை தொல்லியல் திணைக்கள
அதிகாரிகளும் குருந்தூர் மலையில் இருக்கின்றவர்களும் மீறியதனால் நேற்றைய தினம் ஆர்ப்பாட்டம் இடம்பெற வேண்டிய தேவை உள்ளது என மன்றுக்கு சான்றுகள் ஊடக சட்டத்தரணிகளால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் மன்று
வினவியதன் பின்னர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பதிலினை பெறுவதற்காக தொல்லியல் திணைக்கள
பணிப்பாளர் நாயகத்தினை அடுத்த தவணைக்கு மன்றில் பதிலளிக்குமாறு வழங்கினை எதிர்வரும் 13ஆம் திகதியிடப்பட்டுள்ளதுடன்
பொலிஸார் அன்றையதினம் வரைக்கும் ஏற்கனவே மன்றில் இருந்த கட்டளையினை பேணுவதற்கு தாங்கள் உத்தரவாதம் தருவதாக தெரிவித்துள்ளார்கள்.
குருந்தூர்மலை பகுதியில் புத்த கோயில் – பொங்கி எழுந்த மக்கள்
குருந்தூர்மலை பகுதியில் புத்த கோயில் – பொங்கி எழுந்த மக்கள்
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையைச் சூழவுள்ள தமிழ் மக்களுக்குரிய 632ஏக்கர் பூர்வீக காணிகளை தொல்லியல் திணைக்களம் அபகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றமை மற்றும், நீதிமன்ற கட்டளையைப் புறந்தள்ளி பௌத்த
கட்டுமானம் மேற்கொள்ளப்படுகின்றமை என்பவற்றைக் கண்டித்து தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் இன்றையதினம் (21) குருந்தூர்மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக குருந்தூர் மலை அடிவாரத்தில் ஒன்றுககூடிய மக்கள், பல பதாதைகளைத் தாங்கியவாறும்,கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து குருந்தூர்மலையின் மேற்பகுதிக்குச்சென்ற மக்கள் அங்கும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குருந்தூர்மலை பகுதியில் புத்த கோயில் – பொங்கி எழுந்த மக்கள்
முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கடந்த 19.06.2022அன்று குருந்தூர்மலைக்கு விஜயம்செய்து, இதற்குமேல் கட்டுமானப்பணிகள் எதனையும் மேற்கொள்ளக்கூடாது எனக் கட்டளை பிறப்பித்திருந்தார்.
இருப்பினும் தற்போதும் அங்கு நீதிமன்றத்தின் கட்ளையை மீறி பௌத்த கட்டுமானப்பணிகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
அங்கு மேலதிக கட்டுமானப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுக் காணப்படுவதுடன், அங்கு கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதற்கு தயாரான நிலையில் கலவைசெய்யப்பட்ட சீமெந்து, மற்றும் கட்டுமானப் பணிகளுக்குரிய பொருட்களும் அங்கு காணப்பட்டன.
அத்தோடு அங்கு மீண்டும் பௌத்த கண்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றமை தொடர்பில் ஆர்ப்பாட்டக்கார்களால் தொல்லியல் திணைக்கள உத்தியோகத்தர்களாடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதன்போது அங்கு சற்று சலசலப்பும் தோன்றியது.
இந் நிலையில் அங்கு பாரிய அளவில் ஆயுதங்கள் தாங்கிய பொலீசார் குவிக்கப்பட்டடதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்துகின்றவகையில் போலீசார் புகைப்படங்களையும் எடுத்திருந்தனர்.
பொலிசாரின் இத்தகைய நடடிக்கையைக் கண்டித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், குருந்தூர்மலையில் கட்டுமானப் பணிகள் எதுவும் மேற்கொள்ளப்படக்கூடாது என்ற நீதிமன்றக் கட்டளையினை நடைமுறைப்படுத்துமாறும் பொலீசாரிடம் தெரிவித்தனர்.
