பிரிகேடியர் தீபன் தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம
Posted in இலங்கை செய்திகள்

பிரிகேடியர் தீபன் ,தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம்

பிரிகேடியர் தீபன் ,தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம்

தமிழீழ விடுதலை போராட்டத்தின் முக்கிய தளபதிகளாக விளங்கிய பிரிகேடியர் தீபன் மற்றும் லெப்கேணல் தீபன் ஆகியோரது தந்தை அவர்கள் மரணமானார் .

பிரிகேடியர் தீபன் தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம
பிரிகேடியர் தீபன் தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம

ஈழ விடுதலை போருக்கு முக்கிய தளபதிகளை தந்து ,மக்களையும் மண்ணையும் நேசித்த மிக பெரும் ஆதரவாளர் .


போராடத்திற்கே தம்மை அர்ப்பணித்த வீர விடுதலை குடும்பம் .
அவ்விதமான வீர தந்தை இன்று எம்முடன் இல்லை .

தமிழீழ விடுதலை புலிகள் மண்ணில் ஆண்டிருந்தால் ,இந்த தந்தை இறுதி நிகழ்வு தமிழீழம எங்கும் களைகட்டி இருக்கும் .

ஆனால் தமிழ் தேசியம் கேப்சும் நமது ஊடகங்கள் இவரை மறந்துள்ளன .
காலம் கடந்து போகலாம் ,ஆனால் அந்த காலத்தில் நடக்கும் ,தட்டி கழிப்புக்களும் ,காட்டி கொடுப்புகளும் ,அவமதிப்புகளும் ,தமிழர் நெஞ்சங்களில் இருந்து அழிந்து போகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
.

வீர தந்தத்தையே வீராசாமி உறங்கு .தமிழாம் உன் பெயர் நாளை சொல்லும் .
வீர வணக்கம் .

பிரிகேடியர் தீபன் ,தளபதி கில்மன் தந்தை மற்றும் ஸ்ரீதரன் எம்பி மாமா மரணம்

அமரர்.திரு. கந்தையா வேலாயுதபிள்ளை
மண்ணில் -1937.09.14
விண்ணில் -2022.12.09
யாழ்ப்பாணம், தென்மராட்சி – வரணியைப் பிறப்பிடமாகவும் கண்டாவளை, வரணி ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட, திரு. கந்தையா வேலாயுதபிள்ளை அவர்கள் 2022.12.09 ஆம் திகதி, வெள்ளிக்கிழமை இறைபதமடைந்தார்.


அன்னார் காலஞ்சென்ற கந்தையா, வள்ளியம்மை மண இணையரின் பாசமிகு மகனும், கண்டாவளையைச் சேர்ந்த, காலஞ்சென்ற சித்தர் குமாரவேலு, சின்னப்பிள்ளை மண இணையரின் அன்பு மருமகனும், காலஞ்சென்ற பராசக்தியின் பாசமிகு கணவரும்,


விஜயகுமார் (இலங்கைப் போக்குவரத்துச் சபையின் முன்னாள் நடத்துனர்), சுகுணகுமாரி, வேணுகுமாரி (முன்னாள் ஆசிரியை, கிளி/முரசுமோட்டை முருகானந்தாக் கல்லூரி), காலஞ்சென்ற பகீரதகுமார் ( மூத்த தளபதி பிரிகேடியர் தீபன்), மற்றும் சிவஞானகுமாரி (ஆசிரியை- யா/வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்), காலஞ்சென்ற சிவகுமார் (லெப்.கேணல்.கில்மன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அனந்தநீலா, அனந்தசேகரன், லோகநாதன், குமாரி, சிறீதரன் (பாராளுமன்ற உறுப்பினர், யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்)
ஆகியோரின் மாமனாரும்,


கோபினா, கோபிசன், அனோஜா, சிறிதரன், அஜிந்த், கீர்த்தனா, அருணியா, அஜந்தூரன், லக்சன், லக்சனா, சாரங்கன், பிரணவன், பிரவீனன், ஆர்த்தி, பகீரதன் ஆகியோரின் பாசமிகு பேரனும், அஞ்சனா, ஆசா, அஸ்மி, அகானா ஆகியோரின் பூட்டனும் ஆவார்.


அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 2022.12.12 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணியளவில், முரசுமோட்டையில் அமைந்துள்ள அவரது மூத்தமகனின் இல்லத்தில் நடைபெற்று (முருகானந்தா கல்லூரிக்கு முன்னால்), பூதவுடல் தகனக்கிரியைக்காக, அன்னாரின் குடும்ப மயானமான யாழ் வரணி-குடமியன் இந்துமயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.


இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்.

No posts found.
பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்
Posted in இலங்கை செய்திகள்

பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்

பெண்கள் போதைக்கு அடிமை-தள்ளாடும் யாழ்ப்பாணம்

இலங்கை யாழ்ப்பாணத்தில் பெண்கள் போதைக்கு அடிமையாகி தள்ளாடும் அவலம் இடம்பெறுகிறது .

இவ்விதம் நகரப் போவது ஓர் பிளைக்மெயில் கலாசாரமா..?
மருத்துவர்கள் வலிந்தே சிக்க வைக்கப்படுகின்றனரா ….
பொருளாதார செறிவுடைய யாவரும் இலக்கு வைக்கப்படுகின்ற …… பொறி

பெண்கள் திட்டமிட்டே போதை வலையில் சிக்க வைக்கப்படுகின்றனர்
நானாந்தம் பத்திரிகை செய்திகளும் மருத்துவதுறையினரை போதை வலையமைப்பின் பிணாமிகளாக சித்தரிக்கினறன
பிரேசில் வெனிசுலா போன்று நகர்கின்றது ..


ஆட்சி போதைப்பொருள் மாபியா கைகளில்.

No posts found.
200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைப்பு

200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைப்பு

இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக சுமார் 200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இலங்கை ஆட்சியாளர்களின் லஞ்சம் .கொள்ளை காரணமாக அப்பாவி மக்கள் பாதிக்க பட்டு வாழ்வாதாரத்திற்கு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர் .

தமது குடும்பங்கள் வாழ்வு செழிப்பை மட்டும் மைய படுத்தி நகர்ந்த ராஜபக்ச குடும்பத்தின் லஞ்ச ஊழல் காரணமாகவே ,அழகிய இலங்கை இன்று இந்த அழிவின் விளிம்பு நிலைக்கு சென்றுள்ளது என்கிறது அந்த ஆய்வு அறிக்கை .

No posts found.
இலங்கை வந்தடைந்தார் ரணில் விக்கிரமசிங்கா
Posted in இலங்கை செய்திகள்

நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ரணில்

நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ரணில்


நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைக்கும் அப்பால் சென்று இளைஞர்களின் எதிர்காலத்துக்காக
நாட்டைத் தயார்படுத்த தான் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இளைஞர் சந்ததியினருக்கு உதவும் வகையில் அடுத்த 25 ஆண்டுகளுக்குப் பொருந்தும் வகையில்,
டிஜிட்டல் அபிவிருத்தியுடன் கூடிய எதிர்காலத்திற்கு ஏற்ற தீர்வுகள் குறித்தே நாம் கவனத்திற் கொள்ள வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கமைய நாடு தற்போது எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்கு தீர்வு காணும் முகமாக மேற்பார்வைக் குழுக்களுக்கு இளைஞர்களை நியமிப்பதற்கு அவசியமான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மாவட்டம் 306 சி2 ,இன் லியோ ஆட்சேர்ப்பு மற்றும் லியோ தின கொண்டாட்ட நிகழ்வுகள் இன்று (11) முற்பகல் கொழும்பு ரோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடு முழுவதுமிருந்து 6,500 புதிய வியோக்கள் சங்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இதில் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி இங்கு மேலும் உரையாற்றுகையில்,
2023 ஆம் ஆண்டில் கொண்டாடப்படவுள்ள 75வது சுதந்திர தின நிகழ்வுடன் இணைந்ததாக இளைஞர்களுக்கான


தேசிய அடித்தளமொன்று உருவாக்கப்பட்டிருப்பதாகவும் நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக இளைஞர்களை
அதில் இணைந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

உலகளாவிய நெருக்கடியான காலநிலை மாற்றம் தொடர்பான விடயத்தைக் கருத்திற்கொண்டு,

நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம் ரணில்


அண்மையில் ஸ்தாபிக்கப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான நிகழ்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்குவதன்


மூலம் அர்த்தமுள்ள செயல்பாட்டுக்கு வழிவகுக்குமாறும் ஜனாதிபதி இளைஞர்களைக் கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் மாவட்டத் தலைவர் லியோ இந்துனில் உதார பளிஹவதன, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க


அவர்களுக்கும் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவுக்கும் நினைவுச் சின்னங்களைப் பரிசளித்தார்.

மேலும் லியோ உறுப்பினர்களுக்கான விருதுகளையும் ஜனாதிபதி இதன்போது வழங்கி வைத்தார்.

கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க, கொழும்பு ரோயல் கல்லூரி அதிபர் எம்.வி.எஸ் குணதிலக்க,


முன்னாள் மாவட்ட ஆளுனர் லயன் லசந்த குணவர்தன, மாவட்ட ஆளுநர் லயன் பெனட் கமலத் மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரியின்
மாணவத் தலைவன் லியோ கவீஷ ரத்நாயக்க ஆகியோரும் இந்நிகழ்விலல் கலந்து கொண்டனர்.

No posts found.
உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் ஆகியோர் மாணவர்கள் குழுவினால் தாக்கப்பட்டதில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு அருகாமையில் நேற்று (10) இரவு அவரது மகனின் கார், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றின் மீது மோதியதில் பல்கலைக்கழக மாணவர்கள் சிலருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதம் மிக மோசமாக சென்றதையடுத்து, சுமார் 300 பேர் கொண்ட பல்கலைக்கழக மாணவர்கள் அதுல சேனாரத்ன தங்கியிருந்த பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை தாக்கி சேதப்படுத்தியதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

உபவேந்தர் மீது பல்கலைகழக மாணவர்கள் தாக்குதல்

பின்னர் பேராதனை பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலை சமரசம் செய்து கூட்டத்தை கலைத்தனர்.

தாக்குதலில் காயமடைந்த அதுல சேனாரத்ன சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையிலும், அவரது மகன் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தாக்குதலில் அதுல சேனாரத்னவின் மனைவி மற்றும் வீட்டில் இருந்த மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதல் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன்,
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
Posted in இலங்கை செய்திகள்

கடத்தி கப்பம் கோரிய கடத்தல் குழு மடக்கி பிடிப்பு

கடத்தி கப்பம் கோரிய கடத்தல் குழு மடக்கி பிடிப்பு

இலங்கை மட்டக்களப்பு காத்தான் குடி பகுதியில் நபர் ஒருவரை வானில் கடத்தி சென்று ஒரு கோடி ரூபா கப்பம் கோரிய நபர்களை காவல்துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .

இவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய ,வான் ,மோட்டார் சைக்கிள் என்பன மீட்க பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட கடத்தல்காரர்கள் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப்படுத்த பட்டுள்ளனர் .

மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

3 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்கடத்தல் விவகாரம் – விசாரிக்க ஓமான் பறந்த உளவுத்துறை

ஆட்கடத்தல் விவகாரம் – விசாரிக்க ஓமான் பறந்த உளவுத்துறை

இலங்கையர்கள் 90 க்கு மேற்பட்டவர்களை ஓமானுக்கு கடத்தி ,அங்கு சித்திரவதைகளிற்கு உள்ளான பெண்கள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின .


இதனை அடுத்து இலங்கையில் 200 க்கு மேற்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அடித்து மூட பட்டன .

மேலும் இந்த மனித கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் ,ஓமானுக்கு இலங்கை குற்ற புலனாய்வு துறையை சேர்ந்த குழு பயணித்துள்ளது .

இந்த குழு விசாரணை நடத்தி, இந்த மனித கடத்தலில் சம்பந்த பட்டவர்களை கைது செய்யும் என எதிர் பார்க்க படுகிறது .

No posts found.
பொலிஸ் அதிகாரி திடீர் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை உணவகத்துக்குள் போதை மருந்து – சுற்றிவளைத்த பொலிஸ்

பாடசாலை உணவகத்துக்குள் போதை மருந்து – சுற்றிவளைத்த பொலிஸ்

இலங்கை கம்பாக பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உணவகத்திற்குள் இருந்து போதை மருந்துகள் மீட்க பட்டுள்ளன .


காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில், ஆயூள்வேத மருத்துவர் ஒருவர் கைது செய்யப் பட்டார் .

இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .

பாடசாலைக்குள் போதை பொருள் மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது

சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது

பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர்.

உடாமுல்லஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான அந்த பிரதேச ​சபையின் உறுப்பினருக்கும் முறைப்பாட்டாளராக பெண்ணுக்கும் இடையில், தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அண்மையில் உள்ள காணியொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, தூசன வார்த்தைகளால் ஏசிவிட்டு, சாரத்தை தூக்கி காண்பித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

​பெண்​ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, பிரதேச சபையின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார்,
அந்த நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

No posts found.
உரப்பையில் இருந்து சிசு சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடும் குளிரில் சிக்கி இரு குழந்தைகள் மரணம்

கடும் குளிரில் சிக்கி இரு குழந்தைகள் மரணம்

இலங்கையில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக இரு குழந்தைகள் பலியாகியுள்ளன .

மூச்சு திணறல் சுவாச கோளாறு கரமானமாக இந்த சிசுக்கள் பலியாகியுள்ளன என்கிறது மருத்துவமனை தகவல் .

இந்த இரு சிறுவர்கள் மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மூச்சு திணறல் ஏற்பட்டே இந்த சிசுக்கள் பலியாகியுள்ள சம்பவம் கந்தளாய் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை
Posted in இலங்கை செய்திகள்

இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை

இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை

சமீபத்திய காலநிலை மாற்றத்தின் காரணமாக ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த பசுக்கள் , எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் தொடர்பில் ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக்காலநிலை மாற்றத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடை வள பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்த கால்நடைகள் தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்..

யாழ் மாவட்டத்தில் 49 பசுக்களும் 58 ஆடுகளும் இறந்துள்ளதுடன் 17 பசுக்களும் 50 ஆடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாய வனஜீவராசிகள் மற்றும் வன வள பாகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டதில் இறந்த பசுக்களின் எண்ணிக்கை 168. மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 159. இறந்த ஆடுகளின் எண்ணிக்கை ஆறு. பாதிக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை மூன்று.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 பசுக்கள் இறந்துள்ளன. மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 159.இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 42.

இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 21 பசுக்கள் இறந்துள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 17. இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 85.

இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை

கிழக்கு மாகாணத்தில் இறந்த பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை 478 என பதிவாகியுள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 352. இதேபோன்று இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 65.

இந்தியாவை பாதித்த சூறாவளியையடுத்து கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் ஏற்பட்ட கடுமையான குளிர் காலநிலையினால் கால் நடைகள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது,.

ஆனால் இந்த விலங்குகள் மற்றொரு தொற்றுநோய் காரணமாக இறந்ததா? அதை உறுதி செய்யும் வகையில், இறந்த அனைத்து கால்நடைகளின் மாதிரிகளையும் கால்நடை அதிகாரிகள் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இந்த கால் நடைகளின் இறைச்சியை பயன்படுத்தல், எடுத்துச்செல்லல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் அந்தந்த மாகாண கால்நடைப் பணிப்பாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்போது குளிர் காலநிலை குறைந்துள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள விலங்குகள் குணமடைந்து வருவது தெரியவந்துள்ளது.


எவ்வாறாயினும், விவசாய அமைச்சின் செயலாளர் திரு.குணதாச
சமரசிங்க இந்த விலங்குகளின் இறைச்சியை நுகர்வு
அல்லது போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட
அனைத்து திணைக்களங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

No posts found.
உக்கிரேனில் இருந்து சீனா நாட்டவர்களை வெளியேற சீனா அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி

சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி

சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.

இலங்கை உட்பட கடன் தொடர்பான நாடுகளின் கடன் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த சீன வெளிவிவகார அமைச்சு சர்வதேச நாணய

நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சீனா வருமாறு அழைத்திருந்தது. இதையடுத்து கிறிஸ்டலினா ஜார்ஜீவா அங்கு சென்றிருந்தார்.

சீனப் பிரதமர் லி வியாழன் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை அன்ஹுய் மாகாணத்தின்

ஹுவாங்ஷான் நகரில் சந்தித்து மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உறுதிமொழி அளித்தார்.

சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி

இலங்கை, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்துரையாடியதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவாவா குறிப்பிட்டுள்ளார்.

உலகப் பொருளாதார நிர்வாகத்தில் சீனா ஒரு பங்கேற்பாளராகவும், ஆதரவாளராகவும், பங்களிப்பாளராகவும் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட

பிரதமர் லீ கெகியாங், சீனா பல ஆண்டுகளாக IMF உடன் ஒரு நல்ல கூட்டுறவு உறவைப் பேணி வருகிறது என்றார். கடன், காலநிலை மாற்றம் மற்றும் பிற

உலகளாவிய சவால்களைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து தரப்பினருடனும் மேக்ரோ-
கொள்கை ஒருங்கிணைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்

தமிழர் விளையாட்டு விழா
Posted in இலங்கை செய்திகள்

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022


ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2023”

எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8மணி முதல் இரவு 8மணி வரை East Burwood Reserve, East Burwood என்ற மைதானத்தில் நடைபெற ஏற்படாகியுள்ளது.

