வவுனியா குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு
வவுனியா குளத்தில் இருந்து சடலம் ஒன்று மீட்பு
வவுனியா குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வவுனியா குளத்தின் கரைப்பகுதியில் இன்று (19) அதிகாலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா குளத்தில் சடலமொன்று மிதப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா
பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சடலமாக காணப்படுபவர் தொடர்பில் பொலிஸாரின் முதற்கட்ட நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.
வவுனியா நகரில் யாசகத்தில் ஈடுபவராக இருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளமையுடன் தடவியல் பொலிஸார் மற்றும் நீதவானின் விசாரணைகளுக்காக சடலம் குளத்தின் கரைப்பகுதியிலேயே தொடர்ந்தும் காணப்படுகின்றது .
மீன்பிடி படகில் உயிரிழந்த மீனவர் குறித்து விசாரணை
மீன்பிடி படகில் உயிரிழந்த மீனவர் குறித்து விசாரணை
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இருந்து பலநாள் மீன்பிடி படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபர் 05 பேருடன் பெப்ரவரி 03 ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த 16ஆம் திகதி பிற்பகல் துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவர் கல்பிட்டி குரக்கன்ஹேன பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
பாடசாலை சென்ற சிறுமியை வழிமறித்து இளைஞன் செய்த காரியம்
பாடசாலை சென்ற சிறுமியை வழிமறித்து இளைஞன் செய்த காரியம்
காதலிப்பதாக கூறி 14 வயதான சிறுமியை அழைத்துச் சென்ற 20 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சிறுமி மீட்கப்பட்டுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸார் தொிவித்திருக்கின்றனர்.
மல்லாகம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுமி பாடசாலை சென்ற வேளை குறுக்கிட்ட குறித்த இளைஞர் புதுக்குடியிருப்புக்கு சிறுமி அழைத்துச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து சிறுமி மீட்க்கப்பட்டுள்ளார்.
மேலும் சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். இருவரையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் முற்படுத்தி பரிசோதனைக்குட்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு
இலங்கையில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கங்கள் பதிவு
நேற்று மாலை கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல பகுதியிலும் நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளது.
ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆக நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க
சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க
வீட்டில் அம்மா செய்திடும் சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் இப்படி செஞ்சு பாருங்க வீட மணக்கும் ,சொல்லேவே வேணாம் அம்புட்டு சுவைங்க .
மிக இலகுவான முறையில் இன்றே செய்து பாருங்க .யாவரும் விரும்பி உண்ணும் முட்டை கிரேவி ,
முட்டை கிரேவி எனறால் இப்படி இருக்கனும் .
சாதம் ,சப்பாத்தி ,கூட சேர்த்து சாப்பிடலாம் ,இதில கொத்து பரோட்டோ போடலாம் என்றால் பாருங்க .
அப்படியான முட்டை தொக்கு கிரேவி பார்க்கலாம் வாங்க .
சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
சனி ஞாயிறு ஸ்பெசலா இப்படி செய்து கொடுங்க
வீடே மணக்கும் அளவுக்கு இந்த சாப்பாடு ரெம்ப சுவையாக இருக்கும் .
நீங்களும் ஒருமுறை செஞ்சு பாருங்க .
நாளாந்தம் நம்ம சமையல் செய்வனவற்றில் கொஞ்சம் வித்தியாசமா சின்ன ஒரு மாற்றம் அவ்வளவு தாங்க .
முட்டை ,தயிர் ,குழம்பு ,சாதம் ,சைடீஸ் என்பனவற்றுடன் பிசைந்து சாப்பிட்ட பிரியாணி போல செமையாக இருக்கும் .
வாங்க எப்படி இந்த டிபன் செய்வது என்பதை பார்க்கலாம் .
செட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curry
செட்டிநாடு சிக்கன் சுக்கா | Chettinad Chicken Chukka | How To Make Chettinad Chicken Curry
செட்டிநாடு சிக்கன் சுக்கா இந்த மாதிரி வீட்டில செஞ்சு சாப்பிடுங்க மக்களே ,
அதிக சுவை தரமான உணவு ,வாரத்தில் அஒருமுறை இது போல செஞ்சு .சாப்டிங்க
குலந்திகள்முதல் பெரியவர்கள் வரை யாவருக்கும் பிடிக்கும்
இந்த செட்டிநாடு சிக்கன் சுக்கா .
வாங்க செட்டிநாடு சிக்கன் சுக்கா செய்வது காணொளியில் பார்க்கலாம்.
வீட்ல காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க| 5 Minute Lunch Recipes
வீட்ல காய்கறி இல்லையா அப்ப உடனே இப்படி செஞ்சு அசத்துங்க| 5 Minute Lunch Recipes
வீட்ல காய்கறி இல்லையா? அப்ப உடனே இப்படி செஞ்சு பாருங்க ,சாப்பிட்டே
அசத்து போவீங்க .|
இந்த டிபன் செய்திட ஐந்து நிமிடம் போதும் ,ரோடு கடை சுவையில் இதுபோல
செஞ்சு சாப்பிடுங்க மக்களே .
வாங்க காணொளி பார்க்கலாம்.
திருமண வீட்டில் மோதல் – ஒருவர் பலி
திருமண வீட்டில் மோதல் – ஒருவர் பலி
நேற்று (17) இரவு அங்குருவாதொட்ட படகொட சந்தியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் படகொட யதவர பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய மங்கள பிரேமவர்தன என்ற நபராவார்.
சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
படகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக படகொட சந்தியில் இந்த மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.
அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு துறைமுக நகர மோதலில் ஒருவர் பலி
கொழும்பு துறைமுக நகர மோதலில் ஒருவர் பலி
கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் இடம்பெற்ற விருந்தின் போது ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சுமார் 25 வயதுடைய இளைஞனின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (17) துறைமுக நகர வளாகத்தில் சிலரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தின் போது இடம்பெற்ற தாக்குதலில் குறித்த இளைஞன் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (18) அதிகாலை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காம வெறி பிடித்த மிருகத்திடம் சிக்கிய மதுவந்தி
காம வெறி பிடித்த மிருகத்திடம் சிக்கிய மதுவந்தி
கண்டி, அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கடந்த 10ம் திகதி இரவு 9.30 மணியளவில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், அங்கவீனமுற்ற இராணுவ சிப்பாய் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் கொலையைச் செய்தாரா என்பதை உறுதிப்படுத்த அவரது DNA மாதிரிகள் மற்றும் இறந்த பெண்ணின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட DNA மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காம வெறி பிடித்த மிருகத்திடம் சிக்கிய மதுவந்தி
பொலிஸ் மோப்ப நாய் ´ஏகர்´ மூலம் அவரது வீடு அடையாளம் காணப்பட்டதை அடுத்து சந்தேகத்திற்குரிய இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டார்.
இராணுவ சிப்பாயின் விரல் நகங்கள் மற்றும் சாரத்தில் சேறு படிந்திருந்த நிலையில் அவர் மீதான சந்தேகம் வலுப்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், சந்தேகநபரான இராணுவ சிப்பாய் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
சந்தேகநபர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீ ரங்கா கைது
ஶ்ரீ ரங்கா கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா கைது செய்யப்பட்டுள்ளார்.
களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
2011ஆம் ஆண்டு வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் சாட்சிகளுக்கு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது
ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது
வடமராட்சி வடக்கு மற்றும் கிழக்கு கடற்றொழிலாளர்களுடன் கடற்றொழல் அமைச்சர் நேற்று (17) கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தார்.
நேற்று மாலை வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலக மண்டபத்தில் மாலை 3:30 மணியளவில் வடமராட்சி வடக்கு கடற்றொழலாளர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட அமைச்சர், மீனவர்களது பிரசினை தொடர்பில் ஆராய்ந்தார். இதன் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
முதற்கட்டமாக இத்திய மீனவர்களது இழுவைப் படகு தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. இதன் போது இலங்கை கடற்பரப்பில் ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி கிடையாது, பாஸ் நடைமுறையும் இல்லை என திட்ட வட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழக இராஜாங்க அமைச்சர் திரு முருகன், இத்திய வெளிவிவகார அமைச்சர் மற்றும் பஜாக தமிழக தலைவர் அண்ணாமலை ஆகியோரிடமும் இராஜ தந்திர ரீதியாகவும் நட்பு ரீதியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு மீன்பிடிக்க அனுமதிக்க முடியாது என.
இனி இந்திய கடல் எல்லையில் படகுகளில் சென்று ஆர்ப்பாட்டம் நடாத்தித் தான் எமது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டியுள்ளது.
அப்போது இந்திய ஊடகவியலாளர்களும், இலங்கை ஊடகவியலாளர்களும் நேரில் வந்து செய்திகளை சேகரித்து நிலமைகளை அவதானித்துச் செல்லட்டும். அப்போது தான் இந்தியாவில் உள்ள மக்களுக்கு இலங்கை நிலவரம் புரியும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
அன்று காலை ராஜகிரியில் உள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதில் அரசியல் கட்சி செயலாளர்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது
3 பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்த நபர் கைது
எல்பிட்டிய, அவிட்டாவ பிரதேசத்தில் மூன்று பெண்களை கழுத்தை நெரித்து படுகொலை செய்தமை மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த வழக்குகள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எல்பிட்டிய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யகிரல பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, திருடப்பட்ட தங்க நெக்லஸ், 03 ஜோடி காதணிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபருக்கு எதிராக மத்துகம, களுத்துறை மற்றும் அல்பிட்டி நீதவான் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது
போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா
போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா
அமெரிக்கா திடிரென போலந்து நாட்டுக்கு 800 கலிபர் ஏவுகணைகளை வழங்குகிறது .
ரஷ்ய அமெரிக்காவுக்கு டையில் நேரடி விமான மோதல் இடம்பெற்ற
48 மணித்தியாலத்தில் இந்த ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளது .
இந்த கலிபர் ஏவுகணைகள் விமானம் ,மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் எடுத்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது .
அவ்வாறான கலிபர் ஏவுகணைகள் முதல் தொகுதியாக ,
போலந்து நாட்டுக்கு வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது
சில வாரங்களில் இந்த ஏவுகணைகள் போலந்தை சென்றடைய உள்ளன .
உக்கிரைன் போர்க்களத்தை மையப் படுத்திய அமெரிக்கா ,
அதனது ஆயுதங்களை விற்று பல மில்லியன்
டொலர்களை சம்பாதித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
forex trading for beginners in tamil||vanni forex|பங்கு சந்தை
சீனா அவுரேலியா மோதல்
சீனா அவுரேலியா மோதல்
சீனா அவஸ்த்ரேலியாவுக்குள் மிக பெரும் மோதல் வெடித்துள்ள நிலையில் ,
அவுஸ்ரேலியாவின் தேசிய பாதுகாப்பிற்கு சீனாவினால் மிக பெரும்
அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் ,அவுஸ்ரேலியவை காப்பாற்றும் முகமாக
பிரிட்டன் அவசர உதவியாக ஏவுணைகளை வழங்கு கிறது .
இதன் மொத்த பெறுமதி 892 மில்லியன் டொலர்களாகும் ,
அதனாலேயே இந்த ஏவுகணைகளை அவசரமாக பிரிட்டனிடம் இருந்து
அவுஸ்ரேலியா கொள்வனவு செய்கிறது .
சீனா அவுஸ்ரேலியா கடல் பரப்புக்கு மேலால் ,உளவு விமானங்கள் பறந்ததும் ,
அதே கடல் பகுதியில் சீனாவின் உளவு கப்பல்கள் சென்று வந்ததாக ,
அவுஸ்ரேலியா தெரிவித்து பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாக தெரிவித்து இருந்தது .
அவ்வாறான நிலையில் இந்த ஆயுத விற்பனை சூடு பிடித்துள்ளது .
RSI வைத்து பங்கு சந்தையில் இப்படி பணம் சம்பாதீங்க|RSI Indicator Strategy in Tamil
RSI வைத்து பங்கு சந்தையில் இப்படி பணம் சம்பாதீங்க|RSI Indicator Strategy in Tamil
உலக பங்கு சந்தையில் RSI இண்டிகேட்டரை வைத்து,
இலகுவான முறையில் ரிஸ்க் இன்றி இவ்வாறு பணம் சம்பாதீங்க .forex trding இல் இந்த முறையில் ,நீங்கள் வாங்கி விற்றால் அதிக இலாபத்தை ஈட்டி கொள்ள முடியும் .
,இவ்வாறு ஆட்டோ முறையில் போட்டு பணத்தை சம்பாதிக்கலாம் ,நீங்கள் கம்பியூட்டர் முன் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை ,மணி மேனேஜ்மென்ட் சரியாக கையாண்டால் அது போது மனது .
வாங்க இப்பபோ செய்முறை விளக்கத்துடன் காணொளியை பார்க்கலாம்.
RSI Indicator Strategy in Tamil | RSI Indicator Strategy|forex profit RSI |vanni forex|பங்கு சந்தை
பணத்தை மோசடி செய்த இருவர் கைது
பணத்தை மோசடி செய்த இருவர் கைது
வெளிநாட்டு வேலை வழங்குவதாக கூறி பணத்தை மோசடி செய்த இருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குவைட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணத்தை ஏமாற்றிய பல்லம பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மருதானை பகுதியில் வைத்து புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர், கம்பளை பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவருக்கு குவைட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி 4 இலட்சத்து 50,000 ரூபா பணத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இலங்கைக்கு எதிராக 197 நாடுகள் வாக்களிப்பு
இலங்கைக்கு எதிராக 197 நாடுகள் வாக்களிப்பு
இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.
ருவாண்டாவின் கிகாலி நகரில் நடைபெற்ற உலக கால்பந்து சம்மேளனத்தின் பொதுச் சபையில் இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
208 நாடுகள் கலந்து கொண்ட இந்த பொதுச் சபையில் இலங்கைக்கு சர்வதேச கால்பந்து தடை விதிக்க 197 நாடுகள் ஆதரவாக வாக்களித்திருந்தன.
விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டு சுதந்திரத்தை மீறுதல், தன்னிச்சையாக புதிய விதிமுறைகளை விதித்தல் போன்ற காரணங்களால் பல நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களித்துள்ளன.
















































































