Author: நிருபர் காவலன்
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் மாத்தயா, யோகியை பிளவுபட வைக்கவே எனது தந்தையின் காலத்தில் சில உதவிகள் செய்யப்பட்டன என எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற தேர்தல் செலவீனத்தை ஒழுங்குபடுத்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித்
தலைவர் சஜித் பிரேமதாச அதில் ஒரு கட்டத்தில் தன்னால் பாடசாலைக்குளுக்கு வழங்கப்பட்டுவரும் பஸ்கள் மற்றும் உதவிகள் தொடர்பில் பட்டியலிட்டார் .
இதன்போது குறுக்கிட்ட அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க, உங்கள் தந்தையான பிரேமதாசாவின் ஆட்சிக்காலத்தில் விடுதலைப்புலிகளுக்கு திறைசேரி ஊடாக காசோலைகள்
புலிகளை பிளவுபடுத்தவே உதவிகளைச் செய்தோம்
வழங்கப்பட்டன.அதற்கு நன்றிக்கடனாகவே தற்போது வெளிநாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் உங்களுக்கு நிதி உதவி அளிப்பதாகவும்
அதனை வைத்துத்தான் நீங்கள் இவ்வாறு பஸ்களை அன்பளிப்பு செய்வதாகவும் மக்கள் பேசிக்கொள்கின்றனர் என்றார்.
இதற்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச பதிலளிக்கையிலேயே, இரண்டாம் உலக மகா யுத்தத்தில் பெயர்ட் பவர் என்பவர் ஹிட்லரின்
படைகளுக்கும் முசோலினியின் படைகளுக்கும் ஆயுதங்களை வழங்கி உதவினார். இது இரு அணியில் உள்ளவர்களையும் பிளவு படுத்தும் தந்திரம்.
அதேபோன்றுதான் விடுதலைப்புலிகள் அமைப்பில் அதன் தலைவர் பிரபாகரனோடு மாத்தயாவும் யோகியும் முரண்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் சில உதவிகளை வழங்கி அவர்களை மேலும் பிளவடைய வைக்கப்பட்டது.
விடுதலைப்புலிகளுக்கு எனது தந்தை காசு கொடுத்தது என்றால் 2005
ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவும் விடுதலைப்புலிகளுக்கு காசு கொடுத்துத்தான் தேர்தலில் வெற்றி பெற்றார் என்றார்.
படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு
படகு கவிழ்ந்து 145 பேர் உயிரிழப்பு
காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடமேற்கு பகுதியில் உள்ள ,
ஆற்றில் இரவு நேரத்தில் சரக்குகள் மற்றும் விலங்குகளை ஏற்றிச் சென்ற,
மோட்டார் பொருத்தப்பட்ட படகு மூழ்கியதில் ,
145 பயணிகள் காணாமல் போயுள்ளனர் ,.
அவர்கள் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் சுமார் 55 பேர் உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்டை நாடான காங்கோ குடியரசிற்குச் சென்று கொண்டிருந்த படகு,
பசன்குசு நகருக்கு அருகே உள்ள லுலோங்கா ஆற்றில் கவிழ்ந்தது.
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பெலிட் அணியாது காரில் பயணித்த பிரிட்டன் பிரதமர் மன்னிப்பு கோரல்
பெலிட் அணியாது காரில் பயணித்த பிரிட்டன் பிரதமர் மன்னிப்பு கோரல்
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், காரில் சீட் பெலிட் ,
அணியாதது பயணித்தமைக்கு ,மக்களிடம் மன்னிப்பு கோரினார் .
சமூக ஊடகங்களில் ஒரு கிளிப்பை படமாக்குவதற்காக,
சீட் பெல்ட் இல்லாமல் காரில் சென்றதால்,
ஏற்பட்ட தவறுக்கு மன்னிப்பு கோரியுள்ளார்.
சீட் பெல்ட் அணியத் தவறினால் ,
இங்கிலாந்தில் 500 பவுண்டுகள் வரை அபராதம் விதிக்கப்படும்.
மேற்படி விடயத்தில் பிரிட்டன் பிரதமர் சுனக் பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல்
ஈராக் தலைநகர் எல்லோயோரத்தில் பயணித்து கொண்டிருந்த ,
அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணியை இலக்கு வைத்து ,
குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இதில் அமெரிக்கா இராணுவத்தின் வாகன தொடரணியில் பயணித்த ,
கவச வண்டிகள் சிதறின .
அதில் பயணித்த இராணுவத்தினருக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக,
சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
எனினும் இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்கா ,
இராணுவம் கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை .
எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
ஈரான் நாட்டின் தெற்கு பகுதி கடல் வழியாக
212 000 லீட்டர் எண்ணெய் திருடி சென்ற கப்பல் ஒன்றை ,
ஈரானிய கடற்படையினர் துரத்தி பிடித்தனர் .
இந்த கப்பலில் பயணித்த மாலுமிகள் யாவரும் கைது செய்யப்பட்டு ,
அவர்கள் மீது ஒன்பது குற்ற சாட்டுக்கள் பதிய பெற்றுள்ளன .
ஈரான் கடல் வழியாக அமெரிக்கா நிறுவனங்கள் எண்ணெய் திருடி செல்வதாக ,ஈரான் தொடராக குற்ற சுமத்தி வருவதும் ,
இவ்வாறான கடத்தல் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை தொடர்கிறது .
கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது
கொழும்பின் ஒரு பகுதி முடங்கியது
கொழும்பு கோட்டை லோட்டஸ் சுற்றுவட்டத்திலிருந்து காலி முகத்திடல் வரையான வீதி பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளது.
குறித்த வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு சுதந்திர சதுக்கம் வீதியும் பொலிஸாரால் முற்றாக மூடப்பட்டுள்ளது.
கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
கடந்த 24 மணித்தியாலங்ககளில் உக்ரேனிய ஆயுதப் படைகள் ,
நடத்திய தாக்குதல்களில் சிக்கி ,
760 ரஷ்ய வீரர்களைக் உயிரிழந்துள்ளனர் .
மேலும் 6 டாங்கிகள் மற்றும் 1 ஹெலிகாப்டர் என்பன
அழிக்க பட்டுள்ளன .
தொடர்ந்து பகமூட் பகுதியை முழுமையான ,
கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ,
உடைப்பு ஊடுருவல் தாக்குதல்களை,
ரசியா இராணுவம் நடத்திய வண்ணம் உள்ளது .
கடும் மோதல் 760 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு
அந்த தாக்குதல்களை உக்கிரேன் இராணுவம் ,
வெற்றிகரமாக முறியடித்து ,
தமது தாயாக பரப்புக்களை காப்பாற்றி வருகிறது ,
என உக்கிரைன் இராணுவம் அறிவித்துள்ளது .
மேலும் ரஷ்ய இராணுவத்தின்,
ஆயுதங்கள் மற்றும் உடைமைகள் என்பனவற்றையும் காண்பித்துள்ளது .
தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில்,
கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்தியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்
இந்தியா வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்தார்
இந்தியா வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் இலங்கை வந்தடைந்தார் .
இலக்கை வந்த இவருடன் ரணில் விக்கிரமகிங்கா பேச்சில் ஈடுபடுவர்,
என எதிரி பார்க்க படுகிறது .
இலங்கைக்கு நிதி கையளிப்பு மற்றும் ,
பொருளாதார பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பில் ,
பேச்சில் ஈடுபடுவார் என எதிர் பார்க்க படுகிறது .
யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு
யாழில் குளத்தில் இருந்து பெண் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் நாயன்மார் கட்டு பகுதியில் உள்ள குளம் ஒன்றில் இருந்து,
பெண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் ,
அறுபது வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்க பட்டுள்ளது .
இவர் கொலை செய்யப் பட்டாரா அல்லது ,
தற்கொலை செய்யப் பட்டாரா என்பது ,
தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு
சிறுமி மற்றும் இளைஞன் சடலமாக மீட்பு
கலேவெல, அடவல பிரதேசத்தில் உள்ள பாழடைந்த வீடொன்றின் இருந்து சிறுமி மற்றும் இளைஞனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமிக்கு 14 வயது என்றும், இளைஞனுக்கு 20 வயது என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இளைஞனுக்கும் சிறுமிக்கும் இடையே காதல் தொடர்பு இருந்ததாக விசாரணைகளில் தகவல் வெளியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நன்னடத்தையின் பின்னர் சிறுமி சில நாட்களுக்கு முன்னதாக தாயிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காதலியை ஏமாற்றி குற்றி கொன்ற காதலன்
காதலியை ஏமாற்றி குற்றி கொன்ற காதலன்
விசேடமாக ஒன்றை கூறவேண்டும். உங்களை ஆச்சரியப்படுத்தும் (சைப்ரைஸ்) வகையில் ஒன்றை செய்யப்போகின்றேன். எனக் கூறியே அவளை நான், குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை (17) நண்பகல், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்தார்.
கொழும்பு – 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் கறுவாத்தோட்ட பொலிஸாரினால் சடலம் மீட்கப்பட்டதுடன், அவருடைய காதலனும் கொலன்னாவை, வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து, அன்றைய தினமே கைது செய்யப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் சந்தேகநபரான காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவர், பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வாக்குமூலமளித்த அவர், அவ்வாறு அழைத்துவரும் போது இருவரும் பேசிக்கொண்டே வந்தோம். ஓர் இடத்தில் அமர்ந்து பேசினோம். மற்றுமோர் இடத்துக்குச் சென்றோம். அங்கு வைத்தும் இருவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
“சூட்டி” என்னை மனநோயாளி என கூறிக்கொண்டே இருப்பாள். அதனால் நான், கடும் வேதனையில் இருந்தேன். எனக்கு கிடைக்காத அவள், வேறு எவருக்கும் சொந்தமில்லை. அவளை கொல்லவேண்டும் என நினைத்தேன்.
நான், சுமார் ஒரு மாதமாக திட்டமிட்டேன். உன்னிடம் அவசரமாக ஒன்றைச் சொல்லவேண்டும் எனக்கூறி, குதிரை பந்தைய திடலுக்கு அழைத்துச் சென்றேன்.
இந்த சம்பவத்தில் மரணமடைந்த பெண், கொழும்பு பல்கலைக்கழகத்தில் பிரயோக விஞ்ஞான பீடத்தில் மூன்றாம் வருடம் கல்விக்கற்கும் சத்துரி ஹங்சிஹா மல்லாகாராச்சி (வயது 24) என்பவராவார்.
அந்த பீடத்திலேயே கல்விப் பயிலும்பசிது சந்துரங்க (வயது 24) என்ற இளைஞனே, பொலிஸாரிடம் இவ்வாறு வாக்குமூலம் அளித்துள்ளார்.
நான், 2019 ஆம் ஆண்டு முதல் மனநலநோய் சம்பந்தமாக மருந்து குடித்துவருகின்றேன். சூட்டியுடன் 2020 நண்பனானேன். அதன் பின்னர் காதலர்கள் ஆனோம். நான் மனநலநோய்க்கு மருந்து எடுப்பது அவளுக்கு தெரியாது. நானும் சொல்லவில்லை.
எனினும், கடந்த 4 அல்லது 5 மாதங்களுக்கு முன்னர். அதனை அவள் தெரிந்துகொண்டாள். என்னுடன் சண்டையிட்டாள். கோபித்துக்கொண்டாள். எங்களுடைய தொடர்பை நிறுத்திக்கொள்வோம் எனக் கூறினாள்.
காதலியை ஏமாற்றி குற்றி கொன்ற காதலன்
அவள் மாறிவிட்டாள், என்னை எப்போதும் “பைத்தியம்” என்றே ஏசுவாள். வேறு தொடர்பு இருப்பதால்தான் இவளிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது என நினைத்தேன். நான் தேடிப்பார்த்தேன். எனினும். அவ்வாறான தொடர்புகள் எவையும் அவளிடம் இல்லை.
அதுதொடர்பில் எனக்கு எவ்விதமான சந்தேகமும் இல்லை. மனநோயாளி, பைத்தியம் என தொடர்ந்து என்னைத் திட்டியதால். நான் அவளுடன் கோபத்தில் இருந்தேன். மனவேதனை அடைந்திருந்தேன்.
தொடர்புகள் இன்மையால் அவள் எனக்கு சொந்தமில்லை. எனக்கு கிடைக்காதது வேறு எவருக்கும் கிடைப்பதற்கு இடமளிக்க மாட்டேன். ஆகையால், அவளைக் கொலைச் செய்யவேண்டுமென திட்டமிட்டேன்.
கடந்த வெள்ளிக்கிழமை அவள் என்னுடன் சண்டையிட்டால். நாங்கள் எங்களுடைய தொடர்பை நிறுத்திக்கொள்வோம் எனக் கூறினாள். அப்போது அவளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது.
அவளைக் கொல்லவேண்டும் என நான் திட்டம் தீட்டினேன். வெல்லம்பிட்டிய சந்தியில் ஞாயிற்றுக்கிழமை கத்தியொன்றை வாங்கினேன்.
அந்த கத்தியை பேக்கில் போட்டுக்கொண்டு, செவ்வாய்க்கிழமை அன்று பல்கலைக்கழகத்துக்கு வீட்டில் இருந்தே வந்தேன்.
காலையில் முதலாவது விரிவுரையில் பங்கேற்றேன். பின்னர் சூட்டி உன்னுடன் விசேடமாக கதைக்கவேண்டும். குதிரை பந்தைய திடலுக்கு போவோம் எனக் கூப்பிட்டேன்.
வருவதற்கு முதலில் மறுத்தாள். நான் கட்டாயப்படுத்தியதால் விருப்பம் தெரிவித்தாள். நாங்கள் இருவரும் நடந்தே குதிரை பந்தைய திடலுக்கு வந்தோம்.
கொகுனு எனுமிடத்தில் நாங்கள் இருவரும் நின்று பேசிக்கொண்டிருந்தோம். அவளுடன் கோபத்தில் இருந்தமையால் அவளைக் கொல்லவே வேண்டுமென நினைத்தேன்.
உனக்கு சைப்ரைஸ் ஒன்றை நான் கொடுக்கவேண்டும். அப்படியே கூறிக்கொண்டு அவளை, குதிரை பந்தைய திடலின் ஸ்கோர்போர்ட் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் சென்றேன்.
அவள், மீண்டும் என்னிடம் கேட்டாள் என்ன சைப்ரைஸ் என்று, கைலிருந்த கைக்குட்டையால் அவருடைய கண்களைக் கட்டினேன். பையில் இருந்து சைப்ரைஸ் பார்சலை எடுப்பதைப் போல, கத்தியை எழுத்து கழுத்தில் குத்தினேன்.
பாரிய சத்தம் எழுப்பிய அவர், கண்களை கட்டியிருந்த கைக்குட்டை அவிழ்த்து, உதவிக்காக அபாயக் குரல் எழுப்பினாள். அப்போது, மற்றுமொரு தடவை கத்தியால் கழுத்திலேயே குத்தினேன்.
சம்பவம் இடம்பெற்ற இடத்துக்கு அண்மையில் இளைஞர்கள் சிலர் இருந்தனர். அவர்கள் அவ்விடத்துக்கு ஓடிவருவதை கண்டு. அங்கிருந்து நான் தப்பியோடினேன்.
நான் தப்பியோடிய போது, சூட்டி இருந்த இடத்தை நோக்கி திரும்பி பார்த்தேன். எவ்விதமான அசைவுகளும் இன்றி சூட்டி விழுந்து கிடந்தாள்.
குதிரை பந்தைய திடலில் இருந்து வெளியே ஓடிச்சென்ற நான், பஸ்ஸில் ஏறி, வெல்லம்பிட்டியவுக்குச் சென்றேன்.
ரயிலில் பாய்ந்து தன்னுயிரை மாய்த்துக்கொள்ளவே சென்றேன். எனினும், நீண்ட நேரமாக ரயில் வரவே இல்லை. அதனால் வீட்டுக்குச் சென்றேன். அங்கு என்னுடைய புத்தகப்பை உள்ளிட்ட பொருட்களை வைத்துவிட்டு, களனி கங்கையில் பாய்ந்து தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்வதற்காக நடந்தே சென்று, கங்கையில் இரண்டு முறை குதித்தேன். இறுதியில் பொலிஸார் என்னை கைது செய்துவிட்டனர். என்றும் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
காதலனை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தி வந்த பொலிஸார், அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் 18ஆம் திகதியன்று மாலை ஆஜர்படுத்தினர்.
சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்
மஹிந்த ராஜினாமா
மஹிந்த ராஜினாமா
வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து அமைச்சர் மஹிந்த அமரவீர இராஜினாமா செய்துள்ளார்.
பதவியில் இருந்து இன்றைய தினம் அவர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், விவசாயத்துறை அமைச்சராக அவர் தொடர்ந்தும் பதவியில் இருப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது
சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது
பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்றுவந்ததாகக் கூறப்படும் சிறுநீரக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று (17) உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் என கூறப்படுபவரும், இச்சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள மற்றுமொரு பிரதான தரகர் ஒருவர் என கூறப்படுபவரும்,
வெல்லம்பிட்டிய மற்றும் கொலன்னாவ பிரதேசங்களுக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர்; மற்றும் ராஜகிரிய பிரதேச கிராம உத்தியோகத்தர் ஆகிய சந்தேக நபர்கள் நேற்று (17) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர்இமுகத்துவாரம்இ மட்டக்குளிய பிரதேசத்தில் வறுமையில் வாடும் மக்களை சிறுநீரகம் தானம் செய்வதற்கு தூண்டிய தரகர் ஒருவர் என்று மனு தொடர்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சிறுநீரக மோசடி சம்பவம் 4 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு கிராம உத்தியோகத்தர்களும் போலியான கிராம உத்தியோகத்தர் சான்றிதழ்களை வழங்கி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
சுந்தேகநபரான் ஒரு கிராம உத்தியோகத்தர், அபுதாபி பிஜை ஒருவருக்கு சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக கிராம உத்தியோகத்தர் சான்றிதழை வழங்கியுள்ளார். இலங்கையில் வெளிநாட்டவர்களுக்கு சிறுநீரக சத்திரசிகிச்சை மேற்கொள்வது தடை செய்யப்பட்டுள்ளபோதிலும் அவர் இந்த சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்த கிராம உத்தியோகத்தர், சிறுநீரகம் தானம் செய்வதற்காக வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை, ராஜகிரிய பிரதேசத்தில்; வசிப்பவர் எனக்கூறி போலியான சான்றிதழை வழங்கியுள்ளார் என்றும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இது மிகவும் பாரதூரமானதொரு செயல் ஆகும். நீதிமன்றங்களில் பிணைக்கும் இவ்வாறான போலி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் குறிப்பிட்டார்.
இதன்படி, சந்தேகநபர்கள் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை கோரிக்கையை நிராகரித்த கொழும்பு மேலதிக நீதவான், சந்தேகநபர்கள் அனைவரையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபருக்கு பயணத்தடை விதிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், குறித்த நபருக்கு வெநிநாட்டு பயணத்தடை விதிக்கவும் உத்தரவிட்டார்.
மலையக கட்சிகளுடனும் நான் உரையாடுவேன் என இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூறுகிறேன்
மலையக கட்சிகளுடனும் நான் உரையாடுவேன் என இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூறுகிறேன்
- ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இப்போது வடக்கு கிழக்கு தமிழ் கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என்பதை இங்கு வந்துள்ள திரு. மனோ கணேசனுக்கு உறுதி கூற விரும்புகிறேன். அதேபோல் முஸ்லிம்
கட்சிகளுடனும் உரையாடுவேன் என பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சபாநாயகர், அமைச்சர்கள், நசீட் அஹமத், அலி சப்ரி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்
மலையக கட்சிகளுடனும் நான் உரையாடுவேன் என இங்கு வந்துள்ள மனோ கணேசனுக்கு உறுதி கூறுகிறேன்
ரவுப் ஹக்கீம் உட்பட பல்வேறு பிரமுகர்கள் கலந்துக்கொண்ட இந்நிகழ்வில், மேலும் உரை நிகழ்த்துகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்ததாவது,
தமிழ் கட்சிகளுடன் இன்று இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் பேசுகிறேன். ஆனால், அது மாத்திரம் போதாது.
நான் இப்படி கூறும்போது, இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ள திரு. மனோ கணேசன் என்னை உற்று நோக்குகிறார். வடக்கு கிழக்கு கட்சிகளுடன் கலந்துரையாடுவதை போன்று மலையக கட்சிகளுடனும் உரையாடுவேன் என நான் அவருக்கு உறுதி கூற விரும்புகிறேன்.
முஸ்லிம் கட்சிகளுடனும் நான் பேசுவேன். இலங்கையில் சிங்களவர், இலங்கை தமிழர், மலையக தமிழர், முஸ்லிம்கள் என இனக்குழுக்கள் வாழ்கிறார்கள். அனைவரையும் இணைத்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவதே என் நோக்கம்.
அனைவருக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் உள்ளன.
ஆகவே எல்லாவற்றையும் ஒன்றாக ஒரே இடத்தில் பேச முடியாது.
ஒன்றுடன் ஒன்று சிக்கி சிக்கலை ஏற்படுத்தும். ஆகவே வெவ்வேறு இனங்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுடன்
வெவ்வேறாக பேச முடிவு செய்துள்ளேன். கடைசியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இலங்கை தேசத்தை கட்டி எழுப்புவோம்.
ஈரானில் பாரிய நில நடுக்கம் -133 பேர் காயம்
ஈரானில் பாரிய நில நடுக்கம் -133 பேர் காயம்
கடந்த தினம் வடமேற்கு ஈரானில் உள்ள மேற்கு அசர்பைஜான் மாகாணத்தில்,
5.4 ரிக்டர் அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தி சிக்க 500 க்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன .
அங்கு தரித்து நின்ற வாகனங்கள் ,வீடுகளின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளது .
இதுவரை இந்த நில நடுக்கத்தில், ஏற்பட்ட உயிரிழப்பு தொடர்பாக தெரியவரவில்லை .
ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்
ஏழை மக்களுக்கு இலவச உணவு வழங்கும் விஜய்
ஏழை மக்களுக்கு நடிகர் விஜய் தமிழகத்தில் விலையில்லா உணவு , இலவச
உணவு வழங்கி வருகிறார் .
இந்த உணவு வழங்கும் நிகழ்வு காட்சிகள் ,
தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது .
அந்த மகராசன் நீண்ட நாட்கள் வாழனும் என மக்கள் விஜயை வாழ்த்தி செல்கின்றனர் .
இந்த காட்சிகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர் .
உக்கிரைனுக்கு பீரங்கிகளை வழங்கும் சுவிடன்
உக்கிரைனுக்கு பீரங்கிகளை வழங்கும் சுவிடன்
உக்கிரைன் நாட்டின் மீது படையெடுப்பை நடத்தி வரும்,
ரசியா படைகளுக்கு எதிராக போரிட ,
உக்கிரைன் இராணுவத்தினருக்கு சுவீடன் ஆர்ச்சர் பீரங்கிகளை வழங்க உள்ளது .
இந்த பீரங்கிகள் விரைவில் உக்கிரனை சென்றடையும் என சுவிடம் அறிவித்துள்ளது .
மேலும் ஐரோப்பிய பாராளுமன்றமோ ,ஜெர்மனி தாமதிக்காது ,
டாங்கிகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது .
இதனால் ஜெர்மன் ரஸ்யாவுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது .
இராணுவ விமானம் வீழ்ந்து நொறுங்கியது
இராணுவ விமானம் வீழ்ந்து நொறுங்கியது
அமெரிக்காவில் இரண்டு விமானிகளுடன் பறந்து கொண்டிருந்த ,
கடற்படை பயிற்சி விமானம், அலபாமாவின் போலே அருகே விபத்துக்குள்ளானது .
எனினு விமானிகள் இருவரும் தப்பித்து கொண்டனர் .
எனினும் தொடர்ந்து சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .
இந்த விபத்து தொடர்பிலான ,
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன்
சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன்
முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறுமியுடன் குடும்பம் நடத்திய இளைஞன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
முள்ளிவாய்க்கால் பகுதியினைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் 15 வயதுடைய சிறுமியுடன் கடந்த 8 மாத காலமாக குடும்பமாக வாழ்ந்து வந்து, சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.
இந்த நிலையில், சிறுமியை கர்ப்பவதி கிளினிக்கிற்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனைக்கு சென்ற போது, சிறுமியின் வயதினை அறிந்த சட்டவைத்திய அதிகாரிகள் சிறுமி கர்ப்பமானது தொடர்பிலான பரிசோதனையினை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் குறித்த சிறுமி 7 மாத கர்ப்பமாக காணப்பட்டுள்ளார். சிறுமி பாதுகாப்பான மருத்துவ பராமரிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமியை கர்ப்பமாக்கி கர்ப்பவதி கிளினிக் அழைத்து வந்த இளைஞன்
சட்டத்திற்கு முரணான இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இளைஞன் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இளைஞனை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
குறித்த சிறுமியினை சட்டத்திற்கு முரணாக குடும்பமாக
வாழ வைத்த சிறுமியின் பெற்றோர்களை விசாரணை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.
மாணவியை பலியெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்
மாணவியை பலியெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்
கொழும்பு பல்கலைக்கழகத்தின் 3ஆம் வருட மாணவியொருவர், செவ்வாய்க்கிழமை (17) நண்பகல், அவருடைய காதலன் என்று கூறப்படும் நபரால் மேற்கொள்ளப்பட்ட கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
கொழும்பு – 07, குதிரைப் பந்தய திடலில் இரத்த வெள்ளத்தில் கிடந்த நிலையில் குறுந்துவத்த பொலிஸாரினால் சடலம், கண்டெடுக்கப்பட்டது. உயிரிழந்தவர் ஹோமாகம பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதான மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த மாணவியின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்பட்டன. கொலை செய்தாகக் கூறப்படும் சந்தேகநபரும் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவன் ஆவார்.
அவர், கொலன்னாவை, வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மாணவியை பலியெடுத்த காதலனுக்கு விளக்கமறியல்
சம்பவ இடத்தில் நீதவான் விசாரணை இடம்பெற்ற பின்னர், சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
காதலன் என கூறப்படும் நபர், மூன்று மணிநேரத்துக்கு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரை தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தி வந்த பொலிஸார், அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
24 வயதான சந்தேகநபரை எதிர்வரும் 30ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.




































