Posted in இலங்கை செய்திகள்

பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை

பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை

கொவிட் தொற்றால் பிற்போடப்பட்ட 2021 ஆம் ஆண்டு பரீட்சைகளை நடத்துவதற்கான புதிய நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை மற்றும் கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சை ஆகியவற்றை நடத்துவதற்காக கல்வி அமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட திருத்தப்பட்ட குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக 01.11.2021 அன்று நடைபொற்ற அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

  1. கொவிட் – 19 பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடாத்துவதற்கான நேரஅட்டவணை

2021 ஆம் ஆண்டு கொவிட்-19 பெருந்தொற்று நிலைமையால் 06 மாதங்களின் பின்னர் முழுமையாக 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்காக 2021 ஒக்ரோபர் மாதம் 25 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளதுடன், கல்விப் பொதுத்தராதர (சாதாரண தர) மற்றும் கல்விப் பொதுத்தராதர (உயர்தர) மாணவர்களுக்காக 2021 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படவுள்ளன. அதற்கமைய, பரீட்சைகளில் தோற்றுவதற்காகவுள்ள மாணவர்களுக்கு பாடசாலைகள் திறக்கபட்;ட பின்னர் கல்வி நடவடிக்கைகளை பூரணப்படுத்துவதற்காக போதுமானளவு காலம் வழங்கப்பட வேண்டியுள்ளது. குறித்த விடயங்களைக் கருத்தில் கொண்டு 2021 ஆம் ஆண்டில் குறித்த பரீட்சைகளை நடாத்துவதற்கான திருத்தப்பட்ட நேர அட்டவணைகள் கல்வி அமைச்சர் அவர்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த நேர அட்டவணைகளுக்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது.

5 ஆம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை
2022 ஜனவரி மாதம் 22 ஆம் திகதி சனிக்கிழமை

கல்விப் பொதுத்தராதர (உயர்தரம்) பரீட்சை
2022 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்
2022 மார்ச் மாதம் 05 ஆம் திகதி சனிக்கிழமை வரை

கல்விப் பொதுத்தராதர (சாதாரண தரம்) பரீட்சை
2022 மே மாதம் 23 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம்
2022 யூன் மாதம் 01 ஆம் திகதி புதன்கிழமை வரை

Posted in இலங்கை செய்திகள்

இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இந்திய உயர்ஸ்தானிகர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தார்

இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே அவர்கள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்களை பாராளுமன்றத்தில் நேற்று (01) சந்தித்தார்.

பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அவர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தார்.

கொவிட் நிலைமையை வெற்றிகரமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்தமை தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் அரசாங்கத்துக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் இலங்கைக்கு வழங்கிவரும் ஒத்துழைப்புக்கள் தொடர்பில் சபாநாயகர் தனது நன்றியை தெரிவித்ததுடன், இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளிலும் மேலும் விருத்தி செய்வது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது

Posted in இலங்கை செய்திகள்

இரண்டு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல் – பெரும் விபத்து

இரண்டு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல் – பெரும் விபத்து

இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரிய அளவில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

    Posted in இலங்கை செய்திகள்

    மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

    மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

    திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பிரதேசத்தில் சிறிய

    லொறியொன்றில் நேற்று (31) அதிகாலை 4.30 மணியளவில் இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 16 மாடுகளை தாம் மீட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

    அத்தோடு, மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி பரிமுதல் செய்யப்பட்டு, லொறியின் ஓட்டுநரையும் உதவியாளரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    மீட்கப்பட்ட 16 மாடுகளில் 10 ஆண் மாடுகளும் 6 பசுக்களும் அடங்குவதாகவும் கைது

    செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் ஒன்று கூடி பேசிய கோட்டா அடிமைகள்

      யாழில் ஒன்று கூடி பேசிய கோட்டா அடிமைகள்


      வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா அவர்களுக்கும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட

      ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்று பு நேற்று (31.10.2021) இடம்பெற்றது.


      இச்சந்திப்பில், புதிய ஆளுநர் அவர்களுக்கு அங்கஜன் இராமநாதன் அவர்கள் வாழ்த்துக்களை

      தெரிவித்ததுடன், வடக்கில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக இருவரும் கலந்துரையாடினார்கள்.

        Posted in இலங்கை செய்திகள்

        நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

        நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

        நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

        குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் இலங்கைக்கு அண்மையாகக் காணப்படுகின்றது.

        மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

        நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

        இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

        மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

          Posted in இலங்கை செய்திகள்

          கோட்டபாய ஒரு முட்டாள் – முழங்கிய சிறிதரன் எம்பி

          கோட்டபாய ஒரு முட்டாள் – முழங்கிய சிறிதரன் எம்பி

          இலங்கையில் ஆளும் இனவாதியும் தமிழ் இன படுகொலையாளியும் ,ஊழல்வாதியுமாக விளங்கி வரும் கோட்டாபய அடிப்படை கல்வி ,மற்றும் அரசியல் அறிவு அற்ற முட்டாள் என யாழ்ப்பாண

          பாரளுமன்ற உறுப்பினரும் விடுதலை விரும்பியும் சமுக நல அக்கறை கொண்ட மா மனிதன் சிறிதரன் அவர்கள் முழங்கியுள்ளார்

          வன்னி அல்லது வடக்கு மாகாணம் என்பது விவசாயிகளை உயிர் நாடியாக உள்ள பகுதியாகவும்

          இந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடி அதிகம் விவசாயத்தை நம்பி வாழ்கின்றவர்களாகும்

          ,அதன் மண்ணும் ,அதன் வளமும் அத்தகைய ஒற்றுமை கொண்ட பண்பாட்டு வருமானத்தை கொண்ட ஒன்றாக உள்ளது

          அவ்வாறான மக்களின் வயிற்றில் சேறடிக்கும் முகமாக கோட்டபாய இந்த உர வளங்களை தடுத்துள்ளதாக அவர் முழங்கியுள்ளார் ,சேதனை பசளை உருவாக்கத்தில் முழுமையாக முன்னேற

          மறுத்து விவசாய மக்கள் அரசு அலுவலங்களில் வேலை பார்க்கும் ஒரு அடி முட்டாள் தனத்திற்கு

          வைத்துள்ளது இந்த செயல் என அவர் தொலைக்காட்சி நிகழ்ச்கை ஒன்றில் பேசும் போது மன வேதனையுடன் உணர்ச்சி மேலிட காட்டமாக தெரிவித்துளளார்

            Posted in Uncategorized இலங்கை செய்திகள்

            இன்று முதல் பஸ் ரயில் சேவைகள் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணம்

            இன்று முதல் பஸ் ரயில் சேவைகள் கொழும்பில் இருந்து யாழ்நோக்கி பயணம்

            கொரனோ நோயின் பரவல் காரணமாக தடுக்க பட்ட பேரூந்து ரயில் சேவைகள் மீண்டும்

            மாகாணங்களுக்கு இடையில் ஆரம்பிக்க பட்டுள்ளது

            வரையறைக்கு உட்படுத்த பட்டு இந்த சேவைகள் ஆரம்பிக்க படும் எனவும் ,பின்னர் முழுமையாக

            செயல் நடவடிக்கை எடுத்து செல்ல படும் என தெரிவிக்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு நாள்!

              மாவீரன் பண்டாரவன்னியன் நினைவு நாள்!


              வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியன் முல்லைத்தீவு கோட்டையை 1803 ஆம் ஆண்டு ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி

              வெற்றிகொண்ட 219 ஆவது ஆண்டு நாள் இன்று.

              1803 இல் ஒக்டோபர் 31 கப்டன் “ஹென்றிபேக்” கற்சிலைமடுவில் பண்டாவன்னியன்

              தோற்கடிக்கப்பட்டதாக சொல்லும் நடுகல்லும் தற்போதைய இலங்கைப் படையினரால்

              உடைக்கப்பட்ட நிலையில் இன்றும் ஒட்டிசுட்டானில் காணப்படுகிறது.

              1803 ல் தோற்கடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பண்டாரவன்னியன் அதற்குப் பிறகும்

              சிலபோர்களை நடத்தி 1811ல் வீரமரணமடைந்தான் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் இன்றும் உலாவுகின்றன.

                Posted in இலங்கை செய்திகள்

                தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு

                தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ் சிறையில் அடைப்பு

                இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்ற சாட்டில் சிங்கள கடல்

                படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் 23 பேர் யாழ்ப்பாண சிறையில் அடைக்க

                பட்டுள்ளனர்

                நீதி விசாரணைகள் முடிவில் இவர்கள் விடுதலை செய்ய படுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

                  நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை

                  இலங்கையில் இன்று முதல் பாரிய மழை வீழ்ச்சி காணப்படும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது .

                  இதனால் வெள்ள பெருக்கு மற்றும் இடி மின்னல் ஏற்பட கூடிய அபாயம் உள்ளதல் மக்களை விழிப்பாக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    யாழ்ப்பாணத்தில் குழாய் நீர் பிரச்சினைக்கு தீர்வு

                    யாழ்ப்பாணத்தில் குழாய் நீர் பிரச்சினைக்கு தீர்வு

                    வடக்கு வாழ் மக்கள் கடந்த பல வருடங்களாக முகங்கொடுத்து வருகின்ற குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக கடல் நீரிலிருந்து பரிசுத்த குடிநீரினை பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டத்தினை

                    ஆரம்பித்தல் மற்றும் நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் மயப்படுத்தும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றதாக கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த அவர்கள் தெரிவித்தார்.

                    இதுவரை யாழ். மாவட்டத்தில் பொதுமக்களில் 14 சதவீதமானவர்களுக்கும், யாழ்ப்பாண நகரத்தில் 04 சதவீதமானவர்களுக்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நீர் வழங்கல் முறைமைக்கு பதிலாக இவ்வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணத்தில் வாழும் அனைத்து பொதுமக்களுக்கும்

                    சுத்தமான குடிநீர் கிடைக்குமெனவும், நயினாதீவு உட்பட 03 தீவுகளில் வாழும் மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை மக்கள் மயப்படுத்தியமையினால் 3000 குடும்பங்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக் காட்டினார்.

                    அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த, ‘வடக்கில் தாகத்திற்கு முற்றுப்புள்ளி’ என்ற தலைப்பில் இன்று (29) இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலில் கலந்து கொண்டே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்தார்.

                    நயினா தீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து கடல் நீரினை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்காக ஒரு கியுபிக் மீட்டர் நீருக்கு, அதாவது 1000 லீட்டர் நீருக்கு 120 ரூபா நிதி

                    செலவாகின்றது. எனினும் அச்சுத்தமான நீரானது ஒரு கியுபிக் மீட்டரானது 10 ரூபாவுக்கே பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றது.

                    எனினும் இரணைமடு குளத்திலிருந்து நீரினை பெற்று வடக்கு வாழ் மக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடிந்தால் இதனை விடவும் குறைந்த தொகைக்கு சுத்தமான நீரினை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும். எனினும் அதற்கு பல்வேறு அரசியல் குழுக்கள் தடையாக

                    இருப்பதனால் கடல் நீரினை சுத்திகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் அதற்கு அதிக தொகையினை செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

                    சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக ‘2025ல் அனைவருக்கும் குடிநீர்’ பெற்றுக் கொடுக்கும் கொள்கையின் மற்றுமொறு வேலைத்திட்டமொன்றாக வடக்கு வாழ் மக்களுக்காக சுத்தமான நீரினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டத்தினை

                    அறிமுகப்படுத்தலாம். இலங்கையில் சுத்தமான குடிநீரின்றி வாழும் 46.6 சதவீதமானவர்களுக்கு அடுத்து வரும் 03 வருடங்களிற்குள் சுத்தமான குடிநீர் பெற்றுக் கொடுக்கப்பட்டு பூர்த்தி செய்யப்படும் என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

                    இதற்காக நீர்வழங்கல் அமைச்சினால் சுத்தமான குடிநீர் தேவைக்கு தீர்வுகள் பெற்றுக் கொடுக்கும் நேர்த்தியான திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குடிநீர் தேவையினை பூர்த்தி செய்வதற்காக துரித தீர்வுகள், நடுத்தர தீர்வுகள் மற்றும் நீண்ட கால தீர்வுகள் என தீர்வுகளை

                    இனங்கண்டு தீர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. வட மத்திய மாகாணம் போன்ற நீரினால் பொதுமக்கள் முகங்கொடுக்கின்ற பிரச்சினைகளுக்கு நனோ தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி சுத்தமான குடிநீரினை பெற்றுக் கொடுக்கும் திட்டம் துரித தீர்வாக செயற்படுத்தப்படுகின்றது.

                    நடுத்தர தீர்வாக பிரதேசங்களில் காணப்படுகின்ற நீர் ஊற்றுகள், நீர்தேக்கங்கள், கால்வாய்கள் மற்றும் ஆறுகளின் நீரினை சுத்திகரித்து பொதுமக்களுக்கு வழங்கப்படுகின்றது. இவ்வனைத்து திட்டங்களும் வெற்றியடைவதற்காக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, தேசிய சமூக நீர்

                    வழங்கல் திணைக்களம் மற்றும் நீர்வழங்கல் சபை ஆகிய நிறுவனங்களின் ஒத்துழைப்பும் நீர் வழங்கல் அமைச்சுக்கு கிடைப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
                    மேலும், பின்தங்கிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீரினை பெற்றுக்

                    கொடுக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. சில ஊடக நிறுவனங்கள் இச்செயற்பாடுகள் தொடர்பில் பொதுமக்களை திசைதிருப்பும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. எனினும் இனங்காணப்பட்ட 4332 சமூக நீர் சங்கங்களை ஒன்றிணைத்து அவர்களது

                    பிரதேசங்களில் காணப்படுகின்ற குடிநீர் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுக்கும் திட்டமொன்றும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்து வருகின்ற 03 வருடங்களிற்குள்

                    அனைத்து வகையான குடிநீர் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டு 2025ம் ஆண்டில் அனைவருக்கும் குடிநீரினை பெற்றுக் கொடுப்பதற்கு எமது அமைச்சு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக

                    இராஜாங்க அமைச்சர் சனத் நிஷhந்த தெரிவித்தார்.
                    இச்செய்தியாளர் சந்திப்பிற்குரிய காணொளிகளை கீழ்க்காணும் எiளாஅiவாய ஊடழரன இணைப்பினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பிக்கு மரணம் -கும்பிட்ட கோட்டா

                      பிக்கு மரணம் -கும்பிட்ட கோட்டா

                      காலஞ்சென்ற களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் கொழும்பு மற்றும் சிலாபம் மாவட்ட நீதிமன்றங்களின் சங்கசபைத் தலைவரும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவின்

                      தலைவரும், அக்கமஹா பண்டிதர் கலாநிதி அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் பூதவுடலுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

                      தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள பேலியகொட வித்தியாலங்கார பிரிவெனாவுக்கு இன்று (29) பிற்பகல் சென்ற ஜனாதிபதி அவர்கள், பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதுடன்,

                      விஹாரையில் கல்வி பயிலும் தேரர்கள் மற்றும் உறவினர்கள் உள்ளிட்ட நிர்வாக சபையினருக்கு, தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்தார்.

                      அதி. வணக்கத்துக்குரிய வெலிமிட்டியாவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகளை, பூரண அரச அனுசரணையுடன் நடத்துமாறு, ஜனாதிபதி அவர்கள் ஆலோசனை வழங்கியிருந்தார்.

                      ஜனாதிபதி அவர்கள், அந்த ஏற்பாடுகள் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன், இறுதிக் கிரியை ஏற்பாட்டுக்கு குழுத் தேரர்களுடன் கலந்துரையாடினார்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        வடமாகாண விவசாய அறுவடைகளை தென்பகுதிக்குக் கொண்டு செல்ல விஷேட ரெயில்

                        வடமாகாண விவசாய அறுவடைகளை தென்பகுதிக்குக் கொண்டு செல்ல விஷேட ரெயில்

                        வடமாகாணத்தில் சேதனப் பசளை பயன்பாட்டின் மூலம் உற்பத்தி செய்யப்படும் விவசாய

                        அறுவடை, மீன் மற்றும் கருவாடு போன்றவற்றை தென்பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக விஷேட ரெயில் ஒன்றை ஈடுபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                        வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கும் ரெயில்வே பொது முகாமையாளருக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

                        வடமாகாணத்தில் மீனவர்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கவனம் செலுத்தியிருப்பதாக மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

                        வடமாகாணத்தில் சகல துறைகளையும் இலக்காகக் கொண்டு அபிவிருத்தித் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.

                        மாகாண மக்கள் புரிந்துணர்வுடன் செயற்படுவதற்கான பின்புலம் ஏற்படுத்தப்படுமென்றும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா மேலும் தெரிவித்துள்ளார்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          வறிய மக்களுக்கு ஆடுகள் வழங்கிய கனடா தமிழர்கள்

                          வறிய மக்களுக்கு ஆடுகள் வழங்கிய கனடா தமிழர்கள்

                          கனடாவில் வாழ்ந்து அமரத்துவம் அடைந்த மரியாம்பிள்ளை அந்தோனிப்பிள்ளை அவர்களின் 100ஆவது பிறந்தநாளை முன்னிட்டு “கனடா வாழவைப்போம்” அமைப்பினால் வாதரவத்தை

                          அக்காச்சி குடியிருப்பில் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள் ஆடு

                          வளர்ப்பிற்காக ஆடுகள், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

                          இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினருடன் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் சுரேன் கௌரவ உபதவிசாளர் மு.கயன் அதிபர்களான திரு பத்மதாசன் , திரு கோகுலன்

                          மற்றும் வட்டார கௌரவ உறுப்பினர் இரத்தினசிங்கம் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின்

                          கௌரவ உறுப்பினர் ரமேஷ் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டன

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கை கடற்படையினால் பானமவில் நிறுவப்பட்ட புதிய நீர் சறுக்கல்

                            இலங்கை கடற்படையினால் பானமவில் நிறுவப்பட்ட புதிய நீர் சறுக்கல்


                            பானமவில் ஒரு புதிய நீர் சறுக்கல் விளையாட்டு கிளப் இலங்கை கடற்படையினரால் நிறுவப்பட்டுள்ளது.

                            பானம கடற்கரையில் நிறுவப்பட்ட இந்த புதிய வசதிகள், தென்கிழக்கு கடற்படைப் பிராந்திய

                            கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த கமகேவினால் இம்மாதம் 25ம் திகதி வைபவரீதியாக திறக்கப்பட்டதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

                            இப்பகுதியில் நீர்சறுக்கள் விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் நிறுவப்பட்டுள்ள இந்த

                            வசதிகள் கடற்படையின் வளம் மற்றும் நிபுணத்துவமிக்க ஆளணியினை பயன்படுத்துவதன் மூலம் கட்டமைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            கிழக்கு கரையோரத்தில் பானம ஒரு பிரபலமான சுற்றுலாத்தலமாகவும், நாட்டின் நீர் சறுக்கல் விளையாட்டிற்கு புகழ்பெற்ற இடமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

                              Posted in இலங்கை செய்திகள்

                              விபத்தில் சிக்கிய பேரூந்து – 13 பேர் காயம்

                              விபத்தில் சிக்கிய பேரூந்து – 13 பேர் காயம்

                              இலங்கை மாத்தளை பகுதியில் இருந்து பயணிகளை காவிய படி பயணித்த பயணிகள் பேரூந்து

                              சாலையை விட்டு விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                              ,மேலும் பேரூந்து பலத்த சேதங்களை உள்ளாகியுள்ளது

                              சாரதியின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது

                                Posted in இலங்கை செய்திகள்

                                சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

                                சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு

                                சந்தையில் சீமெந்து தட்டுப்பாடு மேலும் இரண்டு மாதங்களுக்கு காணப்படும் என சீமெந்து இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

                                விடயத்திற்கு பொறுப்பான அமைச்சருடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் சீமெந்து விலையை அதிகரிக்க எதிர்ப்பார்ப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

                                தொடர்ந்தும் கருந்து தெரிவித்த அவர்கள்,

                                “இரண்டு நாட்களில் இதனை நிறுத்த முடியாது. எப்படியும் 2 மாதங்களாவது செல்லும். சீமெந்து தட்டுப்பாட்டிற்கு காரணம் டொலர் பிரச்சினையாகும். இதனால் சிறு விலை அதிகரிப்பு ஏற்படக்கூடும்.”

                                சமீபத்தில் சீமெந்து மூடை ஒன்றின் விலை 93 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மூடை சீமெந்து 1,098 ரூபாவுக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.

                                எவ்வாறாயினும், உரிய வகையில் சீமெந்து கிடைப்பதில்லை எனவும், அவ்வாறு கிடைக்கும் சீமெந்து பல்வேறு விலைகளின் கீழ் கிடைப்பதாகவும் விற்பனையாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

                                “ஒரு தடவைக்கு 100 சீமெந்து மூடைகள் தான் கிடைக்கின்றன. 10 நிமிடங்களில் அவை முடிந்து விடுகின்றன.”

                                இதன் காரணமாக கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ள தரப்பினர், சீமெந்து கல், பூந்தொட்டி மற்றும் பூங்கா அலங்கார பொருட்கள் உற்பத்தியாளர்கள் வருமான வழித்தடங்கள் தடைப்பட்டுள்ளதால் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

                                இந்நிலையில், சீமெந்து இறக்குமதியாளர்கள் நேற்று (27) பிற்பகல் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவை சந்தித்து கலந்துரையாடி இருந்தனர்.

                                பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர்,

                                ´´எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் சந்தைக்கு சீமெந்தை பெற்றுக் கொடுக்க இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தி நிறுவனஙக்ள் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்”. என்றார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்

                                  வீதியில் மிதக்கும் மனித சடலங்கள் – எகிறும் கொலைகள்


                                  எட்டியாந்தோட்டை- மலல்பொல கிராம உத்தியோகத்தர் பிரிவின் அமுஹேன பிரதேசத்திலுள்ள

                                  காட்டுப் பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் நேற்று (26) மீட்கப்பட்டுள்ளது.

                                  குறித்த சடலம் அடையாளம் காணப்பட முடியாத வகையில் பழுதடைந்துள்ளதாகவும் எட்டியாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

                                  சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த ருவன்வெல்ல பதில் நீதவான் நிமல் புஸ்பகுமார, மரண

                                  விசாரணையை நடத்தியதுடன், நேற்றைய தினமே சடலம் கரவனெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

                                  சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், இச்சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எட்டியாந்தோட்டை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    யாழ்ப்பாணத்தில் -கோடாலி வெட்டு

                                    யாழ்ப்பாணத்தில் -கோடாலி வெட்டு

                                    இளவாலை – உயரப்புலம் பகுதியில், நேற்று (26) இரவு, குடும்பத்தகராறு கோடாரி வெட்டில் முடிந்ததில், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


                                    சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

                                    அப்பகுதியை சேர்ந்த 18 வயதுடைய அளைஞனும்; 30 வயதுடைய நபருமே, இவ்வாறு கோடாரி வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

                                    உறவினர்களுக்கு இடையிலான முரண்பாடு நேற்றைய தினம் இரவு முற்றிய நிலையிலேயே,

                                    கோடாரி வெட்டு தாக்குதல் நடைபெற்று உள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

                                    சம்பவம் தொடர்பில், இளவாலை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.