Posted in உலக செய்திகள்

மரணத்தில் இருந்து தப்பி ரசியா திரும்பும் எதிர்க்கட்சி தலைவர்

மரணத்தில் இருந்து தப்பி ரசியா திரும்பும் எதிர்க்கட்சி தலைவர்

ரசியாவின் எதிர்க்கட்சி தலைவர் விமானத்தில் பயணிக்கும் பொழுது

அவருக்கு நச்சு மருந்து கலந்து கொடுக்க பட்டு உயிருக்கு போராடிய வண்ணம்

இருந்தார் ,இவர் அந்த மரணத்தில் இருந்து தப்பித்து இந்த வார இறுதியில் நாடு திரும்புகிறார்

இவர் நாயடு திரும்பிய பின்னர் அரசியலை தொடங்குவாரா அதற்கு

புட்டீன் இடம் அளிப்பாரா என்பது தொடர்பாக வாத பிரதி வாதங்கள் இடம்பெறுகிறது

மீளவும் இவர் கொலை செய்ய படலாம் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள்

27-ந் தேதி சசிகலா விடுதலை- சூடாகும் தமிழகம்

27-ந் தேதி சசிகலா விடுதலை- சூடாகும் தமிழகம்

விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய

நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அமமுக நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

வருகிற 27-ந் தேதி சசிகலா விடுதலை: ஓசூர் சொகுசு விடுதியில் தங்க ஏற்பாடு

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு பெங்களூரு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதையடுத்து 3 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி, சிறப்பு சலுகையை அனுபவித்ததாக குற்றச்சாட்டு இருந்ததால், அவர் முன்கூட்டியே விடுதலையாவதில் சிக்கல் இருந்தது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் பெற்ற தகவல்படி அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய வாய்ப்பில்லை என்றும், அபராதத் தொகை

செலுத்திவிட்டால் ஜனவரி 27-ம் தேதி விடுதலை ஆவார் என்றும் சிறைத்துறை நிர்வாகம் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து சசிகலா கடந்த மாதம் அபராத தொகை செலுத்தினார். இதையடுத்து வரும் 27-ம் தேதி சசிகலா விடுதலை ஆவது உறுதியானது.

விடுதலையாகி வெளியே வரும் சசிகலாவுக்கு கர்நாடக – தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்க, அ.ம.மு.க., நிர்வாகிகள் தயாராகி வருகின்றனர்.

தமிழக எல்லைக்கு வருவதற்கே, இரவு வெகு நேரம் ஆகிவிடும் என்பதால், சசிகலா, சென்னை செல்லாமல், ஓசூரிலுள்ள தனியார் சொகுசு விடுதியில் அல்லது சூளகிரி அருகே உள்ள ஓட்டல் ஒன்றில்

தங்க அதிகவாய்ப்புள்ளது. அதற்காக, கட்சியின் மேல்மட்ட தலைவர்கள் ஓட்டல்களை பார்வையிட்டு, புக்கிங் செய்து விட்டதாக

உளவு பிரிவு போலீசார் அரசுக்கு தகவல் அனுப்பி உள்ளனர். மேலும், சசிகலாவுக்கு சிறை வளாகத்தில் வரவேற்பு அளிக்க செல்லும்

அ.ம.மு.க., நிர்வாகிகள் தங்கவும், ஓசூரிலுள்ள பிரபல ஓட்டல்களை புக்கிங் செய்துள்ளனர்.

ஓசூரில் 27-ம் தேதி இரவு தங்கி விட்டு, 28-ம் தேதி காலை புறப்பட்டு, கிருஷ்ணகிரி, வேலூர் வழியாக சசிகலா சென்னை வந்து

அடைகிறார். வரும் வழியில் அவருக்கு 50-க்கும் மேற்பட்ட இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து அ.ம.மு.க.வினர் சிலர் கூறுகையில், சசிகலா வரும் 27-ம் தேதி இரவு விடுதலையாகி பெங்களூருவில் தங்கி விட்டு மறுநாள்

28-ம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு ஓசூர் வழியாக சென்னை செல்வார் என்று தெரிவித்தனர்.

Posted in உலக செய்திகள்

சீமானை கிண்டலிடிக்கும் விஜய் சேதுபதி படம் – சர்ச்சையில் சிக்கியது

சீமானை கிண்டலிடிக்கும் விஜய் சேதுபதி படம் – சர்ச்சையில் சிக்கியது

விஜய் சேதுபதி படம் சர்ச்சைக்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் நடிகர் பார்த்திபன் பேசியுள்ளார்.

விஜய் சேதுபதி பட சர்ச்சை – சீமானிடம் பேசிய பார்த்திபன்
விஜய் சேதுபதி


தில்லிபிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பார்த்திபன், மஞ்சிமா மோகன், ராஷி கண்ணா, கருணாகரன், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம்

‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

ஜனவரி 11-ம் தேதி ‘துக்ளக் தர்பார்’ படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் நாம் தமிழர் கட்சியினரைக் கடும் கோபத்துக்கு

ஆளாக்கியது. அதில் ‘ராசிமான்’ என்ற கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார் எனத் தெரிகிறது.

ஒரு காட்சியில் அந்த போஸ்டர்களை எல்லாம் கிழிப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானைத்தான் கிண்டல் செய்துள்ளார்கள் எனக் கருதி, படக்குழுவினருக்கு நாம்

தமிழர் கட்சியினர் கடும் எச்சரிக்கை விடுத்தனர். இதனிடையே, இந்தச்

சர்ச்சை தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமானிடம் பேசியுள்ளார் பார்த்திபன்.

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் பார்த்திபன் கூறியிருப்பதாவது:

பார்த்திபன்

“நண்பர் சீமானிடம் நேரடியாக ‘துக்ளக் தர்பார்’ குறித்து விளக்கமளித்துவிட்டேன். அவரும் பெருந்தன்மையாகப் பதில் அளித்தார். ராசிமான் என்ற பெயர் சீண்ட வேண்டுமென்று

வைக்கப்பட்டதல்ல. இருந்திருந்தால் அதற்கு நானே இடம் தந்திருக்க மாட்டேன். இந்நிமிடம் வரை நான் எக்கட்சியையும் சார்ந்தவனல்ல

. (புதிய பாதை நமது) இருப்பினும் இடையறாது உழைத்து தங்களின் லட்சிய இலக்கை அடையப் போராடும் ‘நாம் தமிழர்’ தோழர்களின்

முயற்சிகளைக் கிண்டல் செய்ய நான் இடம் தரமாட்டேன். எனவே, உள்நோக்கமின்றி

நடந்த பெயர் பிரச்சினையை இயக்குநரிடம் கூறி, ராசிமான் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்து வருகிறேன்”.

இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

Posted in உலக செய்திகள்

டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் – சபாநாயகர் போர்க்கொடி

டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் – சபாநாயகர் போர்க்கொடி

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் என பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.

டொனால்டு டிரம்ப் அமெரிக்காவுக்கு ஆபத்தானவர் – பாராளுமன்ற சபாநாயகர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

இதற்கிடையே கடந்த 6-ந் தேதி ஜோபைடனின் வெற்றியை உறுதி செய்து சான்றிதழ் அளிப்பதற்காக பாராளுமன்றம் கூடியது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் பாராளுமன்றத்துக்குள் நுழைந்து பெரும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த கலவரத்தில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இந்த கலவரத்துக்கு டிரம்ப் காரணம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களை தூண்டியதாகவும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து அவரை அதிபர் பதவியில் இருந்து 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி நீக்க வேண்டும் என்று ஜனநாயக

கட்சியினர் முயற்சித்தனர். ஆனால், அதிபர் டிரம்பை 25-வது சட்ட திருத்தத்தை பயன்படுத்தி பதவி நீக்கம் செய்ய மறுத்துவிட்டார்.

இதனால், ஜனநாயக கட்சியின் பெரும்பான்மையாக உள்ள பிரதிநிதிகள் சபை மூலம் டொனால்டு டிரம்பை பதவி நீக்கம்

செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான வாக்கெடுப்பு இன்று அதிகாலை நடைபெற உள்ளது.

அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் நடைமுறை தொடர்பாக வாக்க்டுப்பு நடைபெற உள்ள நிலையில் இது தொடர்பான விவாதம்

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு உறுப்பினர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி பேசியதாவது:-

நாட்டுக்கு எதிராக அதிபர் டிரம்ப் வன்முறையை தூண்டிவிட்டுள்ளார். அவர் தனது பதவியில் இருந்து

வெளியேற்றப்பட வேண்டும். நாம் விரும்பும் நமது அமெரிக்க நாட்டின் தற்போதைய ஆபத்து டொனால்டு டிரம்ப் தான்.

Posted in உலக செய்திகள்

ஓமான் வளைகுடாவில் ஈரான் ஏவுகணை சோதனை – பதட்டம் அதிகரிப்பு

ஓமான் வளைகுடாவில் ஈரான் ஏவுகணை சோதனை – பதட்டம் அதிகரிப்பு

ஈரான் கடல் பரப்பை சுற்றி அமெரிக்கா ,இஸ்ரேல் ,தென்கொரியா கப்பல்கள்

முற்றுகை இட்டுள்ளன ,இவர்களின் வரவை அடுத்து ஈரானிய போர்

கப்பல்கள் ஓமான் வளைகுடா பகுதியில் திடீர் ஏவுகணை சோதனை ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

இதனால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது ,மேலும்

எழுநூறு சூப்பர் டோரா சண்டை படகுகள் பாரசீக வளைகுடா பகுதியில் நிறுத்தி வைக்க பட்டுள்ளன

இவற்றில் கனரக ஏவுகணைகள் உள்ளன ,அமெரிக்காவின் மிரட்டலுக்கு

தகுந்த பதிலடி வழங்க படும் என ஈரான் அறிவித்து வரும் நிலையில் இந்த காப்பு நடவடிக்கை ஏற்படுத்த பட்டுள்ளது

