தங்க கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது
சட்ட விரோதமான முறையில் தங்க பிஸ்கட்களை எடுத்து வர முற்பட்ட இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு, மாளிகாவத்த பகுதியை சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (17) காலை 7.30 மணியளவில் சென்னையில் இருந்து வருகை தந்த ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL
121 என்ற விமானத்தின் மூலம் குறித்த நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
குறித்த நபரிடம் இருந்து 12,874,848 ரூபா பெறுமதியான 1 கிலோ 400 கிராம் எடையுடைய தங்க பிஸ்கட்கள் 12 கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.







