Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்
இலங்கை உதைபந்தாட்ட வீரர் – மர்ம மரணம்
இலங்கையோ உதைபந்தாட்ட வீரரான டக்சன் புஸ்லாஸ் அவரது வீட்டில் இறந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார்
இவரது மர்ம மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
இதுவரை இவரது மரணத்திற்கான காரணம் தெரியவரவில்லை
எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது
எட்டு தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது
இலங்கை தலை மன்னார் கடல்பகுதியில் அத்துமீறி மீன்படியில் ஈடுபட்டனர் என்ற
குற்ற சாட்டில் தமிழகத்தை சேர்ந்த
எட்டு மீனவர்களை சிங்கள கடற்படை கைது செய்துள்ளது
இவர்கள் வைத்திருந்த மீன்களையும் இராணுவம் சுருட்டி சென்றுள்ளது
மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி
மலையக பல்கலைகழக மாணவர்களுக்கான இலவச மடிக்கணணி
“கல்விக்கு கரம் கொடுப்போம்” என்ற தொனிபொருளில் புஸ்ஸல்லாவ குளோபல் நிறுவனத்தினால் 20.02.2022 ஆரம்பிக்கப்பட்ட செயற்திட்டதின் ஊடாக மலையகத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு மடிக்கணணி வழங்குதலில்
முதல் கணணியினை புஸ்ஸல்லாவ சரஸ்வதி தேசிய கல்லூரியில் 2017 கலை பிரிவில் கல்வி பயின்று கிழக்கு பல்கலைகழகத்தில் “கல்வியியல் சிறப்பு கற்கைநெறிக்கு” தெரிவாகி கல்வி பயிலும் பட்டப்பயில் மாணவி பெருந்தோட்ட தொழிலாழியின்
பி;ள்ளை விஜயன் கௌசல்யா அவர்களுக்கு அதன் ஏற்பாட்டாளர் ஊடகவியளாளர் பா.திருஞானம் அவர்களினால் இன்று (27) வழங்கி வைக்கபட்டுள்ளது.
இந்த செயற்திட்டத்திற்கு மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் உப செயலாளர் பி.சிறிகாந் அவர்களின் ஏற்பாட்டில் கொழும்பு செட்டியார் தெருவை சேர்ந்த வர்த்தகர்
எஸ்.சுரேஷ் அவர்கள் ஒரு கணணியையும் பெயர் குறிப்பிட விரும்பாத அன்பர் ஒருவர் ஒரு கணணியையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.
இந்த இரு கணணிகளில் ஒரு கணணி மேற்படி மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் மற்றயது புஸ்ஸல்லாவை இலக்கம் 460/8/1 அமைந்துள்ள குளோபல் நிறுவனத்தில் பல்கலைகழக மாணவர்கள் பாவிக்க கூடிய வகையில் பிரின்டர் உட்பட இன்டர்நெட்
வசதியடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனை பல்கலைகழக மாணவர்கள் இலவசமாக நேரில் வந்து விடுமுறை காலங்களில் பாவிக்கலாம்.
மேலும் இந்த செயற்திட்டத்தில் இணைந்து மலையக பல்கலைகழக மாணவர்களுக்கு மடிக்கணணிகளை வழங்கி உதவ கூடியவர்கள் எம்முடன் இணையுமாறு கேட்டுக் கொள்ளபடுவதோடு. மடிக்கணிகள் தேவையான மலையகத்தை சேர்ந்த பல்கலைகழக
பெருந்தோட்ட பட்டப்பயில் மாணவர்கள் “குளோபல்” இல 460/8/1 நுவரெலியா வீதி புஸ்ஸல்லாவ என்ற விலாசத்திற்கு எம்முடன் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்
கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். எமக்கு கணணிகள் கிடைப்பதற்கு ஏற்பவும் மாணவர்களின் பாட அவசியப்பாட்டுக்கு அமைய வழங்கப்படும்.
