பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு எழுத தலிபான்கள் தடை
பல்கலைக்கழகங்களில் பெண்கள் நுழைவுத்,
தேர்வு எழுதக்கூடாது என்று தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்
ஆப்கானிஸ்தான் தனியார் பல்கலைக்கழகங்களில்,
பெண்கள் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில்,
பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது
சனிக்கிழமையன்று தலிபான்கள் ,
பெண்கள் கல்வி மீதான தடையை இரட்டிப்பாக்கி,
தனியார் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பிய செய்தியில்,
,இந்த தடை விடயம் அறிவிக்க பட்டுள்ளது .
தலிபான்கள் வசம் நாடு வீழ்ந்த பின்னர் ,
பெண்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ,
தாலிபஞ்கள் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் உள்ளனர் .
தலிபான்கள் இந்த வெறி செயலுக்கு ,
ஐநா உள்ளிட்ட உலக நாடுகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர் .
அமெரிக்காவில் வீடற்றவரை கடத்தி அடித்த காவல்துறை
அமெரிக்காவில் வீடற்றவரை கடத்தி அடித்த காவல்துறை
அமெரிக்கா புளோரிடா காவல்துறை அதிகாரிகள் ,
கடந்த மாதம் வீடற்ற ஒருவரை,
கைவிலங்கிட்டு தனிமைப் படுத்தப் பட்ட
பகுதிக்கு ஓட்டிச் சென்றனர்.
அங்கு அவர் மயக்கமடையும் வரை துன்புறுத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .
மேற்படி விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ,
இரண்டு காவல்துறை ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டனர் .
தொடர்ந்து நீதிமன்ற விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
தீப்பிடித்த கார் சாரதியை காப்பாற்றிய பொலிஸ்
தீப்பிடித்த கார் சாரதியை காப்பாற்றிய பொலிஸ்
அமெரிக்கா லாஸ் வேகாஸில் சாலை ஒன்றில் வெள்ளை நிற
கார் ஒன்று தீ பற்றி கொண்டது .
அப்பொழுது அதனை கண்ணுற்ற காவல்து ஊழியர் ஒருவர் ,
அந்த காருக்குள் இருந்து சாரதியை மீட்க முனைகின்றார் .
அந்த காவல்துறை சிப்பாய்க்கு பொது மகன் உதவி செய்து ,
சாரதியை காப்பாற்றும் காணொளியை ,
காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ளது .
இந்த உயிர் காக்கும் செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றுள்ளது .
இப்படியும் மக்கள் நலன் காக்கும் காவல்துறையினர் ,
இருக்கத்தான் செய்கின்றனர் .
அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
புதிய மின் கட்டண திருத்தத்திற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கினால், அன்றைய தினம் முதல் இலங்கை மின்சார சபை தொடர்ந்து மின்சாரத்தை வழங்கும் என மின் சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்று (29) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
“ஜனவரி முதலாம் திகதி முதல் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதற்கான திட்டத்தை நாம் சமர்ப்பித்திருந்தோம். பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. இன்றும் கூறுகின்றோம்.
இன்று அல்லது நாளை அனுமதி வழங்கப்பட்டால்,
மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்கும் திட்டத்தை செயற்படுத்த எமக்கு முடியும்.
போரை ஆரம்பித்த இஸ்ரேல்
போரை ஆரம்பித்த இஸ்ரேல்
உக்ரேனின் 5 மின்சார வயல்கள் தாக்கி அழிப்பு
உக்ரேனின் 5 மின்சார வயல்கள் தாக்கி அழிப்பு
உக்கிரேன் நாட்டின் மிக முக்கிய ஐந்து மின்சார தயாரிப்பு மையங்கள் தாக்கி
அழிக்க பட்டுள்ளன .
தெற்கு ,தென் மேற்கு ,மத்திய பகுதியில் அமைய பெற்ற ,
மின்சார மையங்கள் தாக்கி அழிக்க
பட்டுள்ளன .
55 ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டது ,
அதில் 47 சுட்டு வீழ்த்த பட்டதாக உக்கிரேன் அறிவித்துள்ள பொழுதும் ,
இவ்வகையான பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு
பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும், அது தொடர்பான விண்ணப்பங்களை applications.doenets.lk/exams
என்ற இணையத்தளத்திற்கு சென்று பெற்றுக்கொள்ளலாம் எனவும் கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு
பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் 3 ஆம் கூட்டத்தொடர் இன்று (27) நள்ளிரவுடன் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, எதிர்வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி பாராளுமன்றின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவிப்பை அச்சிடுவதற்காக
அரசாங்க அச்சகத்திற்கு ஜனாதிபதியின் செயலாளர் செய்தியை அனுப்பி வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்
அமெரிக்க பிரதிநிதி இலங்கைக்கு வருகிறார்
அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் இன்று முதல் பெப்ரவரி 3 ஆம் திகதி வரை நேபாளம், இந்தியா, இலங்கை மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
துணைச் செயலாளர் நூலண்ட், அமெரிக்க கூட்டுறவின் பரந்த நிகழ்ச்சி நிரலுக்கு அமைய நேபாளத்தின் புதிய அரசாங்கத்துடன் செயற்பாடுகளில் ஈடுபடுவார் என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள விக்டோரியா நூலண்ட், அமெரிக்க – இலங்கை நட்புறவின் 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும், மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை
மேம்படுத்தவும் இலங்கையின் முயற்சிகளுக்கு தொடர்ந்து அமெரிக்காவின் ஆதரவை உறுதி செய்வார் என தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்
75வது தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் மற்றும் அதன் ஒத்திகை காரணமாக காலி முகத்திடல் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று (28), நாளை (29) மற்றும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் சுதந்திர தினம் வரையான காலப்பகுதியில், அதிகாலை 5:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலி முகத்திடல் மத்திய வீதி – காலி முகத்திடல் சுற்றுவட்டத்திலிருந்து என். எஸ். ஏ. சுற்றுவட்டம் வரை மற்றும் சைத்திய வீதியின் கொள்ளுப்பிட்டி
சந்தியிலிருந்து காலி முகத்திடல் நோக்கிய வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி புகையிரத நிலைய வீதியின் போக்குவரத்து குறித்த காலப்பகுதியில் மட்டுப்படுத்தப்படும்.
இதன் காரணமாக குறித்த திகதிகளில் ஒத்திகை மற்றும்
சுதந்திர தின நிகழ்வுகளின் போது மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்
அம்பலாந்தோட்டை ருஹுனு ரிதிகம மூன்றாம் கட்டை பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்குள் இன்று (27) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் படுகொலை செய்யப்பட்ட நபரின் மைத்துனர் ஒருவர் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேக நபர் அம்பலாந்தோட்டை பெலிகலகொட பிரதேசத்தை சேர்ந்தவர்.
வீடொன்றில் தம்பதியினர் வெட்டி படுகொலை
குறித்த சந்தேகநபர் வீட்டுக்குள் புகுந்து கோடாரி மற்றும் கத்தியால் தாக்கி இந்த இரட்டை கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
61 வயதான வெங்கப்புலி ஆராச்சிகே சுனில் மற்றும் 56 வயதான ஹேவமானகே குசுமலதா என்ற திருமணமான தம்பதியே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சில காலமாக நிலவி வந்த தகராறு காரணமாக
இந்த கொலைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்
இஸ்ரேலில் துப்பாக்கி சூடு 7 பேர் பலி 10 பேர் காயம்
இஸ்ரேல் ஜெருசலம் பகுதியில் ஆயுத தாரி நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ன் பேர் பலியாகியுள்ளனர் .
பத்து பேர் வரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஆயுத தாரி சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
இஸ்ரேல் பலஸ்தீன மக்கள் மீது தொடராக நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
காசா பகுதியில் விமான குண்டு தாக்குதலை நடத்திய மறுநாள், இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.
