Posted in இலங்கை செய்திகள்

மலையத்தின் பாடசாலை ஒன்றில் மகன் அதிபர்-தந்தை உப அதிபர் – குடும்ப ஆட்சி புதிய சூத்திரம்

மலையத்தின் பாடசாலை ஒன்றில்
மகன் அதிபர்-தந்தை உப அதிபர் – குடும்ப ஆட்சி
புதிய சூத்திரம்

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவ பிளக்போரஸ்ட் தமிழ்

வித்தியாலயத்திற்கு தற்போது மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் ஊடாக நடைபெற்று வரும்

இடமாற்றத்திற்கு அமைய புதிய அதிபர் ஒருவர் இடமாற்றம் பெற்றுள்ளார்.

மேற்படி குறித்த பாடசாலையில் பதவி வகித்த அதிபர் திருமதி ஆர்.பத்மாவதி ரொச்சைல்ட் தோட்ட பாடசாலைக்கு இட மாற்றம் பெற்றுள்ளார். பிளக்போரஸ்ட் தமிழ்

வித்தியாலயம் ஒரு ஆரம்ப பாடசாலையாகும். இங்கு 69 மாணவர்கள் கல்வி பயில்கின்றார்கள். 04 ஆசிரியர்கள் கடமை புரிகின்றனர்

இவ்வாறான நிலையில் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் புதிய இடமாற்ற சூத்தித்தின் படி ஒரே

குடும்பத்தை சேர்ந்த அதிபர் தரம் 111 கொண்ட மகன் அதிபராகவும் அவரின் சிரிய தந்தை அதிபர் தரம் 11

கொண்ட அப்பா உப அதிபராகவும் இடமாற்றம் பெற்றுள்ளார்.

மலையத்தின் பாடசாலை ஒன்றில் மகன் அதிபர்-தந்தை உப அதிபர் – குடும்ப ஆட்சி புதிய சூத்திரம்

மலையக பாடசாலைகளில் அதிபர்கள் பற்றாகுறையும் ஆசிரியர் பற்றாக்குறையும் அதிகமாக நிலவி வருவது

யாவரும் அறிந்த விடயம். இந் நிலையில் இருக்கும் கல்வி வளங்களை முறையாக பிரித்து அனைத்து தோட்ட

மாணவர்களுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டியது கட்டாயமானதாகும். சாதாரணமாக 69 மாணவர்கள் கல்வி

கற்கும் பாடசாலை ஒன்றுக்கு அதிபர் தரம் மூன்றும் அதிபர் தரம் இரண்டையும் கொண்ட இருவரை நியமிப்பது எந்த

அளவிற்கு பொருத்தமானதாகும். அதிலும் அதிபர் தரம் இரண்டு உள்ள ஒருவரை உப அதிபராகவும் அதிபர் தரம்

மூன்று உள்ளவரை அதிபராகவும் ஒரே பாடசாலையில் கடiமாற்றுவது எந்த அளவிற்கு பொருத்தமானதாகும். அதிலும் அப்பாவும் மகனும்.

இந்த நியமனங்கள் அனைத்தும் மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவின் ஊடாகவே மேற்

கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பாடசாலைக்கு பொறுப்பாக கம்பளை கல்வி வலயம் காணப்பட்ட போதும்

இதன் உடன் எந்த ஒரு தொடர்புகளும் இல்லாமல் இந்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. கம்பளை

வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களின் வருடாந்த இட மாற்றம் இடமாற்ற சபையின் ஊடாக மேற்க்

கொள்ளபட வேண்டிய நிலையில் வலயத்தின் அனுமதி இன்றி சர்வதிகார போக்கில் மத்திய மாகாண கல்வி

திணைக்களத்தின் தமிழ் பிரிவு அன்மை காலமாக மேற் கொண்டு வருகின்றன. இதனால் இந்த பிரதேசத்தில்

மலையத்தின் பாடசாலை ஒன்றில் மகன் அதிபர்-தந்தை உப அதிபர் – குடும்ப ஆட்சி புதிய சூத்திரம்

கல்வித்துறையில் ஒரு ஸ்தீரமற்ற தன்மையும் ஒரு தளம்பல் நிலையும் ஏற்பட்டு உள்ளது.

