Author: நிருபர் காவலன்
பால் தேநீரின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
பால் தேநீரின் விலையில் ஏற்பட்ட மாற்றம்
பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலையை நாளை முதல் 10 ரூபாவால் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பால்மாவின் விலை குறைக்கப்பட்டுள்ளமையை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பால் தேநீர் கோப்பை ஒன்றின் விலை 90 ரூபாவாக குறைக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, நாளை முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
புத்தர் சிலைகளுடன் வருகைதந்திருந்த பிக்கு உள்ளிட்ட ஏழுவர் கைது செய்யப்பட்டனர். அவர்களை அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வலப்பனை, கீர்த்திபண்டாரபுர பொலிஸ் பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்திருந்த பௌத்த பிக்கு ஒருவர் உள்ளிட்ட ஏழு பேரை கீர்த்திபண்டாரபுர பொலிஸார் சனிக்கிழமை (25) மாலை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பிக்கு கேகாலையைச் சேர்ந்தவர், காலியைச் சேர்ந்த பெண், மீரிகமயைச் சேர்ந்த ஆண்ணொருவர் அடங்குகின்றனர். ஏனைய நால்வரில் ஒருவர் வலப்பனை கீர்த்திபண்டாரபுர பகுதியைச் சேர்ந்தவர் மற்றைய மூவரும் தம்புள்ளை பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
புத்தர் சிலைகளுடன் வந்த பிக்கு கைது
அதேநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்கள் வசமிருந்து மூன்று புத்தர் சிலைகள்,புதையல் தோண்டுவதாக பயன்படுத்த கொண்டுவந்த ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக விசாரணைகளை மேற்கொள்ளும் கீர்த்திபண்டாரபுர பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சந்தேக நபர்களை பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது இப்பிரதேசத்தில் புதையல் தோண்ட வருகை தந்த விடயம் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, கைப்பற்றிய பொருட்களுடன் வலப்பனை நீதிமன்ற நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தனர்.
மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்
மர்ம நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம்
மர்ம நபர்களால் திடீர் துப்பாக்கிப் பிரயோகம் வாகனம் பழுது பார்க்குமிடத்திற்கு முன் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பஸ் மற்றும் முச்சக்கர வண்டி மீது T56 ரக துப்பாக்கியால் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் குறித்த துப்பாக்கிப் பிரயோகத்தில் ஈடுபட்டதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென்றாலும் வாகனங்கள் இரண்டும் சேதம் அடைந்துள்ளன.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதன் காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
யாழ் பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு புதிய தலைவர்
யாழ் பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு புதிய தலைவர்
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் புதிய துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தனனை நியமிக்க யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று (25) கூடிய மாதாந்த பேரவை கூட்டத்தின் போதே இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவராக இருந்த பேராசிரியர் கலாநிதி சி.ரகுராம் கலைப்பீட பீடாதிபதியாக பொறுப்பேற்ற நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் துறைத் தலைவர் பதவிக்கு வெற்றிடம் ஏற்பட்டது.
இந்நிலையில் ஊடகக் கற்கைகள் துறையின் பதில் துறைத் தலைவராக விரிவுரையாளர் பூங்குழலி சிறிசங்கீர்த்தன் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது துறைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பேருந்து கட்டணங்கள் குறையலாம் அமைச்சர்
பேருந்து கட்டணங்கள் குறையலாம் அமைச்சர்
பேருந்து கட்டணங்கள் குறையலாம் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
களுத்துறையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், விலைச்சூத்திரத்திற்கு அமைவாக பேருந்து கட்டணங்கள் திருத்தப்படும்.
இதேவேளை, எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் உற்பத்தியாளர்களுக்கு நாடளாவிய ரீதியில் அனைத்துப் பகுதிகளிலும் வீதி ஓரங்களில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படுமென அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
உடைப்பெடுத்த ரஷ்யா விரட்டிய உக்ரைன்
உடைப்பெடுத்த ரஷ்யா விரட்டிய உக்ரைன்
உடைப்பெடுத்த ரஷ்யா விரட்டிய உக்ரைன் ,பக் மூட் முன்னரங்கில் இன்றும் ஐம்பது தடவைகள் பக்மூட் நுழைவாயிலை ,
கைப்பற்ற ஐந்து முனைகள் ஊடாக ரஷ்ய படைகள் தீவிர தாக்குதலை நடத்தின .
எறிகணைகள் ஏவுகணைகள் மழைபோல வீச பட்டன ,
வான்வழி ,கடல் வழி ஊடாகவும் ஏவுகணைகள் ஏவப்பட்டன .
உடைப்பெடுத்த ரஷ்யா விரட்டிய உக்ரைன்
கடந்த 24 மணித்தியாலத்தில் பக்மூட்டை விட கேர்சன் ,டொண்ட்ஸ்க்
பகுதியில் அதிக மோதல்கள் இடம்பெற்று வருகிறது .
இதன் போக்கு மூன்று முக்கிய முன்னரங்க
ஊடாக நகர்ந்து சமவேளை ,அந்த பகுதிகளை ரஷ்ய கட்டுப்பாட்டுக்குள் ,
கொண்டு வந்து விடும் போல் உள்ளது .
அவ்வாறான தாக்குதல்களை கடந்த தினத்தில் நடந்து முடிந்துள்ளன .
உக்ரைன் தரப்பிற்கு பாரிய இழப்பு எனவும் 760 உக்ரைன் இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக ரஷ்ய தெரிவித்துள்ளது .
ரஷ்யா உக்ரைன் வானில் கடும் யுத்தம்
ரஷ்யா உக்ரைன் வானில் கடும் யுத்தம்
ரஷ்யா உக்ரைன் வானில் கடும் யுத்தம் நடத்தியுள்ளது ,
ஏவுகணைகளை ரஷ்யா மழை போல ஏவியது ,
உக்ரைன் bakhmut பகுதியில் கடும் யுத்தம் இடம்பெற்றுள்ளது .
உக்ரைன் இராணுவத்தில் பலநூறு பேர் மரணம் .ஆயுதங்கள் அழிப்பு .
வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி
வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி
வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலியாகியுள்ளனர் ,வீடுகளுக்குள் வெள்ள நீர் நுழைந்ததினால் ,பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன .
உடைமைகள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மந்த கதியில் மீட்பு பணிகள் இடம்பெற்று
வருவதால் மக்கள் ,சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன ராகுல் கேள்வி
ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன ராகுல் கேள்வி
ஆதாம் அதானிக்கும் மோடிக்கு உள்ள உறவு என்ன என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார் .,சிறையை எண்ணி நான் அஞ்ச வில்லை ,
ஆனால் காந்தி உங்களை தண்டிப்பார் என ராகுல் சூளுரைத்துள்ளார் .
ஆதாம் அதனை தொடர்பாக ராகுல் கேள்வி எழுப்பியதற்கு பதிலடியாகவே ,ராகுல் சிறைக்கு அனுப்ப பட்டுள்ளார் .
முள்ளி வாய்களில் தமிழர்களை கொன்ற பாவம் இப்பொழுது ராஜீவ் காந்தி
குடும்பத்தை துரத்துவதை இந்த செயல்கள் காண்பிக்கின்றன .,
ராஜபாக்ஸ குடும்பம் மக்களினால் துரதியடிக்க பட்ட நிலையில் ,தற்போது
ராஜீவ் சோனியா குடும்பம் கண்ணீரில் தவிக்கிறது .
மக்களின் சாபங்களும் ,அழுகுரல்களும் ஒருபோதும் யாரையும் விடுவதில்லை
என்பதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன .,
இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி
இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி
இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் இந்த மாதிரி செய்து பாருங்க ,செம சுவையாக இருக்கும் .
அடுத்த தெரு மணக்கும் அம்புட்டு சுவையாக, இந்த பருப்பு இல்லாத சாம்பார் இருக்கும் மக்களே .
மிகவும் இலகுவான முறையில் ,
ஐந்து நிமிடத்தில் செய்த்திடலாம் வாங்க .
பருப்பு இல்லாத சாம்பார் செய்வது எப்படி ..?
அடுப்பில கடாய வைத்து ,இரண்டு தக்காளி மூன்று பச்சை மிளகாய் ,பாதி பெரிய வெங்காயம் ,மஞ்சள்,சாம்பார் பொடி , ,பூண்டு
தேவையான உப்பு ,கூடவே தண்ணர் விட்டு குக்கரில் வைத்து எடுங்க .

இப்போ நன்றாக வேகி வந்ததும் ,தக்காளி தோலை உரித்து எடுத்திடுங்க .
இப்போ இதை மிக்சியில் போட்டு அரைத்து எடுங்க ,இல்லை
அப்டி இல்லைண்ணா கடைந்து எடுங்க .
பருப்பு இல்லா சாம்பார் செய்முறை இரண்டு
இந்த சாம்பாருக்கு பொடி செய்திட ,அடுப்பில கடாய வைத்து சூடானதும் ,
இரண்டு கரண்டி கொத்தமல்லி ,ஐந்து வறுமிளகாய் ,ஒரு கரண்டி சீரகம் ,
ஒரு கரண்டி வெந்தயம் ,சேர்த்து மிதமான தீயில வறுத்து எடுங்க .
இட்லீக்கு பருப்பு இல்லாத சாம்பார் |இட்லீக்கு சாம்பார் செய்வது எப்படி

வறுத்து எடுத்ததும் ஆறவைத்து ,மிக்சியில போட்டு பொடியாக அரைத்து எடுத்திடுங்க
இப்போ சாம்பார் செய்வதுக்கு ,அடுப்பில கடையா வைத்து ,
ஒரு கரண்டி எண்ணெய் ,எண்ணெய் சூடானதும் கடுகு ,வெந்தயம் ,
சீரகம் ,பெருங்காய பொடி ,10 சின்ன வெங்காயம் ,கருவேப்பிலை ,
போட்டு நன்றாக கண்ணாடி பதம் வரும் வரைக்கும் வதக்கி கொள்ளுங்க .
அப்புறமா இது கூட அரைத்து வைத்த தக்காளி கலவை கூட்டை
இது கூட சேர்த்திடுங்க .நனறாக கொதித்து வரும் பொழுது
இரண்டு கரண்டி கடலை மாவு தண்ணி விட்டு கரைத்து விடுங்க .
அப்புறமா அரைத்து வைத்த பொடியில, ஒரு கரண்டி இதில் சேர்த்திடுங்க ,
கடலை மாவை இது கூட சேர்த்து கலக்கி விடுங்க ,
இப்போ தேவையான அளவு தண்ணி விட்டு கொதிக்க வைத்திடுங்க .
இறுதியிலே கொத்த மல்லி இலை போட்டு இறக்கிடுங்க .

இப்போ சப்பாத்தி ,சாதம் பரோட்டா ,இட்லீ ,கூட பருப்பு இல்லாத ,சாம்பாரை ஊற்றி பிசைந்து ,ஒரு புடி புடிங்க மக்களே
அம்புட்டு தாங்க வேல .பருப்பு இல்லாத சாம்பார் ரெடியாடிச்சு .
பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க
பருப்பு போளி செய்வது எப்படி செய்வது என்கின்ற கவலையை விடுங்க மக்களே .சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க வீடே மணக்கும் ,சிறுவர்கள் முதல் பெரியவங்க வரை ,கேட்டு வாங்கி உன்பாங்க .
வாங்க இப்போ பருப்பு போலி செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .
சுவையான பருப்பு போளி செய்முறை
பாத்திரம் ஒன்று எடுத்து அதற்குள் ,ஒரு கப் அளவுக்கு பருப்பு எடுத்து
,தேவையான தண்ணீர் விட்டு ,மூன்று தடவை நன்றாக கழுவி எடுங்க .
நனறாக கழுவி எடுத்த பின்னர் ,
புதிய தண்ணி விட்டு ஒருமணிநேரம் நன்றாக ஊற வைத்திடுங்க .
கடை சுவையில் பருப்பு போளி செய்திட தேவையான பொருட்கள்
இப்போ மேல் மாவு பிசைய ஒரு பாத்திரம் எடுத்து அதற்குள்ள ,
ஒன்றை கப் அளவுக்கு மைதா மா ,எடுத்திடுங்க .
அது கூடவே அரை கப் அளவுக்கு, கோதுமை மா ,தேவையான உப்பு ,
சிறிய அளவு மஞ்சள் ,ஒன்றை தேனீர் கரண்டி எண்ணெய் ,
சேர்த்து நன்றாக சேர்த்து மாவை பிசைந்து எடுங்க .
அப்புறம் தேவையான தண்ணீர் சேர்ந்து நன்றாக
சப்பாத்தி பதத்திற்கு பிசைந்து எடுங்க .
இரண்டு மணி நேரம் அந்த மாவை ஊற வைத்திடுங்க
இப்போ பருப்பு போலி செய்முறை இரண்டு
ஊறவைத்த கடலை பருப்பை எடுத்து நன்றாக கழுவி எடுத்து,
குக்கரில் போட்டு ,நெய் ,மஞ்சள் சேர்த்து குக்கரிலில் மூடி
வேக வைத்திடுங்க .
அப்புறம் அதை எடுத்து நனறாக ஒரு கரண்டியால நன்றாக மசித்து எடுங்க கீழே உள்ளது போல .
பருப்பு போளி செய்வது எப்படி |சுவையான பருப்பு போளி இப்படி செய்ங்க

இப்போ கடாய வைத்து அதில ஒன்றரை கப் வெள்ளம் ,தேவையான தண்ணி விட்டு கரைஞ்சு வரும் வரை விடுங்க .
வெல்ல கரைசல வடி கட்டி எடுங்க ,அப்புறம் வேகா வைத்தி மசித்து வாய்த்த கடலை பருப்பை

இது கூட கொட்டி கலந்திடுங்க .இது கூடவே பாதி தேங்காய் துருவல் சேர்த்திடுங்க உப்பு ,ஏலக்காய் ,போட்டு கலந்து திக் ஆகும் வரை எடுத்திடுங்க
ஆறியதும் அதை உருண்டையுங்க பிடித்து எடுத்திடுங்க ,

அப்புறம் ஊற வாய்த்த மாவை எடுத்து அதையும் சப்பாத்திக்கு போல
உருண்டையாக மாவு பிடித்து வைங்க ,
அப்புறம் மாவு தட்டியதுக்க, உருண்டை பூரணத்தை உள்ள வைத்து
முழுவதுமாக மூடி விடுங்க -மோதகம் போல .

அப்புறம் அதை ,திருப்பி வைத்து பர்ரோட்டோ மாதிரி பூரணம் வெளியில் வராத மாதிரி அழுத்தி தட்டி எடுங்க .
இப்போ பருப்பு போளி இறுதி செய்முறை மூன்று
இப்போ அடுப்பில தோசை கல்லை வைத்து நன்றாக பாராட்டோ போல ,
சுட்டு எடுங்க ,இரண்டு பக்கமும் நன்றாக சுட்டு எடுங்க .
கோல்டன் கலருக்கு வந்ததும் எடுத்திடுங்க .இப்போ டீ கூட இந்த அருமையான ,சுவையான பருப்பு போளி ,சாப்பிட்டு பாருங்க .
செமையாக இருக்கும் ,கடை பருப்பு போளி போல பஞ்சு போல சாப்டா இருக்கும் .அவ்வளவு தாங்க மக்களே .
அமெரிக்கா புயல் 23 பேர் மரணம்
அமெரிக்கா புயல் 23 பேர் மரணம்
அமெரிக்கா புயல் கோர தாண்டவத்தில் சிக்க 23 பேர் மரணம்,மேலும் பல டசின் மக்கள் காயமடைந்துள்ளனர் .
வீடுகள் ,வாகனங்கள் ,என்பன உடைந்து நாசமாகியுள்ளது .
இந்த புயலின் கோர தாண்டவம் நூறு மைல்கள் வரை பரந்து விரிந்து ,
காணப்படுவதாக, சுயாதீன தகவல்கள் தெரிவிக்கின்றன .
பாதிக்க பட பகுதிகளில் ,மீட்பு பணிகள் மற்றும் ,
உதவும் பணிகள் என்பன ஆரம்பிக்க பட்டுள்ளன .
வீடுகளை ,உடமைகளை இழந்து மக்கள் சொல்லென்னா ,
துயரில் சிக்கி தவித்து வருகின்றனர் .
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு
ஜெர்மனியில் மக்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் சமபவம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
ஜெர்மன் தலைநகர் பெர்லின் பகுதியில் மர்ம
நபர் நடத்திய திடீர் கத்தி வெட்டு மற்றும், கைக்குண்டு தாக்குதலில்
மூவர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் என ,காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இந்த கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபர் ,
கைது செய்ய பட்டுள்ளார் .இந்த தாக்குதலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்தியாவின் கடன் 121 மில்லியன் டொலர் செலுத்திய இலங்கை
இந்தியாவின் கடன் 121 மில்லியன் டொலர் செலுத்திய இலங்கை
இந்தியாவின் கடன் தொகையில் 121 மில்லியன் அமெரிக்கா ,
டொலர்களை, இலங்கை மத்திய வங்கி இந்தியாவுக்கு செலுத்தியுள்ளது .
333 மில்லியன் டொலர்களை சர்வதேச நாணய நிதியம்,
இலங்கைக்கு முதலாவது கடன் தொகையாக வழங்கியது
அவ்வாறு பெற்று கொண்ட நிதியில் , 121 மில்லியன் ,
டொலர் இந்தியாவுக்கு செலுத்த பட்டுள்ளது ,என
இலங்கை தெரிவித்துள்ளது .
கடன் மேல் கடனை வாங்கி செல்லும் இலங்கை ,
அந்த கடனை மீள் செலுத்த முடியா நிலைக்கு செல்லும் அவலம்,
எதிர் வரும் ஐந்து ஆண்டுகளில் இடம்பெற போவதை ,இலங்கை ஆட்சியாளர்களின் நகரவுகள் கட்டியமிடுகின்றன .
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
முடங்கிய உக்ரைன் முக்கிய பிராந்தியம் ,
மழை போல ரஷ்ய இராணுவத்தினர்,
கேர்சன் பகுதியை இலக்கு வைத்து தாக்குதலை நடத்தினர் .
கேர்சன் பகுதி மீது 67 தடவைகள் தாக்குதல் நடத்தியுள்ளது ,
இதன் பொழுது 301 எறிகணைகளை மழை
போல ஏவி தள்ளியது .
முடங்கிய உக்ரைன் மழை போல வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்
இந்த குண்டு தாக்குதல்களில் மக்கள் வாழ்விடங்கள் ,
மற்றும் பொது இடங்கள் ,இராணுவ நிலைகள் என்பன பலத்த சேதமடைந்துள்ளன .
குறித்த தாக்குதலில் இருவர் பலியாகியும் ,ஏழுபேர் காயமடைந்துள்ளனர் .
கேர்சன் பகுதியை விட்டு ரஷ்ய படைகள் ,
பின்வாங்கிய பின்னர் இடம்பெற்ற ,மிக பெரும் தாக்குதலாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது .
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் கடந்த தினம் சிக்கியது .
உக்ரைன் கேர்சன் டொன்ஸ்டெக் பகுதிகளை ,குறிவைத்து மழை போல ஏவுகணை தாக்குதல்களை ,ரஷ்யா இராணுவம் நடத்தியுள்ளது .
ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில், பல மக்கள் காயமடைந்துள்ளதுடன் ,
வீடுகள், பொது இடங்கள் ,இடிந்து அழிந்துள்ளது .
காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது
காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது
காதலியுடன் கடுமையாக கோபித்துக்கொண்ட பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவன், தன்னுடைய காதலியான பல்கலைக்கழக மாணவியின் நிர்வாண படங்களை, காதலியின் குடும்பத்தினருக்கு அனுப்பிவைத்துள்ள சம்பவத்தை அடுத்து அந்தக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியின் குடும்பத்தினருக்கு வட்ஸ்அப் ஊடாகவே, காதலியின் நிர்வாணப் படங்களை காதலன் அனுப்பிவைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸாரினால் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காதலியின் நிர்வாண படங்களை வெளியிட்ட காதலன் கைது
இவ்விருவரும் பல்கலைக்கழங்களில் கல்விப்பயிலும் மாணவர்கள் ஆவர், நீண்ட நாட்களாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், காதலன் தனக்கு பொருத்தமானவர் அல்லர் என்பதை உணர்ந்த காதலி, காதலை நிறுத்திக்கொள்வோம் எனக் கேட்டுள்ளார்.
அதற்கு இணங்க மறுத்த காதலின், தன்னை தொடர்ச்சியாக காதலிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், அதற்கு இணங்க காதலி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த காதலன், தான் ஏற்கெனவே கையடக்க தொலைபேசியில் எடுத்துவைத்திருந்த காதலியின் நிர்வாணப் படங்களை, காதலியின் வீட்டாருக்கு வட்ஸ்அப்பின் ஊடாக அனுப்பிவைத்துள்ளார்.
இதுதொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டு அமையவே, எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்த காதலன் கைது செய்யப்பட்டுள்ளார். காதலி, நிக்கவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை இளைஞன் தலைமறைவு
14 வயது சிறுமி மீது பாலியல் சேட்டை இளைஞன் தலைமறைவு
வவுனியா – பாரதிபுரம் பகுதியில் கடந்த 22ஆம் திகதி மாலை தனியார் வகுப்பு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த 14 வயது சிறுமி மீது பாலியல் துன்புறுத்தல் நடவடிக்கை மேற்கொள்ள முயற்சித்த இளைஞனுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் குறித்த இளைஞன் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா – பாரதிபுரம் பகுதியில் கடந்த புதன்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டையடுத்து பொலிஸார் குறித்த சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இதையடுத்து குறித்த இளைஞரைத் தேடிச் சென்றபோதும் இளைஞன் தலைமறைவாகியுள்ளது தெரியவந்துள்ளது.
பொலிஸார் இளைஞனைக் கைது செய்யுமாறு கிராம அபிவிருத்திச் சங்கம் மண்டபத்தில் பொதுமக்கள் ஒன்றிணைந்து இன்று பதில் பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, தலைமறைவாகிய இளைஞரைக் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொது மக்களுக்கு உறுதி வழங்கியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தங்க நகைகளை திருடிய இந்திய பிரஜை உட்பட 9 பேர் கைது
தங்க நகைகளை திருடிய இந்திய பிரஜை உட்பட 9 பேர் கைது
நுவரெலியா, புடலு ஓயா கீழ் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்ட மூன்று பெண்களின் தங்க நகைகளை திருடிய சந்தேகத்தின் பேரில் இந்திய பெண் ஒருவர் உட்பட ஆறு பெண்களும் மூன்று ஆண்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக புடலு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்.
கோவிலுக்கு வந்த பெண் ஒருவர் அணிந்திருந்த 850,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்க நெக்லஸ்கள் மற்றுமொரு பெண்ணின் கழுத்தில் இருந்த 16,57,500 ரூபாய் மதிப்புள்ள நகையும், மற்றைய பெண் அணிந்திருந்த 510,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகையும் திருடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் இந்தியப் பெண்ணொருவரும் இந்திய ஆணும் அடங்குவதுடன் ஏனைய சந்தேக நபர்கள் புத்தளம், திகன, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களைச் சேர்ந்த 35, 55, 47, 39, 47 மற்றும் 29 வயதுடையவர்கள்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை புடலுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போன கைதி
மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போன கைதி
பல்லேகெல முகாமில் இருந்து கைதி ஒருவர் மகாவலி ஆற்றில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
கைதி காவலில் இருந்து தப்பி மகாவலி ஆற்றில் குதித்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவர் கொழும்பு 15 இல் வசிக்கும் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கைதி ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை தேடும் பணிகள் பொலிஸார் மற்றும்
கடற்படையினரின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

































