அணுகுண்டு சோதனை இருபது வீதம் நிறைவு பெற்றுள்ளதாக

அறிவிக்க பட்டதன் பின்னர் நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

சிரியாவில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் 28 பேர் பலி

சிரியாவில் இஸ்ரேல் விமானம் தாக்குதல் 28 பேர் பலி

கிழக்கு சிரியாவின் எல்லைப்புற பகுதியில் ஈரான் ஆதரவு படைகள் நிலை கொண்டுள்ளனர்


இவரக்களை இலக்கு வைத்து சிரியா விமானங்கள் தாக்குதலை நடத்தின

இதில் பலர் பலியாகியள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது

மேலும் Deir el-Zour பகுதியில் நடத்த பட்ட தாக்குதலில் சிக்கி 23 அப்பாவி

பொதுமக்கள்பலியாகினர் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் என மனித உரிமை காப்பகம் அறிவித்துள்ளது

Posted in உலக செய்திகள்

அமெரிக்கா அதிபர்- டிரம்ப் வீடியோக்கள் பதிவிட கூகிள் தடை

அமெரிக்கா அதிபர்- டிரம்ப் வீடியோக்கள் பதிவிட கூகிள் தடை

ஆளும் அமெரிக்கா அதிபர் டிரம்ப் யூடுப் பக்கத்தில் காணொளிகள் பதிவிட ஒருவாரம் தடை செய்ய பட்டுள்ளது


எதிர்வரும் இருபதாம் திகதி டிரம்ப் பதவி விலகி புதிய அதிபருக்கு ஆட்சியை விட்டு கொடுக்க வேண்டும் ஆனால் அவர் முரண்டு

பிடித்து பதவி விலக மறுத்து வரும் நிலையில் சமூக வலைத்தளங்கள் ஊடக தடைகள் அதிகரித்து வருகிறது

ஜனாதிபதி பதவி விலகும் சட்ட மசோதா மூலம் நடவடிக்கைகள்

மேற்கொள்ள பட்டு வரும் நிலையில் இந்த விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது. தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கொரோனா தடுப்பூசி போட்டுவிட்டு மது அருந்தக்கூடாது- அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னையில் இருந்து திருச்சி மண்டலத்திற்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் இன்று அதிகாலை வந்தடைந்தன. அந்த மருந்துகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்

சி.விஜயபாஸ்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் வளர்மதி மற்றும் கலெக்டர் சிவராசு ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தடுப்பூசி மருந்துகள் தகுந்த குளிர்பதன முறையில் பராமரிக்கப்பட்டு புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர்,

தஞ்சை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த தடுப்பூசி வாகனங்களை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து அனுப்பி வைத்தார்.

பிறகு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்தியாவில் வருகிற 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடுவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் அதேநேரத்தில் தமிழகத்தில்

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பூசி போடும் பணியை தொடங்கிவைக்கிறார்.

முதற்கட்டமாக தமிழகத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 டோஸ் நேற்று

சென்னை வந்தடைந்தது. உட னடியாக அவை மண்டல அலுவலகங்களுக்கு குளிர்பதன முறையில் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த தடுப்பூசியை பொறுத்தமட்டில் முதல் தடுப்பூசி போட்ட 28-வது நாள் இரண்டாவது தடுப்பூசி (டோஸ்) போடவேண்டும். இரண்டாம் தடுப்பூசி போட்ட 14-வது நாள்தான் நமது உடலில் நோய் எதிர்ப்பு

சக்தி உருவாகும். முதல் தடுப்பூசி போடப்பட்டதில் இருந்து 48 நாட்கள் கழித்து தான் நோய் எதிர்ப்பு சக்தி வரும் என்று ஆராய்ச்சியின் மூலம் தெரியவந்துள்ளது.

முதல் கட்டமாக தடுப்பூசி போடுபவர்கள் போட்ட உடனேயே மது அருந்தக்கூடாது.

தமிழகத்தில் இந்த தடுப்பூசி போடுவதற்கு முன்னதாக ஒத்திகை, ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதனால் திட்டமிட்டபடி தமிழகத்தில் 307 இடங்களில் கொரோனா தடுப்பூசி வருகிற16-

ந்தேதி முதல் தினமும் 100 பேருக்கு போடப்படும். தடுப்பூசியால் எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி பற்றி சென்னை

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பரிச்சார்த்த முறையில் தடுப்பூசி போட்டு பரிசோதித்து, ஆய்வும் செய்துள்ளோம்.

இதில் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. எனவே தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்ப வேண்டாம். இந்த தடுப்பூசி மூலம் பொதுமக்கள் அச்சப்பட

வேண்டாம். முதல்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நானும் முன் மாதிரியாக

தேவைப்பட்டால் அனுமதி பெற்று தடுப்பூசி போட தயாராக இருக்கிறேன்.

இப்போது கூட இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா பரவி வருகிறது. ஆஸ்பத்திரியில் படுக்கைகள் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் தமிழகம்

தவிர்த்து பிற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு 3 சதவீதமாக இருக்கிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் 1.2 சதவீதமாக இருக்கிறது. இது மிகப் பெரிய வெற்றி. இங்கிலாந்து, பெல்ஜியம்

ஆகிய நாடுகளே ஆச்சரியப்படும் அளவுக்கு தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

வலுவான சுகாதார கட்டமைப்பு மற்றும் முதல்வரின் போர்க்கால நடவடிக்கை, திட்டமிடுதல்களால் இன்று கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளது.

Posted in உலக செய்திகள்

மனைவியை நண்பர்கள் கற்பழிக்க விட்டு இரசித்த கணவன்

சென்னை வில்லிவாக்கத்தில் காதல் மனைவிக்கு நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்துள்ளனர்.

நண்பர்களோடு கூட்டு பாலியல் தொல்லை- காதல் மனைவி புகாரால் சிக்கிய இளைஞர்

சென்னை கொளத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், பாரதி நகர் ஏ.பி.சி. காலனியைச் சேர்ந்த கணேஷ் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

முகநூலில் ஏற்பட்ட பழக்கம் காதலாகி, கல்யாணம் வரை சென்றுள்ளது. கடந்த மாதம் 5-ந்தேதி ஆள் நடமாட்டம் இல்லாத

இடத்தில் கணேஷ், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி குடும்பம் நடத்தி உள்ளார்.

இதன் பின்னர் காதல் மனைவி என்றும் பாராமல் கணேஷ் மிகவும் வக்கிரமாக நடந்து கொண்டு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.

17 வயது இளம்பெண் ஒருவரை வீட்டுக்கே அழைத்து வந்து மனைவி கண் எதிரே உல்லாசமாக இருந்துள்ளார். தனது நண்பர்களையும்

வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு கூட்டு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.

கணவரின் செக்ஸ் தொல்லை எல்லை மீறி போனதால் அவரது பிடியில் இருந்து தப்பி வந்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர்

போலீஸ் நிலையத்தில் காதல் கணவரான கணேஷ் மீது இளம்பெண் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. புகார் விவரம் வருமாறு:-

எனது பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டதால் எனது பெற்றோர் என் மீது காவல் நிலையத்தில் புகார்

அளித்தனர். நான் எனது கணவர் கணேசுடன் வாழப்போவதாக கூறி விட்டு அவருடன் சென்று விட்டேன்.

நான் அணிந்திருந்த 1½ சவரன் செயின், ½ சவரன் மோதிரத்தை அடகு வைத்து முன் பணம் செலுத்தி கடந்த 23-ந்தேதி அன்று வில்லிவாக்கம் ராஜேஷ் நகரில் வாடகைக்கு குடியேறினோம். அன்று

இரவே எனக்கு துணையாகவும் வீட்டு வேலைக்கு உதவி செய்வதற்காகவும் என்று கூறி அயனாவரம், மங்களாபுரம் பகுதியில்

வசித்து வரும் 17 வயது பெண்ணை தோழி என்று எனக்கு அறிமுகப்படுத்தி அவரையும் அதே வீட்டில் தங்க வைத்தார்.

ஓரிரு நாட்களிலேயே எனக்கு அவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதத்தை கண்டு சந்தேகம் ஏற்பட்டு நான் எனது கணவரிடம்

கேட்டபோது எங்கள் இருவர் இடையே வாக்குவாதம் முற்றி அவர் என்னை அடித்து உதைத்தார்.

ஆபாச வார்த்தைகளால் திட்டியும் என்னை இது சம்மந்தமாக இனி எதுவும் கேட்கக்கூடாது. மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வீட்டில் இருந்த அறைக்குள் வைத்து பூட்டி சென்றார்.

எனது இரு கைகளை கட்டியும், வாயை துணியால் அடைத்தும் பலமுறை செக்ஸ் சித்ரவதை செய்தார். இச்சம்பவத்தால் எனக்கு

உடல் ரீதியாக பாதிப்பும் காயமும் ஏற்பட்டது. ஆகவே நான் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கதறி அழுதேன்.

அப்போது என்னிடம் சமாதானம் பேசுவது போல் ஆசை வார்த்தை கூறி என்னை மது அருந்த கூறி வற்புறுத்தினார். அவரது

வற்புறுத்தலின்பேரில் நான் மது அருந்திய பின் அவருடன் இருந்த பெண்ணும் என்னிடம் தவறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்தார்.

எனது கணவர் அவரது போனில் வீடியோ எடுத்து அதை அவரது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தார்.

எனது கணவரின் நணபர்கள் என்று 4 பேர் (பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய சுமார் 23 வயதுடையோர்) வரவழைத்து என்னிடம் கூட்டு பாலியலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினார்.

ஆனால் நான் கத்தி கூச்சலிட்டு அழுத காரணத்தினால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். அவர்கள் சென்ற சிறிது

நேரத்திலேயே எனது கணவர் என்னை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி போட்டு, வாயை துணியால் மூடி கடுமையாக சித்ரவதை செய்தார்.

நீ என்னுடைய 11-வது மனைவி. அது மட்டுமில்லாமல் என்னை படம் பிடித்தது போல் பல கல்யாணமான பெண்களின் அந்தரங்க

வீடியோவை என்னிடம் காட்டி மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தினார். எனது வீட்டின் உரிமையாளரிடம் கூறியதினால்

அவரது உதவியுடன் நான் அங்கிருந்து தப்பித்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினேன்.

எனது கணவர் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து வில்லிவாக்கம் மகளிர் போலீசார் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். கணேசிடம் ஏமாந்த மற்ற 10 பெண்களும் யார்-யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கணேசனுடன் சேர்ந்து கூட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கணேஷ் ‘லவ்லி கணேஷ்’ என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். காதல் மன்னன் போல வில்லிவாக்கம் பகுதியில் இவர் வலம் வந்ததாகவும் தெரிகிறது. இதனாலேயே நண்பர்கள் லவ்லி கணேஷ் என்று அழைத்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

Posted in உலக செய்திகள்

புதியவகை கொரோனா கண்டுபிடிப்பு

புதியவகை கொரோனா கண்டுபிடிப்பு

இங்கிலாந்தில் உருவான உருமாறிய கொரோனாவில் இருந்து மாறுபட்ட புதிய வகை உருமாறிய கொரோனா, ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டில் இருந்து விமானத்தில் டோக்கியோ விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த 4 பேரிடம் இந்த புதிய கொரோனா

உறுதி செய்யப்பட்டது. 45 வயதான ஆண், 35 வயதான பெண், 19 வயதுக்குட்பட்ட ஒரு ஆண், பெண் ஆகியோருக்கு இந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 2 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இருப்பினும், 4 பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த

மாறுபட்ட கொரோனா குறித்து உலக சுகாதார நிறுவனத்துடனும், பிற நாடுகளுடனும் ஜப்பான் ஆலோசனை நடத்தி வருகின்றது.

தற்போதைய தடுப்பூசிகள், இந்த கொரோனாவுக்கு எதிராக செயல்படுமாஇ? என்பது இன்னும் தெளிவுப்படுத்தப்படவில்லை.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி

கொரனோ தாக்குதல் – அமெரிக்காவில் 1,946 மற்றும் பிரிட்டனில் 529 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்

மட்டும் 1,946 பேர் பலியாகியுள்ளனர் மேலும் இதே நாளில் 213,915 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

அதே போல பிரிட்டனில் 529 பேர் பலியாகியும் 46,169 பேர் பாதிக்க படும் உள்ளனர்

நோயின் தாக்குதல் வீச்சு அதிகரிப்பை அடுத்து புதிய சட்டங்கள்

விரைவில் வரவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உலக செய்திகள் மாவீரர் நாள்

ஈரான் கெமிக்கல் ஆயுதங்களை விற்பனைஸ் செய்கிறது – அமெரிக்கா

ஈரான் கெமிக்கல் ஆயுதங்களை விற்பனை செய்கிறது – அமெரிக்கா

ஈரான் ஈராக்கிற்கு உலகில் தடை செய்ய பட்ட கெமிக்கல்

ஆயுதங்களை வழங்கி வருவதாக அமெரிக்கா வெளியுறவு மந்திரி குற்றம் சுமத்தியுள்ளார்

ஈரான் மீது தடைகள் விதிக்க பட்டுள்ள பொழுதும் ,அது தாண்டி அது

தனது நாட்டின் தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் நகர்வில் நகர்ந்து செல்கிறது

இதற்கு முட்டு கட்டை போடும் விதமாக உலக சண்டியர் இவ்விதம் வாய் சாடல் புரிந்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள்

இறந்தவர் எழுந்து வந்த அதிசயம் – அதிர்ச்சியில் மனைவி

கொரோனாவால் உயிரிழந்தது தனது கணவர்தான் என நினைத்து வேறு ஒருவரது உடலை வாங்கிச்சென்ற பெண் அந்த உடலை

அடக்கம் செய்துள்ளார். ஆனால். 4 நாட்கள் கழித்து அந்த பெண்ணின் கணவர் உயிருடன் வந்து அதிர்ச்சி அளித்தார்.

இறுதிச்சடங்கு செய்யப்பட்டு 4 நாட்கள் கழித்து உயிருடன் வந்த கணவன் – அதிர்ந்துபோன மனைவி
உயிருடன் வந்த ஜூலியோ
டெகுசிகல்பா:

கொரோனாவால் உயிரிழந்த வேறு ஒரு நபரை தனது கணவர் என நினைத்த பெண் உயிரிழந்த நபரின் உடலை அடக்கம் செய்துள்ளார். ஆனால், தனது கணவன் சில நாட்கள் கழித்து

உயிருடன் வந்ததால் மிகுந்த அதிர்ச்சியடைந்துள்ளார். இந்த சம்பவம் மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டில் நடைபெற்றுள்ளது.

ஹோண்டுராஸ் நாட்டின் எல் கார்மென் பகுதியை சேர்ந்த தம்பதியர் ஜூலியோ(65) மற்றும் விக்டோரியா. கணவன் மனைவியான இவர்கள் கார்மென் பகுதியில் உள்ள ஒரு

குடியிருப்பில் வசித்து வந்துள்ளனர். இதற்கிடையில், கடந்த 25-ம் தேதியில் ஜூலியோ தனது வீட்டில் இருந்து வழக்கமான நடைபயணத்திற்கு சென்றுள்ளார்.

இவர் தான் வசித்த பகுதியில் அருகே அமைந்துள்ள மாநகராட்சி பகுதியான திரினிடேட் என்ற இடத்தில் நடந்து சென்றபோது எதிர்பாராத விதமாக காட்டுப்பகுதியில் மயங்கி விழுந்துள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜூலியோ விழுந்ததால் அவருக்கு என்ன ஆனது என யாருக்கும் தெரியாமல் இருந்துள்ளது. இதனால், அவர் இன்று வீட்டிற்கு வரவில்லை.

நடைபயணமாக சென்ற தனது கணவர் வராததால் சந்தேகமடைந்த மனைவி விக்டோரியா போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசாரும் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

இதற்கிடையில், கடந்த 30-ம் தேதி எல் கார்மென் பகுதியில் உள்ள மருத்துவமனையில் விக்டோரியாவுக்கு இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் கொரோனா வைரஸ் தாக்குதலால் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளதாகவும், அவர் உங்களது கணவராக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் உயிரிழந்த நபரை அடையாளம் காண நீங்கள் வர வேண்டும் என விக்டோரியாவுக்கு மருத்துவமனை தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வரும்போது கணவரின் அடையாள சான்றிதழை கொண்டு வரும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

இதனால், அதிர்ச்சியடைந்த விக்டோரியா தனது கணவரின் அடையாள அட்டையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பிணவறையில் இருந்த முதியவர் உடலை மருத்துவ ஊழியர்கள் காண்பித்து இது உங்கள் கணவரா என அடையாள காட்டுங்கள் என கேட்டுள்ளனர். அந்த உயிரிழந்த நபரை பார்த்த விக்டோரியா இவர் தனது கணவர் ஜூலியோ தான்
என கூறியுள்ளார்.

உயிருடன் வந்த ஜூலியோ

இதையடுத்து, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்த அந்த நபரின் உடலை விக்டோரியாவிடம் மருத்துவ ஊழியர்கள் ஒப்படைத்தனர். உயிரிழந்தவர் தனது கணவர்தான் என நினைத்துக்கொண்ட விக்டோரியா அந்த உடலை பெற்றுக்கொண்டு தனது சொந்த ஊரில் அடக்கம் செய்தார்.

அந்த நபரை அடக்கம் செய்யும் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் நடைபெற்றபோது விக்டோரியாவின் மகன் ஒருவர் இது நமது தந்தை தான என சந்தேகம் உள்ளது என கேட்டுள்ளார். ஆனால், அதை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை.

இறுதியாக, கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த நபரை விக்டோரியா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் சேர்ந்து அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில், திரினிடேட் மாநகராட்சி பகுதியில் மயங்கி விழுந்த ஜூலியோவை அவ்வழியாக சென்ற சிலர் கண்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் ஒரளவு நினைவு திரும்பியதையடுத்து தனது வீடு எங்கு உள்ளது என்ற தகவலை ஜூலியோ தெரிவித்துள்ளார்.

ஜூலியோவின் வீடு உள்ள இடம் குறித்து தகவலறிந்த மருத்துவ ஊழியர்கள் அவரது உடல்நலம் சற்றும் முன்னேறிய பின்னர் அவரது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். அதாவது, தனது கணவர் இறந்து என்று கடந்த 30-ம் தேதி வேறு ஒரு நபரை விக்டோரியா அடக்கம் செய்ததில் இருந்து 4 நாட்கள் கழித்து ஜனவரி 3-ம் தேதி ஜூலியோ வீட்டிற்கு வந்தார்.

கார் ஒன்று தனது வீட்டின் முன் நிற்பதை கவனித்த விக்டோரியா வெளியே வந்தார். அங்கு உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக நினைத்துக்கொண்டிருந்த தனது கணவர் ஜூலியோ உயிருடன் இருந்ததை கண்டு விக்டோரியா அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின்னர் நடந்த விவகரத்தை மருத்துவ ஊழியர்கள் விக்டோரியாவிடம் தெரிவித்தனர். அந்த தகவலையடுத்து, விக்டோரியா உண்மை நிலையை புரிந்து கொண்டார்.

மேலும், தனது கணவரை அவர் கண்ணீர் மல்க வரவேற்றார். கணவன் இறந்து விட்டார் என வேறு நபரை அடக்கம் செய்த பின்னர் உண்மையான கணவர் உயிருடன் வந்த சம்பவம் ஹோண்டுராஸ் நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்க தடைக்கு -சீனா நெத்தியடி

அமெரிக்க தடைக்கு -சீனா நெத்தியடி

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது.

அமெரிக்க பொருளாதார தடைகளை சமாளிக்க சீனா புதிய சட்டத்தை அமல்படுத்தியது

உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே பல ஆண்டுகளாக வர்த்தக போர் நீடித்து வருகிறது.

மேலும் பல்வேறு விவகாரங்களில் சீனாவுடன் முரண்பட்டு நிற்கும் அமெரிக்கா அந்த நாட்டுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.‌ குறிப்பாக அமெரிக்காவின் தேசிய

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி சீன நிறுவனங்கள் மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பொருளாதார தடைகளை விதித்து வருகிறார்.

பன்னாட்டுத் தொலைத்தொடர்பு நிறுவனமான ஹூவாய் உள்பட பல சீன நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றன. இந்த நிலையில்

அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளில் இருந்து தங்களது நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில் சீனா புதிய சட்டம் ஒன்றை கொண்டுவந்துள்ளது. இதுகுறித்து சீன வணிக அமைச்சகம்

வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘நியாயப்படுத்த முடியாத வெளிநாட்டு சட்டங்களை அமல்படுத்துவதில் இருந்து நிறுவனங்களை பாதுகாக்கும் விதமாக புதிய சட்டம் கொண்டு

வரப்பட்டுள்ளது. இந்த சட்டத்தின்படி வெளிநாட்டு சட்டங்களால் பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் கோர்ட்டில் சட்ட நடவடிக்கைகளை

மேற்கொள்ளலாம். அத்துடன் சேதத்துக்கு இழப்பீடு கோரலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

கொரனோ தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஜோ பைடன்

கொரனோ தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஜோ பைடன்

வாரத்துக்கு முன் பைசர் தடுப்பூசியின் முதல் டோஸ் போட்டுக்கொண்ட ஜோ பைடன், தடுப்பு மருந்தின் 2-வது டோசையும் செலுத்திக்கொண்டார்.

பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்
தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஜோ பைடன்

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பரவல் அதிகமானது. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வரும் வாரத்தில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு நேரலையில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பைசர் தடுப்பூசியின் 2-வது டோசையும் ஜோ பைடன் செலுத்திக்கொண்டுள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதே தனது முன்னுரிமையான பணி என தெரிவித்தார்

Posted in உலக செய்திகள்

பிரிட்டணுக்குள் கடல்வழியாக நுழைந்த 123 அகதிகள் – திணறும் அரசு

பிரிட்டணுக்குள் கடல்வழியாக நுழைந்த 123 அகதிகள் – திணறும் அரசு

பிரிட்டன் ஆங்கில கால்வாயை ஊடறுத்து சுமார் ஆறு படகுகள்

மூலம் 123 அகதிகள் கடந்த சனிக்கிழமை இரவு நுழைந்துள்ளனர்

பிரிட்டன் டோவர் கடல்பகுதியை வந்தடைந்த இவர்கள் மீட்க பட்டு

தடுப்பு முகாம்களில் வைக்க பட்டு விசாரிக்க பட்டு வருகின்றனர்

கடல்வழி பாதுகாப்பு பலப்படுத்த பட்ட நிலையில் ,அகதிகள்

இவ்விதம் தொடர்ந்து நுழைந்து வருவது பிரிட்டனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டணுக்குள் கடல்வழியாக நுழைந்த 123 அகதிகள்
பிரிட்டணுக்குள் கடல்வழியாக நுழைந்த 123 அகதிகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் பங்குனி வரை முழு லொக்கடவுன் தொடரும் – பார்கள் வைகாசி வரை பூட்டு

பிரிட்டனில் பங்குனி வரை முழு லொக்கடவுன் தொடரும் – பார்கள் வைகாசி வரை பூட்டு

பிருத்தானில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின்

தாக்குதல் அதிகரிப்பட்ட நிலையில் நாடு தழுவிய நிலையில் அடித்து

பூட்டு பிறப்பிக்க பட்டுள்ளது ,இது மாசி மாதம் வரை நீடிக்கும் என தெரிவிக்க

பட்ட நிலையில் தற்பொழுது பங்குனி வரை நீடிக்கும் என தெரிவிக்க படுகிறது

மேலும் பார்கள் வைகாசி வரை தொடர்ந்து பூட்ட படும் நிலை

உருவாகும் என பிரதமர் அலுவலகத்தை மேற்கோள் காட்டி கசிவுகள் வெளியாகியுள்ளன

இவ்வாறு அடித்து பூட்டுதல் நீண்டு சென்றால் அதனால் பெரும்

பாதிப்பை வியாபரிகள் சந்திக்க நேரிடும் என சுட்டி காட்ட படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் டெலிவரி செய்த உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்

பிரிட்டனில் டெலிவரி செய்த உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்

பிரிட்டனில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மனையளவில் தனது உணவகத்தில் இருந்து உணவினை எடுத்து

வாடிக்கையாளருக்கு விநியோகிக்க சென்ற முஸ்லீம் உணவாக உரிமையாளராது காரினை 14 வயது திருடன் ஒருவரின் திருடி சென்றான் ,

அந்த காரை தூரத்தி சென்று நிறுத்த முற்பட்ட பொழுது ,இவரை

காரல் இடித்து காய படுத்தியுள்ளான் ,அதில் பலத்த காயமடைந்த இவர் சிகிச்சை பலனின்றி மரணமானார் .

இவரது காரினை திருட முற்பட்ட சிறுவன் கைது செய்யப்

பட்டுள்ளன ,அந்த மக்கள் மதியியல் மிகவும் பரிட்சய பட்ட நபர் இவர் என தெரிவிக்க பட்டுள்ளது

இந்த சம்பவம் Romiley, Stockportபகுதியில் இடம்பெற்றுள்ளது

உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
உணவாக உரிமையாளரை போட்டு தள்ளிய திருடன்
Posted in உலக செய்திகள்

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 1,792 மற்றும் பிரிட்டனில் 563 பேர் பலி

கொரனோ தாண்டவம் – அமெரிக்காவில் 1,792 மற்றும் பிரிட்டனில் 563 பேர் பலி

பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த 24

மணித்தியாலத்தில் மட்டும் அமெரிக்காவில் 1,792 பேர் பலியாகியும் 213,453 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

கடந்த இரு நாட்களுடன் ஒப்பிடும் பொழுது மரண எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது

அது போலவே பிரிட்டனில் 563 பேர் பலியாகியும் 54,940 பேர் பாதிக்க

பட்டுள்ளனர் ,தொடர்ந்து உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் -அலாரிய பொலிஸ்

இங்கிலாந்தில் மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் -அலாரிய பொலிஸ்

இங்கிலாந்தில் சேற்று மண்ணில் புதைந்த நிலையில் மனித கால் விரல் தோற்றத்தில் இருந்ததால் ஒரு பெண் போலீசாருக்கு தகவல்

கொடுத்துள்ளார். அதிகாரிகள் வந்து ஆய்வு நடத்தியதில் அங்கு என்ன இருந்தது என்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சேறு நிறைந்த பகுதியில் பாதி புதைந்த நிலையில் மனித கால் விரல்? போலீசாரை அழைத்த பெண் – அதிர்ந்துபோன போலீசார்
வயல்வெளியில் கால் விரல் தோற்றம்
லண்டன்:

இங்கிலாந்தின் கேட்ஷீட் நகரம் வின்லெடன் பகுதியை சேர்ந்த பெண் தனது செல்லப்பிராணியான நாயுடன் கடந்த

வியாழக்கிழமை தனது குடியிருப்பு பகுதிக்கு அருகே உள்ள வயல்வெளி பகுதியில் நடைபயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது சேறு நிறைந்த ஒரு பகுதியில் மனிதனின் காலின் பெருவிரல்

ஒன்று சேறு நிறைந்த மண்ணில் புதைந்தவாறு இருப்பதை கண்டு அந்த பெண் அதிர்ச்சியடைந்துள்ளார்.

உடனடியாக தனது செல்போனில் அந்த கால் விரலை புகைப்படம் எடுத்த அந்த பெண் தனது வீட்டிற்கு வேகமாக வந்து அந்த

புகைப்படத்தை போலீசாருக்கு அனுப்பி நடத்த விவரத்தை கூறினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார் யாரேனும் ஒருவரை கொன்று சேற்று மண்ணில் யாரேனும் புதைத்துவிட்டு

சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தால் அந்த பெண் கூறிய இடத்திற்கு விரைந்து சென்றனர்.

பல போலீஸ் அதிகாரிகள், மோப்பநாய்கள் உதவியுடன் அந்த பெண் கூறிய இடத்திற்கு விரைந்து சென்று மணிக்கணக்கில் தேடுதல்

வேட்டையில் ஈடுபட்டனர். இரவு நேரத்திலும் இந்த தேடுதல் வேட்டை நடைபெற்றது. சேறு நிறைந்த இடம் என்பதால் தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், பல மணி நேர தேடுதலுக்கு பின்னர் மனிதனின் கால் பெருவிரல் புதைந்த நிலையில் இருந்த இடத்தை போலீசார்

கண்டுபிடித்தனர். ஒரு நபரை யாரோ கொன்று இங்கு புதைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர்.

இதனால், அந்த கால் பெருவிரலை சேற்றில் இருந்து எடுத்தனர். அப்போது போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

சேற்றில் புதைந்திருந்தது மனிதனின் கால் விரல் அல்ல… அது உருளைக்கிழங்கு…. சேறு நிறைந்த பகுதியில் உருளைக்கிழங்கு கிடந்துள்ளது.

வயல்வெளியில் கால் விரல் தோற்றம்

அந்த உருளைக்கிழங்கின் மேற்பரப்பை சுற்றி புஞ்சை காளான் முளைத்துள்ளது. இதனால் அந்த உருளைக்கிழங்கு தத்ரூபமாக

மனிதனின் கால் பெரு விரல் போன்று தோற்றமளித்துள்ளது. இதை உணர்ந்த போலீசார் மிகுந்த அதிர்ச்சியடைந்தனர்.

பல மணி நேர தேடுதல் வேட்டை வீணாகியும், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சேற்று மண்ணில் மனிதனின் கால் விரல்

போன்று தோற்றத்தில் புதைந்திருந்ததால் அந்த பெண் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளார். அவரின் விழிப்புணர்வு பாராட்டிற்கு உரியது என இங்கிலாந்து போலீசார் தெரித்துள்ளனர்.

மனிதனின் கால் விரல் போன்று தோற்றமளித்துள்ள அந்த உருளைக்கிழங்கு புகைப்படம் சமூக வலைதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

மண்ணில் புதைந்த நிலையில் மனித கால்