அமெரிக்கா ஏவுகணைக்கு போட்டியா ரஸ்யா களம் இறக்கும் ஏவுகணை
அமெரிக்கா ஏவுகணைக்கு போட்டியா ரஸ்யா களம் இறக்கும் ஏவுகணை
ரஷ்ய Kh-31PD ஏவுகணை அமெரிக்க,
பேட்ரியாட் வான் பாதுகாப்பு அஏவுகணையை ,
சுட்டு வீழ்த்த முடியும் என் ரசியா ஆயுத தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது .
ரஷ்ய Kh-31PD வான்வழி ஏவப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை,
அமெரிக்க தேசபக்த வான் பாதுகாப்பு அமைப்புடன் ,
சண்டையிடும் போர்களில் வெற்றிபெற முடியும் என்று ,
ரஷ்யாவின் ஹீரோ போரிஸ் ஒப்னோசோவ் ,தெரிவித்தார்.
Kh-31PD ஏவுகணை உற்பத்தி ஆரம்பிக்க பட்டுள்ளது ,
விரைவில் இவை ரசியாவின் களமுனையில் ,பாவனைக்கு விடப்படும் என அவர் தெரிவித்தார் .
ரசியா 47 ஏவுகணைகள் சுட்டு வீழ்தல்
ரசியா 47 ஏவுகணைகள் சுட்டு வீழ்தல்
உக்கிரைன் கீவ் உள்ளதா பகுதிகளை நோக்கி ரசியா நடத்திய,
55 ஏவுகணை தாக்குதலில் ,தாம் 47 ஐ
சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கரை அறிவித்துள்ளது .
எனினும் ,ரசியாவின் ஏவுகணை தாக்குதலில் ,
உக்கிரனுக்கு பலத்த இழப்புக்கள் ஏற்ப்டடுள்ளன .
பல அடுக்குமாடி குடியிருப்புக்கள் ,முக்கிய இராணுவ வலயங்கள் ,
மின்சார வலயங்கள் என்பன சிதறி காணப்படுகின்றன .
ஆனலும் தாம் வெற்றி பெற்றுள்ளோம் என ,
உக்கிரைன் தொடர்ந்து அறிவித்து வருகிறது .
சுயாதீன தகவல்கள் உக்கிரனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்கிறது .
தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை
மைத்திரிபால சிறிசேனவிற்கு எச்சரிக்கை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று (27) கோட்டை நீதவான் திலின கமகே எச்சரித்துள்ளார்.
திறந்த நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்ட மைத்திரிபால சிறிசேன நீதிமன்றில் ஆஜராகாததால் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்படும் என்ற புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்த போதிலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் என்ற ரீதியிலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியிலும்
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த தாக்குதல்களை தடுக்க தவறியதை சவாலுக்கு உட்படுத்தி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள தனிப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
பின்னர் மார்ச் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணை நடத்த நீதவான் உத்தரவிட்டார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில்
ஒரு காலை இழந்தவர் மற்றும் வணக்கத்திற்குரிய சிறில் காமினி ஆகியோரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்
உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்
உலகின் முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்தை இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நாசி (மூக்கு) வழியாக செலுத்தக் கூடிய கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த மருந்துக்கு ‘இன்கோவேக்’ என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு இந்திய மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதியளித்ததை தொடர்ந்து, இந்திய குடியரசு தினமான நேற்று (26) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் இந்த தடுப்பு மருந்தை அறிமுகம் செய்தனர்.
இந்த மருந்து இந்திய நாணயத்தில் , அரசுக்கு ரூ.325 என்ற விலையிலும்,
தனியார் வைத்தியசாலைகளுக்கு ரூ.800 எனவும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விழா
தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்களை கெளரவிக்கும் விழா
கல்வி அமைச்சினால் நடத்தப்பட அழகிய கற்கைப்பிரிவு போட்டியில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற அட்டாளைசேனை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலம் (தேசிய பாடசாலை) மாணவர்களை கௌரவிக்கும் விழா அன்மையில் இடம்பெற்றது.
