மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்
மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்
தலைமன்னார் பகுதியில் மூன்று மாணவிகளை கடத்த முற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு, தலைமன்னார் பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களுக்கான அடையாள அணிவகுப்பில், மூன்று சிறுமிகளும் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
முன்னதாக இந்த இரு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டு, மன்னார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுக்கான வழக்கு விசாரணை, மீண்டும் மன்னார் நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம். சாஜூத் முன்னிலையில் நேற்று (18) அழைக்கப்பட்டு, சந்தேக நபர்களை அடையாளம் காட்டுவதற்காக நீதிமன்றம் மூடப்பட்ட நிலையில் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது.
மாணவிகளை கடத்த முயற்சித்த சந்தேகநபர்கள் அடையாளம்
இதன்போது பாதிப்புகளுக்கு உள்ளான மூன்று சிறுமிகளும் இரு சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளனர்.
நடைபெற்ற இவ் அடையாள அணிவகுப்பு ஒரே நேரத்தில் இரு சந்தேக நபர்களுடன் மேலும் 14 பேர் இந்த அணிவகுப்பில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், நீதவான், முதலியார், ஆராய்ச்சி மற்றும் இவ் வழக்குக்கு முன்னிலையாகும் சட்டத்தரணிகள் மட்டுமே மன்றுக்குள் இருந்த நிலையில், இச் சிறுமிகள் சந்தேகநபர்களை அடையாளம் காட்டியுள்ளனர்.
கடந்த 11.05.2023 அன்று வியாழக்கிழமை மாலை, தலைமன்னார் கிராம பகுதியில் சிலுவை நகர் பகுதியில் வெள்ளை வேனில் சொக்கிலேற் மற்றும் பிஸ்கட் விற்பனைக்காக சென்றதாகக் கூறப்படும் இருவர், மூன்று சிறுமிகளுக்கு சொக்கிலேற் தருவதாக அழைத்து அவர்களை கடத்த முற்பட்டதையடுத்து, இவர்களை அக்கிராம மக்கள் பிடித்து, தலைமன்னார் பொலிஸில் ஒப்படைத்திருந்திருந்தனர்.
சந்தேகநபர்கள் சார்பாக சட்டத்தரணிகள் சர்மினி பிரதீபன், அர்ஜுன் அரியரட்ணம், ரூபன்ராஜ் டபேரா மற்றும் டெனிஸ்வரன் ஆகியோர் முன்னிலையாகினர்.
இந்த இரு சந்தேகநபர்களை எதிர்வரும் 01ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
கிழக்கு ஆளுநர் செந்தில் கடமையை பொறுப்பேற்றார்
கிழக்கு ஆளுநர் செந்தில் கடமையை பொறுப்பேற்றார்
கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நியமிக்கப்பட்ட செந்தில் தொண்டமான், திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இன்று (19) உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன்போது அமைச்சர் ஜீவன் தொண்டமான், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், முன்னாள் உள்ளூராட்சி மன்ற தவிசாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
இன்று (19) இரவு முதல் 10 மணித்தியாலங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பின் பல பகுதிகளுக்கு இன்று இரவு 10.00 மணி முதல் நாளை (20) காலை 08.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும்.
கோட்டே மற்றும் கடுவெல நகரசபை பகுதிகளுக்கும் மஹரகம மற்றும் பொரலஸ்கமுவ நகரசபை பகுதிகளுக்கும் நீர் விநியோகம் தடைப்படும்.
அத்துடன் கொழும்பு 04, 05, 07 மற்றும் 08 ஆகிய இடங்களுக்கு இதே காலப்பகுதியில் நீர் விநியோகம் தடைப்படும்.
அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக நீர் விநியோகம் இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
பிரான்ஸ் கைது எதிரொலி லெபனான் மத்திய வங்கி ஆளுநர் ராஜினாமா
பிரான்ஸ் கைது எதிரொலி லெபனான் மத்திய வங்கி ஆளுநர் ராஜினாமா
லெபனான் துணைப் பிரதமர் சாதே அல்-ஷாமி வியாழனன்று மத்திய வங்கி ஆளுநர்,ரியாட் சலாமேவை ராஜினாமா செய்யுமாறு அழைப்பு விடுத்தார்,
மோசடி குற்றச்சாட்டின் ஒரு பகுதியாக அவருக்கு எதிராக
பிரான்ஸ் கைது வாரண்ட் பிறப்பித்தது.
எந்த நாட்டிலும் இதுபோன்ற குற்றங்கள் இவ்வாறானவர்கள் மீது சாட்டப்பட்டால்,அவர்கள் பொறுப்பான பதவியில் இருக்கக்கூடாது,
உடனடியாக தங்களைத் தாங்களே ராஜினாமா
செய்ய வேண்டும் என்று ஷமி தெரிவித்துள்ளார் ,
பிரான்சின் இந்த கைது பிடிவிறாந்துக்கு எதிராக ,
மேல்முறையீடு செய்யப்போவதாக மத்திய வங்கி ஆளுநர்
சலாமே கூறியுள்ளார்.
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மரண செலவு 162 மில்லியன் பவுண்டுகள்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் மரண செலவு 162 மில்லியன் பவுண்டுகள்
பிரிட்டன் மகாராணி எலிசபெத் அவர்கள் மரணமடைந்த பொழுது ,
அவரது மரண சடங்கு செலவுகள் 162 மில்லியன் என வெளிவந்துள்ளது .
இந்த இறுதி நிகழ்வு செலவுகள் ,உலக மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,
ஆடம்பரமாக நடத்த பட்ட மரண சடங்கு என்ற பெயரை தட்டி சென்றுள்ளது ,
பாதுகாப்பு ,வருகை விருந்தினர்கள் ,அவர்கள் தங்குமிடம் ,போலீசார் ,வாகன செலவுகள்,
என அனைத்தும் இதில் உள்ளடக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உக்ரைன் படைகள் வசம் முக்கிய பகுதிகள் வீழ்ந்தன
உக்ரைன் படைகள் வசம் முக்கிய பகுதிகள் வீழ்ந்தன
கடந்த தினம் மாலை நிலவரப்படி, உக்ரேனியப் படைகள் பாக்முட்டின் தென்மேற்கை ,தமது கட்டுப்பாட்டில் வந்துள்ளது என அறிவித்துள்ளது ,
மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் தம் வசமாகும் தாக்குதல் தொடர்ந்த வண்ணம்உள்ளதாக அறிவித்தியுள்ளது
ரஷ்யா தனது துணை படைகளை பாக்முட்டில் நிலைநிறுத்தியது ,
ஆனால் உக்ரேனிய ஆயுதப்படைகள் ,அனைத்து ரஷ்ய தாக்குதல்களையும் ,
வெற்றிகரமாக முறியடித்தன.
ரஷ்ய துருப்புக்கள் பாக்முட்டின் வடக்கு புறநகரில் உக்ரேனியப் படைகளைத் தாக்கின;அந்த தாக்குதல்கள் தோல்வியடைந்தன.
உக்ரேனியப் படைகள் பாக்முட் போர்முனையின் ,
சில பகுதிகளில் 500 மீட்டர்கள் வரை முன்னேறின.
உக்ரைன் படைகள் வசம் முக்கிய பகுதிகள் வீழ்ந்தன
பக்முட்டின் தெற்கு புறநகர்ப் பகுதியிலும் கடுமையான சண்டைநடந்து வருகிறது ,ரஷ்யப் படைகள் தாங்கள் இழந்த பிரதேசங்களை மீண்டும் ,
கைப்பற்றும் முயற்சியில் தாக்குதலைத் தொடர்ந்தன,
ஆனால் அவர்களின் இலக்குகளை அடைய முடியவில்லை.
உக்ரேனியப் படைகள் இந்தப் பகுதியில் ஒரு கிலோமீட்டர் வரை முன்னேறின,
பாதுகாப்பை பல படுத்தி வருவதாகும் தமக்கு கிடைக்க மிக பெரும் வெற்றிக்கு இதுவென முழங்கியுள்ளது .
மீட்க பட்ட பகுதியில் பாதுகாப்பை பல படுத்தி வருகிறோம் ,
நமக்கு கிடைத்த மிக பெரும் வெற்றிக்கு இதுவென முழங்கியுள்ளது .
ஈரானை அழிப்போம் இஸ்ரேல் அமெரிக்கா அறிவிப்பு
ஈரானை அழிப்போம் இஸ்ரேல் அமெரிக்கா அறிவிப்பு
ஈரானை அழிப்போம் இஸ்ரேல் அமெரிக்கா அறிவிப்பு ,
தாக்குதலுக்கு தயாராகும் இராணுவம் பதட்டம் அதிகரிப்பு ,
சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு
சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு
தீய சக்திகளை விரட்டுவதற்காக சிறுவனின் உள்ளங்கையில் கற்பூரத்தை எரித்து சிறுவனைப் பலத்த காயத்திற்கு ஆளாக்கிய பௌத்த பிக்கு ஒருவர் வீரவில பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
வீரவில குட கம்மன பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவனே இவ்வாறு தீக்காயத்திற்கு ஆளாகியுள்ளார்.
பெற்றோரால் கைவிடப்பட்ட குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார். பாட்டி சிறுவனுக்கு ஜாதகம் பார்க்க, அருகில் உள்ள வீரவில கங்காதிலேகா ராம விகாரையிலுள்ள ஜோதிடரும் பேயோட்டுபவருமான பிக்கு ஒருவரிடம் சிறுவனை அழைத்துச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் கையில் கற்பூரம் கொளுத்திய பிக்கு
சிறுவனின் ஜாதகத்தை வாசித்த பிக்கு சில மத சடங்குகளை செய்ததுடன் தீய கிரக தோஷங்களைப் போக்க வேண்டுமெனக் கூறி சிறுவனின் கையில் கற்பூரத்தை பற்ற வைத்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் தெபரவேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான பிக்கு திஸ்ஸமஹராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்; கொழும்பில் பதற்றம்
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க சிலர் முயற்சித்ததால் கொழும்பில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு, பொரளையில் இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன் போது ‘புலிகளின் நினைவேந்தல் வேண்டாம்’ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது. போராட்டம் காரணமாக பொரளை சுற்றுவட்டாரத்திற்கு அருகில் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
வீழ்ந்த விமானம் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
வீழ்ந்த விமானம் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
கொலம்பியாவில் காட்டு பகுதியில் வீழ்ந்த பயணிகள் விமானம் ,
உனக்கு சிறுவர்கள் இரண்டு வாரத்தின் பின் உயிருடன் மீட்கப்பட்ட
கட்ட அதிசயம் நிகழ்ந்துள்ளது .
கொலம்பியாவில் விமானம் விபத்துக்குள்ளான ,
சில வாரங்களுக்குப் பிறகு 4 குழந்தைகள் காட்டில் உயிருடன் கண்டெடுக்கப்பட்டனர்.
வீழ்ந்த விமானம் 4 சிறுவர்கள் உயிருடன் மீட்பு
கொலம்பியாவில் உள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த,
நான்கு குழந்தைகள், அவர்கள் பயணித்த விமானம் ,
அடர்ந்த காட்டில் விழுந்து நொறுங்கிய இரண்டு வாரங்களுக்கு மேலாக,
நாட்டின் தெற்கில், உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டனர் ,
விமான விபத்தில் காணாமல் போன நான்கு குழந்தைகளை ,
நமது ராணுவத்தினர் தீவிர தேடுதலுக்கு பிறகு உயிருடன் கண்டுபிடித்துள்ள
செயலானது ,நாட்டிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதக
அந்த நாட்டு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்
கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்
பிரிட்டன் இளவரசர் கரி மற்றும் அவரது மனைவி மேகன் ,
அவரது தயார் பயணித்த காரினை
டசின் கணக்கான கார்கள் துரத்தியதால் பர பரப்பட்டு ஏற்பட்டது .
