யாழில் இரு சிறுவர்கள் மாயம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இரு சிறுவர்கள் மாயம்

யாழில் இரு சிறுவர்கள் மாயம்

திருநெல்வேலி சைவ வித்தியா விருத்திச்சங்க சைவச் சிறுவர் இல்லத்திற்கு சேதம் விளைவித்தனர் என நிர்வாகத்தினரால் பொலிஸாரிடம் பெயர் குறிப்பிட்ட இரண்டு சிறுவர்களை அன்றைய தினம் முதல் காணவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை நேற்றைய தினம் (08) வரையில் குறித்த இரு சிறுவர்கள் தொடர்பிலும் எந்தவிதமான தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 27ஆம் திகதி சிறுவர் இல்ல விடுதி முகாமையாளர் சிறுவர் நீதிமன்றால் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார். இதனையடுத்து சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த சிறுவர்கள், இல்ல நிர்வாக கட்டடங்களுக்குச் சேதம் விளைவித்திருந்தனர்.

யாழில் இரு சிறுவர்கள் மாயம்

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சிறுவர்கள் என நான்கு பேரது பெயர்களைக் குறிப்பிட்டு கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் சைவ வித்தியா விருத்திச் சங்கத்தின் தலைவரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அவ்வாறு பெயர் குறிப்பிட்ட நான்கு சிறுவர்களில் இருவரே கடந்த 27ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளனர்.

அதேவேளை சிறுவர் இல்லத்தில் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் என்று அடையாளப்படுத்தப்பட்ட 12 சிறுவர்கள், சிறுவர் நீதிமன்றத்தால் சான்று பெற்ற பாடசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மிரட்டும் சீனா நுழைந்த இராணுவம்
Posted in உளவு செய்திகள்

மிரட்டும் சீனா நுழைந்த இராணுவம்

மிரட்டும் சீனா நுழைந்த இராணுவம்

தைவான் கடல் அருகில் சீனா போர் கப்பல்கள் ,விமானங்கள் குவிப்பு .
சீனாவின் மிரட்டும் இராணுவ போர் பயிற்சிகளினால் ,
இரு நாடுகளுக்கும் இடையில் யுத்த பதட்டம் ஏற்பட்டுள்ளது .

அமெரிக்காவுக்கு அண்டைய நாட்டு அதிபர் பயணம் செய்து ,
சைனாவை ஆத்திரமூட்டிய நிலையில் ,இந்த படை யுத்த நுழை
நகர்வில் ஈடுபட்டு வண்ணம் உள்ளது .

ரஷ்யா உக்ரைன் போர் களம் தீயில் எரிந்த வண்ணம் உள்ளது ,
குண்டுகளினால் அதிர்கிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்

கடந்த தினம் ரஷ்யா துருப்புக்கள் ,உக்ரைன் கிழக்கு லைமன், பாக்முட்,
அவ்திவ்கா மற்றும் மரிங்கா முனைகளில் ,கடும் தாக்குதலைத் தொடர்ந்தன;
குறிப்பாக, பக்முட் நகரை முழுக் கட்டுப் பாட்டிற்குள்
கொண்டு வர ,பாரிய படை நகர்வை மேற்கொண்டன

ரஷ்யப் படைகள் 2 ஏவுகணை மற்றும் 34 வான்வழித் தாக்குதல்களை நடத்தியது,பல ஏவுகணை அமைப்புகளிலிருந்து 36 க்கும் மேற்பட்ட தாக்குதல்களை நடத்தியது.


உக்ரைன் முழுவதும் ஏவுகணை மற்றும் வான்வழித் தாக்குதல்களை அதிகமாக நடத்தியது ,லைமன், பாக்முட், அவ்திவ்கா மற்றும் மரின்கா முனைகளில் பலமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன . 35க்கும் மேற்பட்ட ரஷ்ய தாக்குதல்கள் முறியடிக்கப் பட்டதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .

தொடர்ந்து பக்மூட் பகுதியை முழுவதுமாக தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வரும் தாக்குதல்களை ரஷ்ய வாடகை இராணுவம் மேற்கொண்டு வருகிறது .

ரஷ்யா உக்ரைன் கடும் மோதல் திணறும் உக்ரைன்


வரும் மணித்தியாலங்கள் அல்லது நாட்களில் ,பக்மூட் ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது .

மேலும் உக்ரைன் போலந்திடம் 200 ரோசோமாக் கவச வண்டிகளை
வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது, அதில் 100 இப்போதும் 100 பிறகும்
வழங்கப்படும் என போலந்து தெரிந்துள்ளது .


ரஸ்யாவை வெற்றி கொள்ள முப்பது நாடுகளிடம் இருந்து உக்ரைன்
ஆயுதங்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

Error: View 9293b2au4w may not exist
ஜப்பானில் அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானங்கள்
Posted in உலக செய்திகள்

ஜப்பானில் அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானங்கள்

ஜப்பானில் அவசரமாக தரை இறக்க பட்ட போர் விமானங்கள்

ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் உள்ள ,
மியாகோ ஷிமோஜிஷிமா விமான நிலையத்தில் ,
இரண்டு அமெரிக்க F-16 போர் விமானங்கள் ,
சனிக்கிழமையன்று அவசரமாக தரையிறக்கப்பட்டன

ஜப்பானின் மியாகோ தீவில் இருந்து ,
60 கிலோமீட்டர் (37 மைல்) தெற்கே ஜெட் விமானம் பறந்து கொண்டிருந்தது ,
இதன் பொது திடீரென இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது ,
அதன் பின்னரே இந்த அவசர தரை இரக்கம் மேற்கொள்ள பட்டுள்ளது .

இந்த போர் விமனக்கல் தரை இரக்கத்தன் பொழுது ,
சிவிலியன் விமானங்களில் பாதிப்புகளோ ,
அல்லது தாமதங்களோ ஏற்படவில்லை என ஜப்பான் தெரிவித்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist
அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மாரணம்
Posted in உலக செய்திகள்

அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்

அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்

துனிசியா கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கியதில் .
குறைந்தது 20 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர்

மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றபோது, ​​
துனிசியாவில் படகு மூழ்கியதில் குறைந்தது 20 ஆப்பிரிக்க குடியேறியவர்கள் பலியாகியுள்ளனர்

கடலோர காவல்படையினர் தெற்கு நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து,
17 பேரை அதே படகில் இருந்து மீட்டனர்

மீட்கப் பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது .
காணாமல் போனவர்கள் சடலங்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல்படை ஈடுபட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
மண்சரிவு அபாய எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவு அபாய எச்சரிக்கை

பதுளை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்ல பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எலபாத, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் இன்று (09) மாலை 5.30 வரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிப்போர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்
Posted in இலங்கை செய்திகள்

பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்

பிரித்தானிய தம்பதியினரிடம் கைவரிசையை காட்டியவர் சிக்கினார்

பிரித்தானிய தம்பதியின் பொருட்களையும் பணத்தையும் திருடிய குற்றச்சாட்டில் வஸ்கடுவ பிரதேசத்தை சேர்ந்த 26 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய தம்பதியிடம் இருந்து இரண்டு வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், விசாக்கள், வங்கி அட்டைகள் மற்றும் 40 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட பொருட்கள் சில பற்றைக்குள் மறைக்கப்பட்டிருந்த நிலையில் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் பிரித்தானிய தம்பதியின் பணத்தையும் பொருட்களையும் திருடி, பாதுகாப்பு பெட்டகத்தை கடலில் வீசியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து, சந்தேகநபர் களுத்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

No posts found.
வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் பாதுகாப்பு உறுதி ஜனாதிபதி ரணில்

நாட்டின் பாதுகாப்பு உறுதி ஜனாதிபதி ரணில்

நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளது. ஜனாதிபதியின் தனது உயிர்த்த ஞாயிறு தினச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில்,

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் வலி உங்கள் மனதில் இன்னும் வடுவாக இருக்கிறது என்பதை நான் நன்கு அறிவேன். அந்த துரதிஷ்டவசமான சம்பவம் தொடர்பான சட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, அந்தப் பணிகளை எந்தவொரு தலையீடும் இன்றி

சுயாதீனமாகவும் பக்கச்சார்பற்றதாகவும் முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கத் தேவையான பின்னணியை அமைத்துள்ளோம் என்பதையும் நான் நினைவுகூருகின்றேன்.

எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாதவாறு, நாட்டின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்த விரும்புகின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

#ethirinews #srilankanews #செய்திகள்

யாழில் திடீரென பற்றி எரிந்த விருந்தினர் விடுதி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் திடீரென பற்றி எரிந்த விருந்தினர் விடுதி

யாழில் திடீரென பற்றி எரிந்த விருந்தினர் விடுதி

யாழ். கொழும்புத்துறை பிரதான வீதியில் சுண்டிக்குளி பகுதியில் வீடொன்றில் இயங்கி வந்த தனியார் விருந்தினர் விடுதியில் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.

இன்று காலை ஒன்பது மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இது குறித்து யாழ். பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மின்னொழுக்கே குறித்த தீ விபத்துக்கு காரணமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ள நிலையில் சுமார் எட்டுலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தீயில் கருகி நாசமாகியுள்ளது

வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா
Posted in உலக செய்திகள்

வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா

வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா

வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ,
உலக நாடுகளின் மிக முக்கிய இராணுவத்தினரை
ஓடி வைத்துள்ளது .

வரும் நாட்களில் ,மாதங்களில் நடத்த போகும் தாக்குதல் ,
திட்டமிடல்கள் ,துல்லியமாக ரஷ்யா
கைகளுக்கு சென்ற நிலையில் ,அதனை அப்படியே வெளியிட்டு ,
அமெரிக்கா நேட்டோ நாடுகளை ஓட விட்டுள்ளது ரஷ்யா .

இந்த தாக்குதல் திட்டடங்கள் யாவும் ,போட்ட சோப் செய்ய பட்டு ,
அமெரிக்கா நேட்டோ நாடுகளை ,குழப்பும் நோக்கிலும் ,உக்ரைனில் இவர்களில் தாக்குதல் திட்டங்கள் யாவும் தோற்று போகும்
வழியை அமைக்கும் தோற்ற பட்டை உருவாக்க ,ரஷ்ய மேற்கொள்ளும் பரப்புரை என மேற்குலங்கங்கள் தெரிவித்துள்ளன .

வெளியான அமெரிக்கா நேட்டோ தாக்குதல் திட்டம் ஓடவிட்டு ரஷ்யா

உண்மையில்லா ஒரு அறிக்கைக்கு ,ஏன் இவ்வாறு அவரச பட்டு ,
நேட்டோ மற்றும் அமெரிக்கா நாடுகளின் ,உளவுத்துறை மற்றும் அவர் தம் ஆதரவு ஊடங்கள் ஒன்றாக கூக்குரல் போடுகின்றன

அப்படி என்றால் இதில் ஏதோ உண்மை இருக்கிறது ,
அமெரிக்காவினால் அறிவிக்க பட்ட சமீபகால ,உக்ரைன் மீதான உதவிகள் ,மற்றும் இராணுவ திட்டங்கள் ,இதில் அடங்க பட்டுள்ளதே ,
இந்த பர பரப்புக்கு காரணமாக அமைந்துள்ளது .

இந்த தாக்குதல் திட்டங்கள் உண்மையானது என்றால் ,
உக்ரைன் ராணுவம் பேரழிவை சந்திக்க போகிறது ,
ஏற்படுத்தும் என்பதை அடித்து கூறலாம் .

Error: View 9293b2au4w may not exist
சுனாமி குண்டு சோதனை பதட்டத்தில் உலகம்
Posted in உளவு செய்திகள்

சுனாமி குண்டு சோதனை பதட்டத்தில் உலகம்

சுனாமி குண்டு சோதனை பதட்டத்தில் உலகம்

சுனாமி ,வல்லமை கொண்டு ,குண்டு, ஒன்றை ,வடகொரியா, சோதனை, செய்துள்ளது ,கடலடியால் நீந்தி சென்று தாக்குதல் நடத்தும் ,வல்லமை கொண்ட ,அணுகுண்டுகளை ,
தாங்கி சென்று, தாக்கும் திறன் கொண்ட ,தொழில் நுட்பம், கொண்டது .

சுனாமி நீரடி ,நீச்சல் விமானம் ,என வடகொரியா அழைக்கிறது ,தென்கொரியா ,அமெரிக்கா ,இனைந்து நடத்தும் ,போர் கூட்டு பயிற்சிகளை அடுத்து ,இவ்விதமான அணுகுண்டு ,ஏவுகணை சோதனை ,நடத்தி வருகிறது .

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள மோசமான வானிலை காரணமாக பல விமானங்கள் தாமதமாகியுள்ளன.

நேற்று (07) மாலை 6.25 மணியளவில் துபாய்க்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் யூ. எல். 225 என்ற விமானம் சுமார் 15 மணி நேர தாமதத்திற்குப் பிறகு காலை 9.15 மணியளவில் புறப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு சுமார் 7.15 மணியளவில் ஜப்பானின் நரிட்டா நகருக்குச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் யு. எல். 454 என்ற விமானம் இன்று அதிகாலை 1.50 மணிக்கு புறப்பட்டதாக தெரண விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

கட்டுநாயக்கவில் மோசமான வானிலை காரணமாக விமான சேவை பாதிப்பு

அத்துடன், கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நேற்று இரவு 11.40 மணியளவில் இந்தியாவின் மும்பைக்கு செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல். 141 விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், மும்பையிலிருந்து இன்று காலை 05.35க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சீனாவின் ஷாங்காய் நகரில் இருந்து நேற்று இரவு 07.00 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த சைனா ஈஸ்டன் ஏர்லைன்ஸ் விமானம் MU-231, கட்டுநாயக்க விமான நிலையத்தை சுற்றி பெய்த கடும் மழை காரணமாக மாலைதீவின் மாலே விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது.

