வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார் – தங்க மாளிகை அனந்தி
வாக்காளர் பெருமக்களுக்கு நன்றி தெரிவித்தார் – தங்க மாளிகை அனந்தி
இலங்கையில் யாழ்ப்பாண தேர்தல் தொகுதி பகுதியில் தனது
வாக்களித்த மக்களுக்கு அனந்தி சசிதரன் நன்றிகளை தெரிவித்தார்
,தேர்தல் தொகுதி வாக்கு என்பதில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பல்வேறு பட்ட சம்பவங்களை தெரிவித்தார்
அரச இராணுவ சிறப்பு பாதுகாப்பு படை புடை சூழ சுமந்திரன் வந்து சென்றதும்
,வாக்குகளை மாற்றியுள்ளதாக
பல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டுள்ளது
ரவிராஜை இராணுவம், கொன்றது இப்பொழுது கூட்டமைப்பு
மனைவியை படுகொலை செய்துள்ளது என அனந்தி நீதியுடன் தெரிவித்துள்ளார்
கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் நியமிக்க நடவடிக்கை – உலக தமிழர் மகிழ்ச்சி
கூட்டமைப்பின் தலைவராக ஸ்ரீதரன் நியமிக்க நடவடிக்கை – உலக தமிழர் மகிழ்ச்சி
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை பொறுப்பிற்கு
கல்வியாளரும் மக்கள் பேராதரவு பெற்ற திருவாளர் சிறிதரன் நியமிக்க படவுள்ளார் என தெரிவிக்க பட்டுகிறது
அதனாலேயே சிறிதரன் மீது சேறு பூசும் நடவடிக்கைகளை சிங்கள கூலி இஊடகங்கள் மேற்கொண்டன,
குறிப்பாக செத்த வீட்டு இணையம் தற்போது சிறிதரன் உறவினர் நடத்துவதில்லை அது விற்க பட்டுள்ளது ,அவர்கள் பெரும் சேறு
பூசல்களை மேற்கொண்டு குடும்ப உறவினரே உடன் பிறந்தவருக்கு
எதிராக உளளார் என்ற தோற்ற பாடு உருவாக்க பட்டது என்பதை அவதானிக்க முடிந்தது
சிறிதரன் அடித்தட்டு மக்கள் மனங்களில் குடிகொண்டு உள்ளார் என்பதை அந்த பகுதி மக்கள் பேச்சின் ஊடாக அவதானிக்க முடிகிறது
,சிறிதரன் வருவதை நாம் முற்றாக வரவேற்கிறோம் பலத்த மாற்றங்கள்
ஏற்படும் ,கூட்டமைப்பு நிமிர இதனை அவசியம் செய்தாக வேண்டும் என்பது தமிழர் ஆவலாக உள்ளது
தேசிய பட்டியல் மூலம் கருணா எம்பியாகிறார்
தேசிய பட்டியல் மூலம் கருணா எம்பியாகிறார்
நடந்து மருந்து பாரளுமன்ற தேர்தலில் பலத்த தோல்வியை தழுவி கொண்ட
எட்டப்பன் கருணா அம்மான் தற்பொழுது தேசிய பட்டியல் மூலம்
கோத்தபாயாவின் கட்சி ஊடாக மீள பாரளுமன்றுக்குள் நுழைகிறார்
சிறையில் இருந்தவாறே வெற்றியை தழுவி கொண்ட பிள்ளையான்
வெற்றி பெற்றார் அதனை போல தற்போது கருணாவும் எம்பியாகிறார்
வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் .வன்னியில் மக்கள் வழங்கிய வாக்களிப்பு விகிதம் என்பன கூட்டமைப்பை சிந்திக்க வைத்துள்ளது
ஐக்கிய தேசிய கட்சியின் படு தோல்வி இவர்களை இப்பொழுது இருந்து விழித்து கொள்ள வைத்துள்ளது
திருமலையில் சம்பந்தர் 21 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்று நான்காம் இடத்தில நிலை பெற்றார்
எனவே மக்கள் ஆதரவு இவர்களுக்கு அற்று செல்வது இந்த தேர்தல் உறுதி படுத்தியுள்ளது
புலிகள் எவ்விதம் அனைத்து காட்சிகளையும் ஒன்றிணைக்க
வைத்தனரோ ,அதே போன்ற செயலுக்கு இப்பொழுது இவர்களும் செல்ல தயாராகி வருகின்றனர்
