ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

Spread the love

ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது

மினுவாங்கொடை பிரதேசத்தில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பொலிஸ் பிரதேசங்கள்

ஊடாக வாகனங்கள் மூலம் பயணிக்க முடிந்த போதிலும் அந்த பிரதேசங்களில்

வாகனங்களை நிறுத்த முடியாது என்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகண தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள பொலிஸ் பிரதேசங்களில் மீண்டும் அறிவிக்கும்

வரையில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

எவரேனும் திடீரென நோய்வாய்ப்பாட்டால் ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரம்

இன்றி வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முடியும் என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *