Posted in இலங்கை செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு கடன் சலுகை- டக்ளஸ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு கடன் சலுகை- டக்ளஸ்

கொரோனா தொற்றுக் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த காலத்தில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்ட பாதிப்புக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி

வீதத்தில் கடன் வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை பெற்றுக்

கொள்ள விரும்புபவர்களுக்கு ஏற்படக் கூடிய நடைமுறை சிக்கல்களுக்கு தன்னால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

திருகோணமலைக்கு இரண்டு நாள் வியஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாவட்டத்தில் மக்கள்

எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் நேரில் சென்று ஆராய்ந்தறிந்தறிந்தார்

இந்நிலையில் மாவட்டத்தின் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளைச் இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களது

பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டபின் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது திருகோணமலை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட தொழில் முறைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சருக்கு அறியப்படுத்திய சிறு தொழிலாளர், அதுதொடர்பில்

அடிக்கடி கலந்துரையாடப்பட்டு உறுதிமொழிகள் வழங்கப்படுகின்ற போதிலும் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு

சம்மந்தப்பட்ட தரப்பினரின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்வதில்லை எனவும் குற்றஞ்சாட்டியிருந்தனர்.

அத்துடன் நாட்டிலேற்பட்ட கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக தமது தொழில் நடவடிக்கைகளில் பாரிய

பொருளாதார நெருக்கடி நிலை தோன்றியிருந்ததாகவும் அவற்றுக்கு தீர்வு பெற்றுத்தருவதற்கான வழிவகைகளை உருவாக்கி தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை கருத்திற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்கொண்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கம் குறைந்த வட்டி

வீதத்தில் கடன் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அவற்றை பெற்றுக்கொள்ள முயற்சிப்பவர்களுக்கு வங்கிகளில் ஏற்படக் கூடிய

நடைமுறை சிக்கல்களுக்கு தன்னால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

கட்டுநாயக்கவில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்பு

லயன் எயார் விமானத்தில் பயணித்த மற்றுமொரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருடைய நிலைமை மோசமாக உள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த விமானத்தில் பயணித்த நிலையில் உயிரிழந்த இருவரது சடலங்கள் இன்று (13) காலை வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

இந்தோனேஷிய பிரஜைகளான 64 வயது ஆண் மற்றும் 74 வயது பெண் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

285 பயணிகளுடன் பயணித்த லயன் எயார் விமானம் அதிகாலை 2.45 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

சவூதி அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி சென்ற விமானத்தில் பயணித்த பயணிகள் இருவருக்கு ஏற்பட்ட திடீர்

சுகயீனத்துக்கு சிகிச்சையளிக்கும் நோக்கில் தரையிறக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பயணிகள் இருவரும் உயிரிழந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு கொண்டுச்செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீட்டிப்பு

13 அதிகாரிகளின் விளக்கமறியல் நீட்டிப்பு

போதைப்பொருள் தடுப்புபிரிவின் 13 அதிகாரிகளின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களின் விளக்கமறியலை எதிர்வரும் 22ஆம் திகதி வரை

நீடிப்பதாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (14) உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் தொடர்புகளை கொண்டிருந்தார்கள்

என்ற குற்றச்சாட்டின்பேரில் இவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

Posted in உலக செய்திகள்

குப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

குப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

வென்டிலேட்டரில் உள்ள நோயாளிகளை குப்புற படுக்க வைத்தால் உயிரைக்காப்பாற்றி விடலாம், ஆனால் மூட்டு நரம்புகள்

பாதிப்புக்குள்ளாகி விடும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

குப்புற படுக்க வைத்தால் கொரோனா நோயாளிகளை காப்பாற்றலாம் – விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
கோப்புப்படம்

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் உலகை மிரட்டி வருகிற நிலையில் அது தொடர்பான ஆராய்ச்சிகள் நீளுகின்றன. நோயின் தீவிர தாக்கத்தால் நுரையீரல் பாதிக்கிறது. அதனால் சுவாசம்

சிக்கலாகிறபோது, அத்தகைய நோயாளிகளை வென்டிலேட்டர்களில் வைக்கிறார்கள். இப்படி வென்டிலேட்டரில்

வைக்கிற நிலையில் நோயாளிகளின் நிலை குறித்து, அமெரிக்காவில் நார்த்வெஸ்டெர்ன் பல்கலைக்கழகத்தின்

அங்கமான பெய்ன்பெர்க் மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் ஒரு ஆராய்ச்சி நடத்தி இருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முடிவை ‘பிரிட்டிஷ் ஜர்னல் ஆப் அனஸ்தீசியா’வில் வெளியிட ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அவர்கள் ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்-

  • வென்டிலேட்டர்களில் வைக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை முகம் குப்புற படுக்க வைக்கிறபோது, அது
  • அவர்களின் சுவாசத்தை எளிதாக்கும். அவர்களின் உயிரைக் காப்பாற்றி விடலாம். அதே நேரத்தில் அது அவர்களுக்கு நிரந்தர நரம்பு சேதத்தை ஏற்படுத்தி விடும்.
  • நரம்பு பாதிப்பானது, ரத்த ஓட்டம் குறைவது மற்றும் வீக்கம் குறைவதின் விளைவாகும்.
  • கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மறுவாழ்வு பெறுகிறபோது, மணிக்கட்டு, கணுக்கால் அல்லது தோள்பட்டை போன்ற முக்கியமான மூட்டுகளில் பலவீனம் ஏற்படும். இந்த
  • உடல் பாகங்கள் உடலின் ஒரு பக்கத்தில் முற்றிலும் முடங்கி விடும். இது அதிர்ச்சி தருகிற பிரச்சினையாகத்தான் இருக் கிறது. கொரோனா தவிர்த்து வேறு எந்த நோயாளிகளிடமும்
  • இந்தளவுக்கு நரம்பு பாதிப்பு காணப்படுவதில்லை.
  • கொரோனாவின் தீவிர பாதிப்புக்குள்ளான 12 முதல் 15 சதவீதம்
  • பேர், நிரந்தர நரம்பு பாதிப்பை சந்திக்கின்றனர். இந்த வகையில் உலகமெங்கும் பல்லாயிரகணக்கானோர் இதை அனுபவிக்கின்றனர்.
  • பெரும்பாலும் மணிக்கட்டு பாதிப்பு, கணுக்கால் பாதிப்பு, கை செயல்பாட்டு இழப்பு, தோள்பட்டை முடக்கம் ஏற்படுகிறது.
  • நீரிழிவு போன்ற நோய்கள் ஏற்கனவே இருக்கிறபோது, அது
  • கொரோனா நோயாளிகளை மீட்டெடுப்பதற்கு இடையூறாக அமைந்து விடுகிறது. இதனால் அவர்களை முழுமையாக மீட்க
  • முடியாது. நடக்கவோ, கணினி அல்லது செல்போனை கைகளால் பயன்படுத்தவதோ கடினமாகி விடும்.

இவ்வாறு அந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

Posted in உலக செய்திகள்

கொரோனா பரவல்- 3 வாரம் ஊரடங்கை அறிவித்த இஸ்ரேல்

கொரோனா பரவல்- 3 வாரம் ஊரடங்கை அறிவித்த இஸ்ரேல்

அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 3 வார ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு தெரிவித்தார்.

கொரோனா பரவல் எதிரொலி – 3 வாரம் ஊரடங்கை அறிவித்தார் இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி வருகிறது.

உலகில் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரசின் இரண்டாவது அலை இஸ்ரேலில் தீவிரமடைந்து வருகிறது.

உலக அளவில் கொரோனா பாதிப்பு உள்ளநாடுகளில் இஸ்ரேல் 24 வது இடத்தில் உள்ளது. அங்கு கொரோனா தொற்று உறுதியானோர் எண்ணிக்கை 1.55 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

மேலும், அங்கு 1,119 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியாகி உள்ளனர். கொரோனாவில் இருந்து விடுபட்டோர் எண்ணிக்கை 1.14 லட்சத்தைக் கடந்துள்ளது.

இதையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு 3 வார ஊரடங்கை இஸ்ரேல் அரசு அமல்படுத்த உள்ளது.

இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில், வரும் வெள்ளிக்கிழமை முதல் 3 வார காலத்துக்கு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – சீனா

அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – சீனா

சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சீன ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.

உலக அமைதிக்கு அமெரிக்கா பெரும் அச்சுறுத்தலாக உள்ளது – சீனா குற்றச்சாட்டு
கோப்புப்படம்
பீஜிங்:

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான மோதல் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வர்த்தகம் தொடர்பாக இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் படிப்படியாக வளர்ந்து

தற்போது கொரோனா வைரஸ் விவகாரத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே பரப்பி விட்டதாக குற்றம் சாட்டி வரும் அமெரிக்கா சீனாவுக்கு

எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா முன்வைத்து வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச ஒழுங்கு மற்றும் உலக அமைதிக்கு அமெரிக்கா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பதாக சீன ராணுவம் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது. அண்மையில் அமெரிக்க

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை ஒன்றில் சீன ராணுவம் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தது.

அவற்றுக்கு பதில் அளிக்கும் விதமாக சீனா ராணுவம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சீன ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வு கியான் கூறுகையில் “பிராந்திய அமைதியின்மையை தூண்டுவது, சர்வதேச ஒழுங்கை மீறுவது, உலக அமைதியை அழிப்பது

அமெரிக்கா தான் என்பதை பல ஆண்டு சான்றுகள் காட்டுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக ஈராக், சிரியா, லிபியா மற்றும் பிற

நாடுகளில் அமெரிக்காவின் நடவடிக்கைகளால் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். தன்னைப் பற்றி சிந்திப்பதற்கு பதிலாக

அமெரிக்கா சீனாவின் இயல்பான பாதுகாப்பு மற்றும் ராணுவ கட்டுமானம் குறித்து தவறான கருத்துகளை வெளியிட்டு வருகிறது.

