Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

இந்தியா செல்லும் பிரிட்டன் மக்கள் 10 நாள் தனிமை – அதிரடி அறிவிப்பு

இந்தியா செல்லும் பிரிட்டன் மக்கள் 10 நாள் தனிமை – அதிரடி அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி சான்றிதழ் விவகாரத்தில் இங்கிலாந்து முடிவுக்கு, இந்திய அரசு பரஸ்பர நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டினர் 10 நாட்கள் தனிமைப் படுத்தப்படுவார்கள்: இந்தியா பரஸ்பர நடவடிக்கை எனத் தகவல்

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் தடுப்பூசிகள் மிகப்பெரிய அளவில் செலுத்தப்பட்டு வருகிறது. சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியை தயாரித்து

வருகிறது. இந்த தடுப்பூசியை இங்கிலாந்து நிறுவனம் கண்டுபிடித்தது. ஆனால் இந்தியாவில் தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய வெளிநாட்டு நபர்கள் இங்கிலாந்து வந்தால் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்லும் தொழில் அதிபர்கள், மாணவர்களுக்கு சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து இந்திய அரசு பலமுறை இங்கிலாந்திடம் பேசி பார்த்தது. ஆனால், இங்கிலாந்து அரசு இந்தியாவின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் இங்கிலாந்து நாட்டினர் இந்தியாவுக்கு வந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பரஸ்பர நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நடைமுறை அக்டோபர் 4-ந்தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக தெரிகிறது.

    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள் குற்ற செய்திகள்

    கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

    கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

    தேர்வு எழுதச் சென்ற மாணவி கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சோக சம்பவம் கேரள மாநிலம் கோட்டயத்தில் நடந்துள்ளது.

    கேரளாவில் கொடூரம்: கல்லூரி வளாகத்திற்குள் மாணவியை குத்திக் கொலை செய்த நபர்

    கேரள மாநிலம் கோட்டயம் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் 21 வயதான மாணவி ஒருவர் படித்து வந்தார்.

    இவர் தேர்வு எழுதுவதற்காக கல்லூரி சென்றுள்ளார். அபிஷேக் என்ற நபர் கல்லூரி

    வளாகத்திற்குள் வைத்து அந்த மாணவியிடம் பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

    திடீரென அபிஷேக் மறைத்து வைத்திருந்த கத்தியால் அந்த மாணவியின் கழுத்து பகுதியில் குத்தினார்.

    இதில் மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண்ணிற்கும் அபிஷேக்கிற்கும் இடையில் ஏற்கனவே பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது,

    இதேபோன்ற சம்பவத்தால் சமீபத்தில் சென்னை தாம்பரம் ரயில் நிலையம் அருகில் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

      Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

      உத்தரகாண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமனம்

      உத்தரகாண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமனம்

      உத்தரகாண்டின் ஆளுநராக பதவி வகித்து வந்த பேபி ராணி மவுரியா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

      உத்தரகாண்ட் புதிய ஆளுநராக குர்மீத் சிங் நியமனம்
      ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

      உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் மந்திரி புஷ்கர்சிங் தாமி தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தின் 7-வது ஆளுநராக 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 26-ம் தேதி முதல்

      பதவி வகித்து வந்தவர் பேபி ராணி மவுரியா (65). இவர் நேற்றுமுன்தினம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு அவர் அனுப்பி வைத்தார்.

      இவர் மார்கரெட் ஆல்வாவுக்கு பின்னர் அந்த மாநிலத்தில் பதவி வகித்த 2-வது பெண் ஆளுநர் ஆவார். இன்னும் 2 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், பேபி ராணி மவுரியா பதவி விலகி இருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.

      இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில், உத்தரகாண்டின் ஆளுநராக ஓய்வுபெற்ற லெப்டினென்ட் ஜெனரல் குர்மீத் சிங் நியமனம் செய்யப்பட்டு உள்ளார் என ராஷ்டிரபதி பவன் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

      இதேபோல், அசாம் ஆளுநராக பதவி வகித்து வரும் ஜகதீஷ் முகி கூடுதலாக, நாகாலாந்து ஆளுநர் பொறுப்பினை ஏற்க உள்ளார்.

      நாகாலாந்து ஆளுநராக செயல்பட்டு வந்த ஆர்.என். ரவி தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

      கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்

      கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்

      திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது.

      மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களுக்கு தீ வைப்பு- திரிபுராவில் பதற்றம்
      தீப்பிடித்து எரியும் வாகனங்கள்

      திரிபுரா மாநில தலைநகர் அகர்தலா மற்றும் சில மாவட்டங்களில் இன்று கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் அகர்தலாவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகம் மற்றும்

      கிளை அலுவலகம் ஆகியவற்றுக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டன. இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

      திரிபுராவின் சில பகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் பாஜகவினருக்கும் இடையே சமீபத்தில் மோதல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அகர்தலாவில் பாஜக சார்பில்

      இன்று ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியால் பிரச்சனை உருவானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களை கடந்து பேரணி சென்றபோது வன்முறை ஏற்பட்டுள்ளது.

      பாஜகவினர் மார்க்சிஸ்ட் அலுவலகங்களுக்கு தீ வைத்ததாக அக்கட்சி குற்றம்சாட்டி உள்ளது. இதேபோல், மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இருந்து வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக பாஜக கூறி உள்ளது.

        Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

        பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

        பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

        பெரியாரின் குருகுல பயிற்சிதான் திமுகவை உருவாக்கியது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.

        பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாளாக கொண்டாடப்படும்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
        முக ஸ்டாலின்
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        சென்னை

        பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டசபையில் விதி எண் 110ன் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது:

        • செப்டம்பர் 17ந் தேதி தலைமைச்செயலகம், அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்படும்.

        பெரியார்

        • இந்தியா முழுவதும் சமூக நீதி பரவ அடித்தளம் அமைத்தவர் பெரியார்.
        • பெரியார் எழுதிய எழுத்துகள், பேசிய பேச்சுகள் யாரும் எழுத, பேச தயங்கியவை ஆகும்.
        • பெரியாரின் போராட்டம் குறித்து பேசுவது என்றால் அவையை 10 நாட்கள் ஒத்திவைத்துவிட்டு பேச வேண்டும்.
          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

          தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

          தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு

          தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 27,397 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

          இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13,51,362 ஆக உயர்ந்துள்ளது.

          தமிழகத்தில் கொரோனாவால் இன்று 241 பேர் உயிரிழந்தனர். சென்னையில் மேலும் 6,846 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

          இந்த சூழலில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக வரும் மே 10-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

          இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதற்கட்டமாக ரூ.59.30 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி மாநகராட்சிகளுக்கு ரூ.14 கோடி, சிறப்பு மற்றும்

          தேர்வு நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல் மற்றும் இரண்டாம் நிலை நகராட்சிகளுக்கு ரூ.22.8 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

          மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இந்த நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

            Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

            தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு

            தமிழகத்தில் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு

            தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

            • கொரோனா பரவலை தடுக்க வரும் 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

            • தமிழகத்தில் இரண்டு வாரங்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது.

            • உணவகங்களில் பார்சல் வழங்க அனுமதி

            • காய்கறி கடை, மளிகை கடை, தேநீர் கடை நண்பகல் 12 மணி வரை மட்டுமே செயல்படும்.

            • அழகு நிலையம், முடி திருத்தும் கடைகள் இயங்காது.

            இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

              Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

              முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள்

              முதல்வர் ஆனதும் மு.க.ஸ்டாலின் பிறப்பித்த 5 அரசாணைகள்

              தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றவுடன், தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்தார். அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள்

              வரவேற்றனர். முதலமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் முதலமைச்சர், தமிழக மக்களின் வாழ்வில் புது ஒளியை ஏற்படுத்தும் வகையில் 5 முக்கிய அரசாணைகளைப் பிறப்பித்தார்கள்.

