Author: நிருபர் காவலன்
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 213 பேர் பலி
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 213 பேர் பலி
புதிய கொரோனா வைரஸ் சீனாவுக்கு வௌியே உலக நாடுகளில் பரவியுள்ளதால் சர்வதேச சுகாதார
அமைப்பினால் சர்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவை தவிர வேறு நாடுகளுக்கு கொரோனா வைரஸ் பரவுவதை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை
எடுத்துள்ளதாக சர்வதேச சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளார்.
குறைந்தளவு ஊட்டச்சத்தை கொண்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவுவது குறித்து அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை 18 நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும் அதனால் 98 நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாகவும் அந்த ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
எனினும் வேறு நாடுகளில் கொரோனா வைரஸால் எந்தவித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
அதன்படி, அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேஷியா, பாக்., தாய்லாந்து, மற்றும் ஐரோப்பா நாடுகள் உள்ளிட்ட
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 213 பேர் பலி
நாடுகளில் பரவத் தொடங்கியதையடுத்து சர்வதேச சுகாதார அமைப்பு, சர்வதேச சுகாதார அவசர நிலையை பிரகனப்படுத்தி உள்ளது.
இதற்கு முன் 5 முறை சர்வதேச அளவில் 5 முறை, உலக சுகாதார அமைப்பு அவசர நிலையை பிரகடனப்படுத்தி உள்ளது.
2009 – எச்1என்1(H1N1)
2014 – போலியோ
2014 – எபோலா (வட ஆப்ரிக்கா)
2016 – ஜிக்கா
2019 – எபோலா (காங்கோ)
இதேவேளை, கொரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 213-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் உலகளாவிய ரீதியில் கிட்டத்தட்ட 9700 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை எதிர்த்து போராடுவதில் ´´ஒட்டுமொத்த உலகமும்
எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்´´ என்று உலக சுகாதார நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்புகளுக்கு எதிராக போராடிவரும் சீனா குறித்து கருத்து தெரிவித்த உலக சுகாதார
நிறுவனத்தின் சுகாதார அவசரநிலை திட்டத்தின் தலைவர் மைக் ரயான், ´´கொரோனா வைரஸ் அளிக்கும் சவால்
கடுமையாக இருந்தாலும், அதனை சமாளிக்கும் பணியை சீனா சிறப்பாகவே செய்து வருகிறது´´ என்று தெரிவித்துள்ளார்.
சீனாவின் வுஹான் நகரம்தான் இந்த கொரோனா வைரஸ் தாக்குதலின் மையப்புள்ளியாகும்.
ஆனால் அதற்கு பிறகு கொரோனா வைரஸ் சீனா எங்கும் பரவியது. மேலும் தாய்லாந்து, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும்
ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கும் கொரோனா வைரஸ் பரவியது .
கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி 213 பேர் பலி
இதனை குணப்படுத்த பிரத்யேக மருந்து அல்லது மருத்துவமுறை எதுவும் இல்லை. ஆனால் சிகிச்சைக்கு பிறகு ஏராளமான மக்கள் குணமாகியுள்ளனர்.
இந்நிலையில், சீன நாட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொடர்பாக பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பல விமான சேவை நிறுவனங்களும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
யுனைட்டட் ஏர்லைன்ஸ் மற்றும் கேத்தே பசிஃபிக் விமான நிறுவனங்கள் சீனாவிற்கான விமான சேவைகளை
குறைத்துள்ளன. அதே நேரத்தில் லயன் ஏர் நிறுவனம், சீனாவிற்கு விமான சேவையை மொத்தமாக நிறுத்தியுள்ளது.
சீனாவுக்கு சர்வதேச மருத்துவ நிபுணர்கள் குழுவொன்று பயணிக்கவுள்ளதாக தெரிவித்த மைக் ரயான், அங்குள்ள
மருத்துவர்களுடன் இணைந்து பணியாற்றி இந்த வைரஸ் எப்படி பரவுகிறது என்பதை சர்வதேச குழு அறிந்து கொள்ளவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
´மிகவும் இக்கட்டான மற்றும் முக்கியமான தருணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். கொரோனா வைரஸ்
பரவுவதை தடுக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம்´´ என்று அவர் கூறினார்.
முன்னதாக இந்த வாரத்தில் சீனாவுக்கு சென்ற உலக சுகாதார நிறுவனத்தின் பொது இயக்குநர் டெட்ரோஸ்,
´´தற்போதைய சூழலில் சீனாவுக்கு உலகின் ஆதரவு மிகவும் தேவை´´ என்று குறிப்பிட்டார்.video

மலையகத்தின் கல்வி வெற்றிக்கு காரணமாக இருக்கும் முன்பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும்
மலையகத்தின் கல்வி வெற்றிக்கு காரணமாக இருக்கும் முன்பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டும்
முன்னால் அமைச்சரும் நுவரெலியா மாவட்ட
பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன்
மலையகத்தின் கல்வி வளர்ச்சி முன்னொரு போதும் இல்லாத வகையில் தற்போது வெற்றி பாதையில்
முன்னோக்கி செல்கின்றது. அதற்கு அன்மையில் வந்த க.பொ.த உயர்தர பெறுபேறுகளும் பெரும்
எண்ணிக்கையான மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு தெரிவாகி உள்ளமை அதனை நிரூபித்து காட்டியுள்ளது.
இந்த வெற்றிகளின் பின்னணியில் மலையத்தில் பெருந்தோட்டங்களில் காணப்படும் முன்பள்ளிகளும்
இருந்துள்ளன. எதிர்காலத்தில் இதன் வளர்ச்சியில் அனைவரும் முன் நிற்க வேண்டும் என்று கூறுகின்றார்
முன்னால் அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின்
தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் அவர்கள்.
நுவரெலியா மாவட்டம் கந்தப்பளை தோட்டம் கோர்ட்லொஜ் பிரிவில் நடைபெற்ற முன்பள்ளி சிறரர்களின் பொங்கள்
விழாவில் கலந்துக் கொண்டு அங்கு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் தோட்ட
முகாமையாளர்¸ தோட்ட அதிகாரிகள்¸ உட்பட தோட்ட பொது மக்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
தொடர்ந்து இந்த விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள்.
நான் கல்வி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டவன் என்ற ரீதயில் இந்த விடயம் தொடர்பில் பல விடயங்களில்
ஈடுபட்டுள்ளேன். மலேசியாவில் நடைபெற்ற உலக முன்பள்ளி கல்வி மகா நாட்டிலும் கலந்துக்
கொண்டுள்ளேன். நாட்டுக்கு நாடு முன்பள்ளி கல்வியில் பல மாற்றங்கள் காணப்படுகின்றன. சில நாடுகளில் முன்பள்ளி கல்லி 05 வயதிற்கு பின்னரே நடைபெருகின்றது
பாடசாலைக்கு 07 வயதினிலேயே அனுமதிக்கின்றனர். ஆனால் இலங்கையில் அவை சற்று வேறுப்பட்டதாகவே
காணப்படுகின்றது. முன்பள்ளி கல்வி என்பது சிறார்களின் விளையாட்டுகளிலும் பொழுதுபோக்கு அம்சங்களிலேயே
தங்கியுள்ளது. இதன் ஊடாகவே இவர்களுக்கு கல்வி புகட்டப்படுகின்றன.
அந்த வகையில் மலையக தோட்ட புறங்களில் காணப்படும் முன்பள்ளிகளின் பங்களிப்பு மலையத்தின் கல்வி
வளர்ச்சிக்கு பாரிய பங்கினை வழங்கி வருகின்றன. இந்த முன் பள்ளிகளை படித்துவிட்டு வீட்டில் முiறான தொழில்
வாய்ப்புக்கள் கிடைக்காதவர்கள் தங்களின் வருமானத்திற்காகவும் சுயதொழிலாக சமூக
சிந்தனையுடன் செயற்பட்டு வருகின்றார்கள். இவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். பெரும்பாலும் பெற்றோர்களிடம் இருந்தே பணம் பெறப்படுகின்றது. இதனை பெற்றோர்கள்
கட்டாயம் செலுத்த வேண்டும் சில இடங்களில் இவை செலுத்தப்படாததினால் இந்த ஆசிரியர்கள் பல்வேறு இன்னல்களுக்கு முகம் கொடுக்கின்றனர்.
பெற்றோர்கள் இந்த விடயத்தில் கவனமாக இருந்து செயற்பட வேண்டும். கல்விற்காக செலவு செய்வது என்பது சிறார்களுக்கு வங்கியில் சேமிப்பதை விட
பெருமதியானதும் ஒரு சிறந்த மூலதனமுமாகும். இருந்தும் இந்த முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எதிர்காலத்தில் இந்த
தொழிலை ஒரு அரச நியமனமாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று மேலும் கூறினார்



நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு
நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் திறப்பு
நுவரெலியாவில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தேர்தல் பிரசார காரியாலயம் ஒன்று வைபரீதியாக முன்னால்
அமைச்சரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்
நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் தலைமையில் திறந்து
வைக்கப்பட்டது (30). இந் நிகழ்வில் முன்னால் அமைச்சரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகருமான
வீ.புத்திரசிகாணி உட்பட கட்சி ஆதரவாளர்கள் கலந்துக் கொண்டார்கள்.
வருகின்ற ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் 2020 பாராளுமன்ற தேர்தலுக்கு முகம் கொடுக்கும் வகையில்
தேர்தல் பிரசார பணிகளை முன்னெடுக்கும் நோக்கில் இந்த காரியாலயம் திறந்து வைக்கபட்டுள்ளதுடன். நுவரெலியா
மாவட்டத்தில் உள்ள மக்கள் தங்கள் தேவைகளுக்காக தமிழ் முற்போக்கு கூட்டணியின் முன்னால் அமைச்சர்களையும்
பாராளுமன்ற உறுப்பினர்களையும் இந்த காரியாலயத்தில் சந்திக்கலாம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.



குண்டு தாக்குதல் சூத்திரதாரிகள் 6 பேர் சிறையில் அடைப்பு
குண்டு தாக்குதல் சூத்திரதாரிகள் 6 பேர் சிறையில் அடைப்பு
இலங்கையில் தொடராக நிகழ்த்த பட்ட தொடர் குண்டு வெடிப்புக்கள் சூத்திரதாரியாக விளங்கிய
சங்கரிலா கொட்டல் குண்டுத்தாரிகள் ஆறுபேர் தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .
இதில் வர்த்தகர் ஒருவரது இரு மகன்கள் இந்த குண்டு தாக்குதலில் சிக்கி நடத்தி இருந்தமை குறிப்பிட தக்கது video

துப்பாக்கி முனை கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு
துப்பாக்கி முனை கொள்ளையர்கள் மடக்கி பிடிப்பு
இலங்கை தங்காலை பகுதியில் ஆயுத முனையில் புகுந்த திருடர்கள் அங்கிருந்தவர்களை மிரட்டி
பணம் மற்றும் நகைகள் என்பனவற்றை திருடி சென்றுள்ளனர்
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்கொண்ட சுற்றி வளைப்பில் அந்த மூவரும் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

விக்கியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட முன் பெரை மாற்றிய ஈபிஆர்எல்எப்
விக்கியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட முன் பெரை மாற்றிய ஈபிஆர்எல்எப்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) கட்சியின் பெயரை ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ என பெயர்
மாற்றம் செய்வதற்கான ஆட்சேபபனைகளை தேர்தல் ஆணைக்குழு கோரியுள்ளது.
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கட்சியின் பெயரை ‘தமிழர் ஐக்கிய முன்னணி’ என பெயர் மாற்றம்
செய்வதற்கான கோரிக்கை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளதாக அவ்வாணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த பெயர் மாற்றம் தொடர்பான ஆட்சேபனைகள் இருப்பின் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் எழுத்து
மூலமான மனுக்களை சமர்ப்பிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த புதிய பெயர் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பெயருக்கு நேர் ஒத்ததாக உள்ளதா எனவும், அப்பெயரை அவர்களிற்கு வழங்குவது தொடர்பில்
விக்கியுடன் இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட முன் பெரை மாற்றிய ஈபிஆர்எல்எப்
ஆட்சேபனைகள் உள்ளதா எனவும் தேர்தல் ஆணைக்குழு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளிடம் வினவியுள்ளது.
அவ்வாறு ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் உறுதிப்படுத்துவதற்கான விடயங்களுடன் எதிர்வரும்
05.02.2020க்கு முன்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி எதிர்வரும்
தேர்தலில் களமிறங்கவுள்ள நிலையில் எந்த கட்சியின் சின்னத்தில் போட்டியிடவுள்ளனர் என்ற பரபரப்பு
காணப்படும் நிலையில், இந்த பெயர் மாற்ற கோரிக்கை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கதாகும்.video
வவுனியாவில் குஞ்சு விட்ட ஈபிடிபி டக்ளஸ் குழு photo
வவுனியாவில் குஞ்சு விட்ட ஈபிடிபி டக்ளஸ் குழு
கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் திட்டத்திற்கமைவாக பருவகால நீர்த் தேக்கங்களை
மையப்படுத்தி வவுனியா மாவட்ட குளங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற இச் செயற்திட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நன்நீர் நிலைகளை பெருமளவில் கொண்ட வவுனியா மாவட்டத்தில் நன்நீர் மீன் வளர்ப்பை ஊக்குவிக்கும்
முகமாக மாவட்டத்தின் பல்வேறு குளங்களில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
அவர்களின் கருத்திட்டத்தின் அடிப்படையில் தேசிய நீர்வாழ் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார
சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திட்டத்தின் பிரகாரம் மீன்குஞ்சுகள் விடப்பட்டன.
வவுனியா மாவட்டத்தின் காத்தார் சின்னகுளம், பெரியார் குளம், கருப்பனிச்சான் குளம், அலபத்த குளம், அழகர்
சமளங்குளம், கல்நாட்டினகுளம், கோவில்குளம், கருங்காலிக்குளம், கதிரங்குளம், திறப்பனகுளம் ஆகிய 10
குளங்களில் திலாப்பியா, ரோகு, கட்லா வகையான மீன்குஞ்சுகள் இவ்வாறு விடப்பட்டன.
தேசிய நீர் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகார சபையினர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின்
சார்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாக செயலாளர் குலசிங்கம் திலீபன்
தலைமையிலான பிரதிநிதிகள் கலந்து கொண்டு இத் திட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.
பருவகால நீர்த் தேக்கங்களை மையப்படுத்தியதான நடைமுறைப்படுத்தப்படும் இந்த திட்டத்தினூடாக
விடப்படும் மீன்கள் எதிர்வரும் மே மாதமளவில் அறுவடைக்கு தயாராகும் என்று எதிர்பார்க்கப்படகின்றது.
இதன் மூலம் கிராமிய நன்னீர் மீன்பிடிப்பாளர்கள் தமது வருமானத்தை பெருக்க முடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
குறித்த நிகழ்வில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட கட்சியின் பிரதிநிதிகள்
பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.video



வடக்கு – கிழக்கு இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி photo
வடக்கு – கிழக்கு இணைந்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி
வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை முன்னெடுத்திருந்தனர்.
இன்று காலை 11.00 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளிற்கு நீதிகோரி ஆரம்பமாகிய இப்பேரணி பஜார் வீதியின் ஊடாக வைத்தியசாலை சுற்றுவட்ட வீதியை
அடைந்து, மீண்டும் பழைய பேருந்து நிலையத்தை வந்தடைந்திருந்தது.
இதன் போது ‘எங்கே எங்கே பிள்ளைகள் எங்கே, வேண்டும் வேண்டும் நீதி வேண்டும், ஜனாதிபதியின் கருத்தை
வன்மையாக கண்டிக்கிறோம்’ என்ற கோசங்களை எழுப்பியவாறும், இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும்
ஒவ்வொரு நீதியா, கணவன்மாரை கையளித்த சின்னஞ்சிறு உறவுகளை எண்ணிப்பார் என்ற பதாதைகளையும்
தாங்கியவாறும் இவ் ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டிருந்தனர். வடக்கு கிழக்கு பகுதிகளைச் சோந்த பல
நூற்றுக்கணக்கான தாய்மார் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டு தமது உறவுகளை மீட்டுத் தருமாறு
கண்ணீர் மல்க கோரிக்கையை முன்வைத்தனர்.
இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், முன்னாள்
வடமாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், தமிழ் தேசிய முன்னணியின் சட்ட ஆலோசகர் க.சுகாஸ், மற்றும்
ஐந்து மாவட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





என்னை மன்னித்து விடு …!
என்னை மன்னித்து விடு …!
காத்திருந்த காலமெல்லாம்
காணமல் போகுதடி …
நேற்றிருந்த நினைவெல்லலாம்
நினைவிழந்து சாகுதடி ….