அமெரிக்கா அதனை நிறுத்தி விட்டு இருதரப்பு ராணுவ உறவுகளின் ஆரோக்கியமான வளர்ச்சியை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என கூறினார்.

Posted in சினிமா

தொழிலதிபரை மணந்தார் கோப்ரா பட நடிகை

தொழிலதிபரை மணந்தார் கோப்ரா பட நடிகை

விக்ரமின் கோப்ரா படத்தில் நடித்துவரும் நடிகை மியா ஜார்ஜ், தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்பை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

தொழிலதிபரை மணந்தார் கோப்ரா பட நடிகை
மியா ஜார்ஜ், அஸ்வின் பிலிப்


தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். நேற்று இன்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து , ரம், எமன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது

விக்ரமுடன் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவருக்கும், கேரளாவை

சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் பிலிப்புக்கும் அண்மையில் நிச்சயதார்த்தம் நடந்தது.

மியா ஜார்ஜ், அஸ்வின் பிலிப் திருமண புகைப்படம்

மியா ஜார்ஜ்-அஸ்வின் பிலிப் திருமணத்தை செப்டம்பர் 12-ந் தேதி நடத்துவது என்று இருவரின் பெற்றோர்களும் முடிவு

செய்திருந்தனர். அதன்படி, மியா ஜார்ஜ் திருமணம் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள புனித பசில்லா தேவாலயத்தில் நேற்று

நடந்தது. கிறிஸ்தவ முறைப்படி, மணமக்கள் இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டார்கள். அதன்பிறகு மணமக்களுக்கு வரவேற்பு

அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டார்கள்.

Posted in சினிமா

போதைப் பொருள் பயன்படுத்தியதை மறைக்க சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை

போதைப் பொருள் பயன்படுத்தியதை மறைக்க சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை

போதைப்பொருள் வழக்கில் கைதாகி சிறையில் உள்ள நடிகை, மருத்துவ பரிசோதனைக்காக கொடுத்த சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்றுள்ளார்.

போதைப் பொருள் பயன்படுத்தியதை மறைக்க சிறுநீர் மாதிரியில் தண்ணீர் கலந்து ஏமாற்ற முயன்ற நடிகை
ராகினி திவேதி


கன்னட திரை உலகில் போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரம் மற்றும் போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்பில்

இருந்ததாக கடந்த 4-ந் தேதி நடிகை ராகிணி திவேதியை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை, நீதிபதி

முன்னிலையில் ஆஜர்படுத்திவிட்டு காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பெங்களூர் மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ள நடிகை ராகினி, மருத்துவ பரிசோதனைக்காக பெங்களூருவில் உள்ள கே.சி. அரசு மருத்துவமனைக்கு அழைத்து

செல்லப்பட்டார். அப்போது நடிகை ராகினி திவேதி தனது சிறுநீர் மாதிரியில் தண்ணீரை கலந்து மருந்து பரிசோதனைக்கு கொடுத்து ஏமாற்ற முயன்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ராகினி திவேதி

யாரேனும் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதை சிறுநீர் மாதிரியை எடுத்து மருந்து பரிசோதனை

செய்வதன் மூலம் கண்டறிய முடியும். சிறுநீரில் தண்ணீரைச் சேர்ப்பது சிறுநீரின் வெப்பநிலையை குறைக்கும், இது உடல் வெப்ப நிலைக்கு சமமாக இருக்கும்.

பின்னர் மீண்டும் ராகினியிடம் சிறுநீர் மாதிரியை பெற்று பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ராகினியின் நடத்தை

வெட்கக்கேடானது என்று விசாரணை அதிகாரி தெரிவித்தார், போலீஸ் காவலில் நீட்டிப்பு கோரும் போது இந்த சம்பவம் மாஜிஸ்திரேட்டிடம் குறிப்பிட்டு காட்டப்படும் என்று அவர் கூறினார்.

Posted in சினிமா

பிரபல பாடகியுடன் அனிருத் காதல்

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகியை காதலித்து வருவதாக கூறப்படுகிறது.அனிருத்தனுஷின் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய 3

படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். இப்படத்திற்காக அவர் இசையமைத்த முதல் பாடலான கொலவெறி அவரை உலகளவில் பிரபலமாக்கியது. பின்னர் அடுத்ததடுத்த

ஆல்பங்களின் மூலம் இளைஞர்களை வெகுவாக கவர்ந்த அனிருத், குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் ஆகியோரது

படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக உயர்ந்தார். இவர் கைவசம் மாஸ்டர், இந்தியன் 2, காத்துவாக்குல ரெண்டு காதல், டாக்டர், சியான் 60 போன்ற படங்கள் உள்ளன.


இப்படி கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், பிரபல பாடகி ஜோனிடா காந்தியை காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. சமீபத்தில் கூட

ஜோனிடா காந்தியும், அனிருத்தும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திற்காக சேர்ந்து பாடிய ‘செல்லம்மா’ பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

அனிருத், ஜோனிடா காந்தி

பாடகி ஜோனிடா, டெல்லியில் பிறந்து கனடாவில் வளர்ந்தவர். யூடியூப் மூலம் பிரபலமான ஜோனிடா காந்தி ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படம் மூலம் தன் திரையுலக பயணத்தை

துவங்கினார். அவரை ஓ காதல் கண்மணி படத்தில் இடம்பெறும் மெண்டல் மனதில் பாடல்மூலம், ஏ.ஆர்.ரகுமான் தான் தமிழில் அறிமுகம் செய்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


முன்னதாக சுச்சீ லீக்ஸ் பரபரப்பாக இருந்தபோது அனிருத், ஆண்ட்ரியா முத்தம் கொடுத்துக் கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால்

அவை மார்ஃபிங் செய்யப்பட்ட புகைப்படங்கள் என்று கூறப்பட்டது. அதன் பிறகு எந்தவித காதல் சர்ச்சையிலும் அனிருத் சிக்காமல் இருந்த நிலையில், தற்போது பாடகி ஜோனிடாவை அவர் காதலிப்பதாக கூறப்படுகிறது. 

Posted in சினிமா

குண்டான நாயகன்…. ஷூட்டிங் போக முடியாமல் தவிக்கும் படக்குழு

குண்டான நாயகன்…. ஷூட்டிங் போக முடியாமல் தவிக்கும் படக்குழு

லாக்டவுனில் ஹீரோ குண்டானதால், அவர் மீண்டும் உடல் எடையை குறைக்கும் வரை படக்குழுவினர் காத்திருக்கிறார்களாம்.

லாக்டவுனில் குண்டான நாயகன்…. ஷூட்டிங் போக முடியாமல் தவிக்கும் படக்குழு
பிரியதர்சினி, லோகன்


தமிழ் பட உலகில் நீண்ட காலத்துக்குப்பின், முக்கோண காதல் கதையை கொண்டு தயாராகும் படம்‘காகிதப்பூக்கள்’. கதாநாயகனாக லோகன் அறிமுகமாகிறார். இன்னொரு

கதாநாயகனாக பிரவீன்குமார் நடிக்கிறார். கதாநாயகி, பிரியதர்சினி. கதை, திரைக்கதை, வசனம் எழுதி படத்தை தயாரித்து இயக்கி உள்ளார் முத்து மாணிக்கம்.

முதல்கட்ட படப்பிடிப்பு பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. அடுத்தகட்ட படப்பிடிப்பை

தொடங்குவதற்குள் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால், சுமார் 5 மாதங்களாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனது. தற்போது

மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைத்தும் ‘காகிதப்பூக்கள்’ படக்குழுவால் படப்பிடிப்பை நடத்த முடியவில்லையாம்.

காரணம் படத்தின் நாயகன் லோகன் இந்த லாக்டவுன் காலகட்டத்தில் குண்டாகி விட்டாராம். அவர், பத்தே நாளில் உடல்

எடையை குறைப்பதாக கூறியதை தொடர்ந்து, படப்பிடிப்பை வரும், 15ம் தேதி துவக்க திட்டமிட்டுள்ளார்களாம். அடுத்தகட்ட படப்பிடிப்பு

திண்டுக்கல், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறதாம்.

Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்களுக்கு எதிராக – யாழ் மீனவர்கள் போராட்டம்

இந்தியா மீனவர்களுக்கு எதிராக – யாழ் மீனவர்கள் போராட்டம்

வடமராட்சிக் கடற்ப்பரப்பில் கடந்த சில தினங்களாக இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரையில் இருந்து சுமார் ஒன்பது கடல் மைல் தூரத்தில் நின்று மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட றோளர் படகினைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் வடமராட்சி மீனவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடலில் விடப்படும் பல இலட்ச்சம் ரூபா பெறுமதியான வலைகளை அறுத்து நாசம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாக மிக அதிகளவில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் இடம்பெற்று வருகிறது. இதனைக் கண்டித்து வடமராட்சி

மீனவர்கள், வாயை மூடிக் கட்டி மெளன கவனயீர்ப்பு ஊர்வலம் ஒன்றை நாளை (14) முன்னெடுக்கவுள்ளனர்.

நல்லூர் முன்றலில் இருந்து காலை பத்து மணிக்கு ஆரம்பமாகும் குறித்த மெளன கவனயீர்ப்பு பேரணியானது, இந்தியத் தூதரகத்தைச் சென்றடைந்து அங்கு இந்தியத் துணைத் தூதரிடம்

மகஜர் ஒன்ரைக் கையளித்து, இந்திய மீனவர்களது அத்துமீறல் தொடர்பில் தெரியப படுத்தி, இதனால் தமது வாழ்வாதாரப் பாதிப்பு

மற்றும் உடமைகள் சேதமாக்கப்படுவது தொடர்பில் எடுத்துக் கூறி எல்லை தாண்டுவதை தடுத்து நிறுத்துமாறு, துணைத் தூதுவரிடம் கோரவுள்ளனர்.

தொடர்ந்து நீரியல் வளத்துறை அமைச்சரின் அலுவலகத்திற்குச் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் மகஜர் ஒன்றையும் கையளிக்கவுள்ளனர்.

தொடர்ந்து நீரியல் வளத்துறை திணைக்களம், மாவட்டச் செயலகம் இறுதியாக வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்று

ஆளுநருக்கு மகஜர் கையளித்து தமது போராட்டத்தை நிறைவு செய்யவுள்ளனர்.

வடமராட்சி வடக்கு மீனவ சங்கங்கள் நேற்று முன்தினம் (11) ஒன்று கூடி நடத்திய கலந்துரையாடலிலேயே குறித்த முடிவு எட்டப்பட்டதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் வ.வர்ணகுலசிங்கம் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

நீர்க்கொழும்பில் 30 இளைஞர் யுவதிகள் கைது.

நீர்க்கொழும்பில் 30 இளைஞர் யுவதிகள் கைது.

நீர்க்கொழும்பு, கொச்சிகடை பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் 30 இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் கலந்து கொண்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த காலங்களிலும் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் போதைப் பொருட்களுடன்

இளைஞர் யுவதிகள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை தொடக்கம்

வீதி ஒழுங்கைச் சட்டம் நாளை தொடக்கம்

மீண்டும் ஆரம்பிப்போம்- வீதி ஒழுக்கங்களை” என்ற தொனிப்பொருளின் கீழ், நாளை (14) தொடக்கம் வீதி ஒழுங்கைச்

சட்டம் கடைபிடிக்கப்படவுள்ளதென, போக்குவரத்து பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி, இந்திக ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

நாளை ​தொடக்கம் 16ஆம் திகதி வரை காலை 6 மணியிலிருந்து காலை 10 மணிவரைமேல் மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட

வீதிகளில் இந்த வீதி ஒழுங்கு சட்டத்தை செயற்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கமைய, ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியின், பொல்துவ சுற்றுவட்ட வீதி தொடக்கம் ஹோர்ட்டன் பிளேஸ் வரை, பேஸ்லைன் வீதியில், களணி பாலத்திலிருந்து ஹைலெவல் வீதி சுற்றுவட்டம்

வரை,ஹைலெவல் வீதியின் அனுலா வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, பித்தளை சந்தி, ஸ்ரீ சம்புத ஜயந்தி மாவத்த, தும்புளை சந்தி, தேர்தஸ்டன் கல்லூரி, மார்கஸ் பெர்ணான்டோ வீதி, பொது

நூலகம், ஆனந்தகுமாரசுவாமி மாவத்த வரை, காலி வீதியில் வில்லியம் சந்தியில் ஆரம்பித்து, தெஹிவளை, காலி வீதி

சுற்றுவட்டம் வரையான வீதிகளில் வீதி ஒழுங்கைச் சட்டம் செய்றபடுத்தப்படவுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்

எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கு அச்சுறுத்தல்

MT New Diamond கப்பலின் எண்ணெய் கசிவால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் கடல் வலயத்துக்கும் அச்சுறுத்தல்

ஏற்பட்டுள்ளதாக கடல் மாசுபடுதலைத் தடுக்கும் அதிகார சபை தெரிவித்துள்ளது.

கப்பலில் இருக்கும் எரிபொருளின் மாதிரியைப் பெற்றுக்கொள்ளல் உள்ளிட்ட மூன்று விடயங்களுக்காக குறித்த அதிகார சபைக்கு சட்ட அனுமதி கிடைத்துள்ளது.

தீப்பற்றலுக்கு உள்ளான MT New Diamond கப்பல் தொடர்பாக முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நாளை

கலந்துரையாடவுள்ளதாக கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

ஏழாயிரம் கோடியில் உர மானியம் வழங்கும் கோட்டா அரசு

ஏழாயிரம் கோடியில் உர மானியம் வழங்கும் கோட்டா அரசு

உர மானியம் வழங்கும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

இதன் கீழ் பெரும்போகத்தில் நெற்செய்கையாளர்கள் ஒன்பது இலட்சம்

பேருக்கும் வேறு பயிர்ச்செய்கையில் ஈடுபடும் 12 இலட்சம் பேருக்கும்

உர மானியம் வழங்கப்படவிருப்பதாக உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில தெரிவித்தார்

நெற் செய்கைக்குத் தேவையான உரம் இலவசமாக வழங்கப்படவுள்ளது. மரக்கறி மற்றும் ஏனைய பயிர்களுக்குத்

தேவையான உரம் விநியோகிக்கப்படவுள்ளது. இதற்கமைவாக உர மாநியத்திற்காக அரசாங்கம் ஏழாயிரம் கோடி ரூபாவை

ஒதுக்கியுள்ளது என்று உர செயலகத்தின் பணிப்பாளர் மஹேஷ் கம்பன்பில மேலும் தெரிவித்தார.

Posted in இலங்கை செய்திகள்

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் திட்டம்

சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை மேம்படுத்துவதற்கு பிரதமர் திட்டம்

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை மிகவும் ஈர்த்த சுற்றுலா நகரங்களுக்கான வீதிகளை

மேம்படுத்துவது தொடர்பில் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2020.09.12) சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் கௌரவ பிரதமர் இத்தீர்மானத்தை முன்னெடுத்துள்ளார்.

சுற்றுலா நகரங்களுக்கு செல்வதற்கான வீதிகள் மற்றும் ஏசதமடைந்த நிலையில் காணப்படும் அனைத்து வீதிகளையும்

புனரமைக்கும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறும் பிரதமர் சம்பந்தப்பட்ட தரப்பினரை அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் இதுவரையில் தங்களது சுற்றுலா நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளைஇ சுற்றுலாப்

பயணம் மேற்கொள்வதற்கு பாதுகாப்பான நாடாக இலங்கை விளங்குவதாக வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் கவனம்

திரும்பியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் பிரதான வருமான மார்க்கமாக காணப்படும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி

செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாகும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை மற்றும் சுற்றுலாத்துறையை

கட்டியெழுப்புவதற்கான முன்னேற்பாடாக இந்த வீதிகளை புனரமைக்கும் வேலைத்திட்டத்தை வெகுவிரைவில் ஆரம்பிக்குமாறு பிரதமர் வலியுறுத்தினார்.

Posted in மருத்துவம்

அதிகம் பசிக்க – இதை சாப்பிடுங்க

இந்த ரசம் குமட்டல், வாந்தி, சோர்வு, மயக்கத்தைப் போக்கும். பசியைத்

தூண்டும். உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.

பசியைத் தூண்டும் வேப்பம்பூ பருப்பு ரசம்
வேப்பம்பூ பருப்பு ரசம்
தேவையான பொருட்கள் :

வேப்பம்பூ – 2 டேபிள்ஸ்பூன்,

காய்ந்த மிளகாய் – 4,
புளி, துவரம் பருப்பு – தலா 100 கிராம்,


கடுகு, மஞ்சள் தூள், பெருங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

துவரம் பருப்பை வேகவைத்துக் கொள்ளவும்.

புளியை நன்றாக கரைத்து கொள்ளவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.

மஞ்சள்தூள் மற்றும் வேப்பம்பூவைச் சேர்த்து வறுக்கவும்.

இதில், கரைத்த புளியை ஊற்றி, கொதிக்கவிடவும்.

வேகவைத்த துவரம்பருப்பில், தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து கொதிக்கும் ரசத்தில் சேர்க்கவும்.

பொங்கி வரும்போது, பெருங்காயத்தூளைச் சேர்த்து இறக்கவும்.

கடைசியில், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவவும்.

சூப்பரான வேப்பம்பூ பருப்பு ரசம் ரெடி.

Posted in மருத்துவம்

சளி, இருமலை குணமாக்க- இதை பண்ணுங்க

சளி, இருமலை குணமாக்க- இதை பண்ணுங்க

சளி, இருமல், தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் அதிமதுரம் சுக்கு சூப் செய்து பருகலாம். இன்று இந்த சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

சளி, இருமலை குணமாக்கும் அதிமதுரம் சுக்கு சூப்
அதிமதுரம் சுக்கு சூப்
தேவையான பொருட்கள் :

அதிமதுரம் தூள் – அரை டீஸ்பூன்

சுக்குப் பொடி – அரை டீஸ்பூன்
திப்பிலி பொடி – கால் டீஸ்பூன்
பாதாம் – 6
தண்ணீர் – 2 கப்

செய்முறை:

அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.

நன்கு கொதித்ததும் பாத்திரத்தை கீழே இறக்கிவிட வேண்டும். சுடு நீரில் அதிமதுரம் பொடி, சுக்குப்பொடி, திப்பிலி பொடி

ஆகியவற்றை கொட்டி இரண்டு நிமிடம் பாத்திரத்தை மூடி வைக்க வேண்டும்.

நீராவியில் பொடிகள் அனைத்தும் வெந்ததும், நன்றாக கலக்கி சூட்டோடு பருகலாம்.

பருகும் போதே பாதாமை மென்று சாப்பிட்டால் கசப்பு தெரியாமல் இருக்கும்.

Posted in மருத்துவம்

கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?

கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது. வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க

எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்வென்று அறிந்து கொள்ளலாம்.

கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி?
கொரோனா தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்


சாதாரண நோய் அறிகுறிகள் தென்பட்டாலே பயமடைந்துவிடுவது பொதுவாக மனிதர்களின் இயல்பு. அந்த பயம் எல்லைமீறி மனக்குழப்பம் உருவாகும்போது அது பீதியாக மாறிவிடும்.

மனிதர்களுக்கு பீதி உருவாகிவிட்டால் அவர்கள் பதற்றமடைந்து நிலைதடுமாறிவிடுவார்கள். இல்லாததை எல்லாம் தனக்கு இருப்பதாக கருதிக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய்

விடுவார்கள். அதன் மூலம் அவர்கள் மனநலமும், உடல்நலமும் கடுமையாக பாதிக்கப்படும் சூழல் உருவாகிவிடும். அப்படிப்பட்ட

பீதியான சூழ்நிலையை உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த வைரஸ் வரலாற்றை ஆராய்ந்தால் அதன் தாக்குதல் உலகில் ஏதாவது ஒருபகுதியில் அவ்வப்போது ஏற்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது. நாம் நவீன மருத்துவத்தின் மூலம் அவைகளை

கட்டு்ப்படு்த்தியிருக்கவே செய்கிறோம். இன்னொருபுறம் பார்த்தால் சாதாரண சளிக்காய்ச்சலுக்கு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் பாதிக்கப் படுகிறார்கள். அதில் மூன்று லட்சம் முதல் 6

லட்சம் பேர் ஆண்டுக்கு மரணமடைகிறார்கள். மட்டுமின்றி புற்றுநோய், இதயநோய், சர்க்கரை நோயாலும் பெருமளவு மரணம் ஏற்படத்தான் செய்கிறது.

இ்ந்த நிலையில் கொரோனாவுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பீதி? என்ற கேள்வி எழுகிறது. உலக சுகாதார அமைப்பு, ‘சர்வதேச அவசர நிலையாக’ இதனை அறிவித்தது இதில் சுட்டிக்காட்டப்படுகிறது.

‘இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த போதிய மருத்துவ வசதி இல்லாத நாடுகளுக்கு அந்த வசதியை அளிப்பதற்காகத்தான்’ இந்த அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதனால் அதை நினைத்து

பீதியடைய வேண்டியதில்லை. அதே நேரத்தில் காய்ச்சல், ஜலதோஷம், நிமோனியா போன்றவை சில நாட்களுக்கு மேல்

நீடித்து மூச்சுத்திணறலாக மாறினால் மட்டும்தான் உடனே கவனிக்கவேண்டும். நிமோனியா என்பது நுரையீரலில் ஏற்படும் தொற்றாகும்.

வைரஸ் நோய்கள் சுவாச உறுப்புகள் தொடர்புடையதாக இருப்பதால் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு தொற்றாமல் இருக்க கவனம் செலுத்தவேண்டும். நாம் பேசும்போது உமிழ்நீர்

பிசிறுகள் வெளிப்படும். அதனை டிராப்லெட் (droplet) என்போம். ஒருவர் மூலம் இன்னொருவருக்கு ‘டிராப்லெட் இன்பெக்‌ஷன்’ ஏற்படாமல் இருக்க மூக்கு, வாய் பாதுகாப்பு அவசியம்.

பேசும்போதும், தும்மும்போதும் கவனம் தேவை. மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் செல்வதையும் தவிர்க்கலாம்.

பொதுவாக வைரஸ் கிருமிகள் உடலில் புகுந்தால், உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகி அதை எதிர்க்கும். அதையும் மீறி அந்த வைரஸ் கிருமிகள் உடலை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை

அறிய முன்பெல்லாம் சில நாட்கள் காத்திருந்து பரிசோதனை செய்ய வேண்டியிருந்தது. இப்போது அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. ‘பி.சி.ஆர்’ என்ற நவீன பரிசோதனைமுறை

எல்லா இடங்களிலும் உள்ளது. அதன் மூலம் உடனே கொரோனா போன்ற வைரஸ் பாதிப்புகளை கண்டறிந்துவிடலாம். கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக கண்டுபிடித்தால்கூட அது 100-ல் 2

பேருக்குதான் அதிக பாதிப்பை உருவாக்கும். இதன் தாக்குதலை முறியடிக்க மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமாக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கின்றன.

வைரஸ் நோய்கள் தாக்காமல் இருக்க எடுக்கவேண்டிய பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

வைரஸ் நோய்கள் தொற்றாமல் இருக்க மூக்கையும், வாயையும் மூடிக்கொள்ளும் மாஸ்க் அணிவது வழக்கத்தில் உள்ளது. இதில் கவனிக்கத் தகுந்த விஷயம் என்னவென்றால், மூன்று அடுக்குகளை

கொண்ட மாஸ்க்குகள் மட்டுமே முழுமையான பாதுகாப்பு அளிக்கும். எல்லாவித மாஸ்க்குகளும் முழுபாதுகாப்பு அளிப்பதில்லை என்பதை கவனத்தில்கொள்ளவேண்டும்.

நோயாளி மட்டும் மாஸ்க் அணிந்தால் போதாது. அவரை பராமரிப்பவரும், அவரை சந்திக்க செல்பவர்களும் மாஸ்க் அணிவது அவசியம்.

வீட்டில் வைரஸ் தாக்கிய நோயாளிகள் இருந்தால் அவர்கள் பயன்படுத்திய டவல், டிஸ்யூ, பாத்திரங்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது. அவர்கள் பயன்படுத்திய பொருட்களை

பொது இடங்களில் போடக்கூடாது. பாதுகாப்பானமுறையில் அப்புறப்படுத்தவேண்டும். நோயாளிகளை பராமரிப்பவர்கள் அதன் பின்பு கைகளை நன்றாக சோப்பிட்டு கழுவவேண்டும்.

லேசான சுடுநீரில் உப்புகலந்து அவ்வப்போது வாயை கொப்பளிப்பது வைரஸ் உடலுக்குள் பரவுவதை ஓரளவு தடுக்கும்.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க பழங்கள், காய்கறிகளை சுத்தமாக கழுவி சாப்பிடவேண்டும். உணவில் உப்பை குறைப்பது சுவாசப் பகுதியில் ஏற்படும் நெருக்கடிகளை

குறைக்கும். ஊறுகாய், உப்பில் ஊறவைத்த இதர உணவுப் பொருட்கள், டின்னில் அடைத்துவைத்திருக்கும் பதப்படுத்திய உணவுகளையும் தவிர்த்திடுங்கள்.

பொது இடங்களில் எச்சில் துப்புதல், சிறுநீர் கழித்தல் போன்றவைகளை தவிர்த்திடவேண்டும்.

மனிதர்கள் எச்சில் துப்பும்போது அதில் 10 முதல் 12 மணி நேரம் வரை வைரஸ்கள் உயிரோடு இருக்கும். நோயாளிகள் இருக்கும்

அறையில் உள்ள உலோகங்களிலும் வைரஸ் காணப்படும். அதனால் அவைகளை தொட்டாலும் உடனே கைகளை நன்றாக கழுவவேண்டும்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளை அத்தியாவசியம் இருந்தால் மட்டும் சந்திக்கசெல்லுங்கள். நோயாளி களிடம் இருந்து நோய் பரவுவதை அதன் மூலம் தடுக்கமுடியும்.

அதுமட்டுமின்றி நோயாளிகளுக்கு ஏற்படும் அசவுகரியங்களையும் அதன் மூலம் தடுக்கலாம்.

உணவு சாப்பிடுவதற்கு முன்பும்- பின்பும் கைகளை நன்றாக கழுவுவதோடு, கைகளில் ஈரத்தன்மை இல்லாத அளவுக்கு உடனே

துடைப்பதும் அவசியம். அதுபோல் கழிவறைக்கு போகும் முன்பும்- பின்பும் கைகளை சோப்பிட்டு கழுவி நன்றாக துடைத்திடவேண்டும்.

வளர்ப்பு பிராணிகளிடம் கவனமாக இருங்கள். நெருங்கிப்பழகவேண்டாம். அதுபோல் பொதுவாகனங்களில் செல்லும்போதும், பொது இடங்களில் செல்லும்போதும் கவனம் தேவை.

பாதுகாப்பான, சூடான உணவுகளை மட்டும் உண்ணுங்கள். அசைவ உணவுகளை குறிப்பிட்ட காலத்திற்கு தவிர்ப்பது நல்லது. முடிந்த

அளவு வீட்டில் உணவு தயாரித்து சாப்பிடுங்கள். உங்கள் வாழ்விடப் பகுதிகளையும் சுத்தமாக வைத்திருங்கள்.

வைரஸ் நோய்களை பற்றிய தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பெருமளவு பரவுகின்றன. அவைகளை அப்படியே நம்பி பீதி அடையவேண்டாம். அதே நேரத்தில் உங்களுக்கு ஏதாவது ஒருவிதத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அதை அலட்சியம்

செய்யவேண்டாம். டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள். மாறாக சுய மருத்துவம் மேற்கொள்ளும் எண்ணத்தில் மருந்துகடைகளில் (டாக்டரின் பரிந்துரையின்றி) மருந்துகளை வாங்கி சாப்பிடாதீர்கள்.

எந்த வைரஸ் நோயும் தாக்காத அளவுக்கு உங்களை நீங்களே பாதுகாத்துக்கொள்ள முடியும். அந்த பாதுகாப்பு நடைமுறைகளை

கடைப்பிடியுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். அதே நேரத்தில் எப்போதும் விழிப்புடன் செயல்படுங்கள்.

Posted in உலக செய்திகள்

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி
காங்கோ நாட்டில் தங்க சுரங்கம் இடிந்து 50 தொழிலாளிகள் பலி
காங்கோ:

காங்கோ நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா அருகே தங்க சுரங்கம் உள்ளது. இங்கு தொழிலாளர்கள் பலர் பணியாற்றி

வருகிறார்கள். இந்தநிலையில் அப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் தங்க சுரங்கம் இடிந்து விழுந்தது. இதில் மண்ணுக்குள் தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.

50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுரங்க தன்னார்வ தொண்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து அதிகாரிகள்

கூறும்போது, “தங்க சுரங்கம் இடிந்ததில் தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர்.

ஒருவரால்கூட வெளியே வரமுடியவில்லை. சுமார் 50 தொழிலாளர்கள் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிகிறது” என்றார்.