கடலுக்குள் வீழ்ந்த கிரேக்க இராணுவ விமானம்
கடலுக்குள் வீழ்ந்த கிரேக்க இராணுவ விமானம்
கிரேக்க நாட்டு இராணுவத்தின் ஜெட் போர் விமானம் ஒன்று ,
கடலுக்கு வீழ்ந்து மூழ்கியது .
இதன் பொழுது அந்த விமானத்தை செலுத்தி சென்ற,
இரண்டு விமானிகளும் காணாமல் போயுள்ளதாகவும் .
இவ்வாறு காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில்,
இரண்டு உலங்கு வானூர்திகள் மற்றும்
விமானங்கள் ஈடுபடுத்த பட்டுள்ளன .
இந்த விபத்துக்கான காரணம் தெரியவரவில்லை .
வெடித்த குண்டு சிதறிய இராணுவ பேரூந்து
வெடித்த குண்டு சிதறிய இராணுவ பேரூந்து
சிரியாவின் தலைநகர் டமக்காஸ் பகுதியில் ,
இராணுவத்தினரை ஏற்றியவாறு பயணித்த,
பேரூந்து மீது நடத்த பட்ட தாக்குதலில் ,
அதில் பயணித்த 15 இராணுவ சிப்பாய்கள் பலத்த காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர் .
இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை கோரவில்லை .
சிரியாவில் அரச ராணுவத்தினருக்கு துருக்கிய ஆதரவு குழுக்களும் இடையில் ,
மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
விமானம் ஏவுகணை வீழ்த்தல்
விமானம் ஏவுகணை வீழ்த்தல்
மாணவிகள் கொண்டாடிய சீமானின் சிறப்பான 15 நிமிட பேச்சு
மாணவிகள் கொண்டாடிய சீமானின் சிறப்பான 15 நிமிட பேச்சு
சீமான் பேச்சை கொட்டு பள்ளி மாணவிகள் கொண்டாடிய கொண்டாட்டம் .
அசத்தல் பேச்சு .
கொஞ்சம் பேர் இதனை கேளுங்க .
பரதேசி கல்லூரி மேடையில் சீமான் கலக்கல் பேச்சு
ஈரானில் பாரிய நில நடுக்கம் 816 பேர் காயம்
ஈரானில் பாரிய நில நடுக்கம் 816 பேர் காயம்
ஈரான் வடமேற்கு பகுதியில் இடம்பெற்ற சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர் .
மேலும் 816 பேர் காயமடைந்துள்ளனர் .மேலும் இதே பகுதியில் ஐம்பது வீதமான பகுதிகள் கடும் சேதத்திற்கு உள்ளாகியுள்ளது என ஈரான் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .
அமெரிக்கா ஏவுகணைகளை தயாரிக்கும் ஜெர்மன்
அமெரிக்கா ஏவுகணைகளை தயாரிக்கும் ஜெர்மன்
ஜெர்மன் நாடிநடத்து அமெரிக்காவின் பல்குழல் பீரங்கு ஏவுகணை செலுத்தியான HIMARS multiple launch rocket system த்தை தயாரிக்கிறது .
இந்த ஏவுகணைகள் பலநூறு தயாரிக்க பட்டு அவை விரைவில் உக்கிரேனுக்கு விநியோக செய்ய படும் என அமெரிக்கா ஆயுத தயாரிப்பு கூட்டணி நிறுவனம் தெரிவித்துள்ளது .
ரசியாவுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்துள்ள ஜெர்மன் செயல்பாடு ரசியாவை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது .
லண்டன் வந்தடைந்த உக்கிரேன் டாங்கி ஓட்டுனர்கள்
லண்டன் வந்தடைந்த உக்கிரேன் டாங்கி ஓட்டுனர்கள்
உக்கிரேன் இராணுவத்தின் டாங்கி பிரிவை சேர்ந்த குழு ஒன்று ர் பிரிட்டன் வந்தடைந்துள்ளது .
பிரிட்டன் விசேட இராணுவ விமானம் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்களுக்கு சலஞ்சர் 2 ரக டாங்கிகள் பயிற்சிகள் வழங்க படுகின்றன .
இரண்டு வாரம் பயிற்சிகளை பெற்று ,உக்கிரேன் சென்று அங்கிருந்து,ரசியாவுக்கு எதிரான தாக்குதலை நடத்துவார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்தல்
பலஸ்தீனம் காசா பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு கொண்டிருந்த
இஸ்ரேலிய உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
உளவு பார்த்து காசா பகுதிகள் மீது தாக்குதலை நடத்தி வந்த விமானங்களுக்கு துணையாக செயல் பட்ட உளவு விமானமே காமாஸ் போராளிகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ஸ்டாலினுக்கு தேர்தல் பயம்காட்டும் சீமானின் 11 நிமிட பேச்சு
நான் வந்த இதை செஞ்சு பாரு .
நீ இதை செஞ்சா தம்பி அவுட்டு .நான் வந்த இதை செஞ்சு பாரு
கிழித்துதொங்க விட்ட சீமான் .
பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை
பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க நடவடிக்கை
இலங்கையில் கல்வி நிலையங்களில் ஏற்பட்டுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நீக்கிட ,இருபத்தி ஆறாயிரம் ஆசிரியர்களை நியமிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .
இதற்கு அமைய பட்டதாரிகளாக விளங்கும் நபர்களில் இருபத்தி ஆறாயிரம் பேரை ஆசிரியர்களாக நியமிக்க, நடவடிக்கை எடுக்க பட்டுள்ளது என்கிறார் கல்வி அமைச்சர் சுசில் .
போதை கடத்தல் நடத்தும் பிரான்ஸ் தமிழன் சிக்கிய பெண்
போதை கடத்தல் நடத்தும் பிரான்ஸ் தமிழன் சிக்கிய பெண்
பிரான்சில் உள்ள ரூபன் எந்கன்ற தமிழருடன் இணைந்து போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டு வந்த சிங்களபெண் டிஸ்கோ கைது செய்ய பட்டுள்ளார்
கைதானவரிடம் தொடந்து விசாரணைகள் இடம் பெற்று வருவதுடன் ,பிரான்சில் உள்ள ரூபன் என்ற போதைவஸ்து தமிழரை கைது செய்யும் நடவடிக்கைகள் முடுக்கி விட பட்டுள்ளன .
சுதந்திரத்தினத்தை புறக்கணிப்போம் கூட்டமைப்பு
சுதந்திரத்தினத்தை புறக்கணிப்போம் கூட்டமைப்பு
இலங்கையின் சுதந்திரத்தினத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளது .
இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல் பட்டு ,தமிழர் அரசியல் விடயங்களை குழிதோண்டி புதைத்து வரும் கூட்டமைப்பு ,இவ்விதம் அறிவித்துள்ளது ,தமிழ் மக்கள் மத்தியில் நகைச்சுவையாக பார்க்க படுகிறது .
15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
மருதங்கேணி மாமுனை பிரதேசத்தில் கடலில் நீராடச் சென்ற மூவரில் 15 வயது சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நேற்று (29) பிற்பகல் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாகவும், சிறுவன் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காணாமல் போன சிறுவன் நாகர்கோவில் கிழக்கு நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
15 வயது சிறுவன் நீரில் மூழ்கி மாயம்
மற்றுமொரு சிறுவன் நீரில் மூழ்கிய நிலையில், அவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போன சிறுவனை தேடும் பணியில் பொலிஸார், கடற்படையினர், மீனவ மக்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தம்புத்தேகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுந்தேகம பிரதேசத்தில் உள்ள நல்லச்சிய நீர்த்தேக்கத்திலிருந்து நீரினை எடுத்துச் செல்லும் கால்வாயில் சைக்கிளில் பயணித்த ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
மினிமுதுகம, களுந்தேகம பிரதேசத்தில் வசிக்கும் 63 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து
அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து
சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுச் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தகம – கிரிமெடியாவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த 74 வயதுடைய முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுடைய உறவினர் ஒருவரின் மகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நவகத்தேகமவில் இருந்து கல்கமுவ நோக்கி சென்று மீண்டும் நவகத்தேகம நோக்கி மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட போது, ஆனமடுவவிலிருந்து கல்கமுவ நோக்கி பயணித்த சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் வாகனம் மீது மோதியுள்ளது.
அந்த நோயாளர் காவு வண்டியில் நோயாளி ஒருவர் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவரை கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவசெரிய நோயாளர் காவு வண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் ஐந்து வயதுடைய மகளும் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை
நவகத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
வானில் மோதிய இந்தியா விமானங்கள்
வானில் மோதிய இந்தியா விமானங்கள்
சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு
சிறுவர்கள் மத்தியில் தொழுநோய் அதிகரிப்பு
இலங்கையில் தொழுநோயாளிகளில் 10 வீதமானோர் சிறுவர்கள் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வருடாந்தம் சுமார் 2,000 தொழுநோயாளிகள் பதிவாகுவதாக அவர் தெரிவித்தார்.
இன்று (29) அனுசரிக்கப்படும் உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கொழும்பு மாவட்டத்தை மையப்படுத்தி மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று நடைபெறவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் சந்தன கஜநாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தொழு நோய் ஏற்பட்ட ஒருவரின் உடலில் நீண்ட காலமான வௌ்ளை அடையாளம் மட்டும் காணப்படுவதால் அதனை
அவர்கள் நோயாக கருதி செயற்படுவதில்லை என வைத்திய நிபுணர் மேலும் தெரிவித்தார்.
நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நானுஓயா தோட்டத்திற்கு அண்மித்த பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் காணப்படுவதாக கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் பத்தனை மவுண்ட்வேர்ணன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சடலத்தின் அருகில் பணப்பை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்குள் தொலைபேசிகள் கடத்தல்
இலங்கைக்குள் தொலைபேசிகள் கடத்தல்
இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் தொலைபேசிகள் கடத்தல் இடம்பெற்று வருவதாக கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்திற்கு வரி வருமானத்தை இழக்கச் செய்யும் வகையில் பொதிகள் ஊடாக இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசிகள் இறக்குமதி செய்யப்படுவதாக கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்களின் ஒன்றியத்தின் உறுப்பினர் பிரியந்த ஜயசிங்க குறிப்பிட்டார்.
“கைப்பேசிகள் இறக்குமதியின் போது, அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் பொதிகளின் ஊடாக கைப்பேசிகள் கொண்டு வரப்படுவதை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம்.
இலங்கைக்குள் தொலைபேசிகள் கடத்தல்
இதன் ஊடாக பாரியளவில் வரி வருமானம் இழக்கப்படும் நிலையில், 2021-2022 ஆண்டுகளில் மட்டும் சுமார் 100 மில்லியன் டொலர்கள் உண்டியல் முறையில் வௌியேறியுள்ளது. ஏற்றுக்கொள்ளப்பட்ட வங்கி முறையின் கீழ் எந்த பரிவர்த்தனையும் இடம்பெறுவதில்லை.
எங்களின் தோராயமான கணக்கீடுகளின்படி, அரசாங்கத்திற்கு சுமார் மூன்றரை பில்லியன் ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட 20 பேர் கொண்ட குழுவே இவ்வாறு தொலைபேசிகளை இலங்கைக்கு கொண்டு வருகின்றது. இந்த கைப்பேசிகள் எதுவும் TRC ஆல் அங்கீகரிக்கப்படவில்லை.
இது குறித்து அரசிடம் எந்த தகவலும் இல்லை.
எனவே, குறித்த கைப்பேசிகளை இவ்வாறு கொண்டு வருவது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.
காட்டுக்கு குளிக்க செல்லும் பெண்களை எட்டி பார்க்கும் காவலிகள்
காட்டுக்கு குளிக்க செல்லும் பெண்களை எட்டி பார்க்கும் காவலிகள்
மட்டக்களப்பு 40 தாவது கிராமம் 16 குடிகள் நீர் வசதி இன்றி
தவிக்கும் மக்கள் .
இந்த கிராமத்திற்கு வீதி ,கிண்று ,கழிவறை இல்லாது பெரும்
அவளை நிலைக்கு மக்கள் தள்ள பட்டுள்ளனர் .
காடுகள் தாண்டி குளிக்க செல்லும் பொழுது ,
காட்டுக்குள் இருந்து குளிப்பதை பார்ப்பதாக ,
பெண்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .
அரசியல்வாதிகள் ஓட்டுக்கு மட்டும் தேடி வருகின்றனர் ,
உதவிகள் என எவரும் இந்த கிராமத்திற்கு வழங்குவதில்லை
என்கின்றனர் இந்த கிராம மக்கள் .
மேற்படி காணொளியானது ,
சமுக வலைத்தளங்களில் தபோது வைரலாகிய வண்ணம் உள்ளது.





































