பயங்கரவாத வரையறையை மறுபரிசீலனை செய்யவும்
பயங்கரவாத வரையறையை மறுபரிசீலனை செய்யவும்
பயங்கரவாதத்தின் வரையறை நீண்ட காலமாக ஒரு சர்ச்சைக்குரிய பிரச்சினையாக உள்ளது என்றும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரிவு 3 (1) இல் குறிப்பிடப்பட்டுள்ள பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யுமாறும், அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.
ஆணைக்குழுவினால் வியாழக்கிழமை (06) வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்குறிப்பிட்ட விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்தின் வரையறையை மறுபரிசீலனை செய்யவும் வரையறைக்குள் வரும் செயல்களை தெளிவுபடுத்தவும் சுருக்கவும் குறிப்பிட்ட திருத்தங்களை பரிந்துரைக்கவுமே அரசாங்கத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பயங்கரவாத வரையறையை மறுபரிசீலனை செய்யவும்
எதிர்ப்பாளர்களையும் செயற்பாட்டாளர்களையும் குறிவைத்து மௌனமாக்குவதற்கு பயங்கரவாதத்தின் பரந்த வரையறையை அரசாங்கம் பயன்படுத்த முடியும் என்று ஆணைக்குழு கருதுகிறது.
பயங்கரவாதி என்று அழைக்கப்படுவார்கள் என்ற பயம் காரணமாக, பொது நலன் சார்ந்த விடயங்களில் பேசவோ அல்லது தங்கள் கருத்தை வெளிப்படுத்தவோ பலர் பயப்படுவார்கள் என்றும் இது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
சட்டப்பூர்வ முரண்பாடுகள் மற்றும் உண்மையான பயங்கரவாதச் செயல்களை வேறுபடுத்திப் பார்ப்பதை இந்த சட்டமூலத்தில் உள்ள வரையறை கடினமாக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரயில்வே கடவை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
ரயில்வே கடவை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
கடந்த 10 வருடத்துக்கு மேலாக ரூபாய் 250 இற்கு சேவையாற்றும் எங்களுக்கு, இனியும் காலம் தாழ்த்தாது ரயில்வே திணைக்களத்தில் நிரந்தர நியமனம் தருமாறு கோரி, ரயில்வே கடவை ஊழியர்கள் நேற்று (06) வாழைச்சேனை ரயில் நிலையத்துக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழைச்சேனை ரயில் நிலையத்தில் ஒன்று கூடியவர்கள், தங்களது கோரிக்கை அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு, வாழைச்சேனை – கொழும்பு வீதி வழியாக ஊர்வலமாகச் சென்று வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக, ‘அரசே நிரந்தர நியமனத்தை தா’; ‘சம்பளத்தை அதிகரித்துத் தா’ என்பன போன்ற கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது, தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை, பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஆகியோரிடம் கையளித்தனர்.
ரயில்வே கடவை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்
மகஜரை பெற்றுக்கொண்ட பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர், இதற்கான தீர்வை சம்பந்தப்பட்ட போக்குவரத்து அமைச்சர்,டு மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனத்துக்குக் கொண்டுவந்து பெற்றத்தருவதாகத் தெரிவித்தார்.
மேற்படி ரயில்வே கடவை ஊழியர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குப் பொறுப்பான 26 ரயில்வே கடவையில் 78 பேர் கடமையாற்றி வருகின்றனர்.
நாளொன்றுக்கு எட்டு மணித்தியாலம் பணியாற்றி மாதாந்த சம்பளமாக ரூபாய் 7,500 பொலிஸ் திணைக்களத்தால் வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய விலைவாசிகளின் அடிப்படையில், இந்தச் சம்பளத்தைக்கொண்டு தங்களது வாழ்வாதாரத்தை மேற்கொள்ளமுடியாது என்று கவலையுடன் கூறுகின்றனர்.
3 மாதங்களில் இலங்கைக்கு 1,413 மில்லியன் டொலர்கள்
3 மாதங்களில் இலங்கைக்கு 1,413 மில்லியன் டொலர்கள்
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 1,413.2 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அலரி மாளிகை முன்றில் சொகுசு கார் விபத்து
அலரி மாளிகை முன்றில் சொகுசு கார் விபத்து
கொள்ளுப்பிட்டி அலரி மாளிகை முன்றலில் சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார் சாரதியின் கடடுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் கார் சேதமடைந்துள்ளதாகவும், ஆனால் அதில் பயணித்த எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.
இதேவேளை விபத்து தொடர்பில் காரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன
உக்ரைனுக்கு உளவு பார்த்த ரஷ்ய தம்பதிகள் கைது
உக்ரைனுக்கு உளவு பார்த்த ரஷ்ய தம்பதிகள் கைது
உக்ரைன் நாட்டுக்கு உளவு பார்த்தனர் என்கின்ற குற்ற சாட்டில் தம்பதிகள் ,
ரஷ்ய உளவுத்துறையில் கைது செய்ய பட்டுள்ளனர் .
ரஸ்யாவின் பாதுகாப்பு நிறுவனத்தின் ,வரை படங்கள் ,
மற்றும் அங்கிருந்த மிக முக்கிய பாதுகாப்பு
ஆவணங்கள் தொடர்பில் தகவல் வழங்கிய குற்ற சாட்டில் ,
பெண் உள்ளிட்ட ஜோடி கைது செய்ய பட்டுள்ளனர் .
சீருடையில் சென்ற உளவுத்துறையினர் ,அடுக்குமாடி ,
குடியிருப்பு பகுதியில் ,குற்றவாளிகளை கைவிலங்கு
இட்டு இழுத்து செல்கின்றனர் .
குறித்த தரவுகளை 1200 யூரோக்களுக்கு விற்பனை செய்துள்ளது
முதல் கட்ட விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது .
ரஸ்யாவில் தேச துரோக வழக்கில் ,
கைது செய்ய பட்டால் ,இருபது வருடம் சிறை தண்டனை விதிக்க படுகின்றது .
வீடுகளை உடைத்தெறிந்த புயல் அமெரிக்காவில் பயங்கரம்
வீடுகளை உடைத்தெறிந்த புயல் அமெரிக்காவில் பயங்கரம்
அமெரிக்காவில் பாரிய புயல் அனர்த்தம் ஏற்பட்டுளள்து .
இந்த கோர புயலினாலே பல நூறு வீடுகள் சேதமாகியுள்ளன .
மிசோரி மாநில நெடுஞ்சாலை பகுதியில் பல வீடுகள் பாதிக்க பட்டுள்ளன ,
மேலும் ஐந்து பேர் பலியாகியுள்ளனர் .
பாதிக்க பட்ட பகுதியில் மீட்பு பணிகள் தொடர்கின்றன .
மேலும் பல மாவட்டங்களுக்கும் புயல் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இதுவரையான இழப்பு பல மில்லியன் டொலர்களாக கணக்கிட பட்டுள்ளது .
வீழ்ந்த போர் விமானம் விமானி சிறை பிடிப்பு
வீழ்ந்த போர் விமானம் விமானி சிறை பிடிப்பு
வீழ்ந்த ,உக்ரைன் போர், விமானம், ரஸ்யாவுக்கு தாக்குதல் நடத்த பறந்து சென்ற ,உக்ரைன் போர் விமானம் ,விபத்தில் சிக்கி வீழ்ந்தது ,
அப்போது அந்த ,விமானத்தை , ஒட்டி சென்ற வானோடி உயிர் தப்பினார்
,விமானி ,தமது நாட்டுக்குள் ,தப்பிக்க முயன்றுள்ளார் .
ரஷ்யா எல்லையோரத்தில் காவலில் இருந்த ,இராணுவத்தினரால் ,
யுக்ரைன் ,வானோடி , சிறை ,பிடிக்க பட்டுள்ளார் .
கடுமையான ,சித்திர வதைகளிற்கு ,யுக்ரைன் விமானி சிக்கியுள்ளார் ,
இவர் மூலம் பெற பட்ட தகவலை வைத்து ,யுக்ரைன் மீது ,அதிரடி தாக்குதல் ,வைத்தியம் ,செய்திட ,தாக்குதல் தயாரிப்புக்கள் இடம்பெறுகின்றன .
இலங்கை குறித்து உலக வங்கியின் அதிர்ச்சி அறிக்கை
இலங்கை குறித்து உலக வங்கியின் அதிர்ச்சி அறிக்கை
இலங்கையில் நிலவும் சீரற்ற அரசியல் சூழ்நிலை, நாட்டின் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மையை உருவாக்குகிறது என்று உலக வங்கி தெரிவித்துள்ளது..
கடன் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வெளி மற்றும் சில உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தேவைப்படுவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இலங்கையின் பொருளாதாரம் 2023 மற்றும் அதற்குப் பின்னரும் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்ளும் என உலக வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
2023 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.3 சதவீதமாக சுருங்கும் என்று அறிக்கை ஊடாக கணிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பங்காளிகளின் நிதியுதவியுடன் அரசாங்கத்தின் சீர்திருத்தத் திட்டத்தை வலுவாகவும் திறமையாகவும் செயல்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை சிறந்த முறையில் பராமரிக்க முடியும் என்று உலக வங்கி குறிப்பிட்டுள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 மற்றும் 2022ல் 27 இலட்சத்துக்கும் அதிகமானோர் வேலை இழந்துள்ளதாகவும், 27 லட்சம் பேர் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏழைக் குடும்பங்கள் மற்றும் நலிவடைந்த குடும்பங்களைப் பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரைஸ் குக்கரின் மூடியால் மகளின் முகத்தை சுட்ட தந்தை
ரைஸ் குக்கரின் மூடியால் மகளின் முகத்தை சுட்ட தந்தை
16 வயதுடைய மகளின் முகத்தில் ரைஸ் குக்கரின் மூடியால் தந்தையொருவர் சுட்ட சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பின்வத்த பொலிஸார் தெரிவித்தனர்.
பின்வத்தை வடுபாசல் தோட்டம் பிரதேசத்தில் வசிக்கும் சிறுமி ஒருவர் தனது தாயுடன் வந்து இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.
தீக்காயங்களுடன் சிறுமி நேற்று (05) இரவு தனது தாயுடன் பொலிஸில் முறைப்பாடு செய்து பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ரைஸ் குக்கரின் மூடியால் மகளின் முகத்தை சுட்ட தந்தை
அன்று இரவு சிறுமி வீட்டில் சமைத்துக்கொண்டிருந்த போது, சந்தேக நபர் இரவு 7.45 மணியளவில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சிறுமியின் தாய் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார்.
சந்தேகநபர் ரைஸ் குக்கரின் மூடியைத் திறந்து, “ஏன் இவ்வளவு சாதம் சமைக்கிறாய்?” எனக் கூறி ரைஸ் குக்கரின் மூடியை சிறுமியின் முகத்தில் வைத்துள்ளதாக சிறுமி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
முகம் மற்றும் கன்னங்களில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பின்வத்தை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.
நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது
நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது
வைத்தியர் போல் நடித்து வௌிநாடுகளுக்கு நபர்களை அனுப்புவதாக கூறி நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் பொரளை ரிட்வே சிறுவர் வைத்தியசாலைக்கு முன்பாக வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சந்தேகநபரிடம் நடத்திய விசாரணையில், அவுஸ்திரேலியாவில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி, கொழும்பு தேசிய வைத்தியசாலையினுள் வைத்தியர் போல் நடித்து, ஒருவரிடம் 70,000 ரூபாவை பெற்றுக் கொண்டமை தெரியவந்துள்ளது.
நிதி மோசடியில் ஈடுபட்ட போலி வைத்தியர் கைது
சந்தேக நபர் பன்னல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடையவர் எனவும் அவர் வத்துபிட்டியல பிரதேசத்தில் தற்காலிகமாக வசித்து வந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (06) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்
தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்
ரஷ்யா நாட்டின் இராணுவ பாதுகாப்பு அமைச்சு கட்டம் திடீரென ,
தீ பிடித்து எரிந்துள்ளது .மாஸ்க்கோவில் அதி உயர் பாதுகாப்பு நிறைந்த ,பாதுகாப்பு அமைச்சின் ,ஐந்தாவது மாடியில் திடீரென தீ பற்றி கொண்டது .
இந்த தீவிபத்தில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தீ சம்பவம் எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
உக்ரைன் மீதான ரஷ்யா இராணுவத்தின் படையெடுப்பின் பின்னராக ,
ரஷ்யாவுக்கு உள்ளே, இவ்வாறான தீ பரவல் ,
சம்பவங்கள் தொடராக இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
தீயில் எரிந்த ரஷ்யா பாதுகாப்பு அமைச்சு -உள்ளே நுழைந்த உளவாளிகள்
இந்து எதிரி நாடுகளின் ,திட்டமிட்டபட்ட சாதி செயலில் ஒன்றாக பார்க்க படுகிறது .குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ரஷ்ய பாதுகாப்பு அமைச்சுக்குள்ளும் எமக்கு ஆட்கள் உள்ளனர் என்பதை ,
இந்த தீ வைப்பு சம்பவம் ,ஊடக அமெரிக்கா ,இஸ்ரேல் ,நேட்டோ படைகள்,
ரஸ்யாவுக்கு ,இறுக்கமான செய்தியை உரத்து சொல்லியுள்ளனர் .
இதன் பின்னர் ,வரும்நாடகளில் ,உக்ரைன் களத்தில் .ரஷ்ய இராணுவம் நடத்த போகும் ,தாக்குதல் ,அல்லது நகர்வு மூலம் ,ரஷ்ய நிலை பாடுகள் வெளிப்படும் என எதிர் பார்க்கலாம் .
நேட்டோவை வெளுத்து வாங்கிய சீனா -திடீர் குத்துகாரணம்
நேட்டோவை வெளுத்து வாங்கிய சீனா -திடீர் குத்துகாரணம்
நேட்டோ நாடுகளை தக்க தருணம் பார்த்து சீன வெளுத்து வாங்கியுள்ளது .
ரஸ்யாவுடன் நெருங்கிய தொடர்புகள் ஏதும் இல்லை ,வாய் சொல்லில் ,
வரையறையற்ற உறவுகள் உள்ளதே தவிர ,உள்ளக உறவில் ,
ஆக்க பூர்வமாக ,ஏதும் இல்லை என ,ஐரோப்பிய ஒன்றியத்திற்கான சீன தூதர் ஃபூ காங்அடித்து விட்டுள்ளார் .
ரஸ்யாவை வெறுப்பதை போல தோற்றத்தை ,காண்பித்து ,நேட்டோ தலையில்
ஏறி நின்று மத்தளம் அடித்துள்ளார் .
ரஸ்யா மீது நேட்டோ நாடுகள் ,
தாக்குதல் மற்றும் அச்சுறுத்தலை விடுத்தது வருகிறது ,
அதனாகல்,அவர்கள் உக்ரைன் மீதான ,ஆக்கிரமிப்பு போரை,
தொடுத்துள்ளது என்கின்ற நியாயத்தை வலிந்து பேசியுள்ளார் .
நேட்டோ விலகினால் ,ரஸ்யா ஏன் உக்காரனை ,
கட்டி வைத்து அடிக்க போகிறது என்பது ,சீனாவின் வாதமாக உள்ளது .
கூட்டு வாங்கினாலும் மோதிர கையால் கூட்டு வாங்கணும் என்பது,
சீனாவின் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான
தூதர் பேச்சு வாயில்கா அம்பல பட்டுள்ளது .
பக்மூட்டை மீட்க ரஷ்ய கடும் யுத்தம் திணறும் உக்ரைன்
பக்மூட்டை மீட்க ரஷ்ய கடும் யுத்தம் திணறும் உக்ரைன்
உக்ரைன் கிழக்கு பக்மூட் பகுதியை முழுவதுமாக தமது கட்டு பாட்டுக்குள் கொண்டு வரும் ,மூர்க்கத்தனமான தாக்குதல்களை ரஷ்ய இராணுவம் நடத்தியது .
கடந்த 24 மணித்தியாலத்தில் 40 உடைப்பு தாக்குதல்களை,
மூன்று முனைகள் ஊடக கடுமையாகா மேற்கொண்டது .
பக்மூட்டை மீட்க ரஷ்ய கடும் யுத்தம் திணறும் உக்ரைன்
குபியன்ஸ்க், லைமன், அவ்திவ்கா மற்றும் மரிங்கா முனைகளில்,
ரஷ்யா கடுமையான எறிகணை ,ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
கார்கிவ் மாகாணத்தில் உள்ள குடியிருப்புகளும்
ரஷ்ய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன.
லைமன் முன்னணியில், நெவ்ஸ்கே மற்றும் செரிப்ரியன்ஸ்கா ,
காடுகளின் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா அகோர தாக்குதலை
நடத்திய வண்ணம் உள்ளது .
கடந்த தினம் உக்ரைன் படைகளிற்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
சில தினங்களில் பக்மூட் ரஷ்ய வாடகை இராணுவத்தின் வசம் வீழ்ந்து விடும்,
என்பதாக கள நிலவரம் உள்ளது .
வெடித்த கடும் போர் எரியும் இராணுவ தலைமையகம்
வெடித்த கடும் போர் எரியும் இராணுவ தலைமையகம்
உக்ரைன் ரஷ்யா போர் இன்று, களநிலவரம் ,கலவரமாக காண படுகிறது ,
உக்ரைன் கிழக்கு பக்மூட் ,பகுதியை முழுவதுமாக ,ஆக்கிரமிக்கும் ,பாரிய ,இராணுவ நடவடிக்கையை வாடகை ,இராணுவமான ,வாக்கினர் குழு ஈடுபட்டுள்ளது .
பல்முனை ,தாக்குதல்கள் ,கடுமையாக நடத்த படுகின்றன ,
உக்ரைன் ,இராணுவம் ,பின் வாங்கி செல்லும் ,
நிலைக்கு தள்ள பட்டு வருகிறது ,
யுக்கிறேன் கிழக்கு முழுவதுமாக ,ரஸ்யா படைகள் ,
கட்டுபாட்டுக்குள் சென்று விடும் ,தீவிர ,தாக்குதல்கள் ,தற்போது இடம்பெறுகிறது .
பயங்கர ,போர்க்களமாக, யுக்கிறேன் கிழக்கு ,போர்முனை உள்ளது ,ரசியா பாதுகாப்பு அமைச்சு ,
தீயில் எரிந்துள்ளது ,இந்த தீ சம்பவம் ,பெரும் ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வெடித்த கடும் போர் எரியும் இராணுவ தலைமையகம்,
நாளை மதுபான நிலையங்கள் மூடப்படுமா
நாளை மதுபான நிலையங்கள் மூடப்படுமா
நாளை (07) புனித வெள்ளி தினம் அரச விடுமுறை தினம் என்ற போதும் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மதுபானக் நிலையங்களும் திறந்திருக்கும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, சிங்கள இந்து புத்தாண்டுக்காக ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மாத்திரம் மதுபானக் நிலையங்கள் மூடப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்
இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்
இஸ்ரேல் உளவுத்துறையில் ஈரான் மிக முக்கிய தலைவர்கள் ,
இராணுவ தளபதிகள் இலக்கு வைத்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .
முக்கிய மூளையாக விளங்கும் தலைவர்களை, கொன்று விட்டால் ,
அந்த நாட்டின் படை பலம் சிதைக்க பட்டு விடும் என்கின்ற ,
இஸ்ரேல் மொஸாட்டின் கொள்கையால் ,
இவ்வாறான கொலைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
சிரியாவில் இரண்டு ஈரானின் ராணுவ ஆலோசகர்களும் ,
முக்கிய மூளையாக செயல் பட்டு வந்தவர்கள்
கொலை செய்ய பட்டனர் .
இஸ்ரேலுக்கு அடிகொடுக்க தயராகிய ஈரான் விமானங்கள்
அதற்கு பதிலடி வழங்கும் முகமாக இஸ்ரேலுக்குள்
நுழைய முயன்ற ,ஈரான் விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .
மேலும் மிக கொடிய தாக்குதலை ,ஈரான் நேரடியாகவும் ,
தனது ஆதரவு போராளி குழுக்கள் மூலம் ,
நடத்த கூடும் என இஸ்ரேல் எதிர் பார்க்கிறது .
ஹிஸ்புல்லா வசம் 150.000 ஏவுகணைகள்,ரொக்கட்டுக்கள் உள்ளன ,
இவை பாதுகாப்பான நிலத்தடி குகைகள் சேமித்து வைக்க பட்டுள்ளன .
இந்த ரொக்கட் குண்டுகள் இஸ்ரேலை விரைவில் தாக்கும் என ,
எதிர் பார்க்க படுவதால் ,ஈரானின் திட்டங்களை செயல் படுத்த விடாது ,
தடுக்கும் நகர்வில் இஸ்ரேல் செயல் பட்டு வருகிறது .
ஜெலன்ஸி இராணுவ தளபதிகளுடன் அவசர சந்திப்பு
ஜெலன்ஸி இராணுவ தளபதிகளுடன் அவசர சந்திப்பு
உக்ரைன் கிழக்கு பக் மூட் மத்திய நகரம் ,ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்ததை அடுத்து ,அவசர அவசரமாக உக்ரைன் இராணுவ தளபதி மற்றும் ,உளவுத்துறை தளபதி ஆகியோருடன் ஜெலன்ஸி சந்திப்பை மேற்கொண்டார் .
இதில் பக்மூட் கள நிலவரம் ,உக்ரைன் படைகள் பின்வாங்கல் ,
தொடர்பாக கேட்டு தெரிந்து கொண்டார் .
வரும் மணித்தியாலங்களில் அல்லது நாட்களில் ,உக்ரைன் கிழக்கு பக்மூட் ,
முற்றாக ரஷ்ய படைகள் வீழ்ந்து விடும் என ,
மேற்குலக உளவுத்துறை சில தெரிவித்துள்ளன .
இவ்வாறான நிலையில் நடந்து முடிந்த சந்திப்பு ,முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது .
தமது படை தரப்பி இழப்பை மறைத்து ,ரஷ்ய படைகளுக்கு பலத்த இழப்பு ,என உக்ரைன் தொடர்ந்து கூறி வந்த நிலையில் ,
பக் மூட் மத்திய நகர சபை வீழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது .
காதலன் முன்னே காதலி விபத்தில் மரணம்
காதலன் முன்னே காதலி விபத்தில் மரணம்
கொழும்பு – கண்டி செல்லும் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் கந்தானை பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய ரசாஞ்சலி என்ற யுவதி உயிரிழந்துள்ளார்.
அவர் தனது காதலனுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இவர்கள் இருவருக்கும் விரைவில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காதலன் முன்னே காதலி விபத்தில் மரணம்
இவர்கள் இருவரும் நேற்று வரகாபொல உடுவக்க நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்று, பின்னர் வீடு திரும்பும் போது பட்டலிய கஜுகம என்ற இடத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, காதலன் கடைக்குச் சென்றுள்ளார்.
இதன்போது குறித்த பெண் மோட்டார் சைக்கிள் அருகே இருந்த போது, அதிவேகமாக கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று மோட்டார் சைக்கிளின் அருகில் நின்றிருந்த இளம்பெண்ணை மோதிய நிலையில் பேருந்து அருகில் இருந்த வடிகாலில் விழுந்து நின்றுள்ளது.
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த யுவதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
குறித்த பஸ் இராணுவத்திற்கு வாடகைக்கு விடப்பட்டதுடன் அதன் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நிட்டம்புவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
உக்ரைனை அலற விட்ட ரஷ்யா -புலியொம்பகனை நாகதம்பிரான் video in
உக்ரைனை அலற விட்ட ரஷ்யா -புலியொம்பகனை நாகதம்பிரான் video in
உக்ரைனை அலற விட்ட, ரஷ்யா ஜனாதிபதி ,விளாதிமீர் புதின் ,
ரஷ்யா இராணுவம் தோல்வியில் ,உள்ளதாக பரப்புரை புரிந்த ,உக்ரைன் ,
இன்று ,தோல்வி ,நிலையில் சிக்கியுள்ளது .
நாவீன ஆயுதங்களை தந்து உதவுமாறு , வேண்டுதல் ,விடுத்து வருகிறார் ,
யுக்கிரேன் ,கிழக்கு பகுதி,பக்மூட் ,மத்திய பகுதி ,ரஸ்யா ,வாடகை , இராணுவம்
கைப்பற்றியுள்ளது .
ரஷ்யா போர் ,கள நிலவரம் ,இன்று ,குண்டுகளினால் ,அதிர்ந்த வண்ணம் உள்ளது .இஸ்ரேலை சுற்றி லட்சம், ஏவுகணைகள் குவிப்பு ,ஈரான் ,ஹிஸ்புல்லா ,கமாஸ் ,என்பன ,இஸ்ரேலை ,தாக்க , முற்றுகை ,போர், பதட்டம் நிலவுகிறது .
இலங்கை ,வன்னி ,புலியொம்பகனை நாகதம்பிரான் ,ஆலய திருவிழா,இன்று இடம்பெறுகிறது ,புலியொம்பகனை, நாகதம்பிரான் ஆலய திருவிழாவுக்கு ,பண்டம் செல்லும் மாட்டு வண்டில் ,காட்சிகள் இவை ,புலியொம்பகனை நாகதம்பிரான் video ,உள்ளே ,
பேரனின் தாக்குதலில் தாத்தாவும் பாட்டியும் மரணம்
பேரனின் தாக்குதலில் தாத்தாவும் பாட்டியும் மரணம்
பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவநிவச நாவலகம பல்லகெடுவ பகுதியில் நேற்று இரவு பேரனின் தாக்குதலுக்கு இலக்காகிய 80 வயதுடைய தாத்தாவும், 70 வயதுடைய பாட்டியும் உயிரிழந்துள்ளனர்.
தாக்குதலுக்கு இலக்கான தாத்தாவும் பாட்டியும் தெமோதர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது, தாத்தா தெமோதர வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும், 70 வயதுடைய பாட்டி மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள போதும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் சந்தேகநபரான பேரன் தலைமறைவாகி உள்ளதாக பல்லகெடுவ பொலிஸார் தெரிவித்தனர்
சந்தேக நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பல்லகெடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
குறித்த பேரன் போதைவஸ்து பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.













































