Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஐஎம்எப் அனுமதி கிடைத்தது
ஐஎம்எப் அனுமதி கிடைத்தது
இலங்கைக்கு நீடிக்கப்பட்ட நிதி வசதி உதவியை பெற்றுக் கொடுப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதியை வழங்கியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
இந்தத் திட்டத்தினூடாக, இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம், சர்வதேச நிதி வழங்கும் அமைப்புகள் மற்றும் பரஸ்பர உதவியளிக்கும் அமைப்புகளிடமிருந்து 7 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது,
நாட்டில் பெரும்பொருளாதார உறுதித் தன்மையை மீள நிலைநாட்டவும், கடன் மீளச் செலுத்தக்கூடிய உறுதித் தன்மையையும் எய்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கும் நிலையில், இலங்கையைப் பொறுத்தமட்டில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த விடயமாக அமைந்துள்ளது.
இதனூடாக பொருளாதாரத்தை பல சவால்களிலிருந்து மீட்டு, சகல பங்காளர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்பக்கூடியதாக இருக்கும்.
75 விருது பெற்ற டு ஓவர் திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு
75 விருது பெற்ற டு ஓவர் திரைப்படம்.. உற்சாகத்தில் படக்குழு
டூ ஓவர் திரைப்படம் தொடர்ந்து பல விருதுகளை வென்று குவித்து வரும் நிலையில் இந்த இனிப்பான செய்தியை இயக்குனர் ஷார்வி அறிவித்துள்ளார்
டூ ஓவரில் சிவகுமாராக நடித்த மானவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. ஷார்வி எழுதி இயக்கிய கருப்பொருளில் உருவாகியுள்ள இப்படம் தமிழில் வெளியாகிறது. டூ ஓவர் ஏற்கனவே இந்தியாவிலும் வெளிநாட்டிலும் 75 க்கும்
விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளது
மேற்பட்ட பாராட்டுகளுடன் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றுள்ளது. உலகின் சிறந்த திரைப்பட விழாக்களில் இப்படம் கவனம் பெற்றது.
டூ ஓவர் ( தமிழ்) திரைப்படம், மானவ், மரியா பின்டோ, நெஃபி அமெலியா, r g வெங்கடேஷ் ஆகியோர் நடித்த படம். ஷார்வி எழுதி இயக்கியுள்ளார்.
ரியல் இமேஜ் பிலிம்ஸ் சார்பில் எஸ் சரவணன் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். பி ஜி வெற்றிவேல் ஒளிப்பதிவு மற்றும் கே பிரபாகரன் இசை,
இது ஒரு உண்மையான வாழ்க்கை கதை.
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
நாட்டு மக்களின் அரசியல் பொருளாதார மற்றும் சமூக உரிமைகளை அரசாங்கம் மீறி நாட்டின் பக்கச்சார்பற்ற நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும், சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிகளையும்
அரசியல் சதித்திட்டங்களினூடாக அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தி மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவிற்கும், நாட்டின் உயர் நீதிமன்றத்திற்கும், நிதி அமைச்சுக்கும் மற்றும் அரச அச்சகத்திற்கும் கூட இடையூறுகளை ஏற்படுத்தி தேர்தலை சீர்குலைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கு ஆதரவு
தெரிவித்து துணைபோகும் விதமாக தேர்தலை சீர்குலைக்கும் ஜனாதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித தலைவர் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் முறைமை மாற்றமொன்று வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தாலும், தற்போது முறைமை மாற்றம் ஒன்று நிகழாது ராஜபக்சர்களை பாதுகாக்கும் திட்டமொன்றே இயங்கி வருவதாக தெரிவித்த
ஜனாதிபதி மக்களின் மனித உரிமைகளை அப்பட்டமாக மீறிவருகிறார்
எதிர்க்கட்சித்தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்களின் எரிக்கப்பட்ட வீடுகளுக்கு நட்டஈடு வழங்குதல், மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் முழு பதவிக் காலம் முடியும் வரை பொதுத்
தேர்தலுக்கு செல்லாதிருத்தல் என்ற காரணங்களுக்காக மாத்திரமே இந்த ஜனாதிபதி செயற்பட்டுக்கொண்டிருக்கிறார் எனவும் அவர் தெரிவித்தார்.
