Posted in பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

லண்டனில் கொரனோ – வீதியில் நடமாடும் மக்கள் – தண்டம் வழங்கும் பொலிஸ்

லண்டனில் கொரனோ – வீதியில் நடமாடும் மக்கள் – தண்டம் வழங்கும் பொலிஸ்

பிரிட்டனில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாதீர்கள் என அரசு வேண்டுதல் விடுத்து வருகிறது ,


அதனை அலட்சியம் செய்து மக்கள் சிறுவர்களுடன் பார்க்கில் ,குந்தி உள்ளதும் ,உடல் பயிற்சிகள் செய்வதும்
இயல்பான ஒன்றாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது

நாள் தோறும் பல நூற்று கணக்கில் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .அந்த செய்திகளை எல்லாம் பார்வையிட்டு இந்த மக்கள்

தமக்கு ஒன்றும் தெரியாதது போல இவ்விதம் இயல்பாக நடமாடி வருவது
பார்ப்பவர்களை கொதிக்க வைக்கிறது

வரும் நிமிடம் யார் உயிரோடு இருப்பார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் மக்கள் இவ்விதம் செயல் படுவதை என்னவென்று கூறிட ..?

மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்களை காப்பாற்றும் மருத்துவர்கள் இறந்தவண்ணம் உள்ளனர் ,
நாடு பெரும் அவலத்தில் சிக்கி தவிக்கிறது

மேலும் பல்லாயிரம் மக்கள் பலியாக கூடுமென அபாய அறிவிப்புக்கள் வெளியாகிய வண்ணம் உள்ளது


இவ்வாறான சூழலில் இந்த மக்கள் இவ்விதம் நடந்து கொள்வது ,மனித

மனங்களின் சிந்தனைகள் மீது சீற்றம் கொள்ள வைக்கிறது அல்லவா ..?

லண்டனில் கொரனோ
லண்டனில் கொரனோ
Posted in உலக செய்திகள் வினோத வீடுப்பு

கொரோனாவுக்கு தப்பிய 49 நாடுகள் எவை தெரியுமா?

கொரோனாவுக்கு தப்பிய 49 நாடுகள் எவை தெரியுமா?

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசில் இருந்து சில நாடுகள் தப்பித்துள்ளன.

அந்த நாடுகளில் வைரசுக்கு இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

உலகம் முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரத்து 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12

லட்சத்து 5 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 49 ஆயிரத்து 814 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 587 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 762 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சில நாடுகள் தப்பியுள்ளன.

பெரும்பாலும் தனித்தனி தீவுகளாக உள்ள அந்த நாடுகளில் வைரஸ் பரவி இருந்தாலும் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

கோப்பு படம்

கொரோனா பரவி இருந்தாலும் உயிரிழப்புகளை சந்திக்காத நாடுகள்/தீவுகள் மற்றும் பகுதிகள் வருமாறு:-

1) ரியூனியன்
2) வியட்நாம்
3) கயானா
4) ஃபரியோ தீவுகள்
5) கிப்ரல்டர்
6) கம்போடியா
7) ரவண்டா
8) மடகாஸ்கர்
9) அருபா
10) பிரெஞ்சு கயானா
11) உகாண்டா
12) பிரெஞ்சு பாலினிசியா
13) மெக்கோ
14) கயானா பிசயூ
15) எரிட்ரியா
16) மோசாம்பிக்யூ
17) மாலத்தீவுகள்
18) ஈக்வடொரியல் கயானா
19) நியு கல்டோனியா
20) டோமினிகா
21) பிஜி
22) லஓஸ்
23) மங்கோலியா
24) நமீபியா
25) செயிண்ட் லூசிகா
26) கிரினடா
27) செயின் வின்செண்ட் கிரேனெடினெச்
28) ஈஸ்வட்னி
29) சாட் குடியரசு
30) கிரீன்லாந்து
31) செயிண்ட் கிட்டிஸ் மற்றும் நிவிஸ்
32) செசில்ஸ்
33) நேபாளம்
34) மொன்செரட்
35) மத்திய ஆப்ரிக்க குடியரசு
36) சியாரா லியோன்
37) செயிண்ட் பெர்த்
38) பூட்டான்
39) பிலாக்லாந்து தீவுகள்
40) சா டோமி மற்றும் பிரின்சிபி
41) தெற்கு சூடான்
42) மேற்கு சஹாரா
43) அகுயிலா
44) பிரிட்டிஷ் வெரின் தீவுகள்
45) புருன்டி
46) கரீபியன் நெதர்லாந்துஸ்
47) பப்புவா நியூகினினா
48) டைமூர் டெஸ்டி
49) செயிண்ட் பெர்ரி மியூலான்

கொரோனாவுக்கு தப்பிய
கொரோனாவுக்கு தப்பிய
Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க

மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க

நான் இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன். நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்காக தான்

முதன்முறையாக மேக்கப் போட போறீங்களா? அப்ப இத படிங்க
மேக்கப் போட


இப்போது எல்லா பெண்களுக்குமே தாங்கள் அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது. நான்

இப்பதான் முதன்முறையாக மேக்கப் போட்டுக்கப் போறேன்.

நான் எப்படி மேக்கப்பை முறைப்படி போடுவது? என்கிறீர்களா? கவலையை விடுங்கள். இது உங்களுக்காக தான்.

கல்லூரியிலிருந்தோ அல்லது வேலை முடிந்தோ வீட்டுக்குள் போனவுடன் தரமான க்ளென்ஸரை முகத்தில் புள்ளி புள்ளியாக

மேக்கப் போடாமல் அழகாக தெரிய வேண்டுமா ..?

வைத்து, பின்னர் கீழிருந்து மேல் நோக்கி முகம் முழுவதும் தடவுங்கள். ஒரு நிமிடம் கழித்து சிறிதளவு பஞ்சால் முகத்தை

அழுத்தி (மேல் நோக்கி) துடைக்கவும். இதனால் முகத்திலுள்ள அழுக்கெல்லாம் வெளியேறி விடும்.

முகத்தை க்ளென்ஸிங் செய்தவுடன், முகத்திலுள்ள துளைகளெல்லாம் ஓப்பனாகி விடும். இதற்கு தரமான டோனரை

முகத்தில் தடவினால் தான் சருமம் இறுக்கமாகும். உங்கள் சருமத்துக்கு ஏற்ற டோனரைத் தொடர்ந்து தடவி வந்தால் முகத்

தசைகள் தொய்ந்து போகாது. உங்கள் இளமையும் உங்களை விட்டுப் போகாது.

அடுத்தது மாய்ஸ்ரைசிங் க்ரீம். இதுதான் நம் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் நண்பன். இந்த ஈரப்பதம்தான் நம்

இளமையைத் தக்க வைக்கிறது சிலர் 40 வயதிலும் 20 வயது இளைமையுடன் தெரிவது இதனால்தான்!

வறண்ட சருமம் உள்ளவர்கள் ஆயில் பேஸ்டு க்ரீம்களை பயன்படுத்தித் தான் மேக்கப் போட வேண்டும். ஆயில் ஃப்ரீ

க்ரீம்களையோ அல்லது டிரை பவுடரையோ கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

சிலருக்கு எப்போதும் அதிகமாக வியர்க்கும். இவர்கள் முகத்துக்கு ஐஸ் கட்டியால் ஒத்தடம் கொடுத்து விட்டு, மேக்கப் போட்டால் வியர்வையினால் மேக்கப் கலையாது.

மேக்கப் உங்கள் முகத்தில் எரிச்சலை ஏற்படுத்தினால் உடனடியாக முகத்தை வாஷ் பண்ணி விடுங்கள்.

ஒரு தடவை மேக்கப் செய்தால் அதை நான்கு மணி நேரம் வரைதான் வைத்திருக்க வேண்டும். அதற்கு மேல் வைத்திருந்தால்

மேக்கப் பொருட்களிலுள்ள கெமிக்கல்ஸ் சருமத்தினுள்ளே இறங்கி விடும். அதனால் நாள் முழுவதும் மேக்கப்புடன் இருக்க

வேண்டுமென்றால், நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை ஏற்கனவே போட்ட மேக்கப்பை கலைத்து விட்டு அரைமணி நேரம் கழித்து

மறுபடியும் மேக்கப் போட்டுக் கொள்ளுங்கள். இப்படி செய்தால் மேக்கப்பினால் சருமம் பாதிக்காது.

உங்கள் சரும நிறத்துக்கு ஏற்ற பவுண்டேஷன், கன்சிலர், காம்பேக்ட் பவுடர் போன்றவைகளை டெஸ்டர் மூலம் போட்டுப் பார்த்துத்

தேர்ந்தெடுங்கள். அப்போதுதான் மேக்கப் போட்டாலும் அது முகத்தில் தனியாகத் தெரியாது.

லிப்ஸ்டிக் மேல் லிப் கிளாஸை அதிகமாகப் போடாதீர்கள். இதனால் லிப்ஸ்டிக் உதட்டிலிருந்து வழிந்து கசியும்!

மேக்கப் பிரஷ்ஷை ஒவ்வொரு முறை பயன்படுத்திய பிறகும் கண்டிப்பாக க்ளீன் செய்து விடுங்கள்.

மேக்கப் செய்யும் போது கண்களையோ அல்லது உதடுகளையோ லைட்டாகும் படி மேக்கப் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கண்களின்

மேல் டிரஸ்சுக்கு மேச்சாக டார்க் கலரிலோ அல்லது மினுமினுப்பாகவோ ஐ ஷேடோ போட்டால், உதடுகளுக்கு லைட் கலரில் லிப்ஸ்டிக் போடுங்கள்.

கன்சிலரை அள்ளிப் பூசி கண்களின் கருவளையத்தை மறைக்கப் பார்க்காதீர்கள். கன்சிலர் ஓரளவுக்குக் கருவளையத்தை

மறைக்குமே தவிர, அதைச்சரி செய்யாது. இதற்கு சிலிகான் கலந்த மேக்கப் சாதனங்களைத்தான் பயன்படுத்த வேண்டும்.

பெரிய கண்களை உடையவர்கள், ஐலைனரைத் தவிர்த்து, மை மட்டும் போட்டுக் கொள்ளலாம். சிறிய கண்களை உடையவர்கள்

ஐலைனரை இரண்டு தடவை போடலாம். கண்கள் பெரிதாக அழகாகத் தெரியும்.

    Posted in பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

    கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே

    கொரனோ கலக்கத்தில் -லண்டனில் வீட்டுக்குள் புகுந்த கார்-படங்கள் உள்ளே

    லண்டனில் வைரஸ் நோயின் காரணமாக வீதிகளில் மக்கள் தேவையற்று நடமாட தடை விதிக்க பட்டுள்ளது

    இவ்வாறான சூழலில் Chelmsford, Essex பகுதியில் வேகமாக பயணித்த

    கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து வீட்டின் வேலியுடன் மோதி சிதறியது

    இதில் கார் பலத்த சேதமடைந்த நிலையில் உள்ளது ,சாரதி காயங்களுடன் மீட்க பட்டார் .


    வீட்டின் வேலியும் உடைந்து சேதமாகியுள்ளது

    இந்த வீட்டின் வேலிகளை சாரதியை திருத்தி கொடுக்க வேண்டிய செலவுகளை

    ஏற்க வேண்டும் ,கொரனோ பீதியின் எதிரொலியே இந்த விபத்து என தெரிவிக்க படுகிறது

    கொரனோ கலக்கத்தில்
    கொரனோ கலக்கத்தில்
    Posted in உலக செய்திகள் வினோத வீடுப்பு

    67 வயது பாட்டியம்மா பிள்ளை பெற்றார் – சீனாவில் நடந்த அதிசயம்

    67 வயது பாட்டியம்மா பிள்ளை பெற்றார் – சீனாவில் நடந்த அதிசயம்

    சீனாவில் முதன் முதலாக வராலாற்று சாதனையாக இயற்கை முறையில் 67 வயது மூதாட்டி ஒருவர்
    பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்

    surnamed Tian,என்ற பெண்மணியே வெள்ளிக்கிழமை Zaozhuang city’s Maternity and Child Health Care மருத்துவ மனையில் பெண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார்

    இவர் அந்த நாட்டின் முதலாவது வயதான பிள்ளை பிரசவித்த பெண்மணியாக பதிவாகியுள்ளார் .

    தாயும் சேயும் நலமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர் .

    ஐம்பது வயதுக்கு பின்னர் மாதவிடாய் வருவதில்லை ,அவ்வாறு நாட்கள் சென்றாலும் மாதவிடாய் நின்றதும்
    கர்ப்பம் தரிக்க முடியாது என நியதி உள்ளது

    அப்படி என்றால் இவர் ….?விதி விளக்கு போல் உள்ளது

    தமக்கு குழந்தை கிடைத்தது பெரும் மகிழ்வு என 68 வயது கணவன் தெரிவித்துள்ளார் ,

    ஐம்பதிலும் ஆசை வரும் என்பது இதைத்தான் போலும் ….!

    67 வயது பாட்டியம்மா
    67 வயது பாட்டியம்மா
    Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

    சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்

    சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்

    ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.

    ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சாப்பிட கூடாத உணவுகள்
    ஆப்பிள்


    ஆப்பிள், எல்லா பருவ காலங்களிலும் கிடைக்கும் பழமாக இருக்கிறது. அதனை எப்போது சாப்பிட வேண்டும் என்பது

    முக்கியமானது. ஆப்பிள் சாப்பிட்ட பிறகு சிலவகை உணவுகளை சாப்பிடக்கூடாது. அதை மீறி சாப்பிட்டால் ஆப்பிள் விஷத்தன்மை கொண்டதாகமாறி உடலுக்கு தீங்கு விளைவித்துவிடும்.

    குறிப்பாக ஆப்பிள் சாப்பிட்ட உடன் தயிர் கலந்து சாப்பிடக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்து தயிர் சாப்பிடுவதுதான் நல்லது.

    ஆப்பிள், தயிர் இரண்டையும் ஒன்றாக சாப்பிட்டால் கபம் சார்ந்த பிரச்சினை ஏற்படும். ஆப்பிள் சாப்பிட்ட உடன் புளிப்பு சார்ந்த எந்த

    உணவையும் சாப்பிட வேண்டாம். அவை வாயு தொந்தரவு, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

    ஆப்பிள் சாப்பிட்டதும் தண்ணீர் பருகவும் கூடாது. உடனே தண்ணீர் குடித்தால் வயிற்றில் உள்ள அமிலத்தை நீர்த்து போகச்செய்து

    பூஞ்சை உயிர்வாழ்வதற்கு சாதகமான சூழலை உருவாக்கிவிடும். அது வாயு தொந்தரவை ஏற்படுத்தும். பொதுவாகவே சிட்ரஸ் மற்றும் இனிப்பு பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் பருகக்கூடாது.

    அது வாயு தொந்தரவு, அஜீரணம், மலச்சிக்கல், வயிற்றில் பாக்டீரியா வளரும் சூழலையும் ஏற்படுத்தும். ஆப்பிள் சாப்பிட்ட

    பிறகு முள்ளங்கி சேர்த்த உணவை சாப்பிடுவதும் நல்லதல்ல. அது சரும அலர்ஜியை உருவாக்கும்.

      Posted in சினிமா வினோத வீடுப்பு

      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை

      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை

      கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு நடிகை ஒருவர் உணவளித்து வருகிறார்.

      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
      சம்யுக்தா ஒரநாடு


      இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். அதுபோல் திரைப்படம் உள்பட பல்வேறு துறை பிரபலங்களும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகிறார்கள்.

      இந்த நிலையில் கன்னட திரைப்பட நடிகை சம்யுக்தா ஒரநாடு, ஊரடங்கால் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் தெருநாய்களுக்கு உணவளித்து வருகிறார்.

      சம்யுக்தா ஒரநாடு

      இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், கடந்த ஒரு வாரமாக நாய்கள் உணவு இல்லாமல் போராடி வருவதைக் கண்டு மனம் உடைகிறது. நான் உள்பட சிலர் சேர்ந்து

      தெருநாய்களை கண்டறிந்து உணவளித்து வருகிறோம். இதற்கு உதவியாக இருக்கும் பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி

      சூர்யாவுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
      தெருநாய்களுக்கு உணவளிக்கும் நடிகை
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

      லண்டனில் கடைக்குள் புகுந்த கார் – படங்கள் உள்ளே

      லண்டனில் கடைக்குள் புகுந்த கார் – படங்கள் உள்ளே

      இன்று Crystal Palace பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குள் கார் ஒன்று

      புகுந்துள்ளது .


      வேகமாக வந்த கார்
      ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து

      கடைக்குள் புகுந்துள்ளது

      கடை பலத்த சேதமடைந்துள்ளது .

      கடையின் கண்ணாடிகள் என்பன உடைந்து கீழே வீழ்ந்துள்ளன

      அந்த கடையின் முன் பக்கம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது

      இன்று பிற்பகல் ஐந்து மணியளவில் அவ்வழியால் நாம் சென்ற

      போது எமது கமராவுக்குள் சிக்கிய காட்சிகள் இவை

      மேற்படி விபத்தால் அவ்வழி சாலை தடை செய்ய பட்டுள்ளது

      ,போலீசாரும் குவிக்க பட்டுள்ளனர் ,மீட்பு பணிகள் இடம்பெற்ற

      வண்ணம் உள்ளது ,

      லண்டனில் கடைக்குள்
      லண்டனில் கடைக்குள்
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

      பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு

      பிரிட்டனில் டொயிலட் டிசு திருடிய நபர்கள் மடக்கி பிடிப்பு

      பிரிட்டன் Essex காவல்துறை பிரிவில் மலசலகூட பேப்பரை திருடி

      வானில் ஏற்றி சென்ற மூவர் அடங்கிய திருட்டு கும்பலை

      காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

      காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து

      இந்த கைது இடம்பெற்றுள்ளது

      பிரிட்டனில் வைரஸ் நோயானது வேகமாக பரவி வரும் நிலையில்

      மலசலகூட பேப்பருக்கு பெரும் தட்டு பாடு நிலவி வருகின்றமை

      குறிப்பிட தக்கது

      மக்கள் தாம் கொள்வனவு செய்வதில் ஏற்பட்ட தட்டு பாடு

      காரணமாக இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளது

      அம்பலமாகியுள்ளது

      பிரிட்டனில் டொயிலட் டிசு
      பிரிட்டனில் டொயிலட் டிசு
      Posted in சினிமா வினோத வீடுப்பு

      பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கு – நமீதா

      பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கு – நமீதா

      பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட வேண்டும் என்று நடிகை நமீதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

      பாலியல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கு – நமீதா வேண்டுகோள்
      நமீதா


      நிர்பயா குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டது பற்றி நடிகை நமீதா பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ”நான் ரொம்ப

      சந்தோ‌ஷமாக இருக்கிறேன். ஆனால், 7 ஆண்டுகளாகி விட்டன. எதற்காக நமது நாட்டில் இந்தத் தீர்ப்புக்கு இவ்வளவு தாமதம் என்பதைப் பார்க்க வேண்டும்.

      நமீதா

      கண்டிப்பாக வரும் காலத்தில் இது மாதிரியான குற்றங்களுக்கு உடனே தண்டனை வழங்க வேண்டும். அதுவும் கடுமையான

      தண்டனை வழங்க வேண்டும். இதே மாதிரி இன்னொரு சம்பவம் நடைபெறக்கூடாது. நமது அரசாங்கம் இது தொடர்பாகச்

      சட்டத்தைக் கடுமையாக்குவார்கள் என நம்புகிறேன். பாலியல் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட மறுநாளே தூக்கிலிட

      வேண்டும்’’ என்றார்.

      பாலியல் குற்றவாளி
      பாலியல் குற்றவாளி
      Posted in சினிமா வினோத வீடுப்பு

      கர்ப்பத்தை கலைத்த நடிகை –

      கர்ப்பத்தை கலைத்த நடிகை –

      நடிகை லாவண்யா திரிபாதி கருக்கலைப்பு செய்ததாக கூறிய நடிகர் ஸ்ரீராமோஜூ சுனிஷித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

      நடிகை லாவண்யா கர்ப்பம் கலைத்ததாக அவதூறு – நடிகர் மீது வழக்குப்பதிவு
      லாவண்யா திரிபாதி


      பிரம்மன், மாயவன் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் தெலுங்கு நடிகை லாவண்யா திரிபாதி. பிரபலங்கள் மீது

      சர்ச்சையான கருத்துக்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தும் நடிகர் ஸ்ரீராமோதஜூ சுனிஷித், ஒரு பேட்டியில் லாவண்யா திரிபாதியை

      தான் 2015-ல் திருமணம் செய்ததாகவும், தன்னுடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து பெற்றதாகவும், மூன்று முறை

      கருக்கலைப்பு செய்ததாகவும் கூறி இருந்தார். இது தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

      லாவண்யா திரிபாதி, ஸ்ரீராமோஜூ சுனிஷித்

      இந்த நிலையில் லாவண்யா மலிவான விளம்பரத்திற்காக தன் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய்

      தகவல்களை கூறிய சுனிஷித் மீது நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைமில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக் கொண்ட

      காவல்துறை ஸ்ரீராமோஜூ மீது வழக்குப் பதிந்தது. இந்தநிலையில் தலைமறைவாகிவிட்ட அவரை காவல்துறை தேடி வருகிறது.

      கர்ப்பத்தை கலைத்த நடிகை
      கர்ப்பத்தை கலைத்த நடிகை
      Posted in சினிமா வினோத வீடுப்பு

      அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன்

      அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் – மீனா

      எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும் அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என்பதில் நடிகை மீனா உறுதியாக இருக்கிறாராம்.

      அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் – மீனா
      மீனா
      நடிகை மீனா 1991-ம் ஆண்டு வெளியான `என் ராசாவின் மனசிலே’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் ரஜினி,

      கமல், விஜய், விஜயகாந்த், சரத்குமார், பிரபு, விஜய், அஜித் போன்ற உச்ச நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக

      வலம் வந்தார். திருமணத்துக்கு பின்னர் படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.

      திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான மீனா, மீண்டும் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். குழந்தை பெற்றுக்கொண்ட

      கதாநாயகிகளை பெரும்பாலும்,`அம்மா’ வேடத்துக்கு தள்ளிவிடுவார்கள்.

      மீனா

      ஆனால் மீனாவோ எவ்வளவு சம்பளம் கொடுத்தாலும், கதாநாயகனின் அம்மாவாக நடிக்க மாட்டேன்” என்பதில்

      உறுதியாக இருக்கிறாராம். இப்போது அவர், சிவா-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகும் `அண்ணாத்த’ படத்திலும், வெப் தொடர்

      ஒன்றிலும் நடித்து வருகிறார். பிடித்தமான வேடங்கள் வந்தால், தொடர்ந்து வெப் தொடரில் நடிக்க மீனா முடிவு செய்து இருக்கிறாராம்.

      Posted in சினிமா வினோத வீடுப்பு

      விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா

      விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா

      தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, விவாகரத்தான இயக்குனரை திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

      விவாகரத்தான இயக்குனரை மணக்கும் அனுஷ்கா?
      அனுஷ்கா
      ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அனுஷ்காவுக்கு இப்போது 38

      வயது. இவருக்கும், தெலுங்கு நடிகர் பிரபாசுக்கும் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. அதை இருவரும் மறுத்தார்கள். பின்னர்

      தொழில் அதிபரை அனுஷ்கா மணக்க இருப்பதாக தகவல் வெளியானது. அப்படி எதுவும் நடக்கவில்லை.

      இதையடுத்து கிரிக்கெட் வீரரை அனுஷ்கா காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்திகள் பரவின. இதற்கு

      மறுப்பு தெரிவித்த அனுஷ்கா, தனது திருமண முடிவை பெற்றோரிடம் விட்டுவிட்டதாக கூறினார்.

      அனுஷ்கா, பிரகாஷ் கோவலமுடி

      இந்நிலையில், தெலுங்கு இயக்குனர் பிரகாஷ் கோவலமுடிக்கும், அனுஷ்காவுக்கும் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தற்போது

      புதிய தகவல் பரவி வருகிறது. அனுஷ்கா நடித்து தெலுங்கில் சைஸ் ஜீரோ, தமிழில் இஞ்சி இடுப்பழகி பெயர்களில் வந்த படத்தை பிரகாஷ் கோவலமுடி இயக்கி இருந்தார்.

      இஞ்சி இடுப்பழகி படத்துக்காக அனுஷ்கா உடல் எடையை கூட்டி நடித்தது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் ராகவேந்திரராவின்

      மகனான பிரகாஷ் கோவலமுடிக்கு 44 வயது ஆகிறது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவியை பிரிந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

      விவாகரத்தான இயக்குனரை மணக்கும்
      Posted in சினிமா வினோத வீடுப்பு

      உடல் எடையை குறைத்த இலியானா

      உடல் எடையை குறைத்த இலியானா

      தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது உடல் எடையை குறைத்துள்ளார்.

      உடல் எடையை குறைத்த இலியானா
      இலியானா


      நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’

      திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம்

      வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார்.

      இலியானா

      இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்தது. தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி

      வருகின்றார், அதுவும் தென்னிந்திய பக்கம் வரலாம் என்றும் முடிவு செய்துள்ளார். இந்நிலையில் இலியானா நீச்சலுடையில் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

      உடல் எடையை குறைத்த இலியானா
      Posted in சினிமா வினோத வீடுப்பு

      பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – வரலட்சுமி.

      பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – நடிகை – படிக்க இதில் அழுத்துங்க

      பட வாய்ப்புக்காக தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் தன்னிடம் கேட்டதாக நடிகை வரலட்சுமி பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

      பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர் – வரலட்சுமி பகீர் புகார்
      வரலட்சுமி சரத்குமார்


      பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் எல்லா துறைகளிலும் உள்ளது. சினிமாவில் இது சற்று அதிகமாகவே உள்ளது. சினிமா வாய்ப்புக்காக நடிகைகளை பாலியல்

      கொடுமைக்கு உட்படுத்துவது நடக்கிறது. சமீபத்தில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகளை மீடூ மூலம் நடிகைகள் சொல்ல ஆரம்பித்தனர். இந்நிலையில் தமிழில் பல படங்களில் பிசியாக

      நடித்து வரும் நடிகை வரலட்சுமி சரத்குமாரும், தான் இதுபோன்ற பிரச்சினையை சந்தித்ததாக ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

      வரலட்சுமி சரத்குமார்

      அதில், ‘’தான் ஒரு வாரிசு நடிகை என தெரிந்தும் கூட தன்னை பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தனர். தயாரிப்பாளர்கள், இயக்குனர்களிடம் அட்ஜெஸ்ட் செய்யும்படி சிலர் என்னிடம்

      கூறினர். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேண்டாம் என மறுத்துவிட்டேன். அப்படி பேசியவர்களின் ஆடியோ ஆதாரம் என்னிடம் உள்ளது. எல்லாம் நடந்து முடிந்த பிறகு பெண்கள் புகார்

      தெரிவிப்பது ஏற்க முடியாது. பெண்கள் தங்களை பாதுகாக்க தயார் செய்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

      பட வாய்ப்புக்காக படுக்கைக்கு
      Posted in மருத்துவம் வினோத வீடுப்பு

      கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்ப இத டிரை பண்ணுங்க

      கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்ப இத டிரை பண்ணுங்க

      முகத்தில் படும் மாசுக்கள், சூரிய ஒளி மற்றும் புகை போன்றவை நம் சருமத்தில் முதிர்ச்சியை

      ஏற்படுத்துகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க கீழ்கண்ட முறைகளை கையாளலாம்.

      கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்ப இத டிரை பண்ணுங்க


      கழுத்து பகுதியில் சுருக்கங்கள் இருக்கிறதா? அப்ப இத டிரை பண்ணுங்க
      நம்கழுத்துப் பகுதியில் இருக்கும் தோல் சுருக்கங்கள் நம்

      வயதின் முதிர்வு காரணமாகவும் ஏற்படுகின்றன. முகத்தில் படும் மாசுக்கள், சூரிய ஒளி மற்றும் புகை போன்றவை நம்

      சருமத்தில் முதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. கழுத்துப் பகுதியில் உள்ள தோல் சுருக்கங்களை போக்க கீழ்கண்ட முறைகளை கையாளலாம்.

      உங்கள் முகத்தை கழுவும்போது, உங்கள் கழுத்தையும் சேர்த்து சுத்தப்படுத்துதல் அவசியம். முகத்தை எந்தஅளவிற்கு கவனிப்பீர்களோ அதேபோல் கழுத்தையும்

      சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் அழுக்கு மற்றும் தூசு போன்றவை படியாமல் இருக்க செய்யும்.

      சோப்பு பயன்படுத்துவதைக் காட்டிலும் மூலிகை சோப்பு மற்றும் மூலிகை க்லேன்சரை பயன்படுத்தலாம். இது

      உங்கள் முகத்திற்கு பொலிவை தருவது மட்டுமில்லாமல் ph சமநிலையை மாற்ற செய்கின்றது.

      வீட்டை விட்டு நாம் வெளியே செல்கையில் முகத்திற்கு சன்- ஸ்கிரீன் பயன்படுத்தலாம். அது உங்கள்முகத்தை சூரிய ஒளியிலிருந்து பாதுகாக்க செய்யும்.


      வாரத்திற்கு ஒருமுறையாவது உங்கள் முகத்தை எக்ஸ்போலியேட் செய்ய வேண்டும். காரணம்

      அப்பொழுதான் உங்கள் சருமம் பொலிவுடனும், பளபளப்புடனும் இருக்க செய்யும்.

      அதிக அளவு நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். காரணம் நம் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதால் அதிக அளவு தண்ணீர்

      குடிப்பதால் மட்டுமே முகத்தில் சுருக்கங்களும், கோடுகளும் வராமல் இருக்க செய்யும்.

      எஸ்தடிக் அறுவை சிகிச்சை முறை மற்றும் போட்டுலினம் டாக்ஸீன் ஆகிய முறைகளை பயன்படுத்தி முகத்தில் உள்ள

      சுருக்கங்கள் மற்றும் கோடுகளை குறைக்க செய்யலாம். வைட்டமின்- சி உடைய கீரிம்களை நீங்கள்

      பயன்படுத்தலாம். இல்லையென்றால் சீரம் உபயோக்கிக்கலாம்.

      இவை நமக்கு ஆன்டி- ஆக்ஸிடன்ட்களாக செயல்பட்டு பிற ஊதா கதிர்களிலிருந்து நம்மை காக்க செய்கின்றது. இதன்

      காரணமாகத்தான் கொலோஜன் உற்பத்தி அதிகரிக்க செய்கின்றது.

      இந்த முறைகளை மட்டும் நீங்கள் பாலோ செய்தால் போதும் உங்கள் கழுத்துப் பகுதியில் உள்ள சுருக்கங்கள் மற்றும்

      கோடுகள் மறைந்து விடும். உங்கள் கழுத்தும் பளபள வென மின்ன செய்யும்

      கழுத்து பகுதியில் சுருக்கங்கள்
      Posted in சினிமா வினோத வீடுப்பு

      பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி – நடிகை தூக்கிட்டு தற்கொலை

      பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி – நடிகை தூக்கிட்டு தற்கொலை

      பட வாய்ப்புகுறைந்ததால் விரக்தி அடைந்த நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

      பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி – நடிகை தூக்கிட்டு தற்கொலை
      சுபர்னா ஜாஷ்


      மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் பகுதியை சேர்ந்தவர் நடிகை சுபர்னா ஜாஷ். இவர் பெங்காலி மொழியில் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் துணை நடிகையாக நடித்து

      வந்துள்ளார். சமீபத்தில் வெளியான வங்க மொழிப்படமான ‘மயூர்பங்கி’ திரைப்படத்திலும் சுபர்னா ஜாஷ் நடித்துள்ளார்.

      அந்த படத்திற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

      சுபர்னா ஜாஷ்

      இந்நிலையில், சுபர்னா ஜாஷ் அவரது அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சுபர்ணாவின் உடலை அவரது பெற்றோர், உடனடியாக

      மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

      அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இளம் நடிகையான சுபர்ணா

      ஜாஸின் மரணம் பெங்காலி திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

      பட வாய்ப்பு குறைந்ததால் விரக்தி
      Posted in பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

      லண்டனில் வீதியில் ஏற்பட்ட – திடீர் குழிக்குள் வீழ்ந்த கார் photo

      லண்டன் Essex  பகுதியில் உள்ள வீதியில் திடீரென ஏற்பட்ட

      பாரிய குழிக்குள் கார் ஒன்று வீழ்ந்துள்ளது .

      வீழ்ந்த கார் மீட்பு குழுவினரால் மீட்க பட்டுள்ளது ,தற்போது

      பிரிட்டனை மையம் கொண்டு வீசி வரும் புயல் காரணமாக இந்த குழி ஏற்பட்டுள்ளது

      இந்த புயல் காரணமாக தென்கிழக்கு லண்டன் பிரிட்டன்

      பகுதியில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது

      லண்டனில் வீதியில் ஏற்பட்ட
      லண்டனில் வீதியில் ஏற்பட்ட
      Posted in பிரித்தானிய செய்தி வினோத வீடுப்பு

      பிரிட்டனில் 8 நாளாக உணவின்றி தவித்த பெண்

      பிரிட்டன் Leicestershire பகுதியில் குளியலறையில் சிக்கிய 70 வயது முதிய பெண்மணி ஒருவர் எட்டு நாட்களாக உணவு இன்றி நீரை மட்டும் அருந்திய படி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

      குறித்த பெண்மணியை கண்டு பிடித்த போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர் ,தற்போது அவர் நலமாக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in இலங்கை செய்திகள் வினோத வீடுப்பு

      வீதியின் நடுவே தோன்றிய பெருங்குழி – தப்பிய கார்கள்

      வீதியின் நடுவே தோன்றிய பெருங்குழி – தப்பிய கார்கள்

      தெற்கு ரசியாவின் city of Tyumen பகுதியில் திடீரென வாகன நெரிசல் கொண்ட வீதியின் நடுவே பெரும் குழி தோன்றியது ,இது அங்கிருந்த நீர் குழாய் வெடித்து ஏற்பட்ட குழி என கண்டறிய பட்டுள்ளது .எனினும் அந்த சாலை வழியாக சென்றா கார்களுக்கு சேதங்கள் ஏற்படவிலை