படுத்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்| isrel iran News in Tamil | ukraine |iran |இஸ்ரேல் ஈரான் போர் செய்திகள்

இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்| isrel iran News in Tamil | ukraine |iran |இஸ்ரேல் ஈரான் போர் செய்திகள்

உக்கிரைன் களமுனையில் ஈரானின் தற்கொலை மற்றும் உளவு விமானங்கள்,
தாக்குதல்கள் திறம்பட்ட வண்ணம் அமைந்துள்ளன .

இதனால் உலகில் உள்ள 90 நாடுகள் ஈரானிடம் இருந்து,
இந்த விமானங்களை வாங்கிட போட்டி போட்ட வண்ணம் உள்ளன .

உலக சந்தையில் ஈரான் விமானங்களுக்கு ஏற்பட்ட மவுசை அடுத்து ,
அதன் விற்பனையை தடுக்கும் நகர்வில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ,
திறம்பட செயலாற்றி வருகின்றன .

ஈரானின் வங்கி கட்டமைப்பு மற்றும் பெட்ரோல் நிலையங்கள் மீது ,
கைக்கிங் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன .

இதன் மூலம் ஈரானுக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்த,
அவர்கள் முயன்றுள்ளன .

என்னும் அந்த கைக்கிங்க தாக்குதல் முறியடிக்க பட்டு,
யாவும் சரி செய்யப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது .

தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் சீருடையில் இருந்த 4 பேர் கைது

பொலிஸ் சீருடையில் இருந்த 4 பேர் கைது

நிட்டம்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாஇம்புல பகுதியில் குற்றத்தடுப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிட்டம்புவ பொலிஸ் நிலைய அதிகாரிகள் சந்தேகத்திற்கிடமான கார் ஒன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது காருக்குள் போலிஸ் சீருடை அணிந்த 4 பேர் இருந்துள்ளனர்.

அவர்கள் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அல்ல என்பதை உணர்ந்த பின்னர், காரும் நான்கு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு கைவிலங்குகள் மற்றும் 3 போலி இலக்கத் தகடுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் சீருடையில் இருந்த 4 பேர் கைது

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 25, 26, 27 மற்றும் 42 வயதுடைய நிட்டம்புவ, முல்லேரிய, கிந்தோட்டை மற்றும் எல்லக்கல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது..

சந்தேக நபர்கள் இன்று (09) அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

சந்தேகநபர்கள் ஏதேனும் குற்றச்செயல்களுக்காக பயணித்தார்களா
என்பது தொடர்பில் தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

No posts found.
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

ஆசிரியயை ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

ஆசிரியயை ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் மனைவியான ஆசிரியர் உருக்குலைந்த நிலையில் இன்று (09) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார தெரிவித்தார்.

கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்து வரும் நிலையில் ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார்.

ஆசிரியயை ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்பு

இந்த நிலையில் சம்பவ தினமான இன்று காலை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசிய நிலையில் கிராம சேவகர் பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து உருக்குலைந்த நிலையில் ஆசிரியரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தடவியல் மற்றும்
குற்றதடுப்பு பிரிவு மேலதிக விசாரணையை மேற்கொண்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

No posts found.
அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்

அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது

நேற்று நடைபெற்ற இந்த சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ சுமந்திரன், இரா.சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்

இதன்போது தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த போராட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

அரசியல் தீர்வு குறித்து பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்

அத்துடன், எதிர்வரும் காலங்களில் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் உதவிகளை எவ்வாறு தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கு உதவும் வகையில் வழங்க முடியும் என்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் உத்தியோகப்பூர்வ
இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில், இலங்கைக்கான பிரான்ஸின் துணை தூதுவரும் பங்கேற்றிருந்தார்.

No posts found.
காணாமல் போனவர் குப்பையில் இருந்து சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இரு பெண்கள் சடலமாக மீட்பு

இரு பெண்கள் சடலமாக மீட்பு

கினிகத்தேனை பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து தாய், மகளது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கினிகத்தேனை- பேரகஹமுல பிர​தேசத்தைச் சே​ர்ந்த50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டிலிருந்து சில நாட்களாக எவரும் வெளியே வராமை மற்றும் அவர்கள் வசித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வருவதாக பிரதேசவாசிகள் கினிகத்தேனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் குறித்த வீட்டை உடைத்துச் சென்று உள்​ளே பார்த்த போது, தாயும் மகளும் சடலங்களா கட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் என்பதுடன், உயிரிழந்த பெண்ணின் கணவனும் மகனும் கொழும்பில் தொழில் செய்து வருவதாகவும் பொலஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

No posts found.
13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்
Posted in இலங்கை செய்திகள்

13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

3ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினாலும், அதன் மூலம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வு கிடைக்காது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் நேற்று (08) இதனை கூறினார்.

அனைத்து சந்தர்ப்பங்களிலும் ஒற்றையாட்சி நாட்டுக்குள் பெரும்பான்மை மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் நிறைவேற்றும் என்று கூறிய அவர் தான் முதலமைச்சராக இருந்த போது, இதனை நன்றான உணர்ந்துகொண்டதாக குறிப்பிட்டார்.

13ஆல் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது: சி.வி.விக்னேஸ்வரன்

இதனால், சமஷ்டியை கோருவதுடன், தற்போது 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தினால் சிறந்தது என்றும், அதனை நடைமுறைப்படுத்த அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிக்கு இடையில் என்ன நடக்கும் என்பது தெரியாத என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தற்போது தீர்வை தருவதாக கூறியுள்ள நிலையில்,
நாங்களும் அதனை ஏற்றுக்கொள்கிறோம் எனவும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No posts found.
துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்

துருக்கி நில நடுக்கத்தில் சிக்கிய இந்தியர்கள்

துருக்கியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் பத்து இந்தியர்கள் சிக்கி உள்ளனர் .
ஆனால் அவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் ,
ஒருவர் மட்டும் காணாமல் போயுள்ளார் .

இவ்வாறு காணாமல் போனவர ,
வர்த்தக நோக்கத்துடன் துருக்கிக்கு பயணித்துள்ளார் .

அவ்வாறான நபரே காணமல் போயுள்ளார் .
காணாமல் போனவரை கண்டுபிடிக்கும் பணிகள் முடிக்கிவிட பட்டுள்ளன .

இவர் இந்த அனர்த்தத்தில் சிக்கி இறந்திருக்க கூடும் ,
என அஞ்ச படுகிறது .

துருக்கியில் மூவாயிரம் இந்தியர்க்ள உள்ளதாக,
இந்தியா வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது .

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு

துருக்கி நில நடுக்கத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 12.000 ஆக உயர்வு

துருக்கி மற்றும் சிரியாவில் இடம்பெற்ற நில
நடுக்கத்தில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 12.000 கடந்துள்ளது .,

இந்த உயிரிழப்பானது மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது .

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன .
மேலும் மக்கள் பலரும்
உயிருடன் மீட்க பட்ட வண்ணம் உள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்துள்ளது .

பிரிட்டன் மன்னருடன் ஜெலன்சி சந்திப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் மன்னருடன் ஜெலன்சி சந்திப்பு

பிரிட்டன் மன்னருடன் ஜெலன்சி சந்திப்பு

உக்கிரைன் அதிபர் ஜெலன்ஸி பிரிட்டன்
மன்னர் சாள்ஸ்சை சந்தித்து பேசியுள்ளார்

இந்த சந்திப்பில் உக்கிரைனில் நடப்பது தொடர்பாக ,
நாம் கவலை உற்றுள்ளோம் .
உஙக்ளுக்கு நாங்கள்
ஆதரவாக இருப்போம் என சாள்ஸ் தெரிவித்துள்ளார் .

இந்த சந்திப்பை முடித்து கொண்டு பிரான்சுக்கு ஜெலன்ஸி செல்கிறார் ..

இவரது இந்த பயணத்தின் நோக்கம் ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை பெற்றுக்கொளவது என்பதாக அமைய பெற்றுள்ளது .

ஜெலன்ஸி வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்ளும் இவ்வேளை ,
ரசியா கடும் தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ளது .

பறந்த விமானத்தில் வெடிப்பு பலர் காயம்
Posted in உலக செய்திகள்

பறந்த விமானத்தில் வெடிப்பு பலர் காயம்

பறந்த விமானத்தில் வெடிப்பு பலர் காயம்

கடந்த தினம் அதிகாலை யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில்,
ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி நால்வர் காயமடைந்தனர் .

விமானத்தின் ஆசனத்தின் பின் பாக்கொட்டில் இருந்த ,
பாக்டரி திடீரென தீ பிடித்து வெடித்து சிதறியதில் ,
இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

உடனடியாக தீ அணைக்க பட்டு விமானம் சான் டியாகோ,
சர்வதேச விமான நிலையத்தில் ,அவசர தரை இறக்கத்தை
மேற்கொண்டது .

காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டு ,
சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர் .

பயணிகள் வேறு விமானத்தில் மாற்ற பட்டு,
தமது பயணத்தை தொடர்ந்தனர் .

இந்த வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

பள்ளத்தில் வீழ்ந்த பேரூந்து 30 பேர் மரணம்

கடந்த தினம் வடமேற்கு பாகிஸ்தானில் பயணிகள் பேருந்து ஒன்று,
கார் மீது மோதிய பள்ளத்தாக்கில் விழுந்தது .
இதன் பொழுது அதில் பயணித்த 30 பே ர்பலியாகியுள்ளனர் .

