300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

Spread the love

300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

உக்கிரேன் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை அதி வேகமாக தொடுத்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது

ரசியாவின் இந்த திடீர் வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கையால் உக்கிரேனின் பல முக்கிய நகர் பகுதிகள் வீழ்ந்த வண்ணம் உள்ளன

ரசியா மேற்கொள்ளும் இந்த இராணுவ முன் நகர்வினால் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,ஆனால் ஆளும் உக்கிரேன் அதிபர் அடிபணிய மறுத்து ரசியாவை வென்று விடுவேன் என அடம் பிடித்து வருகிறார்

பரம எதிரியாக விளங்கும் ரசியாவை வென்று விட அமெரிக்கா பிரிட்டனிடம் உக்கிரேன் மில்லியன் டாலரில் ஆயுதத்தை வாங்கு குவிகிறது

அவசர உதவி என்ற போர்வையில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்கிரேனுக்கு அதி நாவீன ஆயுத தளபாடங்களை வழங்கி வருகின்றன

பிரிட்டன் அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை ஊடாக உக்கிரேன் பொருளாதாரம் மீள்சி கொள்ளுமா

இந்த பரம எதிரியான ரசியாவின் போரில் இருந்து முற்றாக விடுதலை பெறுமா என்ற கேள்விகள் வெடித்து பறக்கின்றன ,அவை பேசு பொருளாகவும் மாற்றம் பெற்றுள்ளன

இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முன்னூறு மில்லியன் பவுண்டுக்கு உடனடி ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்குகிறது ,

பிரிட்டன் முன்னூறு மில்லியனுக்கு விற்கும் ஆயுத தபாடங்கள் ஊடாக ரசியாவை உக்கிரேன் வீழ்த்தி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

பிரித்தானிய அரசு விற்கும் இந்த ஆயுத வியாபாரத்தின் ஊடாக தனது பலத்தை பிரித்தானிய முதுகில் ஏறி நின்று உக்கிரேன் காண்பிப்பது போல் உள்ளது

பிரிட்டன் வழங்கும் இந்த ஆயுத விற்பனை பட்டியலில் அதி முக்கிய .
ஏவுகணைகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ,மற்றும் இரவு நேர கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன

300 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?

மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் மூலம் ரசியாவின் போரை வென்றுவிடலாம் என உக்கிரேன் எதிர் பார்க்கிறது ,

ஆனால் அது தோல்வியில் முடிய போகிறது என்பதை வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் வேற்று கோஷம் முழங்கி வருவதை காண்பிக்கிறது


இந்த கால விதியின் ,கள நிலவரத்தை உக்கிரேன் அதிபர் உணர மறுத்து வருகின்றமை துன்பியலின் விளைவாக பார்க்க படுகிறது,

இங்கிலாந்தினதும் மற்றும் மேற்குலக ஆயுதங்கள் ஊடாக தப்புமா உக்கிரேன் என்பதே கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .

  • வன்னி மைந்தன் –

Leave a Reply