Posted in சினிமா

சினிமாவில் அதெல்லாம் சகஜம் – ராஷி கண்ணா

இந்தியா -சினிமாவில் அதெல்லாம் சகஜம் – ராஷி கண்ணா

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷி கண்ணா, சினிமாவில் அதெல்லாம் சகஜம் என தெரிவித்துள்ளார்.

சினிமாவில் அதெல்லாம் சகஜம் – ராஷி கண்ணா
ராஷி கண்ணா
தமிழில் இமைக்கா நொடிகள், அடங்க மறு, சங்கத்தமிழன் ஆகிய படங்களில் நடித்தவர் ராஷி கண்ணா, தெலுங்கு

படங்களிலும் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “ஒவ்வொரு நாளும் இன்னும் நல்ல மனிதராக

மாறுவதற்கு முயற்சிக்க வேண்டும். நேற்றை விட இன்று இன்னும் கொஞ்சம் அதிகமாக உழைக்க வேண்டும். அதற்காக நம்முடன் நாமே போராட வேண்டும்.

இப்போது நான் அதைத்தான் செய்து கொண்டு இருக்கிறேன். சினிமாவில் நடிக்க வந்து 7 ஆண்டுகளில் விதவிதமான கதைகள் கதாபாத்திரங்களில் நடித்து

இருக்கிறேன். இதன் மூலம் எனது எண்ணங்களில் நிறைய மாற்றங்கள் வந்து இருக்கிறது. எனது முடிவுகளையும் மாற்றி அமைத்து இருக்கிறேன். அந்த அளவுக்கு கதாபாத்திரங்கள்

தாக்கம் ஏற்படுத்தி இருக்கிறது. எனது யோசிக்கும் தன்மையும் விசாலமாகி இருக்கிறது. சினிமாவில் வெற்றி தோல்வி சகஜம்.

ராஷி கண்ணா

இதற்கு முன்பு விமர்சனங்களுக்கு உடனே பதில் கொடுப்பேன். கருத்துகளும் சொல்வேன்.

படம் தோல்வி பற்றி விமர்சித்தாலோ கிசுகிசுத்தாலோ உடனே கோபம் வரும். இப்போது அது சுத்தமாக குறைந்து விட்டது. மிகவும் சாந்தமாக மாறி விட்டேன்.

நேற்றை விட நன்றாக இருக்க வேண்டும் என்று முயற்சி செய்கிறேன். இந்த புத்தாண்டில் கூட அந்த முயற்சியில்தான் ஈடுபட்டு இருக்கிறேன்.”

இவ்வாறு ராஷி கண்ணா கூறினார்.

Posted in சினிமா

வாடகை வீட்டில் வசிக்கும் தீபிகா படுகோன்

இந்தியா -வாடகை வீட்டில் வசிக்கும் தீபிகா படுகோன்

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் தீபிகா படுகோன், தான் வசிக்கும் வீட்டுக்கு மாதம் 8 லட்சம் ரூபாய் வாடகை கொடுத்து வருகிறார்.

வாடகை வீட்டில் வசிக்கும் தீபிகாபடுகோன்
தீபிகா படுகோன்


இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தீபிகா படுகோன். இந்தி நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து

கொண்டுள்ளார். தீபிகாபடுகோன் அவரது கணவர் ரன்வீர் சிங் இருவரும் மும்பையின் பிரபாதேவி பகுதியில் உள்ள

பீனாமண்ட் டவர் என்ற அடுக்குமாடி குடிருப்பில் ஒரு பிளாட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர்.

ரன்வீர் சிங், தீபிகாபடுகோன்

அதன் ஒரு மாத வாடகை மட்டும் 7.25 லட்சம் ருபாய். 4 பெட்ரூம் கொண்ட வீட்டை 3 வருடத்திற்கு வாடகைக்கு

எடுத்துள்ளார்கள். முதல் இரண்டு வருடங்களுக்கு மாதம் 7.25 லட்சம் ரூபாயும், அடுத்த ஒரு வருடத்திற்கு 8 லட்சம் ரூபாயும் மாத வாடகையாக தரவேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

உலங்குவானூர்தி தாய்வானில் வீழ்ந்து நொறுங்கியது – இராணுவ அதிகாரிகள் பலி

தாய்வானில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி – இராணுவ அதிகாரிகள் பலி

தாய்வான் – நாட்டின் மலை பகுதியில் புதுவருடத்தை முன்னிட்டு பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த உலங்கு வானவூர்தி ஒன்று பலத்த காடுகளுக்கு மேலாக பறந்து கொண்டிருந்த பொழுது வீழ்ந்து நொறுங்கியது .


இதில் விமான படை தளபதி உள்ளிட்ட ஏழு முக்கிய அதிகாரிகள் பலியாகினர் .

இவர் இந்த பதவிக்கு ஜெனரலாக தெரிவு செய்ய பட்டு சில மாதங்களில் இந்த மரணம் இடம்பெற்றுள்ளது .

இவர் சீனவுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைத்து பணியாற்றி வந்தார் .

அதனால் இவரை சீனா உளவுத்துறை இரகசியாமாக இந்த வான்வெளியில் வைத்து போட்டு தள்ளியது என்ற தகவல் கசிந்துள்ளது .

தாய்வான் தமது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறி வருகிறது ,அவ்வாறான நிலையில் சீனாவின் இந்த நிலைப்பாட்டுக்கு கடுமையாக எதிர்த்து வந்த முக்கிய

முதல் தர இராணுவ அதிகாரியே இவ்வாறு படுகொலை செய்ய பட்டுள்ளார் .

உலங்கு வானூர்தி வான் தளத்தில் இருந்து பறந்து சுமார் பத்து நிமிடங்களில் ராடர் திரைகளில் இருந்து மறைந்து போனது

அதன் பின்னர் இடம்பெற்ற தேடுதலின் பொழுதே குறித்த பகுதியில் உலங்குவானூர்தி வீழ்ந்துள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது .

உலங்குவானூர்தி தாய்வானில் வீழ்ந்து நொறுங்கியது – இராணுவ அதிகாரிகள் பலி


விமானம் ஏவுகணைகள் மூலம் தக்க பாட்டு வீழ்ந்ததா ..? அல்லது இயந்திர கோளாறு காரணமாக வீழ்ந்ததா என்பது தொடர்பில் தாய்வான் அரசு தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

இவரது இந்த திடீர் பாடு கொலை மரணம் தாய்வான் அரசில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

விசாரணைகளின் முடிவில் இது திட்டமிடப்பட்ட படுகொலையா என தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது ,

உள்வீட்டு சாதிகள் கூட்டு காரணமாகி இந்த இராணுவ முக்கிய அதிகாரி பாடுகொலை இடம்பெற்று இருக்கும் எனின் தைஅவன் இராணுவத்தில் பலத்த

களையெடுப்புக்கள் இடம்பெறும் என எதிர்பார்க்க படுகிறது .

இதில் ஏனைய இராணுவ அதிகாரிகளுக்கு தொடர்பு உள்ளதா என்பதும் வெளிவரலாம் என எதிர்பார்க்க படுகிறது

உலங்குவானூர்தி
உலங்குவானூர்தி
Posted in இலங்கை செய்திகள்

வருடப்பிறப்பில் 392,078 குழந்தைகள் பிறப்பு

உலகம் தழுவிய -வருடப்பிறப்பில் 392,078 குழந்தைகள் பிறப்பு

வருடப்பிறப்பில் -பிறந்த அன்று உலகம் தழுவிய நிலையில் சுமார் 392,078 குழந்தைகள் பிறந்துள்ளன .
இதில் இந்தியா முதலாவது இடம் பிடித்துள்ளது

இங்கு சுமார் 67,385 சிசுக்கள் பிறந்து சாதனை படைத்துள்ளனர்
ஒரே நாளில் இத்தனை ஆயிரம் சிசுக்களா ?

உலக மக்களை அதிர வைத்த்துள்ளது ,சீனாவை மிஞ்சி இந்தியாவின் மக்கள் தொகை பெருக் கெடுக்கும் என எதிர்பார்க்க படுகிறது

Posted in இலங்கை செய்திகள்

கணவனை- கல்லைப் போட்டு கொலை செய்த மனைவி

கல்லைப்போட்டு- கணவனை கொலை செய்த மனைவி

இலங்கை -மாகொல, சிறிமங்கல பகுதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த கணவன் மீது கருங்கல்லை போட்டு மனைவி கொலை செய்துள்ளார் .

போதைக்கு அடிமையான இவர் களவு ,மற்றும் சமூக விரோத செயலில் ஈடுபட்டு வந்த நிலையில் இந்த சித்திர வதைகளை சகித்து கொள்ள முடியாத மனைவி இந்த படுகொலையை புரிந்துள்ளார் ர்

மனைவி கொலை குற்றத்தில் கைது செய்ய பட்டு நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

யாழிற்கு கடுகதி சாலை- வீதியோர வீடுகள் இடிக்க நடவடிக்க்கை

இலங்கை -யாழிற்கு கடுகதி வேக நெடுஞ்சாலை

மத்திய அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்பட்டதன் பின்னர், யாழிற்கு வரை அதிவேக நெடுஞ்சாலை

அமைக்கப்படுமென்று பெருந்தெருக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தெரிவித்தார்

கண்டி – கொழும்பு மத்திய அதிவேகப் நெடுஞ்சாலை 3 கட்டங்களின் கீழ் அமைக்கப்படுகிறது. இவற்றில் 2 கட்டங்களின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் 2 வருடங்களுக்குள் மத்திய அதிவேகப் பாதையின் நிர்மாணப் பணிகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதன் பின்னர்,

கொழும்பிலிருந்து இரத்தினபுரி வரையான றுவன்புர அதிவேகப் அதிவேகப் நெடுஞ்சாலையும், குருநாகலில்

இருந்து தம்புள்ளை வரையான அதிவேகப் பாதையும் அமைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.

அதிவேகப் பாதைக்காக சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு தற்போதைய அரசாங்கத்தின் கீழ் நியாயமான இழப்பீட்டு

முறை அமுல்படுத்தப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த குறிப்பிட்டார்.

நேற்று காலை கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனிதப் பொருளை தரிசித்ததன் பின்னர், அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

யாழிற்கு கடுகதி சாலை- வீதியோர வீடுகள் இடிக்க நடவடிக்க்கை

கண்டி நகரின் வாகன நெருக்கடியைக் குறைப்பதற்காக விலியம் கொபல்லாவ மாவத்தையிலிருந்து தென்னக்கும்புர வரை 5 கிலோ மீற்றர் தூரத்திற்கு சுரங்க வழிப் பாதை

அமைக்கப்படும். நகரின் வாகன நெரிசலை தவிர்க்கும் வேலைத்திட்டம் இந்த வருடம் ஆரம்பிக்கப்படுமென்றும் இராஜாங்க அமைச்சர்; லொஹான் ரத்வத்த தெரிவித்தார்.

வீதி வடிகால் அமைச்சினால் வீதி நிர்மாணம் என்ற புரவியில் வீதிஉவட்டாரத்தில் இருந்த பல தமிழர்கள் வீடுகள் ,கடைகள் என்பன இடித்து அழிக்க பட்டது .

அது போன்று மீளவும் இந்த விடயம் தமிழர் பகுதியில் இடம்பெற போகிறது .

அபிவிருத்தி என்ற போர்வையில் இவ்வாறு தமிழர்கள் வீடுகள் இல்லாது அழிக்கும் நகர்வும் ,அந்த மக்களை அங்கிருந்து அகற்றும் படும் நரித்தனம் இடம் பெறப்போகிறது

ஒன்றை புரிவதற்கு ஒன்றை விட்டு கொடுக்க வேண்டும் எனவும் அதற்குரிய நஷ்டா துடை அரசு தரும் என்ற ஆசை வார்த்தைகள் பேச படும்

வீதி அமைப்பின் ஊடாக தமிழர் வீடுகள் அழிக்கும் விடயம் இனி வரும் காலங்களில் யாழ் நோக்கி பேச பட போகிறது

யாழிற்கு இதுவே அரசியலாக மாறி வெடிக்க போகிறது

Posted in இலங்கை செய்திகள்

ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார்- திருமதி சாள்ஸ்

இலங்கையில் -ஆளுநராக கடமைகளை பொறுப்பேற்றார்- திருமதி சாள்ஸ்

வட மாகாணத்தின் முதலாவது பெண் ஆளுநராகதிருமதி பி.எம்.எஸ். சாள்ஸ் இன்று பிற்பகல் 1 மணிக்கு உத்தியோகபூர்வமாக தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் சிறப்புத் தர அதிகாரியான திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வட மாகாண ஆளுநராககடந்த

திங்கட் கிழமை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்தார்.

சுகாதாரம், சுதேச மருத்துவத் துறை அமைச்சின் செயலாளராகவும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின்

பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ள அவர், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் மாவட்ட செயலாளராக நீண்டகாலம் சேவையாற்றிருந்தார்.

கடந்த ஒன்றரை மாதங்களாக வடக்கு மாகாண ஆளுநர் பதவி வெற்றிடமாக இருந்து வந்த நிலையில், இவர் பதவியைப் பொறுப்பேற்றார்.

இன்றைய நிகழ்வில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், சர்வமத தலைவர்கள் மற்றும் இராணுவம், பொலிஸ்

அதிகாரிகள் கலந்து கொண்டதுடன் பொலிஸ் அணி வகுப்பு மரியாதையினையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.

ஆளுநராக
ஆளுநராக
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இலங்கையில் -துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

இலங்கை -ராகம, கெந்தலியந்தபாலுவ பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்

இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாய் தகராறு மோதலாக உருவெடுத்து இந்த துப்பாக்கி தாக்குதல் இடம்பெற்றுள்ளது .

பலியானவர் சடலம் மருத்துவமனையில் மரண பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .

போலீசார் இந்த கொலை குறித்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Posted in இலங்கை செய்திகள்

கோயிலுக்குள் ஒருவர் பலி

வவுனியா -கோயிலுக்குள் ஒருவர் பலி

இலங்கை – வவுனியா ஈச்சங்குள பிள்ளையார் ஆலயத்தில் வழிப்பாடுகள் இடம்பெற்று கொண்டிருந்த நிலையில் அங்கு சென்ற பக்தர் ஒருவர் அந்த குளத்தில் நீரில் மூழ்கி பலியானார்

இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா

புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை : பிரதமர் வி.உருத்திரகுமாரனின் புத்தாண்டுச் செய்தி !!

மலர்ந்திருக்கும் புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் நீதிக்கும், அரசியல் இறைமைக்குமான செயல்வழிப்பாதை

என்ன என்பதனை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது புத்தாண்டுச் செய்தியில் விளக்கியுள்ளார்.

இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்கள தேசத்துடன் சமத்துவமாக, கௌரவமாக, பாதுகாப்பாக, இனஅழிப்புக்கு

உள்ளாகாத வகையிலான அரசியல் உடன்பாடு எவற்றுக்கும் வரமுடியாது என்பதனையும், இத்தகையதொரு ஏற்பாட்டுக்கு சிங்கள தேசம் என்றும் தயாராக இருக்கப்

போவதில்லை என்பதனையும் 2019 மீண்டும் நிரூபித்துள்ளது எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தமிழர் தேசத்;தின் அரசியற்குரலாக தேர்தல் அரசியலைக் கடந்த

தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக வேண்டும். சுயநல அரசியல்வாதிகளுக்கு மாற்றாக மக்களை உண்மையாக நேசிக்கும், மக்களுடன் இணைந்து

செயற்படும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் புதிய அரசியற் தலைமை தமிழ் மக்களுக்காக உருவாக வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தேசப்பற்று, நிமிர்ந்த நன்நடை, புதுமைமிக்க சிந்தனை, அறிவுசார் நடத்தை, தளராத உறுதி, சொல்லில் தெளிவு, செயற்பாட்டில் துணிவு, சோர்ந்து போகாத தொலைநோக்கு,

சமூகநீதியில் பற்றுறுதி, இயற்கை மீது காதல், சூழல் பாதுகாப்பில் அதியுயர் அக்கறை, உயரிய மனித நேயம் இத்தனையும் கொண்ட புதியதோர் அரசியற் பண்பாட்டு

அரசியற்சமூகம் உருவாக்குவதற்கான விதைகளை நாட்டும் பெரும்பணி 2020 தொடக்கம் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் இப் புதிய ஆண்டினை வரவேற்றுக் கொள்வோம் என அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா

2019ம் ஆண்டில் கடந்தவை, ஈழத்தமிழர் தேசத்தின் நிகழ்ச்சி நிரல் என ஈழத்தமிழ் மக்களின் நீதிக்கும் அரசியல்

இறைமைக்குhன செயல்வழிப்பாதையினை முன்வைத்துள்ள புத்தாண்டுச் செய்தியின் விரிவான அறிக்கை :

புதியதோர் அரசியற் சமூகமும் புதுமை கொண்ட அரசியற் பண்பாடும் உருவாக 2020 ஆண்டு வித்தி;டட்டும்!

தமிழீழ மக்களுக்கும், உலகத் தமிழ் மக்களுக்கும், தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகப் போராடிவரும் உலகின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் மலரும் இப்

புத்தாண்டில் எனது தோழமையுடனான வணக்கத்தையும், வாழ்த்தையும், அன்பையும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்வடைகிறேன். இன்று மலர்ந்துள்ள புத்தாண்டு உலக

மக்களின் வாழ்வில் வளத்தையும், சமத்துவத்தையும், சமாதானத்தையும் மேம்படச் செய்யும் என நம்புவோமாக.

2019ஆம் ஆண்டு தமிழ்மக்களுக்கு அரசியல்ரீதியாகத் தெளிவான சில செய்திகளைக் கூறிவிட்டுக் கடந்து சென்றிருக்கிறது. இலங்கைத்தீவில் தமிழர் தேசம் சிங்கள

தேசத்துடன் சமத்துவமாக, கௌரவமாக, பாதுகாப்பாக, இனஅழிப்புக்கு உள்ளாகாத வகையிலான அரசியல் உடன்பாடு எவற்றுக்கும் வரமுடியாது என்பதனையும்,

இத்தகையதொரு ஏற்பாட்டுக்கு சிங்கள தேசம் என்றும் தயாராக இருக்கப் போவதில்லை என்பதனையும் 2019 மீண்டும் நிரூபித்துள்ளது.

புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா

தமிழீழ மக்களின் அடிப்படை அரசியல் நிலைப்பாடுகளைக் கைவிட்டு, தமிழீழ மக்களைப் பெரும் அரசியற்தோல்விக்குள் தள்ளிவிடக்கூடியதொரு அரசியல்

ஏற்பாட்டுக்குத் தமிழரது நாடாளுமன்றத் தலைமை தயாராக இருந்த போதும் சிங்கள தேசம் அதனையும்;கூட 2019 இல் நிராகரித்துள்ளது. தமிழர் தலைமை

கைகோர்த்திருந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவொரு அரசியல் ஏற்பாட்டையும் வழங்க முடியவில்லை. இவர்களால் முடியவில்லை எனக்

கூறுவதைவிட சிங்கள ஆட்சியாளர்கள் எவரும் தமிழ் மக்களின் நியாயமான உரிமைகளை வழங்குவதற்குத் தயாராக இல்லை எனக் கூறுதலே கூடுதல் பொருத்தமுடையதாகும்.

2009ஆம் ஆண்டில் தமிழர் தேசத்தின் மீதான முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்குத் தலைமை தாங்கியவர்களை சிங்கள தேசம் மீண்டும் ஆட்சி

அரியணையில் ஏற்றியதனை நாம் 2019இல் கண்டுள்ளோம். மனிதகுல வரலாறு வெட்கித் தலைகுனியுமளவுக்குத் தமிழ் மக்களைக் கொன்றொழித்தவர்களிடம் இது குறித்து ஒரு

கிஞ்சித்த சலனமோ மனக்கிலேசமோ இருப்பதாகத் தெரியவில்லை. பெரும்பான்மையான சிங்கள மக்களிடமும் தமிழ் மக்கள் இனஅழிப்புக்கு உள்ளாக்கப்படுவது

தொடர்பான எந்தவித அக்கறையும் வெளிப்படவில்லை. இலங்கைத் தீவு தமக்கு வாக்களிக்கப்பட்ட பூமி (Promised Land) என்ற மகாவம்ச புனைவு மனவுலகிற்குள் அவர்கள்

புதைந்து கிடக்கிறார்கள் என்பதனையே இது வெளிப்படுத்துகிறது. இலங்கைத்தீவில் தமிழின அழிப்புக்கு எதிராகத் தமிழ் மக்கள் தமது போராட்டத்தை உறுதியாகத்

தொடர வேண்டும் என்பதனை 2019ஆம் ஆண்டு; மீண்டும் தெளிவாக வெளிப்படுத்தியிருக்கிறது.

சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய இராஜபக்ச பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு மாறாக அரசியல் அதிகாரம் எவற்றையும் பகிர்ந்து கொள்ள முடியாது எனக்

கூறியுள்ளார். இவர் தன்;னைச் சிங்கள தேசத்தின் தலைவர் என்ற நிலையில் வைத்துக் கொண்டு, தமது நாட்டை வழிநடத்தும் ‘ஒரு நாடு – ஒரு மக்கள்’ என்ற கோட்பாட்டின்

நிலைப்பட்டுத்தான் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவரது இக் கருத்தையும் அரசியல் நிலைப்பாட்டையும் நாம் முற்றாக நிராகரிக்கிறோம்.

இலங்கைத்தீவு ஒரு மக்களைக் கொண்டதொரு நாடல்ல. இங்கு சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் வாழ்கிறார்கள். இங்கு அமைந்துள்ள சிறிலங்கா என்ற அரசினை சிங்கள தேசம்

தனக்கான அரசாக உருமாற்றியிருக்கிறது. இலங்கைத்தீவில் சிறிலங்காத் தேசியம் என்பது சிங்களத் தேசியமாகவே உள்ளது. தமிழர் தேசம்; காலனித்துவ

காலத்தில் தான் இழந்த இறைமையினை மீட்டெடுத்து, தனது பாரம்பரியத் தாயகத்தில் தனக்கான தமிழீழத் தனியரசினை உருவாக்குவதற்கு முயன்று வருகிறது.

உலகின் அரசற்ற தேசங்களில் ஒன்றாகத் ஈழத் தமிழர் தேசமும் இருந்து வருகிறது.

சிங்கள தேசத்தின் அரசாக இருக்கிற சிறிலங்கா அரசு ஒரு ஜனநாயக அரசு அல்ல. அது ஓர் இனநாயக அரசு. ஒரு இனத்தின் முடிவுகளின் அடிப்படையில் இயங்கும் அரசு.

புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா

அதாவது சிங்கள தேசத்தின் மக்களால் முடிவுகள் தீர்மானிக்கப்படும் ஓர் அரசு. கோத்தாபயவும் சிங்கள தேசத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டதோர் அரசுத் தலைவர்தான்.

அவர் சிங்கள தேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தியே இயங்குவார். இதில் எமக்கு எந்த வருத்தமோ முரண்பாடோ இல்லை. சிங்கள அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கு நீதி

கிடைக்காது என்பதனை நாம் காலாதி காலமாகக் கூறியே வந்திருக்கிறோம். கோத்தாபயவின் கூற்று எமது நிலைப்பாட்டையே உறுதிப்படுத்துகிறது.

இலங்கைத்தீவில் தமிழர் தாயகத்தின் இறைமையும், அந்த இறைமையின் அடிப்படையில் தனக்கென்றதோர் அரசினை இத் தாயக மண்ணில் அமைப்பதற்கு ஈழத் தமிழ

தேசத்துக்குள்ள உரிமையும், அவ்வுரிமையினைச் சிங்கள தேசம் நிராகரிப்பதிலும் இருந்துதான் ஈழத் தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினை உருக்கொள்கிறது. தமிழர் தேசத்தைப்

பிரதிநிதித்துவப்படுத்திக் கருத்துத் தெரிவிக்கும் உரிமை கோத்தாபயவுக்கோ அல்லது வேறு எந்த சிங்களத் தலைவர்களுக்கோ கிடையாது. காலனித்துவ காலத்தில்

வரையறுக்கப்பட்ட எல்லைகளைக் கொண்டு சிங்கள தேசம் தமிழர் தேசத்தை அடிமை கொள்ள முடியாது.

தமிழ் மக்களின் சம்மதம் இல்லாத முடிவுகளைச் சிங்கள தேசம் தமிழ் மக்கள் மீது திணிக்க முடியாது.

சிங்கள தேசத்தின் தலைவராகவுள்ள கோத்தாபய சிங்கள மக்களின் விருப்பப்படி தமது ஆட்சியைத் தொடரட்டும். ஈழத் தமிழர் தேசத்தினை அதன் விருப்பப்படியே விட்டு

விடட்டும். தமிழ் மக்கள் தமது அரசியல் தலைவிதியைத் தாமே தீர்மானிக்கும் உரிமையினைக் கொண்டவர்கள் என்பதனை நாம் என்றும் முரசறைந்து கூறுவோம்.

மேலும் கோத்தாபய ஒரு தமிழின அழிப்புக் குற்றவாளி என்பதனையும், மனித குலத்துக்கு எதிராக இவர் இழைத்த குற்றத்துக்காக அனைத்துலக குற்றவியல்

விசாரணைப்பொறிமுறையின் கீழ் நிறுத்தப்பட வேண்டியவர் என்பதனையும் நாம் அனைத்துலக

சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் வெளிப்படுத்துவோம்.

2020ஆம் ஆண்டில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஈழத் தாயகத்தில் இப் பத்தாண்டுகளில் மாவீரர்களின் கனவான

சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு அமைப்பது என்ற உயரிய இலட்சியத்தை நாம் சுமந்து வந்திருக்கிறோம். தமிழ் மக்கள் தமது அரசியற்

புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா

பெருவிருப்பினை வெளிப்படுத்துவதற்கு உரிய அரசியல்வெளி இல்லாத சூழலில் வாழ்வதால் நாம் இதனை எமது முதன்மை இலக்காகக் கொண்டு இயங்குகிறோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப் படுவதற்கு அமைக்கப்பட்ட மதியுரைஞர் குழு அறிக்கை பிரகடனப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து ஈழத் தமிழ்

மக்கள் மீதான இனவழிப்புக்கு எதிரான செயற்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. தமிழர் தலைவிதி தமிழர் கையில்

என்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தையும் நடத்தி வருகிறது. தமிழீழத்தை அமைப்பதற்கு உதவக்கூடிய வெளியுறவுக் கொள்கையுடன் இணைந்தவாறு தனது

செயற்பாடுகளை பல்வேறு தளங்களில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இவ் வருடமும் தொடர்ந்து மேற்கொள்ளும்.

இந்துப் பெருங்கடல் நீர்ப்பரப்பின் புவிசார் அரசியலுடன் பின்னிப் பிணைந்திருக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டம் காலத்துக்காலம் சந்திக்கும் பல்வேறு அரசதந்திர மற்றும்

உபாயங்கள் சார்பான சவால்களை எதிர்கொள்ளவென எமக்கேயான அறிஞர் குழாம் ஒன்றினை இவவாண்டு நாம் கட்டியமைக்கவும் உள்ளோம்.

சிங்கள தேசம் தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்து இனக்கபளீகரம் செய்யப் பகீரத முயற்சி நடாத்தும் இன்றைய சூழலில் ஈழத் தமிழர் தேசம் தனது தேச

அடையாளத்தை ஈழத் தாயகத்திலும் புலம் பெயர் மக்கள் மத்தியிலும் கொண்டாட வேண்டும். எமது அரும்பெரும் மொழியினை நாம் வீட்டிலும், வெளியிலும், நாம்

புத்தாண்டில் ஈழத்தமிழர் தேசத்தின் அரசியல் செயல்வழிப்பாதை -உருத்திரா

கூடுமிடமெங்கும் பேசவேண்டும். அதையும் பிறமொழிக் கலப்பின்றி எமக்கே இயல்பான அழகுடன் பேசித்திரிய வேண்டும். ஈழத் தமிழ் மக்களின் பாரம்பரியக் கலைகள்

புதுமெருகுடன் நிகழ்த்தப்பட வேண்டும். தமிழ் மக்களின் பாரம்பரிய உணவும் மரபும் தமிழ் வாழ்க்கைமுறையுடன் வலுவாக இணைக்கப்படுவதுடன் உலக மக்கள் மத்தியிலும்

பரவலாக்கப்பட வேண்டும். தமிழர் கூடும் விழாக்கள் அனைத்தும் சிவப்பு மஞ்சள் கொடிகளால் நிரம்பி எமது தேச அடையாளம் அங்கு மிளிர வேண்டும்.

தமிழர் தேசத்;தின் அரசியற்குரலாக தேர்தல் அரசியலைக் கடந்த தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒன்று உருவாக வேண்டும். சுயநல அரசியல்வாதிகளுக்கு மாற்றாக

மக்களை உண்மையாக நேசிக்கும், மக்களுடன் இணைந்து செயற்படும், மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளத் தயாராக இருக்கும் புதிய அரசியற் தலைமை தமிழ் மக்களுக்காக

உருவாக வேண்டும். தேசப்பற்று, நிமிர்ந்த நன்நடை, புதுமை மிக்க சிந்தனை, அறிவுசார் நடத்தை, தளராத உறுதி, சொல்லில் தெளிவு, செயற்பாட்டில் துணிவு, சோர்ந்து

போகாத தொலைநோக்கு, சமூகநீதியில் பற்றுறுதி, இயற்கை மீது காதல், சூழல் பாதுகாப்பில் அதியுயர் அக்கறை, உயரிய மனித நேயம் இத்தனையும் கொண்ட

புதியதோர் அரசியற்சமூகம் உருவாக வேண்டும். அத்தகைய அரசியற்சமூகத்தைக் கட்டியெழுப்பும்போது அதற்கிசைவான புதியதொரு அரசியற் பண்பாடும் தானாக

உருவாகி வெளிப்படும். அழுக்கடைந்து கொண்டே போகும் இன்றைய அரசியற் பண்பாடு எம்மைவிட்டு நீங்கும். அப்போது மட்டுமே ஈழத் தமிழர் தேசம் சிங்கள

ஆக்கிரமிப்பில் இருந்து தன்னைப் பாதுகாப்பதுடன், ஒரு மாண்புமிகு சமூகமாகவும் தன்னை ஆக்கிக் கொள்ள முடியும்.

இதற்கான விதைகளை நாட்டும் பெரும்பணி 2020 தொடக்கம் பெறும் என்ற எதிர்பார்ப்புடன் இப் புதிய ஆண்டினை வரவேற்றுக் கொள்வோமாக.

தமிழர் தலைவிதி தமிழர் கையில், தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனது புத்தாண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார். .

Posted in இலங்கை செய்திகள்

மக்கள் வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புது வருட நிகழ்வு

பைஷல் இஸ்மாயில் –
அட்டாளைச்சேனை மக்கள் வங்கி கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட புது வருட நிகழ்வும், 2020 ஆண்டுக்கான

உத்தியோகத்தர்களின் கடமைச் சபத பிரகடனும் இன்று (01) வங்கி முகாமையாளர் எம்.ஐ.எகியா தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுள்ளாஹ் மற்றும்

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி எஸ்.எம்.முனாஸ்தீன்,

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத் தலைவர் கலாநிதி ஏ.எல்.அனீஸ், தொழிலதிபர் எஸ்.ஐ.அமானுல்லாஹ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இதன்போது, அதிதிகள் மற்றும் முகாமையாளர் எம்.ஐ.எகியா, பிரதி முகாமையாளர் எஸ்.எம்.ஏ.ஜவாத்,

வியாபார உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.நபீல் ஆகியோரினால் வாடிக்கையாளருக்கு புதுவருட பரில்களும், வங்கி

உத்தியோகத்தர்களுக்கான புது வருட கடமைச் சபதமும் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

மக்கள் வங்கி
Posted in உளவு செய்திகள்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை

திடீரென – அமெரிக்க தூதரகம் சூறை தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை – ஈராக்கில் போராட்டக்காரர்கள் சூறையாடிய சம்பவம்

பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என அமெரிக்க அதிபர்

டிரம்ப் எச்சரித்துள்ளார்.ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை- ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை


தூதரகத்தை தாக்கி தீ வைத்த போராட்டக்காரர்கள்
சமீபகாலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றன.


ராணுவ தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஹிஸ்புல்லா நிலைகள் மீது அமெரிக்க படைகள்

வான்தாக்குதல். போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு, அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை

எழுப்பினர்.பாக்தாத்:ஈராக்நாட்டில் ஆதிக்கம் செலுத்தி வருகிற ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக அமெரிக்க கூட்டுப்படைகள் அங்கு முகாமிட்டு உள்ளன.

இவர்கள் அங்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக தரை ழியாகவும், வான்வழியாகவும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் சமீபகாலமாக ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது தொடர்ச்சியாக தாக்குதல்

நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தாக்குதல்களுக்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில்,

ஈரான் நாட்டின் ஆதரவு பெற்ற துணை ராணுவ குழுக்கள் மீது அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈராக்கின் வடக்கு பகுதியில் உள்ள கிர்குக் நகரில் அமெரிக்க படைகள் தங்கி

இருந்த ராணுவ தளம் மீது பயங்கரவாதிகள் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

தாக்குதலில் அமெரிக்க ஒப்பந்தக்காரர் ஒருவர் பலியானார். அமெரிக்க படை வீரர்கள் பலரும்

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை

படுகாயங்களுடன் உயிர் தப்பினர். ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பே இந்த தாக்குதலை நடத்தியதாக அமெரிக்கா கூறியது.

அதனை தொடர்ந்து ராணுவ தளம் மீதான தாக்குதலுக்கு பதிலடியாக ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத

அமைப்பின் நிலைகளை குறிவைத்து நேற்று முன்தினம் இரவு அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 30-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.

மேலும் தலைநகர் பாக்தாத் அருகே அல்-குவாய்ம் நகரில் உள்ள ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம்

தரைமட்டமாக்கப்பட்டது.அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை ஈரான் வன்மையாக கண்டித்தது. அதேபோல் இந்த வான் தாக்குதல்கள் தங்கள்

நாட்டின் இறையாண்மையை மீறியுள்ளதாகவும், இது மெரிக்காவுடனான உறவை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தும் என்றும் ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி கூறினார்.

தூதரகத்தை முற்றுகையிட்டு நடந்த வன்முறை

போராட்டம்இந்த நிலையில் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் மீது நடத்தப்பட்ட வான்தாக்குதலை கண்டித்து ஈராக் தலைநகர் பாக்தாத்தில்

உள்ள அமெரிக்க தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணுவ உடையை அணிந்து வந்திருந்த

ஆண்களும், பெண்களும் ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பின் கொடியை கைகளில் ஏந்தி அமெரிக்காவுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.

‘அமெரிக்காவுக்கு மரணம்’ ‘அமெரிக்க தூதரகம் மூடப்படவேண்டும்’ போன்ற வாசகங்கள் அடங்கிய

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை

பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமெரிக்க படைகள் நாட்டை விட்டு வெளியேற பாராளுமன்றம் உடனடியாக உத்தரவிடவேண்டும் என முழங்கினர்.

எ போராட்டக்காரர்களில் சிலர் அமெரிக்காவின் கொடியை தீயிட்டு கொளுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் அமெரிக்க தூதரகத்தை சூறையாடினர். தூதரகத்தின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராக்களை உடைத்தெறிந்த

போராட்டக்காரர்கள், கற்கள் மற்றும் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை தூதரகத்துக்குள் வீசி தாக்குதலில் ஈடுபட்டனர்.

அதுமட்டும் இன்றி தூதரகத்தின் தடுப்பு சுவர்களுக்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். தூதரகத்தை மூடும்படி

முழக்கங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. அதனை தொடர்ந்து உடனடியாக அங்கு அட் அமெரிக்க பாதுகாப்புபடையினர் குவிக்கப்பட்டனர்.

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் சூறை

அவர்கள் தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். ஈராக்கில்

தூதரகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டிரம்ப்

தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்

தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு ஈரான் மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டும் என்றும் எச்சரித்தார்.

குற்றச்சாட்டை ஈரான் வெளியுறவு அமைச்சகம் உடனடியாக மறுத்துள்ளது.

தாக்குதலைத் தொடர்ந்து, வன்முறைப் போராட்டங்களுக்கு பதிலடி கொடுப்பதற்காக உடனடியாக

750 வீரர்களை அமெரிக்கா அனுப்புகிறது. தேவைப்பட்டால் கூடுதல் படைகளை அனுப்பவும் தயாராக உள்ளது.

Posted in சினிமா

காதலை கண்டுபிடிக்க முடியாது – சுருதி

நடிகை -காதலை கண்டுபிடிக்க முடியாது – சுருதி

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ள சுருதிஹாசன், காதலை யாராலும் கணிக்க முடியாது என கூறியுள்ளார்.

காதலை யாராலும் கணிக்க முடியாது – சுருதிஹாசன்
சுருதிஹாசன்


தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்த சுருதிஹாசன் லண்டனை சேர்ந்த மைக்கேலை காதலித்து பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து

விட்டார். இசை கச்சேரிகளுக்காக சமீப காலமாக வெளிநாடுகளில் சுற்றி வந்த அவர் இப்போது மீண்டும் சினிமாவில் தீவிரமாக நடிக்க தொடங்கி உள்ளார்.

ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக லாபம் படத்தில் நடிக்கிறார். தெலுங்கில் ரவி தேஜாவுடன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்தி படமும் கைவசம் உள்ளது.

அவர் அளித்த பேட்டி வருமாறு:- “காதலில் விழும் சந்தர்ப்பங்களை யாரும் கணிக்க முடியாது.

எப்போது யாருக்கு காதல் வரும் என்பதையும் சொல்ல முடியாது. என்னை காதலிக்கும் ஒரு நல்ல மனிதர் வாழ்க்கை துணையாக வரவேண்டும் என்று

ஆசைப்படுகிறேன். அந்த நல்ல மனிதருக்காக நான் காத்து இருக்கிறேன். கண்டிப்பாக அப்படி ஒரு நல்லவர் கிடைப்பார் என்ற நம்பிக்கை உள்ளது.

சுருதிஹாசன்

நல்லவர்கள் எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள். இடையில் மாறிவிட மாட்டார்கள்.

காதலை கண்டுபிடிக்க முடியாது – சுருதி

அது மாதிரி, கெட்டவர்கள் நல்லவர்கள் மாதிரி நடித்தாலும் கடைசியில் கெட்டவர்களாகவே மாறி விடுவார்கள்.

ஆனாலும் கெட்ட மனிதர்களின் அறிமுகம் ஒரு அனுபவத்தையும், பாடத்தையும் கற்றுக்கொடுக்கும்.

இதையும் தாண்டி வாழ்க்கையில் முன்னேற வேண்டும். சுயநலமில்லாமல் நேசிக்கும் ஒரு மனிதரை இப்போது நான்

எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன். அந்த மாதிரி நல்லவர் எனக்கு கிடைக்காமல் போகமாட்டார்.” இவ்வாறு சுருதிஹாசன் கூறினார்.

முன்னாள் காதலனை கைவிட்டு புதிய நபர் ஒருவருடன் சுற்றி வருவதாக வெளியான செய்தியை அடுத்து இவரது பேச்சு இப்படி வெளியாகியுள்ளது

நெருப்பு இலலாமல் புகையுமா என நெட்டிசன்கள் கிண்டல் அடிக்கின்றனர் .

கொட்டலில் பிரபல நபருடன் ஒன்றாக இருந்து கிசு கிசு காட்சிகளை இவரை திட்ட மீட்டு வெளியிட்டதாக ஒரு தகவல் உண்டு

Posted in சினிமா

நடிகர்கள், மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி

நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி

நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் ஸ்ரீரெட்டி, தன்னுடைய காரை மர்ம நபர் சேதப்படுத்தியதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

காரை தாக்கி உடைத்ததாக நடிகை ஸ்ரீரெட்டி போலீசில் புகார்
ஸ்ரீரெட்டி
ஆந்திராவைச் சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல்

குற்றச்சாட்டு தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இதில் சில தமிழ் நடிகர்கள், இயக்குனர்களும் சிக்கினர்.

ஐதராபாத்தில் வசித்து வந்த ஸ்ரீரெட்டி அங்கிருந்து வெளியேறி கடந்த ஒரு வருடமாக சென்னை வளசரவாக்கம்

அடுத்த அன்பு நகர் 10-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ‘சென்னையில் உள்ள எனது வீட்டின் அருகே தமன்னா நடிக்கும் வெப் தொடரின் படப்பிடிப்பு

நடைபெறுகிறது. அவர்களின் தொல்லை தாங்க முடிய வில்லை. கடந்த 10 நாட்களாக நான் இந்த தொல்லையை அனுபவித்து வருகிறேன். இனி என்னால் பொறுக்க

முடியாது. அவர்களிடம் நேரில் சென்று பேசி இந்த பிரச்சினைக்கு முடிவு கட்டப் போகிறேன்’ என்று பதிவிட்டு இருந்தார்.

ஸ்ரீரெட்டி

இந்த நிலையில் ஸ்ரீரெட்டி கோயம்பேடு போலீசில் புகார் மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:-

எனது வீடு அருகே ஓய்வு பெற்ற போலிஸ் அதிகாரியின் “பங்களா வீடு” உள்ளது. இந்த வீட்டில் கடந்த சில நாட்களாக

சினிமா படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியபோது எனது வீட்டு வாசலில் வாகனம் நின்றதால்

காரை வெளியே நிறுத்தி விட்டு சென்றேன். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது எனது காரின் 2 பக்க கதவுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

மேலும் படப்பிடிப்பு நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளர் மனோஜ் என்பவர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது.

எனவே காரை சேதப்படுத்தி விட்டு தப்பி சென்ற மர்மநபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மாதேஸ்வரன் மற்றும் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Posted in சினிமா

காஜல் அகர்வால் செய்த வேலை

நடிகை காஜல் அகர்வால் செய்த வேலை

நடிகை காஜல் அகர்வால் பொதுவாக கவர்ச்சியான உடைகளுடன் இருக்கும் படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவது இல்லை.

ஆனால் மாலத்தீவில் உள்ள ரிசார்ட்டில் இருந்து நீச்சல் உடையில் எடுத்த படு கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அமலாபால், சமந்தா போன்ற திருமணமான நடிகைகளே அவ்வப்போது கவர்ச்சி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் போது, தான் மட்டும் ஏன் தயங்கி நிற்க

வேண்டும் என்று காஜல் அகர்வாலும் இப்படி கவர்ச்சி களத்தில் இறங்கியிருக்கிறார். படங்கள் வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலாக பலரும் இந்த

புகைப்படங்களுக்கு லைக்ஸ்களை அள்ளி இறைத்து பகிர்ந்து வருகிறார்கள்.

தமிழ் தெலுங்கு திரைப்படங்களில் பிசியாக இருந்தாலும், தற்போது பட வாய்ப்புகளை குறைத்து கொண்டு கமலுடன் இந்தியன் 2 படத்தில் மட்டுமே கமிட் ஆகியிருக்கிறார்.

நடிப்பதை குறைத்து விட்டு குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவழித்து வருகிறார்.

காஜல் அகர்வால் செய்த வேலை

புத்தாண்டை கொண்டாடுவதற்காக குடும்பத்துடன் மாலத்தீவிற்கு சென்றிருக்கும் காஜல்அகர்வால், அங்குள்ள ரிசார்ட்டில் தான் தற்போது தங்கியிருக்கிறார்.

ரிசார்ட்டில் உள்ள நீச்சல் குளத்தில் தான் இந்த படு கவர்ச்சியான போட்டோக்களை அவர் எடுத்துள்ளார்.

காஜல் அகர்வாலுடன் அவரது தங்கை மற்றும் தங்கையின் மகன் ஆகியோரும் உடனிருந்தனர்.

நீச்சல் குளத்திற்கு கருப்பு கலந்த பலவண்ண பிகினி உடை, பீச் போட்டோஷூட்டிற்கு தனி உடை என விடுமுறையை கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார்.

காதலனுடன் கிசு கிசுவில் சிக்கிய காஜல் தற்போது கவர்ச்சி உடையில் கலக்கும் காட்சிகள் வெளியிட்டு வருவது குறைந்து வரும் படங்களை

அதிகரித்து கொள்ளவும் ,கவர்ச்சிக்கு தாவிட தான் எப்பொழுதும் தயார் என்பதையும் காண்பிக்கவே என கோடம் பாக்கத்தில் பேச்சு அடி படுகிறது

மார்க்கட் குறையும் வேளையில் நடிகைகள் இந்த வேலையை செய்வது இயல்பான ஒன்று என்றும் இத்துடன் இவர்கள் காணமல் போகும் காலம் ஆரம்பிப்பதன் அறி குறியே எனவும் கூறுகின்றனர்

பார்க்கலாம் இன்னும் சிலா மாதங்களில் இவை தெரியவரும் .

செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ சிப்பாய் அடித்து கொலை

இலங்கையில் -இராணுவ சிப்பாய் அடித்து கொலை

இலங்கை -வில்லிகொட பகுதியில் குடும்ப தகராறு ஒன்றை தாதுக்க சென்ற 21 வயது இராணுவ சிப்பாய் ஒருவர் கோரமாக தாக்க பட்டு வெட்டி படுகொலை செய்ய பட்டுளளார் .

இறந்தவராது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

கொலை குற்ற செயலை புரிந்த நபர் கொலை குற்றத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளார்

Posted in இலங்கை செய்திகள்

குவைத்தில் இருந்து 36 பேர் இலங்கை திரும்பினார்

இலங்கைக்கு -குவைத்தில் இருந்து 36 பேர் இலங்கை திரும்பினார்

இலங்கையில் இருந்து தொழில் வாய்ப்பு தேடி குவைத் நாட்டுக்கு சென்ற இலங்கை பணிப்பெண்கள் சுமார் 36 பேர் தமது எஜமானர்களினால் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் மீளவும் இலங்கைக்கு நாடு கடத்த பட்டுள்ளனர் .

அவ்வாறு 36 பேர் இன்று இலங்கை வந்தடைந்துள்ளார்

Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா தாக்குதல் -ரசியா சீனாவுடன் ஈரான் அவசர பேச்சு

திடீர் அமெரிக்கா தாக்குதல் -ரசியா சீனாவுடன் ஈரான் அவசர பேச்சு

அமெரிக்காவின் பயங்கர வாதத்திற் கான போராட்டம் மத்திய கிழக்கு நாட்டில் பிசு பிசுத்து போனதாகவே கடந்த இருபது ஆண்டுகால நகர்வுகள் எடுத்து காட்டுகின்றன .

ஈராக்கிய இரும்பு அதிபர் சாதம் ,லிபியாவின் அதிபர் கடாபி ,என தமது பொருளாதர ஆக்கிரமிப்பு சுரண்டலுக்கு உயிரை இரையாக்கிய வேகத்துடன் ஈரானை அடித்து நொறுக்க புறப்பட்ட பொழுது .

அயல் வீட்டின் கூரையை இன்று பிடுங்கும் அமெரிக்கா நாளை என் வீடடையும் இடிக்குமென சுதாகரித்து கொண்ட

ஈரான் தனது அணு ஆயுத உற்பத்தி முதல் அதி நவீன ஏவுகணைகள் ,உளவு விமானங்கள் தயாரிப்பு என புதிய வரலாற்றை மைல் கல்லை எட்டி பிடித்தது .

அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து எமது நாடு மீது 2020 மிக பெரும் தாக்குதல் ஒன்றை நடத்த கூடும் என எதிர்பார்க்கும் ஈரான் அதனை தடுக்கவும்

அதற்குரிய தகுந்த பதிலடியை வழங்கவும் தன்னை தயார் படுத்தியுள்ளது ,தற்போது ஈரானின் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா திடீர் தாக்குதலை நடத்தியது

அந்த தாக்குதல்கள் முன் வெள்ளோட்டமாக அமெரிக்கா பார்க்கிறது என்பதை கணித்து கொண்ட ஈரான் புதிய

ஆண்டு பிறக்கும் இந்த வேளையில் தற்பொழுது ரஷியாவில் குந்தி உள்ளார் ஈரானின் வெளியுறவு மந்திரி மற்றும் முக்கிய அதிகாரிகள் .

அடுத்து சீனாவுடனும் பேச்சில் ஈடுபட பறக்கின்றார் .
இவர்களது இந்த அவசரமான பயணத்தில் ஏதோ முக்கிய விடயம் ஈரானிய உளவுத்துறைக்கு கிடைத்துள்ளதாகவே பார்க்க படுகிறது

அப்படி என்றால் அமெரிக்கா ,இஸ்ரேல் இணைந்து மிக பெரும் நாசகார வேலை ஒன்றை செய்ய உள்ளதே இந்த ஈரானின் அவசர சந்திப்புக்கள் எடுத்து காட்டுகின்றன

ஈரான் மூன்று நாடுகளுடன் இணைந்து ஆரம்பிக்கும் புதிய வலை பின்னலுக்குள் அமெரிக்கா சிக்குமா என்பது 2020 ன் நடுப்பகுதியில் நாம் தெளிவாக அடையாளம் கண்டு கொள்ள முடியும் .

விரிந்து படரப்போகும் அடுத்துவரும் பத்து ஆண்டுகளில் அமெரிக்காவின் பார்வை மத்திய கிழக்கு தாண்டி தென்

ஆசியாவில் அடைக்கலம் கொள்ள போகிறது என்பதே இந்த அசைவுகளின் அவசரம் படம் பிடித்து காட்டுகிறது .video

மூன்றாம் உலக போர் தென் ஆசியாவில் இருந்தே வெடிக்கும் என்பதற்கு இவை முன்னுதாரணமாக விரிகிறது .2020 இல் இரண்டு வல்லரசுகள் உடையும் நிலை ஏற்படுமா ..?

-வன்னி மைந்தன் –

Posted in இலங்கை செய்திகள்

பொலிசார் அதிரடி வேட்டை பலநூறு பேர் கைது

இலங்கையில் – பொலிசார் அதிரடி வேட்டை பலநூறு பேர் கைது

கடந்த 24 மணித்தியாலத்தில் இலங்கை தழுவிய ரீதியில் காவல்துறையினர் மேற்கொண்ட


திடீர் வீதி சோதனையில் மது போதையில் வாகனத்தை செலுத்தி சென்ற பலநூறு சாரதிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவர்களில் சில டசின் பேரது வாகன சாரதி பாத்திரங்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன .


போலீசார் கடுமையான சோதனையில் ஈடுபட்டிருந்த வேளையில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன .

பண்டிகை காலத்தை முன்னிட்டு இராணுவம் ,போலீசார் சிறப்பு பாதுகாப்பில் ஈடு படுத்த பட்டனர் இதன் போதே இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளன

Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் குவிந்த காய மடைந்தவர்கள்

கொழும்பு தேசிய மருத்துவமனையில் குவிந்த காய மடைந்தவர்கள்

பிறந்த 2020 புத்தாண்டை சிறப்பாக கொண்டாட எண்ணி வெடிகள் கொளுத்தியவர்களும் ,அதிக போதையில் வாகனத்தைச செலுத்தி சென்றவர்களுமாக பலநூறு பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் .

விசேட மருத்துவ அணிகள் தயார் செய்யப்பட்டு உசார் நிலையில் இருந்ததினால் இவ்வாறு காயமடைந்து எடுத்து

வரப்பட்டவர்களை உடனடியாக பாதுகாக்க முடிந்ததாக மருத்துவனையை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன .

எனினும் இதுவரை காயமடைந்து சிகிச்சை பெற்றவர்கள் துல்லியமான புள்ளி விபரங்கள் கிடைக்க பெறவில்லை ,விரைவில் இணைக்க படும்