ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்
ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்
உலக செய்திகள் |வடகொரியா வரும் சில வாரங்களில் புதிய இராணுவ பயிற்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா உளவு துறை தெரிவித்துள்ளது .
அமெரிக்கா ஜப்பான் ,தென்கொரியா நாடுகள் இணைந்து வடகொரியாவுக்கு ,
மிக பெரும் நெருக்கடியை தருவித்து வரும் நிலையில் ,
வடகொரியா தொடராக ஏவுகணை சோதனைகளை
நடத்திய வண்ணம் உள்ளது .
எதிரிகளிடம் இருந்து ,தமது நாட்டை காப்பாற்றி கொள்ள ,
தமக்கு இவ்வாறான ஏவுகணை சோதனைகள் அவசியமாகிறது என ,
வடகொரியா தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .
இரு பேரூந்துகள் நேரெதிர் மோதல் -23 பேர் காயம் | இலங்கை செய்திகள்
இரு பேரூந்துகள் நேரெதிர் மோதல் -23 பேர் காயம் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கொழும்பு – கண்டி வீதியின் மாவனெல்லை கனேதென்ன பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று (07) பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் 23 பேர்
காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார்
பேருந்து ஒன்றும் கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றுமே
இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.
போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்
போராட்ட காரர்கள் மீது கண்ணீர் குண்டு தாக்குதல் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின்
மாணவர்கள் போராட்டத்த்தை நடத்தி வருகின்றனர் .
இதன் பொழுது அந்த போராட்டத்த்தை அடக்கிட ,
கணீர் புகை மற்றும் நீரை பீச்சி அடித்து காவல்துறை ,
ஆராயக்கத்தில் ஈடுபட்டு வருகிறது .
ரணில் அரசுக்கு எதிராக மக்கள் வீதி
இரங்கி போராடும் நிலை மீள எழுச்சி பெறும்
என்பதை வை மீள எடுத்துரைத்துள்ளன .
இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்
இந்தோனேசியாவில் நில நடுக்கம் 11 பேர் மரணம் 42 பேரை காணவில்லை| உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தோனேசியாவின் ரீஜென்சியில் உள்ள தீவில் உள்ள கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர் .42 பேர் கணாமல் போயுள்ளனர் .
ஏழு பேர் காயங்களுடன் மீட்க பட்டுள்ளனர் .
மேலும் 26 வீடுகளுக்குள் நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் சிக்கியுள்ளனர் .
பாதிக்க பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கையில் இராணுவம் ஈடுபட்டுள்ளது .
தொடர்ந்து பல நாடுகளில் நில நடுக்கம் தாக்கி வருவதால்,
மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் ஏற்பட்டு உள்ளது .
அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு
அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு
அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக, குறித்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களையும் வெளிப்படைத் தன்மையுடனும் ஒப்பீட்டுத் தன்மையுடனும் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்க திறைசேரி செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத் திட்டத்திற்கான அனைத்து நிபந்தனைகளையும் இலங்கை தற்போது பூர்த்தி செய்துள்ளதுடன், இந்த மாதத்துக்குள் கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
பார்த்தசாரதி – சஜித் சந்திப்பு
பார்த்தசாரதி – சஜித் சந்திப்பு
இந்தியாவின் முன்னணி இராஜதந்திரியும், ஊடகவியலாளரும், புத்திஜீவியுமான கோபால்சுவாமி பார்த்தசாரதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று (06) கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
சைப்ரஸ், அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கான இந்திய உயர்ஸ்தானிகராக அவர் கடமையாற்றிருந்தார். பிரதமர் ராஜீவ் காந்தியின் உத்தியோகபூர்வ தொடர்பாளராக இருந்ததோடு, பிரதமரின் ஊடகப் பேச்சாளராகவும் பணியாற்றியவராவார்.
அக்காலப்பகுதியில் அவர் இலங்கைக்கு பல தடவைகள் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
தற்போது ஜம்மு மத்திய பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும், இந்தியா புதுடில்லி காற்றாலைச் சக்தி கற்கைகள் மையத்தின் பனிப்பாளராகவும் கடமையாற்றிவருகிறார்.
பார்த்தசாரதி – சஜித் சந்திப்பு
கடந்த இருபது ஆண்டுகளாக தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவுக் கொள்கை விவகாரங்களில் பிரச்சினைகள் தொடர்பாக ஆங்கிலம் மற்றும் ஹிந்தி அலைவரிசைகளில் தொலைக்காட்சி வர்ணனையாளராகவும் பணியாற்றியுள்ளார்.
இலங்கையை மீளக் கட்டியெழுப்ப இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நிலவும் நீண்டகால மற்றும் வலுவான இருதரப்பு உறவுகள் குறித்தும் அவர் இங்கு நினைவு கூர்ந்தார்.
கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி | இலங்கை செய்திகள்
கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவளிப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
இதன் மூலம் சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி வசதியை பெறுவதற்கு இலங்கைக்கு காணப்பட்ட மிகப் பெரிய தடை நீங்கியுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கையின் பிரதான இருதரப்பு கடன் வழங்குனரான சீனா, மார்ச் 6 ஆம் திகதி அந்நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியின் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளதாகவும் அந்தச் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |கொட்டாஞ்சேனை பகுதியில் துப்பாக்கிச் சூடு |
இலங்கை செய்திகள் |கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் இன்று (07) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வழக்கு ஒன்றிற்காக நபர் ஒருவர் முச்சக்கரவண்டியில் சென்றுக் கொண்டிருந்த போது காரில் வந்த ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்த நபரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், முச்சக்கரவண்டியில் பயணித்தவர் மீது துப்பாக்கிச் சூடு படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச்சூடு நடத்தியது யார், என்ன காரணத்திற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
தீயில் எரிந்த அகதிகள் முகம் | உலக செய்திகள்
தீயில் எரிந்த அகதிகள் முகம் | உலக செய்திகள்
உலக செய்திகள் |பங்களாதேஷில் உள்ள ரோகினிய அகதிகள் முகாம் ஒன்று
தீயில் எரிந்து நாசாமாகியுள்ளது .
தீ வேகமாக பரவியதால் அங்கு இருந்த,
பல குடிசைகள் முற்றாக எரிந்து அழிந்துள்ளன .
இந்த அகதிகள் முகாம் தீயில் எரிந்து அழிந்துள்ளதால்,
அங்கு தங்கி இருந்த ஆயிரம் அகதிகள்
நிர்கதியாகயுள்ளனர் .
அவர்கள் உடைமைகள் யாவும் , தீயில் எரிந்து அழிந்துள்ளதாக
தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன .
மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
மனைவியை ஐந்து துண்டாக வெட்டி எறிந்த கணவன் | உலக செய்திகள்
உலக செய்திகள் |இந்தியா சத்தீஸ்கர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய கணவன் ,தனது மனைவியை ஐந்து துண்டுகளாக வெட்டி
பொலித்தீன் பையில் சுற்றி வைத்த கொடூரம் நிகழ்ந்துள்ளது .
மனைவி கள்ள காதல் தொடர்பில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில்,
இவ்வாறு கோரமாக வெட்டி கொலை செய்துளளர் .
மேலும் இதே கணவன் ,மனைவி இணைந்தது கள்ள நோட்டு ,
அச்சிட்டு வந்துள்ளதும் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
கள்ள நோட்டு அச்சிட படுவதாக காவல்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,சோதனை நடத்திய போலீசார் ,தண்ணி தாங்கி ஒன்றுக்குள் துண்டுகளாக ,வெட்ட பட்ட நிலையில் .பெண்ணின் சடலத்தை கண்டு மீட்டனர் .
கணவனிடம் இடம்பெற்ற விசாரணைகளில் ,
இந்த கொலை தொடர்பான விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளது .
அறியாமையும் ,அதனால் எழுந்த குரோத ,மூட தானத்தால் ,இவ்வாறான சம்பவங்கள் இடம்பற்று வருவதாக தெரிவிக்க படுகிறது .
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில்
இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
இருவர் பலியாகினர் ,மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
நூற்றுக்கு மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே,
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .
அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் ,
ஆயுத பாவனையை முற்றாக தடை செய்யும்
நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
உலக செய்திகள் |உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதி தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முனேற்ற நடவடிக்கையில் ரஷ்ய மூர்க்கமாக ஈடுபட்டுள்ளது .
கடந்த 24 மணித்தியாலத்தில், ஐந்து முனை ஊடாக முன்னேற்ற நகர்வை ஆரம்பித்த ரஷ்ய இராணுவம் ,130 தடவை உடைப்பு தாக்குதலை நடத்தியுள்ளது .
வான்வழி ,பீரங்கி ,பல் குழல் ஏவுகணை ,தாக்குதலை நடத்திய வண்ணம் முன்னேற்ற நடவடிக்கயை ஆரம்பித்தது .
சற்றும் எதிர் பாராத , புதிய முறையிலான தாக்குதல்கள் இந்த நாள் இடம்பெற்றுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்ய உக்கிரைன் உக்கிர மோதல் | உலக செய்திகள்
குண்டுகளை மழை போல பொழிந்த வண்ணம்,
முன்னேற்ற முயன்ற ரஷ்ய படை நகர்வு முறியடிக்க பட்டுள்ளது என்கிறது உக்கிரைன் .
ஆனால் ரஷ்ய தரப்போ உக்கிரைன் இராணுவத்தின் முக்கிய பாய் பிரிவு ஒன்று முற்றாக அழிக்க பட்டுள்ளது என்கிறது ,மிகமகிய தாக்குதல் தளபதி உள்ளிட்ட நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலி என்கிறது .
மேலும் அமெரிக்கா வழங்கிய கைமாஸ் ஏவுகணை செலுத்திகள் மூன்றும் அழிக்க பட்டுள்ளது என்கிறது ,உக்கிரைன் தனது இழப்பு விகிதத்தை தொடர்ந்து மறைத்து வருகிறது .
வரும் நாட்களில் பகமூட்ட ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்து விடும் ,
எனவும்,முன்னரங்களில் உள்ளஉக்கிரைன் இராணுவம் மன
சோர்வடையும் நிலைகுலையும் தாக்குதல்களை ரஷ்ய நடத்திய வண்ணம் உள்ளது என படுகிறது ,
இதன் வெளிப்பாடு விரைவில் உக்கிரைன் கிழக்கு ரஷ்ய வசம் ,
வீழ்ந்து விடும் என்பதே களமுனை தகவலாக வெளிவந்த வண்ணம் உள்ளது .
இளம் யுவதிகளுக்கு சவால் விட்ட பாட்டி |இலங்கை செய்திகள்
இளம் யுவதிகளுக்கு சவால் விட்ட பாட்டி |இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான சுழிபுரம் விக்ரோறியா கல்லூரியில் கடந்த 03.03.2023 ஆம் இல்ல மெய்வல்லுனர் போட்டி இடம்பெற்றது.
பாடசாலையின் அதிபர் எஸ். சிவகுமார் தலைமையில் இடம்பெற்ற வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் மாணவர்களின் பல்வேறு போட்டி நிகழ்வுகளும் இடம்பெற்றன.
குறித்த விளையாட்டு போட்டியில் பழைய மாணவர்களிற்கான 400 m ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.
அந்த ஓட்டப்போட்டி நிகழ்வில் அப்பாடசாலையின் பழைய மாணவிகள் பலர் பங்குபற்றி இருந்தனர்.
குறித்த பாடசாலையில் கல்விகற்ற 75 வயதுடைய புனிதவதி என்ற மூதாட்டி ஒருவர் கலந்து கொண்டு சிறப்பு பரிசினை தட்டி சென்றுள்ளார்
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |இந்த நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும். இந்த நாட்டில் நடக்கும் விஷயங்களை நாம் புறநிலையாக பார்க்காமல், அடுத்த தேர்தலை கண்கூடாக பார்க்காமல் இருந்தால், பௌத்த
மதகுருமார்கள் இந்த நாட்டை சீரழித்துக்கொண்டே இருப்பார்கள். நாட்டை முன்னேற்றவோ, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவோ அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
அண்மைக்காலமாக மகாசங்கம் பற்றிய உங்களது கருத்துக்கள் சிங்களவர்கள் மத்தியில் எதிர்மறையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. மகா சங்கத்தினரை விமர்சிப்பது புத்திசாலித்தனமா? என வாராந்த இன்று
ஊடகவியாளர்களுக்கு கேள்வி பதிலுக்கான பதில் வழங்கையில் இவ்வாறு அறிக்கை மூலமாக பதில் வழங்கினார் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டில் வாழ வேண்டுமானால் யாராவது பூனைக்கு மணி அடிக்க வேண்டும் | இலங்கை செய்திகள்
என் வயது முதிர்ந்த வயதிலேயே அதன் விளைவுகளை உணர்ந்து பூனைக்கு மணி கட்டும் பணியை நான் மேற்கொண்டேன். பௌத்த மதகுருமார்கள்
அரசின் விவகாரங்களில் தீவிரமாகப் பங்கேற்பதால் ஏற்படும் ஆபத்துகளை அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களும் சுட்டிக்காட்ட வேண்டிய நேரம் இது.
ஆனால் நிச்சயமாக அறிவுள்ள பௌத்த மதகுருமார்கள் தெற்கு மற்றும் வடக்கு கிழக்கிற்கு இடையில் சமாதான தூதுவர்களாக செயல்பட முடியும்.
பௌத்த பிக்குகளின் ஆங்கிலம் அல்லது தமிழ் பேசும் தூதுக்குழு ஒன்று முதலில் வடக்கில் உள்ள எமது புத்திஜீவிகளை சந்தித்து தமிழர்களின் பிரச்சனைகள் என்ன என்பதை அறிந்து கொள்ளுமாறு நான் பரிந்துரைக்கிறேன்.
அதன்பிறகு, வரலாறு மற்றும் தொல்லியல் துறையின் சமீபத்திய முன்னேற்றங்கள் பற்றிய குறிப்புகளைப் பகிர்ந்து கொள்ள, எங்கள் வரலாற்றுப் பேராசிரியர்களுக்கு இடையே தொடர்பு கொள்ளலாம்.
அதே சமயம் அடிமட்ட மட்டத்தில் ஒருவரையொருவர் சந்திக்கும் வகையில் இரு சமூகத்தினருக்கும் இடையிலான சந்திப்புகளை சிங்கள தமிழ் நட்புறவுச் சங்கங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
மனித உரிமைகள் ஆணையாளர்களை வடக்கிற்கு அனுப்புவது மக்களின் தேவைகள் மற்றும் உணர்வுகள் பற்றிய சரியான கண்ணோட்டத்தையோ அல்லது போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும்
மனித உரிமை மீறல்கள் தொடர்பான எந்தவொரு விசாரணையும் சர்வதேச உள்ளீட்டுடன் இருக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை வழங்காது என்றார்.
இரு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய் | உலக செயதிகள்
இரு மகன்களுடன் கிணற்றில் குதித்த தாய் |இலங்கை செயதிகள்
இலங்கை செயதிகள் |தாயொருவர் தனது இரு மகன்களையும் கிணற்றில் வீசிவிட்டு கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சிக்கும் செய்தியொன்று கபிதிகொல்லேவ, கனுகஹவெவ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் நேற்று (05) காலை பதிவாகியுள்ளதுடன், கிணற்றில் வீசப்பட்ட மூத்த ஊனமுற்ற சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாயும் மற்றைய வாய் பேச முடியாத சிறுவனும் கல்லில் தொங்கிய நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு கபிதிகொல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் 21 வயதுடைய மாற்றுத்திறனாளி ஆண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
சடலம் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
கபிதிகொல்லேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | இலங்கை செய்திகள்
மின்சாரம் தாக்கி இளைஞன் பலி | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |தெல்லிப்பழை – கட்டுவன்புலம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவன் நேற்று (05) மாலை உயிரிழந்துள்ளான்.
இந்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தெல்லிப்பழை பகுதி சேர்ந்த எஸ். மாதுசன் (வயது -18) என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுவன்புலம் பகுதியில் வேப்ப மரத்தின் கொப்புகளை வெட்டும் பொழுது பிரதான அதிஉயர் மின்கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்| தாலிக் கயிற்றினால் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் 25 வயதுடைய ஓர் இளம் பெண்ணின் சடலத்தை புஸல்லாவ சோகமா தோட்ட மேல் பிரிவிலிருந்து மீட்டுள்ளதாக புஸல்லாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த பெண் எல்பொட தோட்ட கட்டுகித்துல ஜன உதான கிராமத்தைச் சேர்ந்த 25 வயதுடைய எஸ். நிரஞ்சலா தேவி என்பவர் ஆவார்.
அந்தப் பெண் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னரே தனது முதல் கணவரை பிரிந்து, வேறொரு நபரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டுள்ளார்.
அதன் பின்னர் இருவரும் கொழும்பில் தங்கி வேலை செய்து வந்துள்ளனர் என கூறப்படுகிறது.
தோட்டப் பகுதியில் இளம் பெண்ணின் சடலம் மீட்பு | இலங்கை செய்திகள்
இந்நிலையில் எல்பொட கட்டுகித்துலையில் உள்ள பெண்ணின் தாய்வீட்டுக்கு செல்வதற்காக கொழும்பிலிருந்து இருவரும் புஸல்லாவ நகருக்கு வந்துள்ளபோதும், வீட்டுக்குச் செல்லவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அதன் பின்னர் தேயிலை கொழுந்து பறிக்கச் சென்ற இரு பெண்கள் சடலத்தை குறித்த இடத்தில் கண்டு, புஸல்லாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த பொலிஸார் பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.
அத்துடன் உயிரிழந்த பெண்ணின் இரண்டாவது கணவர் தலைமறைவாகியுள்ளதாக கூறும் பொலிஸார், பெண் வேறோர் இடத்தில் கொலை செய்யப்பட்டு, குறித்த இடத்தில் கொண்டுவந்து போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான ஸ்தல விசாரணைகளை கம்பளை மாவட்ட நீதிமன்ற மேலதிக நீதவான் மேற்கொண்டதோடு, சடலத்தினை பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புஸல்லாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
இம்ரான் கானை கைது செய்ய போலீஸ் வலைவீச்சு | உலக செய்திகள்
உலக செய்திகள் |முன்னாள் பாகிஸ்தான் அதிபர் இம்ரான் கான் கைது செய்திட ,போலீசார் அவரது வீட்டை முற்றுகையிட்டனர்
அவ்வேளை அவரது வீட்டை சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட ஆதரவாளர்கள் சூழந்ததினால் ,அங்கு பெரும் பர பரப்பு ஏற்பட்டது .
லாகூரில் உள்ள அவரது வீட்டுக்குள் நுளைந்து காவல்துறையினர் தேடுதல் நடத்தினர் .ஆனால் அவர் அங்கு இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர் .
பாகிஸ்தான் அதிபராக பதவி வகித்த காலத்தில் ,பெற்று கொண்ட பொருட்கள் தொடர்பாக அறிவிக்க கணக்கு ,காண்பிக்க தவறிய குற்ற சாட்டில் ,
நீதிமன்ற அழைப்பை ஏற்று கைது செய்ய போலீசார் விரைந்த பொழுதும் ,
அவர் அங்கிருந்து தப்பித்து சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
தீவிரவாத தலைவர் கொலை | உலக செய்திகள்
தீவிரவாத தலைவர் கொலை | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஏமான் நாட்டில் பதுங்கி இருந்த அல்கொய்தா அமைப்பின்
மூத்த தலைவர் படுகொலை செய்ய பட்டுளளார் .
ஏமன் நாட்டில் பதுங்கி இருந்த, இவரது வாகனம் மீது ,
அமெரிக்கா உளவு விமானம் குறிவைத்து நடத்திய,
தாக்குதலில் இவர் படுகொலை செய்யப்பட்டுளளார் .
தமது தளபதி கடந்த மாதம் அமெரிக்கா நடத்திய ,
தாக்குதலில் பலியாகியுள்ளார் என்பதை ,
அந்த அமைப்பு ஒப்பு கொண்டுள்ளது .
அமெரிக்கா வெளியாக உளவுத்துறையின் ,
கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட ,
இந்த முக்கிய தலைவர் .நேரம் பார்த்து கர்ச்சிதமாக
தாக்கி அழிக்க பட்டுள்ளார் .
அமெரிக்காவுக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாக இது கருத படுகிறது .
ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
உலக செய்திகள் |ஈரான் நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக
பாடசாலை மாணவிகள் மயக்கம் உற்று விழும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன .
மாணவிகள் பாடசாலை அருகே கெமிக்கல் நச்சு வாயு தாக்குதல் நடத்த படுகிறது .குறித்த கெமிக்கல் வாயு காற்றில் கலக்கும் படி பரவ விட படுகிறது .
இந்த நச்சு காற்றானது பாடசாலைக்குள் நுழைந்து கலப்பதால் ,
அதனை சுவாசிக்கும் மாணவர்கள் ,சுவாச கோளாறு ஏற்பட்டு ,
சுயநினைவிழந்து மயங்கி விழுகின்றனர் .
ஈரானில் நச்சு தாக்குதல் மயங்கி விழும் மாணவிகள் | உலக செய்திகள்
இந்த விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பையும் ,
பீதியை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,
ஆளும் அரசு நெருக்கடியில் சிக்கியுள்ளது .
இந்த கெமிக்கல் தாக்குதலை நடத்துவது ,இஸ்ரேல் உளவாளிகள் என ஈரான் கருதுகிறது .
அதனால் அந்த நாசகார சதிகளை கைது செய்திடும் நடவடிக்கையில் ,
ஈரான் இராணுவம் ஈடுபட்டுள்ளது .
தொடர்ந்து கெமிக்கல் நச்சு தாக்குதல் இடம் பெற்று வருவதால் ,
மாணவர்கள் பாடசாலைக்கு வருவதை தவிர்த்துள்ளனர் .
தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது .







