கூட்டமைப்பின் கீழ் ஒன்றினையும் தமிழ் கட்சிகள் – மகிழ்ச்சி
கூட்டமைப்பின் கீழ் ஒன்றினையும் தமிழ் கட்சிகள் – மகிழ்ச்சி
இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்றன் தேர்தல் பலத்த
பாடத்தை புகட்டியுள்ளது ,தமது எதிர்காலத்தின் இருப்பு எவ்விதம்
அமையும் என்பதை இந்த தேர்தல் நன்றே உணர்த்தியுள்ளது
இதனை அடுத்து அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றித்து
பயணிக்கும் நடவடிக்கையில் கூட்டமைப்பு ஈடுபடவுள்ளது
அதற்கான பூர்வாங்க உத்தியோக பூர்வ பேச்சுக்கள் ஆரம்பிக்க படவுள்ளன
இவ்விதம் ஒன்று பட்ட பலத்துடன் தமிழர்கள் பயணிக்கும் பொழுதே வெற்றியை
சூடி கொள்ளவும் மாற்று காட்சிகள் வெற்றியை தடுக்க படும் என்பதாக உணர பட்டுள்ளது
இந்த விடயம் அனைத்து மக்களினாலும் வரவேற்க பட்டுள்ளது ,மகிழ்ச்சியான விடயம் என்பது மக்கள் பேச்சாக உள்ளது
கூட்டமைப்புக்குள் தேசிய பட்டியல் மூலம் சட்டத்தரணி தவராசா நுழைகிறார்
கூட்டமைப்புக்குள் தேசிய பட்டியல் மூலம் சட்டத்தரணி தவறா நுழைகிறார்
தமிழ் தேசிய கூட்டமைப்பில் போனஸ் ஆசனம் மூம ஜனாதிபதி சட்டத்தரணி தவறால் அவர்கள் நுழைகிற
திருவாளர் செல்வம் டைக்கலநாதன் ஊடகங்களுக்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்
மூன்று கட்சிகளை பிரதிநிதி படுத்துகிறது ,நமது அனுமதியில்லாது தனித்துவமாக யாரையும் நியமிக்க முடியாதது ,
அவ்வாறு செய்யவும் கூடாதது எனவும் ,மேலும் விக்கினேஸ்வரன் ,கஜேந்திரன் போன்றபவர்களை ஒன்றித்து நாம் பயணிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுளளார்
இன்று நடந்த இந்த தேர்தல் முடிவுகள் ஊடாக இதனை உணர்ந்து கொள்ள முடியும் என அவர் பட்டறிவுடன் தெரிவித்துள்ளார்
விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை
விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை
பிகில் படத்தில் நடித்த நடிகை ஒருவர் விஜய்க்கு மறக்க முடியாத பரிசு ஒன்றை கொடுத்திருக்கிறார்.
விஜய்க்கு மறக்க முடியாத பரிசு கொடுத்த பிகில் நடிகை
விஜய்
பிகில் படத்தில் விஜய்யின் கால்பந்து அணியில் நடித்திருந்தவர் நடிகை ஆதிரை சவுந்தரராஜன். இவர் கடந்த ஆண்டு பிகில் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது நடிகர் விஜய்க்கு வித்தியாசமான மறக்கமுடியாத கிஃப்ட் ஒன்றை கொடுத்து அசத்தியுள்ளார்.
சமீபத்தில் ஆதிரை சவுந்தரராஜன் அளித்த பேட்டி ஒன்றில், “பிகில் பட ஷூட்டிங்கின் போது எங்கள் அணியில் இருப்பவர்கள்
அனைவரும் விஜய்க்கு பிறந்தநாள் பரிசளித்தார்கள். நானும் கொடுத்தேன்.
ஆதிரை சவுந்தரராஜன்
நான் வாங்கியிருந்த பிறந்தநாள் பரிசு சற்றே வித்தியாசமானது. ‘பிகில்’ படத்தில் இடம்பெறுவது போன்று மணிப்பூர் மற்றும் தமிழ்நாடு அணிகள் இருப்பது போல் கதாபாத்திரங்கள்
பொம்மைகளாக இருந்தன. அதை நம் கைகளில் வைத்து விளையாடமுடியும். இந்த கேமில் எங்கள் அணியின் கோச்
விஜய்யின் கேரக்டரையும் அவரது ஜெர்சி எண் மாறாமல் அப்படியே இணைத்திருந்தேன்.
இந்தப் பரிசைப் பார்த்த விஜய், உண்மையிலேயே பிகில் அணியைப் பார்ப்பதுபோல் உணர்வதாகக் கூறினார். சில நேரங்களில் தான் இதில் விளையாடுவதாகவும் விஜய் சொன்னார்.
எனது பரிசுப் பொருளைப் பார்த்து திரையுலகின் உச்சநட்சத்திரமான விஜய் மறக்கமுடியாத பரிசுப் பொருள் என்று கூறியது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.
அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா.
அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா.
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார்.
அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கிய ஜோதிகா
ஜோதிகா
நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு 25 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கி இருக்கிறார். குழந்தைகளைக்
காப்பதற்கான மருத்துவ உபகரணங்களை வாங்கிக் கொடுத்தும், குழந்தைகள் வார்டுக்கான சீரமைப்புக்கான தொகையைப் பணமாக வழங்கியும் ஜோதிகா உதவியுள்ளார்.
தமிழக சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கருடன் கலந்து ஆலோசித்து, தஞ்சை மருத்துவக்
கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் மருது துரை அவர்களின் ஒப்புதலின் பேரில் இந்த உதவி அகரம் அறக்கட்டளை முலம் வழங்கப்பட்டு உள்ளது.
இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார்
சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை ஜோதிகா
பார்வையிட்டார். அங்கு பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் தாய் சேய் பத்திரமாகக் கவனிக்கப்பட அவர்களுக்கு கூடுதல் உதவிகள்
தேவை என்பதை ஜோதிகா கேட்டறிந்தார். இதையடுத்தே தன் பங்களிப்பாக 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு வழங்கி இருக்கிறார் ஜோதிகா.
ஜோதிகா சார்பில் மருத்துவ உபகரணங்களை திரைப்பட இயக்குநர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
பெற்றுக் கொண்டார். “ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார் அமைச்சர் விஜயபாஸ்கர்.
முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துள்ளார்.
முகநூலில் வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துக் கொண்ட நடிகை
அனுபமா பதக்
கொரோனா ஊரடங்கில் நடிகர், நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் திரையுலகை உலுக்கி வருகிறது. இளம் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கி
இறந்தார். தொடர்ந்து இந்தி டி.வி. நடிகர் மன்மீத் கிரேவல், டி.வி. நடிகை பிரேக்ஷா மேத்தா, மராத்தி நடிகர் அசுதோஷ் பாக்ரே
ஆகியோரும் தற்கொலை செய்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன்பு இந்தி டி.வி. நடிகர் சமீர் ஷர்மாவும் தூக்கில் தொங்கி உயிரை விட்டார்.
இந்த நிலையில் தற்போது போஜ்புரி திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து பிரபலமாக உள்ள நடிகை அனுபமா பதக்கும் தற்கொலை செய்துள்ளார்.
