போராட்டத்தில் கைகோர்த்த தமிழர்கள்
போராட்டத்தில் கைகோர்த்த தமிழர்கள்
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்துகம தொகுதி அமைப்பாளர் ஶ்ரீபால் வன்னிஆராய்ச்சியினால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அதிகரித்துள்ள வாழ்க்கை செலவுக்கு எதிராகவும், அது குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க தவறியுள்ளமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கை செலவு அதிகரிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட தமிழ் மக்களும் இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
தீபந்தங்களை ஏந்தியவாறு மத்துகம நகர் மத்தியில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் பங்காளி கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி, அரசாங்கத்தின் நடவடிக்கைக்கு
எதிராக நடத்திய முதலாவது போராட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது
கோட்டா, மஹிந்த செய்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்-சிறி எம்பி
கோட்டா, மஹிந்த செய்த பாவத்தை அனுபவிக்கிறார்கள்
முள்ளிவாய்க்காலில் உணவுக்காக வரிசையில் நின்ற குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மீது குண்டுகளை வீசிக்கொன்ற, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் பாவக் கர்மாவே, சிங்களவர்களையும் அத்தியாவசியப் பொருள்களுக்காக வரிசையில் நிற்க வைத்துள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டில் அத்தியாவசியப் பொருள்களுக்கக்கூட நாட்டு மக்கள் வரிசைகளில் நிற்கிறார்கள். இந்த பொருளாதார நெருக்கடியை தமிழ் மக்கள் 20 வருடங்களுக்கு முன்பே அனுபவித்து இருக்கிறார்கள் என்றார்.
நாட்டில் நிலவும் கடதாசி தட்டுப்பாட்டால் பரீட்சைகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, பல பத்திரிகை நிறுவனங்களும் தங்களது பக்கங்களை குறைத்துள்ளன. 20 வருடங்களுக்கு முன்னர் இந்திய அமைதிப் படையினர் தமிழர் பகுதிகளுக்கு நுளைந்தபோதும் தமிழர்கள் இந்நிலைமைக்கு முகங்கொடுத்தனர் என்றார்.
வரிசைகளில் நின்றவாரே மடிந்து விழுகிறார்கள். தமிழ் மக்களுக்கு இந்த வரிசைகள் புதிதல்ல. ஆனால் இப்போதே சிங்கள மக்கள் இதனை அனுபவிக்கிறார்கள். புலிகளின் தலைவர் பிரபாகரனின் காலத்தில் எவரும் பட்டினியால் உயிரிழக்கவில்லை. வரிசைகளில் நிற்கவில்லை. சிங்கள தலைவர்கள் எவரும் நேர்மையுடன் சிந்திக்க தயாராக இல்லை என்பதை சிங்கள மக்களுக்குக் கூற விரும்புகிறேன் என்றார்.
அத்தியாவசிய பொருள்களுக்காக வரிசையில் நின்ற நால்வர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். இது நாட்டுக்கு வெட்கமில்லையா? கேவலமில்லையா எனவும் கடுமையாக சாடிய ஸ்ரீதரன் எம்.பி, பிரபாகரனிடம் நாட்டை கொடுத்திருக்கலாமென சிங்களவர்களே கூறுகின்றார்கள். சிங்கள மக்களின் நிலைமைக்கு நாம் அனுதாபங்களை தெரிவிக்கிறோம் எனவும் தெரிவித்தார்.
தமிழ், சிங்களம் என்கிற இரு தேசிய இனங்களையும் அரவணைத்து செல்லக்கூடிய தலைவன் வராதவரையில் இந்நாடு இதைவிட மோசமான நிலைமைகளை சந்திக்கும் எனவும் எச்சரித்தார்.
மேலும், அதிகாரங்களை பகிர்ந்து சமஸ்டி அடிப்படையில் தீர்வினை வழங்க கூடிய ஒரு சிங்கள தலை மகன் எப்போது வருகின்றானோ அன்றுதான் நாடு மீளும். அந்த சிங்களமகன் மகா மனிதனாக மாறுவான். அவ்வாறான ஒரு சிங்கள மகனை உருவாக்க சிங்கள மக்கள் முன்வரவேண்டும் என்றார்
பிச்சை எடுத்து மக்களை காப்போம் – அமைச்சர்
பிச்சை எடுத்து மக்களை காப்போம் – அமைச்சர்
நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றதாகத் தெரிவிக்கும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, நல்லாட்சி அரசாங்கம் தின்றத்தையே நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்றைய (23) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டு மக்களின் உணவுகளுக்காக அரசாங்கம் வெளிநாடுகளில் யாசம் பெறுவதாக எதிரக்கட்சியினர் எங்களை விமர்சிக்கிறார்கள். யாசகம் எடுத்தாவது நாட்டு மக்களுக்கு உணவளிப்போம் எனவும் தெரிவித்தார்.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் நாட்டுக்கு தேவையான எரிபொருள், காஸ்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது. எனினும் தற்போதைய அரசாங்கத்தில் அவ்வாறான நிலைமைகள் இல்லை எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் நாட்டில் காணப்படும் தற்போதையப் பிரச்சினைகள் அனைத்தும் தற்காலிகமானது. இவற்றை தற்போதைய அரசாங்கம் விரைவிலேயே சரி செய்யும் எனவும் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானோடு இலங்கையின் பொருளாதார வளர்ச்சியை ஒப்பிடும் நிலைக்கு நாட்டை நல்லாட்சி அரசாங்கமே தள்ளியது. நல்லாட்சி அரசாங்கமே நாட்டை தின்றார்கள். அவர்கள் தின்றதை நாம் சரி செய்து வருகிறோம் எனவும் தெரிவித்தார்
புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் 30 வருடங்களில் செய்ய முடியாததை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இரண்டே வருடங்களில்
செய்துவிட்டதாக தெரிவிக்கும் நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஸ்ணன், காணி உரிமை என்பது மலையக மக்களுக்கு எட்டாக்கனி எனவும் தெரிவித்தார்.
காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழான 2251/48, 2262/50 மற்றும் 2266/5 இலக்க வர்த்தமானப் பத்திரிகையின் கீழ் பிரசுரிக்கப்பட்ட
ஒழுங்குவிதிகள் மீதான நேற்றைய (23) விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், சிங்களவர்கள், வட,கிழக்கு தமிழர்கள், முஸ்லிம் உள்ளிட்ட மக்களுக்கு இந்நாட்டில் காணிகள் உள்ளன.
ஆனால் மலையக மக்களுக்கு காணிகள் என்பது எட்டாக்கனியாகவே உள்ளது என்றார்.
புலிகளினால் செய்ய முடியாததை கோட்டா செய்து விட்டார் – அமைச்சர்
தொழிலாளர்கள், தொழில் இருந்து ஓய்வு பெற்றதன் பின்னர் வாழ்வதற்கென ஒரு வீடு அவர்களுக்கு இல்லை. அவர்கள் வீதிகளில் நிற்கும் நிலையே
காணப்படுகிறது. வாக்குரிமை இல்லாத காலத்திலும் வாக்குரிமை பெற்றப் பின்னரும் மலையக மக்களுக்கு காணி உரிமைகள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
மாகாணசபைகளை முதலில் அமைத்து அதன் ஊடாக காணி பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனவும் தெரிவித்த அவர், முப்பது வருடங்கள் யுத்தம் செய்தும் நாட்டை பிரபாகரனால் அழிக்க முடியவில்லை.
ஆனால் ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஸ பதவியேற்ற இரண்டே வருடங்களில் நாட்டை அவர் அழித்துவிட்டார் என்பதுபோல ஒரு கேலிசித்திரத்தை தான் பார்த்ததாகவும் தெரிவித்தார்.
