கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும் ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும்
என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸ் மூளையை பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொரோனா வைரஸ் உடலில் பல்வேறு உறுப்புகளை பாதிப்படைய செய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்து உள்ளனர்.
முதலில் நுரையீரலில் நுழையும் கொரோனா வைரஸ் இருமல், காய்ச்சல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. இந்த அறிகுறிகளுக்கு
பின்னர் மூச்சு திணறல் ஏற்பட்டு உடல்நிலை மோசமான நிலைக்கு சென்று விடும்.
கொரோனா பற்றிய ஆய்வுகளில் அந்த வைரஸ் நுரையீரலை தவிர இதயம், நரம்பு மண்டலம் உள்ளிட்ட உறுப்புகளையும் பாதிப்படைய செய்கிறது என்பது தெரிய வந்தது.
மேலும் தலைவலி, குழப்பமான மனநிலை, வாந்தி போன்றவையும் கொரோனா
வைரசின் அறிகுறிகளாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளின் அடுத்தடுத்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் கொரோனா வைரஸ் மூளைக்குள்ளும் ஊடுருவி பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடர்பாக அமெரிக்காவில் நடத்தப் பட்ட ஆய்வில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு தலைவலி, குழப்பம் மற்றும் மயக்கம் ஏற்படுகின்றன. இது
கொரோனா வைரஸ் மூளைக்கு நேரடியாக செல்வதன் விளைவாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நோய் எதிர்ப்பு நிபுணர் அகிகோ இவாசாகி தலைமையிலான ஆய்வறிக்கையில், “வைரஸ் மூளைக்குள் கொந்தளிக்க முடிகிறது
என்றும், மூளைக்கு அருகே ஆக்சிஜன் செல்களை பாதிக்கிறது என்றும்
தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதன் பாதிப்பு இன்னும் தெளிவாக தெரியவில்லை” என்று கூறப்பட்டு இருக்கிறது போதுமாம் இது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .
இந்த ஆராயச்சி பூர்வாங்க கட்டத்தில்தான் இன்னும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சான்பிரான்சிஸ்கோவில் கலிபோர்னியா பல்கலைக்கழக நரம்பியல் துறை தலைவர் ஆண்ட்ரூ ஜோசப்சன் கூறும்போது,
“மூளையில் வைரஸ் நேரடி ஈடுபாடு உள்ளதா, இல்லையா என்பதை புரிந்து கொள்வது அசாதாரணமானது. ஆனாலும் அந்த
ஆய்வறிக்கை மதிப்பாய்வுக்கு வரும்வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றார்.
சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு கொல்க – கிம் ஜாங் உன் உத்தரவு
சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு கொல்க – கிம் ஜாங் உன் உத்தரவு
கொரோனா பரவலை தடுக்க சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டு உள்ளார்.
சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுட்டு தள்ள அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவு
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்
கொரோனா வைரஸ் முதலில் தோன்றிய சீனாவில் இருந்து வடகொரியாவிற்குள் நுழைபவர்களை சுடுவதற்கு அந்நாட்டு அரசு
உத்தரவிட்டுள்ளதாக, தென்கொரியாவில் உள்ள அமெரிக்க படை தளபதி தெரிவித்துள்ளார்.
உலகமே கொரோனாவால் நடுங்கிக் கொண்டிருக்க, வடகொரியா மட்டும், கொரோனா பாதிப்பு குறித்து எந்த ஒரு தகவலையும் வெளியிடுவது இல்லை.இந்நிலையில், தென் கொரியாவில் உள்ள
அமெரிக்க படை தளபதி ராபர்ட் அம்ரம்ஸ், கொரோனா பரவலை தொடர்ந்து ஜனவரி மாதம் சீனாவுடனான எல்லையை வடகொரியா
மூடியது. இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் அவசர நிலையையும் வடகொரியா அமுல்படுத்தியது. அதைத் தொடர்ந்து சீனாவிலிருந்து
வடகொரியாவுக்கு நுழைபவர்களை சுட வடகொரியா உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இதுகுறித்து வடகொரிய அரசு ஊடகம் தரப்பில் எந்தச் செய்தியும் வெளியாகவில்லை. வடகொரியாவின் எல்லைப்பகுதி
நகரான கேசாங்கில் கொரோனா அறிகுறிகளுடன் ஒருவர் கடந்த ஜூலை மாதம் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த நகரின் எல்லைகள்
அனைத்தையும் சீல் வைக்கவும், முழு ஊரடங்கு பிறப்பித்தும் அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார்.
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

- ஈரானை அழிக்க வரும் அமெரிக்கா நாசகார குண்டுகள்

- ரியாத் விமான நிலையம் மீதான தாக்குதல்களுக்கு ஹூதிகள் பொறுப்பேற்றன

- இஸ்ரேல் மீதான நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றமாக, கொலம்பியா ஜெருசலேமில் தூதரகத்தைத் திறந்தது

- போர் உயிரிழப்புகள் அதிகரிப்பால் ஏமன் மருத்துவமனைகள் திணறுகின்றன

அமலாபால் கணவராக நடித்தவருக்கு கொரோனா
அமலாபால் கணவராக நடித்தவருக்கு கொரோனா
அமலாபால் கணவராக நடித்த நடிகருக்கு கொரோனா வைரஸ் தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் வீட்டில் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.
அமலாபால் கணவராக நடித்தவருக்கு கொரோனா
அமலா பால்
கடந்த 2018ஆம் ஆண்டு இயக்குனர் சித்திக் இயக்கத்தில் அரவிந்த்சாமி, அமலாபால் நடித்த திரைப்படம் ’பாஸ்கர் ஒரு ராஸ்கல்’. இந்த திரைப்படத்தில் அமலாபாலின் கணவராக பிரபல
பாலிவுட் நடிகர் அஃப்தாப் என்பவர் நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கு தற்போது கொரோனா வைரஸ் தொற்று உறுதி
செய்யப்பட்டுள்ளதாகவும் இதனை அடுத்து அவர் தன் வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு லேசான காய்ச்சல் மற்றும் இருமல் இருந்ததை அடுத்து கொரோனா வைரஸ் சோதனை செய்து கொண்டதாகவும்
துரதிஷ்டவசமாக தனக்கு பாசிட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அஃப்தாப்
இதனை அடுத்து மருத்துவர்களின் அறிவுரைக்கு ஏற்ப வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தன்னுடன் கடந்த சில
நாட்களாக தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார்
நாசரா இது…. வைரலாகும் புதிய புகைப்படங்கள்
நாசரா இது…. வைரலாகும் புதிய புகைப்படங்கள்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கும்
நாசரின் புதிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
நாசரா இது…. வைரலாகும் புதிய புகைப்படங்கள்
நாசர்
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவர் நாசர். எந்த
கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை மிகவும் திறமையாக நடித்து கொடுப்பவர்.
சிறிய கதாபாத்திரம் என்றாலும் கூட தன்னுடைய தனித்திறமையால் ஸ்கோர் செய்துவிட்டு செல்வார்.
நாசர்
பல முன்னணி நடிகர்கள் படத்தில் இவர் நடித்திருக்கிறார். தற்போது முன்னணி
நடிகர்களுக்கு சவால் விடும் அளவிற்கு புதிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
நாசர்
எதிர்நாயகன் என்ற பெயரில் வெளியாகி இருக்கும் இந்த புகைப்படத்தில்
ஆளே மாறி போய், புதிய தோற்றத்தில் இருக்கிறார். இந்த புகைப்படங்கள்
ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்
தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்
சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்.
தன்னைத்தானே இறந்து விட்டதாக அறிவித்துக் கொண்ட மீரா மிதுன்
மீரா மிதுன்
பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான மீராமிதுன் அவ்வப்போது தனது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய பதிவு செய்து
பரபரப்பை ஏற்படுத்தி வருவார். குறிப்பாக முன்னணி நடிகர்கள் மீது அவர் கூறும் குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் மீராமிதுன் இறந்து விட்டதாகவும் போஸ்ட்மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர்
விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீராவே
இந்த பதிவை செய்தாரா அல்லது அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு
யாரேனும் மர்ம நபர்கள் பதிவு செய்தார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
மீரா மிதுன் பதிவு
இது குறித்து அவரே விரைவில் விளக்கம் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு
விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய்க்கு ஆதரவான
போஸ்டர்கள் கிழிக்கப்படுவதால், அவரது ரசிகர்கள் தொடர்ந்து ஒட்டி வருகிறார்கள்.
விஜய்க்கு ஆதரவான போஸ்டர்கள் கிழிப்பு… தொடர்ந்து ஒட்டும் ரசிகர்கள்
விஜய்
மதுரையை போலவே தேனி மாவட்டத்திலும் அடிக்கடி நடிகர்களுக்கு ஆதரவாக பரபரப்பு போஸ்டர்கள் ஒட்டுவது
வாடிக்கையாக நடந்து வருகிறது. கடந்த மாதம் துணை முதல்வருக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டரால் பெரிதும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு அவை அகற்றப்பட்டன.
கடந்த சில நாட்களுக்கு முன்பு போடியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடிகர் விஜய் இருப்பது போன்ற போஸ்டர்
ஒட்டப்பட்டது. வருங்கால முதல்வரே என்ற வாசகங்களுடன் அந்த போஸ்டர் அமைந்திருந்ததால் அதனை போலீசார் அகற்றினர்.
கிழிக்கப்பட்ட போஸ்டர்
ஆண்டிபட்டியில் நடிகர் விஜய் ரசிகர்கள் சார்பில் நள்ளிரவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. அதில் ‘‘தமிழ் சினிமாவில்
கலெக்ஷன்னாலும் சரி, தமிழ்நாட்டில் எலக்ஷன்னாலும் சரி இனிமேல் தளபதிதான் தளபதி மட்டும்தான்’’ என்று அச்சிடப்பட்டு
இருந்தது. மேலும் ‘‘மத்திய அரசு, மாநில அரசியலை பார்த்தாச்சு… எப்போது மக்கள் இயக்க அரசியல்…’’ என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு இருந்த போஸ்டர்களால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதனை போலீசார் கிழித்து
அப்புறப்படுத்தினர். தேனி மாவட்டத்தில் தொடர்ந்து நடிகர்களுக்கு ஆதரவாக ஒட்டப்படும் போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டு
வருகிறது. போலீசார் அதனை கிழித்து அப்புறப்படுத்தினாலும் மீண்டும் இது போன்ற போஸ்டர் யுத்தம் தொடர்ந்து வருகிறது.
சிறைச்சாலையினுள் வீசப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிப்பு
சிறைச்சாலையினுள் வீசப்பட்ட கைப்பேசிகள் கண்டுபிடிப்பு
அகுனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் பாதுகாப்பு சுவரின் மீது வீசப்பட்டிருந்த
09 கைப்பேசிகள் மற்றும் 18 சிம் அட்டைகள் மற்றும் புகையிலை பெக்கெட்
ஒன்றும் சிறைச்சாலை அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
போலீசார் சீருடை கண்டு பயந்த சிறுமியை ரோந்து காரில் அமர வைத்து அதிகாரிகள் மகிழ்வித்தனர்.
போலீசார் சீருடை கண்டு பயந்த சிறுமியை ரோந்து காரில் அமர வைத்து அதிகாரிகள் மகிழ்வித்தனர்.
போலீசார் சீருடை கண்டு பயம்- ரோந்து காரில் சிறுமியை அமர வைத்து மகிழ்வித்த அதிகாரிகள்
சிறுமி யாசியா போலீஸ் ரோந்து பிரிவின் சொகுசு காரில் அமர வைக்கப்பட்ட காட்சியை படத்தில் காணலாம்.
துபாய்:
துபாயில் வசிக்கும் அரபு நாட்டை சேர்ந்த 3 வயது சிறுமி யாசியாவுக்கு சீருடையில் உள்ள போலீசாரை பார்த்து பயம்.
குழந்தையாக இருக்கும்போதே போலீசாரை பார்த்து மிரண்டு பயந்து ஓடி ஒளிந்து கொண்டுள்ளார். அவளது பெற்றோர் எத்தனை
சமாதானம் செய்தும், விளக்கமாக கூறியும் அந்த சிறுமியின் பயம் தெளியவில்லை.
இதனை அடுத்து சிறுமியின் பெற்றோர் எதிர்காலத்தில் தனது மகளுக்கு எதிர்மறையான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க அவளின் பயத்தை போக்க வேண்டும் என போலீஸ் துறைக்கு
வேண்டுகோள் விடுத்தனர். இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட போலீஸ் துறையின் சுற்றுலா பாதுகாப்பு மற்றும் ரோந்து பிரிவு
தலைவர் ஒபைத் பின் அபித் தலைமையில் தனிப்படை பெண் போலீசார் சிறுமியின் வீட்டிற்கே சென்றனர்.
அவர்கள் கையோடு சிறுமிக்கு விளையாட்டு பொருட்களை கொண்டு சென்றனர். முதலில் போலீஸ் அதிகாரிகள் சிறுமியிடம் அன்பாகவும், வேடிக்கையாகவும் பேச்சு கொடுத்தனர். குறிப்பாக
ரோந்து பிரிவில் பயன்படுத்தப்படும் சொகுசு காரில் அந்த சிறுமியை அமர வைத்தனர். பிறகு அந்த காரில் அந்த வீட்டு பகுதியில் உள்ள சாலையில் அழைத்து சென்றனர்.
இதன் காரணமாக அந்த சிறுமிக்கு பயம் நீங்கி புன்னகை புரிந்ததும் பெற்றோர் அளவில்லா ஆனந்தம் அடைந்தனர். துபாய் போலீஸ்
அதிகாரிகளுக்கு மகிழ்ச்சியுடன் தங்கள் நன்றியினை தெரிவித்தனர். இறுதியில் அந்த சிறுமிக்கு பரிசு பொருட்கள் மற்றும் நினைவு பரிசினை அதிகாரிகள் வழங்கினர்.
இந்த சம்பவத்திற்கு பொதுமக்களிடம் இருந்து போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. குறிப்பாக அதில் பாதுகாப்பு பணி
மட்டுமல்லாமல் சமூக பணிகளிலும் அக்கறை காட்டுவது சிறப்பாக உள்ளது என கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரிட்டனில் ஒரே நாளில் 3500 பேர் கொரனோவால் பாதிப்பு
பிரிட்டனில் மீள இரண்டாம் அலியாக பரவிய வரும் கொரனோ நோயின்
தாக்குதலில் சிக்கி கடந்த தினம் மட்டும் ஒரே நாளில் மூவாயிரத்து ஐநூறு பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவே எதிர்வரும் மாதங்களில் அதிகம் பாதிக்க படுவார்கள் என எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளதுடன் 85,000 பேருக்கு மேல் பலியாவார்கள் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
பிரிட்டனில் வரும் வாரம் 31C அளவில் வெப்பம்
பிரிட்டனில் வரும் வாரம் 31C அளவில் வெப்பம்
பிரிட்டனில் எதிர்வரும் வாரம் 31C அளவில் வெப்பம் இருக்கும் எனவும் ,
இது இக்கால பகுதியில் அதிக வெப்ப நிலையாக உணரப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது
பொது வெளியில் ஆறுபேருக்கு மேல் கூட வேண்டாம் என அறிவிக்க
பட்டுள்ள நிலையில் மக்கள் அதிகமாக கூடலாம் என எதிர் பார்க்க படுகிறது
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா
இலங்கையில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 7 பேருக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 3,169 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் மேலும் 14 பேர் கொரோனா வைரஸில் இருந்து பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு நேற்று (11) சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,969 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், 181 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் (கொவிட் – 19) தொற்றுக்கு உள்ளாகி 12 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாள்வெட்டு குழுவின் தலைவர் உட்பட இருவர் கைகுண்டு வாளுடன் கைது
வாள்வெட்டு குழுவின் தலைவர் உட்பட இருவர் கைகுண்டு வாளுடன் கைது
மட்டக்களப்பு வாள்வெட்டு குழுவின் தலைவர் தனு உட்பட இருவரை வாள் மற்றும் கைக்குண்டுடன் நேற்று (11) கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள நாற்கேணி மற்றும் ஊறணி தொடர்ச்சியாக வாள்வெட்டு மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வாள் வெட்டுக்குழு ஒன்று பல்வேறு
குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், பெண்கள் தனிமையில் வீடுகளில் இருக்க முடியாத நிலை மற்றும் மக்களை அச்சுறுத்தி வருவதாகவும் இக் குழுவால் தங்களுக்கு உயிர் ஆபத்து
ஏற்படும் என மக்கள் பொலிஸில் முறைப்பாடு செய்வதற்கு பயந்து வருவதாக பொலிஸாருக்கு நீண்ட காலமாக முறைப்பாடுகள் கிடைக்பெற்று வந்தது.
இந்த நிலையில் புலனாய்வுத் துறையினருக்கு பொலிஸார் இவ் வாள்வெட்டு குழு பற்றி அறிவித்ததை அடுத்து புலனாய்வுத் துறையினர் தொடர்ச்சியாக இவர்கள் தொடர்பாக தகவல்களை
திரட்டிவந்துள்ள நிலையில், நேற்று மாலை நாவற்கேணி பிரதேசத்தில் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனு வாளுடன் மக்களை அச்சுறுதி வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி.கே. ஹொட்டியாராச்சியின் ஆலோசனையில், குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸ் சப் இன்பெஸ்டர் முகமட் பொலிஸ் சாஜன் கிருபா
தலைமையிலான பொலிஸ் குழுவினர் அங்கு சென்று அவரை கைது செய்ய முற்பட்ட போது, அவர் பொலிஸார் மீது வாளால் வெட்ட முற்பட்டுள்ளார்.
பின்னர் பொலிஸார் சுற்றிவளைத்து அவரையும் அவரது சாகாவான சாந்தன் ஆகிய இருவரை கைது செய்ததுடன் தனுவின் இடுப்பில் இருந்து கைக்குண்டு ஒன்று வாள் ஒன்றையும் மீட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இதில் கைது செய்யப்பட்ட வாள் வெட்டுகுழுவின் தலைவனான தனு கடந்த 2018 ஆண்டு சிறு குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் இருவர் விசாரணைக்கு நாவற்கேணி பிரதேசத்துக்கு சென்ற போது
அவர்களை துரத்தி துரத்தி தாக்குதல் மேற்கொண்டு தாக்கி காயப்படுத்தியது தொடர்பாக மட்டக்களப்பு நீதவான்
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளதுடன் அவர் பிணையில் வெளி வந்துள்ளார்.
அதேவேளை அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் 9 வழக்குகள் உள்ளதுடன் சிறு குற்றப் பிரிவில் 4 முறைப்பாடுகள் தாக்குதல் செய்யப்பட்டுள்ளதாகவும் யாழ்பாணத்தில் உள்ள ஆவா வாள் குழு
போன்று இவர்களும் இங்கு இயங்கி வருவதாகவும், இக் குழுவில் மேலும் பிரதான 4 பேர் தலைமறைவாகியுள்ளதுடன் அவர்களை
கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கொரனோ தொடர்பில் மக்கள் அலட்சிய போக்கில் செயற்படுகின்றனர் – வடமாகாண ஆளுநர்
கொரனோ தொடர்பில் மக்கள் அலட்சிய போக்கில் செயற்படுகின்றனர் – வடமாகாண ஆளுநர்
Covid 19 தொற்று இடர் நிலையினை தொடர்ந்தும் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பது தொடர்பான அறிவுறுத்தல்களை
வழங்கும் கலந்துரையாடல் வடமாகாண ஆளுநர் பீ.எஸ்.எம் சாள்ஸின் தலைமையில் வடமாகாண ஆளுநர் செயலகத்தில் (08.09.2020) இடம்பெற்றது.
கலந்துரைடலில் மாகாணத்திற்கு உட்பட்ட மாவட்ட செயலாளர்கள்,சுகாதார துறைசார் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட ரீதியாக COvid
19 தொற்றின் தற்போதைய நிலைமை பற்றி கேட்டறிந்த ஆளுநர் தற்போது அனைத்து இடங்களிலும் Covid 19 தொடர்பில் மக்கள்
அலட்சிய போக்கில் செயற்படுவது அவதானிக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
இந்நிலையில் Covid 19 இடர் தொற்று தொடர்பில் ஆளுநர் பின்வரும் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தார்.
மாதத்திற்கு இரு தடவை ஒவ்வொரு பிரதேச செயலகங்கள் ரீதியாகவும் கிராமசேவகர்இ சுகாதார துறையினர் மற்றும்
பாதுகாப்பு துறையினர் உள்ளடக்கி Covid 19 தொற்று தொடர்பில் ஆராயப்பட வேண்டுமென குறிப்பிட்டார்.
ஆலய திருவிழா காலங்களில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடுவதை தவிர்த்து ஆலயங்களில் வேறுபட்ட பூசை நேரங்கள் ஏற்பாடு செய்து சமூக
இடைவெளியை பேணி சன நெருக்கத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
தற்போது பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால் பாடசாலைக்கு அண்மையில் உள்ள உணவகங்களை சுகாதார பரிசோதகர்கள்
கடுமையான சுகாதார பரிசோதனைகள் மூலம் கண்காணிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
எதிர்வரும் மாதங்கள் மழைக்காலம் .ஆதலால் சூழலை சுத்தமாக பேணி டெங்கு பரவலை தடுக்க சுகாதார மற்றும் பாதுகாப்ப
பிரிவினர் சட்டநடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டுமென்று வவலியுறுத்தப்பட்டது.