குறிப்பாக மலையத்தில் இருந்து பல்கலைகழகத்திற்கு தெரிவாகியுள்ள பட்டப்பயில் மாணவர்களில் பலர் பொருளாதா சிக்கல்கள் காரணமாக பலர் தங்கள் கல்வியினை இடை நிருத்தி வருகின்றனர். மலையகத்தின் சனத்தொகைக்கு ஏற்ப 1750 மாணவர்கள்
பல்கலைகழகங்களுக்கு தெரிவு செய்யப்பட வேண்டும். இருந்தும் தற்போது சுமார் 450 மாணவர்களே தெரிவு செய்யப்படுகின்றார்கள். இவர்களிலும் பொருளாதார பிரச்சனை காரணமாக யாரும் இடை விலகள் ஏற்பட கூடாது என்பதற்காக இந்த “கல்விக்கு கரம் கொடுப்போம்” செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உக்கிரேனில் இருந்து ரோமேனியாவுக்குள் தப்பி ஓடிய இந்தியர்கள்
உக்கிரேனில் இருந்து ரோமேனியாவுக்குள் தப்பி ஓடிய இந்தியர்கள்
உக்கிரேன் மீது ரசியா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில்
கீவ் நகரில் தங்கி இருந்த பல்நாட்டு மக்கள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர்
இவ்விதம் பிரிட்டனை சேர்ந்த ஆயிரம் பேர் ரொமேனியாவுக்குள் எட்டு கிலோ மீட்டர் நடந்து சென்று எல்லையை கடந்து நுளைந்துள்ளனர்
இவர்களில் அதிகமானவர்கள் இந்திய ,இலங்கை மற்றும் ஆசிய நாட்டவர்கள் என்பது இங்கே குறிப்பிட தக்கது
மனைவி இறந்த துயரில் கணவனும் மரணம்
மனைவி இறந்த துயரில் கணவனும் மரணம்
மனைவி இறந்து 18வது நாள் அவரது கணவரும் உயிரிழந்த விடயமானது அந்த குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் மிகுந்த சோகத்தை ஆழ்த்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றிரவு (25) அராலி மத்தி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
செல்வரத்தினம் பரமேஸ்வரி என்பவர் திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக யாழ்.
போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 2022.02.07 அன்று உயிரிழந்தார்.
பின்னர் நேற்றைய தினம் சிறந்த உடல் ஆரோக்கியத்தோடு இருந்த அவரது கணவர், மகளிடம் உணவு வாங்கி சாப்பிட்டு விட்டு கதிரையில் உட்கார்ந்திருந்தவாறு உயிரிழந்துள்ளார்.
சிற்றம்பலம் செல்வரத்தினம் என்பவரே நேற்றையதினம் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
திடீர் திடீரென ஏற்பட்ட இவ் இரண்டு மரணங்களும் அக் குடும்பத்தையும் அப்பகுதி மக்களையும் மீளா துயருக்குள் தள்ளியுள்ளது.
பெண் போல் மிமிக்கிரி செய்து பண மோசடி
பெண் போல் மிமிக்கிரி செய்து பண மோசடி
அக்கரைப்பற்று இளைஞன் ஒருவனிடம் தனது குரலால் பெண்கள் போல மிமிக்கிரி குரலில் பேசி காதலிப்பது போல நடித்து பணமோசடியில் ஈடுபட்ட மட்டக்களப்பு ஆயித்தியமலையைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் (24) குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக கொக்குவில் பொலிசார் தெரிவித்தனர்.
ஆயித்தியமலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் முகநூல் பக்கத்தில் இருந்த அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் மெசேஞ்சர் ஊடாக உரையாடி அவரது தொலைபேசி இலக்கத்தை குறித்த இளைஞன் கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் பெற்றுக் கொண்டுள்ளான்.
இதனை தொடர்ந்து அக்கரைப்பற்றைச் சேர்ந்த இளைஞனுடன் தொடர்ந்து உரையாடிவந்த நிலையில் குறித்த இளைஞன் திருமணம் முடிக்கவில்லை என தெரிந்து கொண்ட நிலையில் தனது பெரியம்மாவின் மகள் இருப்பதாகவும் அவளுக்கு திருமணம் பேசிவருவதாக குறித்த இளைஞனுக்கு தெரிவித்து பின்னர் முகநூல் பக்கங்களில் இருக்கும் ஒரு அழகான பெண் ஒருவரின் படத்தை அனுப்பி இது தான் எனது பெரியம்மாவின் மகள் என தெரிவித்துள்ளான்.
குறித்த இளைஞனும் அழகான பெண் படத்தை பார்த்ததும் அவனுக்கு அந்த பெண் மீது ஆசை ஏற்பட்டதை கண்டு கொண்ட ஆயித்தியமலை இளைஞன் வேறு தொபேசி இலக்கத்தில் இருந்து அந்த பெண் கதைப்பது போல மிமிக்கிரி குரலில் குறித்த இளைஞனுடன் கதைத்து வந்ததுடன் பெண்னின் தாயார் எனவும் மிமிக்கிரி குரலில் கதைத்து வந்துள்ளதுடன் தொலைபேசிக்கு ரீலோட் செய்யுமாறு கூறி அடிக்கடி அவனிடம் இருந்து பணத்தையும் வாங்கி வந்துள்ளான்.
இந்த நிலையில் கொழும்பில் மேசன் தொழில் ஈடுபட்டுவரும் அக்கரைப்பற்று இளைஞனுக்கு அந்த பெண் மீது காதல் ஏற்பட்டதையடுத்து அவளை திருமணம் முடிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இருவரும் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பெரியம்மாவின் மகளுக்கு சீதனமாக வீடு பணம் தருவதாகவும் அவர்கள் பணக்காரர் எனவும் பொய்களை கூறி வந்த நிலையில் பெண்ணின் பெற்றோர் மாப்பிளையை பார்ப்பதற்கு அக்கரைப்பற்றுக்கு வருவதற்கான திகதியை தீர்மானித்தனர்.
திகதி தீர்மானிக்கப்பட்டதையடுத்து மாப்பிள்ளை வீட்டினர் தமது வீட்டிற்கு வர்ணம் தீட்டி மற்றும் பெண் பகுதியினர் வரும்போது அவர்களுக்கான உணவு வழங்க பல ஆயிரம் ரூபா செலவு செய்து உணவு ஏற்பாடுகள் செய்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் காத்திருந்தனர்.
நேரம் பகல் 12 மணியை தாண்டியும் பெண் வீட்டாரை காணாததால் குறித்த ஆயித்தியமலை இளைஞனுக்கு தோலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது, மாப்பிளை பார்ப்பதற்கு வேன் ஒன்றில் வெளியேறிய போது வீட்டின் வாசலில் பூனை குறுக்கால் போனது சகுணம் சரியில்லை அதனால் வரவில்லை என தெரிவித்து வேறு ஒரு தினத்தில் வருவதாக தெரிவித்துள்ளான்.
இதனை தொடர்ந்து மாப்பிளையை பார்ப்பதற்கு வருவதற்கு பல சாக்கு போக்குகளை தெரிவித்து வந்துள்ள நிலையில் பெண்னை பார்ப்பதற்கு பெண் வீட்டிற்கு தாங்கள் வருவதாக அக்கரைப்பற்று இளைஞன் தெரிவித்து அதற்கான திகதியான கடந்த 23ம் திகதி தீர்மானிக்கப்பட்டு அன்று பெண்ணை பார்ப்பதற்கு மாப்பிளை வீட்டினர் வான் ஒன்றை வாடைகைக்கு பெற்றுக் கொண்டு காலையில் மட்டக்களப்பை நோக்கி பிரயாணித்தனர்.
கல்முனையில் வைத்து ஆயித்தியமலை இளைஞனின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்திய போது அந்த தொலைபேசி நிறுத்தப்பட்டிருந்தது.
பலமுறை முயற்சித்தும் அவ்வாறு அழைப்பு வந்துள்ளதையடுத்து பெண்ணின் விலாசம் தெரியாது என்ன செய்வது என தெரியாது நீண்ட நேரம் கல்முனையில் காத்துநின்றுவிட்டு அங்கிருந்து அக்கரைப்பற்று மாப்பிளை வீட்டினர் மீண்டும் வீட்டிற்கு திரும்பி சென்றனர்.
இதன்பின்னர் அன்று மாலை அக்கரைப்பற்று இளைஞனுடன் தொலைபேசியில் தொடர்பை ஏற்படுத்தி கொண்ட ஆயித்தியமலை இளைஞன் மன்னிக்கவும் தொலைபேசியின் பற்றி சார்ச் இல்லாததால் தொலைபேசி தானகாக நின்றுவிட்டது. நான் உங்கள் வீட்டிற்கு வருகின்றேன் என தெரிவித்து மட்டக்களப்பில் இருந்து பஸ்வண்டியில் அக்கரைப்பற்றுக்கு சென்ற நிலையில் அவனை தனது வீட்டிற்கு கூட்டிச் சென்று இரவு தங்கவைத்து உபசரிப்பு இடம்பெற்றதுடன் பெண் வீட்டிற்கு நாளைக்கு கூட்டிச் செல்வதாக தெரிவித்து கலந்துரையாடியுள்ளனர்.
அடுத்த நாள் 24 ம் திகதி வியாழக்கிழமை காலை குறித்த ஆயித்தியமலை இளைஞன் மற்றும் அக்கரைப்பற்று இளைஞன் அவனின் உறவினர்களான இரு பெண்களுடன் மட்டக்களப்பு பஸ்தரிப்பு நிலையத்துக்கு வந்தடைந்த பின்னர் பெண் வீடு கூளாவடியில் இருப்பதாகவும் பல சாக்கு போக்கு தெரிவித்து என்ன செய்வது என தெரியாது முழுசிக் கொண்டிருந்த அவனை அக்கரைப்பற்று இளைஞன் விடாப்பிடியாக பெண்வீட்டிற்கு கூட்டிச் செல்ல வற்புறுத்தியுள்ளான். அவனுக்கு என்ன செய்வது என தெரியாது கொக்குவில் பிரதேசத்திலுள்ள அவனின் தூரத்து உறவினர் வீட்டிற்கு கூட்டிச் சென்ற போது இவனின் நடவடிக்கையில் அக்கரைப்பற்று இளைஞனுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அவன் உறவினரிடம் கூட்டிச் சென்ற நிலையில் அவன் தனது தாய் என அனுப்பிய படத்தை காட்டி இவனின் தாயாரா நீங்கள் என கேட்டபோது, அவர்கள் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அக்கரைப்பற்று இளைஞன் உசாரடைந்து கொண்டு அவனை பிடித்துக்கொண்டு கொக்குவில் பொலிசாரிடம் சென்று தமக்கு நடந்ததை தெரிவித்து, இவனால் சுமார் ஒன்றரை இலச்சத்துக்கு மேலாக கடந்த 2 மாதத்தில் செலவாகியுள்ளதாக அக்கரைப்பற்று இளைஞன் தெரிவித்தான்.
இதனை தொடர்ந்து குறித்த இளைஞன் தான் மிமிக்கிரி குரலில் பெண்கள் போல கதைத்து இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதை ஓப்புக் கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவரின் சகோதரி பொலிஸ் நிலையத்துக்கு சென்று பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று இளைஞனின் குடும்பத்தினரிடம் தமது கஷ்ட நிலையை தெரிவித்து சகோதரன் தவறு செய்துவிட்டார் என மன்னிப்பு கேட்டதையடுத்து அந்த இளைஞன் முறைப்பாடு செய்யாது சென்றுள்ளான். அதேவேளை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இளைஞனை ஆயித்தியமலை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணையை ஆயித்தியமலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
ரயிலுடன் மோதி வாலிபன் மரணம்
ரயிலுடன் மோதி வாலிபன் மரணம்
யாழ்ப்பாணம் – மாவிட்டபுரம் புகையிரத நிலைய கடவையில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த கடுகதி புகையிரதம் இன்று நண்பகல் 12 மணியளவில் மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை கடக்க முற்பட்ட
போது, குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் புகையிரத கடலையை கடக்க முற்பட்டுள்ளார்.
இதன்போது கடுகதி புகையிரதம் இளைஞரை மோதி தள்ளியுள்ளது.
உயிரிழந்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் விறகு கட்டிக்கொண்டு சென்றதாகவும், இளைஞர் யார் என்று அடையாளம் காணவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்
லொறி பஸ் நேருக்கு நேர் மோதல்
லொறி பஸ் நேருக்கு நேர் மோதல்
திருகோணமலை – கொழும்பு பிரதான வீதியில் தனியார் அதிசொகுசு பஸ் ஒன்று லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்துச் சம்பவம் இன்று (26) அதிகாலை 2.30 மணியளவில் கலேவெலவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதோடு, காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிலிருந்து திருகோணமலையை நோக்கி பயணித்த அதிசொகுசு பஸ் ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலேவெல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை திங்கள் ஆரம்பம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது அமர்வு திங்கட்கிழமை (28) முதல் ஏப்ரல் முதலாம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளது.
இதில் இலங்கை தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாதம் (03) உரையாடல் நடைபெறவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த அமர்வின்போது இலங்கை தொடர்பிலான புதுப்பிக்கப்பட்ட எழுத்து மூல சமர்ப்பணத்தை ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் முன்வைக்கவுள்ளார்.
இந்த கூட்டத்தொடரில் கலந்துகொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான விஷேட பிரதிநிதிகள் குழு நேற்று ஜெனிவாவுக்கு சென்றுள்ளது.
மேலும் இலங்கை தொடர்பான அறிக்கை ஏற்கனவே அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் அதற்கு பதிலளித்து உரையாற்றவுள்ளார்
கோடரியால் தலையில் அடித்து கொலை
கோடரியால் தலையில் அடித்து கொலை
மோட்டார் சைக்கிள் லீசிங் பணம் கட்டுவதற்கு பணம் தேவைப்பட்டதால் வயோதிபப் பெண்ணைக் கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த சங்கிலியை அபகரித்துச்
சென்றேன் என யாழ்ப்பாணம் மாநகரில் தனிமையிலிருந்த வயோதிபப் பெண் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட இளம் குடும்பத்தலைவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
கடந்த செவ்வாய்கிழமை (22) அன்று யாழ்ப்பாணம் இராசாவின் ஒழுங்கையில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்த வயோதிபப் பெண் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார்.
மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (வயது – 72) என்ற வயோதிப் பெண்ணே கொலை செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் டில்ரொக் தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவ தினத்தன்று அண்மையிலுள்ள சிசிரிவி கெமரா பதிவில் கொலையாளி துவிச்சக்கர வண்டியில் பயணித்தமை பதிவாகி இருந்ததன் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர் நேற்று காலை இராசாவின் தோட்டம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த 28 வயதுடைய இளம் குடும்பத்தலைவரே கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் வழங்கிய வாக்குமூலத்தில், வயோதிபப் பெண்ணின் வீட்டில் முதல் நாள் பூக்கன்றுகளை வெட்டி வேலை செய்தேன். மறுநாள் மிகுதி வேலையை செய்யுமாறு கேட்டிருந்தார்.
மறுநாள் சென்ற போது பட்டமரத்தை வெட்டுமாறு அயலில் உள்ள வீட்டில் கோடாரி மண்வெட்டியை வயோதிப் பெண் வாங்கித்தந்தார்.
எனது மனைவிக்கு மோட்டார் சைக்கிள் லீசிங்கில் வாங்கிக் கொடுத்தேன். அதற்கான பணத்தை உறவினரிடம் வாங்கிக் கட்டியிருந்தேன். அவர் தன்னிடம் வாங்கிய 20 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளத் தருமாறு அடிக்கடி கேட்டார்.
அதனால் கோடாரியை எடுத்துக்கொண்டு தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த வயோதிப் பெண்ணின் பின்னால் சென்று தலையில் தாக்கினேன். அவர் சுயநினைவற்றிருந்தார். அவரது சங்கிலியை அபகரித்துக் கொண்டு சென்றுவிட்டேன் என்று தெரிவித்தார்.
அத்துடன் தனது வீட்டுக்கு பொலிஸாரை அழைத்துச் சென்ற சந்தேக நபர் பை ஒன்றிலிருந்த தங்கச் சங்கிலியை எடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்தார்.
சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தி பொலிஸ் தடுப்பில் வைத்திருக்க பொலிஸார் விண்ணப்பம் செய்யவுள்ளனர்.
இலங்கை ரஷியா தூதரத்திற்கு முன் உக்கிரேனியர்கள் போராட்டம்
இலங்கை ரஷியா தூதரத்திற்கு முன் உக்கிரேனியர்கள் போராட்டம்
இலங்கையில் உள்ள ரசியா தூதரகம் முன்பாக உக்கிரேனியர்கள் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்
ரசியா மக்கள் போரை விரும்பவில்லை எனவும் புட்டீன் இந்த போர் வெறியில் உள்ளதாக ஆர்ப்பாட்ட காரர்கள் தெரிவித்தனர்
மேலும் உடனடியாக போரினை நிறுத்தும் படி கண்ணீர் மல்க அவர்கள் முழக்கம் இட்டனர்
எரிபொருள் தட்டுப்பாடு- மரக்கறிகள் அழுகின
எரிபொருள் தட்டுப்பாடு- மரக்கறிகள் அழுகின
எரிபொருள் நெருக்கடி காரணமாக நுவரெலியாவில் மரக்கறி போக்குவரத்து
தடைப்பட்டுள்ளதாக அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய
நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக வியாபாரிகள் நுவரெலியாவுக்கு
வராத காரணத்தினால் சில மரக்கறிகள் பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பசிலின் இந்தியா பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
பசிலின் இந்தியா பயணம் மீண்டும் ஒத்திவைப்பு
நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் இந்தியாவுக்கான விஜயம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள், மருந்துகளை கொள்முதல் செய்ய, ஒரு பில்லியன்
அமெரிக்க டொலர் கடனை இந்தியாவிடம் இருந்து பெறுவதற்காக பசில் ராஜபக்ச இன்று இந்தியாவிற்கு செல்லவிருந்தார்.
எனினும், பசில் ராஜபக்சவின் இந்த பயணம் கடைசி நேரத்தில் பிற்போடப்பட்டுள்ளது
கிளிநொச்சி – பளையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
கிளிநொச்சி – பளையில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் மரணம்
.கிளிநொச்சி – பளை A9 வீதியில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
முல்லையடி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர், வீதியில் மாடு குறுக்கே சென்றதால் மாட்டுடன் மோதி விபத்திற்குள்ளாகினார்.
இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான அவசர வேண்டுதல்
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான அவசர வேண்டுதல்
உக்ரேனில் நிலவும் நிலைமையைக் கருத்தில் கொண்டு, உக்ரேனில் எஞ்சியுள்ள இலங்கைப் பிரஜைகளைப் பாதுகாப்பாக ஒருங்கிணைப்பதற்கு உரிய
நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிய்வ்க்கு ஒரே நேரத்தில் அங்கீகாரம் பெற்றுள்ள அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு வெளிநாட்டு அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரேனில் உள்ள இலங்கைப் பிரஜைகள் இது தொடர்பாக அங்காராவில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள 24×7 அவசர தொலைபேசி இலக்கமான +90
534 456 94 98, நிலையான தொலைபேசி இலக்கமான +90 312 427 10 32 மற்றும் மின்னஞ்சல் முகவரியான slemb.ankara@mfa.gov.lk ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.
வெளிநாட்டு அமைச்சு
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று
இலங்கையில் மீண்டும் கொவிட் தொற்று
காதார சேவைகள் பணிமனையின் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
மீண்டும் கொவிட் தொற்றுப்பரம்பல் எமது நாட்டில் அதிகமாகி
கொவிட் 19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் கிழக்கு மாகாண சுகாதாரத்துறையினர் பாரிய பங்களிப்புக்களை இரவு பகல் பாராது வழங்கி செயற்பட்டு வருகின்றனர். இதனால் ஏனைய மாகாணங்களைவிட எமது மாகாணம் சிறந்து விளங்கியதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் தெரிவித்தார்.
மாகாணப் பணிப்பாளர் வைத்தியர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடல் இன்று (23) திருகோணமலை மாகாணப் பணிமையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கொவிட் தடுப்பு மருந்துளை பொதுமக்களு க்கு வழங்கும் செயற்பாட்டிலும் எமது மாகாணமே சிறந்து விளங்குவதாகுவும், ஏனை நாடுகளைவிட எமது நாட்டலுள்ள மக்கள் இத்தடுப்பு மருந்துகளை பெற்றுக்கொள்வதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மீண்டும் கொவிட் தொற்றுப் பரம்பல் எமது நாட்டில் அதிகமாகி வருவதை நாம் அறிவோம். இதை முற்று முழுதாக ஒழிப்பதற்கான செயற்திட்டங்களையும், அதற்கான வழிவகைகளையும் முன்னெடுத்துச் செல்வதன் மூலம் ஆட்கொள்ளி நோயான கொரோனா நோயை எமது மாகாணத்தில் மாத்திரமல்லாமல் எமது நாட்டிலிருந்து விரட்டியடிக்க ஒருமித்து செயற்படுவோம் என்றார்.
இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண சகாதார சேவைகள் பணிமனையில் நிலவுகின்ற குறைபாடுகள் குறித்தும் அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முரளிதன் கேட்டறிந்துகொண்டார். இதில் வைத்தியர்கள், கணக்காளர், நிருவாக உத்தியோகத்தர், சு
நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை
நில நடுக்கம் – இலங்கைக்கு பாதிப்பு இல்லை
இந்தோனேசியாவின் கரையோர வலையத்துக்கு அருகாமையில் இன்று (25) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது 6.2 ரிக்டர் அளவை கொண்டதாக பதிவாகியுள்ளது.
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் உணரப்பட்டுள்ளது.
இந்த நில நடுக்கத்தினால் இலங்கைக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை இடை நிறுத்தம்
கொழும்பு பங்குச் இடை நிறுத்தம்
கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த வர்த்தகம் இன்று காலை 11.17 மணியளவில் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.
S&P SL20 சுட்டெண் முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 5%க்கும் அதிகமாக சரிந்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 423.28 புள்ளிகளும், S&P SL20 சுட்டெண் 208.96 புள்ளிகளும் குறைந்தன
யாழில் நகைகள் திருட்டு
யாழில் நகைகள் திருட்டு
கடந்த டிசம்பர் மாதம் முல்லைத்தீவு நகர பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இரவு நேரத்தில் 20 பவுண் நகை
கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் மூவர் யாழ். மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சாவகச்சேரி, நெல்லியடி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த மூவர் குறித்த திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 17 பவுண் நகையும் மீட்கப்பட்டுள்ளதாகவும்
கொடுத்த திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்கள் ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளோர் என
யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்
இரு பஸ்கள் மோதி விபத்து- 23 பேர் காயம்
இரு பஸ்கள் மோதி விபத்து; 23 பேர் காயம்
ஹொரணை – கொழும்பு பிரதான வீதியில் ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்ஸூம், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பயணிகள் பஸ் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது.
இதில் 23 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்த ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களில் ஆண்கள் மூவர் அடங்குவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸில் பயணித்த யாருக்கும்
காயம் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த இருவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏனையவர்கள் வேதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கஹதுடுவ ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற தனியார் பஸ்,
ஹொரணையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின், பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதில் ஆடைத் தொழிற்சாலை பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டதுடன், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன







