Author: நிருபர் காவலன்
துரோகம் …!
துரோகம் …!
பூமி அதிர்வொன்று
புகுந்தது நெஞ்சுக்குள்
இதய மாளிகை
இடிந்து போனது
சுனாமி அலையாய்
சுற்றியது நினைவு
கடல் அலையாய்
கத்தியது மனது
அத்தி வாரம்
அசைந்த போது
கார் மேகமாய்
கண்ணீர் கொட்டியது
வினாக்கள் வெடித்தன
விடைகள் கொதித்தன
அணு குண்டு
அகோரமாய் வெடித்தது
கணனி மூளைக்குள்
கறை படிந்த வைரஸ்
கொத்திய போது
கோபம் கொதித்தது
விரலின் நுனியில்
விஷம் உள்ளதை
நாவின் அசைவில்
நாடே அறிந்தது
அறுவடை நாளிற்காய்
அருகில் முளைத்ததை
காணாமல் இருந்தது
காதலின் தப்பு …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் -09-10-2020
வெடித்து சிதறிய இரண்டு விமானங்கள் – நடந்தது என்ன ..?
வெடித்து சிதறிய இரண்டு விமானங்கள் – நடந்தது என்ன ..?
ஜோர்ச்சியா எல்லை பகுதியில் அசேர்பியா இராணுவத்திற்கு
சொந்தமானதாக கருத படும் இரண்டு உளவு விமானங்கள் மோதி சிதறியுள்ளன .
இந்த விமானங்கள் இரண்டும் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று மோதி
சிதறி என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இவை மோதி வீழ்ந்தனவா அல்லது சுட்டு வீழ்த்த பட்டனவா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
அல்பேனியா இராணுவத்தால் அசேர்பியா இராணுவத்தின் 14
வானூர்திகள் இரு வாரத்துக்குள் சுட்டு வீழ்த்த பட்டமை இங்கே குறிப்பிட தக்கது

குறும் தூர ஏவுகணைகளை துருக்கிக்கு வழங்கிய உக்கிரேன்
குறும் தூர ஏவுகணைகளை துருக்கிக்கு வழங்கிய உக்கிரேன்
துருக்கி நாட்டுக்கு உக்கிரேன் நாடானது நாப்பது கிலோ மீட்டர் சென்று
தாக்கும் S-125 missile
கூறும் தூர ஏவுகணையை வினியோகித்துள்ளது ,இதன் மூலம்
சிரியா,லிபிய ,மற்றும் ஈராக் மீது துருக்கி தொடர் தாக்குதலைகளை
மேற்கொள்ள கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
சிரியா மற்றும் லிபியா பகுதியில் முப்பத்து ஆயிரம் இராணுவத்தை
துருக்கி குவித்து போரை நடத்தி வருகிறது
இவ்வாறான வேளையில் இந்த ஏவுகணைகள் வழங்க பட்டுள்ளது நாடுகளுக்கு இடையில் பதட்டத்தை அதிகரித்துள்ளது

நீ எந்தன் சாமி
நீ எந்தன் சாமி
நான் வணங்கும் ஆலயத்தில்
நீ எந்தன் சாமியடி
துயர் கறையை துடைக்கின்ற
தூரிகை நீயடி
கறை படியா ஓவியமே
கலங்காத காவியமே
நீயே எந்தன் மூச்சு
நிழல் காட்டும் பேச்சு
எதை மறந்து போனாலும்
உனை மறந்து போவேனோ ..?
விதி மிதித்து போனாலும்
மதியிழந்து தாழ்வேனோ …?
முகம் இழந்து போனாலும்
அகம் மறந்து வாழ்வேனோ ..?
நிலம் இழந்து போனாலும்
வானில் உன்னை பாரேனோ …?
சீனா பெரும் சுவராய்
சிறை பட்டு போனானே
நாளை உனை பார்க்க
நான் ஏங்கி நின்றேனே
பார்க்க மறந்து போனால் – இந்த
பார் அழிந்து போகும்
நினைவிழந்து போனால் – இந்த
நிகழ் காலம் சாகும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -08-10-2020
நினைத்தது நடந்தது ….!
நினைத்தது நடந்தது ….!
நீ தொடுக்க வா
நான் முடிக்க வா
நிழல் தூங்க வா
நீர் ஓட வா ..?
பூமி வறண்டது
பூவும் உலர்ந்தது
வேரும் செழிக்கவே
வேண்டுதல் செய்ய வா ..?
இடி இடிக்க வா
இடர் மறைய வா
காற் றுதைக்க வா
கன மழை கொட்ட வா ..?
வெட்கை தனியவே
வீழ்ந்த மழையே
கால் தழுவியே
கடந்த வெள்ளமே
ஊரு சிரித்தது
உதடு மலர்ந்தது
வேரும் வைத்தது
வேண்டுதல் நிலைத்தது
வன்னி மைந்தன்
ஆக்கம் -07-10-2020
( சிலோடை சிணுங்கல்- இரட்டை அர்த்தம் )
திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்
திருமண தேதியை அறிவித்த காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வால் தனது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
காஜல் அகர்வால்நடிகை காஜல் அகர்வாலுக்கு 35 வயது ஆகிறது. 2008-ல் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகமானார். பின்னர் விஜய்
, அஜித், சூர்யா, கார்த்தி, விஷால், ஜெயம்ரவி, தனுஷ் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்ததன் மூலம்
முன்னணி நடிகையாக உயர்ந்தார். தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தை எளிய முறையில் நடத்த உள்ளோம். மேலும் எனக்காக வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இத்தனை ஆண்டுகாலம் திரைத்துறையில்
ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. திருமணத்திற்கு பின்னரும் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் தொடர்ந்து
நடிப்பேன்” என காஜல் அகர்வால் அதில் குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் காஜல் அகர்வாலுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி
ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி
சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமாகி தற்போது பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக இருக்கும் ஷிவானி, ரசிகர்களை ஏமாற்றி விட்டதாக ட்ரோல் செய்து வருகிறார்கள்.
ரசிகர்களை ஏமாற்றிய ஷிவானி
ஷிவானி நாராயணன்
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன், கொரோனா ஊரடங்கில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். தினமும் இவரது
புகைப்படத்தை காண ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள். தற்போது கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டிருக்கிறார்.
ஷிவானி நாராயணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளே ஷிவானியை வைத்து சமூக வலைத்தளத்தில் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக
லாக்டவுனில் அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களில் ஒல்லியாக இருந்ததாகவும், தற்போது டி.வி.யில் பார்க்கும் போது
மிகவும் குண்டாக இருப்பதாகவும் ட்ரோல் செய்கிறார்கள். இவ்வளவு நாள் எடிட் செய்த போட்டோவை போட்டு ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்
தெரிந்து பேசு …!
தெரிந்து பேசு …!
மேடை ஏறி பேசிட வேண்டும்
மேனி வளையா நின்றிட வேண்டும்
வார்த்தை குலையா வந்திட வேண்டும்
வஞ்சம் இல்லா மொழிந்திட வேண்டும்
ஒட்டா உதடு பார்த்திட வேண்டும்
ஓட்டை இல்லா பேசிட வேண்டும்
ஒழுகுதல் இல்லா கரைந்திட வேண்டும்
ஒழுக்கம் அதனில் உரிந்திட வேண்டும்
இத்தனை திறன்கள்
இதனில் இருக்கு
இதனை மொழிந்தால்
உயிர்ப்பு உனக்கு
தெரிந்து வைத்து
தெழிதல் கணக்கு
தெரியா நின்று
தெளித்தல் விலக்கு
உலக விதியில்
உழலும் தவறை
உரித்து எடுத்து
உயிராய் பேசு
வாசல் வந்து
வையம் தட்டும்
வாழும் வரை
வான் புகழோ முட்டும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -06-10-2020
மேடை பேச்சின் அடிப்படை கூறுகள் -தெரிந்து கொள்ளுங்கள்
நீ எனக்கு வேண்டாம் …!
நீ எனக்கு வேண்டாம் …!
கொரனோ காதலா ..? – என்னை
கொன்று போக வா
விருது வாங்கி தாரேன் – என்னை
விடுதலை செய்ய வா
இரண்டாம் அலையாக
இதயம் நுழைய வேண்டாம்
நுரை ஈரல் கருக்க – நீ
நுழைந்து விட வேண்டாம்
அன்று முதல் நாள்
அத்தனை ஆனந்தம்
இன்று உடைந்தது
இதயம் சிதைந்தது
வேரை அறுக்க வா
வேதனை தொடுத்தாய் …?
இதயம் கிழிக்க வா
இத்தனை செய்தாய் …?
மறந்து விடுகிறேன்
மரணம் தந்திடு …
உந்தன் செயல் வெற்றியே
உள்ளம் மகிழ்ந்திடு …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -05-10-2020
அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் – ஜெனிலியா திட்டவட்டம்
அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் – ஜெனிலியா திட்டவட்டம்
தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான ஜெனிலியா, அந்த வேடத்தில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
அந்த வேடத்தில் மட்டும் நடிக்க மாட்டேன் – ஜெனிலியா திட்டவட்டம்
ஜெனிலியா
தமிழில் பாய்ஸ், சந்தோஷ் சுப்பிரமணியம், சச்சின், உத்தம புத்திரன் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்
ஜெனிலியா. தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்துள்ளார். இவரும் இந்தி நடிகர் ரிதேஷ்தேஷ்முக்கும் காதலித்து 2012-ல் திருமணம்
செய்து கொண்டனர். இவர்களுக்கு ரியான், ராஹில் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். திருமணத்துக்கு பிறகு ஜெனிலியா சினிமாவில்
நடிப்பதை நிறுத்திவிட்டார். கடைசியாக அவரது நடிப்பில் தேரே நால் லவ் ஹோ இந்தி படம் வெளிவந்தது.
ஜெனிலியா
இந்த நிலையில் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி உள்ளார். இதுகுறித்து ஜெனிலியா அளித்துள்ள பேட்டியில், “திருமணத்துக்கு பிறகு கணவருடன் நேரத்தை செலவிட முடிவு செய்ததால்
நடிக்கவில்லை. அதன்பிறகு குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பும் வந்தது. வீட்டில் குழந்தைகளை தனியாக விட்டு விட்டு
படப்பிடிப்புக்கு சென்றால் கவனத்தை நடிப்பில் முழுமையாக செலுத்த முடியாது. அதனால்தான் எனக்கு நடிக்க வாய்ப்பு வந்தும்
மறுத்து விட்டேன். இப்போது குழந்தைகள் வளர்ந்து விட்டதால் மீண்டும் நடிக்க வருகிறேன். அதிக பட வாய்ப்புகளும் வருகின்றன. அம்மாவாக நடிக்க மாட்டேன்” என்றார்.
பிக்பாஸ் தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பிக்பாஸ் தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான, தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் தர்ஷன் மீது மிரட்டல், மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
தர்ஷன்
மாடல் அழகியும், நடிகையுமான சனம் ஷெட்டி, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட
படங்களில் நடித்துள்ளார். இவர் தன்னை காதலித்து, திருமணம் செய்வதாக
கூறி ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகர் தர்ஷன் மீது புகார் அளித்திருந்தார்.
கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து, திருமணம் நிச்சயம் செய்து விட்டு, பின்னர் திருமணம் செய்ய மறுத்தாகவும், தன்னை
மிரட்டியதாகவும் கூறிய சனம் ஷெட்டி, தர்ஷன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
சனம் ஷெட்டி, தர்ஷன்
இந்நிலையில், நடிகை சனம் ஷெட்டி அளித்த புகாரின் அடிப்படையில், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் நடிகர்
தர்ஷன் மீது ஆபாசமாக பேசுதல், மிரட்டல், மோசடி, பெண்ணை மானபங்கப்படுத்துதல் என நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகை தமன்னாவுக்கு கொரோனா
நடிகை தமன்னாவுக்கு கொரோனா
ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்து
கொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை தமன்னாவுக்கு கொரோனா – ஆஸ்பத்திரியில் அனுமதி
தமன்னா
கொரோனா தொற்றில் நடிகர், நடிகைகளும் சிக்குகிறார்கள். அமிதாப்பச்சன், அபிஷேக் பச்சன், நடிகை ஐஸ்வர்யாராய்
ஆகியோருக்கு பாதிப்பு ஏற்பட்டு மீண்டுள்ளனர். நடிகர் விஷால், நடிகைகள் நிக்கி கல்ராணி, நவ்நீத் கவுர், ஐஸ்வர்யா அர்ஜுன்,
சுமலதா, ஷர்மிளா மந்த்ரே, இயக்குனர் ராஜமவுலி உள்ளிட்ட மேலும் பலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அந்த வகையில், ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா
அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமன்னா
தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் தமன்னா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக
வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட்
மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
மறந்து விட முனையாதே …!
மறந்து விட முனையாதே …!
கால் பந்தாய் அடித்தென்னை
களைத்து போயிருப்பாய்
கோபம் தனிய முன்
கொளுத்தி விடு என்னை ….
வேண்டாம் என்றென்னை
வேலி போட்டிருந்தாய்
ஆயினும் இன்றென்ன
அலை காற்றாய் நுழைந்து விட்டேன்
சிந்தையில நீ இருந்து
சிலுக்கா ஆடையில
முந்தைய நினவுவுகள்
முளை அறுமா கூறு …?
வெட்டி வைத்த ஆற்றுக்குள்
விரைந்து வரும் நீராய்
புகுந்து விட்டாய் நெஞ்சுக்குள்
பூவை மறப்பேனா …?
மறந்து விட என்னை
மறுபடியும் முனையாதே
தொடும் வரை உன்னை
தொடர்வேன் மறவாதே …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -03-10-2020
cryptocurrency மோசடியில் ஈடுபட்ட 30 பேர் பிரான்சில் கைது – தமிழர்களும் சிக்கும் அபாயம்
cryptocurrency மோசடியில் ஈடுபட்ட 30 பேர் பிரான்சில் கைது – தமிழர்களும் சிக்கும் அபாயம்
உலகளாவிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக cryptocurrency விளங்கி வருகிறது ,இதில் பிட்கொயின்
முதலிடம் வகிக்கிறது ,பங்கு சந்தையில் தாம் ரேடிங்ஸ் செய்வதாக
கூறி பனாமா போன்ற நாடுகளில் சிரியாவை மைய படுத்திய குழுக்கள் நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் பயங்கரவாத செயல்களுக்கு குறித்த பணத்தை அனுப்பி வந்துள்ளனர் ,
அவ்விதமான செயல்பாட்டை நீண்ட காலமாக,ஒரு வருடத்திற்கு மேலாக அவதானித்து வந்த உளவுத்துறையினர் பிரான்சில் முப்பது பேரை மடக்கி பிடித்தனர்
இதில் எட்டு பேர் பல்வேறு குற்றச்சாட்டுக்களில் கீழ் கைது செய்யப் பட்டுள்ளதுடன் ,இவர்கள் அனைவரும் பயங்கரவாத
செயல்களுக்கு துணை போனதாகவும் ,ஐரோப்பிய நிதி நிறுவனங்களை கண்காணிக்கும் ,நிலையத்தின் கீழ் பதிவு செய்திடாது மக்களை ஏமாற்றிய குற்ற சாட்டுக்களின
அடிப்படையிலும் வழக்குகள் பதிவு செய்ய பட்டுள்ளன, தொடர்ந்து மேலும் பலர் விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
இவ்வாறான நிலையங்களில் லண்டன் மற்றும் ஐரோப்பாவை மைய படுத்தி தமிழர்களை இணைத்து போலியான வார்த்தைகளை பரப்பி
இந்த வியாபாரங்களுக்குள் சிக்க வைத்துள்ள தமிழர்களும் கைது செய்யப்படலாம் என முக்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன ,
ஆட்களை சேர்த்து , அதன் கீழ் கொமிஷனை பெற்று கொள்ளும் நோக்கில் தாம் வாழும் நாடுகளில் ,அதன்
நிதி கையாடல்துறைகளை கட்டு படுத்தும் அமைப்பின் கீழ் பதிவு செய்யாது மேற்படி நிறுவனங்கள் இயங்கி வந்துள்ளமை
கண்டுபிடிக்க பட்ட நிலையில் விரைவில்
உளவுத்துறைகளின் கண்காணிப்பின் கீழ் உள்ள தமிழர்கள் ,கைது செய்ய படும் அபாயம் உள்ளது ,
தமிழர்களே யாக்கிரதை பனாமா ,சைப்பிரஸ் போன்ற நாடுகளில் உள்ள இவ்வாறான நிறுவனங்களை நம்பாதீர்கள் உங்கள் பணத்தை சேமிப்பு செய்யாதீர்கள்
பனாமா நாட்டில் வரிக்கட்ட தேவை இல்லை ,அவர்கள் பிரிட்டன் ,மற்றும் ஐரோப்பிய நாடுகளின் கீழ் பதிவு செய்யப்படுவதும் இல்லை
பங்கு சந்தை வர்த்தகத்தில் போரெக்ஸ் என படும் ,என்பனவற்றில் மேலே கூறிய நிறுவனத்தின் கீழ் பதிவு செய்திருந்தால் மட்டும்
உங்கள் வியாபாரங்களை ஆரம்பியுங்கள்,குறித்த நிறுவனங்கள் பணத்தை சுருட்டி சென்றால் அதற்கு இந்த நிறுவனம் பொறுப்பாகும்
, அவர்கள் பணத்தை இவர்கள் முடக்கி விடுவார்கள் ,அதானல் தான் இவர்கள் இதில் பதிவு செய்வதில்லை .
அவ்வாறு பதிவு செய்யாது இருப்பவர்கள் ஓடப்போகிறார்கள் என்பதே
பொருளாகும் ,அல்லது இவர்கள் போன்று நீங்களும் கைது செய்யப்படும் அபாயம் உள்ளது.விழித்து கொள்ளுங்கள்
மணிலொன்றிக்குள் சிக்கி விடாதீர்கள் ,அது வரி கட்டாமல் செயல் படுவது ஆகும்
கீழ் உள்ள இணைப்பு பிரிட்டன் மக்களுக்கு உரியது ,இதில் நிதி தொடர்பான நிறுவனங்கள் ,வங்கிகளுக்கு இந்த நிறுவனம் அறவிட்டுள்ளது தண்டத்தை பாருங்கள் ,பல மில்லியன் ,
France’s anti-terrorism prosecutor’s office said Saturday that eight people have been charged for their alleged involvement in a complex scheme financing Islamic extremists in Syria through the use of cryptocurrencies.
Two suspects have been handed preliminary charges of financing terrorism and terrorist conspiracy in a judicial investigation opened Saturday. The same preliminary charges have been given to another suspect in a related case.
Five other people who have been charged with financing terrorism will be sent to trial by the end of the year, the statement said.
The prosecutor’s office said French police arrested a total of 30 people around the country in the case
2 end news
sent to trial by the end of the year. The scheme used cryptocurrency, a digital currency that can provide various levels of anonymity, to finance
extremist groups. It was initially uncovered by a team within the French Economy Ministry that traces fiscal fraud, money laundering and terror financing.
மூன்று விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனியா இராணுவம்
மூன்று விமானங்களை சுட்டு வீழ்த்திய ஆர்மேனியா இராணுவம்
அர்மேனியா இராணுவத்தினர் தொடர்ந்து தமது எதிரி படைகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்,
அவ்விதம் நடத்த பட்ட வான் வழி ஏவுகணை தாக்குதல் மூலம் தாம் எதிரிகளின்
மூன்று விமானங்களை சனிக்கிழமை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அதன்
பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளதுடன் அதன் காட்சிகளையும் வெளியிட்டுள்ளன
இதுவரை 15 வானூர்திகளை கடந்த ஒரு வாரத்திற்குள் சுட்டு வீழ்த்தியுள்ளது
,இது பெரும் அதிர்ச்சியை எதிரி படைகளிற்கு ஏற்படுத்தியுள்ளது .குறித்த
இராணுவத்திற்கு இஸ்ரேல் ,அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது
உங்களுக்கு வெட்கமே இல்லையா…? விளாசும் ஷிவானி
உங்களுக்கு வெட்கமே இல்லையா…? விளாசும் ஷிவானி
சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து வரும் ஷிவானி நாராயணன், உங்களுக்கு வெட்கமே இல்லையா என்று பதிவு செய்திருக்கிறார்.
உங்களுக்கு வெட்கமே இல்லையா…? விளாசும் ஷிவானி
ஷிவானி நாராயணன்
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீனன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார்.
இவர் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தள பக்கத்தில் விதவிதமான கவர்ச்சியான புகைப்படங்களை பதிவு
செய்து வருகிறார். அந்தப் புகைப்படத்திற்கு ரசிகர்கள் ஒருபுறம் ஆதரவு அளித்தாலும் பலர் கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.
இதற்கு பதில் அளிக்கும் விதமான ஷிவானி நாராயணன் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘எனது பதிவில் மூன்றாம் தரமான கருத்துக்களை கமெண்ட் செய்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்
கொள்ள விரும்புகிறேன். யூடியூப்பில் பணம் சம்பாதிக்கும் நோக்கத்துடன் ஒருசிலர் என்னைப்பற்றி மலிவாக விமர்சனம் செய்கின்றனர். இது போன்று ஒரு பெண்ணை விமர்சனம் செய்ய
உங்களுக்கு வெட்கம் இல்லையா?. நான் என்ன ஆடைகளை அணிய வேண்டும் எதை அணியக் கூடாது என்று எனக்கு தெரியும்.
என்னுடைய பெற்றோர்கள் என்னை நன்கு வளர்ந்து உள்ளார்கள். நான் எதையும் சுயமாக தேர்வு செய்ததற்கான சுதந்திரத்தை எனக்கு அவர்கள் கொடுத்துள்ளார்கள்.
ஷிவானி நாராயணன்
நான் பதிவு செய்யும் புகைப்படங்கள், ஆடும் நடனங்கள் இவை அனைத்துமே யாரையும் கவர்ந்திழுக்கும் நோக்கத்திற்கு அல்ல. அதுபோன்ற அவசியமும் எனக்கு இல்லை. என்னுடைய சுய
விருப்பத்தினால் நான் அதை பதிவு செய்து வருகிறேன். எனவே மோசமான விமர்சனங்கள் செய்து என்னை காயப்படுத்த
முயற்சிக்க வேண்டாம். அவ்வாறு முயற்சித்தால் நீங்கள் தோல்வி அடைவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
திரிஷா, நயன்தாரா கிட்ட கேட்பீங்களா?… சோனியா அகர்வால்
திரிஷா, நயன்தாரா கிட்ட கேட்பீங்களா?… சோனியா அகர்வால்
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி படங்களில் நடித்த சோனியா அகர்வால், திரிஷா, நயன்தாரா கிட்ட கேட்பீங்களா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திரிஷா, நயன்தாரா கிட்ட கேட்பீங்களா?… சோனியா அகர்வால்
சோனியா அகர்வால் – நயன்தாரா – திரிஷா
காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, மதுர உள்ளிட்ட
படங்களில் நடித்த சோனியா அகர்வால் டைரக்டர் செல்வராகவனை திருமணம் செய்து பின்னர் விவகாரத்து பெற்றார். தற்போது
சினிமாவில் தொடர்ந்து நடித்து வருபவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது,
’நான், திரிஷா, நயன்தாரா மூணு பேரும் ஒரே வயதுக்காரர்கள். 82-83ல பிறந்தவர்கள். ஆனால் என்னிடம் `நீங்க அம்மா கேரக்டர்ல நடிப்பீங்களா’னு கேட்டுட்டு வரும்போது எனக்கு ஆச்சர்யமா
இருக்கு. இதே கேள்வியை நீங்க திரிஷாகிட்டயோ, நயன்தாராகிட்டயோ கேட்பீங்களானு கேட்டிருக்கேன்.
சோனியா அகர்வால்
ஒருவேளை நான் வயசானவ மாதிரி மாறியிருந்தாலோ, உடம்பை பிட்டா வெச்சுக்கலைன்னாலோகூட ஓகே. நான் இளமையா
இருக்கேன். உடற்கட்டை பராமரிக்கிறேன். அப்படியிருக்கும்போது ஏன் அம்மா கேரக்டருக்கு என்னை யோசிக்கிறீங்க? நானும் ராதிகா
மேடம், குஷ்பூ மேடம் வயசை எட்டினதும் அம்மா கேரக்டர் பண்றேனே. இப்ப எனக்கு அதுக்கான வயது இல்லை.’ இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை… கடைசி நேரத்தில் அறிவித்த பிரபல நடிகை
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை… கடைசி நேரத்தில் அறிவித்த பிரபல நடிகை
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நிலையில், நான் இதில் கலந்துக் கொள்ள வில்லை என்று பிரபல நடிகை கூறியிருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் இல்லை… கடைசி நேரத்தில் அறிவித்த பிரபல நடிகை
பிக்பாஸ் சீசன் 4
கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ம் தேதி (நாளை) முதல் ஒளிப்பரப்பாகிறது. இதற்கான புரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது. பிக்பாஸ்
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது. சமீபத்தில் இந்த
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களின் இறுதிப் பட்டியல் லீக்கானது.
லீக்கான பட்டியலில், நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ஆர்ஜே அர்ச்சனா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண்
போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, சிங்கர் அஜீஸ், மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்கள்
பெயர் இடம் பெற்றது. மேலும் நிகழ்ச்சி ஆரம்பித்து சில நாட்களில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக பாடகர் வேல்முருகன், நடிகை காயத்ரி செல்ல இருப்பதாவும் கூறப்பட்டது.
காயத்ரி
இன்று பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான பணிகள் இன்று முதல் தொடங்கி இருக்கிறது. இந்நிலையில், நடிகை காயத்ரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருக்கிறார்.
நடிகை காயத்ரி, விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு
திருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா திருமணத்திற்காக அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
திருமணத்திற்காக நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு
நயன்தாரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார்.
அவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்துவருகிறார். அது தவிர ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார்.
நயன்தாரா டைரக்டர் விக்னேஷ் சிவனை காதலிப்பதும் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டுவிட்டு ஒன்றாக வசிக்கிறார்கள்
என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் திருமணத்தை பொறுத்தவரை நயன்தாரா புது முடிவு எடுத்துள்ளார்.
நயன்தாரா
தேசிய விருது பெற்ற பின்னர் தான் திருமணம் என முடிவு எடுத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
நயன்தாராவுக்கு முன்பே அறம் படத்துக்காக தேசிய விருது கிடைக்க வேண்டியது. பல்வேறு பாராட்டுகளும் விருதுகளும்
குவிந்தாலும் அவருக்கு இன்னும் தேசிய விருது மட்டும் கிடைக்கவில்லை
மர்மகொலை – காணமால் போகும் பெண்கள்
மர்மகொலை – காணமால் போகும் பெண்கள்
அமெரிக்காவில் இருக்கும் ஒரு பங்களாவில் மர்மமான முறையில் இரண்டு பேர் இறந்து போகின்றனர். அந்த வீட்டில் உள்ள ஒரு
ஓவியத்தைத் தேடி மாதவனும் அவரது காதலியான அனுஷ்காவும் செல்கிறார்கள். அங்கு மாதவன் மர்மமான முறையில்
கொல்லப்படுகிறார். காயங்களுடன் தப்பிக்கும் அனுஷ்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்.
இந்த கொலையை துப்பறிய அஞ்சலி மற்றும் மைக்கல் மேட்சன் களமிறங்குகிறார்கள். இதற்கிடையில் பல இளம் பெண்கள்
காணாமல் போகிறார்கள். காணாமல் போன பெண்களுக்கும் மாதவன் கொலைக்கும் தொடர்பு இருப்பதாக விசாரிக்கிறார்கள்.
இறுதியில் மாதவன் எப்படி கொல்லப்பட்டார்? காணாமல் போன பெண்கள் என்ன ஆனார்கள்? இதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
சைலன்ஸ் விமர்சனம்
இசைக்கலைஞராக நடித்திருக்கும் மாதவன் யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வித்தியாசமான வேடம் என்று திறம்பட செய்திருக்கிறார். காது கேட்காமல், வாய் பேச முடியாமல்
இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. ஓவியராக வரும் அனுஷ்கா படத்தில் நிறைய காட்சிகளில் வருகிறார். ஆனால்
, நடிப்பு திறனை வெளிப்படுத்து அளவிற்கு காட்சிகள் அமையாதது வருத்தம். மாதவனும் அனுஷ்காவும் வரும் காட்சிகள் ரசிக்கலாம்.
சைலன்ஸ் விமர்சனம்
போலீஸ் அதிகாரியாக வரும் அஞ்சலி, கதாபாத்திரத்திற்கு பொருந்தினாலும், நடிப்பில் மிளிரவில்லை. குறிப்பாக இவர் பேசும்
ஆங்கிலம் செட்டாகவில்லை. மற்றொரு போலீஸ் அதிகாரியான மைக்கல் மேட்சன் மற்றும் சுப்பராஜு ஆகியோர் கொடுத்த
வேலையை செய்திருக்கிறார்கள். மற்றொரு கதாநாயகியாக வரும் ஷாலினியின் நடிப்பு செயற்கை தனமாக இருக்கிறது.
சைலன்ஸ் விமர்சனம்
திகில் கலந்த திரில்லர் படத்தை இயக்கி இருக்கிறார் ஹேமந்த் மதுக்கூர். படம் ஆரம்பத்தில் இருக்கும் விறுவிறுப்பு போகபோக குறைந்து விடுகிறது. அமெரிக்காவை சுற்றியே படமாக்கி
இருக்கிறார். ஹாலிவுட் தரத்தில் உருவாக்க நினைத்த இயக்குனர் திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். பல
படங்களில் பார்த்த அதே திருப்பங்கள் சோர்வை ஏற்படுத்துகிறது. அடுத்தடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடியும் அளவிற்கு
வைத்திருக்கிறார். கதாபாத்திரங்களிடம் இன்னும் வேலை வாங்கி இருந்தால் இந்த சைலன்ஸ் இன்னும் சத்தமாக இருந்திருக்கும்.
கோபி சுந்தர் இசையில் பாடல்கள் கவனம் பெறவில்லை. ஷெனியல் டியோ ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலம். அமெரிக்கா என்பதால்
பிரம்மாண்டம் என்று இல்லாமல் கதைக்கு எது தேவையோ அதை அழகாக படம் பிடித்து கொடுத்திருக்கிறார்.
மொத்தத்தில் ‘சைலன்ஸ்’ சத்தம் தேவை.