கில்கிட்டில் இருந்து ராவல்பிண்டி நோக்கி ,
வேகமாகச் சென்ற பயணிகள் பேருந்து ,
கார் மீது மோதியதில்,
இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர் .

இறந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு
எடுத்து செல்ல பட்டுள்ளன .

பாகிஸ்தானில் இவ்விதமான விபத்துகள்
அதிக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை கவனிக்க தக்கது .

தமிழகத்தில் துப்பாக்கி முனையில் தமிழர்களை மிரட்டிய வட நாட்டவர்கள்
Posted in உலக செய்திகள்

தமிழகத்தில் துப்பாக்கி முனையில் தமிழர்களை மிரட்டிய வட நாட்டவர்கள்

தமிழகத்தில் துப்பாக்கி முனையில் தமிழர்களை மிரட்டிய வட நாட்டவர்கள்

இந்தியா தமிழகத்தில் வந்து குந்தியை வட நாட்டு இராணுவத்தினர் ,
அங்குள்ள தமிழர்களை துப்பாக்கி முனையில் மிரட்டிய
சம்பவம் பெரும் பர பரப்பை ஏறப்டுத்தியுள்ளது .

இராணுவ அதிகாரி ஒருவர் நபர் ஒருவரை சுடுவதற்கு கை துப்பாக்கியை ,
எடுத்து மிரட்டும் காட்சிகள் வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமிழகத்தில் வட நாட்டவர்கள் ஆதிக்க வெறியின் உச்சத்தை இவை ,
காட்டுவதாக தமிழர்கள் கொந்தளித்துள்ளனர் .

கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் சுற்றிவளைப்பு
Posted in இலங்கை செய்திகள்

கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் சுற்றிவளைப்பு

கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் சுற்றிவளைப்பு

கல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவிகளை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அங்கு வியாபார நிலையங்களில் பயன்படுத்தப்பட்ட நிறுக்கும் கருவிகளை பரிசோதித்த போது, அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள்

திணைக்களத்தினரால் அங்கீகரிக்கப்படாத, வியாபாரத்திற்கு பயன்படுத்த முடியாத 13 நிறுக்கும் கருவிகளை வியாபாரிகள் பயன்படுத்தியமை.


கண்டறியப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட திணைக்களத்தினரால் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டது.

No posts found.
கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டாபாயவிடம் விசாரணை

கோட்டாபாயவிடம் விசாரணை

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம்,
குற்றபுலானய்வு துறையினர் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர் .

இவ்வாறு இடம்பெற்ற விசாரணைகளின் பொழுது பாராளுமன்றில் ஆர்ப்பாட்ட காரர்களினால் மீட்க பட்ட
ஒரு கோடியே எழுபது இலட்சம் ரூபா பணம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வாக்கு மூலம் பதிவு செய்யப் பட்டுள்ளது .

நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்ட கோட்டாவின் இந்த செயல்பாடு ,
மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

No posts found.
உக்கிரைனுக்கு 178 சிறுத்தை டாங்கிகளை வழங்கும் ஜெர்மன்
Posted in உலக செய்திகள்

உக்கிரைனுக்கு 178 சிறுத்தை டாங்கிகளை வழங்கும் ஜெர்மன்

உக்கிரைனுக்கு 178 சிறுத்தை டாங்கிகளை வழங்கும் ஜெர்மன்

ஜெர்மன் நாட்டினது பலத்த இழுபறிக்கு பின்னர் தற்போது
178 சிறுத்தை ஒன்று ரக டாங்கிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது .

இவை கட்டம் கட்டமாக உக்கிரைனுக்கு வழங்க படும் என ஜெர்மன் அறிவித்துள்ளது .

இந்த விசேட முன்னணி தாக்குதல் டாங்கிகளை ,
உக்கிரனுக்கு ஜெர்மன் வழங்குவதற்கு ரசியா,
பலத்த கன்னடம் தெரிவித்துள்ளது

அவ்வாறு இருந்தும் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ,
ஜெர்மன் இந்த டாங்கிகளை ,வழங்க முன்வந்துள்ளமை குறிப்பிட தக்கது .

இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

சகோதரனை வெட்டி கொன்ற 14 வயது சகோதரன்

சகோதரனை வெட்டி கொன்ற 14 வயது சகோதரன்

இலங்கை களுத்துறை பகுதியில் தயார்
மருத்துவமனக்கு சென்ற வேளை இரு சகோதரர்கள்
வீட்டில் தனிமையில் இருந்துள்ளனர் .

அப்பொழுது இருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது ,
இதன் பொழுது 14 வயது சகோதரன் கத்தியால் சகோதரனை
குற்றியும் வெட்டி கொலை செய்துள்ளார் .

இந்த கொலை குற்ற சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காணி விடுவிப்புக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

காணி விடுவிப்புக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்

காணி விடுவிப்புக்கு எதிராக பிக்குகள் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் ரணில் விக்கிரமசிங்காவின் உத்தரவின் பேரில் காணிகள் விடுவிக்க பட்டன ,மேலும் 13 வது திருத்த சட்டத்தை நடைமுறை படுத்துவேன் என அவர் உத்தரவாதம் வழங்கியுள்ளார் .

இதனை அடுத்து தற்போது பிக்குகள் தலைமையில் பாரளுமன்றம்
முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்த பட்டுள்ளது .

ராஜபக்சாக்களின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

துருக்கி சிரியா நில நடுக்கத்தின் பலி எண்ணிக்கை 8000 ஆக உயர்வு
Posted in உலக செய்திகள்

துருக்கி சிரியா நில நடுக்கத்தின் பலி எண்ணிக்கை 8000 ஆக உயர்வு

துருக்கி சிரியா நில நடுக்கத்தின் பலி எண்ணிக்கை 8000 ஆக உயர்வு

துருக்கி மற்றும் வடக்கு சிரியா பகுதிகளை இலக்கு வைத்து இடம் பெற்ற நில
நடுக்கத்தில் சிக்கி இதுவரை 8000 மக்கள் பலியாகியுள்ளனர் .

மேலும் பத்து ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து பலநூறு சிறுவர்கள் ,
உயிரோடு மீட்க பட்ட காட்சிகள் ,பார்ப்பவர்களை வியக்கவும் மிரள வைத்துள்ளது .

இரண்டு நாட்களாக இந்த இடிபாடுகளுக்குள் ,
சிக்கிய சிறுவர்கள் உயிருடன் மீட்க பட்ட சம்பவ,
காணொளிகள் வைரலாகிய வண்ணம் உள்ளன .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

சுட்டு வீழ்த்த பட்ட சீனா பலூனை மீட்டு சென்ற அமெரிக்கா கடற்படை
Posted in உலக செய்திகள்

சுட்டு வீழ்த்த பட்ட சீனா பலூனை மீட்டு சென்ற அமெரிக்கா கடற்படை

சுட்டு வீழ்த்த பட்ட சீனா பலூனை மீட்டு சென்ற அமெரிக்கா கடற்படை

அமெரிக்காவின் எல்லைக்குள் நுளைந்து முக்கிய அணு உலைகள் மற்றும்,
விமான நிலையங்களை கண்காணித்து படம் பிடித்து அனுப்பி கொண்டிருந்த
,செய்மதி உளவு பலூனை அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தியது .

செய்மதி பலூன் கடலுக்குள் வீழ்ந்த நிலையில் ,
அந்த பலூனை அவ்வாறே மீட்டு சென்றுள்ளது அமெரிக்கா கடற்படை .

ஆறு அடி நீளமுள்ள இந்த பலூனை எவ்வாறு பறக்க விட்டது
என்பது தொடர்ப்பிலும் ,எவ்விதமான சக்தி வாய்ந்த கமராக்கள் பொருத்த பட்டிருந்தன,
என்பது தொடர்ப்பில் விடயங்களை பெற்றுள்ளதாக
அமெரிக்கா இராணுவம் அறிவித்துள்ளது .

சீனாவின் முக்கிய இரகசியங்களை அமெரிக்கா தன்வச படுத்திய நிலையில் ,
அதே தொழில் நுட்பத்தை பயன்படுத்தி ,
அமெரிக்காவும் இவ்வாறு பலூன்களை தயாரித்து சோதனை,
செய்யலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இது சீனாவுக்கு ஏற்பட்ட மிக பெரும் தோல்வியாக பார்க்க படுகிறது .

இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

மதுபோதையில் நண்பனை கிணற்றுக்குள் தள்ளிய இளைஞர்கள்

மதுபோதையில் நண்பனை கிணற்றுக்குள் தள்ளிய இளைஞர்கள்

புதுக்குடியிருப்பு, சுதந்திரபுரம், வெள்ளப்பள்ளம் பகுதியில் இளைஞன் ஒருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (05) உடலமாக மீட்கப்பட்டுள்ளார். வெள்ளப்பளத்தைச் சேர்ந்த 21 அகவையுடைய விஜயராசா யசீகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திக்கொண்டிருந்த வேளை, நண்பர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து, ஏனைய மூன்று நண்பர்களால் குறித்த இளைஞன் கிணற்றுக்குள் தள்ளி விழுத்தப்பட்டுள்ளார்.

வாக்குமூலங்களின் அடிப்படையில், பொலிஸ் விசாரணையைத் தொடர்ந்து சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை, புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களை திங்கட்கிழமை (06) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, 14 நாள்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளதுடன்
உயிரிழந்தவரின் உடலம் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.