காணொளியில்
முழுமையாக காணலாம்
கொரனோ வைரஸ் தாக்குதலில் 170 பேர் பலி
10 கை துப்பாக்கியுடன் நபர்கள் கைது
10 கை துப்பாக்கியுடன் நபர்கள் கைது
இலங்கை பண்டாரகம காவல்துறை பிரிவில் போலீசாரை மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 192
கிலோ போதைவஸ்து மற்றும் 10 கை துப்பாக்கிகள் ,தோட்டாக்கள் என்பனவற்றுடன் சிலர் கைது செய்ய பட்டுள்ளனர்
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது வேடடை இடம்பெற்றுள்ளது

சீனாவில் கூகிள் நிறுவனம் அடித்து பூட்டு
சீனாவில் கூகிள் நிறுவனம் அடித்து பூட்டு
சீனாவில் ஏற்பட்டுள்ள வைரஸ் நோய் தாக்கத்தை அடுத்து சீனாவில் கூகிள் நிறுவனத்த்தில் பணிபுரியும் ஊழியர்களை
தமது வீடுகளில் இருந்து பணிபுரியும் படி வேண்டியுள்ளது .
அனைத்து நிறுவனங்களும் மறு அறிவித்தல் வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
இதுபோலவே மக்டொனால்ஸ உணவகம்
300 உணவகங்களை பூட்டியுள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையில் 175 மாணவர்களுக்கு கொரனோ வைரஸ்
இலங்கையில் 175 மாணவர்களுக்கு கொரனோ வைரஸ்
இலங்கை சிறிபாத கல்லூரியில் கற்கை நெய் மேற்கொண்டு வந்துஜா சுமார் 175 மாணவர்கள் திடீர்
வைரஸ் நோய் தாக்கத்தில் சிக்கி பாதிக்க பட்டுள்ளனர் .
இவர்கள் அனைவருக்கும் கொரனோ வைரஸ் நோய் தாக்கம் தொற்றி இருக்கலாம் என நம்ப படுகிறது
இவ்வாறு பாதிக்க பட சிலருக்கு நிமோனியா தாக்கம் என கண்டறிய பட்டுள்ளது
எனினும் உண்மையான நோய் தாக்கத்தை இலங்கை அரசு மறைத்து வருவதாகவும் நம்ப படுகிறது
இந்த நோயினால் மாணவர்கள் பாதிக்க பட்டதை அடுத்து பெற்றோர்கள் பீதியில் உறைந்துள்ளனர்

யானை கட்சிக்குள் மோதல் – சஜித்துடன் 35 பேர் வெளிநடப்பு
யானை கட்சிக்குள் மோதல் – சஜித்துடன் 35 பேர் வெளிநடப்பு
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட 35 பேர்
கலந்து கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஐக்கிய தேசிக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (30) இடம்பெறவுள்ளது.
இந்த கூட்டம் இன்று மாலை 3 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம் பெறவுள்ளதாக
கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இதில் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள தலைமைத்துவ பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டள்ளார்.
யானை கட்சியில் இருந்து இருவர் நீக்கம்
யானை கட்சியில் இருந்து இருவர் நீக்கம்
இலங்கையில் பிரதான கட்சியாக உள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயல் குழுவிலிருந்து ரோஸி சேனநாயக்க
மற்றும் இம்தியாஸ் பாக்கீர் மரைக்கார் ஆகியயோர் அதிரடியாக நீக்க பட்டுள்ளனர்
என அந்த கட்சியின் முக்கிஸ்தர் அதிரடியாக அறிவித்துள்ளார் .
கட்சிக்குள் ஏற்பட்ட முறுகல் ,முரண்பாட்டின் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் .தவறின் அரசு உடமையாக்க முடிவு
தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் .தவறின் அரசு உடமையாக்க முடிவு
தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகம் 1000 ரூபா சம்பளத்தை கொடுக்க தவறினால் தோட்டங்களை
அரசாங்கம் பொறுப்பேற்கும் என்று உயர் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (30) காலை தெரிவித்தார்.
13 பில்லியன் ரூபா அப்போதைய காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் சேவைகளுக்காக
நிலுவையாக ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கப்பட வேண்டியுள்ளது.
கடந்த அரசாங்க காலப்பகுதியில் முறையற்ற நிதி முகாமைத்துவத்தின் காரணமாக இந்த நிலுவை ஏற்பட்டது
என்று தெரிவித்த அமைச்சர் இதற்காக குறை நிரப்பு பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் விரைவில்
சமர்ப்பிக்கப்படவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இன்று காலை அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை
அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனைத் சுட்டிக்காட்டியிருந்தார்.
தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பிற்கான கொடுப்பனவு தொகை இந்த குறை
நிரப்பு பிரேரணையில் உள்ளடங்கியுள்ளதா? என்று அமைச்சரிடம் கேட்ட போதே அவர் தோட்டங்களைப்
பொறுப்பேற்பது குறித்து கருத்து தெரிவித்தார்.
தோட்டங்கள் அரசாங்கத்துக்கே சொந்தமானவை. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தோட்ட
தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1000 ரூபாவாக அதிகரிப்பதற்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இதனை தோட்ட நிர்வாகங்கள் நிறைவேற்ற தவறினால் தோட்டங்களை பொறுப்பேற்று அவை இளைஞர்களுக்கு
பிரித்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் பந்துல குணவர்தன மேலும் தெரிவித்தார். தோட்ட
தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வேதன அதிகரிப்பில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும் அவர் கூறினார்
100 பெண்களை கற்பழித்தவனை கட்டி வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
100 பெண்களை கற்பழித்தவனை கட்டி வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
கற்பழித்தவனை கட்டி வைத்து அடிக்கும் மக்கள் – வீடியோ
தமிழகம், திருச்சி பகுதியில் நூறு பெண்களை கற்பழித்தவரை கட்டி வைத்து அடிக்கும் மக்கள் .
இந்த தண்டனை காட்சியில் பெண்களது குரலும் கேட்கிறது
அதனை காணொளியில் பாருங்கள்
இப்படியுமா அடிப்பாங்க ,இதன் உண்மை தன்மை தெளிவாக புரியவில்லை full video
குத்து சண்டை புலிகளுக்கு பலத்த வரவேற்பு – வீடியோ
குத்து சண்டை புலிகளுக்கு பலத்த வரவேற்பு – வீடியோ
பாகிஸ்தானில் பதக்கம் வென்று நாடு திரும்பிய வடமாகாண குத்துச்சண்டை வீரர்களை கௌரவிக்கும்
நிகழ்வு வவுனியா தெற்கு கல்வி வலயத்தின் பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் தலைமையில் வவுனியா தெற்கு
வலயக் கல்விப் பணிமனையில் இன்று (28) நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து வவுனியா குடியிருப்பில் அமைந்துள்ள இலங்கை திருச்சபை தமிழ்கலவன் பாடசாலை மற்றும்
வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் என்பவற்றிலும் மாணவர்களுக்கு கௌரவிப்பு வழங்கப்பட்டது.
இலங்கையை பிரதிபலித்து பாக்கிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில்
வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்துகொண்டு ஏழு பதக்கங்களை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளனர்.
பாக்கிஸ்தான் லாகூரில் அமைந்துள்ள கடாபி விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் கடந்த 23-01-
2020 தொடக்கம் 26-01-2020 ஆம் திகதி வரை நடைபெற்ற சர்வதேச கிக்பொக்சிங் குத்துச்சண்டை போட்டியில் கலந்து
கொண்ட வடக்கு மாகாண ஏழு குத்துச்சண்டை வீரர்கள் இலங்கைக்கு ஐந்து தங்கப்பதக்கங்களையும், இரண்டு
வெள்ளி பதக்கங்களையும் பெற்றுக் கொடுத்துள்ளனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்தா கல்லூரியை சேர்ந்த எஸ்.சஞ்சயன் (வயது 18) தங்கப்பதக்கத்தையும்,
பி.ராகுல் (வயது17) தங்கப்பதக்கத்தையும், ரி.நாகராஜா (வயது 18) தங்கப்பதக்கத்தையும், வவுனியா இலங்கை
திருச்சபை தமிழ் கலவன் பாடசாலை மாணவன் ஆர்.கெ.கெவின் (வயது 11) தங்கப்பதக்கத்தையும், வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன்
கெ.நிரோஜன் (வயது 16) தங்கப்பதக்கத்தையும், வவுனியா தமிழ்மத்திய மகாவித்தியாலயத்தை சேர்ந்த வி.வசீகரன்
(வயது 17) என்ற மாணவன் வெள்ளி பதக்கத்தையும், வவுனியா காமினி மகாவித்தியாலயத்தை சேர்ந்த எஸ்.
சிறிதர்சன் (வயது 18) வெள்ளிப்பதக்கத்தையும் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சர்வதேச குத்துச்சண்டை பயிற்சிப்பாளரும், பிரன்ஸ் சவாட் குத்துச் சண்டை அமைப்பின் தலைவருமான சி.பூ.பிரசாத்
விக்கிரமசிங்க தலைமையில் இலங்கையில் இருந்து வடமாகாணத்தின் வவுனியாவை சேர்ந்த ஏழு வீரர்களும்,
தென்னிலங்கையை சேர்ந்த பதின்நான்கு வீரர்களுமாக 21 வீரர்கள் இலங்கையை பிரதிபலித்து பாக்கிஸ்தானுக்கு
பயணமாகியிருந்தனர். இவ்வீரர்கள் இலங்கைக்கு 13 தங்கப்பதக்கங்களையும் 06 வெள்ளிப்பதக்கங்களையும்
பெற்றுக் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனில் சலூனுக்குள் புகுந்த பேரூந்து -25 பேர்காயம் – வீடியோ ,
பிரிட்டனில் சலூனுக்குள் புகுந்த பேரூந்து -25 பேர்காயம் – வீடியோ
சற்று முன்னர் பிரிட்டன் Sheffield ,பகுதியில் பேரூந்து ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து சலூனுக்குள்
புகுந்ததினால் அதில் பயணித்த 25 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் full video
மேலதிக செய்திகளை காணொளியில் பாருங்கள்
வவுனியா பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் photo
வவுனியா பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் photo
வவுனியா மாவட்டத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி பொதுமக்களின் காணிகளை அபகரித்த முன்னாள் பிரதேச
செயலாளர் உதயராசா உள்ளிட்ட அதிகாரிகளைக் கண்டித்து வடமாகாண மக்கள் திட்ட ஒன்றியத்தின்
ஏற்பாட்டில் இன்று (29.01) வவுனியா மாவட்டச் செயலகத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் அரசே யுத்தத்தால் இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதிகளாக இருக்கும் மக்களின் காணிகளை
அபகரிக்காதே, காணி விற்பனையால் கிடைத்தது எத்தனை கோடி, காணி ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பு போன்ற
கோசங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.
இதேவேளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருத்து தெரிவிக்கும் போது,
வவுனியா நகர பிரதேச செயலாளராக முன்னர் கடமையாற்றியவர் பல காணி மோசடிகளில் ஈடுபட்டமை
வவுனியா பிரதேச அதிகாரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் photo
தொடர்பில் தகவல்களை வெளிகொணர்ந்ததை அடுத்து அவர் இடமாற்றப்பட்டுள்ளார். எனினும் அவரை பணி இடை
நிறுத்தம் செய்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும். அரசியல் வாதிகளினால் இம் மோசடிகள்
தொடர்பில் கேள்வி எழுப்பப்படாத நிலையில் சாதாரண மக்களே இவ்விடயங்களை ஆதாரத்துடன் வெளிப்படுத்தியிருந்தனர்.
வன்னியை சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களோ, அரசியல்வாதிகளோ இது தொடர்பில் கண்டு கொள்ளாமல்
இருக்கின்றனர். உயர் அதிகாரிகளின் ஊழல்கள் இவ்வாறே மறைக்கப்பட்டு வருகின்றது. எனவே இதில் சம்பந்தப்பட்ட
கிராம சேவகர்கள் குடியேற்ற உத்தியோகத்தர்கள் தொடர்பிலும் விசாரணை செய்ய வேண்டும்.
மக்கள் தாமாக துணிந்து வந்து முறைப்பாடு செய்ய ஆவண செய்யப்படவேண்டும். இந்தியாவில் உள்ளவர்களின்
காணிகளில் கிரவல் அகழப்படுகின்றது. இதனை உடன் தடுத்து நிறுத்தவேண்டும்.
ஊழல் அதிகாரிகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.எனவே நாம் 3 கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
அவையாவன காணி சம்பந்தமான விசாரணை ஆணைக்குழு நிறுவ வேண்டும். அது வடக்கில் உள்ள
அனைத்து பிரதேச செயலகங்கள் வாரியாகவும் விசாரணை நடத்த வேண்டும் மற்றும் இந்தியாவில் உள்ள எங்களது
மக்களின் காணிகளை எந்த பாவனையும் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் அடுத்து ஊழல் அதிகாரிகளை
வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம் எனவும் தெரிவித்தனர்.











