Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வெடித்த குண்டு – 7 பேர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தானில் வெடித்த குண்டு – 7 பேர் உடல் சிதறி பலி

ஆப்கானிஸ்தான் தலைநகரில் வெடித்து சிதறிய கூண்டில் சிக்கி சுமார் ஏழுபேர் உடல் சிதறி பலியாகினர் ,மேலும்சிலர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி தாக்குதலுக்கு தலிபான்கள் உரிமை கோரியுள்ளனர்

Posted in உலக செய்திகள்

இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை

இளவரசர் சார்லஸ் நாளை இந்தியா வருகை

இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் அரசு முறை பயணமாக நாளை (புதன்கிழமை) இந்தியா வருகிறார். இங்கு 2 நாட்கள் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். மேலும் பல்வேறு நிகழ்வுகளில் அவர் பங்கேற்க இருப்பதாக இந்தியாவுக்கான இங்கிலாந்து தூதர் சர் டோமினிக் அஸ்குயித் கூறினார்.

அதன்படி குருநானக்கின் 550-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையிலும், இங்கிலாந்து வளர்ச்சியில் சீக்கியர்களின் பங்களிப்பின் நினைவாகவும் குருத்வாரா ஒன்றில் வழிபாடு நடத்துவார். மேலும் முதல் மற்றும் 2-ம் உலகப்போரில் காமன்வெல்த் நாடுகளின் சார்பில் பங்கேற்று உயிரிழந்த இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ராணுவ நிகழ்ச்சி ஒன்றை பார்வையிடுகிறார்.

முன்னதாக இயற்கை பேரிடர் மற்றும் பருவநிலை மாற்றத்தை வலிமையுடன் எதிர்கொள்வது குறித்து இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகளுடன் சார்லஸ் ஆலோசனை நடத்துவார். மேலும் தேசிய பேரிடரை எதிர்கொள்வதற்கு புதிய கண்டுபிடிப்புகளை இந்தியா எவ்வாறு பயன்படுத்துகிறது? என்பது குறித்தும் அவர் அறிந்து கொள்வார்.

தனது 71-வது பிறந்த நாளை 14-ந்தேதி (வியாழக்கிழமை) இந்தியாவிலேயே கொண்டாடும் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், சமூக மேம்பாட்டு திட்டங்களில் சிறப்பான பங்களிப்பை செய்தமைக்காக இந்தியருக்கு காமன்வெல்த் விருதையும் வழங்க உள்ளார்.

மேலும் இந்தியாவின் முன்னணி வர்த்தகர்களை சந்தித்து பேசும் சார்லஸ், நிலையான சந்தை நிலவரத்தை கண்டடைவதற்கான ஆலோசனை மற்றும் வழிமுறைகளை அவர்களிடம் கேட்டுப்பெறுவார் எனவும் டோமினிக் அஸ்குயித் தெரிவித்தார்.

Posted in உலக செய்திகள்

வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை

வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடி அணிய தடை-

நவீன உலகில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் அனைத்து துறைகளிலும் தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். காவல்துறை முதலான அனைத்து அரசுத்துறைகளிலும் பெண்கள் முக்கிய பதவி வகித்து வருகின்றனர். அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளில் பெண்கள் அதிகளவில் நிறுவனங்களில் வேலைக்கு செல்கின்றனர்.

இந்நிலையில், ஜப்பான் நாட்டில் அலுவலக வேலைக்கு வரும் பெண்கள் கண்ணாடிகள் அணிந்து வரக்கூடாது என ஜப்பான் நிறுவனங்கள் கடந்த வாரம் தடை விதித்தன. அதாவது கண்ணாடி அணியும் பெண்கள் ஒரு நட்பற்ற பார்வை தன்மை உடையவர்களாகவும், அவர்களின் முகத்தோற்றத்தை குறைப்பதாகவும் மற்றும் அவர்கள் அதிபுத்திசாலிகளாக தெரிவதாகவும் கூறி அலுவலகம் செல்லும் பெண்கள் கண்ணாடி அணிவதற்கு தடை விதித்தது.

இதற்கு நாடு முழுவதும் பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆண்கள் மட்டும் கண்ணாடி அணியலாம் ஆனால் பெண்கள் அணிய தடையா? என சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் பெண்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

ஜப்பானில் போராடும் பெண்கள்

ஜப்பானில் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களிடம் பணியாற்றுபவர்கள் என்ன உடை அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதன்படி ஆண்கள் சூட் அணிந்து கருப்பு வண்ண ஷூக்களை அணிந்து வர வேண்டும். பெண்கள் ஸ்கர்ட்ஸ் எனப்படும் குட்டைப் பாவாடை அணிந்து ஹைஹீல்ஸ் அணிந்து வர வேண்டும்.

ஒவ்வொரு நாளும் ஹைஹீல்ஸ் அணிவதன் தீமைகள் குறித்து யூமி இஷிகாவா என்ற விளம்பர மாடல் கடந்த ஜனவரியில் முதலில் ட்வீட் வாயிலாக தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இதையடுத்து நாடும் முழுவதும் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Posted in உலக செய்திகள்

வாயுவில் இருந்து வோட்கா தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்

வாயுவில் இருந்து வோட்கா தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம்

பசுமை இல்ல வாயுக்களில் முக்கியமானவை கார்பன் டை ஆக்சைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு ஆகியவை. வாகனங்கள் வெளியிடும் புகை, உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, குளிர்சாதன பெட்டி மற்றும் ஏசி பயன்பாடு, குப்பைகள் மற்றும் கழிவுகளை மறுசுழற்சி செய்யாமை போன்றவற்றின் காரணமாக இந்த வாயுக்கள் வெளியாகின்றன.

இந்த வாயுக்களின் அளவு அதிகரித்தால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கும். அதனால் உயிரினங்கள் அழியும். துருவப்பகுதிகள் உருகத் துவங்கும். எங்கும் பனியே இல்லாமல் தண்ணீராக மாறும். நிலப்பகுதிகள் பெரும்பாலும் தண்ணீருக்குள் மூழ்கும்.

உலகின் பல்வேறு நாடுகள் பருவநிலை மாற்றங்கள் குறித்தும் இயற்கையை பாதுகாப்பதற்கான வழிமுறைகளை குறித்தும் கவனம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவை சேர்ந்த மதுபானம் தயாரிக்கும் நிறுவனம், கார்பன் டை ஆக்சைடு மூலம் வோட்கா மதுபானம் தயாரிக்கும் வழிமுறையை கண்டறிந்துள்ளது.

ஏர் கோ நிறுவன தயாரிப்பு

வோட்கா மதுபானம் பொதுவாக சோளம், உருளைக்கிழங்கு மற்றும் கோதுமை போன்ற தானியங்களில் இருந்து நொதித்தல் மூலம் தயாரிக்கப்படுகிறது. இதனால் ஒரு பாட்டிலுக்கு 13 பவுண்டுகள் அளவிற்கு பசுமை இல்ல வாயுக்கள் வெளியாகின்றன. ஆனால், வழக்கமான நொதித்தல் செயல்முறையைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஏர் கோ இயந்திரங்கள் சூரிய சக்தியில் இயங்கி, நீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடை எத்தனாலாக மாற்றுகின்றன.

தாவரங்களின் ஒளிச்சேர்க்கை செயல்பாடே எங்களது இந்த தயாரிப்புக்கு உத்வேகமாகும். பசுமை இல்ல வாயுக்களின் மூலம் மதுபானம் தயாரிக்கப்படும் இந்த செயல்முறை சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நிச்சயம் ஒருநாள் உதவும் என அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்போதைக்கு, அவர்களின் வோட்கா நியூயார்க் நகரின் சில உணவகங்களுக்கு ஒரு பாட்டில் 65 டாலர் விலையில் விநியோகிக்கப்படுகிறது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் வெள்ள மீட்பு பணியில் இராணுவ உலங்குவானூர்திகள்

பிரிட்டன் பவெள்ள மீட்பு பணியில் இராணுவ உலங்குவானூர்திகள்

பிரிட்டன் -South Yorkshire பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ள மீட்பு பணியில் இராணுவ உலங்கு வானூர்திகள் பயன் படுத்த பட்டு வருகிறது ,இந்த மீட்பு பணியில் சுமார் எழுநூறோடு பேர் சிக்கியுள்ளனர் எனவும் அவர்கள் பத்திரமாக மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததினால்இழப்புக்கள் பல மில்லியன் என தெரிவிக்க படுகிறது

பிரிட்டன்  பவெள்ள மீட்பு பணியில் இராணுவ உலங்குவானூர்திகள்
Posted in உலக செய்திகள்

சிரியாவில் கோர தாக்குதல் 8 பேர் பலி 20 -பேர் காயம்

சிரியாவில் கோர தாக்குதல் 8 பேர் பலி 20 -பேர் காயம்

துருக்கியின் எல்லை பகுதியான சிரியா பகுதியில் நடத்த பட்ட கோர தாக்குதலில் சிக்கி எட்டு பேர் பலியாகினர் ,மேலும் இருப்பது பேர் படுகாயமடைந்துள்ளனர் ,மேற்படி தாக்குதலுக்கு சர்வதேசம் கண்டங்களை தெரிவித்து வருகிறது

Posted in உலக செய்திகள்

மனித முகத்தில் மீன் – வைரலான வீடியோ

மனித முகத்தில் மீன் – விரலான வீடியோ

மீன் ஒன்று மனிதமுகத்தில் தோன்றியுள்ளது ,மேற்படி மீன் தொடர்பான காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது ,இந்த மீன் என்ன இனம் என்பது தொடர்பாக ஆராயும் நடவடிக்கையில் ஈடுபட்டுளனர்

Posted in உலக செய்திகள்

தீயில் கருகி மூவர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

தீயில் கருகி மூவர் பலி – அவுஸ்ரேலியாவில் பயங்கரம்

அவுஸ்ரேலியா -New South Wales north coast. பகுதியில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் சிக்கி வீட்டில் இருந்த மூவர் தீயில் கருகி பலியாகியுள்ளனர் ,மேற்படி தீ பற்றால் தொடர்பில் விசாரணைகள் தீவிரம் பெற்றுள்ளது

தீயில்  கருகி மூவர் பலி - அவுஸ்ரேலியாவில் பயங்கரம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் -கத்தி குத்து மேற்கொண்ட வாலிபன் கைது – போலீசார் அதிரடி

தெற்கு லண்டன் பகுதியில் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட 17 வயது வாலிபன் ஒருவர் கைது செய்ய பட்டுளளார் ,கைதானவர் தீவிர விசாரணைங்களுக்கு உட்படுத்த பட்டுள்ளார் ,காயங்களுக்கு உள்ளான வாலிபர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஈராக்கில் -127 குற்ற செயல்களில் பிரிட்டன் இராணுவம் – விசாரணைகள் தீவிரம்

ஈராக்கில் -127 குற்ற செயல்களில் பிரிட்டன் இராணுவம் – விசாரணைகள் தீவிரம்

ஈராக் நாட்டை ஆக்கிமிது நிலை கொண்டுள்ள பிரிட்டன் இராணுவம் குற்ற செயல் களில் ஈடுபட்டுள்ள நிலையில் அது தொடர்பான விசாரணைகளில் இராணுவம் ஈடுபட்டுள்ளது .குறித்த இராணுவத்திற்கு எதிராக சுமார் 127 குற்ற சாட்டுக்கள் பதிய பெற்றுள்ளன

Posted in உலக செய்திகள்

வீட்டின் மீது வீழ்ந்த விமானம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ளது அப்லேண்ட் நகரம். இந்நகரின் கேபிள் விமான நிலையத்திலிருந்து இன்று காலை சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டது. சிறிது நேரத்தில் திடீரென விமானம் அப்பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மீது மோதியது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். ஆனால் அந்த வீட்டில் இருந்த தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.

Posted in உலக செய்திகள்

வானில் தோன்றிய மர்ம பிரமிடு

வானில் தோன்றிய மர்ம பிரமிடு

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ளது பிலடெல்பியா நகரம். இங்கு நேற்று இரவு ஆரஞ்சு நிற ஒளியுடன் பிரமிடு போன்ற உருவம் வானில் தோன்றியுள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் அதை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது குறித்து பலர் தங்களுக்கு தெரிந்த பல்வேறு தகவல்களை வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து யுடியூப் ஆராச்சியாளர் ஒருவர் கூறுகையில், ‘இது ஆச்சர்யமான ஒரு நிகழ்வு. வெனிசியா என்ற பெண்ணால் எடுக்கப்பட்ட இந்த புகைப்படம் வானில் முக்கோண வடிவ உருவம் ஒன்று தோன்றியுள்ளதாக காட்டுகிறது. ஆரஞ்சு நிற ஒளியுடன் இருக்கும் அந்த உருவம், நெருப்பிற்குள் இருப்பது போன்று தெரிகிறது.

அதை உற்று நோக்கினால் அதன் பின்பு ஒரு சாயல் இருப்பது போன்று தெரிகிறது. அது வினோத நிறங்களில் உள்ள மேகமாக இருக்கலாம். ஆனால் உறுதியாக வானத்தில் பிரமிடு இருப்பது போன்றே தோன்றுகிறது’, என தெரிவித்தார்.

யுடியூப் வாடிக்கையாளர்கள் சிலர் அதை எரியும் பிரமிடு எனவும், தீப்பிழம்பை உமிழ்கிறது எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

வானில் தோன்றிய பிரமிடு உருவம்

ஆனால் பல பார்வையாளர்கள் இந்த உருவத்தை பிரபலமற்ற டிஆர் -3 பி உளவு விமானத்துடன் ஒப்பிட்டனர். டி.ஆர் -3 பி உளவு விமானம், அமெரிக்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் என்று கூறப்படுகிறது. வேறு சிலர் இது வெறும் மலை உச்சிதான் என தெரிவிக்கின்றனர். இதன் உண்மைத்தன்மை குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.

இந்த காணொளி யுடியூப் வலைத்தளத்தில் நேற்று பதிவேற்றப்பட்டது. இதுவரை 2,0000 முறை இந்த வீடியோ பார்க்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் – அமெரிக்க கோர்ட் தீர்ப்பு

டிரம்புக்கு ரூ.14 கோடி அபராதம் – அமெரிக்க கோர்ட் தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை நடத்தி வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின் போது இந்த அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தனது தேர்தல் செலவுகளுக்கு டிரம்ப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இது அரசியல் ரீதியிலான பழிவாங்கல் நடவடிக்கை என்றும், எதிர்க்கட்சியினரால் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்றும் டிரம்ப் குற்றம் சாட்டினார். எனினும் இந்த வழக்கில் கோர்ட்டு உத்தரவின் பேரில் கடந்த ஆண்டு ‘டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்’ அறக்கட்டளை மூடப்பட்டது.

இந்த நிலையில் நியூயார்க் கோர்ட்டில் பெண் நீதிபதி சாலியன் ஸ்கார்புல்லா முன்னிலையில் இந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று முன்தினம் நடந்தது. அப்போது நிதி மோசடி தொடர்பான டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடம் இன்றி நிரூபிக்கப்பட்டன.

இதையடுத்து, இந்த வழக்கில் டிரம்புக்கு 2 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.14 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் ) அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு அளித்தார். மேலும் டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத 8 தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Posted in உலக செய்திகள்

அணுஉலைகளை பார்வையிட – ஐநாவுக்கு ஈரான் அனுமதி மறுப்பு – முறுகல் உக்கிரம்

அணுஉலைகளை பார்வையிட – ஐநாவுக்கு ஈரான் அனுமதி மறுப்பு – முறுகல் உக்கிரம்

ஈரானின் அணு ஆயுதங்களை தயாரிப்பதகவும் தம் அதனை பார்வையிட அனுமதிக்க வேண்டும் என ஐநா கூறியது ,ஆனால் அதற்க்கு ஈரான் அனுமதி மறுத்துள்ளது ,ஈரான் மீது அமெரிக்கா ஏகாதிபத்தியம் பொருளாதர தடைகளை விதித்துள்ளது ,இதனால் ஆத்திரமுற்ற ஈரான் இந்த அதிரடி நடவடிகையை மேற்கொண்டு வருகிறது ,இது ஐரோப்ப மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் பெரும் முறுகலை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் அதிகளுக்கு வேலை செய்ய உரிமை வழங்க படும் – போரிஸ் ஜோன்சன்

லண்டனில் கைதிகளுக்கு வேலை செய்ய உரிமை வழங்க படும் – போரிஸ் ஜோன்சன்

பிரிட்டனில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தான் ஆட்சிக்கு வந்தால் அகதிகள் வேலை செய்யும் உரிமை வழங்க படுவதுடன் தாதிமார் ,மருத்துவர்களுக்கான விசா வழங்கும் பணம் அரைவாசியாக குறைக்க படும் என்ற முக்கிய பல விடயங்களை தேர்தல் பிரச்சாரத்தில் முன் வைத்துள்ளார் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் . ஆனால் இவர்கள் ஆட்சியை மக்கள் வெறுத்து வருகின்றனர் , எனவே இவர் வெல்வாரா என்பதே சந்தேகம் . தொழில் கட்சியே ஆட்சியை பிடிக்கும் நிலை நீடிக்கிறது .

போரிஸ் ஜோன்சன்
Posted in உலக செய்திகள்

வடக்கு லண்டனில் வெள்ளம் மக்கள் அவதி -swollen நதி உடையும் அபாயம்

வடக்கு லண்டனில் வெள்ளம் மக்கள் அவதி -swollen நதி உடையும் அபாயம்

பிரிட்டன் – வடக்கு லண்டன் ப்குதியில் swollen நதியின் நீர் மட்டம் அதிகரித்து செல்ல படுவதல் அதன் அருகில் உள்ள மக்கள் பாதிக்க படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,

தொடர்ந்து பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன ,மக்கள் பெரும் அவதியுற்று வருகின்றனர் .மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

தற்போது 230 வெள்ள அபயா எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

வெள்ளம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் லொத்தரியில் – பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள் .

பிரிட்டனில் லொத்தரியில் – பல மில்லியனை அள்ளி சென்ற இரு நபர்கள்

பிரிட்டனில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற lotto லொத்தர் குழுக்களில் இரு நபர்கள் தலா £6,317,431பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளனர் .பல வாரங்களின் பின்னர் இந்த மிக பெரும் வெற்றி கிடைக்க பெற்றுள்ளது என்பதை அவதானிக்க முடிகிறது .


17 – 22 – 25 – 27 – 32 – 35
Bonus ball
05 மேற்படி இலக்கங்கள் வெற்றி இலக்கங்களாக அமைய பெற்றுள்ளன ,.இவற்றை சோடி இலக்கங்கள் என கூறுவார்கள் அதுவே இங்கே இடம்பெற்றுள்ளது

லொத்தரி
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் -Milton Keynes பகுதியில் – இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை

பிரிட்டன் -Milton Keynes பகுதியில் – இரண்டு வாலிபர்கள் குத்தி கொலை

பிரிட்டன் -Milton Keynes பகுதியில் -இரண்டு வாலிபர்கள் மிக கோரமாகா குத்தி படுகொலை புரிய பட்டுள்ளனர் ,மேற்படி வாலிபர்கள் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்காக வைக்க பட்டுள்ளது ,

இறந்தவர்கள் 15 மற்றும் 19 வயதுடைய வாலிபர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது ,இந்த கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

 குத்தி கொலை
Posted in உலக செய்திகள்

லண்டன் -kent பகுதியில் கெமிக்கல் தாக்குதலில் 57 பேர் பாதிப்பு

லண்டன் -kent பகுதியில் கெமிக்கல் தாக்குதலில் 57 பேர் பாதிப்பு

லண்டன் – kent Rumwood Green Farm near Maidstoneபகுதியில் திடீரென பரவிய கெமிக்கல் கசிவில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டுள்ள சுமார் 57 பேர்
சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இந்த மர்ம கெமிக்கல் கசிவு எவ்வாறு ஏற்பட்டது என தெரியவில்லை ,தொடர்ந்து தீவிர புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன . மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

வாத்தியாரை மரக்கட்டையால் போட்டு தாக்கும் மாணவர்கள் –

இந்தியா Allahabad’s Soraon. பகுதி பாடசாலைக்குள் புகுந்த நூறுக்கு மேற்பட்ட மாணவர்கள் புகுந்து வாத்தியாரை மரக்கட்டையால் தாக்கும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் வாத்தியார் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுளளார் ,நமக்கு மாணவர்களுக்கு எதிராக இவர் செயல் பட்டதே இந்த தர்ம அடிக்கும் காரணமாம்

வாத்தியாரை மரக்கட்டையால் தாக்கும் காட்சிகள்