மேலும் இவ்வார்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா
சிவநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ், கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் சி.லோகேஸ்வரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் ஜோன்சன்,
கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஜீவன் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்வெட்டு நாளை முதல் அதிகரிப்பு
மின்வெட்டு நாளை முதல் அதிகரிப்பு
நாளை (23) முதல் எதிர்வரும் 25ஆம் திகதி வரை நாளொன்றுக்கு 2 மணித்தியாலங்கள் மற்றும் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
பழைய லக்ஷபான அனல்மின் நிலையத்தின் 1ஆம் நிலை இயங்காமை, வெஸ்ட் கோஸ்ட் மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான எரிபொருள்
பற்றாக்குறை மற்றும் மின்சாரத் தேவை திடீரென அதிகரித்தமை ஆகியவை இதற்கு காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பிற்பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளது.
சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் (22) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்காக 2.3 மில்லியன் ரூபாய்
செலவு மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி பங்களிப்பினை யாழ்ப்பாண மரபுரிமை மையம் வழங்கவுள்ளது.
சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
குறித்த தோரண வாயிலின் பாதுகாப்பு , புனர் நிர்மாணம் மற்றும் நில வடிவமைப்பு ஆகிய செயற்திட்டமே முன்னெடுக்கப்படவுள்ளது.
சங்கிலியன் தோரண வாயில் அல்லது சங்கிலித்தோப்பு வளைவு என அழைக்கப்படுவது யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது.
சங்கிலித்தோப்பு வளைவு யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில்,
நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் இது அமைந்துள்ளது.
ஜப்பான் பறக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
ஜப்பான் பறக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டெம்பர் 26ஆம் திகதி ஜப்பான் செல்லவுள்ளார்.
ஜப்பானுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி, ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா மற்றும் ஜப்பானிய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகளை சந்திக்க உள்ளார்.
ஜப்பானுக்கான விஜயத்தின் பின்னர் பிலிப்பைன்ஸ் செல்லும் ஜனாதிபதி, அங்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி பொங்போங் மார்கோஸை சந்தித்து பேச்சுவார்த்தை
நடத்தவுள்ளார். ஜனாதிபதி பிலிப்பைன்ஸ் விஜயத்தின் போது,
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 29ஆம் திகதி நடைபெறவுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.
தந்தையை பார்த்து கொள்ள இரண்டு லட்சம் பணம் கேட்கும் 7 மகள்கள்
தந்தையை பார்த்து கொள்ள இரண்டு லட்சம் பணம் கேட்கும் 7 மகள்கள்
இலங்கை பதுக்க பகுதியில் 82 வயதுடைய ,தந்தை ஒருவரை கவனித்து கொள்ள ,இரண்டு லட்சம் பணம் கேட்கும் ஏழுமகள் ,செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தம்மை பெற்று வளர்த்து ஆளாக்கிய தந்தை ,வயதான காலத்தில் தம்மை பிள்ளைகள் பார்ப்பார்கள் என எண்ணிய வேளையில் ,தாயையும் தந்தையும் பிள்ளைகள் கவனிக்க தவறியதன் விளைவு இதுவாகும் .
தந்தை தாயினை பார்த்து கொள்ள மாதம் தோறும் இரண்டு லட்சம் பணம் வழங்க வேண்டும் என ஏழு பெண் பிள்ளைங்களும் கேட்டுள்ளனர் .
ஏழு மகள் மாறும் ஆடம்பர வாழ்க்கையில் வசித்து வருவதாக காவல்துரையினர் தெரிவித்துள்ளனர் .
காவல்துறையினரால் இந்த விடயம் கையாள முடியா நிலையில் .தற்போது நீதிமன்றத்தில் இந்த விடயம் பாரப் படுத்த பட்டுள்ளது .
பெற்றவர்களை பார்த்து கொள்ள நீதிமன்றம் செல்லும் கொடுமை இலங்கையில் அரங்கேறியுள்ளது .
இப்படியும் பிள்ளைகள் இந்த உலகில் இருக்கத்தான் செய்கின்றனர் .














