நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்
பாடலாசிரியர் சினேகனின் திருமணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடத்தி வைக்கிறார்.
நடிகையை மணக்கிறார் பாடலாசிரியர் சினேகன்
சினேகன்
தமிழ் திரையுலகில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி பாடலாசிரியராக வலம் வருபவர் சினேகன். 700-க்கும் மேற்பட்ட படங்களில் பாடலாசிரியராக பணியாற்றியுள்ள அவர், இதுவரை
2500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி உள்ளார். இவருடைய பல பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகின்றன. இதுதவிர சில படங்களில் நடித்துள்ள சினேகன், தற்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், பாடலாசிரியர் சினேகனுக்கு வருகிற ஜூலை 29-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இவர் நடிகை கன்னிகாவை திருமணம் செய்ய உள்ளார். ‘தேவராட்டம்’ படத்தில்
நடித்துள்ள நடிகை கன்னிகா, பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார். கடந்த 8 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர்.
இவர்களது காதல் இரு வீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இரு வீட்டாரும் பேசி அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.
வருகிற 29-ந் தேதி சென்னையில் உள்ள கிரீன் பார்க் ஓட்டலில் வைத்து சினேகன்- கன்னிகா திருமணம் நடைபெற உள்ளது.
அன்று காலை 10.45 மணியளவில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திருமணத்தை
நடத்தி வைக்கிறார். இதில் இரு வீட்டாரின் குடும்பத்தினரும், மக்கள் கட்சி நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொள்கிறார்கள்.
- ரியாத் மீது ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக சவூதி தலைமையிலான கூட்டணி உரிமை
- செங்கடல் தீவு அருகே பழங்குடியினரை ஏற்றிச் செல்லும் படகை மீட்க ஹூதிகள் முயற்சி
- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.
- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.
- சவூதி எண்ணெய் நகரமான தம்மாமில் உள்ள விமான நிலையத் தாக்குதலில் இருவர் பலி, 8 பேர் காயம்












