கொரோனாவால் – வெளிநாடுகளில் பணிபுரிந்த 64 இலங்கைப் பணியாளர்கள் மரணம்
வெளிநாடுகளில் பணிபுரிந்த 64 இலங்கைப் பணியாளர்கள், கொரோனாவால்
இதுவரை உயிரிழந்துள்ளனரென, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, ஜோர்தானில் உள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த இலங்கைப்
பணிப்பெண்ணொருவர், நேற்று முன்தினம் (1) கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில், உயிரிழந்துள்ளாரென, இலங்கை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாளரும் ஊடக பேச்சாளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தொழிற்சாலையில், பணிபுரியும் 350 க்கும் மேற்பட்ட இலங்கைப் பணியாளர்கள் கொரோனா
தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், இவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 2,600 இலங்கைப் பணியாளர்கள் வெளிநாடுகளில் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்






