Category: இந்தியா செய்திகள்
இந்தியா செய்திகள்,இந்தியா நாட்டில் நடக்கும் நிகழ்வுகள் தமிழக செய்திகள் யாவும் , பாரத தேசத்தின் ,பர பரப்பு ஊடகங்களில் வெளியாகி வருகிறது
சிரியாவுக்கு 2000 டன் அரிசி அன்பளிப்பாக வழங்கிய இந்தியா
சிரியாவுக்கு 2000 டன் அரிசி அன்பளிப்பாக வழங்கிய இந்தியா
சிரியா நாட்டில் இடம் பெற்று வரும் போரினால் அந்த நாடு பெரும் பொருளாதார
நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இவ்வேளை குறித்த நாட்டுக்கு இந்திய
அரசு இரண்டாயிரம் மெற்றிக் டன் அரிசிகளை இலவசமாக வழங்கியுள்ளது
சொந்த நாட்டில் மக்கள் பட்டினியால் தவித்து வரும் நிலையில்
,இந்த பேருதவிகளை இந்திய வழங்கியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை -16 பேர் மரணம் -30 பேர் காயம்
வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை கருகிய மனித உடல்கள் -கதறிய மக்கள் ,சுடுகாடாய் கிடக்கும் தொழில் சாலை
தமிழகம் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழில் சாலை ஒன்று திடிரென
வெடித்து சிதறியது ,இதன்பொழுது அங்கு பணிபுரிந்த பதினேழு
இது எப்படி இருக்கு ..? கிளிக் here
பேர் மரணமாகியும் மேலும் முப்பது பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக
மருத்துவமனை வட்டாரங்க;ள் தெரிவித்துள்ளன
குறித்து வெடிவிபத்து தொடபில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றன
அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு – கோபத்தில் இந்தியர்கள்
அமெரிக்காவில் காந்தி சிலை உடைப்பு – கோபத்தில் இந்தியர்கள்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டேவிஸ் நகரின்
மத்திய பூங்காவில் மகாத்மா காந்தியின் 6 அடி உயர வெண்கலச்சிலை
வைக்கப்பட்டிருந்தது. இந்த சிலை சுமார் 300 கிலோ எடையுள்ள வெண்கலத்தால் உருவாக்கப்பட்டதாகும்.
இந்த சிலையை, நகராட்சி நிர்வாகம் 4 ஆண்டுகளுக்கு முன்பாக காந்தி
எதிர்ப்பு மற்றும் இந்திய எதிர்ப்பு அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில்
அங்கு வைத்தது. இந்த சிலையை விஷமிகள் தாக்கி, அதன் கணுக்கால்
பகுதி வெட்டப்பட்டு, சிலையின் முகத்தில் பாதி துண்டிக்கப்பட்டு காணாமல் போய் உள்ளது.
இதை கடந்த 27-ம் தேதி பூங்காவின் ஊழியர்தான் முதலில்
கண்டுபிடித்தார். இதுதொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிலை டேவிஸ் நகருக்கு இந்திய அரசால் நன்கொடையாக வழங்கப்பட்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காந்தி சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் அமெரிக்க வாழ் இந்தியர்கள்
மத்தியில் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள இந்தியர்கள் மத்தியில் வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள
அறிக்கையில், அமைதி மற்றும் நீதிக்கான உலகளாவிய சின்னத்துக்கு
எதிரான இந்த தீங்கிழைக்கும், இழிவான செயலை இந்திய அரசு வன்மையாக கண்டிக்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தை வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகம், அமெரிக்க
வெளியுறவுத்துறையின் கவனத்துக்கு எடுத்துச்சென்றுள்ளது. இது
குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்காவில் காந்தி சிலை சேதப்படுத்தப்படுவது இது முதல் முறையல்ல.
கடந்த ஆண்டு டிசம்பரில், வாஷிங்டனில் இந்திய தூதரகத்தின் முன்னால்
அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலையை காலிஸ்தான் பிரிவினைவாதிகள் சேதப்படுத்தியது நினைவுகூரத்தக்கது.

ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை
ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை
பயணிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்துள்ளது ஹாங்காங்.