              அவை தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையிலும், கொரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு உதவும் வகையிலும் அமைந்திருக்கின்றன. அவற்றின் விவரம் பின்வருமாறு:

              1. கொரோனா அச்சுறுத்தல் தற்போது உயர்ந்து வரும் நிலையில், மக்களின் இன்னல்கள் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல்
              2. அளிக்கும் வகையில் 4,000 ரூபாய் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,67,000 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் முதலமைச்சர் கையொப்பமிட்டுள்ளார்.

              ஆவின் பால்

              1. தேர்தல் அறிக்கையில் அளித்திருக்கும் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் மக்களின் நலன் கருதி, ஆவின் பால் விலையை லிட்டர் ஒன்றுக்கு மூன்று ரூபாய் வீதம் 16.5.2021 முதல் குறைத்து விற்பனை செய்ய முதலமைச்சர் அரசாணை பிறப்பித்துள்ளார்கள்.
              2. தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினைச் செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி
              3. பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் நாளை முதல் பயணம் செய்ய முதலமைச்சர் ஆணை
              4. பிறப்பித்துள்ளார்கள். இதன் மூலம் போக்குவரத்துக் கழகங்களுக்கு ஏற்படும் கூடுதல் செலவுத் தொகையான 1,200 கோடி ரூபாயை மானியமாக வழங்கி அரசு ஈடுகட்டும்.
              5. முதலமைச்சர் தேர்தல் பரப்புரையின்போது மாவட்டந்தோறும் மக்களின் பல்வேறு
              6. பிரச்சினைகள் தொடர்பான மனுக்களைப்பெற்று, அம்மனுக்களின் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை அளித்துள்ளார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், ‘உங்கள் தொகுதியில்
              7. முதலமைச்சர்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு இந்திய ஆட்சிப் பணி நிலை அலுவலர் ஒருவரை நியமிக்கும் அரசாணைக்கு முதலமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார்.
              8. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் பலரும் அரசு மருத்துவமனைகள் மட்டுமின்றி தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,
              9. பொதுமக்களின் நலன் கருதி அவர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில் சிகிச்சைக்கான மருத்துவமனை கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் ஏற்க முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

              இதன்படி மாண்புமிகு முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், அனைத்து வகையான கொரோனா நோய் சிகிச்சை செலவுகளையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அரசு மீள வழங்கும்.

              Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

              மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின்

              மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின்

              கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

              வாக்களித்த மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம் – முக ஸ்டாலின் பேட்டி
              கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஸ்டாலின்

              தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டன.

              சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார். அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி

              மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.

              வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். திமுக தலைவர் முக ஸ்டாலின் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்றார்.

              அதிமுக சார்பில் போட்டியிட்ட ஆதி ராஜாராம் 34,462 வாக்குகள் பெற்றார். இதன்மூலம் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முக ஸ்டாலின் வெற்றி பெற்றார்.

              வெற்றி சான்றிதழைப் பெறும் முக ஸ்டாலின்

              நேற்று நள்ளிரவில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற லயோலா கல்லூரிக்கு சென்ற திமுக தலைவர் ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை பெற்றுக் கொண்டார்.

              அதைத்தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்துக்கு சென்று வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து மரியாதை செலுத்தினார்.

              அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முக ஸ்டாலின் கூறியதாவது:

              திமுகவின் வெற்றிக்கு வித்திட்ட அனைவருக்கும் நன்றி. மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப பொறுப்பை உணர்ந்து செயல்படுவோம்.

              10 ஆண்டுகள் அடிப்படையில் வெளியிடப்பட்ட 7 அறிவிப்புகள் நிறைவேற்றப்படும். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

              எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தை கூட்டி தலைவரை முறையாக தேர்ந்தெடுப்போம். கொரோனா பரவல் என்பதால் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும்

              வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார்.

                Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

                தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்

                தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

                தமிழகத்தில் திமுக ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தகவல்
                எடப்பாடி பழனிசாமி- முக ஸ்டாலின்.
                சென்னை:

                தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. தமிழகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

                அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி என மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

                294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் மார்ச் 27, ஏப்ரல் 1-ந்தேதி, ஏப்ரல் 6-ந்தேதி, ஏப்ரல் 10-ந்தேதி, ஏப்ரல் 17-ந்தேதி, ஏப்ரல் 22-ந்தேதி, ஏப்ரல் 26-ந்தேதி, ஏப்ரல் 29-ந்தேதி (இன்று) என 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

                இன்று கடைசி கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்ததும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியிடப்பட்டது.

                திமுக கூட்டணி 160 முதல் 170 இடங்கள் வரை கைப்பற்றும் என ரிபப்ளிக் – சிஎன்எக்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                அதிமுகவுக்கு 58 முதல் 68 இடங்களும் அமமுக 4-6, மநீம+0-2: இடங்கள் வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

                மூன்று நிறுவனங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பு விவரம்:

                தகவல்கள்

                திமுக+

                அதிமுக+

                அமமுக+

                ஏ.பி. நியூஸ்- சி வோட்டர்

                160-172

                58-71

                0

                பி.மார்க்

                165-190

                40-65

                1-3

                ரிபப்ளிக் டிவி- சிஎன்எக்ஸ்

                Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                ராகுல் காந்திக்கு கொரனோ – வைரலாகும் வைரஸ்

                ராகுல் காந்திக்கு கொரனோ – வைரலாகும் வைரஸ்

                இந்தியாவில் சமீப நாட்களில் கொரனோ நோயானது மிக வேகமாக பரவி வருகிறது ,இந்த

                நோயின் தாக்குதலில் சிக்கி பல பிரபலங்கள் பாதிக்க பட்டும் அதே வேளை இறந்தும் உள்ளனர்

                இவ்வாறான கால பகுதியில் காங்கிரஸ் கட்சி முக்கியஸ்தராக விளங்கும் ராகுல் காந்திக்கு

                கொரனோ வைரஸ் தொற்றியுள்ளதாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளார்

                  Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                  காட்டுக்குள் கடும் சண்டை 22 இந்திய இராணுவம் பலி -தொடரு ம் வேட்டை

                  காட்டுக்குள் கடும் சண்டை 22 இந்திய இராணுவம் பலி -தொடரு ம் வேட்டை

                  மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

                  சத்தீஸ்கரை அதிர வைத்த என்கவுண்டர்… வீரர்கள் பலி 22 ஆக உயர்வு
                  துப்பாக்கி சண்டை நடந்த பகுதி
                  ராய்ப்பூர்:

                  சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. அங்குள்ள காட்டுப்பகுதிகளில் பதுங்கி இருக்கும் மாவோயிஸ்டுகளை பிடிக்க சி.ஆர்.பி.எப். பாதுகாப்பு படையினர் தேடுதல்

                  வேட்டை நடத்தி வருகிறார்கள். சுக்மா, பிஜப்பூர், தண்டேவாடா உள்ளிட்ட மாவட்டங்களின் காட்டுப் பகுதிகளில் பாதுகாப்பு படையினர் முகாமிட்டு கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

                  இந்த நிலையில் நேற்று சி.ஆர்.பி.எப்.பின் சோப்ரா கமாண்டோ படை, மாவட்ட ரிசர்வ் படை மற்றும் சிறப்பு அதிரடிப்படை உள்ளிட்ட படைப் பிரிவுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பல்வேறு குழுக்களாக பிரிந்து காட்டுப் பகுதிகளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

                  சுக்மா-பிஜப்பூர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டபோது அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்டுகள் திடீரென்று துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். உடனே சுதாரித்துக் கொண்ட பாதுகாப்பு படையினர் எதிர் தாக்குதல் நடத்தினர். இருதரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.

                  துப்பாக்கி சண்டை நடந்த பகுதி

                  மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இதில் 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும் காயம் அடைந்த 30 பாதுகாப்பு படை வீரர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

                  பல வீரர்களை காணவில்லை. அவர்கள் காட்டுக்குள் வழி தவறி சிக்கினார்களா? அல்லது ஆபத்தில் இருக்கிறார்களா? என்பது தெரியாமல் இருந்தது. அவர்களை மீட்கும் பணியை தீவிரப்படுத்தினர். அதேசமயம், தப்பி ஓடிய மாவோயிஸ்டுகளை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

                  அதேசமயம், பாதுகாப்பு படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 9 மாவோயிஸ்ட்டுகள் கொல்லப்பட்டார்கள். இதில் ஒரு பெண் மாவோயிஸ்டும் அடங்கும்.

                  இந்த நிலையில் காணாமல் போன வீரர்களில் 17 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதன்மூலம், உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்கள் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. 22 வீரர்கள் உயிரிழந்ததை பிஜப்பூர் எஸ்பி கமலோச்சன் காஷ்யப் உறுதி செய்தார்.

                  மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் உயிரிழந்த பாதுகாப்பு படை வீரர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதில் வீரர்களின் தியாகம், என்றென்றும் நினைவில் கொள்ளப்படும். காயமடைந்த வீரர்கள் விரைந்து குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார்.

                  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியதாவது:

                  சத்தீஷ்கரில் மாவோயிஸ்டுகளுடன் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த நமது துணிச்சலான பாதுகாப்பு படை வீரர்கள் தியாகத்திற்கு நான் தலை வணங்குகிறேன்.

                  அவர்களின் வீரத்தை தேசம் ஒருபோதும் மறக்காது. அவர்கள் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

                  அமைதி மற்றும் முன்னேற்றத்தில் எதிரிகளுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன், என்று கூறி உள்ளார்.

                    Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                    ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

                    ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

                    திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசனுக்கு சொந்தமான 2 அலுவலகம் உள்பட 5 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

                    மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
                    முக ஸ்டாலின் மகள் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
                    சென்னை:

                    தமிழக சட்டசபை தேர்தல் வருகிற 6-ந் தேதி நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் 3 நாட்களே இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.

                    அதேநேரத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.

                    தேர்தலில் பண வினியோகத்தைக் கட்டுப்படுத்த பறக்கும் படையினர் வீதி வீதியாக சோதனை நடத்தி வரும் நிலையில், வருமான வரித்துறையினரும் தங்களுக்கு கிடைக்கும் ரகசிய தகவலின் அடிப்படையில் கடந்த சில நாட்களாக தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

                    அந்த வகையில் திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 16 இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடைபெற்றது.

                    திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் எ.வ.வேலுவை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்று இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தங்கி இருந்த கல்லூரியிலேயே சோதனை நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

                    இந்தநிலையில் மு.க. ஸ்டாலினின் மகள் செந்தாமரை மருமகன் சபரீசன் ஆகியோர் வசிக்கும் நீலாங்கரை வீட்டில் இன்று வருமானவரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

                    காலை 7 மணி அளவில் நீலாங்கரையில் உள்ள செந்தாமரை இல்லத்துக்கு சென்ற வருமான வரித்துறையினர் அங்கு பணம் எதுவும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது பற்றி அதிரடி சோதனை நடத்தினார்கள். வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை நடைபெற்றது.

                    அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் மோகன் எம்.எல்.ஏ.வின் மகன் கார்த்திக் மோகன் மற்றும் ஜி ஸ்கொயர் பாலா உள்ளிட்டோரின் வீடுகள் உள்பட 4 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

                    வருமானவரித்துறையினர் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளனர்.

                    அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளரும் தொழில் அதிபருமான சந்திரசேகரன் வீட்டில் நடைபெற்ற சோதனையில் ரூ.8 கோடி பணம் சிக்கியது.

                    இதேபோன்று அமைச்சர் எம்.சி.சம்பத்தின் உறவினரான இளங்கோவனுக்கு சொந்தமான இடங்களிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி ரூ.8 கோடி வரை பணத்தை கைப்பற்றினார்கள்.

                    இந்தநிலையில்தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

                    மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசனுக்கு கார்த்திக் மோகன், ஜி ஸ்கொயர் பாலா ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகிறார்கள்.

                    அந்த அடிப்படையில் தான் சபரீசன் வீட்டில் சோதனை நடைபெற்ற அதே நேரத்தில் இவர்களது வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

                      Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                      மோடிக்கு எதிரான ஆர்ப்படத்தில் 10 பேர் மரணம் – பல டசின் பேர் காயம்

                      மோடிக்கு எதிரான ஆர்ப்படத்தில் 10 பேர் மரணம் – பல டசின் பேர் காயம்

                      பங்களாதேசுக்கு அரச முறை பயனைத்தை மேற்கொண்டு சென்றுள்ள மோடிக்கு எகிரக மக்கள் நடத்தி வரும்

                      ஆர்ப் பாட்டத்தில் சிக்கி இதுவரை பத்து பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலடசின் பேர் படுகாயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன

                      இந்த மக்கள் கண்டன போராட்டம் இந்தியா பிரதமர் மோடிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                        Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                        மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

                        மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

                        பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக நேற்று வங்காளதேசத்திற்கு சென்றுள்ளார். வங்காள தேசத்தின் 50-வது தேசிய தின விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த பயணம் அமைந்துள்ளது.

                        நேற்று காலை பிரதமர் மோடி அங்குள்ள தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்றுள்ளார். கொரோனா பரவத் தொடங்கிய பிறகு அவர் கடந்த ஓராண்டாக எந்த வெளிநாட்டுக்கும் செல்லவில்லை.

                        வங்காள தேசத்தின் 50-வது சுதந்திர தினம் மற்றும் அந்நாட்டின் தேசத் தந்தை ஷேக் முஜிபூர் ரகுமானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வருமாறு பிரதமர் மோடிக்கு வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அழைப்பு விடுத்ததையடுத்து நேற்று அவர் வங்காள தேசத்திற்குச் சென்றுள்ளார்.

                        நேற்று காலை வங்காளதேச தலைநகர் டாக்காவிற்கு தனி விமானம் மூலம் சென்ற பிரதமர் மோடியை வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா விமான நிலையத்திற்கே சென்று வரவேற்றார்.

                        இதனை தொடர்ந்து வங்காளதேசத்தின் தேசிய போர் நினைவிடத்திற்குச் சென்ற பிரதமர் மோடி, போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

                        இதற்கிடையே, பிரதமர் மோடியின் வருகைக்கு எதிராக அந்த நாட்டின் தலைநகர் டாக்காவில் மாணவர்கள் உள்பட சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

                        டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையிலான மோதலில் 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.

                        காயமடைந்த அனைவரும் டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போராட்டம் தொடர்பாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டக்காரர்கள் அணிவகுப்பு நடத்திய நிலையில் போலீசார் அவர்களை கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி கலைத்தனர்.

                        பிரதமர் மோடி வருகைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின் போது போராட்டக்காரர்கள்மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

                        போராட்டக்காரரகள் ஒரு போலீஸ் நிலையத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடததினர். நாங்கள் அவர்களைக் கலைக்க கண்ணீர்ப் புகைகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைச் சுட வேண்டியிருந்தது என போலீஸ் அதிகாரி ரபிகுல் இஸ்லாம் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

                          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                          தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம்

                          தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி பறிமுதல் – தேர்தல் ஆணையம்

                          தமிழகம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது

                          . இதையடுத்து, தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களில் 295 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

                          இந்நிலையில், தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இதுவரை ரூ.331 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

                          இதில், தமிழகத்தில் அதிகபட்சமாக ரூ.127.64 கோடி மதிப்புள்ள பொருட்கள் மற்றும் பணமும், மேற்கு வங்காளத்தில் ரூ.112.59 கோடி மதிப்புள்ள பொருட்களும், அசாமில் ரூ.63 கோடியே ரூ.75

                          லட்சமும், கேரளாவில் ரூ.21 கோடியே 77 லட்சமும், புதுச்சேரியில் ரூ.5 கோடியே 72 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

                          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                          இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

                          இந்தியாவில் ஒரே நாளில் 20 இலட்சம் பேருக்கு தடுப்பூசி

                          இந்தியாவில் கோவிஷீல்டு, கொவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் வழங்கி, அவை கடந்த ஜனவரி மாதம் 16ஆம் திகதி முதல் பயன்பாட்டில் இருந்து வருகின்றன.

                          தடுப்பூசி திட்டத்தின் 52ஆவது நாளான நேற்று முன்தினம் (08) ஒரே நாளில் 2,019,723 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

                          இதுதான் ஒரு நாளின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இவர்களில் 1,715,380 பேர், 28,884 அமர்வுகள் மூலம் முதல் டோஸ் தடுப்பூசியை செலுத்தப்பெற்றனர்.

                          மேலும் 304,343 சுகாதார பணியாளர்களும், முன்கள பணியாளர்களும் தடுப்பூசியின் 2ஆவது டோஸ்களை

                          பெற்றுக்கொண்டனர். நேற்று காலை 7 மணி நிலவரப்படி நாடு முழுவதும் இதுவரையில் 2,308,733 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

                          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                          சட்டசபை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி.

                          சட்டசபை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி.

                          தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணிக் கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்து வருகின்றன.

                          தமிழக சட்டசபை தேர்தல் – மக்கள் நீதி மய்யம் 154, சமக 40, ஐஜேகே 40 தொகுதிகளில் போட்டி
                          கமல்ஹாசன்
                          சென்னை:

                          தமிழக சட்டசபை தேர்தலில் கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது.

                          இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி 154 இடங்களிலும், சமக மற்றும் ஐஜேகே ஆகியவை தலா 40 இடங்களில்

                          போட்டியிட உள்ளன. இதற்கான ஒப்பந்தம் சென்னையில் கையெழுத்தாகி உள்ளது.

                          இந்த ஒப்பந்தத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பொது செயலாளர் குமரவேல், சமக சார்பில் சரத்குமாரும், ஐஜேகே சார்பில் ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்டனர்.

                          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                          பாஜகவுக்கு 20 தொகுதிகள்-சூடு பிடிக்கும் தேர்தல்

                          பாஜகவுக்கு 20 தொகுதிகள்-சூடு பிடிக்கும் தேர்தல்

                          தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் வரும் 12-ம் தேதி

                          தொடங்க உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது.

                          ஆளும் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்கனவே பேசி வந்தனர்.

                          அ.தி.மு.க.- பா.ஜ.க. இடையே தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை கடந்த வாரம் தொடங்கியது. பா.ஜ.க. போட்டியிட

                          விரும்பும் தொகுதிகள் குறித்த விவரத்தை அக்கட்சியின் தலைவர்கள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் கொடுத்துள்ளனர். விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

                          இந்நிலையில், அ.தி.மு.க. – பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு முடிந்துள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது.

                          அ.தி.மு.க. தரப்பில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மற்றும் பா.ஜ.க. சார்பில் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி, எல்.முருகன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ள அறிக்கை வெளியானது.

                          அதில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகள் எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு, ஒப்பந்தமாகியுள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில்

                          பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

                          மேலும், மக்களவை தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி தொகுதி அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்ற பா.ஜ.க.வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.

                          ஏற்கனவே அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. 23 இடங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது

                          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

                          60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

                          60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி

                          தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தொடங்கியது.

                          முதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

                          இதற்கிடையே, 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

                          இந்நிலையில், தமிழகத்தில் இன்று முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், இணை நோய்கள் கொண்ட 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளது.

                          இதற்காக மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. அதன் அடிப்படையில்

                          மாவட்டங்களில் முதியவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணியை முறையாக மேற்கொள்ள பொது சுகாதாரத் துறை

                          இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

                          இந்த தடுப்பூசி போட முதியவர்கள் தங்களது ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் கார்டு உள்ளிட்டவைகள்

                          கொண்டு ‘கோவின்’ செயலியில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவு செய்ய இயலாதவர்கள் தடுப்பூசி போடும்

                          இடத்துக்கு நேரடியாகவும் சென்று பதிவுசெய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் எனவும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.