Tag: அணியுமாறு அறிவுறுத்தல்
Posted in இலங்கை செய்திகள்
முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
Author: நிருபர் காவலன் Published Date: 02/05/2023
முகக் கவசம் அணியுமாறு அறிவுறுத்தல்
வெசாக் வாரத்தில் மக்களுடன் அதிகமாக வெளியே நடமாடுவதால் முகக் கவசம் அணிவது சிறந்தது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மீண்டும் கோவிட் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக மக்களை மிகவும் கவனமாக இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
முகக் கவசம் அணிவது ஒரு கட்டாய சட்டம் அல்ல, ஆனால் ஒரு கோரிக்கை என அவர் கூறியுள்ளார். சுகாதாரப் பழக்க வழக்கங்களை அனைவரும் பின்பற்றுவது மிகவும் அவசியம் என அவர் மேலும் தெரிவித்துள்ளாார்

















