Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
மண் சரிவு எச்சரிக்கை
மண் சரிவு எச்சரிக்கை
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 5 மாவட்டங்களில் மண்சரிவு அனர்த்த நிலை தொடர்நதும் இருப்பதாக தேசிய கட்டிட ஆய்வு அமைப்பின் சிரேஷ்ட புவியியல் விஞ்ஞானி கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மழை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதை தொடர்ந்து தேசிய கட்டிட ஆய்வு அமைப்பினால் அறிவிக்கப்பட்டிருந்த அனர்த்த எச்சரிக்கை நேற்று (27) இரவு 9.00 மணி தொடக்கம் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மண் சரிவு எச்சரிக்கை
இதற்கமைவாக கண்டி மாவட்டத்தில் பாத்ததும்பர, உடுநுவர, கங்க இயல கோரல, பாத்த ஹேவாஹெட்ட, கங்கவட்ட கோரல, அக்குரண ஹரிஷ்பத்துவ, தும்பனே, பூஜாப்பிட்டி மற்றும் யட்டிநுவர ஆகிய பிரதேச செயலாளர்
பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தில் கலிகமுவ, ரம்புக்கண, மாவனெல்லை, புலத்கோப்பிட்டி, கேகாலை, அரநாயக்க மற்றும்
ருவான்வெல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம, பொல்காவலை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மாத்தளை
மாவட்டத்தில் ரத்தொட்ட, மாத்தளை, யட்டவத்த, உக்குவெல்ல, நாவுல, லக்கல, பல்லேகம மற்றும் பல்லேகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும்,
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மழையில் குளிக்கும் இலங்கை மக்கள் அவதி
மழையில் குளிக்கும் இலங்கை மக்கள் அவதி
இலங்கை நாடு தழுவிய ரீதியில் பலத்த மழை பொழிவு ,இடம்பெற்ற வண்னம் உள்ளன .
வட கிழக்கு பகுதியில் கனத்த மழை பொழிவு இடம் பெறுகிறது .
இந்த சீரற்ற காலநிலையால் மக்கள் வாழ்விடங்கள் வெள்ளத்தில் மிதக்கிறது ,மக்கள் பெரிதும் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு…
முதலீட்டு ஈர்ப்பு, ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் புதிய இராஜதந்திரத்தின் முக்கியத்துவம் குறித்து பிரதமர் வலியுறுத்து….
பாரம்பரிய இராஜதந்திர முறைக்குப் பதிலாக பொருளாதார இராஜதந்திரத்திற்கு உலகம் முன்னுரிமை அளித்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
இலங்கையின் புதிய தூதுவர்களுக்கும் பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் இடையில் (டிசம்பர் 26) அலரி மாளிகையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த கலந்துரையாடலில் 16 புதிய தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் கலந்துகொண்டனர்.
முதலீட்டை ஈர்ப்பதற்கும், ஏற்றுமதி மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கும், அனைவருடனும் நட்புறவான, நடுநிலையான அணிசேரா நாடு என்ற நற்பெயரை மேம்படுத்தும் நோக்குடன் செயற்பட வேண்டும் என புதிய தூதுவர்களிடம் பிரதமர் கூறினார்.
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு குறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர், உதவிகள் மற்றும் கடனின் மீது தங்கியிருப்பதைப் பார்க்கிலும் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் துரித
அபிவிருத்தியை அடைந்துகொள்ளக் கூடிய வகையில் முதலீடுகள், கூட்டு முயற்சிகள் மற்றும் இருதரப்பு கூட்டாண்மைக்காக உழைக்குமாறு இலங்கை தூதுவர்களிடம் கேட்டுக் கொண்டார்.
புதிய இலங்கைத் தூதுவர்களுக்கும் பிரதமருக்கும் இடையில் விசேட சந்திப்பு
அதிக முதலீடு, வேலை வாய்ப்புகள் மற்றும் அபிவிருத்தி உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் அவர்களது சங்கங்களுடன் நெருக்கமாகப் பணியாற்ற வேண்டும்.
விரைவான பொருளாதார மீட்சியை அடைந்து, விவசாயம், கைத்தொழில், தகவல் தொழிநுட்பம் மற்றும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும், உணவில் தன்னிறைவு அடைவதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு நட்பு நாடுகள் ஒத்துழைக்க முடியும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் தாபிக்கப்பட்ட முதலீட்டு மற்றும் ஏற்றுமதி ஊக்குவிப்பு குழுக்களுக்கு அதிகபட்ச ஒத்துழைப்பை வழங்குமாறும் பிரதமர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் முன்னாள் வெளிவிவகார செயலாளர்களான சித்ராங்கனி வாகீஸ்வர (அவுஸ்திரேலியா) மற்றும் அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொழம்பகே (இந்தோனேசியா) மற்றும் மனிஷா குணசேகர (பிரான்ஸ்),
எச்.எம்.ஜி.ஆர்.ஆர்.கே. மெண்டிஸ் (பஹ்ரைன்), கலாநிதி ஏ.எஸ்.யு. மெண்டிஸ் (வியட்நாம்), வருணி முத்துக்குமாரண (ஜெர்மனி), கபில ஜயவீர (லெபனான்), எம்.எச்.எம்.என். பண்டார (இஸ்ரேல்), கே.கே.தெஷாந்த குமாரசிறி
(எத்தியோப்பியா), கலாநிதி சானக எச்.தல்பஹேவா (பிலிப்பைன்ஸ்), பிரியங்கிகா விஜேகுணசேகர (ஜோர்தான்), பி.காண்டீபன் (குவைத்), ஹிமாலி அருணதிலக்க (ஜெனீவா),
உதய இந்திரரத்ன (ஐக்கிய அரபு இராச்சியம்) மற்றும் சந்தி சமரசிங்க (மெல்பர்ன்) உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தந்தையை அடித்து கொன்ற மகன்
தந்தையை அடித்து கொன்ற மகன்
மாவனெல்ல பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு உள்ளாகி தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாவனெல்ல மகேஹெல்வல பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்ட நபரின் 20 வயது மகன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இறந்தவர் நேற்று (25) இரவு மனைவியுடன் தகராறு செய்ததாக தெரியவந்துள்ளது.
தந்தையை அடித்து கொன்ற மகன்
இதன்போது சம்பவ இடத்திற்கு வந்த மகன் தந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்த தந்தையின் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கொலையாளியின் மகன் இன்று (26) மாவனல்லை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவனல்லை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் பறந்த கோட்டபாய ராஜபக்ச
அமெரிக்காவுக்கு குடும்பத்துடன் பறந்த கோட்டபாய ராஜபக்ச
இன்று காலை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வர் அமெரிக்கா சென்றுள்ளனர் .
முன்னாள் ஜனாதிபதியின் மனைவி அயோமா ராஜபக்ச, மருமகள் செவ்வந்தி ராஜபக்ச, அவரது மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் பேரக்குழந்தைகள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக அமெரிக்கா சென்றுள்ளனர்.
தேர்தல் வரும் நிலையில் ,தாம் கைது செய்யப்படலாம் என்கின்ற பீதியில் அமெரிக்கா பறந்துள்ளார் கோட்டபாய .
அமெரிக்காவில் தங்கியுள்ள கோட்டாபய, போர்க்குற்ற சாட்டுக்களில் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
ரசியா இலங்கைக்கு இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பம்
ரசியா இலங்கைக்கு இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பம்
ரசியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் புதிய Red Wings விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையின் உல்லாச பயண துறையை கட்டி எழுப்பும் நோக்குடன் ,இந்த Red Wings விமான சேவைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வராம் தோறும் இரண்டு முறை இந்த Red Wings சேவைகள் நடத்திட திட்டமிடப் பட்டுள்ளது .
இந்த Red Wings சேவைகள் December 28, 2022 முதல் ஆரம்பிக்க படும் என தெரிவிக்க படுகிறது.
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
இலங்கை நூரைச்சேலை பகுதியில் வாலிபர் ஒருவர் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப் பட்டுள்ளார் .
உள்ளக முரண்பாடு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம், கொலையில் முடிவடைந்துள்ளது .
இருவரும் அதிக போதையில் காணப்பட்ட நிலையில் ,இந்த படுகொலை சம்பவம் அரங்கேறியுள்ளது .
பலியானவர் முப்பத்தி ஐந்து வயதுடைய, ஆண் என அடையாளம் காணப் பட்டுள்ளார் .
இந்த கொலையினை புரிந்த ஐம்பத்தி நான்கு வயதுடைய ,நபர் கைது செய்யப்பட்டு ,நீதிமன்றில் பாரப் படுத்த பட்டுள்ளார் .
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் ,புத்தளம் நீதவான் நீதிமன்றில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
வெள்ளத்தில் மிதக்கும் இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள வெள்ள பெருக்கின் காரணமாக இதுவரை 1500 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்டவர்கள் இடைத் தங்கல் முகாம்களில், தங்க வைக்க பட்டு பராமரிக்க பட்டு வருகின்றனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பருவகால மழை காரணமாக குளங்கள் நிரம்பி வழிகின்றன .
இதனால் குளத்தின் வான்கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன .
தாழ்நில பகுதியை சேர்ந்த மக்கள் வீடுகளுக்குள், வெள்ள நீர் புகுந்ததினால் ,மக்கள் பாதிக்க பட்டு அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் .
