Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா
மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா
சூரரைப் போற்று திரைப்படத்தின் வருமானத்தில் மாணவர்களுக்காக ரூபாய் 2.5 கோடி ஒதுக்கி இருக்கிறார் சூர்யா.
மாணவர்களின் கல்விக்கு ரூ.2.5 கோடி ஒதுக்கிய சூர்யா
சூர்யா
சூர்யா நடித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30ஆம் தேதி ஓடிடியில் வெளியாகவிருக்கும் நிலையில் இந்த
படத்தின் மூலம் கிடைத்த வருவாயில் ரூ.5 கோடி நன்கொடையாக கொடுக்கவிருப்பதாக சூர்யா அறிவித்திருந்தார். அதில் ரூ.1.5 கோடி ஏற்கனவே திரையுலகினர்களுக்கு கொடுத்துவிட்டார்.
இந்த நிலையில் தற்போது ரூ.2.5 கோடி மாணவர்களின் கல்விக்காக ஒதுக்கியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைவருக்கும் வணக்கம். ‘ஈதல் இசைபட
வாழ்தல்’ என்பதே தமிழர் வாழ்க்கை நெறி. நாம் உண்ணும்போது அருகில் இருப்பவர்களுக்கு ஒரு ‘கைப்பிடி’ அளவேனும் இருப்பதைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்கிறது திருமந்திரம்.
கடுமையாக உழைத்து முன்னேறிய நிலையில் இருந்தவர்கள்கூட, திடீரென வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஒவ்வொரு குடும்பமும் அடிப்படைத் தேவைகளுக்கே சிரமப்படும் நிலையில்,
மாணவர்களின் கல்விக்குப் பெரிய நெருக்கடி ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. பொதுமக்கள், ‘திரைத்துறையினர், ‘கொரானா தொற்றிலிருந்து’ மக்களை பாதுகாக்க செயல்பட்டவர்கள்
ஆகியோருக்கு ‘சூரரைப் போற்று திரைப்படத்தின் விற்பனை தொகையிலிருந்து ஐந்து கோடி ரூபாய் பகிர்ந்தளிப்பதாக அறிவித்திருந்தோம்.
அதில் பொதுமக்கள் மற்றும் தன்னலமின்றி ‘கொரானா தொற்று பாதித்தவர்களுக்கு பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற மருத்துவதுறை பணியாளர்கள் மேலும் பொதுநல
சிந்தனையுடன் கொரோனா பணியில் களத்தில் நின்று பணியாற்றிய காவல்துறையினர், பத்திரிகையாளர்கள், தூய்மை பணியாளர்கள், மயான பணியாளர்கள் ஆகியோரின் குடும்பத்தில்
கல்வி பயில்பவர்களுக்கு 2.5 கோடி ரூபாயை கல்வி ஊக்கத் தொகையாக வழங்க முடிவு செய்திருக்கறோம்.
ஐந்து கோடி ரூபாயில் 2.5 கோடி ரூபாய் எனது திரைக்குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு சிறுபங்களிப்பாக வழங்க தீர்மானிக்கப்பட்டது. அதில் 1.5 கோடி ரூபாய் திரைப்படத் தொழிலாளார்கள்,
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் சங்க அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டது. மேலே குறிப்பிட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் அல்லாத,
திரையுலகைச் சார்ந்த அன்புக்குரிய விநியோகஸ்தர்கள், மீடியேட்டர்கள், மக்கள் தொடர்பாளர்கள் திரையரங்க
தொழிலாளர்கள் மற்றும் எனது நற்பணி இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு 1 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
சூர்யா
இவர்களின் குடும்பத்தில் பள்ளி/கல்லூரியில் பயில்கிறவர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்படும். கல்வியே ஆயுதம்; கல்வியே கேடயம்’ என்கிற அடிப்படை
கொள்கையோடு இயங்கும் அகரம் ஃபவுண்டேஷன் அமைப்பின் வழிகாட்டுதலோடு, கல்வி ஊக்கத்தொகை பகிர்ந்தளிக்கப்படும். அதிக பொருளாதார தேவையுள்ள குடும்பத்திலிருந்து ஒரு மாணவ/
மாணவிக்கு மட்டும், கல்வி கட்டணமாக அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் வழங்கப்படும். சான்றுகளின் அடிப்படையில் அது நேரடியாக மாணவர்கள் படிக்கும் கல்வி நிறுவனத்திற்கே அனுப்பி வைக்கப்படும்.
அகரம் வடிவமைத்துள்ள விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களின் நகல்களை இணைத்து, அஞ்சல் மூலமாக அகரம் ஃபவுண்டேஷன் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப படிவத்தில் கூறியுள்ள வழிமுறைகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றி உதவித் தொகைகான தேர்வு அமையும். இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
கடலளவு தேவைகள் மிகுந்துள்ள தருணத்தில் இந்தப் பங்களிப்பு சிறுதுளிதான். இருப்பினும் ‘இது சகோதர உணர்வுடன் கூடிய அன்பின் வெளிப்பாடாக அமையும் என நம்புறேன். இந்தப் பேரிடர்
காலத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்கள் கல்வியைப் பாதியில் கைவிடுவதாக யுனஸ்கோ அறிவித்திருக்கறது. இந்தத் தருணத்தில் பொருளாதார
நெருக்கடியால் கல்வியைத் தொடர சிரமப்படும் மாணவர்களுக்கு அனைவரும் துணைநிற்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை
.பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை
நடிகர் கமல் தொகுத்து வழங்க இருக்கும் பிக்பாஸ் 4வது சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை கலந்துக் கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் 4 சீசனில் பிரபல கவர்ச்சி நடிகை
பிக் பாஸ் 4
வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக இந்திய தொலைகாட்சிகளிலும்
ஒளிபரப்பாகி வருகிறது. இந்தியில் இதுவரை 13 சீசன்கள் முடிந்துள்ளது.
தமிழில் 3 சீசன்கள் முடிந்துள்ளது. இதனை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழ் பிக்பாஸின் 4-வது சீசன் நடக்குமா என்பது கேள்விக்குறியாக
இருந்தது. சமீபத்தில் இதன் புரமோ வெளியாகி பிக்பாஸ் 4 சீசன் விரைவில் தொடங்க இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.
நடிகை கிரண்
இதில் பங்கு பெறும் போட்டியாளர்கள் யார் யார் விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கும் நிலையில், பிரபல கவர்ச்சி
நடிகை கிரண் பிக்பாஸ் 4 சீசனில் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
நடிகை கிரண், தமிழில் ஜெமினி, வில்லன், வின்னர் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா
தமிழ், தெலுங்கு, இந்தி மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகை ஜெனிலியா, கொரோனாவில் இருந்து மீண்டு இருப்பதாக கூறியிருக்கிறார்.
கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை ஜெனிலியா
ஜெனிலியா
இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பாலிவுட் பிரபலங்கள் பலரும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டு வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் கொரோனா தொற்றால்
பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்பு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில் நடிகை ஜெனிலியா கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும், தற்போது அதிலிருந்து குணமடைந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கூறியதாவது, ‘கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த
அறிகுறியும் இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் இன்று எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்துள்ளது.
இந்த நோய்த்தொற்றுக்கு எதிராக என்னுடைய போராட்டம் எளிமையானதாக இருந்ததற்கு கடவுளுக்கு நன்றி செலுத்துகிறேன்
400 ரூபா கேக்க கொடுத்துட்டு ரூ.4000 புடுங்கீட்டாங்க – புலம்பும் சூரி
400 ரூபா கேக்க கொடுத்துட்டு ரூ.4000 புடுங்கீட்டாங்க – புலம்பும் சூரி
தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் சூரி, தனது பிள்ளைகள் தனக்காக வெட்டிய கேக்கின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
400 ரூபா கேக்க கொடுத்துட்டு ரூ.4000 புடுங்கீட்டாங்க – புலம்பும் சூரி
சூரிக்காக அவரது பிள்ளைகள் வெட்டிய பிறந்தநாள் கேக் புகைப்படம்
மதுரையை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் சூரி, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். விரைவில் ஹீரோவாகவும் அறிமுகமாக உள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இதனிடையே நடிகர் சூரி நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். சூரியின் பிறந்த
நாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
சூரி
இந்நிலையில், தனது பிள்ளைகள் பிறந்தநாளன்று தனக்காக வெட்டிய கேக்கின் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சூரி, “400ருவா கேக்க கொடுத்துபுட்டு 4000ருவாய
புடிங்கிருச்சுங்க நாபெத்த பிள்ளைங்க. இருந்தாலும் இந்த கேக்கிற்கு எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்கலாம். தேங்க்யூ கட்டிபெத்தார்களா” என பதிவிட்டுள்ளார்
சொன்னதை செய்த சூர்யா…. சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி.
சொன்னதை செய்த சூர்யா…. சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி.