அமெரிக்கா நியுயோர்க்கில் உள்ள விருது வழங்கும் விழாவில் கலந்து
கொள்ள கரி தம்பதிகளே ,இந்த கார் துரத்தலில் சிக்கி கொண்டனர் .
டயானவை 1997 ஆம் ஆண்டு பிரான்ஸ் குகைக்கு அருகில் ,
வைத்து வீதிபத்தில் கொன்றதை போன்ற செயலாக ,
இது ஒப்பிடப் படுகிறது .
கரி மேகனை துரத்திய கார்கள் காயங்கள் இன்றி தப்பித்தனர்
பிரிட்டன் அரண்மனையுடன் கரி மனைவி மேகன் ,
பகைத்து கொண்டுள்ள நிலையாலும் ,அவர் பூர்வீகம்
எதிர்மறையாக உள்ளதாலும் ,உள் பூசல்கள் விரிவடைந்து காணப்படுகிறது .
இங்கே நடந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
இளவரசராக சாள்ஸ் பதவி ஏற்ற சில நாட்களில் ,
இந்த கார் துரத்தல் சம்பவம் இடம் பெற்றுள்ளது குறிப்பிட
தக்கது .
லண்டன் கட்வீக் விமான நிலையத்திற்குள் பறந்த பலூன் மூட பட்ட பட்ட வான் நிலையம்
லண்டன் கட்வீக் விமான நிலையத்திற்குள் பறந்த பலூன் மூட பட்ட பட்ட வான் நிலையம்
லண்டன் கட்வீக் விமான நிலையத்திற்குள் ,
திடீரென பல பலூன்கள் பறந்ததால் ,
அந்த விமான தளம் பல மணி நேரம் அடித்து மூட பட்டது .
மர்ம நபர்கள் ஏவிய பலூன் காரணமாக ,
விமான தளம் அடித்து மூட பட்டது .
டிரோன் மூலம் கண்காணிப்பில் ஈடுபட்டதக கணடறிய பட்டுள்ளது .
குறித்த சமபவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .
கடந்த ஞாயிற்று கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது
ரஷ்யா வெறியாட்டம் எரியும் உக்ரைன்
ரஷ்யா வெறியாட்டம் எரியும் உக்ரைன்
ரஷ்யா வெறியாட்டம் எரியும் உக்ரைன் ,
உக்ரைன் ஆயுத கிடங்குள் அழிப்பு ,வெடித்த கடும் போர் ,
ரஷ்யா வெறியாட்டம் எரியும் உக்ரைன்
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில்
13ம் இலக்க லயன் குடியிருப்புக்கு அருகாமையில் முச்சக்கர வண்டியில் இருந்து
விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தசம்பவம் 17.05.2023. புதன்கிழமை இரவு ஏழு மணியளவில் இடம்பெற்றதோடு
சம்பவம் தொடர்பில் உயிரிழந்த இளைஞனின் சித்தப்பா பொகவந்தலாவ
பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் .
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த
தோட்டத்தில் இருந்து பொகவந்தலாவ டியன்சின் தோட்டத்தில் உள்ள அவரது
சித்தப்பாவின் வீட்டுக்கு குறித்த நபர் நேற்றைய தினம் வந்திருந்த போது, குறித்த வீட்டில் இருந்து அவர்களுடைய உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் செல்லும் வழியில் முச்சக்கர வண்டியில் இருந்து தவறி விழுந்துள்ளதாகவும், விழுந்து உயிரிழந்தவர் மற்றும் முச்சக்கர வண்டியை செலுத்திய சாரதி ஆகியோர் மது போதையில் இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் இரத்தினபுரி கல்லேல பம்பரலாங்கந்த தோட்டத்தை சேர்ந்த 34 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான மும்மூர்த்தி ரஞ்சன் என பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில்
தெரிய வந்துள்ளது.
முச்சக்கர வண்டியில் இருந்து விழுந்த நபரை பொகவந்தலாவ வைத்தியசாலைக்கு
கொண்டு சென்று அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
2 பிள்ளைகளின் தந்தை பலி ;சித்தப்பா கைது
சம்பவம் தொடர்பில் ஹட்டனில் இருந்து தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரனைகளை அரம்பித்துள்ளதோடு ஹட்டன் நிதீமன்ற பதில் நீதவான் நாராயணன் பாத்தீபன் தலைமையில் மரண விசாரணைகள் இடம் பெற்று சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக
பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.
இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்
இத்தாலியில் வெள்ளம் 8 பேர் மரணம்
இத்தாலியின் வடக்கு எமிலியா ரோமக்னா பகுதியில் ,
பெய்த மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி
எட்டு பேர் பலியுள்ளனர் .
மேலும் பல்லாயிரயிரக்கணக்கானோர் ,
வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர் .
இராணுவத்தினர் மற்றும் ,இராணுவ உலங்கு வானூர்திகள் என்பனவும்
மீட்பு பணியில் ஈடுபட்டுளள்து .
வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதால் சொத்தழிவு ,பல மில்லியன் என
எதிர் பார்க்க பாடுகிறது
பாக்முட் போர்முனையில் 500 மீட்டர்களை மீட்ட உக்ரைன் படைகள்
பாக்முட் போர்முனையில் 500 மீட்டர்களை மீட்ட உக்ரைன் படைகள்
உக்ரேனியப் படைகள் கடந்த 24 மணி நேரத்தில் அதிக
வெற்றியைக் கண்டதாகவும், பக்முட் முன்பகுதியில்
500 மீட்டர்கள் வரை முன்னேறி, ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்து
உக்ரேனிய நிலத்தை விடுவித்ததாகவும் தெரிவித்தனர்
எதிரி படைகள் எங்கள் நிலைகள் மீது 456 முறை துப்பாக்கிச் சூடு
தாக்குதலை நடத்தினர் .
இந்த இரு தரப்பு மோதல்களில் 107 ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டனர் மேலும்
153 பேர் காயமடைந்தனர்.
காலாட்படை சண்டை வாகனம், ஒரு வான்வழி சண்டை வாகனம், ஆறு விமானங்கள்
என்பனவற்றை ரஷ்ய படைகள் இழந்துள்ள .
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு அழைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியில் இன்று (18) இடம்பெறும் 14 ஆவது ஆண்டு நினைவேந்தலில் அனைத்து மக்களையும் கலந்துகொள்ளுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொது கட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில் தமது வீடுகளில் சுடர் ஏற்றி அஞ்சலிக்குமாறும் ஒருவேளை உணவாக முள்ளிவாய்க்கால் கஞ்சியை வீடுகளில் பரிமாறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்பட்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட ஒருவர் பொதுச்சுடர் ஏற்றவுள்ளதோடு ஏனைய உறவுகளுக்கான சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு
6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு
கொஸ்லந்த பொலிஸ் பிரிவிலுள்ள பலஹருவ பிரதேசத்தில் நேற்று கஞ்சா செடிகள் பயிரிடப்பட்ட காணி ஒன்றினை ஹப்புத்தளை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு 6 அடி கொண்ட 225 கஞ்சா செடிகளை மீட்டு அழித்துள்ளனர்.
6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகள் கண்டுபிடிப்பு
விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து நேற்று மாலை குறித்த பிரதேசத்தில் கஞ்சா பயிரிடப்பட்ட காணியை விசேட அதிரடிப்படையினர் முற்றுகையிட்டு, 15 பேச் நிலப்பரப்பில் 6 அடி உயரம் கொண்ட 225 கஞ்சா செடிகளை பிடிங்கி அழித்ததுடன் அதில் ஒரு பகுதியை சட்டநடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொஸ்லந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்
கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில் காணமல் போயுள்ளார்.
யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை மயிலிட்டி தாளையடி வீதியைச் சேர்ந்த சிவகுமார் பிந்துசன் என்ற 29 வயதான இளைஞரே கொழும்பு புறக்கோட்டையில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில் காணாமல் போயுள்ளார்.
இளைஞன் காணாமல் போனமை தொடர்பாக 2022.10.13 அன்று பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்தும், இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என இளைஞனின் தாயார் சிவகுமார் காந்திமதி தெரிவிக்கின்றார்.
கொழும்பில் காணாமல் போன யாழ். இளைஞன்
மனநிலை பாதிக்கப்பட்ட குறித்த இளைஞன் அதற்குரிய சிகிச்சைகளையும் பெற்றுக்கொண்டிருந்தாக கூறும் தாயார், எழு மாதங்களாக தேடியும் குறித்த இளைஞனை கண்டுபிடிக்க இயலாத நிலையில் ஊடகங்களை நாடுவதாக தெரிவித்தார்.
குறித்த இளைஞன் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் 077-5988204, 077-5547218 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது
மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்
மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்
அவர் எனக்கு மதுபானப் போத்தல் ஒன்றைத் தந்து எனது கணவனைக் கொல்ல சொன்னார். அதனால் நான் அவரைக் கொன்றேன்” என முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் தனது தகாத உறவு மனைவியுடன் இணைந்து அவரின் கணவனைப் படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்பு இருப்பதாக கூறப்படும் இரண்டு பிள்ளைகளின் தந்தை நேற்று (17) மொரவக்க நீதவான் துமிந்த பஸ்நாயக்க முன்னிலையில் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகின்றீர்கள் என நீதவான் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஊறுபொக்க தொலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதான ஜினதாஸ என்பவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். 33 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாகக் கூறப்படும் அவரின் கொலைச் சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைக்கு சந்தேக நபருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதே குறித்த சந்தேக நபரால் இந்த உண்மைகள் முன்வைக்கப்பட்டன.
மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்
இந்த சம்பவம் தொடர்பில் மொறவக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 69 வயதான இரு பிள்ளைகளின் தந்தையும் 83 வயதான பெண்ணும் நேற்று (18) நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.
இது தொடர்பில் நீதவான் சந்தேக நபரிடம் வினவிய போது “ அவரால் தான் இந்தக் கொலையை செய்தேன். அவர் எனக்குக் குடிக்க கொடுத்து அவரைக் கொல்லச் சொன்னார். பின்பு புதைக்க வேண்டிய இடத்தையும் அவரே காட்டினார்” என தெரிவித்தார்.
இது தொடர்பில் மொறவக்க பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்ட ஜினதாசவின் மூத்த மகனும் மே மாதம் 11 ஆம் திகதி குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்ததாகவும் தெரிவித்திருந்தனர்.
உயிரிழந்த நபரான ஜினதாச புதைக்கப்பட்ட இடத்திற்கு கடந்த 15 ஆம் திகதி ஆய்விற்காக சென்ற போது, அவ்விடத்தில் கழிவறை கட்டப்பட்டிருந்ததுடன் அதை உடைத்து தோண்டிய போது சுமார் 9 அடி ஆழத்திலிருந்து உடல் உறுப்புகள் கிடைத்ததாக பொலிஸாரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மது கொடுத்து கொல்லச் சொன்னார் நான் கொன்றேன்
புதைக்கப்பட்ட இடத்திலிருந்த உடல் உறுப்புகள் மற்றும் பொருட்கள், தனது கணவருடையது என சந்தேகநபர் அடையாளப்படுத்தியதாகவும், தனது கணவரை கொன்று புதைத்ததாக கூறி அவர் கதறி அழுததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை கருத்திற்கொண்ட நீதிமன்றம் சந்தேகநபர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன் வழக்கை அன்றைய தினம் வரை ஒத்திவைத்தது.
69 வயதான எஸ். சோமதாச என்ற இரு பிள்ளைகளின் தந்தை மற்றும் அவருடன் தகாத உறவில் இருந்த பெண்ணான 83 வயதான றோசலின் என்ற இருவருமே இவ்வாறு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.













