பொரளை குப்பியாவத்த பிரதேசத்தில் நேற்று (20) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது
இலங்கை மீனவர்கள் அறுவர் இந்தியாவில் கைது
இலங்கை மீனவர்கள் அறுவர் படகு ஒன்றுடன் இந்திய கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இலங்கை எல்லையை தாண்டி இந்திய எல்லைக்குள் சென்றமையால் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று (20) தாருவைகுளம் பகுதிக்கு கொண்டு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
159 வருட பொலிஸ் வீரர் தினம்
159 வருட பொலிஸ் வீரர் தினம்
159 வருட பொலிஸ் வீரர் தினம் கிளிநொச்சியில் இன்று (21) இடம்பெற்றது.
21.03.1984 இதே நாளில் உயிரிழந்த பொலிஸ் உத்தியயோகத்தரான சபான் என்பவரை நினைவுகூறும் வகையில் குறித்த நிகழ்வு இன்று பெற்றது.
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் கலந்து கொண்டு திணைக்கள கொடியை ஏற்றி அரைக்கம்பத்தில் பறக்கவிட்டார்.
தொடர்ந்து உயிரிழந்த அத்தனை பொலிஸ் உத்தியோகத்தர்களையும் நினைவுகூர்ந்து அகவணக்கம் இடம்பெற்றதுடன், பூச்செண்டுகள் வைக்கப்பட்டு நினைவு கூறப்பட்டது.
பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான யோசனை
பாராளுமன்றில் தோற்கடிக்கப்பட்ட ஆங்கில மொழிக்கான யோசனை
இலங்கை சட்டக் கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும் பரீட்சைகளும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட யோசனை தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) காலை நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் இடம்றெ்ற வாக்கெடுப்பின் போது குறித்த யோசனை தோற்கடிக்கப்பட்டது.
ஆங்கில மொழமூலத்தில் பரீட்சைகளும் பாடநெறிகளும் நடத்தப்படவேண்டுமென்ற யோசனைக்கு ஆதரவாக 1 வாக்கும் எதிராக 113 வாக்குகளும் செலுத்தப்பட்டிருந்தது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் சட்டக் கல்லூரி பரீட்சைகள் அனைத்தும் ஆங்கிலத்தில் நடத்தப்பட வேண்டும் என சட்ட அமைச்சராக கடமையாற்றிய அமைச்சர் அலி சப்ரியினால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் பேரில் வர்த்தமானி வெளியிடப்பட்டது.
இதனுடன் தொடர்புடைய வர்த்தமானி 2020 டிசம்பரில் ஒருங்கிணைந்த சட்டக் கல்வி கவுன்சிலால் வெளியிடப்பட்டது.
எவ்வாறாயினும், அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்க்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர் சங்கம் உட்பட பல தரப்பினரும் இந்த நடவடிக்கையை விமர்சித்ததோடு, இது பெரும்பான்மையான மாணவர்களுக்கு நியாயமற்றது என்றும் கருதியமை குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நாளை விசேட உரை
ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நாளை விசேட உரை
சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நாளை (22) விசேட உரை நிகழ்த்தவுள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையையும் ஜனாதிபதி இதன்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
60 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஆசிரியர் பலி
60 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஆசிரியர் பலி
பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பசறை 13 ஆம் கட்டை பகுதியில் இன்று (20) காலை , காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார்.
பசறை கல்வி வலயத்துக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் மகாவித்தியாலயத்தில் கடமையாற்றிய பரணிதரன் (வயது -39) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தமது வீட்டிலிருந்து பாடசாலை கடமைக்கு செல்ல முற்படுகையிலேயே இன்று காலை 7.30 மணியளவில் இக்கோர விபத்து இடம்பெற்றுள்ளது.
60 அடி பள்ளத்தில் பாய்ந்த கார் – ஆசிரியர் பலி
பதுளை- செங்கலடி வீதியின், பசறை 13 ஆவது மைல்கல் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பயணத்தை ஆரம்பித்த குறித்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 60 அடி பள்ளத்தில் பாய்ந்து பிரதான வீதியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் படுகாயமடைந்த குறித்த ஆசிரியர் பசறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவர் இரு பிள்ளைகளின் தந்தையாவார்.
பசறை பொலிஸார் விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த விபத்து இடம்பெற்ற இடத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு இதே
நாளில் பேருந்து விபத்துக்குள்ளாகி 13 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
பொத்துஹெர, கந்தேவத்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளாகிய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (19) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளதுடன், உயிரிழந்தவர் 35 வயதுடைய கஹவத்த, பனாபிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவரின் அருகில் சுட்டுக் கொல்லப்பட்ட முள்ளம்பன்றி ஒன்றின் சடலம், மின்விளக்கு மற்றும் அலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சடலம் பிரேத பரிசோதனைக்காக குருநாகல் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பொத்துஹெர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொதல் பொதியில் இறந்த எலி
தொதல் பொதியில் இறந்த எலி
விடுமுறைநாட்களில் இலட்சக்கணக்கானோர் வந்துசெல்லும் சுற்றுலாத்தளமாக சிவனொளிபாதமலை மாறிவிட்டது.
அவ்வாறு சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைதந்தவர்களில் சிலர், நல்லத்தண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்களை விற்பனை நிலையமொன்றில் தொதல் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை கொள்வனவுச் செய்துள்ளனர்.
அதனை உண்பதற்காக, எடுத்து வெட்டிய போது அந்த தொதல் பொதியில் இறந்த நிலையில் எலி இருப்பதை அவதானித்து உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை பாதிக்கப்பட்டவர்கள் விடுக்கின்றனர். செ.தி.பெருமாள்
விமானி ஆக ஆசைப்பட்டேன்: எதிர்கட்சித் தலைவ
விமானி ஆக ஆசைப்பட்டேன்: எதிர்கட்சித் தலைவர்
அரசியலுக்கு வரவில்லை என்றால் தான் ஒரு விமானி ஆக வேண்டும் என ஆசைப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பயணிகளின் உயிருக்கு விமானி பொறுப்பாளியாக இருப்பது போல் அரசாங்கத்திற்கும் மக்களைப் பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது . அரசாங்கம் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு பதிலாக அதை வலுவற்றதாக்கிக்
கொண்டு இருக்கிறது என கடந்த சனிக்கிழமை கொலன்னாவையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது அவர் தெரிவித்தார்.
யுத்த காலத்தில் கூட அப்போதிருந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்து ஆலோசித்து IMF இன் உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்தியிருந்தார்.
ஆனால் ஒருபோதும் மக்கள் மீது சுமையை ஏற்றும் திட்டங்கள் முன்மொழிவுகளுக்கு அவர் உடன்படவில்லை.
அப்போது இலங்கையின் சொந்த திட்டங்களை IMF விடம் முன்வைக்க அவரால் முடிந்தது. ஆனால் இப்போது IMF முன்மொழியும் திட்டங்களை நாங்கள் நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறோம். அதுதான் இப்போதைய அரசாங்கத்திற்கும் அப்போதைய அரசாங்கத்திற்கும் இருக்கும் வித்தியாசம் என அவர் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இன்று
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இன்று
இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதுடன், இதற்கான அனுமதி தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி video
சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி video
இலங்கை யூருப்பருக்கு சென்னையில் போலீஸ் அதிகாரி செய்த தரமான சம்பவம்
தமிழகம் சென்ற இலங்கை யூட்டுப்பருக்கு விருந்து வைத்த போலீஸ் அதிகாரி .
இலங்கையில் இருந்து தமிழகம் குற்றாலம் பகுதிக்கு சென்ற திவாகரன் மற்றும் சங்கவி தம்பதிகளுக்கு வாழ்வில் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம்பெற்றது .
கேரள நாட்டை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ,தமிழகத்தில் பணி புரிந்து வருகிறார் .
சென்னையில் பிரியாணி விருந்து வைத்த போலீஸ் உயர் அதிகாரி video
இவர்களை கண்ணுற்ற அவர் இந்த தம்பதிகளுக்கு ,சென்னையில் பிரியாணி உணவகத்துக்கு அழைத்து சென்று விருந்து வைத்துள்ளார் .
குறித்த காணொளியானது வைரலாகிய வண்ணம் உள்ளதுடன் ,
குறித்த காவல்துறை அதிகாரிக்கு, மக்கள் பாராட்டுகளையும்
நன்றிகளையும் தெரிவித்த வண்ணம் உள்ளனர் .
இப்படியும் அன்பான காவல்துறை அதிகாரிகள் தமிழகத்தில் இருக்கத்தான் செய்யிறாங்க .
யாழில் இடம்பெற்ற சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு
யாழில் இடம்பெற்ற சர்வதேச அழகி போட்டிக்கான முதல் கட்ட தேர்வு
இலங்கையில் இம்முறை நடைபெறவுள்ள ” Miss Globe 2023 ” சர்வதேச அழகி போட்டிக்கு போட்டியாளர்களை தெரிவு செய்வதற்கான தேர்வு நேற்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.
தேர்வில் யாழ்ப்பாணம் , கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அடுத்த அடுத்த கட்ட தேர்வுகளுக்கு தெரிவு செய்யப்படுவார்கள்.
” Miss Globe 2023 ” சர்வதேச அழகி போட்டிக்கு 75க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இம்முறை இந்த அழகி போட்டி இலங்கையில் மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு
வவுனியா குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு
வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19) அதிகாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலமாக காணப்படுபவர் தொடர்பில் பொலிஸாரின் முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
வவுனியா நகரில் யாசகத்தில் ஈடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளமையுடன் தடவியல் பொலிஸார் மற்றும் நீதவானின் விசாரணைகளுக்காக சடலம் குளத்தின் கரைப்பகுதியிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது .
மீன்பிடி படகில் உயிரிழந்த மீனவர் குறித்து விசாரணை
மீன்பிடி படகில் உயிரிழந்த மீனவர் குறித்து விசாரணை
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பலநாள் மீன்பிடி படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபர் 05 பேருடன் பெப்ரவரி 03 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பாடசாலை சென்ற சிறுமியை வழிமறித்து இளைஞன் செய்த காரியம்
பாடசாலை சென்ற சிறுமியை வழிமறித்து இளைஞன் செய்த காரியம்
காதலிப்பதாக கூறி 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி பாடசாலை சென்ற வேளை குறுக்கிட்ட குறித்த இளைஞர் புதுக்குடியிருப்புக்கு சிறுமி அழைத்துச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு
இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு
நேற்று மாலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
திருமண வீட்டில் மோதல் – ஒருவர் பலி
திருமண வீட்டில் மோதல் – ஒருவர் பலி
நேற்று (17) இரவு அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் படகொட யதவர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மங்கள பிரேமவர்தன என்ற நபராவார்.
சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக படகொட சந்தியில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு துறைமுக நகர மோதலில் ஒருவர் பலி
கொழும்பு துறைமுக நகர மோதலில் ஒருவர் பலி
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இடம்பெற்ற விருந்தின் போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுமார் 25 வயதுடைய இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (17) துறைமுக நகர வளாகத்தில் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின் போது இடம்பெற்ற தாக்குதலில் குறித்த இளைஞன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (18) அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

