நடிகர் சூர்யா ‘சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் இருந்து சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி வழங்கி உள்ளார்.
சொன்னதை செய்த சூர்யா…. சினிமா சங்கங்களுக்கு ரூ.1.5 கோடி நிதியுதவி
சூர்யா
சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில்
உருவாகியிருக்கும் 2டி என்டர்டைன்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் வருகிற அக்டோபர் 30ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது. ‘சூரரைப்போற்று’ திரைப்பட வெளியீட்டுத்
தொகையிலிருந்து தேவையுள்ளவர்களுக்கு 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்க உள்ளதாக சூர்யா அறிவித்திருந்தார்.
‘பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும், தன்னலம் பாராமல் முன்னின்று பணியாற்றிய கொரோனா முன்கள
பணியாளர்களுக்கும் இந்த 5 கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்படும்’
என்று சூர்யா தெரிவித்திருந்தார். தற்போது அதை செயல்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்.
முதல்கட்டமாக 1.5 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது. இதில் திரையுலகத்தின் தொழிலாளர்கள் அமைப்பான ‘பெப்ஸி’ க்கு 1 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இத்தொகையை பெப்ஸியின்
தலைவர் ஆர். கே. செல்வமணியிடம், 80 லட்ச ரூபாயும், பெப்ஸியின் அங்கமான இயக்குநர் சங்கத்தின் செயலாளர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரிடம் இருபது லட்ச ரூபாயும் பிரித்து வழங்கப்பட்டது.
சூர்யா சார்பில் சங்கத்தினரிடம் காசோலை வழங்கிய சிவகுமார்
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு 30 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. சங்கத்தின் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்கள் பெற்றுக்கொண்டு, அதை தயாரிப்பளர்கள் சங்க
தனி அலுவலரிடம் வழங்குகிறார். தென்னித்திய நடிகர் சங்கத்திற்கு 20 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டடது. நடிகர் சங்கத்தலைவர் நாசர்
பெற்றுக்கொண்டு அதை அவர், நடிகர் சங்க தனி அலுவலரிடம் வழங்குவார். இந்தத் தொகைகளுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில், தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா தலைமையேற்க, நடிகர் சிவகுமார் முன்னிலை வகித்தார். சூர்யாவின் 2டி பட நிறுவனத்தின்
இணை தயாரிப்பாளர் ராஜ்சேகர் கற்பரபூரசுந்தரபாண்டியன் மற்றும் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள்,
சுரேஷ் காமாட்சி, லலித்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள். மீதமுள்ள தொகையின் பகிர்ந்தளிப்பு விவரங்கள் விரைவில் அறிவிக்க உள்ளனர்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் – மருத்துவமனை
எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் – மருத்துவமனை
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு வரும் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார் – மருத்துவமனை அறிக்கை
எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பிரபல பாடகர் எஸ்.பி.பி. கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது
உடல் நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை மூலமாகவும், அவரது மகனுமான எஸ்.பி.பி. சரண் வீடியோ மூலமாகவும் வெளியிட்டு வருகிறார்கள்.
எஸ்.பி.பி.சரண் நேற்று வெளியிட்டுள்ள வீடியோவில், அப்பாவின் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் தொடர்ந்து
கண்காணித்து வருகிறார்கள். தற்போது பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மருத்துவமனை அறிக்கை
தற்போது மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சுய நினைவுடன் உள்ளார்.
பிசியோதெரபி சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. வெண்டிலேட்டர் உதவியுடன் எக்மோ சிகிச்சையும் தொடர்கிறது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
வனிதாவின் நான்காவது கணவருக்கு நெஞ்சு வலி
வனிதாவின் நான்காவது கணவருக்கு நெஞ்சு வலி
நடிகை வனிதாவின் கணவர் பீட்டர் பால், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவர் குறித்து நடிகை வனிதா தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது: “நேற்றைய தினத்தை என்னால் மறக்கவே முடியாது. கடவுள் எங்களுக்கு ஏதோ ஒரு
காரணத்திற்காகவே இந்த சோதனை கொடுத்துள்ளார். நிச்சயம் அதிசயம் நடக்கும், நான் கடவுளை நம்புகிறேன். எங்களின் காதல்
வலிமையானது. எங்களை கைவிடாது. அவருக்காக நானும், எனக்காக அவரும் எப்போதும் இருப்போம்.
திருமணம் என்பது சட்ட ரீதியான ஒரு அங்கீகாரமோ ஒரு அச்சிடப்பட்ட காகிதமோ அல்ல, அது ஒரு உணர்வு பூர்வமானது.
உனக்கு நான், எனக்கு நீ என ஆன்மாக்கள் ஒன்றிணையும் சங்கமம். சிலருக்கு வேண்டுமானால், திருமணமும், விவாகரத்தும் வெறும் பேப்பராக இருக்கலாம்.
பீட்டர் பால், வனிதா
பீட்டர் பால், குணமடைந்து வர வேண்டும் என பிரார்த்தனை செய்யும் ரசிகர்களுக்கும், அவரது உடல் நலனிலும், எங்கள்
வாழ்க்கை நலனிலும் அக்கறை காட்டும் அன்பு உள்ளங்களுக்கு எப்போதுமே நான் நன்றி கடன் பட்டுள்ளேன். வாழ்க்கை மிகவும் குறுகியது” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார் வனிதா.
கொரோனா அறிகுறியால் தனிமையில் இருந்த நண்பனுக்கு தேடிச்சென்று உணவளித்த விஜய்
கொரோனா அறிகுறியால் தனிமையில் இருந்த நண்பனுக்கு தேடிச்சென்று உணவளித்த விஜய்
கொரோனா அறிகுறி காரணமாக வீட்டில் தனிமையில் இருந்த நண்பணுக்கு நடிகர் விஜய் தேடிச்சென்று உணவளித்தாராம்.
கொரோனா அறிகுறியால் தனிமையில் இருந்த நண்பனுக்கு தேடிச்சென்று உணவளித்த விஜய்
விஜய்
தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். இவருக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் உள்ளனர். அவர்களில் நடிகர் சஞ்சீவும்
ஒருவர். சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் சஞ்சீவ் பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது விஜய் நடிப்பில் உருவாகி
இருக்கும் மாஸ்டர் படத்தில் கூட சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து ருசீகர தகவல் ஒன்றை சஞ்சீவ் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
எனக்கு சில மாதங்களுக்கு முன் கொரோனா அறிகுறிகள் தெரிந்தது. அதனால் எனது மனைவி மற்றும் குழந்தைகளை
உறவினர் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, வீட்டில் தனிமையில் இருந்தேன்.
சஞ்சீவ், விஜய்
அப்போது விஜய்யிடமும் இதுபற்றி சொன்னேன். அடுத்த 15 நிமிடத்தில் எனக்காக மதிய உணவு கொண்டு வந்தார் விஜய்.
எனக்கு கொரோனா அறிகுறி இருந்ததால் விஜய்யை நேரில் சென்று பார்க்கவில்லை.
எனது வீட்டு செக்யூரிட்டியிடம் அவர் உணவை கொடுத்துவிட்டு சென்றார்” என சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.
மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் – எஸ்.பி.பி. சரண்
மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் – எஸ்.பி.பி. சரண்
90 சதவிகிதம் மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் என்று அவரது மகன் எஸ்.பி.பி. சரண் வீடியோ வெளியிட்டுள்ளார்.
மயக்க நிலையில் இருந்து எஸ்.பி.பி. மீண்டுள்ளார் – எஸ்.பி.பி. சரண்
எஸ் பி பாலசுப்பிரமணியம்
கொரோனாவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாச கருவியுடன் சிகிச்சை பெற்று வரும்
எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நினைவு திரும்பி சைகை மூலம் தன்னிடம் பேசியதாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் நேற்று தெரிவித்தார்.
இந்நிலையில் எஸ்.பி.பி. சரண் இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது:-
பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 90% மயக்க நிலையில் இருந்து
எஸ்.பி.பி. மீண்டுள்ளார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என நம்புகிறோம் என அதில் கூறியுள்ளார்.
மாஸ்டர் .100 கோடிக்கு விலை பேசுவதாக பரபரப்பு
மாஸ்டர் .100 கோடிக்கு விலை பேசுவதாக பரபரப்பு
மாஸ்டர் படத்தை வாங்க முன்னணி ஓ.டி.டி தளங்கள் ரூ.100 கோடி வரை போட்டி போட்டு விலை பேசுவதாக கூறப்படுகிறது.
ஓ.டி.டி. வலையில் சிக்குமா மாஸ்டர்? ரூ.100 கோடிக்கு விலை பேசுவதாக பரபரப்பு
விஜய்
விஜய்யின் 64 வது படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும்,
வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான், அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் வருகின்றனர்.
சேவியர் பிரிட்டோ தயாரித்திருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஏப்ரல் 9-ந் தேதி வெளியிட
படக்குழு திட்டமிட்டிருந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.
விஜய்
சூரரைப் போற்று படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட உள்ளதாக சூர்யா அறிவித்துள்ள நிலையில், அடுத்ததாக விஜய்யின் மாஸ்டர் படமும் அவ்வாறே வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில்
தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாஸ்டர் படத்தை வாங்க முன்னணி ஓ.டி.டி தளங்கள் ரூ.70 கோடியில் இருந்து
ரூ.100 கோடி வரை போட்டி போட்டு விலை பேசுவதாகவும் கூறப்படுகிறது.
தியேட்டர் அதிபர்களோ திரையரங்குகள் திறந்ததும் முதல் படமாக விஜய்யின் மாஸ்டரை திரையிட்டு ரசிகர்களை மீண்டும்
தியேட்டருக்கு இழுக்கும் திட்டத்தில் உள்ளார்கள். மாஸ்டர் ஓ.டி.டி.யில் வெளியாவதை படக்குழுவினர் இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா – விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்திய கொரோனா
நயன்தாரா – விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்திய கொரோனா
கொரோனா வைரஸ் பிரச்சனையால் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கவலை ஏற்பட்டுள்ளது.
நயன்தாரா – விக்னேஷ் சிவனை கவலையில் ஆழ்த்திய கொரோனா
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
கொரோனா வைரஸ் பிரச்சனையால் எங்கும் பயணம் செய்ய முடியாமல் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் வீட்டிலேயே
முடங்கியுள்ளனர். இந்நிலையில் நியூயார்க் நகருக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படத்தை விக்னேஷ் சிவன்
இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு பயணம் செய்வதை மிஸ் பண்ணுவதாக கூறியிருப்பதுடன், கொரோனாவை போகுமாறு தெரிவித்துள்ளார்.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
படப்பிடிப்புகள் இல்லாததால் இருவரும் வீட்டில் தான் இருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி,
நயன்தாரா நடிக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்கிறார்கள்.

எஸ்.பி.பி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பாதீங்க… மகன் சரண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
எஸ்.பி.பி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பாதீங்க… மகன் சரண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என அவரது மகன் சரண் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எஸ்.பி.பி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பாதீங்க… மகன் சரண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சரண்
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை
பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு
வந்தது. எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து தினசரி அப்டேட்டுகளை அவரது மகன் சரண் கொடுத்து வந்தார்.
ஆனால் கடந்த சில தினங்களாக எஸ்.பி.பி உடல்நிலை குறித்து சரண் எந்தவித தகவலும் தெரிவிக்காமல் இருந்தார். இதனால்
ரசிகர்கள் கவலை அடைந்தனர். தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து அப்டேட் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், இன்று காலை எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என ரிசல்ட் வந்திருப்பதாக சினிமா மக்கள் தொடர்பாளர் நிகில் டுவீட் செய்திருந்தார்.
இந்த நிலையில், தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள எஸ்.பி.பி சரண், “எப்போதும் மருத்துவர்களிடம் கலந்து ஆலோசித்த பின்னர், தந்தையின் உடல்நலம் பற்றி வீடியோ விடுவேன். ஆனால்
, இன்று காலை எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் வந்துவிட்டதாக தகவல்கள் பரவின. நெகடிவ் அல்லது பாசிடிவ் என்பதல்ல விஷயம்.
அவர் தற்போதும் எக்மோ மற்றும் வெண்டிலேட்டர் உதவியுடனே சுவாசித்து வருகிறார். அவரின் உடல்நலம் பற்றிய தகவல் எனக்கே முதலில் வரும். ஆகவே, தவறான செய்திகளை
வெளியிடுபவர்களிடம் கவனமாக இருங்கள்” என்று கூறியுள்ளார். எனினும், எஸ்.பி.பி.க்கு கொரோனா நெகடிவ் என்ற தகவல் உண்மையா என்றும் சரண் விளக்கமாக தெரிவிக்கவில்லை.
குறையும் பட வாய்ப்பு…. புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா
குறையும் பட வாய்ப்பு…. புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா
விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து பிரபலமான ஹன்சிகா, புதிய தொழில் தொடங்கி உள்ளாராம்.
குறையும் பட வாய்ப்பு…. புதிய தொழில் தொடங்கிய ஹன்சிகா
ஹன்சிகா
தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா.
இவர் தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். இது அவரது 50-வது படம். இப்படத்தில்
சிம்பு கவுரவ வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை.
ஹன்சிகா
இந்நிலையில், நடிகை ஹன்சிகா ‘தி பலூன் ஸ்டைலிஸ்ட்ஸ்’ என்ற புதிய நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.
கல்யாணம் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களுக்காக பலூன் மூலம் விதவிதமான அலங்காரங்களைச் செய்வதுதான் அந்த நிறுவனத்தின் பணியாம்.
அது பற்றி தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களிலும் ஹன்சிகா பதிவிட்டுள்ளார். ஏற்கெனவே, இந்த கொரானோ
லாக்டவுனில் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்த ஹன்சிகா, தற்போது புதிய தொழில் தொடங்கி உள்ளார். பட வாய்ப்புகள்
குறைந்து வருவதால் அவர் மற்ற தொழில்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டாதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
மாஸ்க் அணிந்து காரில் செல்லும் அஜித்… வைரலாகும் வீடியோ
மாஸ்க் அணிந்து காரில் செல்லும் அஜித்… வைரலாகும் வீடியோ
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித், தனது மனைவியுடன் மாஸ்க் அணிந்து காரில் செல்லும் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.
மாஸ்க் அணிந்து காரில் செல்லும் அஜித்… வைரலாகும் வீடியோ
அஜித்
அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் உருவாகி வருகிறது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இதன் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா பிரச்சனை முழுவதுமாக முடிந்த பின்பு ‘வலிமை’ திரைப்பட ஷூட்டிங்கை தொடங்கலாம்
என்று அஜித் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூரிடம் தெரிவித்ததாகவும், தொழில்நுட்ப கலைஞர்கள், சினிமா
தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டே அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் சமீபத்தில் தகவல்கள் வெளியாகின.
லாக்டவுன் காலத்தில் தனது குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிட்டு வரும் அஜித், கடந்த மே மாதத்தில் தனது மனைவியுடன்
மருத்துவனை சென்ற வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்நிலையில் தற்போது அஜித் தனது மனைவி ஷாலினியுடன்
காரில் ஏறிச் செல்லும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் அஜித் தலையில் தொப்பி, முகத்தில் கருப்பு நிற மாஸ்க் அணிந்தபடி இருக்கிறார்.

உண்மையாக காதலித்தேன்… எதிரியாகிவிட்டார்
உண்மையாக காதலித்தேன்… எதிரியாகிவிட்டார்
அவரை உண்மையாக காதலித்தேன், ஆனால் திடீரென்று ஒரு எதிரிபோல மாறினார் என்று பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
உண்மையாக காதலித்தேன்… எதிரியாகிவிட்டார் – கங்கனா வருத்தம்
கங்கனா ரனாவத்
இளம் நடிகர் சஷாந்த் சிங் தற்கொலைக்கு இந்தி பட உலகில் ஆதிக்கம் செலுத்தும் வாரிசு நடிகர்கள் காரணம் என்று கங்கனா
ரணாவத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சுஷாந்த் சிங் காதலி ரியா சக்கரவர்த்தியையும் சாடினார்.
தற்போது சுஷாந்த் சிங்கின் இன்னொரு காதல் மற்றும் ஹிருத்திக் ரோஷனுடன் தனக்கிருந்த காதல் போன்றவற்றை பற்றி பேசி இருக்கிறார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள
பதிவுகளில், “சுஷாந்த் சிங். சாரா அலிகான் காதல் பற்றி ஏற்கனவே ஊடகங்களில் வந்துள்ளது. எதற்காக இந்த நட்சத்திர குழந்தைகள்
வெளியில் இருந்து வரும் நடிகர்களை ஆசையில் விழ வைத்து பிறகு விட்டு விடுகிறார்கள்.
அதன்பிறகு சுஷாந்த் சிங் எதற்காக கழுகிடம் சிக்கி கொண்டார் என்பதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை. ஆனாலும்
சுஷாந்த் சிங்கை சாரா அலிகான் உண்மையாக காதலித்து இருப்பார் என்று நம்புகிறேன். சாராவுக்கு அழுத்தம் ஏற்பட்டதால் விலகி இருக்கலாம்.
கங்கனா ரனாவத் ரித்திக் ரோஷன்
நானும் ஹிருத்திக் ரோஷனை உண்மையாகவே காதலித்தேன். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஆனால் திடீரென்று எதற்காக
ஒரு எதிரிபோல மாறினார் என்பது எனக்கு மர்மமாகவே உள்ளது” என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு பட உலகில் பரபரப்பை
ஏற்படுத்தி உள்ளது. ஹிருத்திக் ரோஷன் ரசிகர்கள் கங்கனாவை கண்டித்துள்ளனர்.
மகளின் பெயரை வெளியிட்ட நகுல்.
மகளின் பெயரை வெளியிட்ட நகுல்.
பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி பல படங்களில் நடித்துள்ள நகுல், தன்னுடைய மகளின் பெயரை அறிவித்திருக்கிறார்.
மகளின் பெயரை வெளியிட்ட நகுல்
மனைவியுடன் நகுல்
சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் நகுல். இதையடுத்து காதலில் விழுந்தேன்,
மாசிலாமணி, கந்த கோட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 2016 ஆம் ஆண்டு தன்னுடைய காதலி ஸ்ருதியை திருமணம் செய்து
கொண்டார். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் நடிகர் நகுல் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில், எங்களுக்கு கிடைத்த அன்பு மற்றும் வாழ்த்துக்களுக்கு
மிக்க நன்றி. நாங்கள் எங்கள் மகளுக்கு Nak(khul) & Sru(Bee) – Khulbee) குல்பி என்று பெயரிட்டுள்ளோம் என்று உங்களில்
பெரும்பாலோர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். இது ஒரு புனைப்பெயர். அடுத்த சில மணிநேரங்களில் குழந்தையின் பெயரை வெளியிடுவோம் என்று பதிவிட்டிருந்தார்.
நகுல் மகளின் பெயர்
இதையடுத்து மற்றொரு பதிவில் குழந்தையின் பெயரை வெளியிடுள்ளார். குழந்தைக்கு அகீரா என்று பெயரிட்டுள்ளனர். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

வீட்டிலேயே நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர்
வீட்டிலேயே நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நடிகையை வீட்டிலேயே மிகவும் எளிமையாக இயக்குனர் ஒருவர் திருமணம் செய்துக் கொண்டுள்ளார்.
வீட்டிலேயே நடிகையை திருமணம் செய்துக் கொண்ட இயக்குனர்
மனோஜ் பீதா – ஷாலினி வட்னிகட்டி
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பல திருமணங்கள் எளிமையாக நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெறும்
திரைப்பிரபலங்களின் திருமணம் கூட மிகவும் எளிமையாகவும் நடைபெற்று வருகிறது.
அப்படி தற்போது தமிழில் ‘வஞ்சகர் உலகம்’ என்ற திரைப்படத்தை இயக்கிய மனோஜ் பீதாவிற்கும் நடிகை ஷாலினி வட்னிகட்டிக்கும் இன்று வீட்டிலேயே எளிமையாக திருமணம் நடைபெற்றுள்ளது.
மனோஜ் பீதா – ஷாலினி வட்னிகட்டி
இத்திருமணத்தில் இருவரது நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். முறையான பாதுகாப்பு
நடைமுறைகளை கடைபிடித்து இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின் போது எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம் flight accdent
சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம்
கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தை மையமாக வைத்து சினிமா உருவாகிறது.
சினிமாவாகும் கேரள விமான விபத்து சம்பவம்
விபத்துக்குள்ளான விமானத்தின் புகைப்படம்
வந்தேபாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து கேரள மாநிலம்
கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த ஆகஸ்ட் 7-ந் தேதி இரவு ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தது. அந்த
விமானத்தில் 10 குழந்தைகள், 2 விமானிகள், ஐந்து பணிப்பெண்கள் உள்பட மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர்.
விமானம் கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டபோது ஓடுதளத்தில் இருந்து சறுக்கிக்கொண்டு பள்ளத்தில்
கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர்.
கேலிகட் எக்ஸ்பிரஸ் பட போஸ்டர்
இந்நிலையில், இந்த விபத்தை மையமாக வைத்து மலையாளத்தில் ‘கேலிகட் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு படம் தயாராகிறது.
இதனை மாயா என்பவர் இயக்குகிறார். கதை, திரைக்கதையை மஞ்சீத் மரன்சேரி எழுதுகிறார். டேக் ஆப் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
பிரபல நடிகர் சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சல்மான் கானை சுட்டுக்கொல்ல சதி… விசாரணையில் அம்பலமான திடுக்கிடும் தகவல்
சல்மான் கான்
பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். வாரிசு நடிகர்களால் இளம் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக பேசப்படும் சர்ச்சையில் இவரது
பெயரும் அடிபடுகிறது. ஏற்கனவே படப்பிடிப்பில் அரிய வகை மான்களை வேட்டையாடிய வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற அவர் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
மானை தெய்வமாக வணங்கும் பிஷ்னோய் இன மக்கள் சல்மான்கான் மீது ஆத்திரத்தில் உள்ளனர். அந்த இனத்தை சேர்ந்த
பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கொலை, கொள்ளை வழக்குகளில் சிக்கி சிறையில் இருக்கிறார். அவர் சல்மான்கானை கொலை செய்வோம் என்று மிரட்டல் விடுத்திருந்தார்.
சல்மான் கான்
இந்நிலையில் லாரன்ஸ் பிஷ்னோயின் கூட்டாளியான ராகுல் என்பவரை கொலை வழக்கு ஒன்றில் பரிதாபாத் போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது சல்மான்கானை சுட்டுகொல்ல சதி
நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியானது. சல்மான்கானை சுட்டுக் கொல்ல பாந்தராவில் உள்ள அவரது வீட்டை உளவுபார்த்து எப்போது வீட்டுக்கு வெளியே வருகிறார் என்பதை கண்காணித்ததாகவும்.
கொலை திட்டத்தை அரங்கேற்ற பிஷ்னோய் உத்தரவுக்காக காத்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். இது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
எஸ்.பி.பி.க்கு பாடகி ஒருவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக பரவிய நிலையில், அதுகுறித்த சம்பந்தப்பட்ட பாடகியே விளக்கம் அளித்துள்ளார்.
எஸ்.பி.பி.க்கு இவரால் தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதா? – உண்மை பின்னணி
எஸ்.பி.பாலசுப்ரமணியம், மாளவிகா
புகழ்பெற்ற சினிமா பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சூளைமேடு பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சில தினங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சை
பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளிக்கின்றனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பாடகி மாளவிகா மூலமாகத் தான் எஸ்.பி.பி.க்கு கொரோனா தொற்று பரவியதாக சமூக வலைதளங்களில் ஒரு தகவல் தீயாக பரவியது. கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்தும் மாளவிகா
எஸ்.பி.பி. கலந்து கொண்ட சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறி ரசிகர்கள் அவரைத் திட்டி வந்தனர். இதை பார்த்த பாடகி மாளவிகா
இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: எஸ்.பி.பி. கலந்து கொண்ட நிகழ்ச்சியின் படப்பிடிப்பு ஜூலை மாதம் 30ம் தேதி நடைபெற்றது. ஜூலை 31ம்
தேதி நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட 4 பாடகிகளில் நானும் ஒருத்தி. அப்போது எனக்கு கொரோனா இருந்திருந்தால் என்னுடன்
இருந்த மற்ற 3 பாடகிகள், நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோருக்கும் எளிதில் பரவியிருக்கும்.
மாளவிகா
என் சகோதரியும் அந்த நிகழ்ச்சியில் பாடியதாக கூறுகிறார்கள். உண்மையில், அவர் பாடகி இல்லை. தற்போது அவர்
அமெரிக்காவில் வசித்து வருகிறார். அப்படி இருக்கையில், அவர் எப்படி அந்த நிகழ்ச்சியில் பாடியிருக்க முடியும்?
கொரோனா பிரச்சனை காரணமாக கடந்த 5 மாதங்களாக என் வீட்டிற்கு பணிப் பெண் கூட வருவதில்லை. கடந்த 5 மாதங்களாக நான் வெளியே செல்லவில்லை. இந்த நிகழ்ச்சிக்காகத் தான்
முதல்முறையாக வெளியே சென்றேன். என் காரில் டிரைவருக்கும் எனக்கும் இடையே ஷீல்டு வைக்கும் அளவுக்கு நான் எச்சரிக்கையுடன் இருந்தேன்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி எஸ்.பி.பி சாருக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிலருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் நானும் 8ம் தேதி கொரோனா பரிசோதனை
செய்து கொண்டேன். துரதிர்ஷ்டவசமாக எனக்கும் என் பெற்றொருக்கும், என் குழந்தைக்கும் கொரோனா தொற்று
இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் என் கணவருக்கு கொரோனா தொற்று இல்லை.
தயவு செய்து இதுபோன்ற போலிச் செய்திகளை பரப்பாதீர்கள். வதந்திகளை பரப்புவோருக்கு எதிராக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளேன். என்று மாளவிகா தெரிவித்துள்ளார்.