அனுபமா பதக்
பீகார் மாநிலம் புர்னியாவை சேர்ந்த இவர் மும்பையில் உள்ள தஹிசர் பகுதியில் தங்கி படங்களில் நடித்து வந்தார். சில
தினங்களுக்கு முன்பு அனுபமா பதக் தனது முகநூல் பக்கத்தில், “சிலர் தன்னை ஏமாற்றி விட்டனர் என்றும், முதலீடு செய்த
பணத்தை ஒரு நிறுவனம் திருப்பி தரவில்லை என்றும், தனது இரு சக்கர வாகனத்தை ஒருவர் எடுத்து சென்று விட்டார் என்றும், இங்கு யாரையும் நம்ப முடியவில்லை” என்றும் வீடியோவில் பேசி
வெளியிட்டு இருந்தார். இதனால் மனம் உடைந்து அவர் தற்கொலை செய்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது
சிரியாவில் உக்கிர மோதல் – மக்கள் இடப்பெயர்வு
சிரியாவில் உக்கிர மோதல் – மக்கள் இடப்பெயர்வு
சிரியாவின் வடக்கு இட்லி Jabal al-Zawiya பகுதியில் இராணுவ
மோதலால் அதிகரித்துள்ள நிலையில்
மக்கள் தமது உயிர் பாதுகாப்பது தேடி அந்த பகுதியில் இருந்து அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்
சிரியாவில் ஒன்பது அன்டுகளாக முடிவின்றி தொடரும் போரினால்
இதுவரை நான்கு லட்சத்திற்கு ,மேட்பட்ட மக்கள் பலியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

கடலில் குளித்த பெண்ணை தாக்கிய திமிங்கலம்
கடலில் குளித்த பெண்ணை தாக்கிய திமிங்கலம்
அவுஸ்ரேலியா கடல் பகுதியில் குளித்து கொண்டிருந்த இளம் பெண்
ஒருவரை நீரடியால் மறைந்து வந்த திமிங்கலம் தாக்கியுள்ளது
எனினும் இதன் கோர தாக்குதலில் சிக்கிய பொழுதும் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்
இந்த வராம இடம்பெற்ற மூனறாவது சுறா ,திமிங்கல தாக்குதல் இதுவாக பதிய பெற்றுள்ளது
தாயை கொலை செய்த மகன் கைது
தாயை கொலை செய்த மகன் கைது
இலங்கை நாவலப்பிட்டி பகுதியில் பெற்ற தாயை வெட்டி கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்
73 வயதுடைய தாயாரே இவ்வாறு மகனால் படுகொலை செய்ய
பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
மேற்படி கொலை தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
திடீரென மயங்கி வீழ்ந்து கடற்படை சிப்பாய் மரணம்
திடீரென மயங்கி வீழ்ந்து கடற்படை சிப்பாய் மரணம்
திருகோணமலை திஸ்ஸ கடற்படை முகாமில் கடமையாற்றி வந்த கடற்படை வீரரொருவர் மயக்கமுற்ற நிலையில்
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தரமுயர்வுக்கான பரீட்சார்த்தப்போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை நேற்று (7) மாலை மயக்க நிலை
ஏற்பட்டதாகவும், அதனையடுத்து கடற்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் மேலதிக சிகிச்சைக்காக
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது இவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் பூனேவ – ஆணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 34 வயதுடையவர் எனவும் தெரியவருகின்றது.
குறித்த கடற்படை வீரரின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை
மேற்கொண்டு வருவதாகவும் துறைமுக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
14வது பிரதமராக நாளை மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம்
புதிய அரசாங்கத்தின் பிரதமராக திரு.மஹிந்த ராஜபக்ஷ நாளை சத்தியப்பிரமாணம்
இலங்கையின் 14வது பிரதமராக நாளை மஹிந்த ராஜபக்ஷ சத்தியப்பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறார்.
அவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நாளை முற்பகல் களனி ரஜமஹா விஹாரையில் சத்தியப்பிரமாணம் செய்து கொள்வார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரான திரு.மஹிந்த ராஜபக்ஷ 1970ம் ஆண்டு முதல் தடவையாக பாராளுமன்றத்தில்
பிரவேசித்தார். அவர் நான்காவது தடவையாக பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்கிறார்.
தமது 50 வருட கால அரசியல் வாழ்க்கையில் பாராளுமன்ற அங்கத்தவராக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக மஹிந்த
ராஜபக்ஷ பணியாற்றியுள்ளார். அது தவிர இரண்டு தடவைகள் மக்களால் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு மூன்று
தடவைகள் பிரதமராக கடமையாற்றியிருந்தார். முதல் தடவையாக 2004ம் ஆண்டு பிரதமராக பதவி வகித்திருந்தார்.
நாளைய சத்தியப்பிரமாண வைபவத்தின் பின்னர், திரு.மஹிந்த ராஜபக்ஷ இரு தடவைகள் ஜனாதிபதியாகவும், நான்கு தடவைகள்
பிரதமராகவும் கடமையாற்றிய அரசியல்வாதி என்ற பெருமைக்கு உரியவராகின்றார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றிக்கு சர்வதேச ஊடகங்கள் பாராட்டு
பொதுத் தேர்தலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு கிடைத்த வெற்றியை சர்வதேச ஊடகங்கள் பாராட்டி எழுதியுள்ளன.
சில ஊடகங்கள் இந்த வெற்றியை ராஜபக்ஷவின் சுனாமி என வர்ணித்துள்ளன. இது குறித்து விரிவான வகையில் தத்தமது ஊடகங்களில் முக்கிய இடமளித்து எழுதியுள்ளன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை அமோக
வெற்றியை நோக்கி வழிநடத்தியுள்ளார்கள் என அந்த ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
கடந்த காலத்தில் சர்ச்சைக்குரிய கட்டுரைகளை எழுதிய நியுயோர்க் ரைம்சின் மரியா அல் அப் என்ற கட்டுரையாளர்,
இலங்கை அரசாங்கம் ஏற்படுத்திய ஸ்திரத்தன்மையை பொதுத் தேர்தலில் மக்கள் அங்கீகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிபிசி, சி.என்.என், அல்-ஜசீரா, நியுயோர்க் ரைம்ஸ், வோஷிங்டன் போஸ்ட், பீப்பல்ஸ் டெய்லி, ரஷ்யா ருடே முதலான செய்தி
நிறுவனங்களும் இலங்கையின் தேர்தல் குறித்து செய்திகளை வெளியிட்டுள்ளன.
இந்தியாவின் நியுஸ் எயிட்டீன் இணையத்தளம் எழுதிய விமர்சனத்தில், தாமரை மொட்டின் மூலம் யானையொனறு; வீழ்த்தப்பட்டுள்ளதாக குறிப்பிபட்டுள்ளது. இந்தியாவின்
த ஹிந்து, ரைம்ஸ் ஒவ் இந்தியா, என்.டி.ரிவி, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் முதலான பல ஊடகங்கள் இலங்கையின் பொதுத் தேர்;தல் பற்றி
விரிவான விமர்சனங்களை எழுதியுள்ளன. இலங்கை மக்கள் வலுவான தலைமைத்துவத்திற்கும், நிலையான
அரசாங்கத்திற்குமாக வாக்களித்துள்ளார்கள் என அவை குறிப்பிட்டுள்ளன.
சிதறிய இந்திய விமானம் – பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
சிதறிய இந்திய விமானம் – பலி எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு
இந்திய மாசிலமான கேரளாவில் நடந்த விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது
துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு
நேற்று வந்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானத்தில் 184 பயணிகள்
மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்துள்ளனர்
கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த இந்த விமானம் 10-வது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டது. ஆனால் அப்போது
ஓடுதளத்தில் வழுக்கிக்கொண்டு அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விமானம் விபத்துக்குள்ளானது. இதில் விமானம் இரண்டு
பாகங்களாக உடைந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த அருகில் வசித்து வந்த கிராமத்தினர் உடனடியாக சம்பவம்
நடைபெற்ற பகுதிக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிராமத்தினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் இங்கு மீட்பு படையினர் விரைந்து சென்று விமான
இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 2 பேர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால்
கேரள விமான விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. இதில் விமானி, துணை விமானியும் உள்ளடக்கம் ஆகும்.
இதற்கிடையில், இந்த விபத்தில் விமானத்தில் உயிரிழந்த 17 பேர் தவிர எஞ்சிய 173 பேரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15
பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெலிக்கடை சிறைச்சாலை சுவரில் 15 அடி உயரத்திற்கு புதிய வேலி!
வெலிக்கடை சிறைச்சாலை சுவரில் 15 அடி உயரத்திற்கு புதிய வேலி!
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண்கள் பிரிவில்
போதைப்பொருள் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள்
வீசப்படுவதை தடுக்கும் விதமாக புதிய பாதுபாப்பு வேலியொன்றை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைசாலையின் பெண்கள் பிரிவில் தொடர்ச்சியாக போதைப்பொருள்
உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட பொருட்கள் வீசப்படுவது கண்காணிக்கப்பட்டுள்ளதாக
சிறைச்சாலை முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
அதன்படி, 15 அடி உயரத்துடன் கூடிய புதிய பாதுகாப்பு வேலியொன்றை
அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை
முகாமை மற்றும் புனர்வாழ்வு ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்தார்.
இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை
இந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு கடும் எச்சரிக்கை
மழை நிலைமை:
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலிமற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் பல இடங்களில்
மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
காற்று :
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது
மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் காற்றின்
வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டைச்
சூழவுள்ள ஏனைய பிரதேசங்களில் காற்றின் Nவுகம் அவ்வப்போது 50 கிலோ மீற்றர் வரையில் அதிகரிக்கக்கூடும்
கடல் நிலை:
காங்கேசந்துறையிலிருந்து மன்னார், கொழும்பு வரையிலும் மாத்தறையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பிரதேசம்
வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக்காணப்படும்.
பேருவளையிலிருந்து காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.0 – 2.5 மீற்றர் உயரம் வரை (இது
கரைக்கு வரும் அலைகளின் உயரம் அல்ல) மேலெழும்பக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் கரையோரப் பிரதேசங்களில் வசிக்கும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.
தேசத்தை கட்டியெழுப்பும் புதிய பயணம் சில தினங்களில்- மகிந்தா முழக்கம்
தேசத்தை கட்டியெழுப்பும் புதிய பயணம் சில தினங்களில்- மகிந்தா முழக்கம்
தேர்தல் மூலம் தமக்கு கிடைத்த வெற்றியினை மக்கள் மயப்படுத்தும் வகையில் வேலைத்திட்டங்களை
முன்னெடுக்கவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தாய்நாட்டை பாதுகாத்து சுபீட்சமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான புதிய பயணத்தை மக்களின் அங்கீகாரத்துடன் ஆரம்பிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
சமயத்தலைவர்களை இன்று சந்தித்த போதே பிரதமர் இந்த விடயங்களை தெரிவித்தார்
19ஆவது திருத்தச் சட்டம் ,அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்
19ஆவது திருத்தச் சட்டம் ,அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகள் தீர்க்கப்படும்
இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தனது பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து வலுவான
அரசாங்கத்தை உருவாக்க தமது கட்சி தயாராக இருப்பதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
ஒன்பதாவது பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்காக நேற்ற முன்தினம் (05) நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெறப்பட்ட அமோக வெற்றிக்குப்பின்னர் இன்று (07) நடைபெற்ற முதலாவது
ஊடகவியலாளர் சந்திப்பில் பேராசிரியர் பீரிஸ் இவ்வாறு தெரிவித்ததுடன் , நாட்டுக்கு இடையூராகவுள்ள அரசியலமைப்பின்
19ஆவது திருத்தச் சட்டம் உள்ளடங்கலாக அரசியலமைப்பில் நிலவும் பிரச்சினைகளை புதிய பாராளுமன்றத்தில் தீர்ப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.
ஜனாதிபதியுடன் இணைந்து சிறந்த முறையில் பணியாற்றக் கூடிய பாராளுமன்றத்தை அமைப்பதற்கான சந்தர்ப்பம்
கிடைத்திருப்பதினால், சௌபாக்கிய தொலை நோக்கு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
பொதுத் தேர்தலின் போது ஜனாதிபதி வழங்கிய தலைமைத்துவம் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த வெற்றிக்காக முன்னாள்
அமைச்சர் பசில் ராஜபக்ஷ மகத்தான பணியாற்றியதாக ஜி.எல்.பீரி;ஸ் கூறினார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன்
இணைந்து கூட்டணி அமைந்து மகத்தான வெற்றியின் பங்களார்களாகிய சகருக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் நன்றிகளை தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் தயாரானது
பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் தயாரானது
பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கு அமைவாக ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவுக்கு 17 தேசியப்பட்டியல் உறுப்பினர்களை
நியமிப்பதற்கான உரிமை கிடைத்துள்ளது.
இதற்கமைய 17 பேரின் பெயர்ப்பட்டியலை பொதுஜன பெரமுன இன்று தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஒப்படைத்தது.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், சட்டத்தரணி சாகர காரியவசம், அஜித்
நிவாட் கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணிகளான அலி சப்ரி, ஜயந்த
வீரசிங்க, மஞ்சுளா திசாநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித்த ஹேரத், கெவிது குமாரதுங்க, முஹமட்
முஸ்ஸமில், பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண, பொறியியலாளர் யதாமினி குணவர்த்தன, கலாநிதி சுரேன் ராகவன், டிரான் அலஸ்,
விசேட வைத்திய நிபுணர் சீத்தா அரம்பேபொல, ஜயந்த கெட்டகொட,
முஹமட் பலில் மர்ஜான் ஆகியோர் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர.








