Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

எட்டு விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் – உக்கிர சமர் தொடர்கிறது

எட்டு விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் – உக்கிர சமர் தொடர்கிறது

அர்மேனியா மற்றும் Azerbaijani நாட்டு இராணுவங்களுக்கு இடையில் பலத்த மோதல்கள் வெடித்து வருகிறது

இதில், ஆர்மேனிய இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில்

சிக்கி ஐந்து போர் விமானங்கள் மற்றும் மூன்று உலங்கு வானூர்திகள்

என்பன சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக குறித்த இராணுவம் அறிவித்துள்ளது

தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவம் உடனடியாக விலக வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

சிரியாவில் இருந்து அமெரிக்கா இராணுவம் உடனடியாக விலக வேண்டும் – ஈரான் அதிரடி அறிவிப்பு

சிரியாவில் அந்தநாட்டுக்குள் நுழைந்து அந்த மண்ணை ஆக்கிரமித்து

அதன் செல்வ வளங்களை கொள்ளையடித்து வரும்அமெரிக்கா ஏகாதிபத்திய

இராணுவம் அந்த மண்ணில் இருந்து உடனடியாக விலக வேண்டும்

என ஈரான் வெளிவிவகார அமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் முற்றாக

விலக வேண்டும் என்ற ஈரான் நிலைப்பாடு தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது

அவ்வாறு விலக மறுத்து நிலை கொள்ள முனைந்தால் அதற்கான விலையினை

அமெரிக்கா சந்திக்கும் என ஈரான் நேரடியாக அறிவித்து வருகின்றமை நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை அதிகரித்துள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ரசியா ,சீனா மிரட்டல் – கடற்படை பலத்தை திடீரென அதிகரித்த அமெரிக்கா

ரசியா ,சீனா மிரட்டல் – கடற்படை பலத்தை திடீரென அதிகரித்த அமெரிக்கா

சீனா ,ரசியா நாடுகள் தமது கடற்படை பலத்தை அதிகரித்து செல்லும்

நிலையில் ,இந்த அபாயத்தை உணர்ந்த அமெரிக்கா தற்போது

தமது கடல் படையில் புதிய போர்கப்பல்களை இணைக்கிறது ,

உலகில் அதிக கடற்படை கப்பலை அமெரிக்கா வைத்துள்ளது ,அதன்

கடற்படை பலத்திற்கு ஈடாக சீனா ,ரசியா வளர்ந்துள்ள நிலையில் ,இந்த திடீர்

போர்க் கப்பல்கள் இணைப்பதில் அமெரிக்கா கடற்படை தீவிரம் காண்பித்து வருகிறது குறிப்பிட தக்கது

Posted in சினிமா

அனுஷ்கா பந்தா இல்லாத நடிகை – மாதவன்

நடிகை அனுஷ்கா பெரிய நடிகை ஆனாலும், பந்தா இல்லாமல் இருப்பதாக நடிகர் மாதவன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.அனுஷ்கா, மாதவன்மாதவன், அனுஷ்கா நடிப்பில்

உருவாகி இருக்கும் சைலன்ஸ் திரைப்படம் நாளை ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி நடிகர் மாதவன், பேட்டி அளித்தார்.

அதில் அவர் கூறியதாவது: “அனுஷ்காவும், நானும் முதன்முதலாக ‘இரண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தோம். அந்த படத்தில் அவ்வளவு

அழகாக இருப்பார். அப்போது அவர் சினிமாவுக்கு புதுசு. 14 வருடங்கள் கழித்து நாங்கள் இருவரும் ‘சைலன்ஸ்’ படத்தில்

இணைந்து நடித்து இருக்கிறோம். அனுஷ்காவிடம் அதே அழகு. 
அவருடைய தோற்றத்தில் எந்த மாற்றமும் இல்லை. பதினான்கு

வருடங்களில் அவர் அற்புதமான நடிகையாகி விட்டார். சினிமா மீது அவருக்கு இருக்கும் அக்கறை, அனுபவம், கதை சரியாக

நகர்கிறதா? என்று கேட்டு தெரிந்து கொள்வதை எல்லாம் பார்த்தபோது ரொம்பவே பெருமைப்பட்டேன். ‘பாகுபலி’க்கு பிறகு பெரிய நடிகையாகி விட்டார். என்றாலும் அவரிடம் பந்தா இல்லை.

சினிமா வேறு ஒரு வடிவத்துக்கு மாறியிருக்கிறது. ஓடிடி தளங்கள் புதிய மாற்றமாக வரப்போகிறது என்பது 10 வருடங்களுக்கு முன்பே

தெரியும். அதை சுதா கொங்கராவிடம் சொன்னபோது, முதலில் அவர் நம்பவில்லை. இப்போது, “எப்படிடா சொன்னே?” என்று கேட்கிறாள்.
ஓடிடி-யில் நிறைய பேர் பணிபுரிய தொடங்கி விட்டார்கள். மணிரத்னமே ஓடிடிக்கு வந்து விட்டார். எதிர்காலம் எப்படியிருக்கும்?

என்ற கேள்வியும், பயமும் எல்லோருக்கும் இருக்கிறது. அனைத்தையும் துணிச்சலுடன் கையாள வேண்டும்.” இவ்வாறு மாதவன் கூறினார்.

Posted in சினிமா

கார் வாடகை தராமல் ஏமாற்றியதாக கவர்ச்சி நடிகை மீது ஓட்டுநர் புகார்

கார் வாடகை தராமல் ஏமாற்றியதாக கவர்ச்சி நடிகை மீது ஓட்டுநர் புகார்

தமிழில் பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்த முமைத்கான் மீது கார் ஓட்டுநர் ஒருவர் கார் வாடகை தராமல் ஏமாற்றி விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

கார் வாடகை தராமல் ஏமாற்றியதாக கவர்ச்சி நடிகை மீது ஓட்டுநர் புகார்
முமைத்கான்
மும்பையைச் சேர்ந்த நடிகை முமைத்கான், இந்தி மற்றும் தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில்

அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் தனது கவர்ச்சி நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில்

இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் முமைத்கான் தனக்குத் தர வேண்டிய ரூ.15000-த்தை தராமல் ஏமாற்றியதாக கார் ஓட்டுநர் குற்றம்சாட்டியுள்ளார்.

கார் ஓட்டுநர் ராஜூ தெரிவிக்கும் போது, முமைத்கான் 3 நாள் பயணமாக கோவா செல்ல கார் புக் செய்ததாகவும், ஆனால் 8

நாட்கள் கோவாவில் தங்கியதாகவும் பின்னர் தனக்குத் தரவேண்டிய ரூ.15000-த்தை தரவில்லை என்றும் கூறியுள்ளார்.

முமைத்கான்

முமைத் கான் மீது வைக்கும் குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக, முமைத் கான் அனுப்பிய கோவா முகவரி, சுங்கச்சாவடிகளில் பணம்

செலுத்தியதற்கான ரசீதுகளை ஊடகங்களிடம் ஒப்படைத்துள்ளார். தன்னைப்போல் மற்றொரு ஓட்டுநர் பாதிக்கப்படக்கூடாது

என்பதற்காகவே இதை வெளியில் சொல்வதாகவும் கார் ஓட்டுநர் ராஜூ தெரிவித்ததாக கூறியுள்ளார்.

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

வெடித்து சிதறும் ஏவுகணைகள் – உக்கிர சமர் – வீடியோ

வெடித்து சிதறும் ஏவுகணைகள் – உக்கிர சமர் – வீடியோ

அல்பேனியா இராணுவத்தினரால் எதிரி நாட்டு இராணுவத்தின் ஏவுகணை

வண்டிகள் மற்றும் அவர்கள் எடுத்து வந்த ஆயுத வாகன தொடரணிகள்

என்பன முற்றாக தாக்கி அழிக்க பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம்

தெரிவித்துள்ளதுடன் அது தொடர்பான காணொளியையும் வெளியிட்டுள்ளன

அவ்விதமான காட்சி பதிவே இதுவாகும் ,தற்போது அங்கு உக்கிர சமர்

இடம்பெற்ற வண்ணம் உள்ளதுடன் எல்லையில் மூவாயிரத்துக்கு மேற்பட்ட இராணுவம் விசேடமாக குவிக்க பட்டுள்ளது

Posted in சினிமா

தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா.

தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப்

பெற்ற ஓவியா, தனது ரசிகை ஒருவர் மரணத்திற்கு துடி துடித்து போயிருக்கிறார்.

தீவிர ரசிகை மரணம்… துடி துடித்து போன ஓவியா
ஓவியா


பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது ஓவியா தான். சமூக வலைதளங்களில் ‘ஓவியா ஆர்மி’ என்ற பெயரில் பக்கங்கள் தொடங்கப்பட்டது.

ஓவியா மீது கோடிக்கணக்கான ரசிகர்கள் அன்பு வைத்தது போலவே

அவரும் தனது ரசிகர்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருந்தார். இந்த நிலையில்

ஓவியாவின் தீவிர ரசிகைகளில் ஒருவரான சான்வி என்பவர் திடீரென சமீபத்தில் மரணம் அடைந்தார்.

ஓவியாவின் பதிவு

இதுகுறித்து தகவலறிந்த ஓவியா உடனடியாக தன்னுடைய தீவிர ரசிகையின்

மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த அவர், சான்வியின் பெற்றோர்களை

தான் சந்திக்க விரும்புவதாகவும், அவர்களை தொடர்புகொள்ள தனக்கு யாராவது உதவுங்கள் என்றும் கேட்டுள்ளார்.

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை

700 km சென்று தாக்கும் புதிய ஏவுகணை ஈரான் சோதனை

ஈரான் புரட்சி காவல் படையினர் தற்போது புதிய ஏவுகணை சோதனை

ஒன்றை நடத்தியுள்ளனர் ,இதன் தூர வீச்சு சுமார் எழுநூறு கிலோ மீட்டர்

சென்று தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்க பட்டுள்ளது

அமெரிக்கா ,இஸ்ரேல் நாடுகளின் வல்வளைப்பு தீவிரம் பெற்று வரும்

நிலையில் தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இவை அத்தியாவசிய ஒன்று

என்ற காரணத்தை கூறியவாறு ஏவுகணை சோதனையை இடைவிடாது நடத்தி வருகிறது

இந்த சோதனைகள் அமெரிக்காவை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

இவை ராடார்களுக்கு சிக்காது செல்ல கூடியவை என தெரிவிக்க பட்டுள்ளது

ஏவுகணை ஈரான்
ஏவுகணை ஈரான்
Posted in சினிமா

விஜய்க்கு குவியும் பிரபலங்கள் பாராட்டு

விஜய்க்கு குவியும் பிரபலங்கள் பாராட்டு

மறைந்த பாடகர் எஸ்.பி.பி.யின் இறுதிச் சடங்கில் நடிகர் விஜய் கலந்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

‘தளபதி…. தளபதி தான்’ நடிகர் விஜய்க்கு பிரபலங்கள் பாராட்டு
விஜய், சரண்
பாடகர் எஸ்பிபியின் இறுதி சடங்கில் ஒரு சில சினிமா துறை நட்சத்திரங்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அதில் நடிகர்

விஜய்யும் ஒருவர். எஸ்பிபியின் உடல் அடக்கம் செய்யப்படும் இடத்திற்கு கொண்டு சென்ற பிறகு அங்கு விஜய் வந்து அஞ்சலி

செலுத்திவிட்டு எஸ்பிபி சரணுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். விஜய்க்கு எஸ்பிபி பாடல்கள் பாடியது மட்டுமின்றி அவருடன் சில

படங்களில் இணைந்து நடித்தும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்பிபி இறுதிச்சடங்கில் பங்கேற்ற பின் காருக்கு திரும்பிய விஜய், பாதையில் கிடந்த ஒற்றை காலணியை எடுத்துக்கொடுத்தது,

இணையதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்களிடம் இருந்து விஜயை காத்து, போலீசார் அழைத்து சென்று

கொண்டிருந்தபோது, பாதையில் கிடந்த காலணியை எடுத்து, அருகாமையில் நின்றவரிடம் விஜய் அளித்தார்.

விஜய்

விஜய் நேரில் வந்தது பற்றி சினிமா துறை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்கள். விஜய் மீது அதிக

மரியாதை வந்திருக்கிறது என இயக்குனர் வெங்கட் பிரபு டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

மேலும் இது பற்றி ஆடை பட இயக்குனர் ரத்ன குமார் கூறியதாவது: “கொரோனா காரணமாக பிரபலங்கள் யாரும் வர வேண்டாம் என

அரசு கூறியிருக்கிறதோ என தற்போது வரை நினைத்தேன். ஆனால் விஜய் சாரை பார்த்த உடன் தான் அது அவர்களின் தனிப்பட்ட முடிவு

என எனக்கு தெரிகிறது. தளபதி மீது அதிக மரியாதை இருக்கிறது” என கூறி இருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் சவுந்தரராஜா கூறியுள்ளதாவது: “தளபதி…. தளபதி தான். விஜய் அண்ணா ஒரு சிறந்த மனிதன்” என

குறிப்பிட்டு, நடிகர் விஜய் எஸ்.பி.பி.யின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Posted in சினிமா

அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்

அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்

பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக சாடி நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதெல்லாம் ஒரு நிகழ்ச்சியா… பிக்பாஸை விளாசிய லட்சுமி மேனன்
லட்சுமி மேனன்


நடிகை லட்சுமி மேனன் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளதாக செய்திகள் பரவி வந்தன. இந்நிலையில், அதுகுறித்து நடிகை லட்சுமி மேனன் தனது சமூக வலைதள

பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: “நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. மற்றவர்களின் பிளேட்டுகளையும்,

அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளையும் நான் இப்போதல்ல, எப்போதும் சுத்தம் செய்யப்போவதில்லை. நிகழ்ச்சி என்ற பெயரில்

கேமரா முன் சண்டை போடவும் போவதில்லை. இதன் பிறகு ஏதோ ஒரு கேவலமான நிகழ்ச்சியில் நான் கலந்துகொள்வதாக

வதந்திகளுடன் யாரும் வரமாட்டாங்கனு நம்புறேன்”.என லட்சுமி மேனன் தெரிவித்திருந்தார்.

அவரின் இந்த காட்டமான பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து, அவரை விமர்சித்தனர். பிளேட்டுகள், கழிப்பறையை கழுவுவது

கேவலமான விஷயமா என்று கேள்வி எழுப்பி, அவரைப் கடுமையாக சாடினர்.

Posted in சினிமா

போலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது – ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம்

போலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது – ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம்

போலீசார் தன் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியா சக்ரவர்த்திக்கு சொந்தமானது என நடிகை ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

போலீசார் என் வீட்டில் எடுத்த போதை பொருள் ரியாவுக்கு சொந்தமானது – ரகுல்பிரீத்சிங் பரபரப்பு வாக்குமூலம்
ரகுல் பிரீத் சிங், ரியா சக்ரவர்த்தி


இந்தி நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவருயை தோழியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி

உள்ளிட்டவர்கள் மீது மும்பை போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் ரியாவின் உரையாடல் மூலம் அவருக்கு போதைப் பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இது

தொடர்பாக விசாரணை நடத்திய தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நடிகை ரியா, அவருடைய சகோதரர் ஷோவிக்சக்ரவர்த்தி உள்பட 15 பேரை கைது செய்தனர்.

இது தவிர போதை கும்பலுடன் செல்போன் மூலம் தொடர்பில் இருந்த நடிகைகள் ரகுல் பிரீத்சிங், தீபிகா படுகோனே, சாரா, அலிகான், சிரத்தாகபூர் ஆகியோரும் விசாரணைக்கு ஆஜராக

வேண்டும் என்று தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியது. முன்னதாக ரகுல்பிரீத்சிங் வீட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

ரகுல் பிரீத் சிங், ரியா சக்ரவர்த்தி

இதையடுத்து தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ரகுல்பிரீத்சிங் விசாரணைக்காக ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் துருவி துருவி விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அதிகாரிகள் கூறியதாவது: விசாரணையின் போது, நடிகை ரியாவுக்கும், ரகுல் பிரீத்சிங்குக்கும் இடையே போதைப் பொருள்

பரிமாற்றம் பற்றி நடந்த உரையாடல் பதிவை காண்பித்து விசாரித்தோம். அப்போது இருவரும் உரையாடியதை அவர் ஒப்புக் கொண்டார்

மேலும் தனது வீட்டில் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரால் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் நடிகை ரியா சக்ரவர்த்திக்கு

சொந்தமானது. அவர் அதை தனது வீட்டுக்கு வந்து பெற்றுக்கொள்ள இருந்தார் என்பதையும் ரகுல் பிரீத்சிங் ஒப்புக்கொண்டார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்..

Posted in சினிமா

இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.

இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.

மறைந்த பாடகர் எஸ்.பி.பி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்த போது இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்டாராம்.

இளையராஜா வீடியோவை பார்த்ததும் முத்தமிட்ட எஸ்.பி.பி.
எஸ்.பி.பி., இளையராஜா


இசைக்கும், ஸ்வரங்களுக்கு இடையிலான உறவுதான் எஸ்.பி.பிக்கும், இளையராஜாவுக்கும் இடையிலான நட்பு.

இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பாவலர் பிரதர்ஸ் என்ற பெயரில் இளையராஜா நடத்தி வந்த கச்சேரிகளில் முதன்மை

பாடகர் எஸ்.பி.பி. தான். இளையராஜா இசையில் அதிக பாடல்களை பாடியவர் எஸ்.பி.பி. இருவரும் இணைந்து 80-களில் நடத்திய இசை ராஜாங்கம் இன்றளவும் பேசப்படுகின்றன.

பாடல் உரிமம் விவகாரத்தில் எஸ்.பி.பி., இளையராஜா இருவருக்கும் கருத்துவேறுபாடு வந்தபோதும், ஒருவர் மீது ஒருவர் வைத்திருந்த

மதிப்பை குறைத்து கொண்டதில்லை. சில மாதங்களிலேயே கசப்பு மறந்து அந்த இசைக்கூட்டணி மீண்டும் மலர்ந்தது.

இளையராஜா , எஸ்.பி.பாலசுப்ரமணியம்

இதனிடையே எஸ்.பி.பி கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது, சீக்கிரம் எழுந்து வா பாலு என உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்

இளையராஜா. அந்த வீடியோவை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த எஸ்.பி.பி.,யிடம் அவரது மகன் சரண் காட்டினாராம்.

அவரிடமிருந்து போனை வாங்கிய எஸ்.பி.பி., அந்த வீடியோவை மீண்டும் போடச் சொல்லி இளையராஜாவை முத்தமிட்டாராம்.

இந்தத் தகவலை அந்த ஆஸ்பத்திரியில் அவருக்கு சிகிச்சை அளித்த டாக்டர்களில் ஒருவர் தெரிவித்திருக்கிறார். கொரோனா

அச்சுறுத்தல் காரணமாக நண்பன் எஸ்.பி.பி.,யின் மறைவுக்கு இளையராஜா, நேரில் அஞ்சலி செலுத்தாவிட்டாலும்,

திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டது குறிப்பிடத்தக்கது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

சிரியாவில் எண்ணெய் திருடும் அமெரிக்கா கப்பல்கள் – துரத்தி பிடித்த ஈரான் கப்பல்கள்

சிரியாவில் எண்ணெய் திருடும் அமெரிக்கா கப்பல்கள் – துரத்தி பிடித்த ஈரான் கப்பல்கள்

சிரியா மற்றும் ஈராக்,ஈரான் பகுதிகளில் இருந்து அமெரிக்கா

சட்டவிரோதமாக எண்ணெய்களை கடத்தி செல்வது கண்டு பிடிக்க பட்டுள்ளது

இவ்விதம் சிரியா ஈராக் எல்லையில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட டாங்கர்களில்

எடுத்து செல்ல பட்ட எண்ணெய் கப்பல்களை ஈரானிய புரட்சி காவல் காவல் படையினர் மடக்கி பிடித்துள்ளனர்

இந்த கப்பல் கடத்தலை தடுக்கும் முகமாக தமது ரோந்து பணிகளை

ஈரான் தீவிரமாக்கியது ,இதனால் கள்ள சந்தை பொருளாதாரத்தில் அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது ,

இதனை அடுத்து அமெரிக்காவின் போர்க் கப்பல் அணி ஒன்று ஈரான் கடல் எல்லைப் பகுதிகளை அண்மித்து சென்றுள்ளது

இதனை அவதானித்த ஈரானிய கடற்படை கடும் எச்சரிக்கை விடுததுடன் ,

இவர்கள் நடமாட்டத்தின் பின்புலத்தை உளவு விமானங்கள் மூலம்

அறிந்து கொண்ட ஈரான் இந்த கடத்தலை முறியடித்து கப்பல்களை சுற்றிவளைத்து பிடித்துள்ளது

எனினும் எத்தனை கப்பல்கள் ,மற்றும் எந்த நாட்டு கப்பல்கள் என்பதை ஈரான் இதுவரை வெளியிடவில்லை

இந்த செயல் அமெரிக்கா,பிரிட்டனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ராடார்களுக்கு சிக்காத ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

ராடார்களுக்கு சிக்காத ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் வல்லாதிக்கத்தின் நெருக்குவாரத்தில் இருந்து

தமது நாட்டை பாதுகாத்து கொள்ள புதிய ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது

இதற்கு அமைவாக தற்பொழுது ராட் 500 எனப்படும் புதிய ஏவுகணை

திரவ எரிபொருள் தாங்கி செல்வதுடன் ,இது ராடார்களுக்கு சிக்காமல்

செல்லும் வகையில் கார்பன் இழைகளைப் பயன்படுத்துகிறது

மேலும் ஏவுகணையின் எடையை குறைத்து அதன் தாக்குதல் வேகத்தை

அதிகரிக்கவும் இவை உதவுகிறது
என தெரிவித்துள்ளனர்

மேற்படி ஏவுகணை செயல்பாட்டு உருவாக்கம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு

இவை பேருதவியாகவும் ,காவலாகவும் இருக்கும் என ஈரானிய புரட்சி காவல் படை தெரிவித்துள்ளது

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீயா இறந்தாய் ..?

நீயா இறந்தாய் ..?

பாடு நிலா -எங்கள்
பாட்டு தலைவன்
பாடையில போறான்
பாலு எங்கள் நண்பன்

உன்னை கொல்ல கொரனோ
உள்ளம் விட்டதாரு ..?
உன்னை இழந்து தவிக்க
உலகில் வைத்ததாரு …?

பாலா இன்று வருவாயா
பாட்டு ஒன்று தருவாயா ..?
காலனே உயிர் தருவாயா
கை தட்டுகிறோம் விடுவாயா …?

சொந்தம் என்று சொல்ல
உள்ளம் நின்றவன்
எம் ஏக்கம் தனித்து
எழுந்து நடக்க வைத்தவன்

வெந்து மனம் நோக
வேக வைத்த ஆண்டவனே
உந்தன் செயல் தகுமா
உண்மையில் நீ இறைவனா …?

கொடிய அணுகுண்டாய்
கொரனோ நுழைந்ததே
உடல் உறுப்பை தின்றே – உன்
உயிர் குடித்ததே

பாடு நிலா உதிர்ந்ததே
பால் நிலவும் இருண்டாதே
வீடு வந்த கீதம்
விடியல் இழந்து போனதே …!

-வன்னி மைந்தன் –
25-09-2020

நீயா இறந்தாய் ..?
நீயா இறந்தாய் ..?
Posted in சினிமா

எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் – பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவிட்

எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் – பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவிட்

எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

எஸ்பிபி விரைவில் குணமடைய வேண்டும் – பாலிவுட் நடிகர் சல்மான் கான் டுவிட்
எஸ்பிபி – சல்மான் கான்


பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்திற்கு கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சைக்கு நல்லபடியாக ஒத்துழைத்து வந்த அவருடைய உடல்நிலை ஆகஸ்ட் 14-ம் தேதி மோசமடைந்தது.

பின்னர் வென்டிலேட்டர் மற்றும் எக்மோ கருவிகள் மூலம் எஸ்பிபிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சில நாட்களில் கொரோனாவில் இருந்து மீண்டார்.

உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக அவரது மகன் சில தினங்களுக்கு முன்பு கூறினார்.

ஆனால், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலையில் திடீர் பின்னடைவு

ஏற்பட்டுள்ளது என்றும், அவர் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ள எஸ்.பி. பாலசுப்ரமணியம்

விரைவில் குணமடைய வேண்டும் என பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சல்மான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,’ பாலசுப்ரமணியம் அவர்கள் அனைத்து

வலிமையும், நம்பிக்கையுடனும் பூரண உடல்நலம் பெற வேண்டும் என எனது


இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், எனக்காக நீங்கள் நீங்கள் பாடிய அனைத்து பாடல்களுக்கும் நன்றி.. லவ் யூ சார்…’ என பதிவிட்டுள்ளார்.

Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

ஈரான் கடற்படையில் 188 விமானங்கள் இணைப்பு – அதிர்ச்சியில் அமெரிக்கா இஸ்ரேல் – video

ஈரான் கடற்படையில் 188 விமானங்கள் இணைப்பு – அதிர்ச்சியில் அமெரிக்கா இஸ்ரேல் – video

ஈரான் கடற்படைக்கு அதன் புரட்சி காவல் படையினர் 188 உளவு

விமானங்கள் மற்றும் உலங்குவானூர்திகள் என்பன வழங்க

பட்டுள்ளன

இவ்வாறு வழங்க பட்ட உலங்குவனூர்திகள் உளவு விமானங்களில் பாதி

கடலில் தரை இறங்கும் வடிவமைப்பில் உருவாக்கம் பெற்றுள்ளன

ஒரே நாளில் இவ்விதம் பெரும் தொகையில் வழங்க பட்டுள்ளதால்

இஸ்ரேல் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்துள்ளன

ஈரானை தாக்குவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இரு

வாரத்தில் இந்த படைக்கல அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

https://www.youtube.com/watch?v=dNqUNnDKMhE
Posted in சினிமா

திருமணமான இரண்டே வாரத்தில் கணவர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்

திருமணமான இரண்டே வாரத்தில் கணவர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்

திருமணமான இரண்டே வாரத்தில் பாலியல் புகார் கூறி கணவரை, பிரபல நடிகை போலீசில் சிக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருமணமான இரண்டே வாரத்தில் கணவர் மீது பிரபல நடிகை பாலியல் புகார்
கணவருடன் பூனம் பாண்டே


சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை பூனம் பாண்டே. இவர், 2011-ம் ஆண்டு இந்தியா கிரிக்கெட் உலகக் கோப்பையை

வென்றால் நிர்வாணமாக ஓடுவேன் எனக்கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர். இவ்வாறு சுய விளம்பரத்திற்காக அவ்வப்போது

ஏதாவது சர்ச்சையில் சிக்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர் பூனம் பாண்டே.

கடந்த செப்டம்பர் 10-ந் தேதி பூனம் பாண்டே – சாம் பாம்பேவுக்கு திருமணம் நடைபெற்றது. திருமண புகைப்படங்களை வெளியிட்டு

ஏழு ஜென்மம் உன்னுடன் வாழ வேண்டும் என்றெல்லாம் காதலர் குறித்து சமூக வலைதளத்தில் உருக்கமாக பதிவிட்டிருந்தார்.

திருமணம் முடிந்த கையோடு பூனம் பாண்டே தன் கணவருடன் கோவாவுக்கு சென்றார்.

கணவருடன் பூனம் பாண்டே

கோவாவுக்கு சென்ற இடத்தில் சாம் பாம்பே தன்னை பலாத்காரம் செய்ததுடன், தன்னை தாக்கி கொடுமைப்படுத்தியதாக பூனம்

பாண்டே போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அவரின் புகாரின்பேரில் கோவா போலீசார் சாம் பாம்பே மீது நான்கு

பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். திருமணமாகி 2 வாரமே ஆன நிலையில், காதல் கணவர் மீது பூனம்

பாண்டே பாலியல் புகார் அளித்திருப்பது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

Posted in சினிமா

கோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்

கோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்

பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் என்கிற ராக், கோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளி இருக்கிறார்.

கோபத்தில் வீட்டு கேட்டை உடைத்து தள்ளிய ஹாலிவுட் நடிகர்
நடிகர் டுவைன் ஜான்சன்


பிரபல ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன். இவரை ரசிகர்கள் த ராக் என்று அழைக்கின்றனர். பாஸ்ட் ஆண்ட் பியூரியஸ், ஜூமாஞ்சி

, ஸ்கைஸ்க்ராப்பர், ஸ்கார்ப்பியன் கிங் உள்பட பல படங்களில் நடித்து

உலகம் முழுவதும் புகழ்பெற்று இருக்கிறார். தற்போது பிளாக் ஆடம் படத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

டுவைன் ஜான்சன் படப்பிடிப்புக்கு செல்ல புறப்பட்டபோது தனது வீட்டு கேட் திறக்காததால் அதை கையால் உடைத்து எறிந்த

புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “நான் படப்பிடிப்புக்கு செல்ல

புறப்பட்டபோது புயலால் மின் தடை ஏற்பட்டது. ஆனாலும் படப்பிடிப்புக்கு சென்றாக வேண்டும். வீட்டின் வாயில் கேட் திறக்கவில்லை.

நடிகரின் வீட்டு கேட்

கேட்டை திறப்பதற்கான ஹைட்ராலிக் சிஸ்டம் வேலை செய்யவில்லை. அதை சரிசெய்யும் தொழில்நுட்ப நிபுணர்கள் வந்து

சேர 45 நிமிடங்கள் ஆகும் என்றனர். எனக்காக நூற்றுக்கணக்கானோர் நான் வந்தால்தான் வேலையை தொடங்க

முடியும் என்ற நிலையில் படப்பிடிப்பு தளத்தில் காத்திருந்தனர். இதனால் வாயில் கேட்டை பிடித்து இழுத்து தள்ளி உடைத்து

செங்கல் சுவரில் இருந்து முழுமையாக பெயர்த்து எடுத்து புல்வெளியில் வீசினேன். எனக்கு நேரம் சரியில்லை” என்று குறிப்பிட்டு உள்ளார்

Posted in சினிமா

வில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் செக்ஸ் உறவு -குண்டை போட்ட நடிகை

வில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் செக்ஸ் உறவு -குண்டை போட்ட நடிகை

வில்லன் நடிகருக்கு 200 பெண்களுடன் தொடர்பு இருக்கிறது என்று நடிகை

பாயல் கோஷ் புகார் கூறியுள்ளார்.பாயல் கோஷ்தமிழில் தேரோடும் வீதியிலே படத்திலும் தெலுங்கு இந்தி படங்களிலும்

நடித்துள்ள பாயல் கோஷ் தமிழில் நயன்தாராவின் இமைக்கா நொடிகள்

படத்தில் வில்லனாக நடித்துள்ள பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்தி

உள்ளார். தற்போது மீண்டும் பாயல் கோஷ் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-


“அனுராக் காஷ்யப் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் 2014-ல்

பாம்பே வெல்வெட் படத்தை அவர் இயக்கியபோது நடந்தது. அவரது அலுவலகத்துக்கு பட வாய்ப்பு கேட்டு சென்றபோது

என்னையே உற்றுபார்த்தார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் நடிகை என்ற அடையாளம் இல்லாமல் வரும்படி அழைத்தார்.

நான் சல்வார் கமீஸ் அணிந்து சாதாரண பெண்ணாக சென்றேன். அவர் எனக்கு உணவு பரிமாறி சினிமாவில் கஷ்டப்பட்டு முன்னேறிய கதைகளை சொன்னார். அவர் மீது பற்று உருவானது. 

பிறகு இன்னொரு நாளில் மீண்டும் அவரது இடத்துக்கு அழைத்தார். அப்போது குடித்து இருந்தார். சிகரெட் இல்லாத எதையோ

புகைத்தார். அதில் வேறுமாதிரி வாசனை வந்தது. என்னை ஒரு அறைக்கு அழைத்து சென்று சோபாவில் உட்கார வைத்து என்மீது

படுக்க முயன்றார். நான் விட்டு விடும்படி கெஞ்சினேன். அப்போது நடிகைகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தன்னுடன்

படுக்கையை பகிர்ந்துள்ளனர் என்று பெருமையாக கூறினார். நான் உடன்படவில்லை என்பதை தெரிந்து மனதை மாற்ற முயன்றார்.

ஒருவழியாக அவரது வீட்டில் இருந்து வெளியேறிவிட்டேன். மீண்டும் பலமுறை என்னை அழைத்தார். நான் போகவில்லை.”
இவ்வாறு பாயல் கோஷ் கூறியுள்ளார்.