Posted in இலங்கை செய்திகள்

ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்கிறது: சிவக்தி ஆனந்தன் எம்.பி

ஊடகவியலாளர் மீதான அடக்குமுறை தொடர்கிறது: சிவக்தி ஆனந்தன் எம்.பி

இந்த அரசாங்கத்திலும் ஊடகவியலாளர் மீதான அடக்கு முறை தொடர்வதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

வவுனியா பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பொது அமைப்புக்களிற்கான உபகரணங்களை வழங்கி வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் உரையாற்றும் போது,

ஊடகவியலாளர்கள் மீதான கடத்தல்களும், கைதுகளும் தற்போதும் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றது. வவுனியாவை சேர்ந்த ஊடகவியலாளரும் அவருடைய மனைவியும் தற்போது விசாரணைக்கு அழைக்கபப்பட்டிருக்கிறார்கள். கடந்த யுத்த காலத்திலும் கூட 35க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான நீதி இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

கடந்த நான்கரை வருடகாலமாக நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்திலும் கூட கடந்த அரசாங்கத்தினால் கொலைசெய்யப்பட்ட 35 ஊடகவியலாளர்களின் விசாரணைகள் நடைபெறவில்லை. ஆகவே இந்த நல்லாட்சிக்கு ஆதரவு வழங்கிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களாலும் கூட அவர்களிற்கான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை. தொடர்ந்தும் அதே நிலைமை தான் நீடித்துக்கொண்டு இருக்கிறது.

ஆகவே அரசாங்கம் ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டதாகவும் அவர்களை சுதந்திரமாக எழுதுவதற்கும் பணியாற்றுவதற்கும் சந்தர்ப்பம் வழங்குவதாக தெரிவித்த போதிலும், ஊடகவியாலாளர்கள் மீதான கைதுகளும் விசாரணைகளும் தொடர்ந்து கொண்டு இருப்பதை அனுமதிக்க முடியாது. ஆகவே ஊடகவியாலாளர்கள் சுதந்திரமாக பணியாற்றுவதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

புதிய கட்சியை ஆரம்பித்த சஜித் – ஆட்டத்தை ஆரம்பிதார் .

புதிய கட்சியை ஆரம்பித்த சஜித் – ஆட்டத்தை ஆரம்பிதார் .

எதிர்வரும் பாரளுமன்ற டெஹ்ரதல் இடம்பெறவுள்ள நிலையில் யானை கட்சிக்குள் இடம்பெற்று வந்த அதிகார பகிர்வு மோதலை

அடுத்தும் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித்தின் வெற்றியை தோற்கடித்த ரணிலின் குள்ள நரித்தனத்தை கண்டு

பிடித்த சஜித் அணியினர் தற்பொழுது புதிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற காட்சியை நிறுவி எதிர்வரும் பாராளும்னற தேர்தலை முதன் முதலாக சந்திக்கிறது .

இந்த கட்சியியல் சம்பிக்க ரணவக்க ,பொன்சேகா ,மற்றும் முஸ்லீம் கட்சிகள் கூட்டணி ஒன்று இணைந்து தேர்தலை சந்திக்கின்றன

இந்த கட்சியின் பலம் எதிர்வரும் தேர்தலில் தெரிய வரும் என எதிர்பார்க்கலாம்

புதிய கட்சியை ஆரம்பித்த
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் வருகிறது: மஸ்தான் எம்.பி இப்படி சொல்கிறார்

தேர்தல் வருகிறது: மஸ்தான் எம்.பி இப்படி சொல்கிறார்

ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுபான்மை மக்களிடம் அதாவது அரசியலை மார்க்கமாக, சமயமாக பார்க்க வேண்டிய நிலைமைக்கு எங்களுடைய தலைவர்களும், அரசியல்வாதிகளும் திணித்தார்கள். மார்க்கம் வேறு அரசியல் வேறு. நன்றாக நாங்கள் இதை எதிர்காலங்களில் தெரிந்து கொண்டு நடக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பல இடங்களில் பல திட்டங்கள் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்துகின்ற போதும் காலப்போக்கில் கிராம மக்கள் பயனடைவதில்லை. ஒழுங்காக பயனடையாததனால் இந்த திட்டங்களை சில இடங்களில் மறுபடியும் செயல்படுத்தும் போது அதிகாரிகள் அதற்கு சில காரணங்கள் சொல்ல வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள். எமது நாட்டினுடைய தேவைப்பாடுகள், அபிவிருத்திகள், நாட்டின் பொருளாதார தன்மையை ஸ்தீரணப்படுத்துவதற்காக தொடர்ச்சியாக நான் பிரதி அமைச்சராக இருந்ததாலும், கடந்த அரசுக்கு எங்களுடைய ஆதரவை வழங்க முடியாத ஒரு நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டு அதிலிருந்து நாங்கள் பிரதமர் மகிந்த ராஜபக்ச அவர்களை ஐம்பத்து நான்கு நாட்கள் திட்டத்தில் பிரதமராக்கி அவர்களுடன் இருந்து பொருளாதாரம் வீழ்ச்சி நோக்கி செல்லும் போது அதனை நாங்கள் கட்டி எழுப்பும் முயற்சிகளை அன்றைய ஜனாதிபதி அவர்கள் எடுத்தார்கள்.

இந்த நாட்டினுடைய சட்ட திட்டத்திற்கு அது உடன்படவில்லை. தொடர்ச்சியாக பயணிக்க முடியாவிட்டாலும் நாங்கள் கடந்த காலத்திலிருந்த முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்க முடியாது என்று நாங்கள் வெளிநடப்பு செய்ததில் நானும் ஒருவன். அந்த அடிப்படையில் உங்களுக்கு தெரியும் சென்ற அரசில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் அதே போல பிரதி அமைச்சர் எதிர்க்கட்சியில் இருந்தோம். இப்போது மீண்டும் அரசியல் சுழற்சியில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக நாங்கள் மாறியிருக்கிறோம்.

அதிகாரத்தை தருவதும் இறைவன். அதிகாரத்தை எடுப்பதும் இறைவன். அதனை நாங்கள் நம்புவதாக தான் இருக்கின்றோம். அந்த அடிப்படையில் இன்று அதிகாரம் இந்த வன்னி மாவட்டத்தில் எனக்கு தரப்பட்டிருந்தாலும் என்னுடைய செயல்பாடுகளை நான் மிகவும் நிதானமாக ஒவ்வொருவருக்கும் இறைவன் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு விதமான கொடுத்து சோதனைக்கும் உட்படுத்தும் காலமாக இருக்கும்.

உங்களுக்கு தெரியும் பலருக்கு அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அந்த அதிகாரங்களை அவர்கள் எவ்வாறு பாவித்தார்களோ, இல்லையோ, ஆனால் மக்களுக்குரிய தேவைப்பாடுகளை அந்தந்த அதிகாரத்தில் இருந்தவர்கள் கொண்டு வந்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில் நாங்கள் எடுத்து பார்க்கும் போது உங்களுக்கு தெரியும் பல அமைச்சர்கள் செய்திருக்கிறார்கள். அதேபோல முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீன் உட்பட பல வேலைத்திட்டங்களை செய்துதான் இந்த பகுதி கிராமங்கள் இவ்வளவு முன்னேறி இருக்கின்றது. அதில் எந்தவிதமான மாற்று கருத்துக்களும் இல்லை.

ஆனாலும் அன்று செய்த அவர்களுடைய ஆதரவாளர்களோ அல்லது நேரடியாக பணிக்கப்பட்ட சில செயற்பாடுகளும், திணிக்கப்பட்ட சில திட்டங்களும் இன்று இந்த நிலையை ஏற்படுத்தி இருப்பது என்பது உங்களுக்கு தெரியும்.

எனவே நாங்களும் தொடர்ச்சியாக கூறுகின்றோம். எமது இந்த அதிகாரங்கள் யாருக்கு இறைவன் கொடுத்தாலும் நாங்கள் அந்த மக்களை சார்ந்தவர்களாக இருந்து அந்த மக்களிடமிருந்து கேட்டு அந்த கிராமத்திற்கு என்ன தேவையோ அதை செய்யக்கூடியவையாக தான் எனது செயற்பாடுகள் இருக்கின்றன.

தொடர்ச்சியாக ஒவ்வொரு சமூகமும் ஒவ்வொரு விதமாக பார்க்கின்றது. கிட்டத்தட்ட ஆயிரத்தி நானூற்றி இருபத்தி நான்கு கிராமங்களில் வன்னி மாவட்டத்தில் மக்கள் இருக்கிறார்கள். அனைத்து கிராமங்களுக்கும் நாங்கள் தேவைகளை செய்ய வேண்டும்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சில கட்சிகளை சார்ந்தவர்கள் தவறாக பிரச்சாரங்களை ஊட்டுவார்கள். என்னை பொறுத்தளவில் எந்த கிராமத்துக்கும் எது தேவையோ நான் அதை அடையாளப்படுத்தி செய்வேன். ஏனென்றால் கடந்த காலம் பிரதி அமைச்சராக இருக்கின்ற போது இறைவனுடைய உரிமையோடு என்னால் முடிந்ததை செய்திருக்கின்றேன்.

அந்த அடிப்படையில் எதிர்காலங்களில் இறைவன் தந்திருக்கின்ற இந்த அதிகாரத்தை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே அவர்களுடைய எண்ண கருவில் அதே போல பிரதமர் மகிந்த ராஜபக்சே அவர்களுடைய ஒரு திட்டமிட்ட அபிவிருத்தி என்கிற பாதையை எதிர்காலத்தில் வன்னி மாவட்டத்திலே பாரிய திட்டங்களை செய்வதற்குரிய நாங்கள் முன் மொழிவுகளையும் தற்பொழுது கொடுத்துக்கொண்டிருக்கின்றோம்.

சாதாரண தரம் சித்தி அடையாதவர்களுக்கு அரச வேலைவாய்ப்பு கொடுப்பது என்பது பாரிய பிரச்சனையாக தான் எமது பகுதிகளில் இருந்தது. இளைஞர்களுக்கு உரிய வேலை வேலைவாய்ப்பு துரிதமாக விரைவாக வழங்குவதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

அதேபோல் ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளமான வீதிகள் திருத்தம் செய்யப்படுகின்றது. பதினொரு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்ததனால் கிட்டத்தட்ட அது ஒரு ஆயிரம் கிலோ மீட்டர்களை இந்தப் பகுதிக்கு கொண்டு வரக்கூடிய ஒரு நிலைமை இறைவன் உதவியுடன் கொண்டு வந்திருக்கின்றோம்.

ஜனாதிபதி தேர்தலில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுபான்மை மக்களிடம் அதாவது அரசியலை மார்க்கமாக, சமயமாக பார்க்க வேண்டிய நிலைமைக்கு எங்களுடைய தலைவர்களும், அரசியல்வாதிகளும் திணித்தார்கள்.

மார்க்கம் வேறு அரசியல் வேறு நன்றாக நாங்கள் இதை எதிர்காலங்களில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆளுங்கட்சி சார்ந்தவராக ஒவ்வொருமுறையும் இறைவன் ஆளுங்கட்சியில் ஒருவரை வைத்து அவர்களுக்கூடாக பல வேலைகளை செய்து தந்திருப்பதன் அடிப்படையில் எதிர்காலங்களில் எங்களால் திட்டமிட்ட அடிப்படையில் எந்தவிதமான இன பாகுபாடுகளோ, சமூக பாகுபாடுகளோ அதே போல கட்சி பாகுபாடுகளோ, பிரதேச வேறுபாடுகளோ இல்லாமல் தொடர்ச்சியாக இந்த வேலை திட்டங்களை செய்வதற்கு உங்களுடைய ஒத்துழைப்பு தரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

வீட்டில் வைத்து பெண் ஒருவர் படுகொலை – அதிர்ச்சியில் கிராமம்

வீட்டில் வைத்து பெண் ஒருவர் படுகொலை – அதிர்ச்சியில் கிராமம்

இலங்கை சிலாபம் குமரக்கட்டுவ பகுதியில் வயோதிப பெண்மணி ஒருவர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களினால் படுகொலை செய்ய பட்டுளளார்

இவ்வாறு படுகொலை செய்ய பட்ட பெண்மணி சடலம் மீட்க பட்டு மரண பரி சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது


இந்த கொலை ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பாக , உடனடியாக தெரியவரவில்லை

மேலதிக விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது

வீட்டில் வைத்து பெண்
Posted in இலங்கை செய்திகள்

10 கோடி பெறுமதியான போதைவஸ்துடன் நபர் மடக்கி பிடிப்பு

10 கோடி பெறுமதியான போதைவஸ்துடன் நபர் மடக்கி பிடிப்பு

இலங்கை வனவாசலை பகுதியில் பத்து கோடி ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் நபர் ஒருவர் காவல்துறையால் மடக்கி பிடிக்க பட்டுள்ளார் .

பொலிசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில் இந்த கைது இடம்பெற்றுள்ளது

கைதானவர் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

10 கோடி பெறுமதியான
Posted in இலங்கை செய்திகள்

பிக்குகள் இருவர் உட்பட 22 பேர் கைது

பிக்குகள் இருவர் உட்பட 22 பேர் கைது

பிக்குகள் இருவர் உட்பட கைது செய்யப்பட்ட 22 பேரையும் மார்ச் 16 ஆம் வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னாள் சத்தியகிரகத்தில் ஈடுபட்டிருந்த சந்தர்பத்தில் குறித்த மாணவர்கள் 22 பேரும் நேற்று (01) கைது செய்யப்பட்டிருந்தனர்.

மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் நீதிமன்ற உத்தரை மீறி செயற்பட்ட காரணத்தினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ருகுணு பல்கலைகழக உபவேந்தரை நீக்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை முதல் இந்த சத்தியகிரக போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பிக்குகள் இருவர் உட்பட
Posted in இலங்கை செய்திகள்

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்க படுகிறது

இன்று இரவு பாராளுமன்றம் கலைக்க படுகிறது

இலங்கையில் இன்று இரவு பாரளுமன்றம் கலைக்க படுகிறது ,அதன் பின்னர் தேர்தல் இடம்பெறும் என ஆளும் அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது

தாமதிக்காது உடன் தேர்தலை நடாத்தி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் நிலையில் கோட்டபாய இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

இன்று இரவு பாராளுமன்றம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் தூதுவர்

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் தூதுவர்

யாழ். மாநகர முதல்வர் இம்மானுவல் ஆனல்ட்டுக்கும் இலங்கைக்கான பிரான்ஸ் நாட்டின் உயர்ஸ்தானிகருக்கும்

இடையில் விசேட சந்திப்பு ஒன்று இன்று (02) மாநகர முதல்வர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச் சந்திப்பில் மாநகர சபையின் செயற்பாடுகள், நகரில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வினவினார்.

அதற்கு மாநகர சபையின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பிலும், தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும்

திட்டங்கள் தொடர்பிலும், மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் அமைக்கப்பட்டு வரும் மாநகர சபை கட்டட பணிகள் தொடர்பிலும்

ஏனைய நகர அபிவிருத்திகள் தொடர்பிலும் முதல்வர் விளக்கியுள்ளார்.

யாழ். மாநகர முதல்வரை சந்தித்த
Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 35 பேர் கொரனோ வைரசால் பாதிப்பு – 12 பேர் புதிதாக அடையாளம் கண்டுபிடிப்பு

பிரிட்டனில் 35 பேர் கொரனோ வைரசால் பாதிப்பு – 12 பேர் புதிதாக அடையாளம் கண்டுபிடிப்பு

பிரிட்டனில் இதுவரை 35 பேருக்கு கொரனோ வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளது ,மேலும் புதிதாக 12 பேர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இதன் தொகை 35 ஆக உயர்வடைந்துள்ளது .

பிரபல பலசரக்கு கடைகளில் மக்கள் பொருட்களை வாங்கி பதுக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர் .


இதனால் பிரபல சூப்பர் மார்க்கட்டுக்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதை அண்மைய நாட்களில் அவதானிக்க முடிந்தது

மக்கள் வீடுகளுக்குள் முடக்க பட்டால் என்ன செய்வது என்ற நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து சேமிக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளனர்

இவ்வாறு சில தமிழர்கள் புரிந்துள்ளதையும் காணமுடிகிறது

பிரிட்டனில் 35 பேர் கொரனோ
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு ஐநாவில் ஆப்பு – அடுத்து என்ன ..?

இலங்கைக்கு ஐநாவில் ஆப்பு – அடுத்து என்ன ..?

இலங்கை ஐநாவின் மனித உரிமை பேரவையில் இருந்து தான் விலகுவதாக அதிரடியாக அறிவித்திருந்தது ,இதன் அறிவிப்பு

உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டது ,ஆனால் தற்போது ஐநா மனித உரிமை அமைப்போ உறுப்பு உரிமை பொறுப்பு குரலுக்கு

ஆளாக்க பட்ட நாடு ஒன்று அதன் விதிகளில் இருந்து இவ்வாறு விலக முடியாது என சாட்டை அடி வழங்கியுள்ளது .

ஐநாவின் இந்த அறிப்பு இலங்கைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இதன் பின்னர் இலங்கையின் முடிவுகளில்

எவ்விதமான மாற்றம் ஏற்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்

இலங்கைக்கு ஐநாவில்
Posted in உலக செய்திகள்

லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், ரெயில் சேவை

லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், ரெயில் சேவை

லக்சம்பர்க் நாட்டில் சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வர இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

லக்சம்பர்க் நாட்டில் இலவச பஸ், ரெயில் சேவை அமல்
இலவச பஸ், ரெயில் சேவை
லக்சம்பர்க்:

ஐரோப்பிய நாடுகளில் ஒன்று லக்சம்பர்க். இந்த நாட்டில் சாலைகளை கார்கள் பெருமளவு ஆக்கிரமிக்கின்றன. இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இங்கு கார்கள் வணிக ரீதியிலான பயணத்துக்கு 47 சதவீதமும், ஓய்வு நேர போக்குவரத்துக்கு 71 சதவீதமும் பயன்படுத்தப்படுகிறது

. 32 சதவீத பயணங்களுக்கு மட்டுமே பஸ் பயன்படுத்தப்படுகிறது. 19 சதவீத பயணங்களுக்கு மட்டுமே ரெயிலை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில், சாலைகளில் கார்களால் ஏற்படுகிற போக்குவரத்து நெரிசலை முடிவுக்கு கொண்டு வருகிற வகையில், இந்த நாட்டில் இலவச பொது போக்குவரத்து முறை, நாடு முழுவதும் நேற்று முதல்

அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்படி இலவச பொதுபோக்குவரத்தை வழங்குகிற முதல் நாடு என்ற பெயரை இந்த நாடு தட்டிச்செல்கிறது.

இந்த இலவச போக்குவரத்து 40 சதவீத குடும்பங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தகவல்கள் கூறுகின்றன. ஒவ்வொருவரும்

ஆண்டுக்கு 110 டாலர்களை (சுமார் ரூ.8 ஆயிரம்) சேமிக்க முடியும். லக்சம்பர்க் நாட்டில் வாழ்கிறவர்கள் ரெயில்களில் முதல் வகுப்பில்

பயணிக்கவும், பஸ்களில் இரவு நேர பயணத்துக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.

லக்சம்பர்க் நாட்டில் இலவச
Posted in உலக செய்திகள்

இத்தாலி: 29 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ்

இத்தாலி: 29 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ்

இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியது. மேலும், 29 பேர் வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

இத்தாலி: 29 பேர் பலி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் – அதிரவைக்கும் கொரோனா


வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த தடுப்பு மருந்தை தெளிக்கும் நபர் (கோப்பு படம்)
ரோம்:

சீனாவில் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு

முழுவதிலும் பரவி பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது.

வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 2 ஆயித்து 835 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 79 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனா மட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா, ஈரான், மலேசியா, இத்தாலி, ஈராக் உள்ளிட்ட 50-க்கும் அதிமான நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக

அதிகரித்துள்ளது. மேலும், ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தாலி: 29 பேர் ப
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் வயோதிபரை கொன்றவருக்கு 31 வருடம் சிறை

பிரிட்டனில் வயோதிபரை கொன்றவருக்கு 31 வருடம் சிறை

பிரிட்டனில் ஓய்வூதியம் பெற்று வசித்து வந்த வயதான முதியவரை நெரித்து கொன்ற நபர் ஒருவருக்கு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது .

குறித்த கொலையை மேற் கொண்ட குற்றவாளிக்கு சுமார் 31 வருடங்கள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது

பிரிட்டனில் கத்தி குத்து சம்பவங்கள் போல , இவ்வாறான கொலைகளும் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் வயதிபரை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் 20 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு

பிரிட்டனில் 20 பேர் கொரனோ வைரஸால் பாதிப்பு

பிரிட்டனில் இதுவரை இருபது பேர் கொரனோ வைரசால் பாத்திக்க பட்டுள்ளதாக
பிரிட்டன் அறிவித்துள்ளது .

இவர்களில் அதிகமானவர்கள் சீனாவில் இருந்தும் பிற நாடுகளில் இருந்து வந்தவர்கள் என நம்ப படுகிறது .

இவ்வாறு பாதிப்புக்கு உள்ளானவர்கள் தனி தனி அறைகளில் தங்க வைத்து சிகிச்சை வழங்க பட்டு வருகிறது .

எனினும் எவரும் இதுவரை இங்கு உயிரிழக்கவில்லை என்பதும் சிலர் உடல் தேறி வீடு சென்றமையும் குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 20 பேர் கொரனோ
Posted in உலக செய்திகள்

ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 210 பேர் பலி

ஈரானில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 210 பேர் பலி

சீனாவை தாயகமாக கொண்டு பரவி வந்த கொன்றானோ வைரஸ் தாக்குதலில் சிக்கி சுமார் 200 பேர்


இதுவரை பலியாகியுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்று பரபரப்பு செய்தியை வெளியிட்டுள்ளது

ஈரானின் இரண்டாம் நிலை அதிபருக்கு இந்த நோய் பரவி உள்ளதும் ,அதே போல சுகாதர பிரதி மந்திரியும் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளதும் தெரிந்ததே .

எனினும் ஈரான் இந்த மக்கள் பலி கணக்கை முழுமையாக தெரிவிக்க வில்லை .

வெப்ப வலய நாடுகளில் இந்த நோயின் தாக்கம் குறைவு எனவும் ,வெப்பத்தின் வாயிலாக அந்த கிருமிகள் காற்றுடன் கலக்கும் பொழுது இறந்து விடுவதாக தெரிவிக்க படுகிறது .


பெரும் பாலும்
குளிர்வலய பகுதிகளில் இந்த நோய் தாக்கம் அதிகரித்து செல்வதாக மருத்துவர்கள் குறிப்பிட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

ஈரானில் கொரனோ வைரஸ்
Posted in உலக செய்திகள்

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ்

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ்

ஈரான் துணை அதிபரான மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடக ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

ஈரான் துணை அதிபருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
ஈரான் துணை அதிபர் மசூமே எப்டகர்
தெஹ்ரான்:

சீனாவின் ஹுபேய் மாகாண தலைநகர் வுகானில் கடந்த டிசம்பர் இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன்பின், பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என பல்வேறு நகரங்களிலும் பரவிய இந்த வைரஸ் வுகானில் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி, உலகம் முழுவதும் கடும் மிரட்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசால்

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. சீனாவில்

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை இன்று 2,744 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, ஈரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 141 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், அந்நாட்டு துணை சுகாதார மந்திரி இராஜுக்கு நடந்த கொரோனா வைரஸ் பரிசோதனையில் அவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், ஈரான் துணை அதிபரான மசூமே எப்டகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் துணை அதிபருக்கு
Posted in உலக செய்திகள்

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் அறிவிப்பு.

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் அறிவிப்பு.

வீடு மற்றும் ஓட்டல்களில் இருக்கும் மெத்தைகளில் மூட்டைப் பூச்சிகளைக் கண்டால் உடனே அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என்று அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை கொல்ல அரசு அவசர எண் அறிவிப்பு

பிரான்ஸ் நாடு தற்போது ஒரு வினோதமான பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. அந்த நாட்டில் மூட்டைப் பூச்சிகளின் தொல்லை அளவுக்கு அதிகமாக உள்ளது. படுக்கும் மெத்தைகளை

குறிவைக்கும் இந்த மூட்டைப் பூச்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் வீடு மற்றும் ஓட்டல்களில் இருக்கும் மெத்தைகளில் அதிக மூட்டைப்

பூச்சிகளைக் கண்டால் உடனே அவசர எண்ணிற்கு தொடர்பு கொண்டு உதவியை பெறலாம் என்று அந்த நாட்டு அரசு

அறிவித்துள்ளது. மேலும் மூட்டைப் பூச்சிகளை ஒழிக்கும் வரை மெத்தை மற்றும் சோபாக்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம் என மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்த மூட்டைப் பூச்சிகள் கொசுக்களை போல் மனிதர்களை கடிக்கும் தன்மை கொண்டது. ஒரு இரவில் 90 முறை கடிக்குமாம்.

இவை எந்த நோய் தொற்றையும் உண்டாக்காது என்றாலும், அவை கடிக்கும் இடங்களில் தோல் சிவத்தல், அரிப்பு, வீக்கம் போன்றவை

ஏற்படும். 100 நாட்களுக்குள் அனைத்து மூட்டைப் பூச்சிகளையும் ஒழிக்க வேண்டும் என பிரான்ஸ் அரசு சபதம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரான்சில் மூட்டைப் பூச்சிகளை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் -பெண்ணின் உதட்டை கடித்து குதறிய நபர்

பிரிட்டனில் -பெண்ணின் உதட்டை கடித்து குதறிய நபர்

பிரிட்டனில் நபர் ஒருவர் இளம் பெண் ஒருவரது உதட்டை கடித்து குதறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வீதியால் சென்று கொண்டிருந்த பெண்ணின் உதட்டை நபர் கடித்து குதறிய சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்ய பட்டு நீதி விசாரணைகள் இடம்பெற்று வந்தன

அந்த வழக்கு தொடர்பான விசாரணைகளின் பொழுதே குறித்த நபர் புரிந்த கோர சம்பவம் வெளியாகியுள்ளது ,குற்றத்தை புரிந்தவருக்கு தகுந்த தண்டனை வழங்க பட்டுள்ளது

இப்படியும் மனிதர்கள்

பிரிட்டனில் -பெண்ணின் உதட்டை
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் வீடின்றி அலையும் மக்கள் – கைவிட்ட அரசு – மக்கள் வழங்கிய பெரும் தொகை பணம்

பிரிட்டனில் வீடின்றி அலையும் மக்கள் – கைவிட்ட அரசு – மக்கள் வழங்கிய பெரும் தொகை பணம்

பிரிட்டனில் வீடற்று வசிக்கும் மக்கள் தொகை நாள்தோறும் அதிகரித்து வருகிறது .


இவர்கள் வீதியில் உறங்கும் நிலை பார்ப்பவர்களை கண் கலங்க வைக்கிறது .

ஆளை கொல்லும் குளிருக்குள் வீதியில் உறங்கும் இந்த மக்களின் வாழ்வாதாரமும் ,அவர்களின்


கண்ணீர் சிந்திய வாழ்வை ஊடகம் ஒன்று படம் பிடித்து வெளியிட்ட நிலையில் இவர்களுக்கு
பல ஆயிரக்கணக்கில் மக்கள் பணத்தை வாரி வழங்கியுள்ளனர் .

ஆயினும் இதுவரை இவர்களுக்கு வீடு கிடைக்க பெறவில்லை .

எனினும் இந்த மக்களுக்கு தாம் விரைந்து உதவி செய்ய உள்ளதாக கவுன்சில் தெரிவித்த்துள்ளது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் வீடின்றி அலையும்
https://www.youtube.com/watch?v=V2x2bofkbpY
Posted in உலக செய்திகள்

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் சூடு – ஒருவர் பலி 24 பேர் காயம்

ஈராக்கில் போராட்டக்காரர்கள் மீது இராணுவம் சூடு – ஒருவர் பலி 24 பேர் காயம்

ஈராக் தலைநகர் பாக்தாத் பகுதியில் அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

இவ்வாறு கலகத்தில் ஈடுபட்டவர்கள் மீது இராணுவம் நடத்திய தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியானார் .

மேலும் 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்

தொடர்ந்தும் அந்த பகுதியில்பதட்டம் நிலவுகிறது

ஈராக்கில் போராட்டக்காரர்கள்