ஓய்வுநிலை ஆசிரிய ஆலோசகர் என்.சம்சுதீன் தலைமையில் அட்டாளைச்சேனை கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக அவரோன் சேரிட்டி நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்
சட்டத்தரணி நஷாட் சம்சுதீன் கலந்துகொண்டு மாணவர்களை கௌரவித்து சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.
இவ்விழாவுக்கு அட்டாளைசேனை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலம்
(தேசிய பாடசாலை) அதிபர் ஏ.சி.எம்.ஹரீஸ், பிரதி அதிபர், ஆசிரிய ஆலோசகர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
10 000 இராணுவம் உயிரிழப்பு
10 000 இராணுவம் உயிரிழப்பு
உக்கிரேன் கிழக்கு சொலிடர் பகுதியில் முன்னேறிய ரசியா இராணுவத்தினருக்கு ,
எதிராக போராடிய உக்கிரேன் இராணுவத்தினரின்,
பத்து ஆயிரம் பேர் அந்த களமுனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்கிரேனின் முத்த அதிகாரி ஒருவர் இந்த விடயத்தை வெளியிட்டு,
பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
முன்னேறிய ரசியா படைகளுக்கு எதிராக,
முப்பது ஆயிரம் உக்கிரேன் இராணுவம் குவிக்க பட்டு ,
தாக்குதல்கள் நடத்த பட்டன .
அந்த தாக்குதல்களில் இறந்தவர்கள் தவிர ,
கிட்ட தட்ட இருபதாயிரம் பேர் வரையிலே எஞ்சினர் என்கிறார் அந்த அதிகாரி .
ஆயுதங்கள் இல்லை தாருங்கள் என ,
ஜெலன்ஸி கோரிக்கை விடுத சம்பவம் ,இந்த இழப்புக்கள் பின்னிருந்து ,
எழுந்த குரல் என அவர் தெரிவித்துள்ளார் .
ஜெர்மன் முக்கிய நிறுவனங்களை முடக்கிய ரசியா கைக்கர்கள்
ஜெர்மன் முக்கிய நிறுவனங்களை முடக்கிய ரசியா கைக்கர்கள்
ஜெர்மன் நாடானது சிறுத்தை டாங்கிகளை ,
உக்கிரைனுக்கு வழங்க ஒப்புதல் அளித்த சம்பவத்திற்கு ,
பதிலடியாக ,ஜெர்மன் நாட்டின் முக்கிய நிறுவனங்களை ,
இலக்கு வைத்து சைபர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
ஜெர்மன் இராணுவ விமான நிலையங்கள் ,
ஆயுத தொழில் சாலை கணனிகள்,
என்பன உள்ளிட்டவற்றின் மீது ,
ரசியா சைபர் குழு ,இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளது .
மேற்படி தாக்குதலுக்கு ரசியாவின் புகழ் பெற்று விளங்கும் ,
சைபர் தாக்குதலை அமைப்பு உரிமை கோரியுள்ளது என்கிறது ஜெர்மன் .
முக்கிய தீவிரவாத தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
முக்கிய தீவிரவாத தலைவரை போட்டு தள்ளிய அமெரிக்கா
சோமாலியாவில் தீவிரவாத பணியில் ஈடுபட்டிருந்த ,
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய உதவியாளர்,
பிலால் அல்-சூடானி உள்ளிட்ட 10 பேரை அமெரிக்கா போட்டு தள்ளியது .
ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் முக்கிய உதவியாளரான,
பிலால் அல்-சூடானி,
ஐ எஸ் அமைப்பு வலையமைப்பு மேம்பெற ,
நிதி பங்களிப்பு செய்து ,
அந்த அமைப்பை வளர்த்து வந்தார் என,
குற்றம் சுமத்துகிறது .
அதனாலேயே அவரை கண்காணித்த வந்த அமெரிக்கா,
வெளியக புலனாய்வு பணியகம் ,
தக்க நேரம் பார்த்து தமது ஆடுகளத்தை ,
திறந்து வேட்டையை முடித்துள்ளது .





































