Author: நிருபர் காவலன்
ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளராக பி.பீ ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டிற்கு முன்னர் இருந்த அரசாங்கத்தில் மத்திய வங்கியின் நிதி அமைச்சின் செயலாளராக இவர் கடமையாற்றி இருந்தார்.
வடக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கோட்டாவுடன் பேசுவேன் – விக்கி
வடக்கு தமிழர் பிரச்சனைகளை தீர்க்க கோட்டாவுடன் பேசுவேன் – விக்கி
வடக்கில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடலில் ஈடுபட நடவடிக்கை எடுப்பதாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தமிழர்களை கொன்று குவித்த -கமல் குணரெத்தின பாதுகாப்பு அமைச்சராக நியமனம்
தமிழர்களை கொன்று குவித்த -கமல் குணரெத்தின பாதுகாப்பு அமைச்சராக நியமனம்
இலங்கையில் இடம்பெற்ற இறுதி போரில் தமிழர்களை கொன்று குவித்த முக்கிய படையணியை வழிநடத்திய கமல் குணரெத்தின பாதுகாப்பபு அமைச்சராக கோத்தபாயாவால் நியமிக்க பட்டுள்ளார் ,தனது நெருங்கிய இராணுவ சகாக்களை இராணுவத்தின் உயர் மட்ட அதிகாரிகளான கோத்தபாய நியமித்துள்ளமை குறிப்பிட தக்கது
தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும்-மனோ கணேசன்
தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே தமிழரும், முஸ்லிம்களும் தொடர்ந்து வாழ வேண்டும்
அமைச்சர் மனோ கணேசன்
இந்த தேர்தல் முரண்பாட்டு மாற்றத்தை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு புலம் பெயர விரும்பும் சிறுகுழுக்கள் எப்போதும் போல் இருப்பார்கள். ஏற்கனவே புலம் பெயர்ந்து, வழக்காடி, இப்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பி வராமல் இருக்க இதை பயன்படுத்த விரும்புவோரும் இருப்பார்கள். இவர்கள் எப்போதும் இலங்கையை தாய்நாடாக கருதியவர்கள் அல்ல. ஆகவே அவர்கள் அப்படியே விரும்பட்டும். அவர்களை சார்ந்த அரசியல்வாதிகளும் வெளிநாடுகளில் தஞ்சமடையட்டும். ஆனால், தேர்தல் செய்தி எதுவாக இருந்தாலும் இந்நாட்டிலேயே மிக பெரும்பாலான தமிழரும், முஸ்லிம்களும் வாழ வேண்டும். இந்த தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கி பிடித்துக்கொண்டு, சிங்கள, தமிழ், முஸ்லிம் இலங்கையர்களாகிய நாம், தொடர்ந்து வெவ்வேறு நாட்டவர் போன்று பயணிக்க முடியாது. இலங்கை எங்கள் தாய்நாடு. இந்நாட்டின் நமது தமிழ் பேசும் இளையோர், இந்த நாட்டில்தான் வாழ வேண்டும். இங்கேதான் இவர்கள் கல்வி கற்று, தொழில் செய்து, மணம் செய்து, குடும்பமாக, சமூகமாக, இலங்கையர்களாக வாழ வேண்டும். இதற்கான வழியை நாம் காட்ட வேண்டும். வழியை தேடவும் வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி-ஜனநாயக மக்கள் முன்னணி தலைவரும், தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல்பதிவில் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் மனோ இதில் கூறியுள்ளதாவது,
அரசியல் கட்சிகள் சொல்லியோ, சொல்லாமலோ, தமிழ், முஸ்லிம், இந்து, கத்தோலிக்க, இஸ்லாம், கிறிஸ்தவ மக்கள் ஒரு தீர்மானத்துக்கு வந்து, ஒரு முனைப்பில், ஒரு செய்தியை சொல்லி, வடக்கு, மலையகம், கிழக்கு, மேற்கு, தெற்கு என நாடு முழுக்க வாக்களித்தார்கள்.
பெரும்பான்மையான சிங்கள பெளத்த மக்களும், வேறு முனைப்பில், இன்னொரு செய்தியை சொல்லி, வாக்களித்து விட்டார்கள்.
இந்நிலையில், சிங்கள பெளத்த மக்களின் வாக்களிப்பு பக்கத்தில் இருந்த ஒருசில தமிழ், முஸ்லிம் கட்சிகள் அல்லது நபர்கள், “நாங்கள் சொன்னோமே, கேட்டீங்களா” என்ற பாணியில் பேச முடியாது.
உண்மையில் இந்த வாக்களிப்பின் மூலம் உலகத்துக்கு, இந்த நாட்டின் புதிய ஆட்சியாளர்களுக்கு, ஒரு செய்தி சொல்லப்பட்டுள்ளது. அந்த செய்தியை நமது நாட்டின் புதிய ஜனாதிபதி புரிந்துக்கொள்ள முயல்கிறார் என்பது, அந்த பக்கத்தில் இருக்கும் தமிழ், முஸ்லிம் கட்சிகளை தாண்டி எமக்கு தெரிகிறது. இது உண்மையா, சரியா என்பதை அவகாசம் தந்து பார்ப்போம்.
நமது செய்தியை அவர்கள் புரிந்துக்கொள்வதை போன்று, சிங்கள மக்களின் செய்தியை நாமும் புரிந்துக்கொள்ள முயல வேண்டும்.
இந்த தேர்தல் முரண்பாட்டு மாற்றத்தை பயன்படுத்தி வெளிநாட்டுக்கு புலம் பெயர விரும்பும் சிறுகுழுக்கள் எப்போதும் போல் இருப்பார்கள். ஏற்கனவே புலம் பெயர்ந்து, வழக்காடி, இப்போது மீண்டும் இலங்கைக்கு திரும்பி வராமல் இருக்க இதை பயன்படுத்த விரும்புவோரும் இருப்பார்கள்.
இவர்கள் எப்போதும் இலங்கையை தாய்நாடாக கருதியவர்கள் அல்ல. ஆகவே அவர்கள் அப்படியே விரும்பட்டும். இருக்கட்டும். அவர்களை சார்ந்த அரசியல்வாதிகளும் வெளிநாடுகளில் தஞ்சமடையட்டும்.
இதைவிட கஷ்டமான இருண்ட யுக மனித உரிமை சவால்களை இதே நாட்டில் நாம் சந்தித்து இருக்கிறோம். அதற்கு எதிரான மனித உரிமை போராட்டத்துக்கு சுமார் நான்கு வருடங்கள், நான் கொழும்பில் தலைமை தாங்கி இருக்கின்றேன்.
இனி அந்த இருண்ட யுகம் மீண்டும் வரும் என நான் நம்பவில்லை. நமது அரசின் மீது எவ்வளவோ குறைபாடுகள் இருந்தாலும், இந்நாட்டில் ஜனநாயக இடைவெளியை நாம் ஏற்படுத்தி விட்டோம். இனி இன்றைய உலக ஒழுங்கில், அது பின்னோக்கி நகர முடியாது.
தேர்தல் முடிவு சூட்டின் காரணமாக ஆங்காங்கே நடைபெறும் சில சம்பவங்கள் தொடர்பில் நாம் கரிசனை கொண்டு நடவடிக்கை எடுத்துள்ளோம். அவை முடிவுக்கு வரும் என நம்புவோம்.
இந்நிலையில் இனியும் இந்த தேர்தல் வாக்களிப்பு முரண்பாட்டை தூக்கி பிடித்துக்கொண்டு, சிங்கள, தமிழ், முஸ்லிம் இலங்கையர்களாகிய நாம், தொடர்ந்து வெவ்வேறு நாட்டவர் போன்று பயணிக்க முடியாது. இலங்கை எங்கள் தாய்நாடு.
இந்நாட்டின் நமது தமிழ் பேசும் இளையோர், இந்த நாட்டில்தான் வாழ வேண்டும். இங்கேதான் இவர்கள் கல்வி கற்று, தொழில் செய்து, மணம் செய்து, குடும்பமாக, சமூகமாக, இலங்கையர்களாக வாழ வேண்டும். இதற்கான வழியை நம் காட்ட வேண்டும். அதன் பின்னர் நம்மில் பலர் மீண்டும் இங்கேயே பிறக்க விரும்பியே சாகவும் வேண்டும்.
இதைவிட சிறந்த ஒரு ஒளிமயமான எதிர்காலத்தை கனவு காண்பவர்கள் தொடர்ந்து கனவு காணட்டும். அந்த கனவுகளை நனவாக்க முயலட்டும். அவர்களுக்கு எனது இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
நாம் மனந்தளராமல், இந்த சூழலில் என்ன செய்ய முடியுமோ அதை செய்து, இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ முயல்வோம். நாளைய நாளை, இன்றைய நாளைவிட நல்ல நாளாக அமைத்திட நாம் நடைமுறை நனவு வழியில் பாடுபடுவோம்.
நான் இங்கே “லைவ்வாக” நேரடியாக இருக்கிறேன். ஏனைய தமிழ்-முஸ்லிம் அரசியலர் எவரும் இப்படி நேரடியாக இருக்கிறார்களா என எனக்கு தெரியாது. ஆகவே இனி நாம் என்ன செய்ய வேண்டும் என்ற கருத்துகள் இருந்தால் இங்கே சொல்லுங்கள். இது ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடலாக அமையட்டும்.
தமிழக அரசியல் தலைவர்கள் மீது மகிந்த மகன் பாய்ச்சல்
தமிழக அரசியல் தலைவர்கள் மீதுமகிந்த மகன் பாய்ச்சல்
இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகனும், எம்.பி.யுமான நாமல் ராஜபக்சே டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் சில தமிழ் அரசியல் தலைவர்கள் இலங்கை தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் ஆழமாக சிந்தித்தது இல்லை. அவர்களின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் எந்த ஒரு ஆக்கப்பூர்வமான செயற்பாடுகளை செய்ததுமில்லை. மாறாக தங்களுடைய சுயநல மற்றும் சந்தர்ப்பவாத அரசியல் தேவைகளுக்காக எமது நாட்டு மக்களை பகடைக்காயாக பயன்படுத்துவது தான் மிகுந்த வேதனை தரும் உண்மை.
எமது கட்சியின் சார்பில் போட்டியிட்ட கோத்தபய ராஜபக்சே இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது பல நாடுகளின் தலைவர்கள் குறிப்பாக பாரத பிரதமர் உள்ளிட்ட பாரதத்தின் பல அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துக்களை வழங்கியிருந்தனர்.
தமிழகத்தில் தமது சுயநல சந்தர்ப்பவாத அரசியலை தக்க வைப்பதற்காக எமது நாட்டில் தமிழ் மக்களைப் பற்றி அக்கறையுள்ளவர்களாக காட்டி முதலை கண்ணீர் வடிக்கும் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், பா.ம.க. தலைவர் ராமதாஸ், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் ஆகியோரின் அறிக்கைகளை கண்ணுற்றேன். அப்பட்டமான சந்தர்ப்பவாத அரசியலைத் தவிர அவற்றில் வேறேதும் இல்லை.
திருமாவளவன் – வைகோ
எமது ஜனாதிபதி உள்பட அரசாங்கமானது அனைத்து சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத் தன்மையுடனும், நல்லெண்ணத்துடனும் செயல்படும். தமிழகத்தின் அரசியல் தலைவர்களுக்கு நான் அன்புடன் கூறிக் கொள்ள விரும்புவது யாதெனில் நீங்கள் அனைவரும் அறிக்கையில் நிகழ்கால ஜனாதிபதி மற்றும் அரசை விமர்சிப்பதை விட்டு விட்டு நடைமுறை அரசியலில் இலங்கை தமிழ் மக்களை பற்றி சிந்திப்பது சாலச் சிறந்தது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோட்டபாய பதவியேற்பு நிகழ்வில் ஹிஸ்புல்லாஹ் வெட்கமற்று பங்கேற்பு!- அமைச்சு பதவி பெற துடிப்பு
கோட்டபாய
பதவியேற்பு நிகழ்வில் ஹிஸ்புல்லாஹ் வெட்கமற்று பங்கேற்பு!- அமைச்சு பதவி பெற துடிப்பு
போலி செய்தி தொடர்பில் ஊடகப்பிரிவு விளக்கம்.
ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை (18) உத்தியோகபூர்வமாக பதவியேற்றிருந்தார். இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார் – என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்விலிருந்து கலாநிதி ஹிஸ்புல்லாஹ் வெளியேற்றப்பட்டதாக சமூக வலயத்தளங்களில் உண்மைக்கு புறம்பான போலி செய்தியொன்று பரப்பப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
“ ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய இன்றைய தினம் (18) அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டிருந்தார்.
அவர் மேற்படி நிகழ்வுக்கு உற்செல்லும் போது எடுக்கப்பட்ட புகைப்படமொன்றினை வைத்து போலியான செய்தியொன்று சமூக வலயத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கே மக்கள் எதிர்பினை வெளியிட்டார்கள். மாறாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை மிகவும் மரியாதையுடன் – நாகரீகமாக வரவேற்றிருந்தனர். – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மலையகத்தில் கொண்டாட்டங்கள் photo
ஜனாதிபதியாக பதவி பிரமானம் செய்துக் கொண்ட கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மலையகத்தில் கொண்டாட்டங்கள்
ஜனாதிபதியாக பதவி பிரமானம் செய்துக் கொண்ட கோட்டபாய ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து
மலையகத்தில் கொண்டாட்டங்கள்
இன்று (18) இலங்கை சோசலிச குடியரசின் 07 ஜனாதிபதியாக பதவி பிரமானம் செய்துக் கொண்ட கோட்டாபய ராஜபக்ச அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து மலையகத்தில் கொண்டாட்டங்கள நடைபெற்றன இதன் ஒரு கட்டமாக புஸ்ஸல்லாவ நகரத்திலும் இன்று கொண்டாட்டங்கள் நடைபெற்றன



மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது -சிங்கள காடையர்கள் தாக்குதல் photo
இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது தாக்குதல்
இன்று (18) இலங்கை சோசலிச குடியரசின் 07 வது ஜனாதிபதியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு வெற்றியீட்டி உள்ள கோத்தாபய ராஜபக்ச அவர்கள் இலங்கையின் ஜனாதிபதியாக இன்று சத்திய பிரமாணம் செய்து கொண்டார்
இந் நிலையில் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு வாக்களித்த சிறுபான்மை மக்களாகிய இந்திய வம்சாவழி மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீது குண்டர்களினால் தாக்குதல் ஒன்று கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தோட்டத்தில் நடந்துள்ளது. இதனால் பலர் சொத்துக்களை இழந்து பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். தற்போது பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்..





74 வது பிறந்த நாளை கொண்டாடும் – தமிழின கொலையாளி மகிந்த
74 வாது பிறந்த நாளை கொண்டாடும் மகிந்த
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தமிழ் இன கொலையாளியுமான மகிந்த ராஜபக்ச அதனது 74 வாது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார் ,இவரது பிறந்த நாளில் சகோதரன் கோட்டபாய ஜனாதிபதியாக பிரமாணம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இரண்டாய் சிதறும் இலங்கை …!
இரண்டாய் சிதறும் இலங்கை …!
கால் நடந்த சாலை எல்லாம்
கசங்கிய உடல்கள் …
காதோரம் கேட்கிறது
கதறல் குரல்கள் …..
கொன்றவனும் வந்து விட்டான்
கொடும் ஆட்சியிலே ஏறிவிட்டான் ..
நிம்மதியை இழந்து விட்டோம்
நிர்கதியாகி விட்டோம் ….
ஆண்டுகளாய் ஆண்டு நின்றார்
ஆறாத வலிகள் தந்தார் …
என் தவறு செய்து நின்றோம் ..?
ஏனிந்த வலிகள் தந்தார் …?
உன் போல வாழ்வொன்றை
உரிமையோடு தந்து விட்டால் …
ஒன்று பட்டு வாழ்ந்திடவே
ஒருபோதும் மறுத்ததில்லை …
சிங்கள நாடென்றால்
சிதறுமடா நாடு இரண்டு …
வருங்காலம் பகிருமடா – சிங்களம்
வலியோடு ஓடுமடா ….!
– வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் -18-1-2019
நாட்டைவிட்டு – லண்டனுக்கு தப்பி ஓடும் நிலையில் சந்திரிக்கா
நாட்டைவிட்டு – லண்டனுக்கு தப்பி ஓடும் நிலையில் சந்திரிக்கா
இலங்கையில் பரம எதிரியாக உள்ள கோட்டாபய ,மகிந்த குடும்பம் ஆட்சியில் அமர்ந்த நிலையில் மிக மனவிரக்தியில் உள்ள சந்திரிக்கா லண்டனுக்கு தப்பி செல்லும் நிலையில் உளளார் .இவர் அடுத்து வரும் தினங்களில் லண்டன் சென்றடைவார் என எதிர்பார்க்க படுகிறது
தயாராகும் சிறை கூண்டு – தள்ளாடும் முன்னாள் அமைச்சர்கள்
தயாராகும் சிறை கூண்டு – தள்ளாடும் முன்னாள் அமைச்சர்கள்
இலங்கையின் – புதிய கடாபியாகவும் சர்வாதிகாரியாகவும்விளங்கும் கோட்டபாய ஜனாதிபதியான நிலையில் தற்போது அவரை எதிர்த்து பரப்புரை புரிந்து வந்தவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்வார் என கொழும்பு வட்டாரத்தில் பரபரப்பாக பேச படுகிறது ,அதற்கு அமைவாக மங்கள சமரவீர உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடுக்க பட்டு கைது செய்ய படலாம் என எதிர்பார்க்க படுகிறது ,இவர்களுக்கான சிறை கூண்டுகள் தயார் படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக – கோட்டா பதவி ஏற்றார்
இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக – கோட்டா பதவி ஏற்றார்
இலங்கை நாட்டின் ஏழாவது ஜனாதிபதியாக வரலாற்று தலைநகரமாக விளங்கிய அனுராதபுரத்தில் பதவி ஏற்று கொண்டார் ,மகாவம்சத்தின் வரலாற்றை கூறும் புராதன நகரமாக விளங்கும் அனுராதபுரத்தில் இனவாதியும் ,தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டபாய பதவி ஏற்று கொண்டுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது
நாட்டின் பாதுகாப்பே முதல் நோக்கு – கோட்டா
நாட்டின் பாதுகாப்பே முதல் நோக்கு – கோட்டா
இலங்கை திரு நாட்டின் பாதுகாப்பு மிக முக்கியமானது அதனை நாம் உறுதி செய்வோம் ,பயங்கரவாதமற்ற நாடாக இலங்கை மலரும் ,அதற்கான அரசினை நாம் நிறுவுவோம் என கோட்டா முழங்கியுள்ளார் ,இவரது இந்த உரையில் இனவாதம் பொதிந்து மலர்ந்து வீழ்ந்ததை அவதானிக்க முடிகிறது
பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு யானை கட்சி – முழக்கம் –
பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு யானை கட்சி – முழக்கம் –
இலங்கையில் புதிய ஜனாதிபதியாக கோட்டாபய தெருவுஸ் எய்ய பட்ட நிலையி எதிர்வரும் சித்திரை மாதம் பாரளுமன்ற ஆயூள் காலம் முடிவடைவதால் புதிய பாராளுமன்ற தேர்தலை நடத்துமாறு யானை கட்சியினர் வேண்டுகை விடுத்துள்ளனர் ,இதனை அடுத்து அந்த தேர்தலை நடத்த புதிய அரசு திகதியை வெளியிடும் என எதிர்பார்க்க படுகிறது ,இதில் தற்போது பெற்ற வெற்றியை கோட்டா பெற்றுக்கொள்வாரா என்பதே கேள்வியாகவுள்ளது ,பலத்தை நிரூபிக்க மக்கள் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய நிலையில் கோட்டா ஈடுபட கூடும் என எதிர்பார்க்கலாம்
கோட்டாவை இந்தியா வருமாறு – மோடி அழைப்பு
கோட்டாவை இந்தியா வருமாறு – மோடி அழைப்பு
இலங்கை ஜனாதிபதியாக தெரிவு செய்ய பட்ட கோட்டபாயவுக்கு வாழ்த்து தெரிவித்த மோடி அவரை இந்தியா வருமாறு அழைப்பு விடுத்துள்ளார் ,அவரது அழைப்பை ஏற்ற கோட்டா முதல் பயணமாக இந்தியா செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது
பதட்டமாகும் கொழும்பு – புதிய அமைச்சர்கள் யார் ..?
பதட்டமாகும் கொழும்பு – புதிய அமைச்சர்கள் யார் ..?
இலங்கையில் இரத்தக்கறை படிந்த கொலையாளி கோட்டபாய ஜனாதிபதியான நிலையில் புதிய அமைச்சரவையை அமைக்கும் முயற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றார் ,.இந்த அமைச்சில் யார் யார் அங்கம் வகிப்பார்கள் என்பதை அறிந்து கொள்ள கொழும்பு பதட்டம் அடைகிறது .இதில் அங்கயன் ,டக்கிளஸ்,கருணா உள்ளிட்டவர்கள் அமைச்சு பொறுப்புகளை பெற்று கொள்வார்கள் என எதிர்பார்க்க படுகிறது
எல்லாளன் வீழ்ந்த மண்ணில் – பதவி ஏற்கும் – கோட்டபாய
எல்லாளன் வீழ்ந்த மண்ணில் – பதவி ஏற்கும் – கோட்டபாய
இலங்கை – வரலாற்றில் துட்டகை மூணு என்பவனால் கபடமாக கொன்று வீழ்த்த பட்ட எல்லாளன் வீழ்ந்த அனுராதபுரத்தில் பிரபகாரனை கொன்று குவித்த கோட்டபாய ஏழாவது ஜனாதிபதியாக பதவி ஏற்கின்றார்
,இது தமது வரலாற்று நாயகன் என்ற மமதையில் ,இனவெறி ஊறிப்போன கொலையாளிகள் இவ்விதம் நடந்து கொள்வது சிறுபான்மை இனத்தவரை மேலும் அவமதிக்கும் ,நயப்புடைக்கும் செயலாக மாற்றம் பெறுகிறது ,இவை மேலும் பகைமையை உருவாக்கும் தவிர ஒன்று பாட்டு வாழ்தலை ஏற்காது என்பதை இந்த விடயங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன .
கைது செய்ய பட்டவர்கள் எங்கே – ?லண்டன் பிரதமர் வாசல் தளம் முன்பாக போராட்டம்
இலங்கையில் இறுதி போரின் பொழுது சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தால் கைதுசெய்ய பட தமிழர்கள் எங்கே என கோரி பிரிட்டன் பிரதமர் வாசல் தளம் முன்பாக தமிழர்கள் 17-11-2019 அன்று அறவழி போராட்டத்தை நடத்தினர் .ஆயிரம் நாளை காணாமல் போனவர்கள் போராட்டம் எட்டி பிடித்துள்ள நிலையிலும் இதுவரை அந்த மக்களுக்கான தீர்வு எட்டப்படவில்லை



அமைச்சு பதவிகளை பெற முண்டியடிக்கும் – கோட்டா அடிமைகள்
அமைச்சு பதவிகளை பெற முண்டியடிக்கும் – கோட்டா அடிமைகள்
கோட்டபாய ஜனாதிபதியாகி தெரிவான நிலையில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் அமைச்சு பதவிகளை பெற முண்டியடிக்கும் தமிழ் கூலி குழு கோட்டா அடிமைகளுக்குள் போட்டி நிலவுகிறது ,டக்கிளஸ்,அங்கயன் ,கருணா உள்ளிட்டவர்களுக்குள் இந்த கடும் போட்டி நிலவுகிறது ,அது தவிர கூட்டமைப்பின் கட்சியில் இருந்து கோட்டா பக்கம் தாவியவர்களுக்கும் அமைச்சு பதவி வழங்குவதில் கவனம் செலுத்த படுகிறதாம் .இது கூட்டமைப்பை உடைக்கும் முயற்சியின் இழுவையாக பார்க்க படுகிறது