நேற்று மாலை 06.10க்கு குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL-230 தாமதமாகி இன்று காலை 07.33க்கு மத்தள விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Error: View 9293b2au4w may not exist
இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்

சாவகச்சேரியில் குற்றச் செயலில் ஈடுபட்ட ஒருவர் லஞ்சமாக கொடுத்த ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தினை பெற மறுத்து தன் கடமையை சரிவர புரிந்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்திற்கு சன்மானம் வழங்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

நேற்றிரவு யாழ்ப்பாணத்தில் இருந்து சட்டவிரோதமாக கடத்துச் செல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர் கடமையில் இருந்த பொலிஸ் சாஜனுக்கு 50 ஆயிரம் ரூபா பணத்தினை லஞ்சமாக வழங்கி தப்பிக்க முற்பட்டுள்ளார்.

இதன்போது குற்றச்செயலுன் தொடர்புடையவர் லஞ்சமாக கொடுத்த பணத்தினை வாங்க மறுத்த சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் சாஜன் தர பொலிஸ் உத்தியோகத்தருக்கு மதிப்பளித்து சன்மானம் வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்

Error: View 9293b2au4w may not exist
80 குழந்தைகளை கடத்தல் கண்ணீரில் பெற்றோர்கள்
Posted in உலக செய்திகள்

80 குழந்தைகளை கடத்தல் கண்ணீரில் பெற்றோர்கள்

80 குழந்தைகளை கடத்தல் கண்ணீரில் பெற்றோர்கள்

ஜம்ஃபாராவில் கொள்ளையர்கள் மீண்டும் வேலை நிறுத்தம் செய்து,
80 குழந்தைகளைக் கடத்திச் சென்றனர்

ஏப்ரல் 7, வெள்ளிக்கிழமை அன்று ஜாம்ஃபாரா மாநிலத்தில்,
உள்ள ட்சேஃப் உள்ளாட்சிப் பகுதியில் 80குழந்தைகள் கொள்ளைக்காரர்களால் கடத்தப்பட்டனர்

இவ்வாறு கடத்த பட்டவர்களில் , 12 முதல் 17 வயதுக்குட்பட்ட
சில குழந்தைகள் காட்டு பகுதி வழியாக கடத்தப்பட்டனர்.

காலை 8:00 மணியளவில் விறகுகளை எடுத்துக்கொண்டிருந்த போது ,
அவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களைச் சுற்றி வளைத்து ,
காட்டுக்குள் கடத்தி இழுத்து சென்றனர் .

கடத்த பட்ட தமது பிள்ளைங்களை ,உறவுகளை விடுவிக்க பெற்றோர்கள் அரசைவேண்டுதல் விடுத்துள்ளனர் .
தொடரும் கொள்ளை கும்பல் அடடூழியத்தால் ,அபாயகர பகுதியில் வசிக்கும் மக்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்
Posted in உலக செய்திகள்

விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்

விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு ஓடிய மக்கள்

ஈராக் குர்திஸ்தான் விமான நிலையம் அருகே, பாரிய வெடிகுண்டு வெடித்துள்ளது.

ஈராக்கின் தன்னாட்சி குர்திஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ,
சுலைமானியா விமான நிலையத்திற்கு அருகே வெள்ளிக்கிழமை ,இந்த
குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது .

குண்டு வெடிப்பில் கட்டங்கள் தீ பிடித்து எரிந்து ,
பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும்
,உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை .

துருக்கி இராணுவத்துடன் ,குருதீஸ் போராளிகள் ,மோதல்களில் ஈடுபட்டுள்ள
வேளையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரல்
மோதி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ள சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வர்த்தக மைய பகுதியாக விளங்கும் ,
டெல் அவிவ் ,பகுதியில் அதிக அளவான உல்லாச
பயணிகள் வருகை தந்து செல்கின்றனர் .

அவ்வாறு வருகை தந்த உல்லாச பயணிகளுக்குள் ,தீவிரவாதி வேகமாக காரை
செலுத்தி மக்கள் மீது மோதியுள்ளார் .

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை


இந்த சம்பவத்தில் இத்தாலி நாடடை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் ,மேலும் நான்கு இத்தாலியர் மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த
ஒருவர் காயமடைந்துள்ளனர் .

இது ஒரு திட்டமிட்ட பட்ட ,தீவிரவாத தாக்குதல் என ,
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

இதே போல மேற்கு கரை பகுதியில், இரண்டு பிரிட்டன் இளம் பெண்கள்
சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவம்,
உல்லாச பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு

பிரிட்டனில் தீவிரவாத தாக்குதல் எச்சரிக்கை போலீஸ் சோதனை அதிகரிப்பு

பிரிட்டன் வட அயர்லாந்து பகுதியில் ஈஸ்டர் திங்கள் அன்று ,
மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டுள்ளதாக ,
உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .

பிரிட்டன் எம் 15 உளவுத்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய ,
தகவலை அடுத்து ,வட அயர்லாந்து பகுதிகளில் 350 க்கு மேற்பட்ட ,
ஆயுதம் ஏந்திய விசேட காவல்துறையினர் ,கண்காணிப்பு மற்றும் ,
சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் .

மேலும் தீவிவாதிகள் பதுங்கி உள்ள பகுதிகளை சுற்றிவளைக்கும்
பணிகள் முடுக்கி விட பட்டுளள்ன .

சந்தேகத்திற்கு இடமான நடமாட்டங்கள் ,
மற்றும் வாகனகள் என்பன மறித்து சோதனை செய்ய படுகின்றன .

பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வினியோக வழி துண்டிப்பு
Posted in உலக செய்திகள்

பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வினியோக வழி துண்டிப்பு

பொறிக்குள் சிக்கிய உக்ரைன் வினியோக வழி துண்டிப்பு

உக்ரைன் ரஷ்ய போர் ,கள நிலவரம் இன்று ,கடும் மோதலாக, காண படுகிறது .
உக்ரைன் மிக முக்கிய ,விநியோக வழி ,ரஷ்யா படைகளினால் ,சுற்றி வளைக்க பட்டுள்ளது .


இந்த ஒரு, சாலை மட்டும், உக்ரைன், வசம் உள்ளது ,ஏனையவை ,ரஸ்யாவிடம் வீழ்ந்து விட்டன .

இந்த பிரதான வீதி ,முடக்க பட்டால் ,அல்லது புதின் ,இராணுவத்தினரிடம் வீழ்ந்தால் ,உக்ரைன் இராணுவம் ,பக்மூட் ,போர் களத்தில் ,தாக்கு பிடிக்க முடியாது .


இன்றைய முக்கிய, இலக்குகளை ,யுக்ரைன் கிழக்கு ,போர் ,முனை மாற்றம் பெற்றுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை

மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள கோரிக்கை

இலங்கை அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் மீள பெறப்பட வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

குறித்த சட்டத்தின் ஊடாக மனித உரிமைகளை மீறுவதற்கு, அதிகாரிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச மனித உரிமை தரங்களைப் பாதுகாக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அமைதியான விமர்சகர்களின் குரலை ஒடுக்குவதற்கும் சிறுபான்மையினரை குறிவைக்கும் செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கும் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

பருப்பு கறியில் பூரான் அதிர்ச்சியடைந்த நபர்
Posted in இலங்கை செய்திகள்

பருப்பு கறியில் பூரான் அதிர்ச்சியடைந்த நபர்

பருப்பு கறியில் பூரான் அதிர்ச்சியடைந்த நபர்

மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பேசாலை கிராமத்தில் உள்ள உணவகம் ஒன்றில் நபர் ஒருவர் நேற்று (7) காலை வாங்கிய உணவில் பூரான் காணப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் தொடர்பாக சுகாதார துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

விரைந்து செயல்பட்ட மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொது சுகாதார பரிசோதகர்கள் கிடைக்கப்பெற்ற உணவு தொடர்பான முறைப்பாட்டையடுத்து சுகாதார வைத்திய அதிகாரியின் ஆலோசனைக்கு

அமைவாக குறித்த உணவகத்துக்குச் சென்று உணவுகள் அனைத்தும் அழிக்கப் பட்டதுடன் கடை உரிமையாளர் கடுமையாக எச்சரிக்கப்பட்டு சமையலறையை உடனடியாக திருத்தி அமைப்பதற்குரிய வழிகாட்டலும் மேற்கொள்ளப்பட்டது.