Posted in இலங்கை செய்திகள்

கட்சி தாவும் அரசியல்வாதிகள் -சூடு பிடிக்கும் தேர்தல்

கட்சி தாவும் அரசியல்வாதிகள் -சூடு பிடிக்கும் தேர்தல்

அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம்தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும். அத்துடன், சுற்றுலாப்

பறவைகளும் வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு அவை பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவிதான் உங்களுடன்

இருக்கப்போகின்றேன்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

பத்தனை பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

” வாக்கு என்பது உங்கள் உரிமை. அந்த வாக்குதான் ஆட்சியை தீர்மானிக்கப் போகின்றது. மக்களின் இறைமையே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும். எனவே, அந்த உரிமையை எவரும்

களவாடமுடியாது. முன்னர் கள்ள வாக்கு போட்டவர்கள் இருந்தனர், சாராயத்துக்கும், சாப்பாட்டுக்கும் வாக்குகள் அளித்தவர்களும் இருந்தனர். இந்த காலம் தற்போது மலையேறிவிட்டது.

கள்வர்கள் மற்றும் கொள்ளையர்களும் பாராளுமன்றம் தெரிவானதால் நல்லவர்களையும் மக்கள் திட்டினர். 225 பேருக்கும் இடிவிழ வேண்டும் எனவும் விமர்சித்தனர்.

சிலருக்கு அமைச்சு பதவி இல்லாவிட்டால் காலைக்கடனைகூட நிறைவேற்ற மனம்வராது. அவர்கள்தான் அந்தபக்கம், இந்த பக்கம் என தாவுகின்றனர். நாளை எந்த பக்கம் தாவுவார்கள் எனவும்

தெரியாது. எமது பக்கத்திலும் இருக்கின்றனர். உங்கள் புள்ளடி மூலம் சிறந்த பதிலடியை கொடுக்கவேண்டும். இதனால்தான்

மஹிந்தவை விட்டுச்சென்றவர்களுக்கு வாக்களிக்ககூடாது என பிரசன்ன ரணதுங்ககூட கூறுகின்றார். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.

தற்போது பருவகால குருவிகள் வருகின்றன. அழகாக இருக்கின்றன. ஆனால், எதிர்வரும் 5 ஆம் திகதி பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவி உங்களுடன்தான் இருக்கும். வாக்குகளை

வாங்கிக்கொண்டு தவளைகள்போல் தாவவில்லை. பதவிகள் பறிக்கப்பட்டபோதுகூட மஹிந்தவுடனேயே இருந்தேன்.” – என்றார்.

      Posted in இலங்கை செய்திகள்

      12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ்

      12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ்

      ராஜாங்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற தான நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்களில்

      12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக

      சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

      நிகழ்வில் பங்கேற்ற 139 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளா்கள்.

      இன்று இதுவரை ஒருவர் மாத்திரமே நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்.

      கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 174 பேருக்கு பிசீஆர்

      பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு எவருக்கும் நோய்த் தொற்று

      ஏற்படவில்லை என்பது இதன்போது உறுதிப்படுத்தப்பட்டது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய வளாகத்தில் ஏற்பட்ட

      நோய்த்தொற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்

          Posted in இலங்கை செய்திகள்

          பஸ்களில் ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை

          பஸ்களில் ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை

          பஸ் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார்.

          ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பயணிகளை ஏற்றிச்

          செல்வதை தவிர்க்குமாறு பஸ் உரிமையாளர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

          இருப்பினும், இவற்றை கருத்திற் கொள்ளாமல் சில தனியார் பஸ்கள் தொடர்ந்தும் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறையிடப்படுகிறது.

          கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள

          நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு இவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


          இதனை மீறும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

              Posted in இலங்கை செய்திகள்

              கொரனோவால் இறந்தால் ஐந்து லட்சம் இழப்பீடு

              கொரனோவால் இறந்தால் ஐந்து லட்சம் இழப்பீடு

              காரணமாக உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளருக்கு 5 இலட்சம் ரூபா இழப்பீடுஇலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்து தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு

              சென்று கொவிட் 19 தொற்றினால் உயிரிழக்கும் பணியாளர்களுக்காக அலுவலக காப்புறுதி இழப்பீடு வழங்கப்படும்

              என்று வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே தெரிவித்துள்ளார்.

              இதற்கு அமைவாக கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போருக்கு எதிராக 5 இலட்சம் ரூபா அல்லது 6 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும். அத்தோடு இலங்கை காப்புறுதி

              கூட்டுத்தாபனத்தின் மூலம் ஏற்படுத்திக்கொண்டுள்ள 2019 உடன்படிக்கைக்கு அமைவாக அலுவலகத்தில் பதிவை மேற்கொண்டு வெளிநாட்டில் தொழிலில் ஈடுபட்டுள்ளபோது

              இடம்பெறும் இயற்கை மரணத்திற்காக வழங்கப்படும் இழப்பீடான 5 இலட்சம் ரூபா, கொவிட் 19 நோய்த் தொற்றினால் உயிரிழக்கும் பணியாளர்களுக்காக செலுத்தப்படுகின்றது.

              தற்பொழுது இதற்காக 20 பேரின் கடித ஆவணங்கள் தயாரிக்கப்பட்டுவருகின்றது. 2020 மார்ச் மாதம் 16 ஆம் திகதிக்கு பின்னர் பதிவை மேற்கொண்டு வெளிநாடு சென்றவர்களுக்காக

              இந்த இழப்பீடு 6 இலட்சம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பணியகத்தில் பதிவை மேற்கொள்ளவேண்டிய கால எல்லை கடந்த போதும் அதனை புதுப்பிக்காது பணிபுரிந்து

              உயிரிழப்போருக்கு காப்புறுதி இழப்பீடு வழங்கப்படமாட்டாது. இவர்களுக்காக பணியகத்தில் விசேட சேமநல நிதியின் கீழ் 3 இலட்சம் ரூபா வீதம் வழங்கப்படும்.

              இந்த வருடத்தில் கடந்த 6 மாத காலப்பகுதியில் பணியகத்தில் பதிவை மேற்கொண்டு தொழிலுக்காக வெளிநாடு சென்ற 40,143 பணியாளர்களுக்காக இலவசமாக வழங்கப்படும் நிவாரண

              காப்பறுதியை வழங்குவதற்காக பணியகத்தினால் காப்புறுதி தவணைக் கொடுப்பனவாக ரூபா 26,330,000.00 தொகை இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.

              இதற்கு மேலதிகமாக உயிரிழப்போரின் இறுதிச் சடங்கிற்காக 40,000 ரூபா வீதம் வழங்கப்படும். இத்தொகை முன்னர் 30,000 ரூபாவாக இருந்தது. கொவிட் 19 இன் காரணமாக இத்தொகை 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

              இதேவேளை கொரோனா வைரசின் காரணமாக வெளிநாடுகளில் வேலைவாய்ப்புக்காக சென்றோரில் சுமார் 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 37 பேர் ஆண்களும் 3 பெண்களும்

              அடங்குகின்றனர். சவுதி அரேபியாவில் 18 பேரும் குவைத்தில் 9 பேரும் ஐக்கிய அரபு எமரேட்டில் 8 பேரும், ஓமானில் இருவரும், லெபனானில் ஒருவருமாக 40 பேர் உயிரிழந்துள்ளன

                  Posted in இலங்கை செய்திகள்

                  கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

                  கடற்றொழில் முறைகளை வடக்கில் உடனடியாக தடைசெய்ய அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

                  வடபகுதி கடற்பரப்புகளில்; தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை கையாண்டு தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடைசெய்வதற்கு அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                  ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்வைக்கப்பட்ட நிலையில்

                  அமைச்சரவையினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையடுத்து குறித்த சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்தவதற்கான நடவடிக்கைகளை

                  நடைமுறைப்படுத்துமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் தரப்பினருக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

                  முன்பதாக வடபகுதி கடற்றொழிலாளர்கள் தமது தொழில் நடவடிக்கைகளின்போது எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள்

                  தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பார்வைக்கு கொண்டுவந்திருந்தனர்.

                  குறிப்பாக எல்லைதாண்டிய கடற்றொழிலாளர்களது சட்டவிரோத நடவடிக்கைகள் சட்டவிரோத உபகரணங்கள் பயன்படுத்தி தொழிலில் ஈடுபடுவதை தடுத்தல் அட்டைத் தொழிலுக்கான

                  அனுமதியை இரத்துச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அவற்றை தடுப்பதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு தமது தொழில்துறையை

                  பாதுகாத்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனையடுத்தே குறித்த பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொடுக்கும் முகமாக

                  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அது தொடர்பில் அமைச்சரவையில் தெரிவித்திருந்தார்.

                  இதையடுத்த கடற்றொழில் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் கடற்படையினர் உள்ளிட்ட துறைசார் தரப்பினருக்கு

                  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக அத்தகைய சட்டவிரோத தொழில் முறைமைகளை தடுப்பதற்கான

                  நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணிப்பரை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      பொலிஸ் மக்கள் மோதல் – 14 பேர் கைது

                      பொலிஸ் மக்கள் மோதல் – 14 பேர் கைது

                      அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இடையில் நேற்று (16) பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டது.

                      அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸ் நிலையத்தின் மீது கல்வீச்சை மேற்கொண்டனர்.

                      இதனை அடுத்து பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

                      அண்மையில் அங்குலான பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகம் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான

                      சாட்சியாளர்கள் இருவர் நேற்று காலை 5 மணி அளவில் பொலிஸ் அதிகாரிகள் சிலரினால் ஜீப் ஒன்றில் அழைத்துச் செல்லப்பட்டதை

                      அடுத்து பொலிஸ் நிலையத்தின் முன்னால் பிரதேசவாசிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

                      இதேவேளை, அங்குலான பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நேற்று கட்டுக்கடங்காத முறையில் நடந்து கொண்ட 9 பெண்கள்

                      உட்பட 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

                      மேலும், இந்த சம்பவத்தில் 8 பொலிஸார் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

                          செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                          Posted in இலங்கை செய்திகள்

                          திருட வீடு புகுந்தவரை அடித்து கொன்ற மக்கள்

                          திருட வீடு புகுந்தவரை அடித்து கொன்ற மக்கள்

                          மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையிடச் சென்று வீட்டின் உரிமையாளரை தாக்கி கொள்ளையடிக்க முற்பட்டபோது கொள்ளையர் மீது

                          மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கொள்ளையடிக்க சென்ற ஒருவர் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

                          இந்த சம்பவம் நேற்று (16) இரவு இடம்பெற்றுள்ளது.

                          வாழைச்சேனை பாடசாலை வீதி மாவடிவேம்பு பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய பரசுராமன் நவரட்ணம் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

                          வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்கம்கேணி பிரதேசத்தில் நேற்று இரவு 10 மணியளவில் வீடு ஒன்றில் இருவர் கொள்ளையடிக்க சென்றுள்ளனர்.

                          இந்த நிலையில் கொள்ளையர்கள் வீட்டிலுள்ளவர்களை தாக்கி அங்கிருந்த தங்க ஆபரணங்களை கொள்ளையடிக்க முற்பட்டனர்.

                          இதன்போது தாக்குதலுக்குள்ளான வீட்டின் உரிமையாளர் தனது உயிரை காப்பாற்றிக் கொள்ள கொள்ளையர் மீது தாக்கிய போது

                          கொள்ளையன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் அவருடன் சென்ற கொள்ளையர் தப்பி ஓடியுள்ளார்.

                          குறித்த சம்பவத்தில் உயிரிழந்த கொள்ளையன் 63 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்புடையவர் எனவும் சம்பவதினமான நேற்று

                          பிறிதொரு வீடு ஒன்றில் கொள்ளையடித்து விட்டு கொள்ளையில் ஈடுபட்டபோதே உயிரிழந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

                          உயிரிழந்த குறித்த கொள்ளையனின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பாக

                          மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றன

                              Posted in இலங்கை செய்திகள்

                              காவல்துறை அதிகாரி திடீர் இட மாற்றம்

                              காவல்துறை அதிகாரி திடீர் இட மாற்றம்

                              உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

                              தேர்தல்கள் ஆணைக்குழுவின் கோரிக்கைக்கு அமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

                              குறித்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தேர்தல் சட்டங்களை மீறியதாக தேர்தல்கள் ஆணைக்குழுவால் பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

                              அதற்கமைய நேற்று (16) பிற்பகல் கூடிய பொலிஸ் ஆணைக்குழு ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பொலிஸ் தலைமையக்திற்கு மாற்ற தீர்மானித்துள்ளது.

                              எனவே, வெற்றிடமாகியுள்ள ஜா-எல பொலிஸ் நிலைய பொறுப்பதி பதவிக்கு வேறு ஒருவரை நியமிக்குமாறு பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

                              இதேவேளை, இதுவரையான காலப்பகுதியில் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 3,377 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                              தேசிய தேர்தல் மத்திய நிலையத்திற்கு 758 முறைப்பாடுகளும் மாவட்ட ரீதியான தேர்தல் மத்திய நிலையங்களுக்கு 2,619 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

                              இதேவேளை, அரசியல் கட்சி செயலாளர்களுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் இன்று முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

                              பொதுத் தேர்தலுக்கான எதிர்கால செயற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

                              குறிப்பாக தனிமைப்டுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லது சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோருக்கு தமது வாக்குகளை அளிக்கும் வகையில் சந்தர்ப்பமளிப்பது குறித்து இதில் ஆராயப்படவுள்ளது.

                              இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்றும் இடம்பெறவுள்ளன.

                              பொலிஸ் நிலையம், இராணுவம், சிவில் பாதுகாப்பு திணைக்களம், மாவட்ட செயலாளர் காரியாலயங்கள் மற்றும் தேர்தல் செயலகம் ஆகியவற்றில் கடமையாற்றும் ஊழியர்கள் இன்று வாக்களித்து வருகின்றனர்.

                              மேற்குறித்த தினங்களில் தபால்மூலம் வாக்களிக்க தவறுவோர் எதிர்வரும் 20 ஆம், 21 ஆம் திகதிகளில் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.

                              மாவட்ட தேர்தல்கள் செயலகத்தில் அவர்களுக்கு வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு விஷேட வாக்கெடுப்பு நிலையங்கள்

                                  தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு விஷேட வாக்கெடுப்பு நிலையங்கள்

                                  தனிமைபடுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு அல்லது சுய தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளோர் தமது

                                  வாக்குகளை அளிக்கும் வகையில் நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷேட வாக்களிப்பு நிலையங்கள்

                                  அமைப்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்து வருகின்றது.

                                  இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பில் சட்ட ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக தேர்தல்

                                  ஆணைகுழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

                                  தேர்தல் இடம்பெறவுள்ள தினத்தில் சுய தனிமைப்படுத்தலில் எவரும் இருப்பார்கள் என நாம் எதிர்பார்க்கவில்லை. சுய தனிமைப்படுத்தலில் உள்ளவர்கள் அதிகரித்து வருவதால்,

                                  அத்தகையோர் தங்கள் வாக்குகளை அளிப்பதற்கு வசதியாக நடமாடும் வாக்களிப்பு நிலையங்கள் அல்லது விஷேட வாக்களிப்பு

                                  நிலையங்கள் நிறுவ வேண்டும். தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ளோர் அவர்களுக்காக உருவாக்கப்படும்

                                  வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க முடியும்” எனவும் தேர்தல் ஆணைகுழு தலைவர் இதன்போது தெரிவித்தார்

                                  மேற்குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் மற்றும் பிரதி ஆணையாளர் ஆகியோருடன் தேர்தல்

                                  செயலகத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

                                  தேர்தல் ஆணைக்குழு எதிர்கொள்கின்ற நடைமுறை சிக்கல்களை தீர்க்கும் வகையில் சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட

                                  சுகாதார வழிகாட்டுதல்களை விரைவில் வர்த்தமானியில் பிரசுரிக்குமாறு தேர்தல் ஆணைகுழு தலைவர் சுகாதார அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

                                      Posted in சினிமா

                                      விஷால் நிறுவனத்தில் கையாடல் – கணக்காளர் ரம்யா பற்றி அதிரடி அறிக்கை

                                      விஷால் நிறுவனத்தில் கையாடல் – கணக்காளர் ரம்யா பற்றி அதிரடி அறிக்கை

                                      நடிகர் விஷால் நிறுவனத்தில் பணிபுரிந்த கணக்காளர் ரம்யா பற்றி விஷால் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

                                      விஷால் நிறுவனத்தில் கையாடல் – கணக்காளர் ரம்யா பற்றி அதிரடி அறிக்கை
                                      விஷால்


                                      நடிகர் விஷாலுக்கு சொந்தமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் ரூ.45 லட்சம் பணத்தை கையாடல் செய்ததாக

                                      அந்நிறுவனத்தில் பணியாற்றிய கணக்காளர் ரம்யா மீது சமீபத்தில் புகாரளிக்கப்பட்டது.

                                      இந்தப் புகாரை அடுத்து அலுவலக ஊழியர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்திய விருகம்பாக்கம் போலீஸ், பெண் கணக்காளர்

                                      ரம்யா மீது மோசடி, போலி ஆவணங்களை தயாரித்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

                                      இந்நிலையில் கணக்காளர் ரம்யாவிடம் விஷால் பிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் அவரை தொடர்பு

                                      கொள்ள வேண்டாம் என்று அந்நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

                                      விஷால் அறிக்கை

                                      அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “எங்கள் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தில் கணக்காளராக பணிபுரிந்த ரம்யா, நிறுவனத்தில் பல வருடங்களாக வங்கிக் கணக்குகளை

                                      முறைகேடாக பயன்படுத்தி ரூ.45 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார் என்பதை கண்டறியப்பட்டு 30.06.2020 அன்று காவல்துறையில்

                                      புகாரளிக்கப்பட்டு விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் மோசடி தொடர்புடைய பிரிவின் கீழ் 7-07-2020 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளார்.

                                      எனவே ரம்யா இனி எங்கள் நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியில் பணியாற்றவில்லை என்று தெரிவித்துக்

                                      கொள்கிறோம். விஷால் ஃபிலிம் பேக்டரி கணக்கு தொடர்பான எந்த விஷயங்களிலும் இனிமேல் ரம்யாவை தொடர்பு கொள்ள

                                      வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மீறி தொடர்பு வைத்துக் கொண்டால் நிர்வாகம் பொறுப்பல்ல என்பதை இதன்

                                      மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                          Posted in சினிமா

                                          ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்

                                          ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்

                                          முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ் புகார் கூறியிருக்கிறார்.

                                          ஏ.ஆர்.ரகுமானால் எனக்கு பல கோடி நஷ்டம் – பாபு கணேஷ்
                                          ஏ.ஆர்.ரகுமான்


                                          ‘நடிகை’, ‘தேசிய பறவை’, ‘நானே வருவேன்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘காட்டுப் புறா’ திரைப்படத்தின் மூலம் உலகின் முதல்

                                          ‘வாசனை படம்’ என்று பெயர் எடுத்தவர் இயக்குனர், தயாரிப்பாளர் பாபு கணேஷ். இவர் தற்போது ஏ.ஆர்.ரகுமான் மீது புகார் கூறியிருக்கிறார்.

                                          இதுகுறித்து அவர் கூறும்போது, ‘நான் 2000 ஆம் ஆண்டு நான் செய்த கான்செப்ட் வேர்ல்ட் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிய புக், இந்தியன் புக், யுனிவர்சல் புக் ஆகிய சாதனைகள்

                                          படைத்துள்ளது. இந்த கான்செப்ட்டை வைத்து இசையமைபாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘லீ மஸ்க்’ என்ற ஆங்கில படத்தை தயாரித்து இயக்கி இருக்கிறார். இதை பயன்படுத்தியதற்காக அவருக்கு மெயில்,

                                          கடிதம், மியூசிக் யூனியன் வாயிலாக கேட்டு அவர் பதிலளிக்கவில்லை. என்னை அவருக்கு நன்றாக தெரியும்.

                                          என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தியது எனக்கு பெருமை. இருந்தாலும் அவரால் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

                                          ஏ.ஆர்.ரகுமான் – பாபு கணேஷ்

                                          என்னுடைய கான்செப்ட்டை பயன்படுத்தி காட்டுப்புறா படத்தை மூன்று மொழிகளில் உருவாக்கினேன். இதை நம்பிதான் எனக்கு

                                          பைனான்சியர்கள் பணம் கொடுத்தார்கள். ஒரு ஆறுத்தலுக்காகவது ஏ.ஆர்.ரகுமான் என்னிடம் பேசுவார் என்று நினைத்தேன். ஆனால்,

                                          இதுவரை அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. அதனால், கான்செப்ட் திருட்டு என்று லீகலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.

                                          அதற்கும் பதில் இல்லை. அடுத்தகட்டமாக எப்.ஐ.ஆர் போடவுள்ளேன். இது எனக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை’ என்றார்.

                                              Posted in உலக செய்திகள்

                                              சவூதி மக்கள் பங்கு சந்தை வியாபாரம் செய்திட தடை

                                              சவூதி மக்கள் பங்கு சந்தை வியாபாரம் செய்திட தடை

                                              சவூதி நாட்டில் உள்ள மக்கள் அதற்கு வெளியில் உள்ள நாடுகளில்

                                              பங்கு சந்தை வியாபாரம் செய்திட அந்த நாடு தடை விதித்துள்ளது

                                              சட்டவிரோதமாக அந்த வியாபார அனுமதி பத்திரம் இன்றி செய்பவர்கள்

                                              தண்டனைக்கு உட்படுத்த படுவார்கள் எனவும் இவ்விதம் செய்வது தமது

                                              நாட்டின் சட்டத்திற்கு எதிரானது என அந்த நாடு அதிரடியாக அறிவித்துள்ளது

                                              எனவே சவூதி நாட்டி, உள்ள தமிழர்களே இந்த பங்கு சந்தை forex foreign

                                              exchange market இல் ஈடு பட்டால் தயவு செய்து தப்பித்து கொள்ளுங்கள்

                                              நாட்டுக்கு வெளியே என்பது புரோக்கர்களாகும் ,அவ்விதமான நிறுவனங்களில் இணைந்து செய்திடாதீர்கள்

                                              சவூதி மக்கள் பங்கு சந்தை
                                              சவூதி மக்கள் பங்கு சந்தை
                                                  Posted in உலக செய்திகள்

                                                  நையீரியா முதல் இராணுவ விமான பெண்மணி பலி

                                                  நையீரியா முதல் இராணுவ விமான பெண்மணி பலி

                                                  நையீரியாவின் முதலாவது இராணுவ விமானியாக பணியாற்றிய பெண் இராணுவ சிப்பாய் விமான விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார்

                                                  இவரது இந்த மறைவு அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                  வீர பெண்மணியாக இராணுவத்தில் இணைந்து உலங்கு வானூர்தி ஒட்டி வந்த இவரது மரணம்
                                                  மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது

                                                  சமூக வலைத்தளங்கள் முதல் ஊடகங்கள் வரை தமது அஞ்சலியை செலுத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                                                  நையீரியா முதல் இராணுவ
                                                  நையீரியா முதல் இராணுவ
                                                      Posted in உலக செய்திகள்

                                                      அமெரிக்காவில் 13 லட்சம் மக்கள் வேலையில்லா காசு தரக்கோரி விண்ணப்பம் – திணறும் அமெரிக்கா

                                                      அமெரிக்காவில் 13 லட்சம் மக்கள் வேலையில்லா காசு தரக்கோரி விண்ணப்பம் – திணறும் அமெரிக்கா

                                                      அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்

                                                      தாக்குதலில் சிக்கி பல்லாயிரம் மக்கள் பலியாகியும் ,பல லட்சம் மக்கள் பாதிக்க பட்டும் உள்ளனர்

                                                      இவ்வேளை வேலையின்றி மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர் .இதனால் அரசிடம் உதவி பணம் கோரி இதுவரை பதின் மூன்று லட்சம் மக்கள் விண்ணப்பித்துள்ளனர்

                                                      இந்த விண்ணப்பங்கள் நாள் தோறும் அதிகரித்து செல்வதால் அமெரிக்கா அரசு தினறி வருகிறது

                                                      அமெரிக்காவில் 13 லட்சம்
                                                      அமெரிக்காவில் 13 லட்சம்
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          வடக்கு கிழக்கு மலையக பாடசாலை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

                                                          வடக்கு கிழக்கு மலையக பாடசாலை அபிவிருத்திக்கு இந்தியா உதவி

                                                          வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளில் பெருந்தோட்ட மற்றும் அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு இந்திய அரசாங்கம் நிதி உதவி வழங்குவதற்கு முன்வந்துள்ளது.

                                                          கல்வி விளையாட்டு மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சர் டளஸ் அழகப்பெருமவிற்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பெக்லெ (Gobal Baglay) உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் கல்வி அமைச்சில்

                                                          நடைபெற்ற விசேட சந்திப்பின் போதே இந்த உடன்பாடு எட்டப்பட்டிருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                          வடக்கு கிழக்கு மற்றும் பெருந்தோட்ட பாடசாலைகளைப் போன்று அபிவிருத்தி தேவையைக் கொண்ட நாட்டின் ஏனைய

                                                          பாடசாலைகளை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இந்த விசேட சந்திப்பின் போது கல்வி அமைச்சர் இந்திய உயர்ஸ்தானிகரிடம் கேட்டுக்கொண்டார்.

                                                          இதற்கு அமைவாக எதிர்காலத்தில் ஏனைய பாடசாலைகளின் அபிவிருத்திக்காக இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் என்றும் இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          கைதிகள் பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

                                                          கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக 9 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் நியமனம்

                                                          ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

                                                          விமானங்கள் கடத்தப்படல் மற்றும் பணயக் கைதிகளாக பிடிக்கப்படல் போன்ற சந்தர்ப்பங்களில் சர்வதேச விமான போக்குவரத்து விதிமுறைகளுக்கு அமைய பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளும் பொருட்டு இலங்கையில் முதன்முறையாக இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                                                          ஒன்பது சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தார்.

                                                          பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் தலைவர் என்ற ரீதியில் உரையாற்றிய பாதுகாப்புச் செயலாளர், ​ மேற்படி புதிய நியமனங்கள் தக்க தருணத்தில் வழங்கப்ப்பட்டுள்ளது எனவும் இவை பொதுமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் பாரிய பொறுப்புகளை உள்ளடக்கியது எனவும் வலியுறுத்தினார்.

                                                          9/11க்குப் பின்னர் உலகில் விமானப் போக்குவரத்து துறையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் குறித்து தெளிவுபடுத்திய பாதுகாப்பு செயலாளர், எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்கு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

                                                          மேலும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மேற்படி அதிகாரிகள், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளுடன் இணைந்து தங்களது திறனை வளர்த்துக் கொள்வதற்கான செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என பாதுகாப்புச் செயலாளர் கேட்டுக்கொண்டார்.

                                                          பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளாக இன்று நியமனம் பெற்ற இவர்கள் 2006ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்ட பயிற்சிநெறியில் பங்குகொண்டவர்களாவர்..

                                                          இந்த நியமனங்கள் அனைத்தும் சர்வதேச சிவில் விமான அமைப்பு உறுப்பு நாடுகளிடையே நடைமுறையில் உள்ள சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு விதிமுறைக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இதற்கமையவே தமது செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் விமானப் பாதுகாப்பு ஒழுங்குமுறை பிரதி பணிப்பாளர் நாயகம் பி.ஏ.ஜெயகாந்த தெரிவித்தார்.

                                                          இந்த நியமனம் தொடர்பில் 2016ம் ஆண்டு முதல் தேசிய சிவில் விமானப் போக்குவரத்து பாதுகாப்பு குழு கூட்டங்களின் போது தொடர்ந்து கலந்துரையாடப்பட்டு வந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

                                                          பணயக்கைதிகள் தொடர்பாக நடவடிக்கைகளை முகாமைத்துவம் செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்தலுக்கான ஹேக் மற்றும் டோக்கியோ ஆகிய இரண்டு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இலங்கையும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அதன் சட்ட விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

                                                          இதேவேளை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் தொடர்பான பேச்சுவார்த்தை அதிகாரிகளின் தொழில்துறை சம்பந்தமான கோரிக்கைகளை பூர்த்தி செய்து அவர்களின் திறன்களை விருத்தி செய்ய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் என அதன் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தேமிய அபேவிக்ரம உறுதியளித்தார்

                                                          கைதிகள்
                                                          கைதிகள்
                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          சங்கா, மஹேலவுக்கு சார்பாக வாய் திறக்காத முரளி, வீரவன்சவுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளார்

                                                          சங்கா, மஹேலவுக்கு சார்பாக வாய் திறக்காத முரளி, வீரவன்சவுக்கு ஆதரவாக வாய் திறந்துள்ளார்

                                                          தமுகூ தலைவர் மனோ கணேசன்

                                                          எனக்கு வாக்களிக்க வேண்டாம் என்றும், கொழும்பில் தமிழர்கள், அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று முன்னாள் கிரிகட் வீரர் முத்தையா முரளிதரன் கூறுகிறார்.

                                                          இவருக்கு அரசியல் புத்தி மட்டு என ஒட்டுமொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் தெரியும் என்பதால், இவருக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. முரளிதரனுடன் கிரிக்கட் அணியில் ஒன்றாய்

                                                          விளையாடிய சக வீரர்கள் குமார் சங்ககார, மஹேல ஜயவர்தன ஆகியோர் சமீபத்தில் அநியாயமான குற்றச்சாட்டுகளுக்கு

                                                          உள்ளாகி இருந்தபோது முழு நாடுமே அவர்களுக்காக குரல் கொடுத்தது. அவ்வேளையில் தன் நண்பர்களுக்காக வாயை

                                                          திறக்காத இவர், இப்போது தன் பிழைப்புக்காக அரசியல்வாதி விமல் வீரவன்சவுக்காக வாய் திறந்துள்ளார். இதிலிருந்தே இவர் யார் என்பது ஊர்ஜிதமாயுள்ளது.

                                                          கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனிடமும், என்னிடமும் தமிழ் சமூகங்களை ஒப்படைக்க முடியாது எனக்கூறும் விமல் வீரவன்சவிடம், தமிழர்களுக்கான என்ன மாற்றுத்தீர்வுத்திட்டம்

                                                          இருக்கிறது என்பதை கேட்டு சொல்ல வேண்டும். அதற்கு பிறகு அவருக்காக இவர் வாக்கு கோரலாம் என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

                                                          முன்னாள் எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

                                                          தமிழ், முஸ்லிம் வாக்குகள் வேண்டாம் என்று சொன்னவர் இந்த விமல் வீரவன்ச. கொழும்பு மாவட்டத்தில் இவர்களது கட்சி

                                                          வேட்பாளர் பட்டியலில் ஒரு தமிழ், முஸ்லிம் வேட்பாளரும் இல்லை. இதுதான் உண்மை. இந்நிலையில் இவர் எதற்காக இன்று தமிழ் வாக்குகளை கோருகிறார்?

                                                          சஜித் பிரேமதாசவை விட, கொழும்பில் அதிக விருப்பு வாக்குகளை பெற இவர் துடியாய் துடிப்பது எனக்கு தெரியும். இந்த ஒரே நோக்கத்திற்காகத்தான், தமிழர்களின் மீது திடீர் பாசம் விமல் வீரவன்சவுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொழும்பில் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்ய இவர் முயல்கிறார். இதற்குத்தான் முரளிதரன் ஒப்பந்த அடிப்படையில் பணி செய்கிறார்.

                                                          கொழும்பில் எம்பியாக தெரிவு செய்யப்படும் நான், கொழும்பில் வாழும் தமிழர்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இலங்கையிலும் வாழும் தமிழருக்காக ஆற்றியுள்ள பணி, தமிழர்களின் இருப்புக்கு காவல்காரனாக நான் ஆற்றியுள்ள பணி, தமிழர்களின் அடையாளமாக நிமிர்ந்து நிற்கும் என் பணி, தலைநகரில் மாகாணசபை மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள் என்று ஒரு தமிழ் தலைமை வலையமைப்பையே உருவாக்கியுள்ள என் பணி, இங்கு வாழும் தமிழர்களுக்கு தெரியும்.

                                                          இது தனக்கு தெரியாவிட்டால் தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொண்டு முரளிதரன் விமல் வீரவன்சவுக்கு எடுத்து கூற வேண்டும். அதைவிடுத்து இங்கே வந்து இடைத்தரகர் வேலை செய்ய முயலக்கூடாது. தனது தொழில் வியாபாரம் வேறு, எமது இனத்தின் அரசியல் பிரதிநிதித்துவம் வேறு என்பதை இவர் உணர வேண்டும்.

                                                          முஸ்லிம் மக்களிடம் புரியாணி கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. அதேபோல் தமிழ் மக்களிடம் பொன்னாடைகள் கிடைக்கும். ஆனால், வாக்குகள் கிடைக்காது. இதையும் முரளிதரன் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

                                                          Posted in உலக செய்திகள்

                                                          வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி

                                                          வயலில் இறங்கி நாற்று நடவு செய்த காங்கிரஸ் பெண் எம்.பி

                                                          சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர் பூலோ தேவி நேதம். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த இவர் நேற்று கொண்டகானில் உள்ள தனது கிராமத்திற்கு சென்றார்.

                                                          கிராமத்தில் தற்போது நெல் நாற்று நடவு பணிகள் நடைபெற்று வருகின்றன. வீட்டில் இருந்து நேராக வயலுக்குச் சென்ற பூலோ தேவி நேதம், வயலில் இறங்கி சிறிது நாற்று நடவு செய்தார். இது விவசாய தொழிலாளர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக இருந்தது.

                                                          இதுபற்றி பூலோ தேவி நேதம் கூறுகையில், ‘நான் விவசாய குடும்பத்திலிருந்து வந்தவள். இங்கே வேலை செய்வது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. கொலோனா காரணமாக தொழிலாளர் பற்றாக்குறை இருப்பதாக பலர் கூறி வருகின்றனர். எனவே, நாங்கள் சொந்தமாக பயிரிடுகிறோம். எங்கள் சொந்த வேலையைச் செய்வதில் அவமானம் இல்லை. அதிக பணிகள் இருந்தபோதிலும், நான் இரண்டு மூன்று முறை இங்கு வந்துள்ளேன். இங்கு வேலை செய்வது எனக்கு நிம்மதியை அளிக்கிறது’ என்றார்.

                                                          அவர் நாற்று நடவு செய்தபோது எடுத்த புகைப்படத்தை சத்தீஸ்கர் மாநில சுகாதாரத்துறை மந்திரி டி.எஸ்.சிங் தேவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, அவரை பாராட்டியுள்ளார்.

                                                          ‘காங்கிரஸ் எம்பி பூலோ தேவி நேதமின் இந்த புகைப்படம், நிலத்தின் மதிப்புகளுடன் தொடர்புடைய ஒரே கட்சி காங்கிரஸ் மட்டுமே என்பதைக் காட்டுகிறது’ என மந்திரி கூறி உள்ளார்.

                                                          வயலில் இறங்கி நாற்று
                                                          வயலில் இறங்கி நாற்று
                                                          Posted in உலக செய்திகள்

                                                          சாத்தான்குளம் இரட்டைக் கொலை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ

                                                          சாத்தான்குளம் இரட்டைக் கொலை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ

                                                          சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் சிபிஐ தனித்தனியாக வாக்குமூலம் பெற்றது.

                                                          சாத்தான்குளம் இரட்டைக் கொலை- இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 காவலர்களிடம் வாக்குமூலம் பெற்றது சிபிஐ
                                                          கொல்லப்பட்ட தந்தை, மகன்
                                                          சாத்தான்குளம்:

                                                          சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முத்துராஜ், முருகன் ஆகிய 5 பேர் சிபிஐ காவலுக்கு அனுப்பப்பட்டனர்.

                                                          கோர்ட்டு உத்தரவையடுத்து போலீசார் 5 பேரும், சி.பி.ஐ. கூடுதல் சூப்பிரண்டு விஜயகுமார் சுக்லா தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர். பின்னர் 5 பேரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை ராஜாஜி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று, அங்கு 5 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

                                                          அதை தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் ஆஸ்பத்திரியில் இருந்து மதுரை ஆத்திகுளம் மெயின்ரோட்டில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். 3 நாட்களாக அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்குப் பிறகு அவர்களிடம் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டது.

                                                          இதேபோல் மற்ற 5 காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக நீதிமன்றத்தில் விரைவில் மனு தாக்கல் செய்ய உள்ளது.

                                                          Posted in உலக செய்திகள்

                                                          குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனம்

                                                          குஷிநகர் விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக பிரகடனம்

                                                          உத்தரப்பிரதேசத்தில் உள்ள குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிப்பதற்குஇ பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

                                                          புத்த பெருமானின் நான்கு பிரதான புனித ஸ்தலங்களில் ஒன்றாக கருதப்படும் குஷிநகரில் புத்த பெருமான் பரிநிர்வாண நிலையினை அடைந்துள்ளார். இதற்கு காணிக்கையாக

                                                          மகாபரிநிர்வாண ஆலயத்தில் 5 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சயன நிலை புத்தர் சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ரமபார் ஸ்தூபிஇ அல்லது முகுபந்தன் கோபுரம் என்று அழைக்கப்படும்

                                                          அவ்விடத்திலேயே புத்தபெருமானின் ஈமைக் கிரியைகள் நடைபெற்றிருந்ததுடன் இது மகாபரிநிர்வாண ஆலய வளாகத்தில் அமைந்துள்ளது.

                                                          குஷிநகர் மாவட்டத்தில் ஏனைய மதஸ்தலங்களும் புத்த பௌத்த கலாசார மையங்களும் காணப்படுகின்றன. குஷிநகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக பிரகடனம்

                                                          செய்வதற்கான முக்கிய காரணியாக பௌத்த யாத்திரிகர்கள்இ வரலாற்றாய்வாளர்கள் மற்றும் கலாசார ஆர்வலர்கள் அனைவரும்

                                                          குஷிநகருக்கு மட்டுமல்லாது லும்பினிஇ கபிலவஸ்து மற்றும் சிராவஸ்தி ஆகிய இடங்களுக்கும் செல்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றமை அமைகின்றது.