ஏர் இந்தியா விமானங்களுக்கு 14 நாட்கள் தடை விதித்தது ஹாங்காங்
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 25-ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஊரடங்கைத் தொடர்ந்து சர்வதேச, உள்ளூர் விமான சேவைகள் முடக்கப்பட்டன. அதன்பிறகு மே மாதம் முதல் வந்தே பாரத்
திட்டத்தின் கீழ் ‘ஏர் பப்பிள்’ முறையில் வெளிநாடுகளுக்குச் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், ஹாங்காங் – டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்களை இயக்குவதற்குக் கடந்த ஜூலை மாதம் ஒப்பந்தம்
போடப்பட்டது. இதன்படி, ஹாங்காங் – டெல்லி இடையே ஏர் இந்தியா விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவிலிருந்து ஹாங்காங் செல்லும் பயணிகள், பயண நேரத்திற்கு 72 மணி நேரம் முன்பாக கொரோனா பரிசோதனை
மேற்கொண்டு நெகட்டிவ் என சான்றிதழ் கிடைத்தால் மட்டுமே பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று ஹாங்காங் அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இந்தியா தவிர, வங்காளதேசம், எத்தியோப்பியா, பிரான்சு, இந்தோனேசியா, கஜகஸ்தான், நேபாளம், பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், ரஷ்யா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து,
அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளும் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும் என ஹாங்காங் அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், டெல்லி – ஹாங்காங் இடையேயான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்து ஹாங்காங் வந்திறங்கிய பயணிகளில்
சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பதாக ஹாங்காங் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையடுத்து, ஏர் இந்தியா விமானங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதாவது வரும்
டிசம்பர் 3-ம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்கள் ஹாங்காங் சேவையை தொடர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் ஏர் இந்தியா விமானங்களுக்கு 5வது முறையாக இத்தகைய தடைகளை ஹாங்காங் விதித்துள்ளது
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் மீண்டும் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 4 பேர் வெற்றி
தேர்தலில் வெற்றி பெற்ற இந்திய வம்சாவளியினர்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் சேர்த்து 5 இந்திய வம்சாவளியினர் எம்.பி.க்களாக இருந்தனர். அவர்களில் 4 பேர்
பிரதிநிதிகள் சபை என்று அழைக்கப்படுகிற கீழ்சபை எம்.பி.க்கள் ஆவர். அவர்கள், டாக்டர் அமி பெரா, ரோகன்னா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, பிரமிளா ஜெயபால் ஆகியோர் ஆவார்கள்.
செனட் சபை என்று அழைக்கப்படுகிற மேல்சபையில் கமலா ஹாரிஸ் எம்.பி.யாக இருந்தார்.
இவர்கள் அனைவரும் செல்லமாக ‘சமோசா காகஸ்’ என்று அழைக்கப்பட்டு வந்தனர்.
இவர்களில் கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டார். எஞ்சிய 4 பேரும் மீண்டும் நாடாளுமன்ற
பிரதிநிதிகள் சபை தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்று நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபைக்கு மறுபடியும் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.
டாக்டர் அமி பெரா (வயது 55), கலிபோர்னியா மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அதுவும் தொடர்ந்து 5-வது
முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர் பஸ் பேட்டர்சன் தோற்றுப்போனார்.
ரோகன்னா (44), கலிபோர்னியா மாகாணத்தின் 17-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு
வெற்றி பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்து குடியரசு கட்சி தரப்பில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வம்சாவளியான ரிதிஷ் தாண்டன் தோல்வி அடைந்தார்.
ராஜா கிருஷ்ணமூர்த்தி (47), இல்லினாய்ஸ் மாகாணத்தில் 8-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றிருக்கிறார். லிபர்டேரியன்
கட்சி பிரஸ்டன் நெல்சன் தோல்வியைத் தழுவினார். ராஜா கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோர் தமிழ்நாட்டினர். அந்த வகையில் ராஜா கிருஷ்ணமூர்த்தி தமிழர் ஆவார்.
பிரமிளா ஜெயபால் (55), வாஷிங்டன் மாகாணத்தின் 7-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வென்றிருக்கிறார். இவரை எதிர்த்து நின்ற குடியரசு
கட்சி வேட்பாளர் கிரேக் கெல்லர் தோல்வி அடைந்தார். பிரமிளா ஜெயபால் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. பிரமிளா ஜெயபால் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி என்ற இந்திய வம்சாவளி பெண் டாக்டர், அரிசோனாவில் 6-வது காங்கிரஸ் மாவட்டத்தில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு
சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார், அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரான டேவிட்
ஸ்வெய்கெர்ட் தோல்வி அடைந்தார் என உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த தகவல்கள் உறுதியானால், டாக்டர் ஹிரால் திப்பிர்னேனி, பிரதிநிதிகள் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 2-வது இந்திய வம்சாவளி பெண் என்ற சிறப்பை பெறுவார்.
ஓஹியோ மாகாண சட்டசபையின் மேல்சபையான செனட் சபைக்கு இந்திய வம்சாவளி நீரஜ் அந்தானி (29) குடியரசு கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனநாயக கட்சி வேட்பாளர்
மார்க் போகலை வீழ்த்தி இருக்கிறார். ஓஹியோ மாகாண செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் இந்திய வம்சாவளி இவர் என்பது சிறப்பு.
இதே போன்று நியூயார்க் மாகாண சட்டசபைக்கு இந்திய வம்சாவளி வக்கீல் ஜெனிபர் ராஜ்குமார் (38), ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார். அவர் குடியரசு கட்சி
வேட்பாளர் ஜியோவானி பெர்னாவை வீழ்த்தினார். இந்த மாகாண சட்டசபைக்கு தேர்வு பெற்றுள்ள முதல் தெற்காசிய பெண் என்ற சிறப்பு, இவருக்கு கிடைத்துள்ளது.
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி
இமாச்சல பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் மோடி
ரிப்பன் வெட்டி சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி
இமாசலபிரதேச மாநிலம் மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கு செல்லும் சாலை, பனிக்காலத்தில் கடுமையான பனிச்சரிவால் மூடப்பட்டு விடும். இதனால், லஹால்-ஸ்பிடி
பள்ளத்தாக்கு, ஆண்டுக்கு 6 மாதங்கள் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். இதை கருத்தில்கொண்டு, மணாலி-லஹால் ஸ்பிடி பள்ளத்தாக்கை இணைக்க ரோதங் என்ற இடத்தில்
சுரங்கப்பாதை கட்ட கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 3-ந்தேதி, அப்போதைய வாஜ்பாய் அரசு முடிவு செய்தது.
அதையடுத்து, கட்ட தொடங்கப்பட்ட ரோதங் சுரங்கப்பாதைக்கு வாஜ்பாய் நினைவாக ‘அடல் சுரங்கப்பாதை’ என்று பெயர் சூட்ட
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மோடி அரசு முடிவு செய்தது. எல்லை சாலை அமைப்பு, தொடர்ந்து போராடி சுரங்கப்பாதை பணிகளை நிறைவு செய்துள்ளது.
சுரங்கப்பாதை
இதனையடுத்து அடல் சுரங்கப்பாதை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு சுரங்கப்பாதையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பளித்தார்.
திறப்பு விழாவை தொடர்ந்து, லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்கில் சிஸ்சு என்ற இடத்திலும், மற்றும் சோலங்கி பள்ளத்தாக்கிலும் நடக்கும் பொது நிகழ்ச்சிகளில் மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார்.
இது, உலகிலேயே மிக நீளமான நெடுஞ்சாலை சுரங்கப்பாதை ஆகும். 9.02 கி.மீ. நீளத்தில் அமைந்துள்ளது. இந்த சுரங்கப்பாதை
மூலம் எல்லா வானிலை காலத்திலும், மணாலியில் இருந்து லஹால்-ஸ்பிடி பள்ளத்தாக்குக்கு செல்லலாம்.
