உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இது நல்ல தருணம் எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன்
Posted in இலங்கை செய்திகள்

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இது நல்ல தருணம்
எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன்

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இது நல்ல தருணம்
எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன்

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான் வேளை. நல்ல தருணம். பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள் என

இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிமிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்தார்.

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை, இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிம் சந்தித்தார்.

மனோ கணேசனின் இல்லத்தில் நிகழ்ந்த இச்சந்திப்பில் தமுகூ நுவரெலிய மாவட்ட எம்பி எம். உதயகுமாரும் கலந்துக்கொண்டார்.

இதன்போது எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர்களிடம் கூறியதாவது,

நான் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவரது காலநிலை ஆலோசகராக இங்கே வந்துளேன். இந்த சந்திப்பில், மனோ கணேசன் எனக்கு சமீபத்தில் ஜனாதிபதி நடத்திய சர்வ கட்சி மாநாட்டை பற்றி எடுத்து கூறினார்.

அது நல்லது. இந்நாட்டில் இனப்பிரச்சினை தீர இது நல்ல வேளை. இந்நாட்டில் சிங்கள, வடகிழக்கு தமிழர், முஸ்லிம்களுடன், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சமமாக இணைந்து வாழ விரும்புவதை அவர் எனக்கு கூறினார்.

மேலும், பெருந்தோட்டங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களை பற்றியும் கூறினார். உணவின்மை, வறுமை காரணமாக துன்புறும் அவர்கள் மீது சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.


நண்பர் மனோ கணேசன், தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளையும் இங்கு பேசுகிறார்.

அது மிகவும் சிறந்தது. அவரது பிறந்த நாளுக்கு எனது வாழ்த்துக்கள்.

மனோ எம்பி மேலும் கூறியதாவது,

வரலாற்றில் எல்லோரும் தவறிழைத்துள்ளோம். கடைசி சமாதான முயற்சி தோற்றது.

இதற்கு சில தரப்புகளோ, அனைத்து தரப்புகளுமோ காரணம். அதுபற்றி ஆராய்ச்சி செய்ய இது வேளையல்ல. அது எனது வேலையுமல்ல.

இப்போது நாம் வரலாற்றில் இருந்து பாடம் படித்துள்ளோம். ஆகவே முன்னோக்கி நகர எமக்கு உதவுங்கள்.

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இது நல்ல தருணம்
எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன்

இங்கே நண்பர் எரிக் சொல்ஹெயிம் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன். எரிக் சொல்ஹெயிம் இலங்கையில் மிகவும் அறியப்பட்ட ஒரு வெளிநாட்டுக்காரர்.

அவரது தொடர்புகளையும், அனுபவத்தையும் பயன்படுத்த இதுதான் வேளை. பிரிபடாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள்.

உங்கள் நண்பர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதை எடுத்து கூறுங்கள். இதை நீங்கள் செய்து இந்நாட்டின் இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் என் பிறந்த நாளை கொண்டாடுவேன்.

இலங்கையின் சமூக பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சி போக்கை நீங்கள் கவனிக்க வேண்டும்.
கடந்த காலங்களை விட இன்று இந்திய வம்சாவளி மலையக மக்கள் ஒரு இனமாக வளர்ச்சி அடைந்துள்ளார்கள்.

அவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர் மட்டுமே, அவர்களது பிரச்சினை பெருந்தோட்ட பிரச்சினைகள் மட்டுமே,
என்ற காலம் மாறி விட்டது. இன்றைய இனப்பிரச்சினை தீர்வில் அவர்களுக்கும் சம பங்கு வேண்டும்.


வடகிழக்கு சகோதர உடன்பிறப்பு, முஸ்லிம் உடன்பிறப்பு மற்றும் சிங்கள உடன்பிறப்புகளுடன் நாம் சமமாக வாழ விரும்புகிறோம்.


இனிவரும் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் இந்த புது வளர்ச்சி போக்கை கவனத்தில் கொள்ளுங்கள்.

No posts found.
தமிழக பொலிஸ் அடாவடி செருப்பால அடிக்கணும் இவரை
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

களுத்துறை, கட்டுகுருந்த சந்திக்கு அருகில் பொலிஸார் போன்று நடித்து பணத்தை கொள்ளையிட்ட இருவரைக் கைது செய்வதற்காக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறிக்கொண்டு, வீதிக்கு அருகில் பஸ்ஸிற்காக காத்திருந்த நபரை

சோதனையிட்டு, அவரிடம் இருந்த பணத்தை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அதிகாரிகள் போல் நடித்து கொள்ளை

குறித்த நபர் கால் நடையாக கறுவா மற்றும் மிளகு விற்பனை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (16) கட்டுகுருந்த சந்தியில் பஸ்ஸிற்காக காத்திருந்த போதே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனடிப்படையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை களுத்துறை
தெற்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

No posts found.
கொள்ளுப்பிட்டி விபத்தை ஏற்படுத்திய சாரதி பிணையில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

கொள்ளுப்பிட்டி விபத்தை ஏற்படுத்திய சாரதி பிணையில் விடுதலை

கொள்ளுப்பிட்டி விபத்தை ஏற்படுத்திய சாரதி பிணையில் விடுதலை

இலங்கை கொள்ளுப்பிட்டியில் ஏற்பட்ட விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய செலவந்த சாரதி கைது செய்ய பட்டுள்ளார் .

இவ்வாறு கைது செய்யப்பட்ட சாரதி பிணையில் விடுதலை செய்ய பட்டுள்ளார் .

பலத்த குற்றத்தில் ஈடுபட்டு நாட்டை விட்டு ஓடியவர் சில நாடுகளில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை ஏமாற்றத்த்தை ஏற்படுத்தியுள்ளது .

No posts found.
தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி
Posted in இலங்கை செய்திகள்

தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி

தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி

முல்லேரியா அம்பத்தல பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தண்ணீர் காய்ச்சுவதற்காக ஹீட்டரை ஒன் செய்துவிட்டு தாய் வீட்டை விட்டு வெளியே சென்ற போது ஹீட்டரில் இருந்து தீ பரவியதாக பொலிஸார் கூறுகின்றனர்.

தீ விபத்தில் மூன்று மாத குழந்தை பலி

தீ விபத்து ஏற்பட்ட போது உயிரிழந்த குழந்தையின் தாயும் மூத்த சகோதரியும் வீட்டில் இருந்து வெளியில் இருந்ததாகவும், வீட்டில் இருந்து புகை வருவதைக்

கண்டு வந்த பார்த்த போது, குழந்தை படுக்கையில் எரிந்துக் கொண்டிருப்பதைக் கண்டு குழந்தையைக் மீட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும், தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் உள்ள மின்சாரம் அணைக்கப்பட்ட நிலையில், அருகில் உள்ள வீட்டில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்சாரம் மூலம் தண்ணீரை சூடாக்கும்போது தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
இலங்கையில் 1500 கோடி மோசடி புரிந்த சீன தம்பதிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் வேட்டை 75 பேர் கைது

பொலிஸ் வேட்டை 75 பேர் கைது

இலங்கை மேல்மாகாணத்தில் பொலிஸார் நடத்திய திடீர் தேடுதல் வேட்டையின் பொழுது 75 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

பாடசாலை மாணவர்களுக்கு இடையில் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட்ட ,75 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர் .

122 மாணவர்களுக்கு இடையில் நடத்த பட்ட தேடுதலின் பொழுதே இந்த ,கைதுகள் இடம்பெற்றுள்ளன என்கிறது காவல்துறை .

No posts found.
சுற்றுலா பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட எரிபொருள்
Posted in இலங்கை செய்திகள்

11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

இந்த மாதத்தில் கடந்த 11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

ரஷ்யா, இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களே இவ்வாறு இம்மாதம் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

டிசம்பர் மாதத்தில் 25 ஆயிரத்து 24 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

ஆயிரத்திற்கு மேற்பட்டோர் ரஷ்யா, இந்தியா, பிரிட்டன், அவுஸ்திரேலியா, ஜேர்மன், அமெரிக்கா ஆகிய நாடுகளை சேர்ந்தோர் இந்த மாதத்தில் வருகை தந்துள்ளனர்.

11 நாட்களில் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்களுக்கு அமைவாக ,இந்த வருடத்தில் 6 இட்சத்து 53 ஆயிரத்து 11 சுற்றுலா பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர்.

இந்தியா, பிரிட்டன், ரஷ்யா, ஜேர்மன் பிரான்ஸ், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளனர்.

இதேவேளை ஆகக்கூடுதலான சுற்றுலா பயணிகள் இந்த வருடம் மார்ச் மாதத்தில் இலங்கை வந்துள்ளனர்.

No posts found.
தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான சரியான அணுகுமுறை என்ன
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான சரியான அணுகுமுறை என்ன

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான சரியான அணுகுமுறை என்ன

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்குஅரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக அமுல்படுத்துவதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று தெரிவித்துள்ள, ஈ.பி.டி.பி. செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ்

தேவானந்தா, உருவாகியுள்ள இந்த சூழலை அனைத்து தரப்புக்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில்

நேற்றுமுன்தினம் (13.12.2022) இடம்பெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் குறித்த விடயம் மீண்டுமொரு முறை வலியுறுத்தப்பட்டது.

மேலும், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை தமிழ் தரப்புக்கள் தவறவிட்டிருப்பதாகவும், சந்தர்ப்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்குமாயின் எமது மக்கள் எதிர்கொண்ட

பேரழிவுகளை தவிர்த்திருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த 45 வருடங்களாக தொடர்ச்சியாக தமிழ் மக்களின்

அரசியல் செயற்பாடுகளுடன் சம்மந்தப்பட்டவன் என்ற வகையில், குறித்த விடயங்களை பிரஸ்தாபிப்பதற்கான உரிமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன், புதிய அரசியலமைப்பு உருவாக்கம், அன்றாடப்

பிரச்சினைகள் மற்றும் இன ரீதியான பாகுபாடுகள் தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்கான சரியான அணுகுமுறை என்ன

இந்நிலையில், உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

“சம்மந்தன் அவர்கள் தெரிவித்த கருத்தினை 1987, இலங்கை – இந்திய ஒப்பந்தம் வரையில் நானும் ஏற்றுக்கொள்கின்றேன்.

அதற்கு பின்னர் உருவாகிய அரசாங்கங்களின் செயற்பாடுகளில் குணாம்ச ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டிருந்தன.

அதன் காரணமாகவே, தேசிய நீரோட்டத்தில் இணைந்து நாடாளுமன்ற ஜனநாயகத்தினை பயன்படுத்தி தேசிய நல்லிணக்கத்தின் மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கையுடன் ஈ.பி.டி.பி. செயற்பட்டு வருகின்றது.

அன்றிலிருந்து தொடர்ச்சியாக, 13 ஆவது திருத்தச் சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதே, சரியான வழிமுறை என்பதையும் வலியுறுத்தி வருகின்றோம்.

தற்போதைய சூழலில், புதிய அரசியலமைப்பு என்பது நடைமுறைச் சாத்தியமற்றது.

ஆனால், 13 ஆவது திருத்தச் சட்டத்தினை அமுல்ப்படுத்துவதற்கு ஏற்ற மனோநிலையிலேயே பெரும்பாலானவர்கள் இருப்பதை உணரக்கூடியதாக இருக்கின்றது. அதேபோன்று சக நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் போன்றவர்களும் இப்போது இதே நிலைபாட்டினையே தெரிவித்திருக்கின்றனர்.

எனவே, உருவாகியுள்ள சூழலை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.” என்று தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான இச்சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பிரதமர் தினேஸ் குணர்வத்தன, சபாநாயகர் மஹிந்த யாப்பா

அபேவர்த்தன, எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட முக்கிய தென்னிலங்கை தலைவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன், தமிழ் மக்கள்

தரப்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்மந்தன், சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், மனோ கணேசன், ரமேஸ்வரன், ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் கு.
திலீபன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

No posts found.
போர்குற்றத்தில் தப்பிக்க தமிழர்களுக்கு தீர்வு சிக்கிய இலங்கை | Sri Lanka is escape from war crimes வீடியோ
Posted in உளவு செய்திகள்

போர்குற்றத்தில் தப்பிக்க தமிழர்களுக்கு தீர்வு சிக்கிய இலங்கை | Sri Lanka is escape from war crimes வீடியோ

போர்குற்றத்தில் தப்பிக்க தமிழர்களுக்கு தீர்வு சிக்கிய இலங்கை | Sri Lanka is escape from war crimes வீடியோ

இலங்கை தமிழர்களுக்கு ரணில் அரசு தீர்வு வழங்க துடிப்பது ஏன் ?

இதற்குள் நடக்கும் சதி நடவடிக்கை என்ன ..இந்த காணொளியை பாருங்க

https://www.youtube.com/watch?v=E8EwC11nCeU
No posts found.
4600 ரசியா இராணுவம் சரண் அடையும் நிலையில்
Posted in உலக செய்திகள்

4600 ரசியா இராணுவம் சரண் அடையும் நிலையில்

4600 ரசியா இராணுவம் சரண் அடையும் நிலையில்

உக்கிரன் இராணுவத்தினரிடம் சரண் அடையும் நிலையில் ,4600 ரசியா முக்கிய படையணிகளை சேர்ந்த இராணுவத்தினர் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

மேலும் அமெரிக்கா ,லண்டன் மீது அணுகுண்டு தாக்குதலை நடத்த ரசியா தயார் நிலையில் உள்ளது என்கின்ற செய்தி ,வெளியாகி மிக பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

காணொளி பார்க்க

https://www.youtube.com/watch?v=7P007XNOhks
அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஷாருக்கான்
Posted in உலக செய்திகள்

அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஷாருக்கான்

அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது ஷாருக்கான்

சமூக வலைத்தளங்களில் என் தொடர்பாக பரப்ப படும் ,விமர்சனங்கள் ,கருத்துக்கள் என்னை ஒன்றும் செய்யாது என நடிகர் சாருக்கான் தெரிவித்துள்ளார் .

அவை தொடர்பாக நான் ஏதும் கவனத்தில் எடுப்பதில்லை எனவும் ,அதனால் எனது வாழ்வு மகிழ்வாகவும் அமைதியாக கழிவதாக ,நடிகர் ஷாருக்கான் தெரிவித்து சர்ச்சைகளிற்கு முற்று புள்ளி வைத்துள்ளார் .

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்
Posted in உலக செய்திகள்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயிற்ச்சியாளர் பணி நீக்கம்

தமிழகத்தில் அரச விளையாட்டு விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவிகளுக்கு ,பாலியல் தொல்லை கொடுத்து வந்த பயிற்சியாளர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளார் .

மாணவிகளினால் வழங்க பட்ட புகாரினை அடுத்து ,இந்த அதிரடி நடவடிக்கை கல்வி அமைச்சினால் மேற்கொள்ள பட்டுள்ளது .

பயிற்சியாளர் மீது நடவடிக்கை மேற்கொள்ளாத மாவட்ட விளையாடடு அதிகாரி மீதும், நடவடிக்கை எடுக்க பட்டு இடம் மாற்றம் செய்ய பட்டுளளார் .

மாணவர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய ,ஆசிரியர்கள் இவ்விதம் செயல்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பாரதிராஜாவுக்கு வாழ் நாள் சாதனையாளர் பட்டம்
Posted in உலக செய்திகள்

பாரதிராஜாவுக்கு வாழ் நாள் சாதனையாளர் பட்டம்

பாரதிராஜாவுக்கு வாழ் நாள் சாதனையாளர் பட்டம்

தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்த இயக்குனர் ,பாரதிராஜாவுக்கு ,வாழ்நாள் சாதனையாளர் பட்டம் வழங்க உள்ளதாக மேலும் தமிழக அரசு அறிவித்துள்ளது .

தமிழ் திரையுலகில் பேசப் படும் ,போற்றப் படும் ,முக்கிய இயக்குனராக பாரதிராஜா விளங்கி வருகிறார் .

இவரது இடத்தை எவராலும் நிரப்ப முடியாது என்கிறது தமிழ் திரையுலகம் .


இவரினால் இயக்க பட்ட பல திரை படங்கள் வெற்றிகளை அள்ளி குவித்ததுடன் ,மக்களினால் பேச படும் நபராக பாரதிராஜா மாற்றம் பெற்றுள்ளார் .

அவ்வாறான நபருக்கு இந்த வாழ் நாள் சாதனையாளர் விருது வழங்க பட்டுள்ளது .

No posts found.
தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணில் அதிகாரிகளுக்கு பிறப்பித்த அவசர உத்தரவு

ஜனாதிபதி ரணில் அதிகாரிகளுக்கு பிறப்பித்த அவசர உத்தரவு

எல்ல சுற்றுலா வலயத்தை பாரிய திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு துரித நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.

சுற்றுலா அமைச்சு, நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியன இணைந்து 4 மாதங்களுக்குள் அதற்கான திட்டத்தை தயாரித்து தன்னிடம் ஒப்படைக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன் இன்று (16) முற்பகல் நடந்த கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

எல்ல சுற்றுலா வலயத்தை முறையாகவும், திட்டமிட்ட வகையிலும் மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ரம்மியமான இயற்கைக்கு பங்கம் ஏற்படாத வகையில் நிர்மாணப் பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

முதற்கட்டமாக எல்ல சுற்றுலா வலயம் முறையான திட்டத்துடன் அபிவிருத்தி செய்து, அதன் பின்னர் ஊவா மாகாணம் முழுவதையும் சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த இடமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் அதிகாரிகளுக்கு பிறப்பித்த அவசர உத்தரவு

இதன்போது, எல்ல பிரதேசத்திற்கு வருகை தந்திருந்த உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பணிகளின் சுற்றுலா அனுபவங்களைக் கேட்டறிந்த ஜனாதிபதி, சுற்றுலாப் பணிகளுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.

எல்ல வர்த்தகர்கள் சங்கத்துடன் நடந்த கலந்துரையாடலில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

எல்ல என்பது இப்பகுதி மக்களால் உருவாக்கப்பட்ட ஒரு சுற்றுலாப் பிரதேசம். அது இப்போது இலங்கையின் பொருளாதாரத்திற்குப் பெருமளவில் பங்களிக்கிறது.

புதிய, பாரிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், இந்த சுற்றுலாப் பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கிறோம். இங்கு எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு குறுகிய காலத் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று, மாலைத்தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒரு நாளைக்கு சுமார் 500 டொலர்களை செலவிடுகிறார்கள்.

ஆனால் எல்ல பிரதேசத்திற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஒரு நாளைக்கு இருபது டொலர்களையே செலவிடுகின்றனர். இந்த நிலையை நாம் மாற்ற வேண்டும்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த பயிற்சி பெற்ற பணியாளர்கள் தேவை. அனுபவம் வாய்ந்த சுற்றுலாத் தொழிலாளர்கள் கடந்த கொரோனா தொற்றினால் ஏற்பட்ட நெருக்கடியின் போது நாட்டை விட்டு வெளியேறினர். அவர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள்.

500 டொலர்களை செலவழிக்கும் சுற்றுலாப் பயணிகள், நல்ல சேவையை எதிர்பார்க்கிறார்கள்.

அந்த சேவையை வழங்க பயிற்சி பெற்ற ஊழியர்கள் தேவை. இந்த விரிவான அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் சிறந்த சுற்றுலா சேவையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் ஊவா மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் குறைந்தது 07 நாட்களுக்கு இங்கு தங்கியிருக்க வேண்டும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் புதிய திட்டங்களை உருவாக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளை அதன் பின்னர் எல்லவுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

இந்த புதிய அபிவிருத்தித் திட்டத்தில் மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்து மத்தளவிலிருந்து நேரடியாக எல்லவுக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரும் வேலைத்திட்டம் உள்ளடக்கப்பட வேண்டும்.

இந்த திட்டங்கள் குறுகிய கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் செலுத்துகின்றன.

மேலும், சுற்றுலாத் துறையை அபிவிருத்தி செய்வதுடன், இந்த நாட்டில் வங்கித் துறையும் வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க வேண்டும். வங்கிக் கட்டமைப்பு நிலைகுலைந்தால், சுற்றுலாப் பயணிகள் நமது நாட்டிற்கு வர மாட்டார்கள்.

எனவே, இரண்டு துறைகளையும் பாதுகாக்க வேண்டும். சுற்றுலாத் துறையையும் வங்கித் துறையையும் பாதுகாக்கும் வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளது.

நாம் அதனை நிறைவேற்றுவோம். அதற்காக ஒத்துழைக்குமாறு உங்கள் அனைவரிடமும் கேட்டுக்கொள்கிறேன்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எல்ல வர்த்தகர்களால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுத்தமைக்காக ஜனாதிபதிக்கு,
வர்த்தகர்கள் தமது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

No posts found.
திலினி பிரியமாலி பிணையில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

திலினி பிரியமாலி பிணையில் விடுதலை

திலினி பிரியமாலி பிணையில் விடுதலை

இலங்கையில் பல மில்லியன் மோசடியில் ஈடுபட்டார் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்க பட்ட ,திலினி பிரியமாலியை கோட்டை நீதவான் நீதிமன்று பிணையில் விடுதலை செய்துள்ளது .

இலங்கையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்திய இவரது மோசடி குற்ற சட்டு வழக்கில் ,இவர் ஆயூள் தண்டனை பெறுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,இவ்விதம் பிணையில் விடுதலையாகி வியப்பை ஏற்படுத்தியுள்ளார் .

No posts found.
இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை
Posted in இலங்கை செய்திகள்

வடகிழக்கில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பு

வடகிழக்கில் இறந்த கால்நடைகளுக்கு இழப்பு

வடகிழக்கு பகுதியில் அதிக குளிரினால் இறந்த கால்நடைகளுக்கு ,இழப்பீடு வழங்க அரசு இணக்கம் தெரிவித்துள்ளது .

இதன் அடிப்படையில் உரியவர்கள் , உரியமுறை ஆதாரங்களை காண்பித்து இந்த இழப்பீட்டு தொகையை பெற்று கொள்ள முடியும் என்கிறது அரசு .

தமிழர் பகுதிகளை இலக்கு வைத்து நடத்த பட்ட இந்த கால்நடைகள் இறப்பில் சந்தேகம் எழுந்துள்ளது .

No posts found.
அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

அதிக விலைக்கு பொருட்களை விற்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை

பண்டிகைக் காலங்களில் அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் மற்றும் பொருட்களை பதுக்கி வைக்கும் வியாபாரிகள்

குறித்தும் கண்டறிய விரிவான தேடுதல் நடவடிக்கையை ஆரம்பிக்க உள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அத்துடன் நுகர்வோர் சேவை அதிகாரிகள், பிரதேச மட்டதில் வியாபாரிகளுக்கு அறிவித்தல் வழங்கி, பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாகவும், பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது

தொடர்பாகவும் விசாரனைகளை ஆரம்பித்துள்ளதாக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் தலைவர் ஷான்த கிரிஎல்ல குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த வாரம் முதல் இந்த நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி,
சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No posts found.
முன்பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் இலவச உணவு
Posted in இலங்கை செய்திகள்

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்த அமைச்சினால் முடிந்திருப்பதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் அமைச்சர் நலீன் பெர்னாந்து தெரிவித்தார்.

அண்மையில் (05) நடைபெற்ற வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் குறிப்பிடுகையில், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் திறந்த சந்தையின் விலைகளுடன் ஒப்பிடுகையில், நவம்பர்

மாதத்தில் ​​அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடிந்துள்ளது. இதன்படி, திறந்த சந்தையில் ஜூலை மாதம் ஒரு கிலோகிராம் பருப்பு 595 ரூபாவாகவும், டிசம்பரில் லங்கா சதொச

நிறுவனத்தில் ஒரு கிலோகிராம் பருப்பு 389 ரூபாவாகக் குறைந்திருப்பதுடன், திறந்த சந்தையில் 410 ரூபாவாக இருந்த 1 கிலோகிராம் கோதுமை மா டிசம்பர் 1ஆம் திகதியாகும் போது லங்கா சதொச நிறுவனத்தின் விலை 265 ரூபாவாகக் குறைந்துள்ளதாகவும் கூறினார்.

அத்துடன், 280 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலையை 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலையை

225 ரூபாவில் இருந்து 198 ரூபாவாகவும் குறைக்க சதொச நிறுவனத்தால் முடிந்ததாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் பாவனையாளர்களின் பாதுகாப்புக்காக சந்தைகளைக் கண்காணிக்குமாறும், சோதனைகளை நடத்துமாறும்

பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் அளக்கும் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களத்துக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தர்.

அதற்கு மேலதிகமாக, நியாயமான சந்தை முறைமையை நிறுவும் நோக்கில் 2003 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க பாவனையாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட விருப்பதாகவும் தெரிவித்தார்.

பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் உள்ளிட்ட முழுநேர உறுப்பினர்களின் தகுதிகளை இச்சட்டத்திருத்தத்தில் உள்ளடக்க எதிர்பார்த்திருப்பதாகவும், உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு

எதிரான பாவனையாளர்களின் முறைப்பாடுளை விசாரிக்கும் முறையை வினைத்திறனாக்கும் பிரேரணைகள் இதில் உள்ளடக்கப்படவிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மற்றும் வலுவான முறையில். புதிய சரத்துக்கள் உள்ளிட்ட திருத்தச்சட்டமூலத்தை அடுத்த அமைச்சுசார் ஆலோசனைக் கூட்டத்தில் முன்வைக்கவிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நாட்டு இளைஞர்களை கூட்டுறவுத் துறைக்கு ஈர்க்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது குறித்தும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

இளம் தொழில்முயற்சியாளர்களைக் கண்டறிந்து அவர்களை உற்பத்தி செயல்முறைக்கு வழிநடத்தும் வகையில் நிவாரணத் திட்டங்களை கூட்டுறவுத் துறை மூலம் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் குழுவின் தலைவர்

தெரிவித்தார்.கூட்டுறவுச் சங்கங்களின் வலுவூட்டல் மூலம் சில்லறை மற்றும் மொத்த விற்பனை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தவும், அறிமுகப்படுத்தவும் எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவித்தார்.

இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனத்தைத் தற்பொழுது இலாபமீட்டும் நிறுவனமாக நடத்திச்செல்ல முடிந்திருப்பதாகவும், நாட்டுக்குத் தேவையான அமோனியம் நைட்ரஜனை இறக்குமதிசெய்து விநியோகிக்கும்

உரிமை எஸ்.ரி.சி நிறுவனத்திடம் காணப்படுகின்றபோதும், இந்தியாவில் அமோனியம் நைட்ரஜன் ஏற்றுமதிக்குத் தடைவிதிக்கப்பட்டமையால் நாட்டில் வெடிபொருட்களை நம்பியுள்ள தொழில்துறைகள் பாதிக்கப்பட்டன.

இருந்தபோதும் இந்நிறுவனத்தின் ஊடாக அமோனியம் நைட்ரஜன் இறக்குமதி செய்யப்பட்டு மீண்டும் விநியோகிக்கப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும், வருமானத்தை அதிகரிக்கவும், வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டம் இம்மாதம் தொடங்கப்பட உள்ளதாகவும் இங்கு வலியுறுத்தப்பட்டது.

தற்போது பிரதேச செயலக மட்டத்தில் உரிய பயனாளிகளை அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும், உரிய அடையாளப்படுத்தலின்

பின்னர் இலங்கை அரச வர்த்தக (பொது) கூட்டத்தாபனம் பெண் தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்துவதற்கு தேவையான உபகரணங்களை வழங்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மஹாபொல கல்வி மற்றும் வர்த்தகக் கண்காட்சிறை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பிலும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டதுடன், 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்தக் கண்காட்சியை மீண்டும் ஆரம்பிக்கவிருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இராஜாங்க அமைச்சர்களான கௌரவ வியாழேந்திரன்,
கௌரவ காதர் மஸ்தான், கௌரவ.

ரோஹன திஸாநாயக்கவும் பாராளுமன்ற
உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர். இது தவிரவும் வர்த்தக, வாணிப மற்றும்உணவுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் பலரும் இக்கூட்டத்தில் இணைந்துகொண்டிருந்தனர்.

No posts found.
இந்திய கடற்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய கடற்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இந்திய கடற்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோid (டிசம்பர் 14) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் சந்தித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி மற்றும் தூதுக்குழுவினரை இராஜாங்க அமைச்சர் வரவேற்றதுடன், இரு

இந்திய கடற்படை தளபதி இலங்கை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

நாடுகளுக்கும் இடையில் தற்போதுள்ள இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

மேலும், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த பல விடயங்கள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் இராஜாங்க அமைச்சர் மற்றும் இந்திய கடற்படைத் தளபதி ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உதவி இராணுவ இணைப்பு அதிகாரி கேர்ணல் துசித பண்டார மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட


உதவிச் செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானாராச்சி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

No posts found.
யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா
Posted in இலங்கை செய்திகள்

யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா

யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் (15) காலை இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 181 கிலோ கிராம்

எடையுள்ள கேரள கஞ்சா (ஈரமான எடை) கொண்ட டிங்கி படகுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக நாட்டைச் சூழவுள்ள கடல் மற்றும் கடற்கரையை

உள்ளடக்கி, கடற்படையினர் வழக்கமாக ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர்.

யாழ் குருநகர் கடற்பரப்பில் 181 கிலோ கேரள கஞ்சா

இதன்படி, யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வடக்கு கடற்படை கடற்படை பிரிவுமேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான படகு பரிசோதிக்கப்பட்டது. அங்கு, 04 பைகளில் 900

கிராம் பொதி செய்யப்பட்ட 181.900 கிலோ கேரள கஞ்சாவுடன் (ஈரமான எடை) ஒரு சந்தேகநபர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். டிங்கி படகும் கைப்பற்றப்பட்டது..

கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் பெறுமதி 60 மில்லியன் ரூபாவாவுக்கும் அதிகம் என்றும் நம்பப்படுகின்றது.

மேலும், கேரள கஞ்சாவுடன் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 29
வயதுடைய சந்தேக நபர், யாழ்ப்பாண பகுதியைச் சேர்ந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

No posts found.
உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேன் அரசினால் வழங்க பட்ட அன்பளிப்பு பொதி வெடித்து சிதறியதில் ,போலந்து நாட்டு பொலிஸ் தளபதி Jarosław Szymczyk படுகாயமடைந்துள்ளார் .

https://www.youtube.com/watch?v=aZmCvGOxhlo


இவர் உக்கிரேனினால் வழங்க பட்ட பொதியினை தனது அலுவலகத்தில் பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி வெடித்து சிதறியது .

இந்த பொதிக்குள் ரொக்கட் லோஞ்சர் செலுத்தி ஒன்று இருந்துள்ளதாக தெரிவிக்க படுகிது .

எனினும் இந்த பொதி குண்டு வெடிப்பு தொடர்பில் இதுவரை எவ்வித கருத்தினையும் உக்கிரேன் வெளியிடவில்லை .

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போலந்து நாட்டு காவல்துறை தளபதிக்கே ,உக்கிரேன் காவல்துறை தலைமையகத்தால் இந்த ஆயுத பொதி வழங்க பட்டு இருந்தது .

.போலந்து நாட்டின் மீது ரசியா ஏவுகணை வீழ்ந்து வெடித்தாக உக்கிரேன் அறிவித்திருந்தது .ஆனால் அது உக்கிரேன் வீசிய ஏவுகணை என்பதை பின்னர் அமெரிக்கா அறிவித்திருந்தது .

இவ்வாறான சர்ச்சைகள் பின்னர் ,உக்கிரேன் போலந்து நாட்டின் முக்கிய தளபதியை இலக்கு வைத்து, பொதி குண்டு தாக்குதல் நடத்தி இருப்பதானது .உக்கிரேன் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது .


இது உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்த கூடும் என எதிர் பார்க்கலாம் .