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தின் தமிழ் பிரிவு மேலும் அதிகமான முறைகேடான அதிபர் ஆசிரியர்

இடமாற்றங்களை புஸ்ஸல்லாவ பிரதேச பாடசாலைகளில் மேற்க் கொண்டு வருகின்றது. இதனால் மாணவர்கள்

பெற்றோர்கள் பாதிப்படைந்து வருகின்றன. அதிபர் ஆசிரியர்களும் மன உலைச்சல்களுக்கும் உள்ளாகி

உள்ளனர். குறிப்பாக கல்வி அதிகாரிகள் அதிபர் ஆசிரியர்கள் தொடர்பில் எடுக்கப்படும் முடிவுகள்

அவர்களுக்கு சாதகமாகவும் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கு நன்மை தர கூடியதாகவும் இருக்க

வேண்டும். அதே போல் வலய கல்வி பனிமனையின் அனுமதியையும் பாடசாலை சமூகங்களின்

எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவனையாகவும் இருக்க வேண்டும். இதை விடுத்து தான் தோன்றி தனமாக நடக்க கூடாது.

இந்த விடயம் தொடர்பில கம்பளை கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது. இந்த

நியமனத்திற்கும் தாங்களுக்கும் எந்த விதமான பொருப்பும் இல்லை. நாங்களும் இதனை பொருத்தமானது அல்ல என்று

தான் கூறுகின்றோம். இந்த நியமனத்தை எங்களிடமும் கேட்காமல் மத்திய மாகாண கல்வி திணைக்கள தமிழ்

பிரிவே வழங்கியுள்ளது. நாங்கள் வலயத்திற்கு பொருப்பானவர்களாக இருக்கும் நிலையில் மாகாண கல்வி

திணைக்களம் பொருப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றது.

மலையத்தின் பாடசாலை ஒன்றில்
Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் இந்து ஆரம்ப பாடசாலைக்கு வேற்று மத அதிபர் இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம்

மலையகத்தில் இந்து ஆரம்ப பாடசாலைக்கு வேற்று மத அதிபர்
இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம்

மத்திய மாகாணம் கண்டி மாவட்டம் கம்பளை கல்வி வலயத்திற்கு உட்பட்ட இந்து ஆரம்ப பாடசாலை ஒன்றுக்கு

தலைமை அதிபராக வேற்று மதம் சார்ந்த ஒருரை அதிபராக நியமித்தமைக்கு மலையத்தின் பல்வேறு இந்து அமைப்புக்கள் கண்டனம் வெளியிட்டு உள்ளனர்.

இந்த கண்டனம் குறித்து அமைப்புகள் வெளியிட்டு உள்ள அறிக்கையில் மேலும் குறிபிட்டுள்ளதாவது. நாங்கள் வேறு

மதங்களுக்கு எதிரானவர்கள் அல்லர் வேறு மதங்களையும் அவர்களின் எண்ணங்களையும் மதிக்கின்றோம். குறிப்பாக

இந்த பாடசாலை இந்து ஆரம்ப பாடசாலையாகும் இதன் பெயரும் இந்து ஆரம்ப பாடசாலையே இந் நிலையில்

இந்துவானவர் இந்த பாடசாலையில் அதிபராக இருக்க வேண்டியது கட்டாயமாகதாகும். 90 சதவீதமான இந்து மாணவர்களே இங்கு கல்வி கற்கின்றார்கள்.

இந்த பாடசாலையில் நடக்கும் அனைத்து விடயங்களுக்கும் சமயம் சார்ந்த செயற்பாடுகளுக்கும்; அதிபரே முன் நிற்க

வேண்டும். சரஸ்வதி பூஜை மற்றும் மாணவர்களுக்கான வித்தியாரம்பம் போன்றவற்றுக்கு அதிபரே

முதன்மையானவர். இவரே இதனை முன் நின்று நடாத்த வேண்டும். இதற்கு இந்துவானரே பொருத்தமானவர்.

மலையகத்தில் இந்து ஆரம்ப பாடசாலைக்கு வேற்று மத அதிபர் இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம்

இவற்றுக்கு எல்லாம் வேர் ஒருவரை நியமிக்க முடியாது. பொதுவாக பிரதேச பெற்றோர்கள் பாடசாலைக்கு சென்று

தலைமை அதிபரிடமே தங்கள் பிள்ளைகளுக்கு எடு துவக்கவும் விரும்புவார்கள். இவ்வாறான நிலையில் இந்து அற்ற ஒருவர் இதனை எவ்வாறு செய்வார்.

குறிப்பாக எந்த ஒரு பாடசாலைக்கும் தலைமை அதிபர் ஒருவர் நியமிக்கும் போது அந்த பாடசாலையின்

மாணவர்களின் பெருபாலனவர்களின் மதத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். அது எந்த மதமாக

இருந்தாலும் பரவாயில்லை இதே போல் வேறு மதங்களை கொண்ட பாடசாலைகளுக்கு இந்து அதிபர் ஒருவரை

நியமிக்க முடியுமா. இதனை யாரும் ஏற்றுக் கொள்வார்களா. இவ்வாறான நிலையில் இந்து பாடசாலை ஒன்றுக்கு வேற்று

மதத்தை சேர்ந்தவரை நியமித்தமைக்கு நாம் கண்டனம் தெரவிக்கின்றோம். இந் நிலையில் சம்பந்தபட்ட கல்வி

அதிகாரிகள் இதற்கு உரிய மாற்று நடவடிக்கையை எடுக்க வேண்டும். நாட்டில் நல்லினக்கம் சமாதனம் நிறைந்த புதிய

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இதில் இனங்களுக்கும்

மதங்களுக்கும் இடையில் முறுகள் நிலைகள் ஏற்படும் வகையில் அதிகாரிகள் பொறுப்பு இன்றி நடந்துக் கொள்ள

கூடாது. நன்கு சிந்தித்து சமூக நோக்குடன் செயற்ட வேண்டும். குறிப்பாக படித்தவர்கள் படித்தவர்கள் போல்

செயற்பட வேண்டும். என்று மேலும் அவர்களின் அறிக்கையில் கூறியுளள்னர்.

இந்த விடயம் தொடர்பில் பொருப்பான கம்பளை கல்வி வலையத்தின் கல்வி அதிகாரிகளை தொடர்பு கொண்ட

போது. இந்த நியமனத்திற்கும் தாங்களுக்கும் எந்த விதமான பொருப்பும் இல்லை. நாங்களும் இதனை பொருத்தமானது

அல்ல என்று தான் கூறுகின்றோம். இந்த நியமனத்தை எங்களிடமும் கேட்காமல் மத்திய மாகாண கல்வி

திணைக்களமே வழங்கியுள்ளது. நாங்கள் இந்த வலயத்திற்கு பொருப்பானவர்களாக இருக்கும் நிலையில்

மாகாண கல்வி திணைக்களம் பொருப்பற்ற வகையில் செயற்பட்டு வருகின்றது. இதற்கு காரணம் தமிழ் கல்வி

அமைச்சு இல்லாததும் தமிழ் பிரிவிற்கு அதிகாரிகள் பொருத்தமான இல்லாததும் தமிழ் பிரிவை யாரும் கண்டுக்

கொள்ளத நிலையுமாகும். இந் நிலை தொடருமானால் அடுத்த மாகாண சபை தேர்தல் நடைபெற்று எமக்கு என்னு

ஒரு தமிழ் கல்வி அமைச்சு கிடைத்து எமது மலையக கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு முன் பாதி இல்லாமல் போய்விடும் போல் இருக்கின்றது என்று கூறினர்.

மலையகத்தில் இந்து ஆரம்ப பாடசாலைக்கு வேற்று மத அதிபர் இதற்கு இந்து அமைப்புகள் கண்டனம்

எது எவ்வாறாயினும் தற்போது நாட்டில் ஏற்பட்டு உள்ள அரசியல் ஸ்தீரமிண்மை காரணமாக மாகாண அமைச்சுகள்

இல்லாததினால் இவ்வாறான நிலைகள் தோன்றி உள்ளன மத்திய மாகாணத்தை பொருத்த வரையில் மலையத்தின்

கல்விக்கு முக்கியமான ஒன்றாகும். மாகாண தமிழ் கல்வி அமைச்சு மலையக கல்வியில் முக்கியம் பெருகின்றது.

இதன் செயற்பாடுகள் தற்காலிகமாக இல்லாததினால் மலையக கல்வியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை

கவனத்தில் கொண்டு செயற்பட வேண்டியது அனைவரினதும் கடைமையாகும்.

மலையகத்தில் இந்து ஆரம்ப
Posted in இலங்கை செய்திகள்

மலையக தோட்ட தலைவர்களின் மகாநாடு

மலையக தோட்ட
தலைவர்களின் மகாநாடு

மலையக மக்கள் முன்னணியின் தோட்ட தலைவர்களின் மகாநாடு ஹட்டன் மலையக மக்கள் முன்னணியின் தமைமை காரியாலயத்தில் நடைபெற்றது

இந் நிகழ்வில் மலையக மக்கள் முன்னணியின் உயர் குழு அங்கத்தினர் தோட்ட தலைவர்கள் பேச்சாளர்கள் உட்பட

உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களும் கலந்துக் கொண்டார்கள்கள்

மலையக தோட்ட தலைவர்களின்
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியர் எம்.ரமேஸ்காந் அவர்களின் நுவரெலியா கலாளயத்தின் பரத நாட்டிய அரகேற்றம்

ஆசிரியர் எம்.ரமேஸ்காந் அவர்களின் நுவரெலியா கலாளயத்தின் பரத நாட்டிய அரகேற்றம்

ஆசிரியர் எம்.ரமேஸ்காந் அவர்களின் நுவரெலியா கலாளயத்தின் பரத நாட்டிய அரகேற்றம் நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் நடைபெற்றது . இந் நிகழ்விற்கு

பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும்

முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டதுடன் பெரும் தொகையான பார்வையாளர்களும் கலந்துக் கொண்டனர்

ஆசிரியர் எம்.ரமேஸ்காந் அவர்களின்
Posted in இலங்கை செய்திகள்

சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடை விதித்தமை- மகிழ்ச்சி விக்கி

சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடை விதித்தமை- மகிழ்ச்சி விக்கி

சவேந்திர சில்வா மற்றும் அவர் குடும்பத்தவருக்கு எதிராக அமெரிக்கா பயணத்தடை விதித்துள்ளமையை வடகிழக்கு

மாகாணத் தமிழ் மக்கள் வரவேற்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசின் செயலாளர் மைக் பொம்பியோவின் தீர்மானமாக போதிய

நம்பத்தகு சாட்சியங்களின் அடிப்படையில் கொடூரமான மனித உரிமை மீறல்களில் ஆணையிடும் பொறுப்பின்

அடிப்படையில் சில்வா ஈடுபட்டிருந்தார் என்று கண்டு சில்வாவை மதிப்புக்குரியவரற்ற ஒருவராக அடையாளம்

கண்டுள்ளதை நாம் மனப்பூர்வமாக மெச்சிப் பாராட்டுகின்றோம்.

2009ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் சில்வா சட்டத்திற்குப் புறம்பான சாகடித்தல்களை

நடத்துமாறு ஆணையிட்டார் என்பதற்கு ஆதாரபூர்வமான குற்றச்சாட்டுக்களை சனல் 4 ஆவணப்படுத்தியுள்ளது.

தொலைக்காட்சி மூலம் தரப்பட்ட அதன் அறிக்கையில், அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்

ஷ அனுப்பிய ஆணையை சில்வா இலங்கை இராணுவத்தின் 58வது படையணி அலுவலர்களுக்கு மறு

ஒலிபரப்பு செய்த போது பின்வரும் சில்வாவின் கட்டளையும் உள்ளடக்கப்பட்டுள்ளது- ´செய்யக் கூடியதைச் செய்க!

எவ்வாறாறெனினும் செய்க!….. (ஆனால்) முடிக்க வேண்டிய முறையில் அதை முடிவுக்குக் கொண்டு வரவும்!´ சில்வாவின்

இந்தக் கட்டளையானது தமிழ் மக்களின் பாரிய எண்ணிக்கையிலான படுகொலைகளுக்கு இடமளித்தது.

அது அப்பாவி பொது மக்களையும் சரணடைந்த போராளிகளையும் (கெட்ட பெயரெடுத்த வெள்ளைக்கொடி நிகழ்வு) உள்ளடக்கியது.

சில்வாக்கெதிரான அமெரிக்காவின் பயணத்தடை மற்றைய நாடுகளும் பின்பற்றக் கூடிய ஒரு காரியமாக

அமைகின்றது. இலங்கையில் படையணியினரால் ஆற்றப்பட்ட போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கெதிரான

குற்றங்கள், இனப்படுகொலைகள் சம்பந்தமாக சர்வதேச நாடுகள் வழக்குத் தொடர வேண்டிய அத்தியாவசிய கடப்பாட்டினை இந்தக் காரியம் கோடிட்டுக் காட்டுகிறது.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் தொடர் தீர்மானங்கள் பலவற்றை ஸ்ரீ லங்கா தொடர்ந்து நடைமுறைப்படுத்த

மறுத்துவந்துள்ளது. அந்தத் தீர்மானங்கள் கலப்பு முறையான நீதிமன்றங்களை உருவாக்கி

போர்க்குற்றவாளிகளை விசாரித்து தீர்ப்பு வழங்க வலியுறுத்தி வந்துள்ளன. சில்வாவை ஒரு துணிச்சலான

வீரன் என்று பூச்சடிக்கப் பார்ப்போர், அப்பாவிப் பொது மக்களுக்கு வேண்டுமென்றே பொய்யாகப்

பயங்கரவாதிகள் பட்டம் சூட்டிக் கொன்று தீர்த்தமை துணிச்சல் என்ற வார்த்தைக்குள்ளும் வீரத்தினுள்ளும் எவ்விதத்திலேனும் அடங்காதென்பதை உணர வேண்டும்.

துல்லியமான குற்றரீதியான பொறுப்புகளை சுமப்பவர்கள் என்று தெளிவாகக் காணப்படும் படையணியினர் யாவரும்

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் கட்டாயமாக விசாரிக்கப்பட வேண்டியவர்கள் அல்லது அவ்வாறு

விசாரிக்க வல்ல நியாயாதிக்கத்தினைக் கொண்ட மன்றமொன்றினால் விசாரிக்கப்பட வேண்டியவர்கள்.

ஐ.நா. பட்டயத்தின் VIIவது அத்தியாயத்தின் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் உலகளாவிய நியாயாதிக்கக்

கோட்பாட்டின் கீழ் மற்றும் றோம் நியதிச்சட்ட வரைவில் கையெழுத்திடாத நாடுகளின் குடிமக்கள் சம்பந்தமாக

குறித்த நியதிச்சட்ட ஏற்பாடுகளை அவர்கள் மீது நடைமுறைப்படுத்த கையாள வேண்டிய நடைபடிமுறை

போன்றவற்றின் கீழ் சர்வதேச சமூகம் வழக்குத் தொடர இருக்கும் அதிகாரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

தொடர்ந்து வந்த மூன்று இலங்கை அரசாங்கங்கள் பத்து வருடங்களுக்கு மேலாக குறித்த குற்றங்களை

விசாரிப்பதைத் தட்டிக் கழித்து வந்ததில் இப்பொழுதாவது சட்டத்தின் அதிகாரம் கட்டாயமாக நிலைநிறுத்தப்பட

வேண்டியுள்ளது. தமிழ் மக்களின் நீதிக்கான பயணத்தில் ஒரு முக்கிய கூட்டம் தற்பொது பரிணமித்துள்ளது. ´கள

களதே பள பளவே´ என்பது ஒரு சிங்களப் பழமொழி. முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும்´ என்பது அதன் அர்த்தம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வாவிற்கு பயணத்தடை
Posted in இலங்கை செய்திகள்

அண்ணன் மனைவியை கத்தியால் குத்திய தம்பி

அண்ணன் மனைவியை கத்தியால் குத்திய தம்பி

பூவரசன்குளம் பகுதியில் தனது வீட்டு பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு பிள்ளைகளின் தாயாகவும் ,தற்போது

கர்பிணியாகவும் உள்ள பெண் மீது கணவனின் தம்பி சரமாரி கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்

இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டுள்ளார் .

தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி ஓடிய குற்றவாளி தற்போது கைது செய்ய பட்டுள்ளார் .

அண்ணன் மனைவிக்கு தம்பி செய்த இந்த செயல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

அண்ணன் மனைவியை கத்தியால்
https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg
Posted in இலங்கை செய்திகள்

ரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி காணமல் போகும் என முழக்கம்

ரணில் கட்சியில் இருந்து விலகினால் கட்சி காணமல் போகும் என முழக்கம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியில் இருந்து விலகினால் கட்சி வீழ்ச்சியடைந்துவிடும் என பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

காலி நெலுவ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கட்சி தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்க எடுக்கும் தீர்மானங்களுக்கு தான் இணக்கம் தெரிவிக்கதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு தீர்வு வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

ரணில் கட்சியில் இருந்து
https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg
Posted in இலங்கை செய்திகள்

ரெலோவின் 50 ஆவது ஆண்டு நிறைவு கூட்டத்தில் புளொட் சித்தார்த்தன் கலந்து கொண்டமையால் அடிதடி

ரெலோவின் 50 ஆவது ஆண்டு நிறைவு கூட்டத்தில் புளொட் சித்தார்த்தன் கலந்து கொண்டமையால் அடிதடி;

ரெலோவின் 50 ஆவது ஆண்டு நிறைவு கூட்டத்தில் புளொட் சித்தார்த்தன் கலந்து கொண்டமையால் அடிதடி; வைத்தியசாலையில் ஒருவர் அனுமதி – இருவர் கைது

வவுனியாவில் இடம்பெற்ற ரெலோவின் 50 ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தில் இளைஞர்கள் சிலரிடையே ஏற்பட்ட குழப்பத்தால் ரெலோ உறுப்பினர் ஒருவர்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

நேற்று மாலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தமிழீழ விடுதலை இயக்கத்தின் ( ரெலோ) 50 ஆவது ஆண்டு நிறைவு தின நிகழ்வுகள் கட்சியின் தலைவரும், வன்னிப்

பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் நகரசபை கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் தமிழரசுக் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா, புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் உரையாற்றிக் கொண்டிருந்த போது மண்டப வாயிலுக்கு வந்த சில இளைஞர்கள் ரெலோவின்

கொடியை இறக்க முற்பட்டதாகவும் இதனையடுத்து ரெலோ உறுப்பினர்களுக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்டது.

இதன்போது அங்கு வந்த இளைஞர்கள் ரெலோவின் முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் குகன் அவர்களுடைய

படத்தை ஏன் முன்னுக்கு காட்சிப்படுத்தவில்லை எனவும், யங்ஸ்ரார் விளையாட்டுக் கழகத்தில் இரு இளைஞர்களை

புளொட் அமைப்பினர் சுட்டுக் கொன்றிருந்தனர். தற்போது புளொட் தலைவர் சித்தார்த்தனை கூப்பிட்டு விழா

செய்கிறீர்களா என தர்க்கம் விளைவித்தனர். அங்கு ரெலோ உறுப்பினர்களும் குழுமியதால் பதற்றம் ஏற்பட்டது.

அங்கு வந்த பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பொலிசாரின் துணையுடன் நிலமையை

கட்டுப்படுத்தியதுடன், தாக்கப்பட்டதாக கூறி ரெலோ உறுப்பினர் ஓருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் ரெலோவால் வவுனியா பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்ற போது அங்கு நின்ற அரச அதிகாரி ஒருவர் மாவை

சேனாதிராஜாவைப் பார்த்து இவர் ஏன் இங்கு வந்தவர். யார் இவரை கூப்பிட்டது என சத்தம் எழுப்பிய நிலையில்

ஏற்பாட்டாளர்கள் சமரசப்படுத்தி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

ரெலோவின் 50 ஆவது
https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg
Posted in இலங்கை செய்திகள்

தங்க கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

தங்க கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது

சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வர முற்பட்​ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, மாளிகாவத்த பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (17) காலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து வருகை தந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL

121 என்ற விமானத்தின் மூலம் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 12,874,848 ரூபா பெறுமதியான 1 கிலோ 400 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தங்க கடத்தலில் ஈடுபட்ட
https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் துப்பாக்கி சண்டை – ஒருவர் காயம்

இலங்கையில் துப்பாக்கி சண்டை – ஒருவர் காயம்

இலங்கை -வெலிவத்துகொட பகுதியில் மரம் நபர்கள் நடத்திய துப்பக்கி சூட்டில் சிக்கி ஒருவர் படுகாயமடைந்துள்ளனர் .

ஊந்துருளியில் வந்த இருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டின் போதே இவர் பாடு காயமடைந்த்துள்ளார் .

காயமடைந்தவர் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுளளனர் .

,மேலும் இந்த குற்ற செயலை புரிந்த ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்

இலங்கையில் துப்பாக்கி
https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg
Posted in இலங்கை செய்திகள்

மாட்டை அடித்து கொன்று எரித்த நபர் – வாலிபனின் பயங்கர செயல்

மாட்டை அடித்து கொன்று எரித்த நபர் – வாலிபனின் பயங்கர செயல்

இலங்கையில் மாடு ஒன்று திட்டம் ஒன்றுக்குள் நுழைந்துள்ளது ,இதனை கண்ணுற்ற அந்த தோட்டத்தின்

நபர் அந்த மாட்டை கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளார் ,

பின்னர் அதனை அங்கே வைத்து தீமூட்டி எரித்த்துளளார் .

மடு கத்தும் சத்தம் கேட்டு ஓடி சென்ற மாட்டின் உரிமையாளர் மாட்டை இவ்வாறு கோரமாக அடித்து எரியூட்டியதை கண்டு அதிர்ச்சி உற்றுள்ளார் .

இவர் வழங்கிய முறை பாட்டினை அடுத்து தற்போது கொலை குற்ற செயலை புரிந்த நபர் கைது செய்ய பட்டுளளார் .

இப்படியும் மனிதர்கள் ,இருக்கத்தான் செய்கின்றனர்

மாட்டை அடித்து கொன்று
https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg
Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டன் புயல் வெள்ளம் – மூவர் பலி – வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்

பிரிட்டன் புயல் வெள்ளம் – மூவர் பலி – வெள்ளத்தில் மிதக்கும் கார்கள்

பிரிட்டனை மையம் கொண்டு வீசி வரும் புயல் ,மற்றும் கனமழை காரணாமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வீடுகள் நீரில் மூழ்கின ,கார்கள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .

மேலும் ஐந்து லடசம் மக்கள் மின்சாரம் இன்றி தவிக்கின்றன சுமார் 30 ரயில்வே நிலையங்கள் போக்குவரத்து தடை பட்டுள்ளது

மீட்பு பணியில் 75 இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் .
இந்த அனர்த்தத்தில் சிக்கி பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

பல வீடுகள் உடைந்து வீழ்ந்துள்ளன ,தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .


இந்த புயலின் தாக்கம் நாளை வரை தொடரும் என அறிவிக்க பட்டுள்ளது

புயல் சுமார் 70 முதல் 100 மைல் வேகத்தில் வீசிய வண்ணம் உள்ளது

மேலும் 300 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,வேல்ஸ், ஸ்கொட்லாந்து பகுதியை பெருமளவில் பாதிக்க பட்டுள்ளது

பிரிட்டன் புயல் வெள்ளம்
https://www.youtube.com/watch?v=TzkGs7KdXhg
Posted in இலங்கை செய்திகள்

மலையகத்தில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் இந்தியா

மலையகத்தில் 14 ஆயிரம் வீடுகளை அமைக்கும் இந்தியா

இலங்கை மலைய கத்தில் வசித்து வரும் மலையக தமிழ் மக்களுக்கு இந்திய 14 ஆயிரம் வீடுகளை கட்டி கொடுக்க உறுதி மொழி அளித்துள்ளது .

அதன் பயனாக வெளி ஓயா பகுதியில்முதல் கட்டமாக 50 வீடுகள் கட்டி கொடுக்க பட்டுள்ளன .

வடக்கில் போரினால் பாதிக்க பட்ட மக்களுக்கு ஐம்பதாயிரம் வீடுகள் கட்டி கொடுக்க படும் என இந்தியா அறிவித்தது,

ஆனால் அதில் அரைவாசி கூட பாதிக்க பட்ட தமிழர்களுக்கு இதுவரை கிடைக்கவில்லை

அதுபோலவே இந்த செயலும் அமையலாம் என எதிர் பார்க்க படுகிறது

மலையகத்தில் 14 ஆயிரம் வீடுகளை
https://www.youtube.com/watch?v=8pRLsTKZEGo
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ தளபதி தடை – அமெரிக்காவுடன் இலங்கை அவசர பேச்சு

இராணுவ தளபதி தடை – அமெரிக்காவுடன் இலங்கை அவசர பேச்சு

இலங்கை இராணுவ தளபதி சவேந்திர சில்வா

அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அமெரிக்க அதிரடி

தடையை விதித்தது .

இதனை அடுத்து இன்று இலங்கை வெளியுறவனு

அமைச்சர் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவருடன்

அவசர பேச்சில் ஈடுபட்டுளளார் .

இந்த தடையை விலக்கும் படி இவர்களிடம் கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .

போர் குற்ற சாட்டில் சிக்கி தவித்துள்ள சவேந்திர சில்வாவின்

இந்த பயண தடை என்பது

இலங்கை அரசுக்கு போட பட்டுள்ள சுருக்கு கயிறாகும் ,இதில் பேச பட்ட விடயங்கள் தெரிவிக்க படவிலை

இராணுவ தளபதி தடை
https://www.youtube.com/watch?v=8pRLsTKZEGo
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

தமிழக மீனவர்கள் 11 பேர் இலங்கை கடற்படையால் கைது

இலங்கை – அனலைதீவு கடல் பகுதிக்குள் அத்து மீறி மீன்பிடியில் ஈடு பட்டார்கள் என் தெரிவித்து சுமார் 11

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது .

அவர்கள் பிடித்து வைத்திருந்த மீன் உள்ளிட்ட அணைத்து பொருட்களையும் சிங்கள படை அபகரித்து

சென்றுள்ளதுடன் கைதானவர்கள் விசாரணைகளின் பின் நீதிமன்றிலேமுன்னிலை படுத்தும் நகர்வில் ஈடுபட்டுள்ளது

புலிகள் அழிவின் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

தமிழக மீனவர்கள்
https://www.youtube.com/watch?v=8pRLsTKZEGo
Posted in இலங்கை செய்திகள்

கூத்தமைப்பு அரசுக்கு விலை போகாதாம் – கூவிய செல்வம்

கூத்தமைப்பு அரசுக்கு விலை போகாதாம் – கூவிய செல்வம்

தமிழ் தேசிய கூத்தமைப்பு ஒருபொழுதும் ஆளும் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல் பாடாது எனவும் ,தனது ஆதரவை

வழங்காது எனவே செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் .

இவரது இந்த பேச்சு தான் தேர்தலில் வென்றிட வேண்டும் என்பதான செயலின் ஒன்றாக பார்க்க படுகிறது

இம்முறை இவர் தனது ஆசனத்தை இழக்க கூடும் என்ற நிலையில் இவ்வாறு பேசி வருகின்றார் என மக்கள் மத்தியில் பேச படுகிறது

கூத்தமைப்பு அரசுக்கு விலை
https://www.youtube.com/watch?v=NCKg5q6sU-4
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற முயன்ற காவல்துறை அதிகாரி கைது

லஞ்சம் பெற முயன்ற காவல்துறை அதிகாரி கைது

இலங்கை காவல்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் லஞ்சம்

பெற முயன்ற பொழுது இரகசிய கண்காணிப்பு

காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார் .

2500 இரகசிய போலீசார் லஞ்சம் வாங்கும் போலீசாரை

கண்காணித்து வருவதாக தெரிவிக்க பட்டிருந்த நிலையில்

இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=NCKg5q6sU-4
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மூன்று சிறுமிகள் கற்பழிப்பு; மூவர் கைது

வவுனியாவில் மூன்று சிறுமிகள் கற்பழிப்பு; மூவர் கைது

வவுனியாவின் வெவ்வேறு பகுதிகள் மற்றும் மாங்குளம் ஆகிய இடங்களில் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரை கடந்த

பல நாட்களாக வன்புணர்வு செய்து வந்த குற்றச்சாட்டில் மூவரை உறவினர்களின் உதவியுடன் பொலிசார் கைது செய்துள்ளனர்.

குறித்த மூவரும் நேற்று வெவ்வேறு பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, வாரிக்குட்டியூர் பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்த

உறவினர் ஓருவர் பாலி யல் வன்பு ணர்வு மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் குறித்த சிறுமியின் உடலில்

மாற்றங்கள் ஏற்பட்டதை அவதானித்த பெற்றோர் சிறுமியை விசாரித்த போது தனக்கு நடந்த சம்பவங்களை
சிறுமி தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பெற்றோரால் பூவரசங்குளம் பொலிசில் நேற்று மாலை செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக

வன்புணர்வு குற்றச்சாட்டின் கீழ் உறவினரான 30வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேபோல், செட்டிக்குளம் பகுதியைச் சேர்ந்த 14வயது சி றுமி ஒருவரை கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்து

அவருடைய தந்தை பாலியல் வன்புணர்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த சிறுமியின் தாயார் செட்டிக்குளம் பொலிசில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக வ

ன்புணர்வு குற்றச்சாட்டில் குறித்த சிறுமியின் தந்தையான 41 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

மேலும், மாங்குளம் பகுதியில் 17 வயது யுவதி ஓருவர் கர்ப்பம் தரித்துள்ள நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான விசாரணையையடுத்து குறித்த சிறுமியின் தந்தைதான் 39 வயது நபரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

யுவதி மற்றும் இரு சிறுமிகள் உள்ளிட்ட மூவரும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிசார் அவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=NCKg5q6sU-4
Posted in இலங்கை செய்திகள்

வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட நபர் கைது

இலங்கை படுகொட பகுதியில் கொள்ளையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார்

மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு வழங்க பட்ட தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

கட்டு துவக்கு வைத்திருந்தவரை கைது செய்த பொலிஸ்

கட்டு துவக்கு வைத்திருந்தவரை கைது செய்த பொலிஸ்

இலங்கை பூந்தல பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி கட்டு துவக்கு வைத்திருந்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

கைதானவர் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளார் .

சட்டவிரோதமாக ஆயுதங்கள் வைத்திருந்தால் அவர்கள் கைது செய்ய பாடுவார்கள் என அரசு எச்சரித்திருந்த

நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

கட்டு துவக்கு வைத்திருந்தவரை
https://www.youtube.com/watch?v=NCKg5q6sU-4