இப்பாதை காரணமாக, சுற்றி செல்ல வேண்டிய அவசியம் இல்லாததால், மணாலி-லே இடையிலான தூரம் 46 கி.மீ. குறையும்
. பயண நேரம் 5 மணி நேரம் குறையும். கடல் மட்டத்தில் இருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்தில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
இது, இருவழி சுரங்கப்பாதை ஆகும். நாள் ஒன்றுக்கு 3 ஆயிரம் கார்களும், 1,500 சரக்கு வாகனங்களும் செல்லும்வகையில்
சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் செல்லலாம்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 62 லட்சத்தை தாண்டியது – 24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497
பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 80,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1,179 பேர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 97,497 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 51,87,826 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 86428
பேர் குணமடைந்துள்ளனர். நேற்று புதிய நோய்தொற்று
எண்ணிக்கையை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக பதிவாகியுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 9,40,441 பேர் சிகிச்சை
பெற்றுவருவதாகவும், உயிரிழப்பு 1.57 சதவீதமாகவும், குணமடைந்தோர்
விகிதம் 83.33 சதவீதமாக உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் 118 செயலிகளைதடை செய்யும் இந்தியா குமுறும் சீனா
சீனாவின் 118 செயலிகளைதடை செய்யும் இந்தியா குமுறும் சீனா
உலகில் முதன்மை வல்லரசாக மாற்றம் பெற்று வரும் சீனாவின் ஆதிக்கம்
உலக மக்களை கட்டி போட்டுள்ளது ,இதில் டிக் டாக் பிரபலமான சமூக வலைத் தளமாகும் ,
இது உள்ளிட்ட சுமார் நூற்றி பதினெட்டு செயலிகளை தாம் தடை செய்ய உள்ளதாக இந்தியா மீள இன்று அறிவித்துள்ளது
இதனால் சீனா இந்தியாவுக்கு இடையில் முறுகல் நிலை உக்கிரம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இந்தியா இராணுவத்தால் 19 போராளிகள் சுட்டுக் கொலை
இந்தியா இராணுவத்தால் 19 போராளிகள் சுட்டுக் கொலை
இந்தியா இராணுவத்தினரால் கஸ்மீர் பகுதியில் பதுங்கி இருந்த பத்தொன்பது
கிளர்ச்சி படைகளை தாம் கொன்றுள்ளதாக அறிவித்துள்ளனர் .
இதே முன் தினம் பாகிஸ்தான் இராணுவத்தின் எறிகணை தாக்குதலில் பல இந்தியா இராணுவத்தினர் படுகாயமடைந்து இருந்தனர்
அதற்கு பழிவாங்கும் தாக்குதலாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
கஸ்மீரில் தமது தேச விடுதலைக்கு போராடி வரும் போராளிகளை , விடுத்தலை
புலிகளை பயங்கரவாதிகள் என இந்திய அரச பயங்கரவாத இராணுவம் அறிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

தமிழகத்தில் 234 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
தமிழகத்தில் 234 பேர் கொரனோ நோயால் பாதிப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 110 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 110 பேருக்கு கொரோனா: எண்ணிக்கை 234 ஆக உயர்வு
தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்வு
கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதனால் 21 நாட்கள் ஊடரங்கு உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் தமிழகத்தில் அதிகரிக்காமல் இருந்தது.
இதற்கிடையே, தலைநகர் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் என்ற பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15-ம் தேதி வரை தப்லிகி ஜமாத்
என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டில் இருந்து 1500 பேர் கலந்து கொண்டனர். இந்த
கூட்டத்தில் கலந்து கொண்ட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் 1500 பேரையும் தனிமைப்படுத்த தமிழக
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் நேற்று வரை 500-க்கும் மேற்பட்டோரை அடையாளம் கண்டனர்.
அவர்களில் 45-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டதால், ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்தது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து வந்தவர்களில் இன்று 110 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு கொரனோ – தனிமை படுத்த பட்டனர்
இந்தியாவில் 30 மருத்துவர்களுக்கு கொரனோ – தனிமை படுத்த பட்டனர்
இந்தியா – சண்டிகாரில் உள்ள மருத்துவ மனையில் பணியாற்றி வந்த மருத்துவர்கள் ,தாதிமார்கள் அம்புலன்ஸ் சாரதிகள் ,உள்ளிட்ட
முப்பது பேருக்கு கொரனோ தொற்றுள்ளது கண்டு பிடிக்க பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் சுய தனிமைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
நோயாளர் ஒருவர் மூலம் இவர்களுக்கு இந்த நோயானது பரவி உள்ளது என கண்டறிய பட்டுள்ளது .
உரிய முறை பாதுகாப்பு முறைமைகளை கையாள தவறியதால் இவர்களை இந்த நோயானது தாக்கியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு
இந்தியாவில் கொரனோ தாக்குதல் 29 பேர் பலி – 1071 பாதிப்பு
இந்தியாவில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி இதுவரை இருபத்தி ஒன்பது பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 1071 பேர் பாதிக்க
பட்டுளளதாக இந்தியா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
எனினும் இழப்பு இதைவிட அதிகமாக இருக்கலாம் என நம்ப படுகிறது ,அரசுகள் கவிழ்ந்து விடும் என்பதால் இழப்புக்களை
மூடிமறைத்து குறைத்து வெளியிட்டு வருவதாக குற்ற சாட்டுக்கள் தொடர்ந்து முன் வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

இந்தியாவில் கொரோனாவுக்கு 1024 பாதிப்பு – 27 பேர் பலி
இந்தியாவில் கொரோனாவுக்கு 1024 பாதிப்பு – 27 பேர் பலி
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலக்கத்தை எட்டியுள்ள நிலையில், பலியின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1024 ஆக உயர்வு: பலி 27 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது
இந்தியாவில் பிப்ரவரி மாதத்தில் கொரோனா வைரஸ் முதன்முதலாக கண்டறியப்பட்டது. மெதுவாக அதிகரிக்கத்
தொடங்கிய கொரோனா வைரசின் தாக்கம், மார்ச் மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக கடந்த ஒரு வாரத்தில்
மளமளவென அதிகரித்து விஸ்வரூபம் எடுக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்தியாவில் கொரோனா வைரசால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி ஆயிரத்தை தாண்டி 1024 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லியில் இன்று புதிதாக 23 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா
மாநிலத்தில் புதிதாக 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதுடன் அம்மாநிலத்தில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் 20 பேருக்கு புதிதாக உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் 50 பேரும், கர்நாடகாவில் 83 பேரும், பீகாரில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
ஸ்பெயின் நாட்டில் இருந்து தமிழகம் வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி
செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா அறிகுறி உள்ள நபர் மருத்துவமனைக்கு செல்லும்
சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவியுள்ளது.
உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 7 ஆயிரத்து 725 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இவர்களில் 13 ஆயிரத்து 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாட்டில் இதுவரை 324 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, தமிழ்நாட்டிலும் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி மாநிலத்தில் 6 பேருக்கு வைரஸ் பரவியிருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஸ்பெயின் நாட்டில் இருந்து தமிழகம் வந்திருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கும் கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வைரஸ் பாதிக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு
இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு
ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நாட்டில்
கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு
கொரோனா வைரஸ்
சீனாவின் ஹூபே மாகாணம் வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் தாக்கியது. உயிர்கொல்லியான இந்த வைரஸ்
சீனா மட்டுமின்றி உலகின் 89 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதுவரை 3,385 பேர் பலியாகி உள்ளனர். 98 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரசால் 16 இத்தாலி பயணிகள் உள்பட 31 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், ஓமனில் இருந்து இந்தியா வந்த தமிழருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசின் சுகாதார துறை சிறப்பு செயலாளர் சஞ் சீவ குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில்
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.
ஈரானில் இருந்து லடாக் திரும்பிய 2 பேர் மற்றும் ஓமனில் இருந்து இந்தியா திரும்பிய தமிழர் ஒருவர் என மொத்தம் 3 பேருக்கு
கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களது உடல் நிலையை தொடர்ந்து கவனித்து வருகிறோம் என தெரிவித்தார்.

திருநங்கைகளுக்கு வீடு – லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
திருநங்கைகளுக்கு வீடு – லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
வீடில்லா திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் லாரன்ஸ் அறக்கட்டளைக்கு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதி வழங்கினார்.
திருநங்கைகளுக்கு வீடு – லாரன்ஸ் அறக்கட்டளைக்கு ரூ.1.5 கோடி நிதி வழங்கிய அக்ஷய் குமார்
திருநங்கைகளுடன் ராகவா லாரன்ஸ், அக்ஷய் குமார்
தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும்
வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில்
லாரன்ஸ் இயக்கி வருகிறார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
நடிகர், இயக்குனர், டான்சர் என பன்முகத்திறமை கொண்ட ராகவா லாரன்ஸ், சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். அதற்காக
அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். 15 ஆண்டுகளாக இந்த அறக்கட்டளையை நடத்தி வரும் அவர், வீடில்லாத திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டிருந்தார்.
திருநங்கைகளுடன் ராகவா லாரன்ஸ், அக்ஷய் குமார்
லட்சுமி பாம் படத்தின் படப்பிடிப்பின் போது இந்த திட்டம் தொடர்பாக அக்ஷய் குமாரிடம் லாரன்ஸ் தெரிவித்துள்ளார். உடனே
அக்ஷய் குமார் இந்த திட்டத்திற்காக 1.5 கோடி ரூபாய் கொடுத்து உதவியதாக ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.