16 இந்திய மீனவர்கள் கைது
16 இந்திய மீனவர்கள் கைது
இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் நாட்டுக்கு
அத்துமீறி நுழைந்து கடற்றொழில் ஈடுபட்ட 16 இந்திய மீனவர்கள் நேற்று(23) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்காக
சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்
இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா
இலங்கை தூதரகங்களுக்கு மூடுவிழா
டொலர் பிரச்சினையைக் காரணங்காட்டி உலக நாடுகள் பலவற்றில் உள்ள இலங்கை தூதரகங்களை அரசாங்கம் மூடி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸமன் கிரியெல்ல தெரிவித்தார்.
ஈராக், நோர்வே, சைப்பிரஸ் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களை தற்போதைய அரசாங்கம் மூடியுள்ளது. சைப்பிரஸில் ஆயிரக்கணக்கான
இலங்கையிர்கள் வாழ்கிறார்கள் இவ்வாறான நிலையில் அங்குள்ள தூதரகத்தையும் அரசாங்கம் மூடியுள்ளதாக சற்றுமுன்னர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் மேலும் தெரிவித்தார்.
வீடு எரிந்து மூவர் தீயில் கருகி மரணம்
கட்டுகஸ்தோட்டை மெனிக்கும்புரவத்த பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகள் மற்றும் மருமகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்குள்ளான வீட்டில் இருந்த தாய் படுகாயமடைந்த நிலையில் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (24) காலை ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய கடுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவிக்காக பலாக்காய் பறிக்க சென்ற நபர் கொலை
மனைவிக்காக பலாக்காய் பறிக்க சென்ற நபர் கொலை
பலாக்காய் ஒன்றை பறித்த நபர் ஒருவர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவமொன்று எல்பிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
எல்பிட்டிய, பிட்டுவல வீதியின் 2ஆம் தூண் பகுதியில் வசிக்கும் 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கர்ப்பிணி மனைவியின் பசியை போக்குவதற்காக காணியின் அருகில் இருந்த பலா மரத்தில் ஏறி பலாக்காய் பறித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது பக்கத்து வீட்டுக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ள நிலையில் பின்னர் பக்கத்து வீட்டுக்காரர் குறித்த நபரை கத்தியால் குத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த நபர் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.
உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய இராணுவம் மரணம்
உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய இராணுவம் மரணம்
உக்ரைன் ராணுவம் எதிர்பார்த்ததை விட கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருவதால் ரஷியாவுக்கு அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது.
உக்ரைனில் இதுவரை 15000 ரஷிய வீரர்கள் இறந்துள்ளனர்- நேட்டோ கணிப்பு
ரஷியாவின் தாக்குதலில் சிதிலமடைந்த வணிக வளாகம்
கீவ்:
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா 28-வது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்துள்ள ரஷிய ராணுவம், தலைநகர் கீவை கைப்பற்ற உக்கிரமான தாக்குதலை நடத்தி
வருகிறது. ரஷிய படைகளுக்கு உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்தவண்ணம் உள்ளது. எதிர்பார்த்ததை விட உக்ரைன் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிக அளவில் உள்ளது.
இந்த சண்டையில் ரஷிய ராணுவம் தரப்பில் இதுவரை 7000 முதல் 15 ஆயிரம் வரையிலான வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.
உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ ராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.
இதற்கிடையே அப்பட்டமான பொய்களுடன் ரஷியாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குவதாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம்சாட்டி
உள்ளார். அணு ஆயுதம் மற்றும் ரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்
ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா
ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா
அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. ஆனால் நலமாக உள்ளதாக அவரே தெரிவித்துள்ளார்.
அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா
ஹிலாரி கிளிண்டன்
அமெரிக்க முன்னாள் வெளியுறவு மந்திரி ஹிலாரி கிளிண்டன் (வயது 74). இவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு நேற்று முன்தினம் உறுதியாகி உள்ளது.
அவருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. ஆனால் நலமாக உள்ளார். இதை அவரே தெரிவித்துள்ளார்
.மெக்சிகோவில் வலம் வரும் திரிஷா
.மெக்சிகோவில் வலம் வரும் திரிஷா
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்து இன்னும் கதாநாயகியாக நடித்து வரும் திரிஷா மெக்சிகோவிற்கு சுற்றுலா சென்றிருக்கிறார்.
மெக்சிகோவில் ஜாலியாக வலம் வரும் திரிஷா
திரிஷா
தமிழ் சினிமாவில் தொடர்ந்து 20 வருடங்களுக்கும் மேலாகப் பேசப்படும் நடிகையாக வலம் வருபவர் திரிஷா. மிஸ் சென்னையாகத் தேர்வு செய்யப்பட்ட திரிஷா, அதனைத் தொடர்ந்து சிம்ரன், பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக திரையுலக பயணத்தைத் தொடங்கினார்.
தற்போது வரை பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை 2 உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆக இருக்கிறது. தனது 20 வருட திரைப்பயணத்தை சமீபத்தில் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார் திரிஷா.
தற்போது திரிஷா மெக்சிகோ சென்றிருக்கிறார். அங்கு நண்பர்களுடன் ஜாலியாக வலம் வரும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து வருகிறார்கள்
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்.
நடிகை மீரா மிதுனுக்கு பிடிவாரண்ட்
மீரா மிதுன்
8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் நடித்த மீரா மிதுன். இவர் பட்டியலினத்தவர்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில், விசாரணைக்கு ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீரா மிதுன்
மீரா மிதுன்
மீரா மிதுனை கைது செய்து வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவுக்கு முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர்
லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர்
லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.
லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே
மணக்கோலத்தில் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ்
லண்டன்:
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிசை, லண்டனில் உள்ள சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.
ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார்.
2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (வயது 37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படட்தாக அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்
லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர்
ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார்.
லண்டன் சிறைச்சாலையில் காதலியை திருமணம் செய்தார் விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்சே
மணக்கோலத்தில் அசாஞ்சே, ஸ்டெல்லா மோரிஸ்
லண்டன்:
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தனது நீண்டகால காதலியான ஸ்டெல்லா மோரிசை, லண்டனில் உள்ள சிறைச்சாலையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.
ஜூலியன் அசாஞ்சே தனது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் உள்ளார். 50 வயதான ஜூலியன் அசாஞ்சே, 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதற்கு முன்பு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக தங்கி இருந்தார்.
2011 ஆம் ஆண்டு லண்டன் தூதரகத்தில் இருந்த போது அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (வயது 37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. மோரிஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஜூலியன் அசாஞ்சேவின் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். 2015 ஆம் ஆண்டு முதல் இவர்கள் காதலித்து வந்த நிலையில், இன்று திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறைச்சாலையில் நடந்த திருமணத்தில் 4 விருந்தினர்கள் மற்றும் இரண்டு சாட்சிகள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படட்தாக அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் தெரிவித்தனர்
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன்
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்:
ரஷிய ஜனாதிபதி புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை. வெறுமனே பேச்சு வார்த்தையை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை.
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.
நேற்று மட்டும் 7 ஆயிரம் பொது மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1 லட்சம் பேர் உணவு, குடிநீர், மருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன்
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன- உக்ரைன் அதிபர் குற்றச்சாட்டு
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
கீவ்:
ரஷிய அதிபர் புதினுடன் பேச்சு வார்த்தை நடத்தாமல் போர் நிறுத்தத்திற்கு சாத்தியமே இல்லை. வெறுமனே பேச்சு வார்த்தையை நீட்டித்துக் கொண்டே செல்வதால் எந்த பயனும் இல்லை.
புதினுக்கு நேட்டோ நாடுகள் பயப்படுகின்றன. உக்ரைனை ஏற்கிறோம். ரஷியாவுக்கு பயந்து ஏற்க மாட்டோம் என்ற உண்மையை நேட்டோ அமைப்புகள் உடனே வெளிப்படையாக கூற வேண்டும்.
நேற்று மட்டும் 7 ஆயிரம் பொது மக்கள் மரியுபோல் நகரில் இருந்து வெளியேற்றப்பட்டனர். 1 லட்சம் பேர் உணவு, குடிநீர், மருந்து வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்
ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்.
உக்ரைனுக்கு எதிராக சண்டையிட்டு வரும் ரஷியாவுக்கு எதிராக சிலவற்றில் இந்தியா நடுங்குகிறது என அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்
ஜோ பைடன்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் போரை நிறுத்துமாறு வலியுறுத்தியும் ரஷியா போரை
நிறுத்தவில்லை. உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கீழே போடும் வரை போரை நிறுத்த மாட்டோம் என ரஷிய அதிபர் புதின் அறிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தும் எந்த பயனும் இல்லை. இதற்கிடையே அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ரஷியா மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகள், நேட்டோ நாடுகள் என பல்வேறு நாடுகளை கொண்ட அமைப்புகளும் ரஷியாவுக்கு எதிராக உள்ளது. இதேபோல் குவாட் அமைப்பில்
இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளது. இதில் இந்தியாவை தவிர மற்ற நாடுகள் ரஷியாவுக்கு எதிராக உள்ளன.
ரஷியா விவகாரத்தில் இந்தியா நடுங்குகிறது: ஜோ பைடன்
இந்தியா ஐ.நா. சபயைில் நடைபெற்ற வாக்கெடுப்பில் உக்ரைனுக்கு ஆதரவாக வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. பொருளாதாரத்தடை காரணமாக
ரஷியா கச்சா எண்ணெயை விற்பனை செய்ய முடியாமல் உள்ளது. இதனால் மலிவு விலையில் விற்க முடிவு செய்தது.
ரஷியாவின் மலிவு விலை கச்சா எண்ணெயை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதில் அமெரிக்காவுக்கு அதிருப்தி அளித்துள்ளது.
தங்களுன் நட்பில் உள்ள அனைத்து நாடுகளும் ரஷியாவுக்கு எதிராக இருக்கும்போது இந்தியா மட்டும் தனித்து இருப்பதாக அமெரிக்கா உணர்கிறது.
நேற்று வாஷிங்டனில் அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஜோ பைடன், ‘‘நேட்டோ மற்றும் பசிபிக் நாடுகள் ஒருங்கிணைந்து இருக்கிறது. ஆனால்
, குவாட் அமைப்பில் இந்தியா சிலவற்றில் நடுங்கும் நிலை உள்ளது. ஆனால், ஜப்பான் அதிக அளவில் எதிர்க்கிறது. ஆஸ்திரேலியாவும் அப்படித்தான் உள்ளது.
புதின் நேட்டோவை பிரித்து விடலாம் என நினைக்கிறார். அதற்குப் பதிலாக நேட்டோ அதன் முழு வரலாற்றிலும் இன்று இருப்பதை விட வலிமையாக ஒன்றுபட்டதாக இருந்ததில்லை’’ என்றார்
தீயில் கருகி 13 பேர் மரணம்
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் சம்பத். இவர் செகந்திராபாத் போயகோடா பகுதியில் மர டிப்போ நடத்தி வருகிறார். இதில் மகாராஷ்டிரா, பீகார்
மாநிலத்தை சேர்ந்த 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். தொழிலாளர்கள் அனைவரும் மர டிப்போவிலேயே சமையல் செய்து சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள குடோனில் தங்குவது வழக்கம்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென குடோன் முழுவதும் பரவியது.
அதிகாலை நேரம் என்பதால் தொழிலாளர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். குடோன் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. புகை மூட்டம் ஏற்பட்டதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அப்போது தான் தொழிலாளர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.
தீ பயங்கரமாக எரிந்ததால் தொழிலாளர்கள் குடோனில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்கள் குடோனில் இருந்து காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர்.
அந்த வழியாக சென்றவர்கள் தீ விபத்து ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்து செகந்தராபாத் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்க முயன்றனர். அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை.
இதையடுத்து மேலும் 7 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு மீண்டும் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதற்குள் குடோனின் மேற்கூரை இடிந்து அங்கு இருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இதில் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே 13 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர். இதில் 11 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.
பலியானவர்கள் விவரம் வருமாறு:-
சிக்கந்தர் (வயது 40), தினேஷ் (35), ராஜேஷ் (25), பிட்டு (23), கோலு (28), தாமோதர் (25), சத்யேந்தர் (40), தீபக் (25), சிண்டு (27), பங்கஜ் (23), ராஜூ என தெரியவந்துள்ளது.
மேலும் தீ விபத்தில் சிக்கி இறந்த 2 தொழிலாளர்களின் உடல்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் 2 தொழிலாளர்கள் படுகாயத்துடன் குடோனில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் செகந்திராபாத் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீ விபத்து குறித்து செகந்திராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தீயணைப்பு நிலைய அலுவலர் பாப்பையா தெரிவித்தார்.
மர டிப்போ உரிமையாளர் சம்பத் மர டிப்போ வைப்பதற்கு மட்டுமே அனுமதி பெற்றுள்ளார். குடோன் வைப்பதற்கு அனுமதி பெறவில்லை என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து மர டிப்போ உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
தீ விபத்தில் சிக்கி 13 தொழிலாளர்கள் உறக்கத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படியுங்கள்…ஓய்வு பெறும் நாளில் ரவிவர்மா ஓவியம் போல் வேடமிட்டு ஆசிரியையை நெகிழ வைத்த தோழிகள்
ஒருவர் வெட்டி கொலை
ஒருவர் வெட்டி கொலை
அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்த போது ஏற்பட்ட தகராறு காரணமாக நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (22) பிற்பகல் கிரான்ட்பாஸ், வெஹரகொடெல்ல சந்திக்கு அருகில் இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் இறந்தவருக்கு வானொலியை அடகு வைத்துள்ளார்.
அடமானம் வைக்கப்பட்ட வானொலியை மீட்க வந்தபோது ஏற்பட்ட தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டிய வெஹரகொடெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிரான்ட்பாஸ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை
ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு 9 ஆண்டுகள் சிறை#
எதிர்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னிக்கு மோசடி மற்றும் நீதிமன்ற
அவமதிப்புக்காக 9 ஆண்டுகள் கடுகாவல் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாக பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013-ம் ஆண்டு அலெக்ஸி மீது வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கில் மாஸ்கோ நீதிமன்றம் கடந்த வருடம் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.
தனது தண்டனையை எதிர்த்து கடந்த சில மாதமாகவே அலெக்ஸி சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்தார்.
கோட்டாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
கோட்டாவுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம்
மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினால் ஏற்பாடு
செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி, இன்று(23) பிற்பகல் 3 மணிக்கு நுகேகொடை நகரில் இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் இந்த எதிர்ப்புப் பேரணி ஆரம்பமாகவுள்ளது.
தெல்கந்த முதல் நுகேகொட வரை ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.
அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் வாங்கும் இலங்கை
அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் கடன் வாங்கும் இலங்கை
அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார்.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அவுஸ்திரேலியாவிடம் 200 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாக கோரியுள்ளார்.
பால்மா, பருப்பு மற்றும் உணவு உற்பத்திக்காக இந்த கடன் கோரப்படுவதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலங்கை இந்தியாவிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக பெற்றுள்ளதுடன்,
சீனாவிடமும் 2.5 பில்லியன் டொலரை கடனாக கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது








