Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது.
குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு, அந்த நிறுவனங்கள் தற்போது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன, தகவல் மற்றும் தொடர்பாடல்
துறை தொடர்பான நிதித் தரவுகள், இத்துறை தொடர்பில் இலங்கையின் தேசிய இலட்சியம், அதனை அடைவதற்கான மூலதனத் திறன், அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வும் அவசியம்.
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது, தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்ட 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 விபச்சாரிகளும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.
பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்
பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்
நீதிமன்ற பிடியாணை எதுவுமின்றி தன்னைக் கைது செய்த பொலிஸார் தன்னைக் கைது
செய்ததற்கான ரசீதையும் தனது குடும்பத்துக்கு வழங்க மறுத்து விட்டனர் என்றும் பொலிஸ்
பேச்சாளர் தான் குறித்து ஊடகங்களுக்கு பல தவறான அறிக்கைகளை அளித்து வருகிறார் என்றும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
தனது பாதுகாப்புக்கு ஏற்றதாக கருதும் அனைத்து நடவடிக்கைகளையும் சபாநாயகர் முன்னெடுக்க
வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) எழுப்பிய சிறப்புரிமை மீறல் பிரச்சினையிலேயே
மேற்கண் விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்
“ஜூன் 2ஆம் திகதி நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எனது
ஒத்துழைப்பை வழங்குமாறு மருதங்கேணி சம்பவத்தை தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி மாலை
சுமார் 3.30 மணியளவில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி என்னைத் தொடர்பு கொண்டார்
கோரினார்.
அப்போது நான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பு செல்லும் வழியில்
இருந்தேன். இதனால் ஜூன் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் திரும்பி அதனை செய்வதாக கூறினேன்.
இதன்படி ஜூன் 12 ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் வந்து வாக்குமூலம் வழங்குவதாக
கூறியிருந்தேன். இந்த உறுதிமொழிகள் இருந்த போதிலும் மருதங்கேணி பொலிஸார்
கொள்ளுப்பிட்டி பொலிஸாரின் ஊடாக ஜூன் 6 ஆம் திகதி மதியம் 1 மணியளவில் என்னிடம்
எழுத்து பூர்வ அறிவித்தலை அனுப்பினர்.
ஜூன் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் என்னை ஆஜராக
வேண்டும் என்றனர். குறித்த தகவல் சிங்களத்தில் இருந்ததால் அதனை ஏற்கவில்லை. பின்னர்
ஜூன் 6 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது கொழும்பு
வீட்டுக்கு வந்தனர். குறித்த அறிவித்தலை தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வழங்கினர்.
இவ்வாறான நிலைமையில் ஜூன் 7 ஆம் திகதி காலை என்னை கைது செய்ய வந்தனர்.
பிடியாணை எதுவும் இல்லை. இவ்வாறான நிலைமையில் கைது செய்வது எனது பாராளுமன்ற
சிறப்புரிமையை மீறுவதாகும். பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்காது
என்னைக் கைது செய்தனர். இது தொடர்பில் சபாநாயகரிடம் பேசி தொலைபேசியை
வைத்தவுடன், என்னைக் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடம் பிடியாணை உள்ளதா என்று கேட்டேன். ஏதும் இல்லை என்றே கூறினர்.
மேலும் என்னை கைது செய்ததற்கான காரணம் உள்ளிட்டவை அடங்கிய ரசீ தை எனது
குடும்பத்தினரிடம் வழங்குமாறு கேட்டேன். அதனையும் வழங்கவில்லை. ரசீது பின்னர்
கொள்ளுப்பட்டி பொலிஸில் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்
பின்னர் நான் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு எனது
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தப்பட்டு எனக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலைமையில் பொலிஸ் பேச்சாளர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பல தவறான
அறிக்கைகளை அளித்து வருகிறார். இந்த அறிக்கைகள் அனைத்தும் பொலிஸ் விசாரணையின்
உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வெளியிடப்பட்டுள்ளன ” என்றார்.
கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்
கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறித்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து, அரச தரப்பு
உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்ட நிலையில், சபைக்கு வருகை தந்த சபாநாயகர்
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்ததுடன், ஆகவே அதற்கு இடமளியுங்கள் என
அறிவுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை
மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில்
உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராசா கஜேந்திரன்
குற்றஞ்சாட்டினார்.
கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்
மருதங்கேணி சம்பவம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது தொடர்பான கஜேந்திரன்
எம்.பி.யின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,
“அந்த சம்பவம் தொடர்பில் நான் முதல் நாளே அறிக்கை கோரினேன். அது தொடர்பில்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோக்களையும் பார்த்தேன். அதில் கஜேந்திரகுமார்
எம்.பி ஒரு கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ள வில்லை. பொலிஸ் அதிகாரிகளை ”வாயை
மூடு”என தரக்குறைவாக பேசியதை அவதானித்தேன்” என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. “சிவில்
உடையில் வந்தவர்கள் பொலிஸ் என குறிப்பிட்டார்கள். நான் அதற்கான அடையாளத்தை
உறுதிப்படுத்துமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை.
பொலிஸ் என்று குறிப்பிட்டுக் கொண்டு சிவிலுடையில் படுகொலையில் ஈடுபட்ட சம்பவங்கள்
நாட்டில் பல உள்ளன” என்றார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், “அந்த காணியின் வேலிக்கு பின்னால்
இருந்த பொலிஸ் அதிகாரியிடம் நீங்கள் முறையற்ற வகையில் கதைத்துள்ளீர்கள் என்பதை
ஏற்றுக்கொள்கின்றீர்களா?” எனக்கேட்டார். “இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் எம்.பி
சீருடையில் ஆயுதமேந்திய நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரியுடன் நான் அப்படிப்
பேசவில்லை” என்றார்.
தொடர்ந்து கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “பொலிஸாரை ”வாயை
மூடு” எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர் அல்ல எவர்
கூறினாலும் நான் சகித்துக்கொண்டிருக்க மாட்டேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.
விடயத்தில் பொலிஸாரின் பக்கம் எந்தத் தவறும் கிடையாது” என்றார்.
கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்
எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாலை 3.30 மணிக்கு பரீட்சை
முடிவடைந்து விட்டது. சிவில் உடையில் வந்தவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தாமல்
தங்களை பொலிஸ் என குறிப்பிட்டுக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா ? பாராளுமன்ற
கூட்டத்தொடர் இடம்பெறும் வாரத்தில் கஜேந்திரகுமார் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்
ஆகவே அவரை அவசரமாக ஏன் கைது செய்ய வேண்டும்“ என பொது மக்கள் பாதுகாப்பு
அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பரீட்சை தொடர்பில் வீடியோவை
பார்த்து அறிவிக்கலாம்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கடந்த 5 ஆம் திகதி முதல்
பாராளுமன்ற உறுப்பினரை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்பு கொண்டார்கள்.
இறுதியில் சபாநாயகருக்கு அறிவித்ததன் பின்னரே கைது செய்யப்பட்டார் இவ்விடத்தில்
அவசரப்படவில்லை” என்றார்.
இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி இந்த சம்பவத்தில் பொது மக்கள் பாதுகாப்பு
அமைச்சர் என்னை குற்றவாளியாக்கி பொலிஸாரை பாதுகாப்பது தெளிவாக விளங்குகிறது”
என்றார்.
ஒரே வாரத்தில் 2 479 பேருக்கு டெங்கு
ஒரே வாரத்தில் 2 479 பேருக்கு டெங்கு
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2,479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஒரே வாரத்தில் 2 479 பேருக்கு டெங்கு
அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41, 883 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு
மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், வருடத்தின் இதுவரையான காலப்பதிக்குள் 25 பேர்
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொன்சேகா இராஜினாமா
பொன்சேகா இராஜினாமா
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தேசிய பாதுகாப்புக்கானதுறைசார் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினர் பதவியில் இருந்து நீங்கிவிட்டார்.
இது தொடர்பில் பாராளுமன்றத்துக்கு இன்று (09) அறிவித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, அந்த வெற்றிடத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவித்தார்.
தேர்தலை நடத்துமாறு பேராயர் கோரிக்கை
தேர்தலை நடத்துமாறு பேராயர் கோரிக்கை
உடனடியாக தேர்தலை நடத்தி மக்களுக்கு தமது நிலைப்பாட்டை அறிவிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கட்டானை கொச்சிக்கடை புனித அந்தோனியார் வித்தியாலயத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த ஆட்சியாளர்கள் நாட்டை ஆள தகுதியற்றவர்கள் எனவும் அவர்களை வெளியேற்றுவது அவசியம் எனவும் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சுட்டிக்காட்டியுள்ளார்
யாழில் 15 பேர் கைது காவல்துறை வேட்டை
யாழில் 15 பேர் கைது காவல்துறை வேட்டை
யாழ்ப்பாணத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட,
திடீர் சுற்றிவளைப்பால் 1,5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இவ்வாறு கைதானவர்கள் யாவரும் போதைவஸ்து,
வழக்குகளில் குற்றம் சட்ட பட்டவர்கள் என,
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைது செய்யப்பட்ட யாவரும் ,
விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளனர் .
புத்தளத்தில் காகங்கள் திடீர் மரணம் பீதியில் மக்கள்
புத்தளத்தில் காகங்கள் திடீர் மரணம் பீதியில் மக்கள்
புத்தளம் பகுதியில் திடிரென ஐம்பதுக்கு மேற்பட்ட கங்கள் மரணமாகியுள்ளன .
இந்த மரணத்திற்குரிய காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை .
இறந்த காகங்கள் மீட்க பட்டு ,அதன் மாதிரிகள் சோதனைக்கு
உள்ளாக்க பட்டு வருகின்றன .
இந்த காகங்கள் இறப்பு சம்பாவம் அந்த மக்கள் மத்தியில் ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
வவுனியாவில் வைத்தியர் முகைதீன் என்பவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞசெழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த முகைதீன் என்ற வைத்தியர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் (08.06) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.
இதன்போது, உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது. அந்தவகையில் எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய அவருக்கு மரணதண்டை வழங்கப்பட்டிருந்தது.
வவுனியாவை சேர்ந்த புளொட் அமைப்பின் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தது. தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி கைது
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி கைது
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபர் ஒருவரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் வசித்து வரும் 72 வயது நபர் ஒருவர் வவுனியாவிற்pகு வருகை தந்துள்ளார். கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது யுவதி ஒருவரும் வவுனியாவில் அவருடன் தங்கியுள்ளார்.
இருவரும் வவுனியாவில் உள்ள விடுதி ஒன்றிலும், குருமன்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும் தங்கியிருந்துள்ளனர்.
அவுஸ்ரேலியாவில் இருந்து வந்த 72 வயது நபரின் வங்கி அட்டையை மோசடி செய்ததாக 24 வயது யுவதி கைது
பயன்படுத்தி வவுனியா பசார் வீதியில் உள்ள நகைக் கடை ஒன்றில் நகை கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.
சிறிது நாட்களின் பின் குறித்த நபர் அவுஸ்ரேலியா செல்ல ஆயத்தமாகிய போது அந்த யுவதியை அழைத்த போது அவர் கிளிநொச்சியில் இருந்து வரவில்லை.
இந்நிலையில், அவுஸ்ரேலியா சென்ற நபர் குறித்த யுவதி தனது வங்கி அட்டையை மோசடி செய்து நகைகளை கொள்வனவு செய்துள்ளதாக அவுஸ்ரேலியாவில் இருந்து வவுனியா பிரதி பொலிஸ் மா அதிபர்
காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து, கிளிநொச்சியைச் சேர்ந்த 24 வயது யுவதி கைது செய்டயப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை
கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை
யாழ். மருதங்கேணி பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போது பொலிஸ் புலனாய்வாளர்களுடன் இடம்பெற்ற சம்பவம் குறித்து, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.
கிளிநொச்சியிலிருந்து வருகை தந்த விசேட பொலிஸ் குழுவினரால் கொள்ளுப்பிட்டியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினரின் இல்லத்தில் வைத்தே அவர் செய்யப்பட்டார்.
கஜேந்திரகுமார் எம்.பிக்கு பிணை
இந்நிலையில், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (07) மாலை 5.30 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போதே, அவரை பிணையில் செல்ல நீதிமன்றம் சற்றுமுன்னர் அனுமதித்தது.
இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைதை கண்டித்து கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக வாயில் கறுப்பு துணி கட்டி கவனயீர்ப்பு போராட்டம் அவரது கட்சி ஆதரவாளர்கள் செயற்பாட்டாளர்களால் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
கசிப்பு மன்னனின் மனைவி பொலிஸாரின் கையைக் கடித்தார்
கசிப்பு மன்னனின் மனைவி பொலிஸாரின் கையைக் கடித்தார்
கசிப்பு மன்னனியின் மனைவி, பொலிஸ் உயர் அதிகாரியின் கையைக் கடித்து பதம்பார்த்த சம்பவமொன்று வறக்காப்பொலயில் இடம்பெற்றுள்ளது.
வறக்காப்பொல, தொலபாடுவ பிரதேசத்தில் கசிப்பு காய்ச்சி விற்பனைச் செய்யும் நபரை கைது செய்வதற்காக, கேகாலை ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியும் உப-பொலிஸ் பரிசோதகரும் சென்றுள்ளனர்.
அப்போதே, அந்த அதிகாரியின் கையை கசிப்பு மன்னனின் மனைவி கடித்து விட்டு அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகியுள்ளார்.
காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உப-பரிசோதகர் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கசிப்பு மன்னனின் மனைவி பொலிஸாரின் கையைக் கடித்தார்
கையைக் கடித்த பெண்ணைத் தேடி கேகாலை மற்றும் வறக்காப்பொல பொலிஸார் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
ஒருதொகை கசிப்பு போத்தலுடன் அதனை ஏற்றிச் சென்ற ஓட்டோவையும் கைப்பற்றியுள்ள பொலிஸார், ஒருவரை கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரான அந்தப் பெண், தன்னுடைய கணவனை பொலிஸாரிடம் இருந்து விடுவித்துக்கொள்ளும் நோக்கிலேயே, பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு
கடலில் மூழ்கி ரஷ்ய பிரஜை உயிரிழப்பு
ஹிக்கடுவை கடற்பகுதியில் நீராடச் சென்ற ரஷ்ய பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் நேற்று (07) நீரில் மூழ்கியதையடுத்து, உயிர்காப்பு படையினரால் அவர் கரைக்கு கொண்டு வரப்பட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
எனினும், 29 வயதான குறித்த ரஷ்ய பிரஜை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பிளாஸ்டிக்கை தவிர்க்க கிராம மக்கள் உறுதிமொழி
பிளாஸ்டிக்கை தவிர்க்க கிராம மக்கள் உறுதிமொழி
பிளாஸ்டிக் பொருட்களாலும் நெகிழிப் (பொலித்தீன்) பொருட்களாலும் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மிக மோசமான பாதிப்புகளைத் தவிர்க்கும் முகமாக, அப்பொருட்களைத் தமது அன்றாடப் பாவனையில் இருந்து தவிர்ந்து
கொள்வதற்கு, கிராம மக்கள் உறுதிபூண்டிருப்பதாக இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் இணைப்பாளர் தங்கராஜா திலீப்குமார் தெரிவித்தார்.
வாகரை, பால்சேனை கடற்கரையில் பிளாஸ்டிக் உட்பட நெகழிகளையும் இன்னும் பிற உக்காத பொருட்களையும் திண்மக் கழிவுகளையும் அகற்றி, கடற்கரையைத் துப்புரவு செய்யும் சிரமதானப் பணி செவ்வாய்க்கிழமை (06) இடம்பெற்றது.
பிளாஸ்டிக்கை தவிர்க்க கிராம மக்கள் உறுதிமொழி
பால்சேனை, நாகபுரம் ஆகிய கிரமங்களின் மக்கள் கூட்டுறவுச் சங்கங்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், மகளிர் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் ஆகியவற்றின் ஏற்பாட்டில் கடற்கரையோர சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
‘வீஎபெக்ற்’ (We Effect) நிறுவனத்தின் நிதி அனுசரணையோடு, இளைஞர் அபிவிருத்தி அகம் நிறுவனத்தின் திட்டமிடலில் வாகரைப் பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்போடு நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வின் இறுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் பாவனையை அன்றாட வீட்டு உபயோகத்தில் இருந்து தவிர்ப்போம் எனும் உறுதிமொழியும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்
பல்கலைக்கழக மாணவா்களின் ஆா்ப்பாட்டத்தின் மீது நீா்த்தாரை பிரயோகம்
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆா்ப்பாட்ட பேரணி காரணமாக விஜயராம சந்தியில் இருந்து ஜயவா்தனபுர பல்கலைக்கழகம் வரையான வீதி மூடப்பட்டுள்ளது.
பொலிஸாரால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தொிவிக்கப்படுகிறது.
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த நீா்த்தாரை மற்றும் கண்ணீா்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
மட்டு விபத்தில் இருவர் படுகாயம்
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் குருக்கள்மடத்தில் புதன்கிழமை மாலை (07) இடம் பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
கட்டுநாயக்காவில் இருந்து கல்முனை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து அதே திசையில் முன்னே சென்று கொண்டிருந்த கார் ஒன்றின் மீது மோதியதனால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் மட்டக்களப்பில் இருந்து இரத்தினபுரி நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் அதில் பயணித்த இருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகி களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உலக நாடுகளின் கழிவுகள்
இலங்கையில் உலக நாடுகளின் கழிவுகள்
இலங்கையில் ஏழு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் கரையொதுங்கியுள்ளன . சீனா இந்தியா பங்களாதேஸ் மலேசியா உட்பட எட்டு நாடுகளின் பிளாஸ்டிக் கழிவுகள் இலங்கை கடற்கரையில் கரையொதுங்கியுள்ளன.
பவளப்பாறை சூழலியல் தொடர்பான இலங்கை – சீன கருத்தரங்கில் கலந்து கொண்ட ருகுணு பல்கலைகழகத்தின் கலாநிதி டேர்னி பிரதிப்குமார இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இலங்கையின் கடற்கரைகளில் 32 மில்லியன் கிலோ பிளாஸ்டிக்குகள் சேகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.பல நாடுகளில் இருந்து நீரில் அடித்துவரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளும் இதில் காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்
சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்
வரவு செலவுத் திட்டத்தில் தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்ட போதிலும், பணமில்லை எனக் கூறி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிற்போடப்பட்டாலும், சுற்றறிக்கைகள் மூலம் அரசியல் கைக்கூலிகளை
நியமித்து உள்ளூராட்சி மன்றங்களை தமக்கு விருப்பமானவாறு கட்டுப்படுத்த முயற்சித்து வருவதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.
இந்த சுற்றறிக்கையின் மூலம், உள்ளூராட்சி மன்றங்களின் பணிகளை ஒருங்கிணைக்க, ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க, ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம்
புதிய சபைகளை ஏற்படுத்தாமல் அரசியல் அடியாட்கள் மூலம் உள்ளூராட்சி மன்றங்களை கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
சட்டவிரோதமான செயற்பாடுகளை விடுத்து முறையாக தேர்தலை நடத்துங்கள்
அத்துடன் நீதித்துறைசாரார்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி, மக்கள் தேர்தலை விரும்பவில்லை எனவும், பாராளுமன்றத்தில் எவருக்கும் 50 சதவீத பெரும்பான்மை இல்லை எனவும் தெரிவித்திருந்ததாகவும், சபையில்
எதிர்க்கட்சித் தலைவர், பிரதமருக்கு சவால் விடுத்து தேர்தலொன்று நடத்தினால் 2/3 அல்லது 5/6 ஆக இருந்தாலும் தம்மால் பெருன்பான்மையை எடுத்துக் காட்டலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி உயர் நீதிமன்ற நீதிபதிகளை விருந்துபசாரத்துக்கு அழைத்து, இது போன்ற நீதி நியாயமான நீதிமன்றத் தீர்ப்புகள் வழங்கப்பட வேண்டிய நிலையில், விருந்துபசார நிகழ்ச்சிகளை நடத்துவது தார்மீகமல்ல என்றும், சுதந்திர தீர்ப்புகளுக்கு இது இடையூறாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாத பட்சத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துமாறும், இதற்கு தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான கூடிய ஒத்துழைப்பை வழங்குவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
பிணவறையில் உயிருடன் வந்த நபர்
பிணவறையில் உயிருடன் வந்த நபர்
நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து சம்பவம் 288 பேர் பலியானர்கள். உயிரிழந்தவர்களை அடையாளம் போது பல சிக்கல்கள் எழுந்தது. அதன் போது ஏற்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிய அடைய செய்தது.
ரயில் விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அருகில் உள்ள பாடசாலை ஒன்றில் தான், உயிரிழந்தோர் உடல்கள் வைக்கப்பட்டன.
அந்த வகையில் சடலங்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் தொடர்ந்தும் நடைபெற்றன. அதன் போது உடல்களை பரிசோதிப்பதற்கு
பிணவறையில் உயிருடன் வந்த நபர்
சென்ற மீட்பு படையினரின் காலை யாரோ பிடித்துள்ளனர். அப்போது தெரிய வந்தது சடலங்கள் வைக்கப்பட்ட அறையில், விபத்தில் உயிர்பிழைத்த நபர் இருந்துள்ளார் .
உயிர்பிழைத்த நபர் 35 வயதான ராபின் என்று விசாரணையில் தெரியவந்தது.
மெல்ல எழுந்த ராபின், நான் உயிருடன் இருக்கிறேன், சாகவில்லை. தயவு செய்து எனக்கு தண்ணீர் கொடுங்கள் என கேட்டுள்ளார். பின்பு இவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.








