நாம் இந்தியாவிற்கு மிக அண்மையில் இருப்பதால் Covid 19 இடர் நிலை தொடர்பாக மிகவும் அவதானமாக செயற்பட வேண்டியுள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர், வெளிநாடுகளில் இருந்து
வருபவர்கள் தொடர்பாக கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது அவசியமாகுமென வலியுறுத்தப்பட்டது.
விழாக்கள், பொதுபோக்குவரத்து, பாடசாலைகள்இஆலய திருவிழாக்கள் மற்றும் உணவகங்களில் சமூக இடைவெளி பேணல்
மிக கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் மண் அகழ்வு, கிரவல் அகழ்வு தொடர்பில் குறிப்பாக மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டுமென குறிப்பிட்டப்பட்டது.
பயன்படுத்தப்படாதுள்ள காணிகளை இனங்கண்டு அவற்றை சீர்செய்து அவற்றில் உப உணவு பயிர்களை பயிரிட்டு அரசின்
விவசாய அபிவிருத்திக்கு பங்களிக்க வேண்டுமென ஆளுநர் தெரிவித்தார்.
கழுத்தில் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா… வைரலாகும் புகைப்படம்
கழுத்தில் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா… வைரலாகும் புகைப்படம்
நடிகை வனிதா விஜயகுமார், தனது கணவர் பீட்டர் பாலுடன் கழுத்தில் பண மாலை அணிந்து வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார்.
கழுத்தில் பண மாலை அணிந்து சிறப்பு பூஜை நடத்திய வனிதா… வைரலாகும் புகைப்படம்
வனிதா – பீட்டர் பால்
நடிகை வனிதா விஜயகுமார் சில மாதங்களுக்கு முன்பு பீட்டர் பால் என்பவரை 3வது திருமணம் செய்துக் கொண்டார். பீட்டர் பாலுக்கும் ஏற்கனவே திருமணமாகி மனைவியும், குழந்தையும் உள்ளனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் வனிதாவை மணந்ததாக சர்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை முடிந்து பீட்டர்
பால் வீடு திரும்பி இருக்கும் நிலையில், வீட்டில் சிறப்பு பூஜை நடத்தி இருக்கிறார் வனிதா.
குடும்பத்தினருடன் வனிதா
இரண்டு மகள்களுடன் வனிதா, பீட்டர் பால் இருவரும் கழுத்தில் பண மாலையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். தனது லட்சுமி குபேர பூஜை நடந்ததாகவும் 2020
ஆம் ஆண்டின் இனி வரக்கூடிய மாதங்களாவது அனைவருக்கும் நல்லதாக இருக்கட்டும் என்றும் இந்த ஆண்டை தன்னால் மறக்கவே
முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்
சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்
காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலையிடுவார் என் நம்புவதாக நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
சோனியா காந்தி தலையிடுவார் என நம்புகிறேன்- கங்கனா ரனாவத்
கங்கனா ரனாவத்
இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு விசாரணை தொடர்பாக மும்பை போலீசாரை குற்றம்சாட்டிய நடிகை கங்கனா ரனாவத், மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என
கூறினார். இதற்கு ஆளும் சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து சிவசேனாவுக்கும், நடிகைக்கும் மோதல் உண்டானது.
மேலும், பலத்த எதிர்ப்பை மீறி அவர் மும்பை வந்தார்.
இதற்கிடையே, பாந்திரா பாலிஹில்லில் உள்ள கங்கனா ரனாவத் பங்களாவில் சட்டவிரோத கட்டுமானங்கள் செய்யப்பட்டதாக கூறி
மாநகராட்சியினர் அவற்றை இடித்து தள்ளினர். இந்த விவகாரங்களால் கங்கனா ரனாவத் மற்றும் உத்தவ் தாக்கரே அரசு இடையே மோதல் வலுத்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிராவில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், மகாராஷ்டிராவில் உங்கள் அரசு, என்னை நடத்தும் விவகாரம் பெண்ணாக உங்களுக்கு வேதனை அளிக்கவில்லையா?
சட்ட மேதை அம்பேத்கர் வழங்கிய அரசியலமைப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உங்கள் அரசை உங்களால் கேட்க முடியவில்லையா? பெண் எதிர்கொள்ளும் போராட்டங்களை
நீங்கள் அறிந்திருக்கக் கூடும். சட்டம் ஒழுங்கை கேலிக்கூத்தாக்கி ஒரு பெண்ணை உங்கள் அரசு துன்புறுத்தும் நிலையில், உங்களின்
அமைதியையும் அலட்சியத்தையும் வரலாறு மதிப்பு செய்யும். இந்த விவகாரத்தில் நீங்கள் தலையிடுவீர்களென நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.
தினமும் மாட்டுக் மூத்திரம் குடிப்பேன் – அதிர வைத்த அக்ஷய் குமார்
தினமும் மாட்டுக் மூத்திரம் குடிப்பேன் – அதிர வைத்த அக்ஷய் குமார்
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் அக்ஷய் குமார், தான் தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பதாக கூறியுள்ளார்.
தினமும் மாட்டுக் கோமியத்தை குடிப்பேன் – அதிர வைத்த அக்ஷய் குமார்
அக்ஷய் குமார்
டிஸ்கவரி தொலைக்காட்சி சேனலின் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ நிகழ்ச்சி உலகப் புகழ் பெற்றதாகும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் அடர்ந்த காட்டுப்பகுதியில் ஆபத்தான
சூழ்நிலைகளில் எவ்வாறு உயிர் பிழைத்திருப்பது, அங்கு இருந்து எப்படித் தப்பி வருவது என்பதை விளக்கி ஆவணப்படமாக
வெளியிட்டு வருகிறார். இந்த நிகழ்ச்சியில் சினிமா, அரசியல் பிரபலங்களும் அவ்வப்போது கலந்துகொண்டு வருகின்றனர். கடந்த
சில மாதங்களுக்கும் முன்னர்கூட நடிகர் ரஜினிகாந்த் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தற்போது பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் அதில் கலந்து கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியின் டீசர் அண்மையில் வெளியானது. அதில் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்
தில் டீ போட்டுக் கொடுத்ததாக அக்ஷய் குமார் தெரிவித்தார்.
பியர் கிரில்ஸ், அக்ஷய் குமார்
இந்நிலையில் பியர் கிரில்ஸ், அக்ஷய் குமார் மற்றும் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி ஆகியோர் சமூக வலைதளத்தில் லைவ்
வீடியோ சாட் செய்தனர். அப்போது, யானை சாணத்தில் போட்ட டீயை எப்படித் தான் குடித்தீர்களோ என்று ஹூமா, அக்ஷய் குமாரிடம் கேட்டார்.
அதற்கு அக்ஷய் குமார் அளித்த பதில் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் கூறியதாவது, நான் தினமும் மாட்டுக் கோமியம்
குடிப்பதால், யானை சாண டீ எனக்கு பெரிய விஷயமாக தெரியவில்லை என்றார். ஆயுர்வேத காரணங்களுக்காக தான் தினமும் கோமியத்தை குடிப்பதாக அவர் கூறினார்.
3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை
3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை
3 பூசாரிகளை கொலை செய்து கோவிலில் கொள்ளை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 3 பூசாரிகளை கொன்று கோவிலில் கொள்ளை
கர்நாடக மாநிலம் மண்டியா டவுனை ஒட்டியுள்ளது, குட்டலு கிராமம். இங்கு பிரசித்தி பெற்ற அர்க்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ்,
பிரகாஷ், ஆனந்த் ஆகியோர் பூசாரிகளாக வேலை பார்த்து வந்தனர். அவர்கள் தினமும் கோவிலில் பூஜை மேற்கொண்டு
வந்தனர். மேலும் இரவில் 3 பேரும் கோவிலுக்குள் படுத்து தூங்குவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவும் கோவிலில் பூஜையை முடித்துவிட்டு 3 பூசாரிகளும் கோவிலில் படுத்து தூங்கினர். அப்போது நள்ளிரவில் மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து
கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். இதை 3 பூசாரிகளும் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த மர்மநபர்கள், 3
பூசாரிகளையும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர். இதில் 3 பேரும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி, துடித்து உயிரிழந்தனர்.
இதைதொடர்ந்து மர்மநபர்கள் கோவிலின் உள்ளே இருந்த 3 உண்டியல்களையும் பெயர்த்து எடுத்து கோவிலில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளனர். பின்னர் அதன் பூட்டுகளை உடைத்த
மர்மநபர்கள் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு, உண்டியல்களை அங்கேயே போட்டு விட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
நேற்று காலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் கதவுகள் உடைக்கப்பட்டு கிடப்பதையும் பார்த்து அதிர்ச்சி
அடைந்தனர். மேலும் அவர்கள் கோவிலுக்குள் சென்று பார்த்தனர். அங்கு பூசாரிகள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
உடனே சம்பவம் குறித்து மண்டியா கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது மர்மநபர்கள் நள்ளிரவில்
கோவிலில் புகுந்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இதை தடுத்த 3 பூசாரிகளையும் அவர்கள் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்ததும் தெரியவந்தது.
இதுதொடர்பாக மண்டியா கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பூசாரிகளை கொலை செய்து கோவிலில்
கொள்ளை நடந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
பலியான 3 பூசாரிகளின் குடும்பத்தினருக்கும் கர்நாடக அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவித்துள்ளார்.
புலிகளை அழிக்க ஆறுமுகம் தொண்டமான் உதவினார் – மகிந்தா
புலிகளை அழிக்க ஆறுமுகம் தொண்டமான் உதவினார் – மகிந்தா
அமரர் ஆறுமுகம் தொண்டமான் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டதாக
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (2020.09.11) பாராளுமன்றத்தில் அனுதாப பிரேரணை மீதான விவாதத்தின்போது தெரிவித்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக ஆறுமுகம் தொண்டமான் இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்கள் குறித்து
கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் கடமைப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அமரர் ஆறுமுகம் தொண்டமான் தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் நிகழ்த்திய அனுதாப உரை வருமாறு:
‘சௌமியமூர்த்தி இராமநாதன் ஆறுமுகம் தொண்டமான் அவர்களை நினைவுகூறும் போது சௌமியமூர்த்தி தொண்டமான்
முதல் இலங்கை அரசியலுக்கு தொண்டமான் தலைமுறையினர் ஆற்றிய பங்களிப்பு எனக்கு நினைவிற்கு வருகிறது.
அதனால் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் மறைவு அனைத்து பெருந்தோட்ட மக்களுக்கு போன்றே தனிப்பட்ட ரீதியில் எனக்கும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திய சம்பவமாகும். அவரது உயிர்
பிரிவதற்கு ஒரு சில மணிநேரங்களுக்கு முன்புகூட என்னை சந்தித்தார். குறித்த சந்திப்பின்போதும் பெருந்தோட்ட
தொழிலாளர்களின் வளர்ச்சி மற்றும் அவர்களின் இடர்களை கலைவது தொடர்பிலேயே கலந்துரையாடியிருந்தார்.
1964ஆம் ஆண்டு மே 29ஆம் திகதி இந்தியாவில் பிறந்திருந்தாலும் தனது பாட்டனாரின் வழியில் சென்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் 1985ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர்
காங்கிரஸினூடாக தீவிர அரசியலுக்குள் நுழைந்தார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நுவரெலியா
மாவட்டத்திலிருந்து முதல் முறையாக பாராளுமன்றத்திற்கு தெரிவான அவர் 26 வருட காலங்கள் தொடர்ச்சியாக நுவரெலியா
மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகும் பாக்கியத்தை கொண்டிருந்தார்.
1999ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானின் மறைவின் பின்னர் அக்கட்சியின் தலைமைக்கு நியமிக்கப்பட்ட ஆறுமுகம்
தொண்டமான் தோட்டத் தொழிலாளர்களின் போராட்டத் தலைவனாக அவர்களின் சம்பள உயர்விற்காக தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட தலைவராவார். குறிப்பாக இந்திய
வம்சாவளியை சேர்ந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களுக்கு குடியுரிமையை பெற்றுக் கொடுப்பதற்கு அவர் ஆற்றிய சேவை மகத்தானது.
ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் தோட்ட மக்கள் இடையே பயங்கரவாத சித்தாந்தங்கள் தோற்றம் பெற
இடமளிக்கவில்லை. முப்பது ஆண்டுகால யுத்தத்தை நிறைவு செய்யும் மனிதாபிமான போராட்டத்திற்கு அது பெரும் ஆதரவாக அமைந்தது. ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் அனைத்து
சந்தர்ப்பங்களிலும் நாட்டை பிரிக்கும் சக்திகளுக்கு எதிராக செயற்பட்டது மாத்திரமின்றி பயங்கரவாதத்தை ஒழிக்கும் செயற்பாடுகளுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்பட்டார்.
நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு அவரது அந்த ஜனநாயக பண்புகள் தீர்க்கமான தாக்கம் செலுத்தியது என்பதை இத்தருணத்தில் நினைவுபடுத்த வேண்டும்.
அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்ட அனைத்து சந்தர்ப்பங்களிலும் பெருந்தோட்ட மக்களுக்காக சேவையாற்றுவதற்கு முதன்மையாக செயற்பட்ட ஆறுமுகம்
தொண்டமான் அவர்கள் பெருந்தோட்ட மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அத்தியவசிய தேவைகளை பூர்த்தி செய்ய போராடினார். சம்பளத்திற்கான போராட்டங்களின் போது
மட்டுமன்றி தோட்ட வீடமைப்பு, சிறந்த வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளல், வைத்தியசாலை, நெடுஞ்சாலை, மின்சாரம், பாடசாலை மற்றும் பல்கலைக்கழகமொன்றை பெற்றுக் கொள்வது
வரை பெருந்தோட்ட மக்களுக்கான ஒரு மாறுபட்ட அரசியல் நோக்கை அவர் கொண்டிருந்தார்.
அதேபோன்று ஆறுமுகம் தொண்டமான் அவர்கள் நாட்டை நேசித்த சிறந்த குடிமகனாவார். இன, மத, சாதி பாகுபாடின்றி செயற்பட்ட அவர் எப்போதும் மதத்திற்கு கட்டுப்பட்டு வாழ்வதற்கு மதிப்பளித்தார்.
பல இக்கட்டான சூழ்நிலைகளிலும் எம்மை கைவிடாத அவர் அரசியலில் நம்பிக்கைக்குரிய நண்பராவார்.
இறுதி தருணத்திலும் பெருந்தோட்ட மக்களுக்காக அவருக்கு இருந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாம் கடமைப்பட்டுள்ளதாக நான் இந்த வேளையில் குறிப்பிட
விரும்புகிறேன். அவரது புதல்வர் ஜீவன் தொண்டமான் அவரது பூட்டனாரின் வழியில் சென்று பெருந்தோட்ட மக்களுக்கும்
நாட்டிற்கும் சேவையாற்றுவார் என நான் உறுதியாக நம்புகின்றேன்.’
நாட்டின் மருந்து தேவையின் 50% வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்
நாட்டின் மருந்து தேவையின் 50% வீதத்தை உள்நாட்டில் உற்பத்தி செய்ய திட்டம்
எதிர்வரும் மூன்று வருட காலப்பகுதியில் நாட்டின் மருந்து தேவையில் 50% வீதத்தை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சந்தைகளை இலக்காகக் கொள்வதும் மக்களுக்கு தேவையான தரம் வாய்ந்த மருந்து பொருட்களை கட்டுப்படியான விலையில் வழங்குவதும் இதன் நோக்கமாகும். உலக சுகாதார
தாபனத்தின் பரிந்துரை மற்றும் நியமங்களுக்கு ஏற்ற வகையில் அனைத்து உற்பத்திகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. நாட்டின் மருந்து தேவையில் 85% வீதம் தற்போது இறக்குமதி
செய்யப்படுகின்றது. இதற்காக வருடாந்தம் 130 பில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது. நாட்டின் மருந்து தேவையை
உள்நாட்டிலேயே நிறைவேற்றிக்கொள்வதன் மூலம் வருடாந்தம் 60 பில்லியன் ரூபா நாட்டுக்கு மீதமாகும். குறித்த இலக்கை
வெற்றிகொள்வதற்கு எமக்கு முடியுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
மருந்துப் பொருள் உற்பத்தி மருந்தாக்கல், விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள்
குறித்து நேற்று (10) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்
தற்போது ஆசிய வலயத்தில் அதிக மருந்து பொருட்களை இறக்குமதி செய்யும் நாடு இலங்கையாகும். உடனடியாக இந்த
நிலைமை மாற்றப்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்கு பங்களிப்பதற்கு பாரியளவில் சுதேச முதலீட்டாளர்கள் விருப்பம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டார்.
வெளிநாட்டு சந்தைகளை இலக்காக்கொண்ட மருந்து உற்பத்திக்காக 400 ஏக்கரில் முதலீட்டு வலயம் ஒன்று ஹம்பாந்தோட்டை கைத்தொழில் நகரில் தாபிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் இணைந்துகொள்வதற்கு உலகின் முன்னணி மருந்து பொருள் உற்பத்தி நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஆபிரிக்கா
மற்றும் தென்கிழக்காசிய வலயத்தில் மருந்து பொருட்களுக்கு அதிக கேள்வி உள்ளது. இந்த சந்தை வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்வதும் இதன் ஒரு நோக்கமாகும்.
அரச துறையை முன்னேற்றும் அதேநேரம் தனியார் துறை தொழில் முயற்சியாளர்களையும் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது. மருந்து பொருட்கள் உற்பத்திக்காக
முதலீட்டு முயற்சிகளில் இணைந்துகொள்ளுமாறு ஜனாதிபதி மருந்து பொருள் உற்பத்தி இறக்குமதி நிறுவனங்களிடம் திறந்த அழைப்பொன்றை விடுத்தார்.
சுதேச முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு வலயம் ஒன்று அனுராதபுரம் ஒயாமடு பிரதேசத்தில் 100 ஏக்கர் நிலப் பகுதியில் நிர்மாணிக்கப்பட உள்ளது. 25 நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் 300 மில்லியன்
அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான முதலீட்டை செய்வதற்கு தயாராக உள்ளனர். தற்போதைய அரசின் கீழ் நாட்டின் மருந்து உற்பத்தியில் சிறந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் அத்தியாவசிய மருந்து பொருட்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் புதிய மருந்து ஒன்றை நாட்டில் உற்பத்தி செய்யும் பணிகள்
ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு புதிய மருந்தை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொள்ளப்பட்டுள்ளது.
மருந்து உற்பத்தியை பதிவு செய்வதற்கு சுமார் ஒரு வருட காலம் ஆகின்றது. அக்கால தாமதத்தை தவிர்ப்பதற்கு தேவையான சட்ட திருத்தங்களை உடனடியாக அறிமுகப்படுத்த வேண்டியதன்
தேவையை ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார். மருந்து பொருட்கள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையில் சுதேச மருந்து பொருட்களை பதிவு செய்தல் உள்ளிட்ட பிரச்சினைகளை
தீர்ப்பதற்காக தனியான பிரிவொன்றை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
அரச மருந்துப் பொருள் உற்பத்தி கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகளை பொது மக்களுக்கு கட்டுப்படியான விலையில் பெற்றுக்கொள்வதற்காக நாடளாவிய ரீதியில் சதோச மற்றும்
கூட்டுறவு பல்பொருள் அங்காடி நிலையங்களில் 100 மருந்து விற்பனை நிலையங்களை தாபிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. வீடுகளுக்கே மருந்துகளை விநியோகிக்கும் நிகழ்ச்சித்திட்டம் பற்றியும் கவனம் செலுத்தப்பட்டது.
அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன, பொருளாதார புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பெசில் ராஜபக்ஷ,
ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர ஆகியோரும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சுக்களினதும்
துறைசார்ந்த நிறுவனங்களின் அதிகாரிகளும் மருந்து பொருள் கம்பனிகளின் பிரதிநிதிகளும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
கனடா தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் நேரில் பாராட்டு
கனடா தமிழ் முதலீட்டாளர்களை அலரி மாளிகைக்கு அழைத்து பிரதமர் நேரில் பாராட்டு
கனடா தமிழ் முதலீட்டாளர்களை இன்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார்.
வடக்கு – கிழக்கில் இருக்கக்கூடிய முதலீடுகளை ஊக்கப்படுத்தும் முகமாகவும், மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் முகமாகவும் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது
இந்தச் சந்திப்பில் கனடாவில் இருக்கக்கூடிய முதலீட்டாளர்களான சுகந்தன் சண்முகநாதன் மற்றும் சதீஸ் ராஜலிங்கம் ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.
பனை அபிவிருத்தி நிறுவனத்துடன் இணைந்து சில வேலைத்திட்டங்களை செய்து வரக்கூடிய குறித்த இரண்டு
முதலீட்டாளர்களும் வடக்கு – கிழக்கு மக்களை தொழில் ரீதியாக உள்ளவாங்கியதற்காக பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இச் சந்திப்பில் மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் கலந்துக் கொண்டார்.
இச்சந்திப்பின்போது பிரதமர் தற்போது நாட்டில் உள்ள சூழ்நிலையில் வடக்கு – கிழக்கு பகுதியில் தங்களின் முதலீடுகளை
ஊக்கப்படுத்தி, அங்கு இருக்கக்கூடிய மக்களுக்குத் தொழில் வாய்ப்புகளை அதிகரித்துக் கொடுப்பதனூடாக அப் பகுதிகளில்
தனியார் நிறுவனங்களை வெகுவிரைவில் அதிகரிக்க வேண்டுமெனவும், அம்முயற்சிக்குத் தான் முழுமையான
ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்தார்.











