Author: நலன் விரும்பி
போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி
போலந்தில் பிட்சா சாப்பிட்ட அமெரிக்கா ஜனாதிபதி
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் யுத்தம் இடம்பெற்று வரும் நிலையில் போலாந்துக்கு
பயணித்த அமெரிக்கா ஜனாதிபதி அங்குள்ள அமெரிக்கா இராணுவத்தினரை சந்தித்து பேச்சில் ஈடுபட்டார்
அப்பொழுது அங்கு தயாரிக்க பட்ட பிட்சாவை சுவைத்து மகிழ்ந்தார்
இவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைய பெற்றுள்ளது
இலங்கை வரும் இந்தியா வெளியுறவு மந்திரி
இலங்கை வரும் இந்தியா வெளியுறவு மந்திரி
இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோக பூர்வ வியத்தினை மேற்கொண்டு வருகிறார்
இவர் இரண்டு நாள் இலங்கையில் தங்கி இருந்து உயர் மட்ட பேச்சுக்களில் ஈடுபடுவார் என எதிர் பார்க்க படுகிறது
கோட்டா சம்பந்தன் கலியாணம் முடிந்தது
கோட்டா சம்பந்தன் கலியாணம் முடிந்தது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சந்திப்பு, மூன்று முறைகள் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (25) நடைபெற்றது. இதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்
இரா.சம்பந்தன் தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது. மறுபுறத்தில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழு பங்கேற்றிருந்தது.
நேற்றுக்காலை 10.30க்கு ஆரம்பமான சந்திப்பு, சுமார் 3 மணிநேரம் நீடித்தது. ஜனாதிபதியுடனான முதலாவது சந்திப்பு என்பதால், இருதரப்பினரும் மனம் விட்டு, கலந்துரையாடியுள்ளனர். எனினும், சம்பந்தன் அவ்வப்போது ஆவேசப்பட்டுள்ளார் என
தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, அரசாங்கத் தரப்பில் இருந்து பல விடயங்களுக்கு உறுதியான பதில்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.
இந்த சந்திப்பின் போது, “அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம்”, “அரசியல் தீர்வு”, “காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்”, மற்றும் “வடக்கு, கிழக்கில் காணி சுவீகரிப்பு”
உள்ளிட்ட நான்கு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதிக்கு எடுத்துரைத்த இரா.சம்பந்தன். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தின் அதி முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். 13 இல்லையெனில் பேசிப் பயனில்லையென இடித்துரைத்துள்ளார்.
ஆனாலும், 13ஆவது திருத்தத்தில். காணி, பொலிஸ் அதிகாரங்கள் தொடர்பில் பேசப்பட்டபோது, அமைச்சர்களான ஜி.எல்.பீரிஸ், அலி சப்ரி, “கடந்தகால அரசாங்கங்களே அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை. ஆகையால், தமக்கும்
சிக்கல்கள் உள்ளனவென தெரிவிக்கையில், சம்பந்தன் சற்று ஆவேசமடைந்து மேசையில் தட்டி, 13யை முழுமையாக அமுல்படுத்தாவிடின் நாங்கள் ஏன்? பேசவேண்டுமென கேட்டுள்ளார்.
இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி “13ஆம் திருத்தத்தை அமுல்படுத்த முடியாதென நாம் கூறவில்லை, முழுமையான அதிகாரப்பகிர்வுக்கு நாம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுப்போம்” என பதிலளித்துள்ளார்.
அத்துடன், வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கான நிதியம் உருவாக்கப்பட்டு புலம்பெயர்ந்தோர் நிதியை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் நகர்வுகளை முன்னெடுக்கலாம் என ஜனாதிபதி கேட்டுள்ளார்.
நல்லது, ஆனால், அதற்கு முன்னர் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் எனவும், அதற்கு அரசியல் தீர்வு அவசியம் என சம்பந்தன் பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயம் குறித்து எடுத்துரைத்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, காணாமல் ஆகப்பட்டோரின் உறவினர்களுக்கு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள ஒரு இலட்சம். தமது மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என
எடுத்துரைத்துள்ளது. அதன்போது பதிலளித்த நீதியமைச்சர் அலி சப்ரி, “ஒரு இலட்சம் ரூபா நிதி, முழுமையான நட்டயீடு அல்ல, ஒரு நிவாரண தொகையாகும் எனத் தெரிவித்துள்ளார்.
வடக்கிலும் கிழக்கிலும் பொதுமக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்த வேண்டும். மகாவலி எல் வலயத்தின் ஊடாக கடந்த 35
ஆண்டுகளாக காணிகள் அபகரிக்கப்படுகின்றது, அத்துடன், இனப்பரம்பலை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டாம் என கூட்டமைப்பு வலியுத்தியு்ளளது.
காணி அபகரிப்புகள் இடம்பெறுமானால் தடுத்து நிறுத்த தான் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு
லண்டனில் சிக்கிய விபச்சார அதிகாரி -லட்சம் பவுண்டுகள் செலுத்த உத்தரவு
லண்டன் Dartford பகுதியில் வீடொன்றில் விபச்சாரம் நடத்தி வந்த நபர் ஒருவர் காவல்துறையால் கைது செய்ய பட்டார்
இங்கு ஆண்கள் ,பெண்கள் உள்ளிட்டவர்களை வைத்து இவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்த நிலையில் கைது செய்ய பட்டார்
நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் இவர் அதன் மூலம் பெற்றுக்கொண்ட மூன்று லட்சம் பவுண்டுகளை மீள செலுத்திட உத்தரவிட பட்டுள்ளது
பறங்கி அற்று – மணல் கொள்ளையர்கள் கைது
முல்லைத்தீவு மாவட்டத்தின் நட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பறங்கியாற்று பகுதியில் அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மணலுடன் இரண்டு உழவு இயந்திரங்கள் மற்றும் அதன் சாரதிகள் நட்டாங்கண்டல் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளது
நட்டாங்கண்டல் குற்றப்புலனாய்வு பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த இரு உழவு இயந்திரங்ளையும் மாங்குளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாகன சாரதி இருவரும் பொலிஸ் பிணையில் செல்ல அனுமதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேசத்திலிருந்து வெளியிடங்களுக்கு பொலிஸாரின் ஆதரவுடன் மணல் கொண்டு செல்லப்படுவதாக கடந்த மாத பிரதேச செயலக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் பொதுமக்களால் குற்றச்சாட்டுகள்
முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில்
ஈடுபடும் வாகனங்கள் தொடர்ச்சியாக பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
வரியை உயர்த்தி நாட்டை காப்பாற்றுக – இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் இடித்துரைப்பு
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது Article iv அறிக்கையை நேற்று (25) வெளியிட்டது.
இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நீண்ட ஆய்வுக்கு பின் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் பொதுக் கடன் நிலைத்தன்மையை மீட்பதற்கு நம்பகமான மற்றும் தெளிவான மூலோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கத்தின் அவசர நடவடிக்கை தேவை என சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.
பாதிக்கப்படக்கூடிய குழுக்களைப் பாதுகாப்பதன் மூலம் வறுமையைக் குறைக்க சமூக பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், வருமானத்தை மேம்படுத்த வரிகளை உயர்த்த வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் கடனுக்கு இடையிலான விகிதம், வரி குறைப்பு காரணமாக நாட்டின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் விரிவாக பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளதாக 95 பக்க அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியும் இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கையொன்றை வெளியிட்டு பின்னர் அந்த அறிவிப்பை மீளப்பெறுவதாக தெரிவித்திருந்தது.
மத்திய வங்கி தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை ஆய்வு செய்து விளக்கம் அளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது
யாழ்ப்பாண தமிழ் விஞ்ஞானி அமெரிக்காவில் மரணம்
யாழ்ப்பாண தமிழ் விஞ்ஞானி அமெரிக்காவில் மரணம்
யாழ்ப்பாணம்- குப்பிழான் கிராமத்தை சேர்ந்த தமிழ் விஞ்ஞானி
கலாநிதி.வைத்திலிங்கம் துரைசாமி 17ஆம் திகதி தனது 90 ஆவது வயதில் அமெரிக்காவில் மரணமாகியுள்ளார்
இவர் நாசாவில் கடமையாற்றிய இலங்கை தமிழர் என்பது குறிப்பிட தக்கது
புதினின் ரகசிய காதலி நாடு கடத்தப்படுவார
புதினின் ரகசிய காதலி நாடு கடத்தப்படுவார
புதினின் எதிர்ப்பாளர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசுக்கு போட்டுள்ளார்கள்.
புதினின் ரகசிய காதலி நாடு கடத்தப்படுவாரா?- சுவிட்சர்லாந்தில் புதிய கோரிக்கையால் சலசலப்பு
புதினுடன் காதலி அலினா கபேவா (image courtesy AFP)
69 வயதான ரஷிய அதிபர் புதினுக்கு ஒரு ரகசிய காதலி இருக்கிறார். அவரது பெயர், அலினா கபேவா (வயது 38). இவர் முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார். இவர் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டு, தங்கப்பதக்கம் வென்றவர் ஆவார்.
இவர் புதினுடனான ரகசிய காதலில் பிறந்த குழந்தைகளுடன், சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஒரு சொகுசு மாளிகையில் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள சூழலில் பாதுகாப்பு காரணங்களையொட்டி இவர் இந்த மாத தொடக்கத்திலேயே ஒரு தனியார் பண்ணை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
இந்தநிலையில் புதினின் எதிர்ப்பாளர்கள், அவரது ரகசிய காதலியை நாடு கடத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கை மனுவை சுவிட்சர்லாந்து அரசுக்கு போட்டுள்ளார்கள்.
அந்த மனுவில், தற்போது போர் நடந்து வந்தபோதும், சுவிட்சர்லாந்து புதினின் ரகசிய கூட்டாளியை தொடர்ந்து கவனித்து வருகிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், ஹிட்லரையும், அவரது காதலி ஈவாவையும் புதினுடனும் அவரது காதலியுடனும் ஒப்பிட்டு, இருவரும் ஒன்று சேர வேண்டிய தருணம் இது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவில் ‘சேஞ்ச்.ஆர்க்.’ என்ற வலைத்தளத்தில் பதிவிடப்பட்ட இந்த மனுவில் இதுவரை 57 ஆயிரம் பேர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள் என்று தகவல். சுவிட்சர்லாந்து அரசு புதினின் காதலியை நாடு கடத்தி அவருடன் சேர்த்து வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக அரங்கில் எழுந்துள்ளது.
மேற்கத்திய நாடுகள் புதினின் காதலிக்கு மட்டும் பொருளாதார தடை எதையும் விதிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
ஜி-7 மாநாட்டிற்கு பிறகு பேசிய அதிபர் ஜோ பைடன், ஜி-20 அமைப்பில் இருந்து ரஷியா வெளியேற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் – அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை
அதிபர் ஜோ பைடன்
பிரசல்ஸ்:
பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஜி-7 நாடுகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் நாடுகளின் தலைவர்களும் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
உக்ரைன் போரில் ரஷியாவுக்கு உதவினால் சீனா கடும் பொருளாதார விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ரஷியாவிற்கு சீனா உதவி வழங்கும் சாத்தியம் குறித்து, கடந்த வாரம் சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மிகவும் நேரடியான உரையாடல் நடத்தினேன்.
ரஷியாவுடன் இருப்பதைவிட அதன் பொருளாதார எதிர்காலம் மேற்கத்திய நாடுகளுடன் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளது
என்பதை சீனா புரிந்து கொண்டுள்ளதாக நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
வைரலாகும் எமி ஜாக்சன் உடற்பயிற்சி வீடியோ
வைரலாகும் எமி ஜாக்சன் உடற்பயிற்சி வீடியோ
பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், உடற்பயிற்சி செய்யும் வீடியோவிற்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.
வைரலாகும் எமி ஜாக்சன் உடற்பயிற்சி வீடியோ
எமி ஜாக்சன்
தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.
எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்
ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருந்தார். இந்நிலையில் அவர் உடற்பயிற்சி
செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
நடிகர் விஜய் ரத்த கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
ரத்த கறையுடன் விஜய்.. வைரலாகும் புகைப்படம்
விஜய்
விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கியிருக்கும் படம் பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நடிக்கும் இப்படத்தின் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு கூடியுள்ளது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு,
ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்
விஜய், பீஸ்ட்
பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வந்தது. இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்கள் வெளியாகி அனைவரையும் கவர்ந்து ஹிட் அடித்தது. இந்நிலையில் சட்டையில் ரத்த
கறையுடன் கையில் துப்பாக்கி வைத்திருக்கும் புகைப்படமும், கோடாரியுடன் இருக்கும் விஜய் புகைப்படமும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த புகைப்படங்கள் பீஸ்ட் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் எடுக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.
248 கைதிகளுக்கு கொரனோ
248 கைதிகளுக்கு கொரனோ
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள 248 கைதிகளுக்கு கொரனோ
நோயானது தொற்றியுள்ளதாக சிறைச்சாலை நாயகம் தெரிவித்துள்ளார்
இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை வந்தடைந்த இரு எண்ணெய் கப்பல்
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் 12 நாட்களாக நங்கூரமிட்டிருந்த டீசல் ஏற்றிச் வந்த கப்பலுக்கான பணம் செலுத்தப்பட்டதாக எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக 20,000 மெற்றிக் தொன் டீசலை ஏற்றிச் வந்த கப்பல் சுமார் 12 நாட்களாக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிட்டிருந்தது.
கப்பலின் உரிமையாளரான சிங்கப்பூர் நிறுவனத்திற்கு 42 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தப்பட்டதை அடுத்து டீசலை இறக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
35,000 மெற்றிக் தொன் பெற்றோலை ஏற்றிக்கொண்டு மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த பெட்ரோல் தொகை இந்திய கடன் வசதியின் கீழ் பெறப்பட்டது
துப்பாக்கி சூட்டில் இருவர் மரணம்
.கடவத்தை 9 ஆம் கட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (24) இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த இருவரே இவ்வாறு இனந்தெரியாத நபரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேலியகொட பகுதியைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கோட்டா வை சந்தித்து பேசும் கூட்டமைப்பு
கோட்டா வை சந்தித்து பேசும் கூட்டமைப்பு
நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான சந்திப்பு இன்று (25) முற்பகல் 10.30க்கு இடம்பெறவுள்ளது.
கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெறுவதாக இருந்து பிற்போடப்பட்ட சந்திப்பு, கடந்த 15ஆம் திகதி இடம்பெறவிருந்தது.
எனினும், ஐக்கிய மக்கள் சக்தி, குறித்த தினத்தில் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாக அந்த சந்திப்பு பிற்போடப்பட்டது.
இன்று இடம்பெறவுள்ள சந்திப்பில், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான டெலோ என அறியப்படும் தமிழீழ விடுதலை கழகம் பங்கேற்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பில் -தீயில் எரிந்த 23 வீடுகள்
கொழும்பு – பாலத்துறை (தொட்டலங்க) பகுதியிலுள்ள குடியிருப்பு தொகுதியொன்றில் ஏற்பட்ட தீயினால் சுமார் 23 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளன.
இந்த தீ விபத்து நேற்றிரவு 12.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு தீயணைப்பு பிரிவிற்கு சொந்தமான 2 தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்தி தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தினால் எந்தவொரு உயிர் சேதமோ அல்லது காயங்களோ பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்
ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்
போர் நிறுத்தம் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும், இந்த சவால்களில் இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் வரைவு தீர்மானத்தில் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. சபையில் தீர்மானம்- வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
ஐ.நா.வுக்கான இந்திய பிரதிநிதி திருமூர்த்தி
நியூயார்க்:
ரஷியாவின் படையெடுப்பால் உக்ரைன் பேரழிவை சந்தித்துள்ளது. முக்கிய நகரங்களை ரஷிய ராணுவம் குண்டு வீசி அழித்துள்ளது. குடியிருப்புகள் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், ரஷியாவுக்கு எதிராக ஐ.நா. பொது சபையில் உக்ரைன் மற்றும் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் மேற்கத்திய நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. ரஷியாவின் ஆக்கிரமிப்பால் உக்ரைனில் நிலவும் மோசமான மனிதாபிமான விளைவுகளுக்கு கண்டனம் தெரிவித்து கொண்டு வரப்பட்ட இந்த தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. பொதுசபையில் 140 உறுப்பு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. ரஷியாவுடன் இணைந்து பெலாரஸ், சிரியா, வட கொரியா, எரித்ரியா ஆகிய நாடுகள் மட்டுமே தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது.
இந்தியா இந்த வாக்கெடுப்பை புறக்கணித்தது. போர் நிறுத்தம் மற்றும் அவசரகால மனிதாபிமான உதவி ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும், இந்த சவால்களில் இந்தியா எதிர்பார்த்த அம்சங்கள் வரைவு தீர்மானத்தில் இல்லை என இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
‘ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகள் மோதலைத் தணிப்பதற்கு பங்களிக்க வேண்டும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பேச்சுவார்த்தை மற்றும் தூதரக நடவடிக்கையை மேம்படுத்துவதற்காக விரோத போக்கை உடனடியாக நிறுத்துவதற்கு உதவ வேண்டும், மக்களின் துன்பங்களுக்கு உடனடி முடிவு காண, இரு தரப்பையும் ஒன்றிணைக்கவேண்டும்’
என ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி திருமூர்த்தி தெரிவித்தார்.
போராட்டத்தில் கைகோர்த்த தமிழர்கள்
போராட்டத்தில் கைகோர்த்த தமிழர்கள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளர் ஶ்ரீபால் வன்னிஆராய்ச்சியினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு எதிராகவும், அது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தீபந்தங்களை ஏந்தியவாறு மத்துகம நகர் மத்தியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு
எதிராக நடத்திய முதலாவது போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது
கோட்டா, மஹிந்த செய்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்-சிறி எம்பி
கோட்டா, மஹிந்த செய்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்
முள்ளிவாய்க்காலில் உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாவக் கர்மாவே, சிங்களவர்களையும் அத்தியாவசியப் பொருள்களுக்காக வரிசையில் நிற்க வைத்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கக்கூட நாட்டு மக்கள் வரிசைகளில் நிற்கிறார்கள். இந்த பொருளாதார நெருக்கடியை தமிழ் மக்கள் 20 வருடங்களுக்கு முன்பே அனுபவித்து இருக்கிறார்கள் என்றார்.
நாட்டில் நிலவும் கடதாசி தட்டுப்பாட்டால் பரீட்சைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பல பத்திரிகை நிறுவனங்களும் தங்களது பக்கங்களை குறைத்துள்ளன. 20 வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப் படையினர் தமிழர் பகுதிகளுக்கு நுளைந்தபோதும் தமிழர்கள் இந்நிலைமைக்கு முகங்கொடுத்தனர் என்றார்.
வரிசைகளில் நின்றவாரே மடிந்து விழுகிறார்கள். தமிழ் மக்களுக்கு இந்த வரிசைகள் புதிதல்ல. ஆனால் இப்போதே சிங்கள மக்கள் இதனை அனுபவிக்கிறார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. வரிசைகளில் நிற்கவில்லை. சிங்கள தலைவர்கள் எவரும் நேர்மையுடன் சிந்திக்க தயாராக இல்லை என்பதை சிங்கள மக்களுக்குக் கூற விரும்புகிறேன் என்றார்.
அத்தியாவசிய பொருள்களுக்காக வரிசையில் நின்ற நால்வர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இது நாட்டுக்கு வெட்கமில்லையா? கேவலமில்லையா எனவும் கடுமையாக சாடிய ஸ்ரீதரன் எம்.பி, பிரபாகரனிடம் நாட்டை கொடுத்திருக்கலாமென சிங்களவர்களே கூறுகின்றார்கள். சிங்கள மக்களின் நிலைமைக்கு நாம் அனுதாபங்களை தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
தமிழ், சிங்களம் என்கிற இரு தேசிய இனங்களையும் அரவணைத்து செல்லக்கூடிய தலைவன் வராதவரையில் இந்நாடு இதைவிட மோசமான நிலைமைகளை சந்திக்கும் எனவும் எச்சரித்தார்.
மேலும், அதிகாரங்களை பகிர்ந்து சமஸ்டி அடிப்படையில் தீர்வினை வழங்க கூடிய ஒரு சிங்கள தலை மகன் எப்போது வருகின்றானோ அன்றுதான் நாடு மீளும். அந்த சிங்களமகன் மகா மனிதனாக மாறுவான். அவ்வாறான ஒரு சிங்கள மகனை உருவாக்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்றார்
பிச்சை எடுத்து மக்களை காப்போம் – அமைச்சர்
பிச்சை எடுத்து மக்களை காப்போம் – அமைச்சர்
நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றதாகத் தெரிவிக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நல்லாட்சி அரசாங்கம் தின்றத்தையே நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (23) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டு மக்களின் உணவுகளுக்காக அரசாங்கம் வெளிநாடுகளில் யாசம் பெறுவதாக எதிரக்கட்சியினர் எங்களை விமர்சிக்கிறார்கள். யாசகம் எடுத்தாவது நாட்டு மக்களுக்கு உணவளிப்போம் எனவும் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் நாட்டுக்கு தேவையான எரிபொருள், காஸ்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான நிலைமைகள் இல்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாட்டில் காணப்படும் தற்போதையப் பிரச்சினைகள் அனைத்தும் தற்காலிகமானது. இவற்றை தற்போதைய அரசாங்கம் விரைவிலேயே சரி செய்யும் எனவும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானோடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் நிலைக்கு நாட்டை நல்லாட்சி அரசாங்கமே தள்ளியது. நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றார்கள். அவர்கள் தின்றதை நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்








