Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் இன்று இரவு எரிபொருட்கள் விலை அதிகரிப்பு

இலங்கையில் இன்று இரவுஎரிபொருட்கள் விலை அதிகரிப்பு

இலங்கையிலின்று இரவுடன் மீள எரிபொருட்களின் விலையில் அதிரடியாக விலை அதிகரிக்க பாடுகிறது

தொடர்ச்சியாக அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகரித்து செல்கின்றமையால்
மக்கள் பெரிதும் கொதிப்பில் உறைந்துள்ளனர்

இதுதான் தொடர்ச்சியாக ஆட்சி கவிழ்க்க படும் அபாயம் எழுந்துள்ளது ,எனினும்

அதனை மறந்து அரசு கண்மூடித்தனமாக செயல் பட்டு வருகிறது

    Posted in Uncategorized

    லண்டனில் மோதி சிதறிய காவல்துறை வான் – இரு போலீசார் காயம்

    லண்டனில் மோதி சிதறிய காவல்துறை வான் – இரு போலீசார் காயம்

    கடந்த தினம் லண்டன் Wheeler Street, Maidstone. பகுதியில் காவல்துறை வான் ஒன்று


    மோதி சிதறியதில் அந்த வண்டியில் பயணித்த இரு காவல்துறை ஊழியர்கள் காயங்களுக்கு உள்ளாகினர்

    இவ்வாறு காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளனர்


    எனினும் இவர்களுக்கு ஆபாயகரமான காயங்கள் ஏதும் இல்லை என கென்ட் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

      Posted in Uncategorized

      தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்

      தேவாலயம் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு -ஒருவர் மரணம் பலர் காயம்

      Colorado பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்த

      மக்கள் மீது மர்ம ஆயுத தாரி திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்


      இதன் பொழுது அங்கிருந்த மக்களில் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்

      தாக்குதல் இடம்பெற்ற வேளை இருபது பேர் வழிபாட்டில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்

      ,எனினும் அவர்கள் காயங்கள் ஏதும் இன்றி தப்பி கொண்டனர்

      இது ஒரு தீவிரவாத தாக்குதல் என தெரிவிக்க படுகிறது

      Posted in Uncategorized

      ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்

      ஈராக்கில் அமெரிக்கா இராணுவத்தினர் மீது தாக்குதல்

      ஈராக்கின்Diwaniyah பகுதியில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவ
      தொடரணியை இலக்கு வைத்து
      கண்ணிவெடி தாக்குதல் நடத்த பட்டுள்ளது

      இதில் அமெரிக்கா படைகளின் கவச வண்டிகள் சிதறின

      எனினும் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட இழப்புக்களை அமெரிக்கா படைகள் தெரிவிக்கவில்லை

      ஈராக்கில் தொடராக அமெரிக்கா இராணுவத்தினர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

        Posted in Uncategorized

        பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

        பாகிஸ்தான் இராணுவத்தினரை சுட்டு கொன்ற தீவிரவாதிகள்

        ஆப்கானிஸ்தான எல்லையில் பயணித்து கொண்டிருந்த பாகிஸ்தான் இராணுவத்தை சேர்ந்த
        ஐந்து இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

        தலிபான்கள் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் வீழ்ச்சி அடைந்ததன் பின்னர் தொடராக பாகிஸ்தான் இராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

          Posted in மருத்துவம்

          ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

          ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

          மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள்.

          உலகம் முழுவதும் இருக்கும் ஒட்டு மொத்த ஆண்களும், பெண்களும் நினைப்பது என்னவென்றால் ஆண், பெண் இருவருக்கும் உடலமைப்புகள்தான் வித்தியாசம்.

          மற்றபடி மனம், மூளை போன்றவை ஒன்றுதான் என்று நினைக்கிறார்கள். உண்மையில் இரு பாலினத்தவருக்கும் உடல் மட்டுமல்ல மூளையும் வித்தியாசப்படுகிறது.

          இப்படி மூளை வித்தியாசப்படுவதால் தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாக புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள். ஆணின்

          மூளையும், பெண்ணின் மூளையும் வெவ்வேறு விதமாக வேலை செய்கின்றன என்பதுதான் உளவியல் சொல்லும் காரணம்.

          மருத்துவம்

          பெண்ணின் மூளை அமைப்பு மூன்று மையங்களை கொண்டதாக இருக்கிறது. முதல் மையம் உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக்கொள்ளும் தன்மை கொண்டது. இரண்டாவது மையம் மொழிவளத்துக்கானது. இது வார்த்தைகளையும்,

          உரையாடல்களையும் ரசிக்கும் தன்மைக்கொண்டது. மூன்றாவது மையம் முகத்தின் சாயலை கொண்டு ஒருவரை துல்லியமாக எடைபோடும் தன்மை கொண்டது.

          ஆண், பெண் மூளையின் வித்தியாசம்

          ஆண் மூளையிலும் இந்த 3 மையங்கள் உள்ளன. ஆனால், அது வேறுவிதமாக செயல்படுகிறது. ஒரு விஷயத்தை பெண் பேசுவதை போல் ஆணால் விவரித்து

          கொஞ்சம் ‘வளவள’ என்று இழுத்துக் கூறமுடியாது. தான் உணரும் அந்த உணர்வுகளை ஒரு பெண்ணைப்போல் ஆணால் மொழியால் விவரிக்க முடியாது. எதிராளியின் முக அமைப்பை கொண்டு அவர் மனதை புரிந்துகொள்ள முடியும் திறனும் குறைவு.

          ஆணுக்கான மூளை அமைப்பு கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. அழகான பெண்களையே பெரும்பாலான ஆண்கள் விரும்புவதற்கு ஆணின் மூளை அமைப்பே காரணம். ஆனால், பெண்ணின் மூளை அப்படியல்ல.

          பெண்ணுக்கு பார்வை இன்பம் என்று ஒன்று கிடையாது. அதனால்தான் பெண்ணுக்கு காட்சிகளால் மகிழ்ச்சி கிடைப்பதில்லை. பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது.

          ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்கிறது. ஆண் அழகாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை.

          இதுபோன்ற அடிப்படையான வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு.

            Posted in சினிமா

            இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து

            இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து

            லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு பாடலாசிரியர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

            இந்திய இசைக் குயிலுக்குத் தமிழ் அஞ்சலி – வைரமுத்து உருக்கம்
            வைரமுத்து


            பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை

            8.12 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அவருக்கு வயது 92. அவரது மறைவு நாடு முழுவதும் இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

            ‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்று அழைக்கப்படும் லதா மங்கேஷ்கர், பல்வேறு இந்திய மொழிகளில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார்

            . அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

            அந்த வகையில் பாடலாசிரியர் வைரமுத்து அவருடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது;-

            “இந்தியாவின் இசைக்குயில் பறந்துவிட்டது. இசை கிரீடத்தின் பாரத ரத்னா இன்று விழுந்துவிட்டது. லதா மங்கேஷ்கரின் பெருமை என்னவென்றால், தான் வாழ்ந்த

            காலத்தின் மீது தன்னுடைய இசை என்ற ஆதிக்கத்தைச் செலுத்தியது. அவர் பாடியது மேட்டுக்குடிக்கு மட்டுமல்ல, ரோட்டுக் குடிக்கும் தான். உழைக்கும் மக்கள் அவர் பாடிய பாடலைக் கேட்டு தங்கள் கண்ணீரைத் துடைத்துக் கொண்டிருக்கிறார்கள், காதலை

            வளர்த்திருக்கிறார்கள், தங்கள் வியர்வையை சுண்டி எறிந்திருக்கிறார்கள், தங்கள் துக்கத்தை மறந்திருக்கிறார்கள், மகிழ்ச்சியில் ஆடியிருக்கிறார்கள். இந்தியர்களின்

            வாழ்வோடு தன்னை பிணைத்துக் கொண்ட அந்த மாபெரும் இசையரசியின் புகழ் வாழ்க, அவர் பாடல்கள் வெல்க!” என்று அவர் தெரிவித்துள்ளார்.

              Posted in சினிமா

              கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்

              கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்

              பிக்பாஸ் மூலம் அனைவராலும் அறியப்பட்ட யாஷிகா அவருடைய ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விற்கு அதிரடியாக பதிலளித்துள்ளார்.

              கேள்வி கேட்ட ரசிகர் அதிரடியாக பதில் அளித்த யாஷிகா ஆனந்த்
              யாஷிகா ஆனந்த்


              தமிழில் ‘கவலை வேண்டாம்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவுதம் கார்த்திக் நடிப்பில் ‘இருட்டு அறையில்

              முரட்டு குத்து’ படத்தில் தனது கவர்ச்சி நடிப்பின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். பின்னர் தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று கவனம் ஈர்த்தார்.

              கடந்த சில மாதங்களுக்கு முன் யாஷிகா ஒரு பயங்கர விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் படுத்த படுக்கை ஆனார். மருத்துவமனையில் பல மாத சிகிச்சைக்கு பின்னர் தற்போது பழைய நிலைமைக்கு வந்துகொண்டிருக்கிறார்.

              அதேவேளை சமூக வலைதளங்களில் யாஷிகா ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார். குறிப்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது ஒரு ரசிகர், ‘நீங்கள்

              கன்னித்தன்மையுடன் உள்ளீர்களா?’ என எடக்குமடக்கான கேள்வி கேட்டார். இதற்கு சற்றும் தாமதிக்காமல், ‘இல்லை, நான் யாஷிகா’ என பதிலடி கொடுத்துள்ளார்

              யாஷிகா. யாஷிகாவின் இந்த துணிச்சல் பேச்சுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

                Posted in இலங்கை செய்திகள்

                கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்

                கடல் நீரேரிகளில் மிதக்கும் மனித சடலங்கள்

                இலங்கை கடல் நீர் ஏரிகளில் மனித சடலங்கள் மிதந்த வண்ணம் உள்ளது ,இவ்விதம்

                இலங்கை சுதந்திர தின நாளில் வெள்ளைவத்தை பகுதி கடலில் காணாமல் போன் இருவரது சடலம் மீட்க பட்டுள்ளது

                இவ்வாறு காணாமல் போனவர்களில் ஒருவர் மாலைதீவை சேர்ந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
                இவை திட்டமிட்ட கொலைகளா என்ற சந்தேகம் வலுத்துள்ளது

                  Posted in Uncategorized

                  இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

                  இசைக்குயில்’ லதா மங்கேஷ்கர் காலமானார்

                  இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். இதையடுத்து அவர்

                  மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

                  லதா மங்கேஷ்கரின் உடல்நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லதா மங்கேஷ்கர் காலமானார்.

                  தனது 13வது வயதில் இசைத்துறைக்குள் பிரவேசித்த அன்னார், 1942ம் ஆண்டு தனது முதலாது சினிமா பாடலை பாடியிருந்தார்.

                  சுமார் 7 தசாப்த காலம் தொடர்ந்து அவரது இசைப் பயணத்தில், பல மொழிகளில் 30,000 திற்கும் அதிக பாடல்களை பாடியுள்ளார்.

                  2001ம் ஆண்டு இந்தியாவின் மிக உயரீய விருதான பாரத ரத்னா விருதும் லதா மங்கேஷ்காருக்கு கிடைத்தது

                    Posted in இலங்கை செய்திகள்

                    வாகன விபத்தில் தந்தையும் மகளும் மரணம்

                    வாகன விபத்தில் தந்தையும் மகளும் மரணம்

                    கம்பஹா, அஸ்கிரிய வல்பொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.

                    மோட்டார் சைக்கிள் ஒன்றும் பௌசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                    உயிரிழந்தவர்கள் 6 வயது சிறுமி மற்றும் 42 வயதுடைய தந்தை என பொலிஸார் தெரிவித்தனர்.

                    அவர்கள் கம்பஹா உக்கல்பொட பிரதேசத்தில் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

                    மோட்டார் சைக்கிள் சாரதி மற்றும் பௌசர் வாகன சாரதியின் கவனக்குறைவாகவும்,

                    கவனக்குறைவாகவும் வாகனத்தை செலுத்தியமையினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

                      இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை

                      தெஹிவளை கல்தேரா வீதியில் இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

                      வாள்வெட்டுத் தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                      உயிரிழந்தவர் தெஹிவளை கல்தேரா வீதியில் வசிக்கும் 18 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

                      நீண்ட காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                      சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                      சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        திதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஞானசக்தி விநாயகர் ஆலய பிரதிஷ்ட கும்பிஹேக நிகழ்வில் எண்ணெய் காப்பு

                        புஸ்ஸல்லாவ நிவ்மெல்போட்டில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ ஞானசக்தி விநாயகர் ஆலய பிரதிஷ்ட கும்பிஹேக நிகழ்வில் எண்ணெய் காப்பு பிரதம குருக்கள் ஞானவரத

                        ஐயப்பன் தேவஸ்தான பீடாதிபதி சிவஸ்ரீ க.மஹேஸ்வர குருக்கள் அவர்களின் தலைமையில் (05.01.2021) நடைபெற்றது

                        இந் தெய்வீக நிகழ்வில் பக்த அடியார்கள் பலர் கலந்துக் கொண்டு ஸ்ரீ ஞானசக்தி விநாயகருக்கு எண்ணெய் சாய்வித்தனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்

                          கைக்குண்டுடன் கைது செய்யப்பட்ட கொள்ளையன்

                          காத்தான்குடியில் பல வீடுகளை உடைத்து கொள்ளைகளில் ஈடுபட்டுவந்த கொள்ளையன் ஒருவனை கைக்குண்டுடன் கைது செய்யப்பட்டவனை முன்று

                          தினங்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் நேற்று (05) அனுமதி வழங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

                          காத்தான்குடி பிரதேசத்தில் அண்மைகாலங்களில் பல வீடுகள் உடைத்து அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையிடப்பட்டுவந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது

                          இதனை தொடர்ந்து பொலிசார் மேற்கொண்டுவந்த விசாரணையில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை (04) காத்தான்குடி கர்ப்லா பிரதேசத்தில் வைத்து கொள்ளையன் ஒருவரை கைக்குண்டுடன் கைது செய்தனர்.

                          இதில் கைது செய்யப்பட்டவர் காளிகோவில் வீதி செல்வநகரைச் சேர்ந்த நிப்பிறாhஸ் என்பவர் எனவும் இவர் கடந்த வருடம் காத்தான்குடியில் இடம்பெற்ற பல கொள்ளைச்

                          சம்பவத்துடன் தொடர்புடையவர் எனவும் இதில் காத்தான்குடி அன்னூர் பாடசாலை வீதியில் வீடு ஒன்றில் கொள்ளையிட்ட 4 அரைப்பவுண் தங்க ஆபரணங்களை

                          கொள்ளையன் ஒந்தாச்சிமடம் பகுதியிலுள்ள தங்க ஆபரண கடை ஒன்றில் ஈடுவைத்த நிலையில் அதனை மீட்டுள்ளதுடன்

                          இந்த கொள்ளையனை தொடர்ந்து பொலிஸ் தடுப்பு காவலில்வைத்து விசாரணை செய்ய நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.

                          றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தபபட்டபோது அவரை 3 தினங்களான 7 ம்திகதிவரை பொலிஸ்தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

                            கவிழ்ந்த கார்
                            Posted in உலக செய்திகள்

                            லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                            லண்டனில் தலைகீழாக கவிழ்ந்த கார்

                            லண்டன் Nelson Road, Gillingham பகுதியில் கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து
                            தலைகீழாக கவிழ்ந்தது ,

                            அவ்வேளை ,சாரதி காரின் கூரைக்குள் சிக்கிய தவித்து கொண்டிருந்தார்

                            விரைந்து வந்த அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்

                            ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது ஒத்த விபத்து இது என்பது குறிப்பிட தக்கது

                              எடகோன்
                              Posted in Uncategorized

                              துருக்கி ஜனாதிபதி – அவர் மனைவிக்கு கொரனோ

                              துருக்கி ஜனாதிபதி – அவர் மனைவிக்கு கொரனோ

                              துருக்கிய நாட்டின் அதிபர் எடகோன் அவர் மனைவிக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது
                              கண்டறிய பட்டுள்ளது

                              இதனால அவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது

                                கண்ணிவெடியால்
                                Posted in Uncategorized

                                கண்ணிவெடியால் வெடித்து சிதறிய வண்டி -10 பேர் மரணம்

                                வெடித்து சிதறிய வண்டி 10 பேர் மரணம்

                                சோமாலிய Kismayo பகுதியில் பயணித்து கொண்டிருந்த பயணிகள் மினி பஸ்


                                ஒன்று கண்ணிவெடியில் சிக்கியது .இதன் பொழுது அதில் பயணித்த பத்து பேர்

                                பலியாகினர் மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்

                                பேரூந்து முற்றாக சேதமடைந்துள்ளது ,மேற்படி பகுதியை இராணுவம் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்

                                  உடல் எடையைக் குறைக்கும்
                                  Posted in மருத்துவம்

                                  உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்

                                  உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்

                                  ரா புட் டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் கீரை வகைகள் என சைவ உணவுகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன.

                                  இதன் வழியாக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் முடியும்.

                                  உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்’
                                  ரா புட் டயட்
                                  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                                  சமைக்காத உணவுகளை அதிகமாக சாப்பிடும் உணவு முறை ‘ரா புட் டயட்’ எனப்படுகிறது.

                                  இந்த உணவு முறையின் மூலம் அதிக கலோரிகள், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதைக் குறைக்கலாம்.

                                  இதன் வழியாக ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் முடியும். ரா புட் டயட்டில் பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், விதைகள் மற்றும் கீரை

                                  வகைகள் என சைவ உணவுகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகின்றன. சிலர் பச்சை முட்டை மற்றும் பால் பொருட்களையும் இந்த உணவு முறையில் சாப்பிடுவார்கள்.

                                  104-118 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் சூடுபடுத்தாமல் இருக்கும் உணவு, பச்சை

                                  உணவாகவே கருதப்படுகிறது. உணவை சமைக்கும்போது அதில் உள்ள நொதிகள் மற்றும் ஊட்டச்சத்துக்களில் இழப்புகள் ஏற்படுகிறது.

                                  ஆகையால் ரா புட் டயட்டில், சமைத்த உணவுகளுக்கு மாறாக, காய்கறி மற்றும் பழங்கள் சேர்த்த சாலட், ஜூஸ், புட்டிங், ஊறவைத்த மற்றும் முளைகட்டிய தானியங்கள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

                                  இம்முறையில் உணவு உட்கொள்ளும்போது உடலுக்குத் தேவையான நீர்ச்சத்து, ஆற்றல்

                                  மற்றும் ஊட்டச்சத்துக்கள் எளிதில் கிடைக்கும். மேலும், ஆரோக்கியமான உடல் எடை குறைப்புக்கு இந்த முறை சிறந்தது.

                                  பச்சைக் காய்கறிகளில் கலோரி குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இதனால், உடலில் தேவைக்கும் அதிகமான அளவு கலோரி சேர்வதைத் தவிர்க்க முடியும்.

                                  ரா புட் டயட்டில் நாம் உட்கொள்ளும் உணவுகளில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருக்கும். சோடியம், கலோரி, சர்க்கரை மற்றும்

                                  கொழுப்பு குறைவாக இருக்கும். இது செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, உடலை புத்துணர்வு அடையச் செய்யும்.

                                  இதில் சில உணவுப் பொருட்களில் கரையாத நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கும்.

                                  அதன் காரணமாக உணவு செரிமானமாகாமல் வாயுவை உண்டாக்கும். ஆகையால், தினமும் இஞ்சியை ஒரு வேளையாவது உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.

                                  உடல் எடையைக் குறைக்கும் ‘சமைக்காத உணவுகள்

                                  ரா புட் டயட்டில், சமைக்காத உணவுகளைச் சாப்பிடுவதால் அவ்வப்போது பசி எடுத்துக்கொண்டே இருக்கும். ஆகையால் சாப்பிடும் உணவை காலை உணவு,

                                  சிற்றுண்டி, மதிய உணவு, மாலை நேர சிற்றுண்டி, இரவு உணவு மற்றும் நாள் இறுதியில் ஏதேனும் ஒரு இனிப்பு வகை என ஆறு வேளையாகப் பிரித்து சாப்பிட வேண்டும்.

                                  முந்திரி, உலர் திராட்சை, பாதாம், வேர்க்கடலை, ஊறவைத்த கொண்டைக்கடலை, பாசிப்பயறு, பட்டை, கிராம்புத் தூள், மிளகுத் தூள், கொத்தமல்லித்தழை, புதினா,

                                  ஆப்பிள், கொய்யா, வாழைப்பழம், டிராகன் பழம், வெள்ளரிக்காய், தக்காளி மற்றும் கேரட் ஆகிய உணவுகளை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

                                  மேலும், புட்டிங், சாலட், உருண்டைகள், ஸ்மூத்தீஸ் போன்ற வடிவிலும் சாப்பிடலாம்.

                                    தன்ஷிகா
                                    Posted in சினிமா

                                    தன்ஷிகாவிற்கு இது முதல்முறை

                                    தன்ஷிகாவிற்கு இது முதல்முறை

                                    பரதேசி, பேராண்மை, கபாலி ஆகிய படங்களில் நடித்து பிரபலமான நடிகை தன்ஷிகா முதல்முறையாக புதிய முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

                                    தன்ஷிகாவிற்கு இது முதல்முறை
                                    தன்ஷிகா


                                    தமிழில் பரதேசி, பேராண்மை, கபாலி ஆகிய படங்களில் தனது திறமையான நடிப்பால் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நடிகை தன்ஷிகா. இவர் தற்போது முதல் முறையாக

                                    இரட்டை வேடங்களில் நடிக்க இருக்கிறார். இவர் நடிக்கும் படத்திற்கு ‘மனோகரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

                                    நவாஸ் அகமது இயக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் சினேகன் மனைவி கன்னிகா சினேகன் நடிக்கிறார். மற்றும் இளவரசு, கதிர், பிஜிலி ரமேஷ், ஜீவன் பாண்டியன்,

                                    குடந்தை முத்து இவர்களுடன் கராத்தே மணியின் மகனான ராஜ்குமார் தமிழில் வில்லனாக அறிமுகமாகிறார்.

                                    தன்ஷிகா

                                    இப்படம் பற்றி இயக்குனர் நவாஸ் அகமது கூறும்போது, ‘நடிகர் திலகம் சிவாஜிக்கு மனோகரா போல் நடிகை தன்ஷிகாவுக்கு மனோகரி. சிவாஜி கணேசன் நடித்து

                                    மிகப்பெரிய வெற்றியை பெற்ற மனோகரா திரைப்படத்தை போலவே, இன்றைய நவீன தொழிட்நுட்பங்களை பயன்படுத்தி VFX காட்சிகள் நிறைந்த மனோகரி திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம்.

                                    சென்டிமென்ட் கலந்த சஸ்பென்ஸ் திரில்லர் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு கம்பத்தில் பூஜையுடன் துவங்கியுள்ளது. தொடர்ந்து கொடைக்கானல் மற்றும்

                                    திண்டுக்கல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து நடைபெற உள்ளது.

                                      அட்லீ - நெல்சன் - லோகேஷ் கனகராஜ்
                                      Posted in சினிமா

                                      விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்

                                      விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்

                                      தமிழ் சினிமாவில் இருக்கும் 3 இளம் இயக்குனர்களை விஜய் எடுத்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

                                      விஜய் எடுத்த புகைப்படம்…. நெகிழ்ச்சியடைந்த இளம் இயக்குனர்கள்
                                      விஜய்


                                      தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது ‘பீஸ்ட்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் திரைப்படம் தயாரித்து வரும்

                                      இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மேலும் வில்லன் கதாபாத்திரத்தில் செல்வராகவன் நடித்துள்ளார். இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார்.

                                      விஜய்யின் முந்தைய படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். அதுபோல் விஜய் நடித்த தெறி, மெர்சல், பிகில் படங்களை அட்லீ இயக்கி

                                      இருந்தார். இந்த மூன்று இளம் இயக்குனர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை நடிகர் விஜய் கிளிக் செய்திருக்கிறார்.

                                      இந்த புகைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைத்தள

                                      பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகிறது.