Author: நிருபர் காவலன்
விழியை மூடு உயிர் வாழ்வாய் …!
விழியை மூடு உயிர் வாழ்வாய் …!
கண்ணில் உலகை
கண்ணே வைத்து …
கண்ணீரோடு
கண்ணே நனைவாய் ….
பொய்யாம் உலகின்
பொறியில் எரிந்து …
வீழ்ந்து அழுவாய்
விழியை மூடு …
கண்ணை குற்றி
கதிரை பறித்து ….
குருடாய் உன்னை
குற்றி எறிவார் …
விழித்து பார்த்தால்
விவரம் கேட்பார் …
விழியை மூடு
விசில் அடித்து அலைவார் ….
உலகம் போற போக்கில் இன்று
உற்று பார்த்தல் உலகில் பிழையாம் ..
உண்மை கசக்கும் விழியை மூடு
உலகில் கொஞ்சம் நீயும் வாழ்வாய் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -04/06/2019

உலகம் பாடும் ஓடு …!
உலகம் பாடும் ஓடு …!
கத்தி வரும் காற்றடித்து
கால் உடைந்து நான் விழவோ ..?
பற்றி வரும் தீ பிடித்து
பால் மேனி எரிந்திடுமோ …?
சுற்றி வரும் பகை பார்த்து
சூழல் பந்து வீழ்ந்திடுமோ ..?
கொட்டுகிற அருவியில
கொள்கை வீழ்ந்து செத்திடுமோ ..?
சத்தமிடும் வாய்கள் எல்லாம்
சாதனையை துப்பிடுமோ …?
சாளரத்தை பூட்டி வைத்து
சங்கதிகள் மறைத்திடுமோ …?
வெள்ளை மன சிந்தனையோ
வெற்றிகளை கொட்டி விடும் …
தட்டி வந்து கைகள் கூடி
தன் நம்பிக்கையை செப்பிவிடும் …
ஒற்றையில உள்ளாய் என்று
ஒரு போதும் எண்ணாதே …
தப்பு இன்றி நீ நடப்பின்
தரணி உன்னை பாடி விடும் …>!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/05/2019

கிழக்கொன்று வெளிக்கிறது …..!
கிழக்கொன்று வெளிக்கிறது …..!
யான் அழுது உழன்றிடவோ ..?
யாத்தலும் நின்றிடவோ ..?
ஏதுமிலார் என்றிடவோ ..?
ஏற்று யான் சென்றிடவோ ..?
ஊருமிலார் பேருமிலார்
ஊர் ஏறி வந்தின்று …
யான் அழுகை கழித்திடவோ ..?
யாசகம் செய்து பிழைத்திடவோ …?
வேர் அறுந்தான் என்றென்னை
வேறாக்கி வைத்திட்டார் ….
தீங்குடையும் காலம் ஒன்று
தீ கொண்டு வருகுதின்று …..
பாங்குகள் கண்டு யான்
பரவசம் கொண்டெழுந்தேன் ….
ஆக்கினைகள் உடையும் – நல்
ஆகாயம் கண்டு விட்டேன் ….
இக்காலம் கண்டென்னை
இழி கொண்டார் வாய்கள் எல்லாம் …
பொற்கால முன்றலில்
பொடியாகும் நிலை செய்தார் …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22/05/2019
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
TGTE அமைப்பின் இரத்த தான நிகழ்வு – படங்கள் உள்ளே
பிரிட்டன் – லண்டன் பகுதியில் நாடு கடந்த அரசாங்கத்தினால் ஒழுங்கு செய்ய பட்ட பிரேத்தியாக
இடமொன்றில் விசேட இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது ,
இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கல் தமிழின அழிப்பு நாளான மே 18 நாளினை நினைவு கூறுமுகமாக
இந்த இரத்த தானம் வழங்க பட்டுள்ளது .
இதில் இளையோர்கள் முதல் பலர் இதில் கலந்து கொண்டு இரத்த தான நன்கொடையினை வழங்கினார் .
தமிழீழ விடுதலை போராட்டம் சிங்கள அரச பயங்கவாத அரசால் முற்றாக அழிக்க பட்ட பின்னர் உருவாக்க பட்ட
நாடு கடந்த அரசாங்கம் தனது ஈழ கனவை தாங்கியபடி பயணித்து வருகிறது .
மேற்படி அமைப்பும் அதன் உறுப்பினர்களும் இலங்கை செல்வதற்கு தடை விதிக்க , பட்டுள்ளது



- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பிரதமர்

- துறைமுக நகரத்தில் கூர் ஆயுதத் தாக்குதலில் ஒருவர் பலி

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கண்டியில் நடைப் பேரணி தொடங்கியது

- மாத்தளையில் மூன்று காவல்துறை அதிகாரிகள் மீதான தாக்குதல் தொடர்பாக நால்வர் கைது

கண்ணீர் சமர்ப்பணம் …..!
கண்ணீர் சமர்ப்பணம் …..!
நேற்றெங்கள் வீதியிலே
நீள் நடந்த நிலவு ..
பேச்சின்றி போனதுவோ ..?
பேர் இடி தந்துவே ….
கால் ஊன்றி நடக்கையில
கை பிடித்து சென்றவளே …
வேர் பிடித்து நாம் நிமிர
மோர் வாத்து நின்றவளே ….
உன் வலியை உளம் புதைத்து
உன்னை நீ வதைத்து …
எழுந்து நடந்தவளே
ஏற்றங்கள் கண்டவளே ….
வேரறுந்து வீழ்ந்தாயோ ..?
வேறாகி போனாயோ …?
பொங்கி வரும் கண்ணீரை – உன்
பொற்பாதம் தூவுகிறோம் …
கலகலத்த உன் பேச்சு
கனிவான உபசரிப்பு ….
நெஞ்சம் ஏறி நினைவு தூற
நெஞ்சே தீ தின்ன மறைந்தாயே …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/05/2019
கண்ணீர் வணக்கம் …!
கண்ணீர் வணக்கம் …!
அலை கடலாய் திரண்டிங்கு
ஆர்ப்பரித்து வந்தார்க்கு …
நெஞ்சமதால் வாழ்த்துரைத்து
நெருடுகிறேன் என் வலியை ….
பூப்போல இருந்தவளாம்
புன்னகையை தந்தவளாம் ….
காற்றோடு மறைந்த தினம்
கண்கள் எல்லாம் நீராச்சு ….
பேச்செல்லாம் அவளாச்சு
பெருங்கடலாய் உறைந்தாச்சு …
மூச்செல்லாம் அவளாகி
முழு மதியாய் நிறைந்தாச்சு ….
வயிற்றுக்கு உணவின்றி
வழி யோரம் அலையையில …
நேர்த்திக்கு விட்டது போல்
நேர்ந்தெம்மை எடுத்தவளாம் ….
காற்று போல் தழுவி எம்மை
கண்ணீரை துடைத்தவளாம் …
பேச்சின்றி போன போ
பெருமனது உடைந்திருச்சு ….
கூற்றுவனே ஏன் வந்து
குலமகளை நீ பறித்தாய் …?
எம தர்மா எங்கிருக்காய்
என் முன்னே நீ வாடா ….
பெற்றவளாய் எமை அணைத்து
பேரன்பு செய்தவளை ….
குரல் நசுக்கி கொன்றதென்ன
கூற்றுவனே பதில் சொல்லாய் …………….
இன்று நாம் நிமிந்திருக்க
இல்லத்தில சிறந்திருக்க ….
உந்தனது கூடத்தில
உலவியவர் அழுகின்றோம் ….
கண்களில நீர் தந்து
கடுகதி மறைந்ததென்ன ..
நெஞ்ச மெலாம் வலி தந்து
நேர் விழியே உறைந்த தென்ன …?
வந்து வழி மலர் தூவி
வழியனுப்ப முடியலையே …
வீழ்ந்து மனம் கதறுதம்மா
விடலை உடல் நனையுதம்மா …
செந் தனலும் உன் உடலை
சேர்ந்து வந்து திண்றதுவோ ..?
கண்களது பார்த்திருக்க
கருகி நீறாய் உதிர்ந்தாயோ …?
கருகி நீ மறைந்தாலும்
கண்களது மறவாது ….
கை தொழுத பேரழகே
நவஜீவனம் மறவாது ……!
லண்டன் முரசு மோட்டை ஓன்றியத்தில் முழங்கிய கவி- கண்ணன்

உன்னை அறிந்தால் …!
உன்னை அறிந்தால் …!
எழுதாத பேனாக்கள்
இருந்தென்ன இலாபம் ..?
எதிருக்கும் புதிருக்கும்
இன்றென்ன கோபம் ..?
அறியாத அவை ஏறி
அவை என்ன முழக்கம் ..?
அனலாக தமை வைத்து
அவை என்ன உறக்கம் …?
நெஞ்சிலே உனக்கு
இன்றென்ன கலக்கம் …?
நெசமா உரைத்தாய் ..?
நெஞ்ச வரியில் வீக்கம் ….
கரையாத பனி என்றும்
கடல் வந்து சேராது …
கரை தேட முடியாது
கப்பல் கடல் ஓட முடியாது …
அது புரியா மனிதம்
அகிலம் வாழ் கூடாது …
அவை யாவும் தெளிந்தால்
அகிலம் உன்னை மறவாது …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -19/04/2019
காற்றை காதல் செய்யும் பெண் …!
காற்றை காதல் செய்யும் பெண் …!
ஆடை உள்புகுந்து
அள்ளி தழுவுகிறாய் ….
வீதியில் போகையில
விரட்டாமல் விட்டு விடு …
மிதி வண்டி மிதிக்கையிலே
கீழாடை தூக்கிறியே ….
ஒத்த கையால் நான் பிடிச்சு – வண்டி
ஓட்ட வைக்கிறியே ….
அந்தி வரும் வேளையிலே
அயராது வந்து விடு ….
வேர்வை கழன்று விழும்
வேலை அகற்றி விடு …..
உள்ளே நீ புகுந்து
உன் விருப்பில் நீயாடு ….
நீண்டு நானுறங்க
நீ வந்து தாலாட்டு …..
சந்தியில பந்தியிலே
சத்தம் போடாதே …
சம்மதம் தந்து நின்ற
சங்கதி சொல்லாதே …..
தென்றலே வந்து கொஞ்சு
தென்மாங்கு நீ பாடு …
நீயில்லா உலகிலே
நின் உயிர் வாழாதே …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -11/04/2019
ஓடி வா காதலே …!
ஓடி வா காதலே …!
உன் நினைப்பில் நானே
உடைந்து போனேன் மானே ….
கண்ணில் உன்னை காட்டு
கை தொழுவேன் நானே …
நெஞ்சுக்குள்ள நீ இருந்து
நித்தம் பொழியும் பாசம் ….
முத்தம் பொழிய தூண்டுதே
முன்னே வா தேனே …
காதல் வசப்பட்டு மனசு
காற்றாய் பறக்குது ….
கண்டபடி கனவில
கண்ணே உன்னை காட்டுது ….
பிரிந்த பொழுதில்
பிரியம் தவிக்குது …..
சேந்து விட தானே – விழி
சேர்ந்து அழுகுது ….
கூண்டு கிளியே
கூடுடைத்து வாராய் ….
காத்திருக்கேன் நானே
கண்ணீர் பாராய் …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -09/04/2019
என் மனதை பறித்தவள்…!
என் மனதை பறித்தவள்…!
கிளிநொச்சி சந்தையில
கிளியே உன்னை கண்டேனே …
மாம்பழத்தை உண்ணையிலே
மனதை தொலைத்தேனே ..
செவந்த உதட்டினிலே
செந்தமிழ் உதிரையில …
பார்த்து வியந்தேனே
பைங்கிளியே மகிழ்ந்தேனே ….
கூவி தமிழ் பாட
குலைந்து தோகையாட…
மெலிந்த பூவழகே
மெல்ல எனை இழந்தேனே …
கண்ணால மணியடித்து
காதல் தூது விட்டாய் …
பேரழகே வாடுகிறேன்
பேரன்பை தேடுகிறேன் ….
ஒரு நாளு மணவறையில்
ஒண்ணாகும் வேளையில் …
சொல்லத்தானே போறேன் – அடி
சொர்க்கத்தானே போறாய் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -07/04/2019
மனிதா காப்பாற்று ….!
மனிதா காப்பாற்று ….!
மரங்களின் வியர்வையில்
மழை வர கண்டேன் …
மனித சிந்தை
மரக்கொலை அதிர்ந்தேன் ….
வாழ காற்றை
வழி தரும் மரத்தை
கொன்ற மனிதா – உன்
கொலையை எதிர்த்தேன் ….
கொஞ்சம் எண்ணாய் .?
கொள்கை கொள்ளாய் …?
இயற்கை அழித்து
இன்றென்ன காண்பாய் …?
மலைகளின் உயர்வில்
முகில்களின் உரசல் …
பனி தர கண்டேன்
பளிங்கு நீர் உண்டேன் ….
என்னை காக்கும்
என் வளம் அழித்து …
உன் உயிர் கொல்லும்
ஊழியம் அகற்று ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -06/04/2019
வழி கொடு இறைவா ….!
வழி கொடு இறைவா ….!
கண்ணீர் உதிர
கைகள் தொழுதேன் …
கடவுள் என்றால்
கருணை காட்டு …
விந்தை உலகில்
வீசி எழ …
சிந்தை புகுந்து
சிறகு கட்டு …
நோதல் தாங்கி
நொந்து வெந்தேன் …
கிண்டல் செய்தார்
கிலி கொள்ள வை …
கந்தல் கிழிய
கருணை காட்டு …
கண்ணீர் துளியை
கையால் தட்டு …
உன்னில் வெறியன்
உந்தன் மறவன் …
இன்று நிமிர
இறைவா காட்டு …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -04/04/2019
உன்னை மறந்தேன் ஓடிவிடு …!
உன்னை மறந்தேன் ஓடிவிடு …!
பள்ளி வந்த பருவத்தில
பார்த்த உந்தன் பூ முகத்தை …
நெஞ்சை விட்டு பறித்ததென்ன..?-என்
நெஞ்சை வெட்டி கிழித்ததென்ன …?
கலரு பார்த்து ஆளை பார்த்தா
காதல் நிலைக்காது ….
மனசு பார்த்து ஆளை கோர்த்தா
மகிழ்வு குறையாது ….
இதயம் கிழித்து
இன்முகம் பறித்து …
கண்டாய் என்ன
கருங் குயிலே …?
முன்னே உள்ள கண்ணாடியில் – உன்
முகம் பார்க்கலையா ..?
என்ன வந்து இன்று உரைத்தாய்
ஏளனங்கள் நீயா செய்தாய் …?
பக்கம் இருக்கையில
பாசம் புரிவதில்லை ….
விட்டு பிரிந்த பின்ன
விடயம் புரிந்து பயணில்லை…
அறியாத சிந்தையில
ஆள் மனதை அறுத்தவளே ….
அதை எண்ணி இன்றென்ன
அழுது களைத்தவளே ….?
ஆயிரமாய் கனவு வளர்த்து
ஆசைகளை தேக்கி வைத்து …
உனை தாங்கி நடந்தவன்
உள்ளம் வதைத்தவளே ….
நீயழுது பயனில்லை -என்
நினைவில் நீயில்லை …
பெரும் வலிகள் தந்தவளே -உன்
பேய் மனம் நெஞ்சில் இல்லை ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -03/04/2019
என் மனதில் நீ இல்லை ….!
என் மனதில் நீ இல்லை ….!
தொடர் வண்டி வேகத்திலே
தொட்டு பார்க்க வருபவளே …
மிதி வண்டி சாலையிலே
மிதித்து போக எண்ணுறியோ …?
கூடை பந்தாய் எனை எறிய
குயிலே என்ன கூடாது …
மயிலை போல தோகை விரித்தா
மயங்கி வீழ மாட்டாது ….
புல்லை மேயும் பனித்துளியாய்
புன்னகை வீச கூடாது ….
பல்லை காட்டி நீயும் வந்தா
பாவை நானும் மடிவேனோ …?
உன் எண்ணத்தில் மாற்றமில்லை
உன்னை எண்ண மாட்டேனே …
தங்க தேர் உடல் அழகில்
தங்கமே மயங்கிட மாட்டேனே …
என்ன செய்தால் நான் வருவேன் – உன்
எண்ணத்தில கண்டு பிடி …..
கண்ண குழி சிரிப்பழகே
கண்டு பிடி – நல்ல நண்டு பிடி ….
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -01/04/2019
அழுகின்ற காதலி
அழுகின்ற காதலி
இரவின். மறைப்பினிலே
இணைவோமா ஓரத்திலே ..?..
வாலிப தேவைகளை
வா தனிப்போம் மோகத்திலே ..
ஆழம் நீயும் பார்க்க
அடி வயிறு நோக ….
வலியால் நானும் துடிப்பேன்
வாந்தி நானும் எடுப்பேன் ….
வேணாம் என்னை விட்டு விடு
வேக வைத்து கொன்று விடு ….
சத்தமில்லா செத்து விட்டால்
சங்கதிகள் தெரியாதே ….
அக்கம் பக்கம் கேலியாக
அன்பே பேசாதே ….
பெற்றவங்க நெஞ்சங்களும்
பெரும் தீயாய் ஏரியாதே ….
உன் மேலே நேசம் வைத்தேன்
உருண்டு அழுதிடவா ..?
என் உயிர் மன்னவனே
என்னை கொஞ்சம் புரிந்து விடு …!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -29/03/2019
நீ வந்தால் போதும் …!
நீ வந்தால் போதும் …!
சிங்கராஜா வனமா நீ
சிக்கெடுக்க வரவா நான் ..?
பாய் விரிக்கும் புல்வெளியை
பாவை சுருட்டி தரவா …?
ஆளை உண்ணும் சிறுத்தை கூட
அக்கம் ,பக்கம் இருக்குது ….
அதை அறியா வந்து இங்க
ஆடும் மயில் சிக்கி தவிக்குது ….
தோகை இல்லா பெண் மயிலே
தோகை நானும் தந்திடவா …?
ஆவி . உடல் அத்தனையும்
அடியே உன்னில் வைத்திடவா ..?
என்ன மானே கலக்கம்
ஏனிந்த தயக்கம் …?
ஊரை தூக்கி தூர வீசு
உறவே என்னில் ஏறி மூசு ….
வந்தவர் ஆயிரம் வழியில் சொல்வார்
வலிகளை அள்ளியே மேனியில் எறிவார் …
நின்று கேட்டால் நீயும் அழிவாய்
நிலை குலைந்து உயிர் விடுவாய் ….
ஊர் பேச்சு வீண் பேச்சு
உள்ளம் தட்டு வரும் வீச்சு ….
உன்னை நீயே நம்பு
உயிர் தரும் தென்பு ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -28/03/2019
( சிங்கராஜா வனம் இலங்கையின் மிக பெரும் முதல் காடு )
உன்னை தேடுதே உள்ளம் …!
உன்னை தேடுதே உள்ளம் …!
பொங்கு கடலென தங்கு தடையின்றி
எங்கும் அலைந்தவன் – பகை
தங்கு தடையின்றி வந்த வழிகளை
நெஞ்சு நேர் நின்று அறைந்தவன் …..
கொன்று பகை உடல் தாங்கியே – வந்து
வெற்றி சொன்னவன் -பகை
தாங்கியே வந்த கனரகம் அள்ளியே
ஆடி மகிழ்ந்தவன் …
லீமா என்றால் களமும் அதிரும்
இலைகள் கூட எழுந்து தாக்கும் ….
புல்லு கூட புலியாகி மிரட்டும்
புன்னகை சிந்தி போர் களம் ஆடும் …
குண்டு கூட கொல்ல அஞ்சி
ஓடி திரிந்தவன் – இன்று
கொடிய நோய் தாக்கி
வீழ்ந்து மடிந்தவன் ……
அண்ணன் அழைக்கும் வீர தளபதி – பகை
அஞ்சி நடுங்கும் மூத்த தளபதி …
பால்றாஜ் அண்ணா நீயும் வீழ்ந்தாய்
பாதியிலே ஈழம் இழந்தாச்சு …….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -26/03/2019
பகை சிதற களம் வெடிக்கும் ….!
பகை சிதற களம் வெடிக்கும் ….!
மீசை முறுக்கி கொடியை தூக்கு
மீள் எழுவோம் பகையை தாக்கு ….
வந்தேறி மண்ணை ஆள்வதா …?
வரிப்புலி சும்மா இருப்பதா …?
வேவு எடுப்போம்
விரைவாய் தடுப்போம் ….
ஆண்ட மண்ணை மீட்டு வருவோம்
ஆடு தமிழா பாடு தமிழா ….
உரிமைக்காகவே உயிர்கள் ஆயிரம்
உறைந்த மண்ணடா …
உயிர் தந்தவர் நெறிகள் வாழ
உயிர்த்தே வருவோம் வாழ ….
இடர்கள் ஆயிரம் கண்டவர் நாங்கள்
இதையும் தாண்டி நிமிர்ந்தவர் நாங்கள் …
சோதனை ஆயிரம் வேதனையாகலாம்
சோடனை கதைகளும் கூடி ஆழலாம் ..
வென்றே தீருவோம் – ஈழம்
கண்டே தீருவோம் ….
இடையில் பெரும் அமைதி
இல்லையடா வீழ்ச்சி …..!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -24/03/2019
நான் வாழ -நீ வந்தா போதும் …..!
நான் வாழ -நீ வந்தா போதும் …..!
ஆழி பேரலையா
அடி மனசு சுத்துதடி …
ஆளு மிரளும் பேயா
அடி உன் நினைவு கத்துதடி …
பக்கம் வந்தா போதும் – நான்
பளிங்கா மிளிருவேன் …
தூக்கதில ஒழுகும் நிலவா – உன்னை
துரத்தி வருவேன் ….
வெட்கமில்லை சொல்ல எனக்கு – அடி
வேணும் நீ எனக்கு ….
என்ன விலை சொல்லு
எண்ணி கட்டிடுவேன் பில்லு ….
காற்று போல தட்ட
கரைகிறேன் பனியா …
மூச்சு முட்ட பேச
முன்னே தவிக்கிறேன் தனியா …
என்ன வேணும் சொல்லு
ஏற்று வாங்கி தருவேன் நானு …
நீ வந்தா போதும்
நிலவே நீ என் தேனு ….
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -22/03/2019
நான் ஆட நீ வா …!
நான் ஆட நீ வா …!
உடையாதே பூவே
உன்னை சூடவா …?
உள்ளத்தில கோயில் கட்டி
உன்னை வணங்கவா …?
ஒழுகும் நிலவொளியில்
ஓடி பாடவா ..?
உன்னை நான் விரட்ட
என்னை நீ மிரட்ட …
கோயில் மணி ஓசையில
கொழுந்து காற்றினிலே …..
ஆனந்தம் பிறக்குமே
அதிகாலை உதிக்குமே ….
தேன் சிந்தும் இனிமையில
தேகம் குளிர மனம் மகிழ ….
தந்தனா பாட்டு தான்
தாளமிடும் நேரம் தான் ….
கண்ணே கவலை விடு
காதலே உயிர் கொடு ..
நாளுமே ஊர்கோலம் தான்
நாள் திசையும் எம் வசம் தான் ….!
வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -18/03/2019