உயிர் ,உடமை இழப்புக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .பரவலாக இலங்கை எங்கும் இந்த வெள்ள பெருக்கு காணப்படுகிறது .
பாதிக்க பட்ட மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு அவசர நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது .
மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
மாத்தளையில் மண்சரிவு 163 பேர் பாதிப்பு
இலங்கை மாத்தளை பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ,53 குடும்பங்களை சேர்ந்த 263 மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த கால நிலை சீர்கேட்டால், பாதிக்க பட்ட மக்கள் ,தற்காலிக முகாம்களில் தங்க வைக்க பட்டுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்களுக்கு ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, உதவிகளை வழங்கிய வண்ணம் உள்ளது .
மேலும் அந்த பகுதியில் ,மண்சரிவு எச்சரிக்கை அபாயம் விடுக்க பட்ட வண்ணம் உள்ளது .
அதிக மழை வீழ்ச்சியே ,இந்த மண்சரிவுக்கு காரணமாக மாற்றம் பெற்றுள்ளது .
ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
ராஜபக்ச விமான நிலைய செல்வுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
இலங்கை மாத்தளை ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் 2021 ஆண்டுக்கான செலவுகள் வரவை விட 21 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது .
இந்த விமான நிலையம் மகிந்த ராஜபக்ச ஆட்சியில் நிறுவ பட்டு ,அவரால் அந்த விமான நிலையத்திற்கு அவரது பெயர் சூட்ட பட்டது .
கோட்டபாய ராஜபக்ச ஆட்சியில் குறித்த விமான நிலையத்தின் வருமானம் ,அதனை விட 21 மடங்கு பெரும் இழப்புடன் முடிவடைந்துள்ளது .
இது கோட்டபாய ரடாஜபக்ச குடும்பத்தால் நடத்த பட்ட ,பெரும் மோசடி என நம்ப படுகிறது .
இந்த இழப்பு மற்றும் பண கையாடல் தொடர்பிலான, விசாரணைகள் ஆரம்பிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
ராஜபக்ச விமான நிலைய செலவுகள் 21 மடங்கு அதிகள் – ராஜபக்சாக்கள் மோசடி அம்பலம்
நாட்டை கொள்ளையடித்து ,இன்று பிச்சைக்கார நாடக மாற்றியுள்ள ராஜபக்ச ஆட்சியின் ,லஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.
என ,இலங்கை மக்கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கையை வைத்து வருகின்றனர் .
அவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்க பட்டால் ,ராஜபக்சாக்கள் மோசடிகள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது .
கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா
கட்டுநாயாக்கா விமான நிலையத்தில் துப்பாக்கி தோட்டா
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஆண்கள் கழிவறையில் ,துப்பாக்கி தோட்டா ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
காவல்துறையினருக்கு விடயம் தெரிவிக்க பட்ட நிலையில் ,துப்பாக்கி தோட்டா மீட்டு செல்ல பட்டுள்ளது .
விமான நிலையத்தில் உள்ள கமராக்கள் மூலம் சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த தோட்டாவை கழிவறையில் வீசி சென்ற நபரை ,கைது செய்யும் வேட்டையில் ,குற்ற புலனாய்வு துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
சுனாமி பேரழிவு நினைவு நாள்
சுனாமி பேரழிவு நினைவு நாள்
இலங்கை முதல் பல நாடுகளில் சுனாமி தாக்கம் ஏற்பட்டது .இந்த பேரழிவில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகினர் .
2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்த சம்பவம் ,இன்றும் மக்கள் மனதில் மறையாத வடுவாக பதிய பெற்றுள்ளது .
மனித உடல்கள் ,வீடுகள் ,சொத்துக்கள் நீரில் அடித்து செல்ல பட்டன .
மக்களை மிரள வைத்த ஆழிப் பேரலை நினைவின் துயரை சுமந்து ,இலங்கை இந்தியா முதல் ,பல நாடுகளில் மக்களினால் நினைவு கூற படுகிறது .
கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
வங்களா விரிகுடாவில் ஆரம்பமான காற்றழுத்த தாழமுக்கம் இலங்கை உள்ளே நுழைந்துள்ளதால் ,மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என ஏச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
காலி முதல் பொத்துவில் வரையான கடல் பகுதியில் ,இந்த காற்றழுத்தம் நிலவும் என்பதல் ,மறு அறிவித்தல் வரை, மக்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என, அறிவுறுத்தல் விடுக்க பட்டுள்ளது .
உயிரை உடமைகளை காப்பாற்றி கொள்ளும் நோக்கில் ,இந்த முன் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்
வெள்ளத்தில் மூழ்கிய கண்டி ரயில் நிலையம்
இலங்கை கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது .
இந்த வெள்ள நீர் வடிந்து சென்றுள்ள நிலையில் ,நீர் புகுந்த பகுதிகளில் துப்பரவு பணிகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
வெள்ள நீர் புகுந்து சேதங்களை ஏற்படுத்திய நிலையில் ,குறித்த ரயில்வே நிலையம் பாதிப்புக்கு உள்ளாகியதுடன் ,போக்குவரத்துக்கள் தடை பட்டன .
மீளவும் கண்டி ரயில் நிலையத்தை இயங்க வைத்து ,இயல்பு நிலைக்கு மக்களை அழைத்து செல்லும் நடவடிக்கைகள் முடுக்கிவிட பட்டுள்ளன .
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
புத்தளம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு, பக்தர்களினால் வழங்க பட்ட காணிக்கை பெட்டிகளை பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி ஒன்றுக்குள் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்க பட்டன .
இதனை கண்ணுற்ற தேவாலய நிர்வாகம் ,காவல்துறைக்கு தெரியப் படுத்திய நிலையில், அவை மீட்டு செல்ல பட்டுள்ளன .
இந்த பொதியினை வழங்கியவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
தேடுறு ஓயா வான் கதவுகள் திறப்பு வெள்ளத்தில் கிரமங்கள்
தேடுறு ஓயா வான் கதவுகள் திறப்பு வெள்ளத்தில் கிராமங்கள்
தேடுறு ஓயா வான் கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளது .
அதிக மழை வீழ்ச்சி காரணமாக இந்த வான் கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன .
பள்ள தாக்கு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ,தற்காலிக கூடாரங்களில் மக்கள் தங்க வைக்க பட்டுள்ளனர் .
நாடெங்கும் கனத்த மழை பொழிவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
தமிழீழ விடுதலை புலிகளை மீளவும் உருவாக்கிட பாகிஸ்தான் உளவுத்துறையினர் ,முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்தியா மத்திய புலனாய்வு அமைப்பான ரா குற்றம் சுமத்தியுள்ளது .
தமிழகத்தை மையப்படுத்தி புலிகளை உருவாக்கி, அவர்களை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என, இந்தியா ரோ தனது கறபனையை கட்டவிழ்த்து விட்டுள்ளது .
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர் .
அவ்வாறு கடத்தியவர்கள் புலிகளை சேர்ந்த உறுப்பினர்கள் என இந்தியா ரா உளறியுள்ளது .
புலம் பெயர் மக்கள் பணத்தினை புலிகளுக்கு அள்ளி வழங்கி வந்தனர் ,அவ்வாறான நிலையில் தற்போது மீளவும் மக்கள் வழங்குவார்கள்
நிலவரம் இவ்வாறு இருக்கும் பொழுது, புலிகள் மீது தனது வன்ம வசை பாடலை நடத்திட இந்தியா ரா இப்படி உளறி வருகிறது .
மண் சரிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
மண் சரிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
கண்டி பகுதியில் வீடொன்று மண்சரிவில் சிக்கியதால் அவ்வேளை அதற்குள் இருந்த இருவர் பலியாகியுள்ளனர் .
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 18 மற்றும் 19 வயதை சேந்த இருவர் பலியாகியுள்ளனர் .
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர் .
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் குளம் காட்டு பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் குளம் காட்டு பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .
மாடு மேய்க்க சென்ற ஒருவர் துணியால் சுற்ற பட்டு கிடந்த, சிசு சடலம் ஒன்றை கண்டு காவல்துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து ,உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சிசு சடலம் மீட்க பட்டுள்ளது .
கள்ள தொடர்பு கிரணமாக பிறந்த சிசுவை, இங்கு பெற்று போட்டு தாய் தப்பித்து ஓடி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
இந்த சிசுவின் தாயை கண்டு பிடிக்கும் பணியில் ,காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மின்னல் தாக்கி 27 கால் நடைகள் மரணம்
மின்னல் தாக்கி 27 கால் நடைகள் மரணம்
இலங்கை ஏறாவூர் பகுதியில் மின்னல் தாக்கி 27 கால்நடைகள் பலியாகியுள்ளன .
கடந்த இரவு இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கியே 9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் என்பன பலியாகியுள்ளன .
இந்த விலங்குகள் முஸ்லீம் பண்ணை வளர்ப்பு நபராது வீட்டில் இடம்பெற்றுள்ளது .
தனது வளர்ப்பு பிராணிகள் இறந்த நிலையில் ,உரிமையாளர் பெரும் சோகத்தில் உறைந்துள்ளார் .






































