மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்


மாப்பிள்ளை தேடும் நடிகை – தப்பி ஓடும் காதலர்கள்

என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது என்று பிரபல நடிகை வரலட்சுமி கோபமாக பதிவு செய்திருக்கிறார்.

என் திருமணம் எனக்கு ஏன் கடைசியாகத் தெரிகிறது – வரலட்சுமி கோபம்
வரலட்சுமி


தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நாயகியாக வலம் வருபவர் வரலட்சுமி சரத்குமார். தற்போது தமிழில்

‘காட்டேரி’, ‘பாம்பன்’, ‘சேஸிங்’, ‘டேனி’, ‘பிறந்தாள் பராசக்தி’ ஆகிய படங்களிலும்,

தெலுங்கில் ‘க்ராக்’ மற்றும் கன்னடத்தில் ‘ரணம்’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் வரலட்சுமி.

வரலட்சுமிக்கு திருமணம் என்று பலமுறை வதந்திகள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் வரலட்சுமி, சந்தீப் என்ற

தொழிலதிபரை காதலித்து வருவதாக தகவல் வெளியானது. இந்தச் செய்தி

தொடர்பாக வரலட்சுமி சரத்குமார் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

“எனக்குத் திருமணம் என்ற விஷயம் ஏன் எனக்கு மட்டும் கடைசியாகத் தெரிகிறது? அதே முட்டாள்தனமான வதந்திகள்.

என் திருமணத்தில் ஏன் எல்லாரும் ஆர்வமாக இருக்கிறார்கள். எனக்குத்

திருமணம் என்றால் நான் அதை என் கூரை மீது ஏறி அறிவிப்பேன். எனக்குத்

திருமணம் இல்லை. நான் சினிமாவுக்கு முழுக்குப் போடவில்லை” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.