இடம்: East Burwood Reserve, Burwood HWY, East Burwood, Vic 3151 (Melway Ref: 62 B7).
காலம்: January 8th Sunday 2023, From 8.00 AM onwards.

இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு, கயிறிழுத்தல் உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.

இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும், தேசிய வெளியீடுகளும் விற்பனைக்கு உள்ளன.

தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022


அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டி-களிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

மேலதிக விபரங்களிற்கும், பதிவுகளுக்கும் 0423 577 071 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.

குறிப்பு: நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.
நன்றி

தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)

கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

“Mandous” புயல் நேற்று (09) காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்து தமிழக வட கடலோர பகுதியை நோக்கி வந்தது. இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கியது.

மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்திருந்தது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 70

முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது.

மாண்டஸ் புயலின் மையப் பகுதி இன்னும் கடலில் உள்ளதால் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் நடக்கும் என்றும் புயலின் மையப்பகுதி கடலில் உள்ளது என்றும் சென்னை வானிலை நிலைய பணிப்பாளர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது

மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலைஇ கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி,

திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய தென்மண்டல வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மழை காரணமாக 15 மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,

திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல் நாகை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்,
சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு இந்தியா உதவும் இந்தியா அரசு அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பிரஜைகளுக்கு மீண்டும் இந்திய E-visas

இலங்கை பிரஜைகளுக்கு மீண்டும் இந்திய E-visas

இலங்கை பிரஜைகளுக்கான இ-விசாக்களைE-visas வழங்கும் நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.

வசதியான பயணத்தை செயல்படுத்துவதன் மூலம், ஓய்வு, வணிகம், மாநாடு மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தர விரும்பும் இலங்கையர்களுக்காக இந்த இணைய தள இ-விசாக்களை நடைமுறையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

indianvisaonline.gov.in/evisa/tvoa.htm என்ற இணைய தள முகவரி மூலம் இதற்காக விண்ணப்பிக்க முடியும்

பிரிட்டன் பணம் பெரும் வீழ்ச்சி வரலாற்று சாதனை
Posted in இலங்கை செய்திகள்

புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டோடலர்கள் வருமானம்

புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டோடலர்கள் வருமானம்

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களினால் 2022 ஆம் ஆண்டில் ,இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் இவர்கள் நாட்டுக்கு அனுப்பிய தொகை 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை 30 மில்லியன் அமெரிக்க டோலருக்கும் அதிகமாகும்.

ஒக்டோபர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன.

2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் இத்தொகையை ஒப்பிடுகையில் இது 42 வீதம் அல்லது 113 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு
அனுப்பப்பட்ட மொத்த தொகை 3,313.8 மில்லியன் அமெரிக்க டோலர்களாகும்.

சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு

சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக

கிளிநொச்சியில் பலகிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன.

இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது

கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும், நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும், பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05

மாடுகளும், பூநகரியில் 05 மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு

அத்தோடு திருவையாறு கிராமத்தில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.

கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும்.

இன்றுமதியம்(09) வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவிததுள்ள கால்நடை திணைக்களம்


இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இலங்கையில் 435 பேர் பத்து மாத்தில் கொலை
Posted in இலங்கை செய்திகள்

அடித்து கொலை

வீட்டுக்கு வெளியில் நபர் அடித்து கொலை

இலங்கை உடுகம பகுதியில் தமது வீட்டுக்கு வெளியில் நின்ற நபரை அடித்து கொலைசெய்து விட்டு கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ளது .

எனினும் இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .

இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .

பால் மா மாவிலை அதிகரிப்பு மக்கள் கொதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பால் மா மாவிலை அதிகரிப்பு மக்கள் கொதிப்பு

பால் மா மாவிலை அதிகரிப்பு மக்கள் கொதிப்பு

பல் மா விலை அதிகரிக்க பட்டுள்ளது .400 கிராம் மாவின் விலை 1,250 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .

இந்த திடீர் விலை அதிகரிப்பினால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து செல்லும் விலை அதிகரிப்பால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .

பாடசாலை மாணவர்கள் பாராளுமன்ற விவாதங்களைப் பார்வையிட வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலைகள் யாவும் இன்று விடுமுறை

பாடசாலைகள் யாவும் இன்று விடுமுறை

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க பட்டுள்ளது .

இந்த விடுமுறை யானது காலநிலை செயல்பாட்டை அடுத்து மாற்றம் பெறும் என காவல்துறை அறிவித்துள்ளது .

மக்களை மிக பாதுகாப்பக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது .