அமெரிக்கா விமான தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமான தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

அமெரிக்கா விமான தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

சிரியாவில் உள்ள Syria’s al-Omar oil அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த முகாம் மீது 15 ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த தாக்குதலில் அந்த இராணுவ முகாமின் ஆயுத தளபாடங்கள் ,இராணுவத்தினருக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக தாக்குதலை நடத்திய குழுக்கள் தெரிவித்துள்ளன

அதே சமவேளை US Al-Tanf base தளம் மீதும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,ஈராக்கை தலமாக கொண்டு இயங்கும்
ஆயுத குழுவினர் விமானங்களி அபயன் அப்டுத்தி தகத்தலை நடத்தியுள்ளனர் .

அமெரிக்கா விமான தளங்கள் மீது ரொக்கட் தாக்குதல்

இரண்டு விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தியுள்ளன.இந்த தகத்தலிலும் அந்த அமெரிக்கா தாளத்திற்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

தொடர்ந்து நடத்த பட்டு வரும் தாக்குதலில் அமெரிக்கா படைகளிற்கு சேதங்கள் ஏற்பட்டுளள்ன ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் அந்த தளங்களில் பொறுத்த பட்டுள்ள பொழுதும் .


ஈரான் ஆதரவு படைகளின் ரொக்கட்டுக்குள் துல்லியமாக இராணுவ முகாமில்
வீழ்ந்து வெடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

வீடியோ

ரொக்கட் தாக்குதல் உடைத்த இஸ்ரேல் வீடுகள்|Rocket hits isreal building|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ரொக்கட் தாக்குதல் உடைத்த இஸ்ரேல் வீடுகள்|Rocket hits isreal building|

ரொக்கட் தாக்குதல் உடைத்த இஸ்ரேல் வீடுகள்|Rocket hits isreal building|

அடுக்கு மாடி குடியிருப்பில் வீழ்ந்து வெடிததில் ,வீட்டின் வெளிப்புற சுவரை
இடித்து நுழைந்த ரொக்கட் அந்த வீடடை உடைத்து அளித்துள்ளது .

வீடு சேதம் அடைந்த பொழுதை போதிலும் ,அங்கிருந்த மக்களுக்கு சேதங்கள் ஏதுமின்றி தப்பித்து
கொண்டதாக தெரிவித்துள்ளனர் .

அதே சமவேளை சதேரோட் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது ,இங்கும் வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன .
வீடுகள் உடைந்த காட்சிகள் வெளியிட பட்டுள்ளன .

தரைவழியாக நடத்த பட்ட இரன்டுவ நடவடிக்கையின் பொழுது 150 சுரங்கங்கள் ஆயிரத்துக்குமேற்பட்ட இலக்குகள் தாக்கி அழிக்க பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .


அவ்வாறு தெரிவித்த சில மணித்தியாலங்களில் காஸாவில் இருந்து ரொக்கட் வீழ்ந்து வெடித்துள்ளது .


அழிக்க பட்ட காசா போராட்ட காரர்கள் எவ்வாறு முப்பதுக்கு மேற்பட்ட ராக்கட் ஒரே தடவையில் வீச பட்டது என்பது தொடர்பாக தெரிவிக்க படவில்லை .

இஸ்ரேல் தரைவழி நடவடிக்கையில் கோருவது போன்று ஹமாஸ் இலக்குகள்
உண்மையில் தாக்குதலுக்கு உள்ளதா என்கின்ற கேள்வியை இந்த ரொக்கட்
தாக்குதல் ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

வெடித்து சிதறிய பயணிகள் ரயில்
Posted in உலக செய்திகள்

இந்தியா ஆந்திரபிரதேசில் இரு ரயில்கள் மோதல் 13 பேர் மரணம் 50 காயம்

இந்தியா ஆந்திரபிரதேசில் இரு ரயில்கள் மோதல் 13 பேர் மரணம் 50 காயம்

இந்தியா ஆந்திரபிரதேஸ் பகுதியில் இரண்டு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறியது .
இதன் பொழுது அதில் பயணித்த மக்களில் 13 பேர் பலியாகினர் .

மேலும் ஐம்பது பேர் காயமடைந்தனர் .
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

இந்த விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் கணவன் பலி மனைவி கைது

விபத்தில் கணவன் பலி மனைவி கைது

விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியான சம்பவத்தை அடுத்து, அவரது மனைவியும், முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் காரொன்று மோதியதில் படுகாயமடைந்த ஒருவர், மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தார். இந்த சம்பவம் கடந்த 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

விபத்தில் கணவன் பலி மனைவி கைது

இச்சம்பவம் தொடர்பான விசாரணையில், இது சாதாரண விபத்து அல்ல, இறந்தவரின் மனைவி மற்றும் அவரது முறைக்கேடான கணவன் இணைந்து செய்த கொலை எனத் தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்தே உயிரிழந்த கணவனின் மனைவியும், மனைவியின் முறைக்கேடான கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

உலக வங்கிக் குழுவினர் யாழுக்கு விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

உலக வங்கிக் குழுவினர் யாழுக்கு விஜயம்

உலக வங்கிக் குழுவினர் யாழுக்கு விஜயம்

இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு தினம்திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.

அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்காக கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம் செய்துள்ளது.

உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையில் குறிப்பிட்ட விஜயம் மேற்கொள்ளப்பட்டது.

ஆய்வை ஆரம்பிக்கும் சீன கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

ஆய்வை ஆரம்பிக்கும் சீன கப்பல்

ஆய்வை ஆரம்பிக்கும் சீன கப்பல்


நாட்டை வந்தடைந்துள்ள சீன ஆய்வுக் கப்பலான “ஷி யான் 6”, நாரா நிறுவனத்துடன் இணைந்து இன்று (30) நாட்டின் மேற்குக் கடலில் தனது ஆய்வு நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.

“ஷி யான் 6 என்ற சீன ஆய்வுக் கப்பல் கடந்த 25ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், இது தொடர்பான ஆய்வுகளை இன்றும் நாளையும் (31) மேற்கொள்ள வெளிவிவகார அமைச்சு அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது.

ஆய்வை ஆரம்பிக்கும் சீன கப்பல்

இந்த ஆராய்ச்சிக்கு அமைய கப்பலின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்குக் கடலின் நீர் மாதிரிகள் எடுக்கப்படவுள்ள நிலையில், அதில் நாரா நிறுவனம் மற்றும் கடற்படை வீரர்களும் பங்கேற்கவுள்ளனர்.

இந்த ஆய்வின் போது கடல் நீரின் உப்புத்தன்மை மற்றும் வெப்பநிலை குறித்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், கடந்த 2010ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை இந்த சோதனைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான 700 000 Kg அரிசி
Posted in இலங்கை செய்திகள்

மாயமான 700 000 Kg அரிசி

மாயமான 700 000 Kg அரிசி

குருநாகல் பிரதேசத்தில் உள்ள 2 அரச அரிசி களஞ்சியசாலைகளில் இருந்து 7 இலட்சம் கிலோ அரிசி காணமல் போயுள்ளதாக அரிசி சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் 2 அதிகாரிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காணாமல் போன அரிசியின் பெறுமதி சுமார் 65 – 70 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் எகிறிய உயிரிழப்போரின் எண்ணிக்கை

இலங்கையில் எகிறிய உயிரிழப்போரின் எண்ணிக்கை

நாட்டில் உயிரிழப்போரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 2 வருடங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே குறித்த தகவல் வௌியாகியுள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2012 ஜூலை முதல் 2013 ஜூன் வரை இலங்கையில் பதிவான இறப்புகளின் எண்ணிக்கை 125,626 ஆக பதிவாகியுள்ள போதிலும், 2022 ஜூன் முதல் 2023 ஜூன் வரை இலங்கையில் நிகழ்ந்த இறப்புகளின் எண்ணிக்கை 190,600 என்று தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டில் இலங்கையின் சராசரி வருடாந்த சனத்தொகை வளர்ச்சி குறைந்துள்ளதாகவும் அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

இலங்கையில் எகிறிய உயிரிழப்போரின் எண்ணிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் கூற்றுப்படி, பிறப்பு எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, இறப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது.

எவ்வாறாயினும், இந்த மரணங்கள் படிப்படியாக அதிகரித்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. மேலும் இந்த நாட்டில் கொவிட் பரவியதன் பின்னர் இந்த நிலைமை அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட் தடுப்பூசி குறித்து பல்வேறு தரப்பினரிடையே பல்வேறு கருத்துகள் இருந்தாலும், இது தொடர்பாக இதுவரை குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை, உலகில் சராசரியாக வருடாந்த இறப்பு வீதம் 15 வீதத்திலிருந்து 45 வீதத்திற்கு இடையில் ஒரு வீதத்தினால் அதிகரித்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்


எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரசாங்க சேவைகள் உட்பட பலர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று பகல் 12.00 மணிக்கு மதிய உணவு வேளையில் இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு பின்னர்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

தொழிற்சங்க போராட்டங்களை ஒடுக்குவதே அரசாங்கத்தின் அடுத்த முயற்சி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் (31) தமது சேவையிலிருந்து விலகி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தொடர்ந்தும் அதிகாரிகள் தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கத் தவறியதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் .ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் விமானம் சுற்றிவளைப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் விமானம் சுற்றிவளைப்பு

இஸ்ரேல் விமானம் சுற்றிவளைப்பு

இஸ்ரேல் பயணிகள் விமானம் பலஸ்தீன போராட்ட காரர்களினால்
சுற்றிவளைப்பு ,விமான நிலையத்தில் பதட்டம்

வீடியோ

பொறிக்குள் சிக்கிய இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தாக்குவது எப்படி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

பொறிக்குள் சிக்கிய இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தாக்குவது எப்படி

பொறிக்குள் சிக்கிய இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் தாக்குவது எப்படி

பாலஸ்தீஹனம் காசா பகுதியை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை
ஒன்றை இஸ்ரேலிய இராணுவம் தரைவழியாக ஆரம்பித்துள்ளனர் .

இஸ்ரேல் எல்லையான (Erez crossing) வழியை கடந்து காசாவுக்குள் இஸ்ரேல்
இராணுவம் கனரக யுத்த டாங்கிகள் ,ஏவுகணை வண்டிகள்,
கவச வண்டிகள் ,ஆட்டிலறிகளுடன் நுழைந்துள்ளனர் .

video

Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|isreal lost 2 tank|


எரியும் இஸ்ரேல் டாங்கிகள்|isreal lost 2 tank|

முன்னேறி வந்த இஸ்ரேல் இராணுவத்தினர் மீது கடும் தாக்குதல் ,
எரியும் இஸ்ரேல் டாங்கிகள் ,வெடித்த உக்கிர போர் ,|isreal lost 2 tank|

வீடியோ

ஈரான் ஆயுத விமானம் தடுப்பு|iran weapons flight|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் ஆயுத விமானம் தடுப்பு|iran weapons flight|


ஈரான் ஆயுத விமானம் தடுப்பு|iran weapons flight|

ஈரான் ஆயுத விமானம் தடுப்பு ,
விமான ஓடு பாதைகள் உடைப்பு
,இஸ்ரேல் இராணுவம் மோதல் உச்சம் ,|iran weapons flight|

வீடியோ

காசாவுக்குள் நுழையும் இஸ்ரேல் இராணுவம்|palestine Gaza war|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காசாவுக்குள் நுழையும் இஸ்ரேல் இராணுவம்|palestine Gaza war|

காசாவுக்குள் நுழையும் இஸ்ரேல் இராணுவம்|palestine Gaza war|

காசாவை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் இராணுவம் ,
காஸாவுக்குள் நுழையும் கடும் தாக்குதல் ஆராம்பம் ,

வீடியோ

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|


இந்தியாவில் தொடர் குண்டு வெடிப்பு |Kerala Kochi explosions|

இந்தியாவில் தொடராக மூன்று குண்டுகள் வெடிப்பு .
கேரளா மாநிலம் கொச்சினில் கிறிஸ்தவ வாழிபாட்டு கூட்டத்தில் வெடித்த குண்டு பல மக்கள் காயம் .


இந்தியாவுக்குள் நடத்தியது யார் ,விசாரணைகள் தீவிரம் ,|Kerala Kochi explosions|

வீடியோ

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்

இஸ்ரேல் – ஹமாஸ் போரின் போது உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் சடலம் இன்று (28) காலை நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

களனி ஈரியவெட்டிய பிரதேசத்தை சேர்ந்த அனுலா ரத்நாயக்க 2013 ஆம் ஆண்டு இஸ்ரேலுக்கு உதவியாளராக சென்றிருந்தார்.

காசா மற்றும் இஸ்ரேல் எல்லைக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பணி செய்து கொண்டிருந்த போது, தீவிரவாத தாக்குதல் துரதிஷ்டவசமாக உயிரிழந்தார்.

விவசாய கிராமமாக இருந்த இந்த பகுதிகளை கடந்த 7ம் திகதி எல்லைக்குள் ஊடுருவிய ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலின் பின்னர், அனுலா ரத்நாயக்க காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

இஸ்ரேலிய தூதரகம் சில நாட்களுக்குப் பிறகு அவரது மரணத்தை உறுதிப்படுத்தியது.

இறக்கும் போது 49 வயதான அனுலா ரத்நாயக்க இரண்டு பிள்ளைகளின் தாயாவார்.

இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா தொடர்பில் வௌிவந்த தகவல்

இஸ்ரேலிய தடயவியல் மருத்துவர்கள், அந்த உடல் அனுலாவினுடையது என்பதை உறுதிப்படுத்த அவரது உறவினர்களிடம் டிஎன்ஏ பரிசோதனை அறிக்கையை கோரினர்.

பின்னர் அவரது உடலை உறவினர்கள் வீடியோ தொழில்நுட்பம் மூலம் அடையாளம் கண்டிருந்தனர்.

இந்நிலையில், அனுலா ரத்நாயக்கவின் இறுதி அஞ்சலி மற்றும் சமய சடங்குகளும் இஸ்ரேலில் இடம்பெற்றன.

அனுலா ரத்நாயக்க பராமரித்து வந்த இஸ்ரேலியப் பெண்ணும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தார்.

அதன் பின்னர் இலங்கையில் உள்ள இஸ்ரேல் தூதரகத்தின் தலையீட்டில் அனுலா ரத்நாயக்கவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது.

அதன்படி, இன்று காலை 9.45 அளவில் அவரது உடல் இஸ்ரேலில் இருந்து இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்நிகழ்வில் அனுலாவின் கணவர், மகள், மகன் மற்றும் உறவினர்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

அனுலா ரத்நாயக்கவின் சடலம் இன்று பிற்பகல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் இன்று இரவு களனி ஈரியவட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது

எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 37 கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றும் (28) இன்று அதிகாலையும் (29) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 14 பேரும் தலைமன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்த குற்றச்சாட்டில் 23 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 5 இழுவைப் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள
அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் DIG ரவி செனவிரத்ன கைது

முன்னாள் DIG ரவி செனவிரத்ன கைது

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.

மதுபோதையில் வாகனம் செலுத்தி 02 வாகனங்களை விபத்திற்கு உள்ளாக்கிய சம்பவம் தொடர்பிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெள்ளவத்தை, மெரீன் டிரைவ் வீதியில் நேற்று (28) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ரவி செனவிரத்ன ஓட்டிச் சென்ற கார் பஸ் மற்றும் காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன இன்று (29) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு

குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ்

தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும் நெடுந்தீவு பயணிகள் படகுகளிற்கே இறங்கு துறையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நேர அட்டவணைப்படி சீராக இறங்கு துறையில் படகுகள் தரித்து மக்களுக்கு அசௌகரியமற்ற சேவை வழங்குவதை ஒழுங்குபடுத்தி உறுதிப்படுத்துவதற்காக இரண்டு கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறிக்கட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்ற படகுகளை தரிப்பதற்கு ஒழுங்கு முறைகள் பின்பற்றப்படாமையினால் பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு

குறிப்பாக, மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை மாத்திரம் பயன்படுத்தி போக்குவரத்தில் ஈடுபடுகின்ற நெடுந்தீவு மக்களும் அரச ஊழியர்களும் பாதிப்புக்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, இறுதியாக நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறிகட்டுவானுக்கான கண்காணிப்பு விஜயத்தினை இன்று(29) மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நெடுந்தீவு மற்றும் நயினாதீவு பயணிகள் படகு சேவை உரிமையாளர்கள், கடற்படை மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை வரவழைத்து கலந்துரையாடியதை தொடர்ந்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

படுகொலை தொடர்பில் இளம் பெண் உள்ளிட்ட மூவர் கைது

படுகொலை தொடர்பில் இளம் பெண் உள்ளிட்ட மூவர் கைது

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளம்பெண் உள்பட 3 பேர் கிளிநொச்சி – இராமநாதபுரம் மாயனூர் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இராமநாதபுரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

படுகொலை தொடர்பில் இளம் பெண் உள்ளிட்ட மூவர் கைது

கடந்த 25ஆம் திகதி அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரை தடியால் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பான விசாரணையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்கள் 16 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும் பெண் சந்தேகநபர் 18 வயதுடையவர் எனவும் அவர்கள் மாயனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தகாத உறவின் காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.