மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது
Posted in இலங்கை செய்திகள்

மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது

மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது

மின்சார சபை தனியார் மயமாக்கப்படாது இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு கிடைத்த சமூக மாற்ற ஆணைக்கு இணங்க எரிசக்தி துறையில் முறையான சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) தெரிவித்துள்ளது.

அரசிற்குச் சொந்தமான மின்சார சபை சொத்துக்களை தனியார் மயமாக்காமல் விரிவான பொது மற்றும் பங்குதாரர்களின் ஆலோசனையின்

மூலம் மின்சாரச் சட்டத்தில் திருத்தம் மூலம் பல முயற்சிகள் செய்யப்பட உள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு CEB தெரிவித்துள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளில் பிராந்தியத்தில் மிகக் குறைந்த மின்சாரச் செலவை அடைவதற்கான ஒரு வலுவான ஒற்றை-கொள்வனவாளர் சந்தையின்

கீழ் ஒரு சுயாதீன இயக்க அமைப்புடன் மற்றும் இடைத்தாக்கமற்ற உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோக உரிமதாரர்கள் நிறுவப்பட்டுள்ளதாக CEB மேலும் தெரிவித்துள்ளது.

எரிசக்தி அமைச்சினால் மேற்கொள்ளப்படும் எதிர்கால முயற்சிகளுக்கு அனைவரின் செயலூக்கமான பங்களிப்பைப் பெறுவதற்கு அனைத்து

மட்டங்களிலும் உள்ள ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவொன்றை உருவாக்குவதற்கான முன்மொழிவும் முன்வைக்கப்பட்டுள்ளது.

மின்சாரத் துறை சீர்திருத்தங்கள் குறித்த நிகழ்நிலை விழிப்புணர்வு நிகழ்ச்சி 2024 ஒக்டோபர் 23 அன்று CEB இன் தலைவர் மற்றும் இயக்குநர்கள் குழுவினால்

முழு CEB ஊழியர்களுக்கும் நடத்தப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயுதங்கள் சிலவற்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து AK 47 ரக துப்பாக்கி, 2 மெகசின்கள், தோட்டாக்கள், 9 mm கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு வாள்கள், கத்தி ஒன்று ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பு

ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பு

ஜனாதிபதியின் எதிர்ப்பார்ப்பு ,நாட்டில் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைப்பதே தேசிய மக்கள் சக்தியின் எதிர்ப்பார்ப்பு என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலுக்கு ஒரு குறிப்பிட்ட தரநிலை இருக்க வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.

“நம் நாட்டுக்கு அரசியலில் ஒரு தரம் வேண்டும்.அரசியல்வாதி நினைத்ததைச் செய்ய முடியுமா? அது சாத்தியமில்லை.ஒரு அரசியல்வாதி ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பில் செயல்பட வேண்டும். அரசியல்வாதிகள் சட்டத்திற்கு கட்டுப்பட வேண்டும். ஆனால் நம் நாட்டில் அப்படி இல்லை.

இப்போது வாகனங்கள் கிடைக்கின்றன. பதிவு செய்யப்படாத வாகனங்கள், சுங்க வரியை முறையாக செலுத்தாமல் சுங்கச்சாவடியில் இருந்து விடுவிக்கப்படும் வாகனங்கள். சில வாகனங்களைப் பார்த்தால், அவை இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.

எளிதான மனிதர்கள் அல்ல. அத்தகைய சட்டங்கள் அவர்களுக்கு பொருந்தாது. அதுதான் நம் நாட்டின் அரசியல் கலாச்சாரம். எனவே, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கருத்துக்கு உயிர் கொடுக்கிறோம்.

நாங்கள் அதை செய்வோம். நீங்கள் நமது நாட்டின் ஜனாதிபதியாக இருந்தாலும், அமைச்சராக இருந்தாலும் பொதுச் சொத்தை உங்கள் விருப்பப்படி பயன்படுத்த முடியாது.

அப்படிப்பட்ட அரசியல் எங்களுக்கு தேவையில்லை. எனவே, இந்த அரசியல் தரப்படுத்தப்படுகிறது’’ என்றார்.

மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்
Posted in இலங்கை செய்திகள்

மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்

மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன்

மாமியாரின் வாயில் துப்பாக்கியால் சுட்ட மருமகன் வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் இளைஞர் ஒருவர் நாட்டுத் துப்பாக்கியைப் பயன்படுத்தி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் படுகாயமைடந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றயதினம் (04) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

நேற்றையதினம் குறித்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற அவரது மருமகன் நாட்டுத் துப்பாக்கியால் பெண்ணின் வாய்ப்பகுதியில் சுட்டுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த பெண் உடனடியாக மீட்கப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவத்தில் சுந்தரபுரம் பகுதியை சேர்ந்த 54 வயதான பெண்ணே படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈச்சங்குளம் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

கணவனின் வைத்தியசாலையில் கொலை செய்யப்பட்ட பெண்
Posted in இலங்கை செய்திகள்

கணவனின் வைத்தியசாலையில் கொலை செய்யப்பட்ட பெண்

கணவனின் வைத்தியசாலையில் கொலை செய்யப்பட்ட பெண்

கணவனின் வைத்தியசாலையில் கொலை செய்யப்பட்ட பெண் ,திருகோணமலையில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் தங்கியிருந்த 63 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று (05) காலை இந்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் வெளிநாட்டவர் என்பதுடன் அவர் தனது கணவருக்கு சொந்தமான வைத்தியசாலையின் 03வது மாடியில் உள்ள அறையில் தங்கியிருந்துள்ளார்.

உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரன் இந்த கொலையை செய்திருக்கலாம் என பொலிஸார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை எனவும், கொலையுடன் தொடர்புடைய 55 வயதுடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் அதே மாடியில் உள்ள அறை ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

சடலம் நீதவான் விசாரணைகளுக்காக சம்பவ இடத்திலேயே வைக்கப்பட்டுள்ளதுடன், திருகோணமலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இஸ்ரேலிய தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஏவுகணைகளை வீசியது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலிய தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஏவுகணைகளை வீசியது

இஸ்ரேலிய தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஏவுகணைகளை வீசியது

இஸ்ரேலிய தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஏவுகணைகளை வீசியது ,ஹைஃபாவில் உள்ள இஸ்ரேலிய தளத்தின் மீது ஹெஸ்புல்லா ஏவுகணைகளை வீசியது.


வடக்கு கடலோர நகரமான ஹைஃபாவில் உள்ள இஸ்ரேலிய இராணுவ தளத்தின் மீது சரமாரியாக ஏவுகணைகளை வீசியதாக லெபனானின் ஹிஸ்புல்லா கூறுகிறது.

நகரின் தெற்கே உள்ள மற்றொரு இராணுவத் தளத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தியதாகக் கூறிய பின்னர், “இஸ்ரேல் விமானப்படையுடன் இணைந்த

ஹைஃபாவின் தொழில்நுட்ப தளத்தை முதன்முறையாக” ஏவுகணைகளின் தாக்குதலுடன் குறிவைத்ததாக குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்

லெபனான் கிழக்கு மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தாக்குதல்
மேற்கு பெக்கா பள்ளத்தாக்கில் உள்ள மஷ்காரா நகரத்தை இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் தாக்கியதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் புதுப்பிப்புகள் கிடைக்கும்போது இதைப் பற்றி உங்களுக்கு மேலும் தருவோம்.

ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலியர் கொல்லப்பட்டார்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலியர் கொல்லப்பட்டார்

ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலியர் கொல்லப்பட்டார்

ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலியர் கொல்லப்பட்டார் ,நஹாரியாவில் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதலில் இஸ்ரேலியர் கொல்லப்பட்டார்.


கடந்த வாரம் வடக்கு நகரான நஹாரியாவில் ஹிஸ்புல்லா ராக்கெட் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால் இஸ்ரேலிய குடியேற்றவாசி ஒருவர் உயிரிழந்தார்.

இஸ்ரேலின் இராணுவ வானொலி, 57 வயதான பெயரிடப்படாத நபர், அக்டோபர் 23 அன்று நகரத்திற்குள் ஹெஸ்பொல்லாவால் வீசப்பட்ட ராக்கெட்டில் இருந்து துண்டுகளால் காயமடைந்ததாகக் கூறியது.

அன்று, நஹாரியா மற்றும் மேற்கு கலிலி பிராந்தியத்தின் மீது சரமாரியாக ராக்கெட்டுகளை வீசியதற்கு ஹிஸ்புல்லா பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த வாரம், இஸ்ரேலுக்கான போரின் மிகக் கொடிய நாட்களில் மெட்டுலா மற்றும் ஹைஃபாவுக்கு அருகில் உள்ள ராக்கெட் தாக்குதலில் ஒரே நாளில் ஏழு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.

வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு|
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு|

வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு|

வன்னி மைந்தன் துரோகியானார் |அடித்து விட்ட அர்ச்சுனா |மக்கள் கொந்தளிப்பு ,நடந்தது என்ன .

வன்னி மைந்தன் துரோகியா எப்படி ,..? முழுவதும் காணொளியில் உள்ளது .

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

சுமந்திரனுக்கு எதிராக சாள்ஸ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ,முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் உண்மைக்கு புறம்பாக தனக்கு எதிராக அவதூறு பரப்பும் வகையில் கருத்துக்களை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் வெளியிட்டமை தொடர்பில் மன்னார்

பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

நேற்று (3) மன்னார் தமிழரசு கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தான் மதுபானசாலைக்கு சிபாரிசு கடிதம் வழங்கியதாகவும் அதை நான் வெளிப்படையாக ஒப்புக் கொண்டதாகவும் உண்மைக்கு புறம்பான கருத்தை எனக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் சுமந்திரன் கூறியிருந்தார் .

இந்த கருத்தை அவர் கூறிய சமயம் நான் இந்தியாவில் இருந்தமையினால் மன்னார் வந்தவுடன் உண்மைக்கு புறம்பான கருத்து வெளியிட்டமை

தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் நிலையத்தில் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளேன்.

புலம்பெயர் தமிழர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பை மேற்கொள்வதற்கான உதவிகளை கோரிய

போது அவர்களின் தேவைகள் நிமித்தம் நான் அந்த சந்திப்புக்களை மேற்கொள்வதற்கான உதவிகளை செய்து கொடுத்தேன்.

அவ்வாறு சந்தித்தவர்களில் தனிப்பட்ட பழக்கத்தின் காரணமாக யாரும் அந்த வாய்ப்பை பயன்படுத்தி மதுபானசாலைகள் அமைப்பதற்கான அனுமதியை பெற்றிருந்தால் நான் அதற்கு பொறுப்பாக முடியாது.

நான் அண்மையில் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலாக வழங்கியிருந்தேன். ஆனால் சுமந்திரன் அவர்கள் உண்மைக்கு புறம்பாக நான் எழுத்து மூல சிபாரிசு வழங்கியதாகவும் அதை ஒத்துக் கொண்டதாகவும்

சொன்ன கருத்தை வன்மையாக கண்டிப்பதோடு பொலிஸார் குறித்த விடயத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

அதனால் தான் தனக்கு இம்முறை ஆசனம் வழங்கவில்லை என சுமந்திரன் குறிப்பிடுவதாகும் அது முற்றிலும் பொய் என்றும் 2020 ஆண்டில் இருந்தே கட்சியில் செயற்பாடுகளில் இருந்த அதிருப்தி காரணமாக, உளவியல் ரீதியாக

கட்சியோடு பயணிப்பதா? இல்லையா ? என்ற மனநிலை இருந்து வந்ததாகவும், அதே நேரம் எனது சுயவிருப்பத்தினாலும் உடல் நல பிரச்சினைகளாலும்

இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் நானாக மேற்கொண்ட முடிவே அது என அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக சுமந்திரன் 2020 ஆண்டுக்கு பிறகு விடுதலை புலிகளுக்கு எதிரான கருத்துக்களை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவருக்கு எதிராக தான் சம்பந்தன் அவர்களுக்கு கடிதம் எழுதியதாகவும் சுமந்திரன் ஒரு

பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு இவ்வாறான கருத்துக்களை தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவருக்கு எக்காரணம் கொண்டும் கட்சியின் பதவி நிலைகள் வழங்க கூடாது எனவும் எழுத்து மூலமாக சம்பந்தன் ஐயாவுக்கு எழுதியிருந்தேன்.

அத்துடன் கடந்த 2020 ஆண்டு தேர்தலின் போது சுமந்திரன் வன்னியில் ஏறும் எந்த அரசியல் மேடைக்கும் நான் ஏற மாட்டேன் என தெரிவித்திருந்தேன்.

அதே போன்று எந்த அரசியல் மேடையிலும் ஏறவில்லை. அதன் காரணம் என்ன என்றால் சுமந்திரன் பிரச்சாரம் செய்து அதில் ஒரு வாக்கு விழுந்து நான் வெற்றி பெற கூடாது என்பதற்காகவே.

அவ்வாறான நிலையில் அவர் எனக்கு எதிராக பல வேலைகள் செய்திருந்தார். இருந்தாலும் வன்னி தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி சார்பாக அதிக வாக்குகளை பெற்று நான் வெற்றி பெற்றேன்.

அதே நேரம் அண்மையில் கட்சியின் தலைமைத்துவம் சம்பந்தப்பட்ட விடயத்தில் சுமந்திரன் தலைவராக வந்துவிட கூடாது.

என்பதற்காக நான் நேரடியாகவே சிறிதரனுக்கு ஆதரவாக செயற்பட்ட துடன் சுமந்திரன் தலைவராக வர முடியாமைக்கு நான் பெறும் பங்காற்றி இருந்தேன். அதுவும் அவருக்கு நன்றாக தெரியும்.

இப்படியாக கட்சியில் இருந்த அதிருப்தியான நிலமை காரணமாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்கு தேர்தலில் போட்டியிட வேண்டாம் என தீர்மானித்திருந்தேன்.

சுமந்திரனுடன் 2020 ஆண்டில் இருந்தே முரண்பாடுகளோடுதான் பயணித்தேன். இவ்வாறு இருக்க இந்த தேர்தலில் சுமந்திரனுக்கு அடிமையாக தேர்தல் கேட்க முடியாது.

என்னை பொறுத்த வரையில் வன்னி மாவட்டம் திருகோணமலை மாவட்டம் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கபட வேண்டும்.

ஏன் என்றால் இந்த பகுதிகளில் சிங்கள முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.

ஆனால் சுமந்திரனின் இவ்வாறான தொடர்சியான செயற்பாடுகளால் கட்சி அங்கத்தவர்களும் மக்களும் புலம்பெயர் அமைப்புகளும் மன விரக்தியில் இருக்கிறார்கள் என்பதை பதிவு செய்கின்றேன்.

அதே நேரம் சுமந்திரனுக்கும் அவரை சார்ந்தவர்களுக்கும் ஒன்றை தெரிவித்து கொள்கிறேன். நான் எந்த ஒரு மதுபானசாலைக்கும் அனுமதி பெறவும் இல்லை யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை.

எனக்கு அறிமுகமானவர்கள் அதை பெற்றிருந்தால் அது அவர்களின் தனிப்பட்ட விடயம். அதற்கு நான் எந்த சிபாரிசு கடிதம் கொடுக்கவில்லை என்பதை தெரிவிப்பதுடன் அவருடைய கருத்து தொடர்பில் நான் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளேன்.

அதே நேரம் தேர்தல் நியமனத்திற்காக நான் தேர்தல் கேட்பதாக விண்ணப்பிக்கவில்லை. அதே நேரம் தற்போது இருக்கும் தமிழரசு கட்சி நிர்வாகத்தோடு பயணிக்க முடியாது என்பதுடன் சுமந்திரன் சொல்லும்

எல்லாவற்றுக்கும் தலையாட்டி கொண்டு இருக்க முடியாது என்பதால் தேர்தலில் இருந்து நானாக தான் விலகினேன்.

சுமந்திரன் தலைவராவதில் ஏற்பட்ட பிரச்சினை மற்றும் பல்வேறு வன்மத்தை மனதில் வைத்து முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் அவர் சார்ந்தவர்களும் தொடர்ந்து சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.

அதே நேரம் சுமந்திரனுக்கு நான் பகிரங்க சவால் விடுக்கின்றேன் நான் வழங்கிய சிபாரிசு கடிதத்தை அவர் கொண்டு வந்தால் நான் அவர் சொல்வதை செய்கிறேன் என்றும் தெரிவித்தார்.

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது
Posted in இலங்கை செய்திகள்

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது மிதிகமவில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததுடன் மேலும் இருவரை

படுகாயமடைய செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியாபான பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டைநடத்திய சந்தேகநபர், குற்றத்தின் பின்னர் துப்பாக்கி மற்றும் 05 தோட்டாக்களை வைத்திருந்த சந்தேகநபர் மற்றும் குற்றத்திற்கு உதவிய மேலும் 05 சந்தேகநபர்களுடன், பெண் சந்தேகநபர் ஒருவரும்

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (03) வெல்லவாய, அஹங்கம மற்றும் மிதிகம பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், அவர்கள் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கியை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அஹங்கம, வெலிகம மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 42 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், பெண்

சந்தேகநபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபரிடம் இருந்து ஹெரோயின் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,542,000/- ரூபாய் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர், வெளிநாட்டில் இருந்து இந்த

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ளும் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது
Posted in இலங்கை செய்திகள்

வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது

வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது

வன்முறையற்ற தேர்தல் கலாச்சாரம் உருவாகின்றது ,ஜனநாயகத்தை மதிக்கின்ற வன்முறைகள் அற்ற தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக சுதந்திரமானதும்

நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பின் (கபே) நிறைவேற்று பணிப்பாளர் மனாஸ் மக்கீன் தெரிவித்தார்.

கபே அமைப்பின் அமைதியான தேர்தலுக்காக ஒன்றுபடுவோம் எனும் தொனிப்பொருளிலும், 18 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்களிற்கான

தெளிவூட்டும் நிகழ்வும் வவுனியாவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று (03) இடம்பெற்றது.

அதன் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் இருந்த தேர்தல் நிலவரமும் தற்போது இருக்கின்ற நிலவரத்தினையும் பார்க்கும் போது ஜனநாயகத்தை மதிக்கின்ற

வன்முறைகள் அற்ற ஒரு சமாதானமான தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணையும் ஒரு கலாசாரம் உருவாக்கப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்கின்றோம்.

அதற்கு உதாரணமாக கடந்த ஜனாதிபதித் தேர்தலை குறிப்பிடலாம். அதேபோல இந்த பொதுத் தேர்தலிலும் இதுவரை பாரியளவிலான வன்முறைகள் தொடர்பான முறைப்பாடுகள் எவையும் பதியப்படவில்லை.

சட்டவிரோத தேர்தல் பிரச்சாரம் தொடர்பான முறைப்பாடுகளே அதிகளவில் கிடைப்பதை அவதானிக்க முடிகின்றது. இதேவேளை பிரச்சார நடவடிக்கைகளுக்கு சமூக ஊடகங்கள் பெரும் பங்கினை வழங்குகின்றது.

இவற்றை நாம் கண்காணிக்கும் போது அபேட்சகர்களுக்கு எதிரான சேறுபூசக்கூடிய இழிவுபடுத்தக்கூடிய போலிப்பிரச்சாரங்கள், நாளுக்குநாள் அதிகரிப்பதனை அவதானிக்க முடிகின்றது.

எனவே, அனைத்து அரசியல் கட்சிகளை பிரதிநித்துவப்படுத்தக் கூடியவர்களை வரவழைத்து அமைதியான தேர்தலுக்காக ஒத்துழைப்போம் என்ற வகையில் சத்தியபிரமானம் ஒன்றை பெறுகின்றோம்.

எனவே, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் நடைபெற வேண்டும் என்றால் நிச்சயமாக அது வன்முறையற்ற தேர்தலாக இருக்க வேண்டும்.

வன்முறையற்ற தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் அபேட்சகர்களும், ஆதரவாளர்களும் ஒன்றிணைய வேண்டும் என கபே அமைப்பு கேட்டுக்கொள்கின்றது என்றார்.

இளைஞர்களுக்கு மருத்துவர்களின் விசேட அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இளைஞர்களுக்கு மருத்துவர்களின் விசேட அறிவிப்பு

இளைஞர்களுக்கு மருத்துவர்களின் விசேட அறிவிப்பு

இளைஞர்களுக்கு மருத்துவர்களின் விசேட அறிவிப்புஇன்று (04) முதல் எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விசேட தட்டம்மை தடுப்பூசி திட்டத்தை நடைமுறைப்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட 12 மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை தட்டம்மை ஒழிக்கப்பட்ட நாடாக இருந்தாலும், கடந்த வருடம் சில பிரதேசங்களில் அம்மை நோயாளர்கள் பதிவாகியிருந்தமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தொற்றுநோயியல் நிறுவகத்தின் தலைமை தொற்றாநோய் வைத்திய நிபுணர் ஹசித திசேரா இது தொடர்பில் கருத்தை தெரிவிக்கையில்,

” இளைய தலைமுறையினரில் குறிப்பாக இதற்கு முன்பு தட்டம்மை தடுப்பூசி பெறாதவர்கள், அல்லது பெரும்பாலும் தவறியவர்கள், தட்டம்மை தடுப்பூசியிலிருந்து முழு பாதுகாப்பைப் பெறாதவர்கள் அல்லது ஒரு டோஸ் மட்டுமே பெற்றவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு இரண்டாவது டோஸ் கொடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

அதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் தட்டம்மை தடுப்பூசி மூலம் கடந்த 10-20 ஆண்டுகளில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன் மூலம் அம்மை நோயை முழுமையாக ஒழிக்க முடிந்தது.

ஆனால், பிற நாடுகளில் இருந்து நமது சுற்றுச்சூழலில் தட்டம்மை வைரஸ் நுழைந்தால், அது அம்மை நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறது.

அந்த ஆபத்தை குறைக்கும் நோக்கத்திற்காகவே இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது” என்றார்.

பராட்டே சட்டத்தால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்மாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

பராட்டே சட்டத்தால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்மாய்ப்பு

பராட்டே சட்டத்தால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்மாய்ப்பு

பராட்டே சட்டத்தால் நுாற்றுக்கும் மேற்பட்டோர் உயிர்மாய்ப்பு ,நாட்டில் உள்ள வங்கிகளினால் அமுல்படுத்தப்பட்ட “பராட்டே சட்டம்” காரணமாக கடந்த வருடத்தின் தொடக்கத்தில் 127 சிறிய மற்றும் நடுத்தர அளவிலான

தொழில்முயற்சியாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மாவட்ட ஒன்றிணைந்த தொழில் முயற்சியாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தச் சட்டத்தினால் இலங்கையிலுள்ள கிட்டத்தட்ட நான்கு இலட்சம் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகர்கள் ஏற்கனவே அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

வியாபார இடங்கள் முதல் வசிப்பிடங்களை கூட இழந்த பலர் ஏற்கனவே மிகவும் அசௌகரியமான நிலையில் இருப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் சம்லி குமாரசிங்க தெரிவித்தார்.

“கடந்த அரசாங்கத்தை பற்றி பேசினால், நிவாரணம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பராட்டே சட்டத்தின் கீழ் சொத்துக்களை ஏலம் எடுத்த எம்மில் கிட்டத்தட்ட 127 பேர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

பராட்டே சட்டத்தின் கீழ் சொத்துக்கள் ஏலம் விடப்பட்ட அனைவருக்கும் வங்கிகளில் இருந்து நிவாரணம் கிடைக்கவில்லை.

எங்களுக்கு வழங்கப்பட்டது நிவாரண காலம் மாத்திரம் தான். அதுவும் உண்மையில் ஒரு வட்டி பொறி.

தற்போதைய அரசாங்கத்துடன் சில கலந்துரையாடல்களை நடத்தினோம்.

பராட்டே சட்டம் டிசம்பர் 15 வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அமலுக்கு வரும். அப்போது 127 தற்கொலைகள் இருநூறு முந்நூறாக அதிகரிக்கும்.

பராட்டே சட்டம் இடைநிறுத்தப்பட்ட உடனே தொழில்முனைவோருக்கு முன்னேற எந்த வழியும் இல்லை.

தொழில்முனைவோருக்கு உதவும் வகையில் நாட்டில் வணிகத்தை உருவாக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார்.

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு

தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.

நீண்ட சமர்ப்பணங்களை பரிசீலித்ததன் பின்னர் பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியால் தேர்தல் திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தலுக்கான பெரும்பாலான நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும் சட்டமா அதிபர் சார்பில்

ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன முன்வைத்த சமர்ப்பணங்களை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிவில் அமைப்பு செயற்பாட்டாளரும் “நாம் இலங்கை தேசிய அமைப்பின்” அழைப்பாளருமான எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதிக்காக சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன

வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன

வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன ,ராக்கெட் தாக்குதல்களுக்கு மத்தியில் வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்கின்றன.


லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் கண்டறியப்பட்டதை அடுத்து வடக்கு இஸ்ரேலின் மேற்கு கலிலி பகுதியில் உள்ள ஷோமேரா மற்றும் ஸாரிட் நகரங்களில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேலின் ஹோம் ஃப்ரண்ட் கமாண்ட் தெரிவித்துள்ளது.

லெபனானின் எல்லைக்கு அருகில் உள்ள மேல் கலிலியில் உள்ள டோவேவ் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் சைரன்கள் ஒலித்ததாக அது கூறியது.

முன்னதாக, “சந்தேகத்திற்கிடமான வான்வழி இலக்கு கிழக்கிலிருந்து கடப்பது கண்டறியப்பட்டதை அடுத்து” தெற்கு ஆக்கிரமிக்கப்பட்ட கோலன் குன்றுகளில் சைரன்கள் ஒலித்ததாக இஸ்ரேலிய இராணுவம் கூறியது.

லெபனானில் இருந்து சுமார் 10 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

லெபனானில் இருந்து சுமார் 10 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது

லெபனானில் இருந்து சுமார் 10 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது

லெபனானில் இருந்து சுமார் 10 ராக்கெட்டுகள் வீசப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.ஹைஃபா விரிகுடா மற்றும் கலிலி பகுதிகளில் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒலித்ததைத் தொடர்ந்து லெபனானில் இருந்து

இஸ்ரேலிய எல்லைக்குள் சுமார் 10 ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

டெலிகிராமில் ஒரு அறிக்கையில், இராணுவம் சில ராக்கெட்டுகள் இடைமறிக்கப்பட்டது, மீதமுள்ளவை திறந்த பகுதிகளில் விழுந்தன.

Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

51 கைதிகள் உயிருடன் இருப்பதாக இஸ்ரேலிய உளவுத்துறை மதிப்பிடு

51 கைதிகள் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேலிய உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது: அறிக்கை
காசாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட 101 பேரில் 51 பேர் இன்னும் உயிருடன் இருப்பதாக இஸ்ரேலிய உளவுத்துறை மதிப்பீடுகளை மேற்கோள் காட்டி இஸ்ரேல் ஹயோம் தெரிவித்துள்ளது.

மொழிபெயர்ப்பு: இஸ்ரேலில் அவர்கள் மதிப்பிடுகின்றனர்: கடத்தப்பட்ட 51 இஸ்ரேலியர்கள் உயிருடன் உள்ளனர்.

மீதமுள்ள கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற நெதன்யாகுவின் நிர்வாகத்தின் மீது அழுத்தம் அதிகரித்து வருகிறது.

இஸ்ரேலிய அதிகாரிகளின் கூற்றுப்படி, அக்டோபர் 7, 2023 அன்று 251 பேர் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டனர் மற்றும் சிறைப்பிடிக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட பாதி பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மற்றவர்கள் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர், சில உறுதிப்படுத்தப்பட்ட அல்லது இறந்துவிட்டதாக அஞ்சுகின்றனர். கைதிகளில் சிலர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஹமாஸ் பலமுறை அறிவித்தது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 9 பேர் பலி ,வடக்கு காசாவின் ஜபாலியா மற்றும் பெய்ட் லஹியா மற்றும் தெற்கில் ரஃபா ஆகிய இடங்களில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல்கள் இரண்டு வீடுகளைத் தாக்கியதில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

உள்ளூர் வட்டாரங்கள் Wafa செய்தி நிறுவனத்திடம் கூறியது, இஸ்ரேலிய போர் விமானங்கள் ஜபாலியாவில் அல்-நஜ்ஜார் குடும்பத்திற்கு சொந்தமான ஒரு வீட்டில் குண்டுவீசி மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

பெய்ட் லாஹியாவில் உள்ள ஒரு வீட்டின் மீது வான்வழித் தாக்குதலில் மேலும் ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

ரஃபாவில், இஸ்ரேலிய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார் மற்றும் இருவர் காயமடைந்தனர்..

அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா

அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா

அர்ச்சுனா இராமநாதன் பொறிக்குள் சிக்குவரா தப்புவாரா ,உங்கள் பார்வை என்ன .

காணொளியை முழுமையாக பாருங்கள் மக்களே

வீடியோ